http://i64.tinypic.com/dy2iqv.jpg
Printable View
Makkalthilagam photos & documents are simply superb Mr. Vinoth, Mr. Loganathan sirs , Congrats...
Came to know through Makkal Thilagam Devotee Bangalore Vinod that mayyam site was blocked. And we can come through a short cut. Thanks for the information Vinod sir.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கு வருகை தந்த இனிய நண்பர் திரு ரூப் குமார் அவர்களுக்கு நன்றி . இனி தங்களுடைய பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .தற்போது மய்யம் திரி இந்திய அரசாங்கத்தால் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது .விரைவில் சகஜ நிலைக்கு திரி இயங்கும் என்று தெரிகிறது .
மய்யம் திரிக்கு பதிவிட தற்காலிக இணைப்பை தந்த திருnov அவர்களுக்கு நன்றி .
மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் 115
டிஜிட்டல் மற்றும் ஸ்கோப் வடிவில் 19.8.2016 அன்று மதுரை மற்றும் மதுரை மாவட்டத்தில் 6 இடங்களில்
திரையிடுவதாக தகவல் கிடைத்துள்ளது . பின்னர் திருச்சி சேலம் மாவட்டங்களில் திரையிடப்படும் என்று தெரிகிறது . நாளை ரகசிய போலீஸ் 115 விளம்பரம் வர உள்ளதாக தகவல் .
இன்று முதல் (12/08/2016) சென்னை சரவணாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின்
"ஆசைமுகம் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
இந்த ஆண்டில் (2016) 13வது இணைந்த எம்.ஜி.ஆர். வாரம்.
கடந்த ஆண்டில் 03/07/2015 முதல் சரவணாவில் வெளியாகி தினசரி 3 காட்சிகளில் ஒரு வாரம் ஓடியது குறிப்பிடத்தக்கது .
கடந்த மாதம் -22/07/2016 முதல் மதுரை சென்ட்ரல் சினிமாவில் தினசரி 4 காட்சிகள் வெளியாகி வெற்றி நடை போட்டு , ஒரு வாரத்தில் ரூ.96,000திற்கு மேல் வசூல் ஈட்டிய சாதனை நினைவு கூறத்தக்கது .
http://i64.tinypic.com/2vl6rmq.jpg
சென்னை சரவணா அரங்கு அருகில், சலூன் கடையில் உள்ள பெயர் பலகை
http://i66.tinypic.com/29vgbb4.jpg
மதுரை அலங்கார் அரங்கில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "ரகசிய போலீஸ் 115 "
விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .
http://i66.tinypic.com/2n9memt.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
14.8.1977
மக்கள் திலகத்தின் ''மீனவ நண்பன் '' - இன்று 39 ஆண்டுகள் நிறைவு தினம் .மீனவ நண்பன் சிறப்பு தகவல்கள் .
மக்கள் திலகம் நடித்த கடைசி சமூக படம் .
மக்கள் திலகம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்னர் வந்த முதல் படம் .
இயக்குனர் ஸ்ரீதரின் இரண்டாவது மக்கள் திலகம் படம் .
மக்கள் திலகம் அதிக சம்பளம் வாங்கிய படம் [22லட்சம் ]
14.8.1977 அன்று வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடிய படம் .
கடற்கரை மணலில் மக்கள் திலகம் - நம்பியார் மோதும் கத்தி சண்டை அருமை .
மக்கள் திலகத்துடன் நம்பியார் - வீரப்பா -வி.கே . ராமசாமி - வெண்ணிற ஆடை நிர்மலா - தேங்காய் ஸ்ரீனிவாசன் - நாகேஷ் - சச்சு ஆகியோர் நடித்த படம் .
நேருக்கு நேராய் வரட்டும் பாடலில் மக்கள் திலகத்தின் நடிப்பு பிரமாதம் .
பட்டத்து ராஜாவும் -- பட்டாள சிப்பாயும் .. பாடலில் மக்கள் திலகத்தின் நடனம் வெகு சிறப்பாக இருந்தது ,
பொங்கும் கடலோசை பாடலில் வாணிஜெயராமின் குரல் தேனமுது .
கண்ணழகு சிங்காரிக்கு - காதல் பாடலில் மக்கள் திலகம் - லதா ஜோடி சூப்பர் .
தங்கத்தில் முகமெடுத்து ... சந்தனத்தில் .. கனவு பாடல் விழிகளுக்கு விருந்து .
நேரம் பௌர்ணமி ..நேரம் - மனதை கொள்ளை அடித்த பாடல் .
மெல்லிசை மன்னரின் இசை - மிகவும் அருமை .
ஒரு நல்ல பொழுது போக்கு படம் . மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு - சண்டை காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்து .
