http://i58.tinypic.com/2hdo65c.jpg
Printable View
மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 15 - வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய நண்பர் திரு ராகவேந்திரன் அவர்களுக்கு நன்றி
இனிய நண்பர் திரு ரவிக்குமார் சார்
உங்கள் அன்பு பாராட்டுக்கு நன்றி . மக்கள் திலகம் திரியில் உங்களின் பதிவுகள் புதிய உற்சாகத்தை தருகிறது.உங்களின் தொடர் பதிவுகளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் . பணி சுமை அதிகம் இருப்பதால் அதிகம் திரிக்கு வர இயலவில்லை .நீங்கள் எல்லோரும் இங்கு பதிவிடுவது நட்பிற்கு பாலமாக உள்ளது . தொடர்வோம் .
இனிய நண்பர் திரு சி.எஸ்..குமார் அவர்கள் பதிவிட்ட வல்லமைஇணைய தள மக்கள் திலகம் எம்ஜிஆர் கட்டுரை வெற்றியாளர்களின் தொகுப்பு அருமை .
இனிய நண்பர் திரு முத்தையனின் நாடோடி மன்னன் மற்றும் படகோட்டி -மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் கண்ணுக்கு விருந்து .
இனிய நண்பர் திரு லோகநாதனின் மதுரை எங்கவீட்டு பிள்ளை & அன்பே வா திரை அரங்கு படங்கள் & செய்திகள் சூப்பர்
*TODAY 1.30PM WATCH JAYA TV
http://i58.tinypic.com/2w311mq.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 15 ஐ துவக்கிய எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான நன்றியினை தெர்வித்து கொள்கிறேன்.நீங்கள் எல்லோரும் அடிக்கடி திரியில் வந்து உங்களுடைய பதிவுகளை பதிவிட வேண்டுகிறேன் .
தூத்துக்குடி மாநகரில் "சத்யா" திரையரங்கில் மக்கள் திலகம் படைத்த கின்னஸ் சாதனை :
தூத்துக்குடி மாநகரில் "சத்யா" திரையரங்கில் கடந்த 5.1/2 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட " மக்கள் திலகத்தின்" காவியங்கள் - வாரந்தோறும் தொடர் திரையீடு", சென்ற வாரம் 275வது வாரமாக அனுஷ்டிக்கப்பட்டு, வெற்றிக்காவியம்
http://i62.tinypic.com/2iqy047.jpg
"எங்க வீ ட்டு பிள்ளை" திரையிடப்பட்டது. இதனையொட்டி 12-04-2015 ஞாயிற்று கிழமை " சத்யா " அரங்கில் பிரம்மாண்டமான விழாவாக கொண்டாடப்பட்டது.
இந்த வெற்றி விழாவின் சிறப்பம்சங்கள் :
1. காலை 7 மணி முதல் இரவு 10.30 மணி வரை நமது பொன்மனச்செம்மல் காவியங்களில் இடம் பெற்ற பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.
2. நடிகமன்னன் நமது எம். ஜி. ஆர். அவர்களின் பக்தர்களாகிய திருவாளர்கள் மகேஷ், முத்துப்பாண்டி, கனகராஜ், செல்வராஜ், பாஸ்கர், பாலு, வீரவேல், பரமசிவம், குணா, சிவன்ராஜ், சுபாஷ், கல்யாணி குழுவினர், பிரம்மாண்டமான பதாகைகள் வைத்து, சுவரொட்டிகள் அச்சடித்து நகர் முழுவதும் ஒட்டியிருந்தனர்.
3. மக்கள் திலகத்தின் மாணவன் தூத்துக்குடி திரு. டி.டி. செல்வன், வெளியூரிலிருந்து வரும் ரசிகர்களை வரவேற்று,, அவர்களுடன் தகவல் பரிமாற்றம் கொண்டு, உள்ளூர் பத்திரிகைக்கு பொது ஜன தொடர்பாளராக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு, மக்கள் தலைவர் நம் எம். ஜி.ஆர். அவர்களின் 82 விதமான புகைப்படங்கள் அடங்கிய டிஜிட்டல் பதாகை (பேனர் ) வைத்திருந்தது, கண் கொள்ளா காட்சியாக இருந்தது.
4. இந்த நிகழ்ச்சிக்கு, தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, மும்பை, பாண்டி ஆகிய மாநிலங்கலிலிருந்தும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய வெளி நாடுகளிலிருந்தும் நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். ரசிகர்கள் திரளாக வந்து சிறப்பித்தனர்.
5. நம் தமிழகத்திலிருந்து 20 மாவட்டங்களிலிருந்து, இதய தெய்வத்தின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
6. கேரளா மாநிலம், கொல்லத்திலிருந்து திருமதி சீதாலட்சும் என்ற பக்தை திரையரங்கின் முன்பு அருமையான கோலம் போட்டு, கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்களின் சுவரொட்டி மற்றும் அலங்கரிக்கப்பட்ட பதாகைகளுக்கு மாலை அணிவித்து, சூடம் ஏற்றி சிறப்பு பூசை செய்து, அவரை வணங்கினார்.
7. மாலை 6.00 மணியளவில், திரையரங்கில் நுழைவு சீட்டு வழங்கப்பட்டது. கட்டுக்கடங்கா கூட்டத்தினால்,, தள்ளு முள்ளு, நெரிசல் ஏற்பட்டு, சலசலப்பு காணப்பட்டது. பிறகு, காவல் துறையினர் வந்து கூட்டத்தை சமாளிக்க வேண்டியதாயிற்று.
