-
29th January 2013, 01:15 AM
#11
இராகவேந்திரரும் வாசுதேவரும் மாறிமாறி ஜுகல்பந்தி விருந்து பரிமாறப்.. பரிமாற..
விழிகளால் மீண்டும் மீண்டும் புசித்தும் பசியாறாமல் பசியேறிய காயசண்டிகையாய் நான்..
ஆபுத்திரன் நம் நடிகர்திலகம்.. அட்சயப்பாத்திரம் அவர் திருமுகம்..
கிரேக்கச்சிற்பங்களை விஞ்சும் உருவ இலக்கணம் பொருந்திய ஒளிமுகம்.. களைமுகம்..
நீதி படத்தில் நெற்றியில் காயமும்.. நெஞ்சில் உள்ள பச்சாதாபம் உணரப்படாத ஆற்றாமையுமாய்..
இருவரியில் பெருங்கருத்து குறள் என்றால்..
ஒரு பாவனையில் நெடுங்கவிதை நடிகர்திலகம் முகம்..
தொடரட்டும் இத்தலைவாழை விருந்து ..
பரிமாறும் இராகவேந்திரர் + வாசுதேவர் கரங்களுக்கு என் நெகிழ்நன்றிகள்..
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
29th January 2013 01:15 AM
# ADS
Circuit advertisement
Bookmarks