இன்று படம் பார்த்தாலும் புத்தும் புது படம் போல் மனதிற்கு நிறைவு தரும் படம் - மீனவ நண்பன் .
மக்கள் திலகம் தன்னுடைய 60 வயதில் இளமை சுறுசுறுப்புடன் , எழிலான தோற்றத்தில் படம் முழுவதும் ரசிகர்களின் உள்ளத்தில் இடம் பிடித்த படம் .
நல்ல கருத்துக்களுடன் - வசனத்துடன் - இயக்குனர் ஸ்ரீதரின் கை வண்ணத்தில் வந்த வெற்றி காவியம் '' மீனவ நண்பன் '' - மக்கள் திலகத்தின் வைர கிரீடம் . ரசிகர்களுக்கு அமுத சுரபி .
1974 அலையோசை’ பத்திரிகை வேலையை விட்டு விலகியிருந்தார் முத்துலிங்கம். எம்.ஜி.ஆருக்கு எதிராக செய்திகளை வெளியிட ஆரம்பித்திருந்ததால் அப்படியொரு முடிவை எடுத்திருந்தார் முத்துலிங்கம். ஒரு நாள் தற்செயலாக புரட்சித்தலைவரை பார்க்க தி.நகர் ஆற்காட் ரோட்டிற்கு வந்திருக்கிறார். (இப்போது அது எம்.ஜி.ஆர். நினைவு இல்லமாகியிருக்கிறது) அன்று வீட்டிலிருந்த குஞ்சப்பன் என்பவர் முத்துலிங்கம் வந்திருக்கும் தகவலை இண்டர்காம் மூலம் மாடியிலிருந்த எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கிறார். உடனே போனில் முத்துலிங்கத்திடம், அலையோசையிலிருந்து விலகியது பற்றி “விஷயத்தை கேள்விபட்டேன் முத்துலிங்கம் குஞ்சப்பணிடம் கொஞ்சம் பணம் கொடுத்திருக்கிறேன் வாங்கிக்கோ” என்று சொல்ல, “இல்லைங்க தலைவரே எனக்கு பணம் வேண்டாம் வேலை கொடுங்க.” (பாடல் எழுதும் பணி) என்று கவிஞர் சொல்கிறார். “வேலை குடுக்கும்போது குடுக்குறேன் இப்ப பணத்தை வாங்கிக்க.” இது தலைவர். “இல்லங்க தலைவரே வேலை தான் வேணும் பணம் வேண்டாம். நான் புறப்படுறேன்.” என்று சொல்லி விட்டு கிளம்புகிறார் முத்துலிங்கம். அவர் காலத்தில் புரட்சித்தலைவரிடம் உதவி பெறாத கட்சிக்காரர்களே இல்லை எனலாம். ஆனால் எம்.ஜி.ஆரிடமே வாங்க மறுத்த மாண்பு கவிஞருக்கு மட்டுமே உண்டு. இந்த சம்பவத்தை மனதில் வைத்திருந்த எம்.ஜி.ஆர். முதல்மைச்சராக வந்த பிறகு அந்த ஆண்டின் பாவேந்தர் பாரதிதாசன் விருதை முத்துலிங்கத்திற்கு வழங்கினார்.
அப்போது மேடையில் பேசிய எம்.ஜி.ஆர். தி.நகர் சம்பவத்தை குறிப்பிட்டு, “உழைக்காமல் யாரிடமும் பணம் வாங்கக்கூடாதுனு சுயமரியாதையோடு இருக்கும் முத்துலிங்கத்திற்கு பாரதிதாசன் விருதை கொடுப்பதுதான் பொருத்தமானது.”
தங்கத்தலைவன் தனக்காக வாதிட்டு பாடலை எழுதவைத்த அந்த சம்பவம் கவிஞரின் நெஞ்சில் படிய, அந்த நன்றியை அவர் எழுதிய பாடலில் வரிகளாக்கிக் காட்டுகிறார். அதுதான் ஒரு படைப்பாளியின் ஆளுமை என்பது. ’மீனவ நண்பன்’ படத்தில் இடம் பெற்ற ‘தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து” பாடல்தான் முத்துலிங்கம் எழுதியது. இது ஒரு காதல் பாடல். இதில் இரண்டாவது சரணத்தில் புரட்சித்தலைவருக்காக இப்படி எழுதுகிறார்.