8. தூத்துக்குடி மாநகரை சேர்ந்த பங்கு ராஜ் என்ற எம்.ஜி.ஆர். பக்தர், 1500 நபர்களுக்கு, சிக்கன் பிரியாணியும், தண்ணீர் பாக்கெட்டும் ஏற்பாடு செய்து, ரசிகர்களை மகிழ்வித்தார் .
(குறிப்பு : விழாவினையொட்டி மட்டுமே இந்த சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. இதர, சாதாரண நாட்களில், இது போன்று வழங்கப்படவில்லை)
9. திரு. சி. நடராஜன் என்ற மற்றொரு எம்.ஜி.ஆர். பக்தர், 20 நபர்களுக்கு இலவச வேட்டி வழங்கி, பூரிப்படைந்தார். .
10. தூத்துக்குடி மாநகர மேயர் ஏ. பி. ஆர். அந்தோணி கிரேசி, திரையரங்கில் ஓட்டப்பட்டிருந்த நம் மன்னவனின் சுவரொட்டியை தொட்டு வணங்கி 25 பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்கி உவகை கொண்டார். உடன், தூத்துக்குடி மாநகர அ.இ.அ.தி.மு. க. செயலாளரும், கூட்டுறவு வங்கி தலைவரும், கலந்து கொண்டனர்.
11. இன்னொரு எம். ஜி. ஆர். பக்தர், பேட் மாநகர் பாருக் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார். நெல்லை ஆறுமுகம் மற்றும் ஆழ்வார் திருநகரி ராஜப்பசாமி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
12. இரவு 7.00 மணிக்கு, அனைத்து எம். ஜி. ஆர். பக்தர்களும், ரசிகர்களும், சரவெடி, பூங்கொத்து வெடி வெடித்து, வானவேடிக்கைகள்,நடத்தி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
13. இராமேஸ்வரம், சாயல்குடி, பரமக்குடி செல்லும் பேருந்துகள் மற்றும் கார் , வேன் ஆகியவற்றில் பயணித்த பயணிகள் இந்த நிகழ்ச்சியை கண்டு களித்ததன் விளைவாக சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து போலிசார் வந்து நிலைமையை சரி செய்தனர்.
14. இந்த வெற்றிக்காவியமாம் "எங்க வீ ட்டு பிள்ளை" யில் இடம் பெற்ற பாடல்களுக்கு, 15 வயது முஜ்தல் 25 வயது வரை உள்ள இன்றைய இளைஞர்கள் உற்சாகத்துடன் நடனமாடினர்.
15. தூத்துக்குடி அருகில் உள்ள "புதிய முத்தூர்" என்ற ஊரிலிருந்து அ.இ.அ.தி.மு. க. சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு. ஏ. சாமுவேல்ராஜ் தலைமயில், திருவளர்கள் வி. . செல்லத்துரை, எஸ். மாரியப்பன், எஸ். வெள்ளமணி, எஸ். முக்ருகன், பிச்சக்குட்டி, மதுரை பொன்னுசாமி, ஆர். பொன்ராஜ் பிள்ளை, ஏ. ஆறுமுகச்சாமி, பிச்சராஜா முதலானோர், தனி வாகனம் ஏற்பாடு செய்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
16. திரையரங்கின் உள்ளே ஆண்களும், பெண்களும், சிறுவர் - சிறுமியரும் இருக்கைகள் இல்லாமல் அரங்கிற்கு வெளியே அமர்ந்து இந்த வெற்றிக்காவியத்தை கண்டு களித்தனர்.
17. திரையரங்க உரிமையாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் சீரும் சிறப்புமாக செய்து, முக்கிய பிரமுகர்களுக்கு சால்வை / பொன்னாடைகள் அணிவித்து, நன்றி நல்கினார்.
புகைப்படம் அளித்து, தகவல் அனுப்பியவர் : திரு. டி.டி. செல்வன், தூத்துக்குடி ,
திரி அன்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் கவனத்துக்கு சில புகைப்படங்கள் கீழே :
தூத்துக்குடி திரு. டி.டி. செல்வன் வைத்திருந்த, பொன்மனசெம்மலின் 82 விதமான புகைப்படங்கள் அடங்கிய டிஜிட்டல் பதாகை (பேனர்) முன்பு கூடியிருந்த எம்.ஜி.ஆர். பக்தர்கள்
http://i60.tinypic.com/2en1ceo.jpg
மாலை காட்சிக்காக மதியம் 3.00 மணிக்கே காத்திருந்த பெண்களும், சிறுவர் - சிறுமியரும், இளைஞர்களும்
http://i57.tinypic.com/bdtzk8.jpg
திரையரங்கு முன்பு கூடியிருந்த கூட்டத்தின் ஒரு பகுதி
http://i57.tinypic.com/jsg3yh.jpg
ஒரே நடிகரின் பல்வேறு படங்கள் தொடர்ந்து 5.1/2 வருடங்களாக ஒரே அரங்கில், 275 வராங்களாக திரையிடப்பட்டது, உலக திரைப்பட வரலாற்றில் ஒரு சாதனை. கின்னஸ் சாதனையில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு மகத்தான நிகழ்வு இது.
தூத்துக்குடி- சத்யா அரங்கில் மக்கள் திலகத்தின் படங்கள் தொடர்ந்து 275 வாரங்கள் ஓடிய சாதனை மற்றும் விழா பற்றிய விரிவான செய்தியை நம்முடன் பகிர்ந்து கொண்ட இனிய நண்பர் திரு செல்வகுமார் அவர்களுக்கு என் அன்பு
வாழ்த்துக்கள்.