//இந்த ஜனகராஜ் அருவிப் பாட் தான் சொன்னீங்களா..//
ஹய்யோ! ஹய்யோ! 'பகோடா' காதர் பாணியிலே தலையில அடிச்சிக்குறேன்.:) இந்தப் பாட்டு நல்ல பாட்டா? நான்தான் சொன்னேனே. 'விழியோரம்' பாட்டுக்கு ஈக்வல் ஆன பாட்டு. ம்...கண்டுபிடிச்சி வைங்க.
Printable View
//இந்த ஜனகராஜ் அருவிப் பாட் தான் சொன்னீங்களா..//
ஹய்யோ! ஹய்யோ! 'பகோடா' காதர் பாணியிலே தலையில அடிச்சிக்குறேன்.:) இந்தப் பாட்டு நல்ல பாட்டா? நான்தான் சொன்னேனே. 'விழியோரம்' பாட்டுக்கு ஈக்வல் ஆன பாட்டு. ம்...கண்டுபிடிச்சி வைங்க.
//இன்னும் ரெண்டு மூணு அருவிப்பாட்டு நீங்களும் மதுண்ணாவும் விட்டுப்புட்டீக..//
அல்லாம் தெரியுமுங்க.:)
From Maragatham
maalai mayangukindra neram pachchai malai vaLarum aruvi Oram........
http://www.youtube.com/watch?v=3fS7rA13Ho0
Lyrics by Sudhanandha Bharathiyar
ராஜ் ராஜ் சார்..தேடினால் இது ஒன்று தான் இருக்கிறது சுத்தானந்த பாரதியார் எழுதியது..வேறு இல்லையே.. நன்றி.
அருவிப்பாட்டு...
ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே
குற்றால அழகை நாம் காண்பதற்கு
மற்ற அருவிப்பாட்டுகளுக்கு ஒரு கண்
இந்தப்பாட்டுக்கு ஆயிரம் கண்
From VaLaiyaapathi (1952)
kulungidum poovil ellaam then aruvi kandadhanaal........
http://www.youtube.com/watch?v=PIUTLcyYeP4
Lyrics by Bharathidasan.
The tune is copied from the Hindi song ' bade armanon se...' fom Malhar. I posted it in a jugalbandi.
அருவி மகள் அலையோசை.. இந்த அழகு மகள் வளையோசை
பொதிகை மலை மழைச்சாரல் உந்தன் பூவிதழின் மதுச்சாரல்...
உயிரா மானமான்னு கேட்டா இவரு "жизнь" or "самоуважение" என்று சொல்கிறார்..
https://www.youtube.com/watch?v=BIVSyDEm_2g
இது தமிழில் பெருகும் அமெரிக்க அருவி
https://www.youtube.com/watch?v=TtNF9vvE4ZA
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
மதுண்ணா, செந்தில்வேல், வாசு.. அருவிப் பாடல்களுக்கும் சர்க்கரைப் பாடல்களுக்கும் தேங்க்ஸ்..
அருவிகூட இனிமையாக சுரங்களைத் தேடுதுஎன ஒரு கெளரி மனோகரி பாட்டு நினைவுக்கு வருகிறது..பாட்டில் திருவையாறு பேக் க்ரெளண்ட் வரும்..
அட இப்படி அலசியதாய் நினைவிலில்லையே..பின்னணியில் தெரியும் இயற்கை..பேக்க்ரெளண்ட்..
சமீபத்திய ஒரு படத்தில் அனுஷ்கா சூர்யா பாடும் ஒரு சின்னத்தாமரை.. பாட்டோட பேக் க்ரெளண்ட் மஸ்கட்டிலிருந்து துபாய் போகும் வழியில் மலைகளும் மணல்கள் கொஞ்சம் கருமை வண்ணம் கொண்டது போல் காட்சியளிக்கும் இடத்தில் எடுக்க ப் பட்டது என நினைக்கிறேன்..ஹிந்தி ரேஸில் கூட லண்டன், ஸ்விஸ் எல்லாம் சொல்லி சேஸின் போது மஸ்கட் சாலைகளைக் காண்பித்திருப்பார்கள்..