“எந்தன் மனக்கோவிலில் – தெய்வம்
உனைக்காண்கின்றேன்
உந்தன் நிழல் போலவே – வரும்
வரம் கேட்கிறேன்”
என்று கதாநாயகி பாடுவதாக வரும் வார்த்தைகளில் தலைவனுக்கு நன்றி தெரிவிக்கிரார் கவிஞர். இவரின் இன்னொரு சிறப்பு, வாலி ஒரு கவிதையையோ, கட்டுரையையோ எழுதி முடித்தவுடனேயே அதை படித்து காண்பிப்பது முத்துலிங்கத்திடம் தான். அத்தனை இலக்கியச் செழுமையுள்ளவர்.
மக்கள் திலகத்தின் ரிக் ஷாக்காரன் முன்னோட்ட வெளியீடு 21.8.2016
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு முன்னிட்டு சிறப்பு மலர் வெளியீடு 14.8.2016
மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் 115 - டிஜிட்டல் வெளியீடு - 19.8.2016
ரிக் ஷாக்காரன் - திரைப்படம் வெளியீடு - செப்டம்பர் 2016
உலகம் சுற்றும் வாலிபன் -டிஜிட்டல் வெளியீடு - தீபாவளி - 2016
மக்கள் திலகத்தின் பொன்விழா நிறைவு படங்கள்
தாலிபாக்கியம் - ஆகஸ்ட் 2016
தனிப்பிறவி - செப்டம்பர் -2016
பறக்கும் பாவை - 2016
பெற்றால்தான் பிள்ளையா - டிசம்பர் -2016
http://tamil.webdunia.com/article/re...0900014_1.html
எம்.ஜி.ஆர்.-க்கு நன்றி சொன்ன மு.க.ஸ்டாலின்
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (10:15 IST)
தமிழக சட்டசபையில் நேற்று சட்டசபை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.க்கு திமுக கொள்கைகளை பரப்பியதற்கு நன்றி தெரிவித்தார்.
http://i68.tinypic.com/1hwi07.jpg
முன்னதாக மீன் மற்றும் பால்வளத்துறை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக உறுப்பினர் ரத்தினசபாபதி முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நடித்த படகோட்டி மற்றும் ஒளிவிளக்கு படங்களில் இருந்து பாடல் பாடினார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ ரத்தினசபாபதிக்கு ஆதரவு அளிக்க, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு திரைப்படங்களில் நடிகர்கள் உதட்டை மட்டுமே அசைக்கின்றனர். அந்த பாடலை ஒருவர் எழுதுகிறார். ஒருவர் இசையமைக்கிறார். ஒருவர் பாடுகிறார் என குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்த போது இந்த பாடல்களை பாடியுள்ளார் என பேசினார். பின்னர் திமுக உறுப்பினர்கள் சுறுசுறுப்புடன் காணப்பட்டனர்.
தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின் எம்.ஜி.ஆர். திமுக பொருளாளராக இருந்தவர், அவரது படங்களை பார்க்க மகாலட்சுமி தியேட்டருக்கு பலமுறை சைக்கிளில் சென்றிருக்கிறேன் என கூறினார். மேலும் திமுக கொள்கைகளை மக்களிடையே பிரபலப்படுத்தியதற்காக எம்.ஜி.ஆர்.-க்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
from dinamani
http://www.dinamani.com/tamilnadu/20...cle3569997.ece
எம்ஜிஆர் படம் பார்க்க சைக்கிளில் செல்வேன்
எம்ஜிஆரின் "ஒளிவிளக்கு' திரைப்படத்தை 3 முறை சைக்கிளில் சென்று பார்த்ததாக திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் ரத்தின சபாபதி பேசியது:
45 ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த திரைப்படங்களைப் பார்ப்பதற்கு காத்திருப்போம். ஒளிவிளக்கு படத்தில் இருவரும், "படி அரிசி கிடைக்கும் காலத்துல நாங்க படியேறி பிச்சை கேட்கப் போவதில்லே' என்றெல்லாம் பாடியிருப்பர். இப்போது விலையில்லா அரிசி அளிக்கப்பட்டு வருகிறது என்று பேசினார்.
அதன் பிறகு, "ஊதாரி பிள்ளைகளை பெக்க மாட்டோம், அதை ஊர் வம்பு வாங்கும்படி வைக்க மாட்டோம்' என்ற வரியையும் ரத்தின சபாபதி குறிப்பிட்டார்.
இதற்கு மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவினர் அனைவரும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
அமைச்சர் செல்லூர் ராஜு:
யாரையும் உறுப்பினர் குறிப்பிட்டுப் பேசவில்லை.
மு.க.ஸ்டாலின்: யாரோ எழுதிய பாடலுக்கு அவர் வாய் அசைத்து இருக்கிறார். அவ்வளவுதான்.
செல்லூர் ராஜூ: எம்ஜிஆர் சொல்லித்தான் இதுபோன்ற தத்துவப் பாடல்கள் எழுதப்பட்டன.
