பம்மலார் சார்.. .
.
நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளைப் பற்றிய உங்களது பதிவுகள் ஒரு சிறு இடைவெளிக்குப் பின் தொடர்வது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது கார்த்திக் சார் முன்பு குறிப்பிட்டதைப்போல, விடுபட்டுப்போன படங்களின் - குறிப்பாக திரிசூலம் - சாதனைகளை உங்கள் மூலமாக, ஆதரங்களுடன் காண ஆவலாக இருக்கிறோம்.
மறு வெளியீடு குறித்த தொடர் மூலம் பல உண்மைகள் தெரிய வந்து , சில 'கற்பிதங்கள்' தகர்ந்து போகும் என்று நம்புகிறேன்.
புதிய திரி ஜெட் வேகத்தில் 4 நாட்களில் 12 பக்கங்களைக் கடந்திருக்கிறது. பங்களிப்பு செய்த அனைவருக்கும் - குறிப்பாக - உங்களுக்கு பக்க பலமாக இருக்கும் ராகவேந்திரன் சார் மற்றும் வாசு சாருக்கும் என் நன்றி.