நம்ம ஊர் ப் படங்களுக்கு க் கோவில்கள், அணைகள் தான்..இன்னும் இந்தக் கர்ணன் பாடல் எந்தக் கோவில் என்று தெளிவாக எனக்குத் தெரியாது..மஞ்சு பார்கவி சங்கராபரணத்தில் ஆடுவதும் இதே கோவில் போலவே இருக்கும்..
இது போல் சொல்லலாமே..
வணக்கம் சிக, வாசு ஜி, மதுண்ணா
சின்னா!
'கர்ணன்' பாடல் படமாக்கப்பட்ட இடம் கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற Halebidu என்னுமிடமாகும். (Kedareshwara Temple) அற்புதமான சிற்பங்கள் உள்ள கோவிலாகும். தலைவர் இங்குள்ள இடங்களில் நடந்து வரும் அழகே அழகு.
http://www.esamskriti.com/photograph/9-IMG_0610.jpg
Hoysaleswara Temple
https://upload.wikimedia.org/wikiped...n_Halebidu.jpg
http://i.ytimg.com/vi/96WAGOzyBTs/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/nBEP4tl7NRk/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/F127oAkgaXw/hqdefault.jpg
http://www.goodlanka.com/uploads/thumbs/7a8782d94-1.jpghttps://i.ytimg.com/vi/5m2UsFq4yJY/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/WeDiod06xYw/hqdefault.jpg
http://www.inbaminge.com/t/s/Sengottai%20Singam/
செங்கோட்டை சிங்கம் படத்தில் ஒரு பாடலுண்டே... தேனருவி பாதையிலே ஓ ஆசை மாமா...
https://www.youtube.com/watch?v=xbc2ZK6RTgg
அருவியின் பின்னணியில் அபிநய சரஸ்வதி...
அருமையான பாடல் .. ஆஹா.. ஜிக்கியின் குரலில் சொக்குதே மனம்...
https://www.youtube.com/watch?v=ZvohO2QAA1s
ஆஹாஹா.. ஆசை தீர பேசலாமே ஊஞ்சல் மேலே..
ஆனால் இது நாம் நினைக்கிற ஊஞ்சலில்லே... இவங்களோட ஊஞ்சல் எது என்று பாடலைப் பாருங்கள்..
அருவியின் பின்னணியில் இன்னொரு பாடல்..
செங்கோட்டை சிங்கம் படம் மட்டும் கலரில் எடுக்கப்பட்டிருந்தால் உள்ளம் கொள்ளை போயிருக்கும்.. படம் முழுதும் இயற்கை அழகு கொஞ்சும் வன மற்றும் மலைப்பிரதேசம்.. படத்தில் உதயகுமார் மேலாடை அணிந்த காட்சிகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.
கன்னட சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடியாக உதயகுமார் சரோஜாதேவி வலம் வந்த போது அந்த சென்டிமென்டை வைத்து அவர்களைத் தமிழில் நாயகன் நாயகியாக நடிக்க வைத்து எடுக்கப்பட்ட படமே செங்கோட்டை சிங்கம்..
அருமையான படம்..
செங்கோட்டை சிங்கம் படத்தை இது வரை பார்க்காதவர்களுக்கக
முழுப்படத்திற்கான காணொளி
https://www.youtube.com/watch?v=ZvohO2QAA1s
ஆனால் இந்த காணொளியில் தேனருவி பாதையிலே பாடல் இடம் பெற்றதாகத் தெரியவில்லை.
காதல் மன்னரின் மறக்க முடியாத கிளைமாக்ஸ் மதுர கீத காட்சிகள் !
பகுதி 1 கல்யாண பரிசு / ரோமன் ஹாலிடே
Quote:
ஒரு படத்தைப் பார்க்கிறோம் கதையமைப்பின்படி நகரும் காட்சிக்கோர்வையை ரசிக்கிறோம் இனிய இசையமைப்பிலும் பாடல்காட்சிகளிலும் லயிக்கிறோம்!
பெரும்பாலும் ஒரு படத்தின் வெற்றி இடையிடையே வரும் காட்சிகளை விட அதன் கிளைமாக்ஸ் அமைப்பில்தான் உறுதி செய்யப்படுகிறது என்பது எனது தாழ்மையான கருத்து ! சிறந்த உதாரணங்கள் நடிகர் திலகத்தின் கர்ணன், புதிய பறவை, அந்த நாள், கௌரவம்...பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன்...காதல் மன்னரின் கல்யாணபரிசு, சுமை தாங்கி, சாந்தி நிலையம்.....ரவிச்சந்திரனின்
அதே கண்கள்....ஜெய்யின் நூற்றுக்கு நூறு.....ஹிட்ச்காக்கின் திகில் படங்கள்...முக்கியமாக சைக்கோ , வெர்டிகோ.... ஜேம்ஸ் பாண்ட் படங்கள்....கிரிகரிபெக்கின் ரோமன் ஹாலிடே........வெற்றிக்கோட்டையில் கொடிநாட்டிய காவியங்கள்!
கிளைமாக்ஸில் சொதப்பிய படங்கள் பெரும்பாலும் வெற்றியைக் கோட்டைவிடுகின்றன !
அந்தவகையில் கல்யாணப் பரிசு திரைப்படத்தில் விரக்தியோடு இலக்கின்றி போகும் திசையறியாது மனமும் உடலும் தள்ளாட காதலிலே தோல்வியுற்ற காதலனின் மொத்த உருவகமாக ஜெமினி ஒரு லாங்க்ஷாட்டில் சில்லவுட்டாக முதுகாட்டி நடந்து செல்லும் மகோன்னதமான காட்சி என் மனத்தைக் கவர்ந்த கிளைமாக்ஸ் ஆகும் !!
https://www.youtube.com/watch?v=NKfebNrglqY
ஆனால் ஸ்ரீதர் இந்தக் காட்சியை ரோமன் ஹாலிடே படத்தின் கிளைமாக்சில் கிரிகரிபெக் காதல் நழுவிய துக்கம் தொண்டையடைக்க நம்மை நோக்கி விரக்தியுடன் நடந்து வரும் ஷாட்டைத்தான் இன்ஸ்பிரேஷனாக கொண்டிருக்க முடியும்!!
https://www.youtube.com/watch?v=kIxNV9DSEwA
http://media-images.mio.to/by_artist...ls/Art-350.jpg
இன்று அமரர் பி.பி.ஸ்ரீநிவாஸ் பிறந்த நாள். வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத பல பாடல்களைத் தந்த கந்தர்வக் குரலோன். இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் இனிக்கும்..
சரசா பி.ஏ. படத்தில் இரவின் மடியில் உலகம் உறங்கும்...
உள்ளே ஒருவன் உறங்குகின்றானே..
வெளியே ஒருவன் உலவுகின்றானே...
எல்லாம் தெரிந்தும் ஊமையைப் போலே
இருக்கின்றானே என் தலைவன்.. தலைவன்...தலைவன்...
என்ன கருத்தாழமிக்க வரிகள்...
வேதாவின் இசையில மெய்மறக்கச் செய்யும் பாடல்
https://www.youtube.com/watch?v=t9PVo_dlm6M
[QUOTE=vasudevan31355;1253240]சின்னா!
'கர்ணன்' பாடல் படமாக்கப்பட்ட இடம் கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற Halebidu என்னுமிடமாகும். (Kedareshwara Temple) அற்புதமான சிற்பங்கள் உள்ள கோவிலாகும். தலைவர் இங்குள்ள இடங்களில் நடந்து வரும் அழகே அழகு.
வாசு சார்
அது ஹம்பி என்னும் புராதன இடம் என்று கேள்வி. ஹலிபாடுதான் ஹம்பியா என்று தெரியவில்லை!!
செங்கமலத்தீவு படத்தில் விசில் துணையுடன்.. சூப்பர் ஹிட் பாடல்..
என்னைப் பார்த்தால் பரிகாசம்...
https://www.youtube.com/watch?v=x-qGJdNBqjo
In line with Raghavendhra Sir
My Heartfelt birthday wishes to the lotus feet of immortal PBS!
https://www.youtube.com/watch?v=F0xW0-EfOrQ
https://www.youtube.com/watch?v=kwnWPA8AT28
மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்... இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் மனம் அப்படியே லயித்து விடும்..
நெஞ்சை நினைவலைகளில் மூழ்க வைக்கும் இன்னுமோர் இனிய பாடல்..
யானைப் பாகன் படத்திலிருந்து ..
அதே உதயகுமார் சரோஜாதேவி ஜோடி...
துள்ளி விழும் அருவியைப் போல்...
https://www.youtube.com/watch?v=HLcXlk29DLA
பி.பி.எஸ்.சின் குரலில் இன்னுமோர் மதுர கீதம்...
மகளே உன் சமர்த்து படத்தில் ஜி.கே. வெங்கடேஷ் இசையில்,...
இசையரசியின் குரலும் இணைந்து நம்மை மெய்மறக்கச் செய்யும் இனிய பாடல்..
https://www.youtube.com/watch?v=Is9bbeAU8Vg
ஜி.கே.வி. அவர்கள் மெல்லிசை மன்னரிடம் பணி புரிந்து வந்த போதே தனியாகவும் இசையமைத்து வந்த கால கட்டத்தில் வெளிவந்த படம். இந்தப் பாடல் மெட்டு அப்படியே தென்றல் உறங்கிய போதும் பாடலை நினைவூட்டும். காட்சியமைப்போ வீரத்திருமகன் பாடாத பாட்டெல்லாம் பாடலை நினைவூட்டும்.
a tribute to the legend from a budding artist..
chinna chinna kannanukku ennathan punnagaiyo
https://www.youtube.com/watch?v=fiyEflS7NjU
And now, the original
https://www.youtube.com/watch?v=c8UIq19_dY4
https://www.youtube.com/watch?v=wt9lkVLJB6U
WOW.. what a crystal clear print.. Hope all Tamil films come out in this quality
Maayamani mix ...
https://www.youtube.com/watch?v=mBevPvn2cdg
Kalaa mangaiyo
https://www.youtube.com/watch?v=75xnJ-q1huM
Another mix of the original Jimbo. PBS song.. rare one..
And my ALLLLLLLLLLLLLLLLLLLLL TIME FAVOURITE....................
WHAT A SONG... இப்படி ஓர் இனிமையான பாடலை இதற்கு முன்னும் பின்னும் நான் கேட்டதில்லை..
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்... எஸ்.ஜானகியின் குரலில் இவ்வளவு குழைவா...
https://www.youtube.com/watch?v=ziK_PXAfMpM
பி.பி.எஸ்.அவர்களுக்கு உலக முழுதும் லட்சக்கணக்கான ரசிகர்களை உருவாக்கிய பாடல்.. இதற்குப் பிறகு தான் மக்கள் பி.பி.எஸ்.சின் பக்கம் கவனத்தைத் திருப்பினார்கள்... முதல் வெளியீட்டிலிருந்தே சூப்பர் டூப்பர் ஹிட்டான பாடல்...
பாதை தெரியுது பார் ... இந்தப் படத்தை சாமான்ய மக்களும் இன்றும் நினைவில் வைத்திருக்க ஒரே காரணம்....
https://www.youtube.com/watch?v=Dw77uCP_PdI
வாசு கர்ணன் பட புகைப்படங்களுக்கும் தகவலுக்கும் நன்றி.. சி.செ க்ளைமேக்ஸ் ஈவ்னிங்க் தான் பார்ப்பேன்..ரைட் அப்பிற்கு தாங்க்ஸ்..ஜி..வாங்க வாங்க.
ராகவேந்தர் சார்ர்.. அருவி மழைப் பாடலகளுக்கும் பி.பி.எஸ்ஸின் மழையருவி போன்ற் இன்னிசைப் பாடல்களுக்கும் மிக்க தாங்க்ஸ்.. பி.பி.எஸ்..என்னுடைய ஃபேவரிட் சிங்கர்..
எங்கேயோ பார்த்த முகம் ...
மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்
பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வையிழந்தேன்..
நெஞ்சம் அலைமோதவே
பறக்கும் பறவையும் நீயே
செக்கச்சிவந்த் இதழோ இதழோ பவழம் பவழம் செம்பவழம்.. ஹூம் வி.கு..
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
ஒரு பெரிய லிஸ்ட்ட்ட்ட்டே இருக்கு.. ஒரு முறை தரிசித்துப் பரவசத்துடன் எதுவும் பேசாமல் உட்லண்ட்ஸில் சாம்பார் வடை மட்டும் சாப்பிட்டு வந்ததைப் பற்றி இன்னும் வருத்தம் உண்டு எனக்கு..
ஹப்புறம் வர்றேன்..
வாசு..இந்த ஃபோட்டோக்கள் எல்லாம் யூஎஸ்பியில் தனியாக வைத்திருக்கிறீர்கள் தானே.. என்ன ஒரு கடின உழைப்பு..உங்கள் ரைட்டிங்க்ஸிற்கும் பேக்கப் வைத்திருக்கிறீர்கள் தானே.. ஹச்சோ ஒண்ணு சொல் மறந்த் போச்..( ந.தி அண்ட்) தேவிக் ஃபோட்டோஸ்க்கு தாங்க்ஸ்.. :)
[QUOTE=sivajisenthil;1253251]செந்தில் சார்,
தலைவர் லாங் ஷாட்டில் நடந்து வரும் படத்தையும், நான் அளித்துள்ள படத்தையும் பாருங்கள். இரண்டும் ஒரே இடம். அதாவது Hoysaleswara Temple. ஹலபேட் என்று தமிழக மக்களால் அழைக்கப்படுகிறது. நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போய் விட்டு வந்தேன்.
https://upload.wikimedia.org/wikiped...n_Halebidu.jpg
http://i.ytimg.com/vi/96WAGOzyBTs/hqdefault.jpg
.//உங்கள் ரைட்டிங்க்ஸிற்கும் பேக்கப் வைத்திருக்கிறீர்கள் தானே//
இல்லை சின்னா! எதற்கும் பேக்-அப் எடுத்து வைக்கவில்லை. 'துளி விஷம்' கூட எடுத்து வைக்கவில்லை. சோம்பேறித்தனம், நேரமின்மைதான் காரணம். பாலா தொடர் மட்டும் கரெக்ட்டாக எடுத்து வைத்து வருகிறேன். ஆடியோ, வீடியோ மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் சேர்த்து. 100 முடிந்தவுடன் முதல் தவணையாக அனைத்தையும் பாலாவிடம் கொடுத்துவிட வேண்டியதுதான். இன்னும் 63 இருக்கே. அப்பாடா! எப்போ முடிப்பது?
ராகவேந்திரன் சாரின் 'பொங்கும் பூம்புனல்' தொடரை இப்போதுதான் சேகரிக்கத் தொடங்கியுள்ளேன். முழுசாக கலெக்ட் செய்தபின் ஒரே பக்கத்தில் லிங்க் கொடுப்பதாக உத்தேசம். அதே போல 'இன்றைய ஸ்பெஷலு'ம்.
எதற்கும் பேக்-அப் எடுத்து வைக்கவில்லை. //சோம்பல் எல்லாம்படாதீர்கள் வாசு.. எம்.எஸ் வர்ட் தானே..அதில் தானே சேமித்து போஸ்ட் செய்கிறீர்கள்.. இனிமேல் ஆரம்பியுங்கள்..
இஸ்பெ, பொ.பூ இன்னொரு இழை போல் போட்டு ஒட்டுக்க க் கொடுத்தீர்கள் என்றால் மன்றமையம் உள்ள அளவும், வலை உள்ள் அளவும் இருந்து உங்கள், ராகவேந்திரரின் பெயர் சொல்லும்.. மொத்தமாகப் படிக்கும் அழகே அழகு. இன்னும் ந.தி படக் கட்டுரைகளையும் ஒரு ஃபோல்டரில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.. சரியா..
நிறைய எழுதிய விஷயங்கள் எல்லாம் முரசு அஞ்சலிலில் இருந்து யூனிகோட்க்கு மாறிய போது போய்விட்டது..ம்ம் அந்த வருத்தம் என் மன ஆழத்தில் இருக்கிறது.
தலைவர் லாங் ஷாட்டில் நடந்து வரும் படத்தையும், நான் அளித்துள்ள படத்தையும் பாருங்கள். இரண்டும் ஒரே இடம். அதாவது Hoysaleswara Temple. ஹலபேட் என்று தமிழக மக்களால் அழைக்கப்படுகிறது. நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போய் விட்டு வந்தேன். // வாசு.. போனது சரி..கட் கட் கட்டுரை எங்கே..
எங்கே இரண்டு பதிவுகளுக்கு மிகாமல் சுவாரஸ்யமாக உங்கள் நடையில் எழுதுங்கள் பார்க்கலாம்.. சமர்த்தோன்னோ :)
சி.க. சார்Quote:
உங்கள் ராகவேந்திரரின்
உங்களுக்கும் தான்...