மு.க.ஸ்டாலின்: இதுபோன்ற பாடல்களைப் பாடி எத்தனையோ கலைஞர்கள் நடித்துள்ளனர். பல படங்களில் இதுபோன்ற பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக விவாதிக்கத் தயாராக உள்ளோம். நீங்கள் தயாரா?
அமைச்சர் ஜெயக்குமார்:
சின்ன பயலே, சின்ன பயலே சேதி கேளடா! போன்ற தத்துவப் பாடல்கள் எல்லாம் எம்ஜிஆர் படத்தில்தான் வந்தன.
மு.க.ஸ்டாலின்: எம்ஜிஆர் திமுகவில் பொருளாளராக இருந்தபோது வந்த திரைப்படம் ஒளிவிளக்கு. அந்தப் படத்தில் திமுகவின் கொள்கைகளைப் பரப்பும் வகையில் எம்ஜிஆர் நடித்தார். நானே சைக்கிளை மிதித்துக்கொண்டு சென்று அந்தப் படத்தை மூன்று முறை பார்த்திருக்கிறேன் என்றார்.
தினத்தந்தி -13/08/2016
http://i66.tinypic.com/11t775s.jpg
அனாவசியமாக அமைச்சர் ஜெயகுமார் பராசக்தியை ஏன் இழுக்கிறீர்கள்
இவையும் சிறந்த தத்துவப்பாடல்கள்
மடல் வாழை துடை இருக்க மச்சம் ஒன்று அதில் இருக்க படைத்தவனின்
திறமை எல்லாம் முழுமைபெற்ற அழகி என்பேன்......
பெண் போனால் பெண் பொனால் அவள் பின்னாலே என் கண் போகும்........
மன்னிக்கவும் சார். எனக்கு தவறான நோக்கம் இல்லை. உங்களுக்கு வருத்தம் போல் இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட வரியை நீக்கிவிட்டேன்.
ஆனால், நீங்கள் குறிப்பிட்ட பாடல்கள் மட்டும் இல்லை. நிறைய தத்துவப் பாடல்கள் இதுபோல இருக்கிறது. பொன்னூஞ்சல் படத்தில் வரும் முத்துச்சரம் சூடி வரும் வள்ளிப் பொண்ணுக்கு பாட்டில்,
பால் சுரக்கும் நெல்மணிக்கு மங்கைப் பருவம்
என் கண்மணிக்கும் தேன்சுரக்கும் கன்னிப் பருவம்
மன்மதனும் தொட்டுவெச்ச மச்சம் இருக்கு
அந்த மச்சத்திலே மச்சானுக்கு உச்சம் இருக்கு...
இதுபோல நிறைய பாடல்கள் உண்டு. ரசனையான பாட்டுதான். ஆனால், நிஜமாகவே சொல்கிறேன். பால் சுரக்கும் நெல்மணிக்கு .... அர்த்தம் புரியவில்லை. நெல்மணிக்கா, இல்லை வேற எதாவது வார்த்தையா? இல்லை எனக்குத்தான் சரியா காதில் விழவில்லையா?
டிஜிட்டலில் வெளியாகிறது எம்ஜிஆரின் ‛ரகசிய போலீஸ் 115'
http://i67.tinypic.com/24yms2c.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் படங்கள் அனைத்துமே காலத்தால் அழியாத காவியங்கள். மக்களை மகிழ்ச்சிபடுத்திய அற்புதமான படங்கள். அவற்றில் அப்போது சூப்பர்ஹிட்டான பல படங்கள் தற்போது டிஜிட்டல் மயமாகி வருகிறது. விரைவில் ரிக்ஷாக்காரன் படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து வருகிறது ரகசிய போலீஸ் 115.
ஜேம்ஸ் பாண்ட் படங்கள் இந்தியாவுக்கு வந்து வெற்றி பெற்ற காலத்தில் அதே பாணியில் மக்கள் திலகம் நடித்த படம் இது. 1968ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை அன்றைய பிரமாண்ட இயக்குனர் பி.ஆர்.பந்துலு இயக்கி, தயாரித்திருந்தார்.
எம்.ஜி.ஆருக்கு ஜோடி ஜெயலலிதா, எம்.என்.நம்பியார், அசோகன் வில்லன்கள். நாகேஷ் காமெடியன், கே.டி.சந்தானம், திருச்சி சவுந்தர்ராஜன், என்னத்த கண்ணையா, ஜஸ்டின், வெண்ணிற ஆடை நிர்மலா, பத்மினி, புஷ்பலதா, எஸ்.என்.ஜானகி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த படம். எம்.எஸ்.விசுவநாதன் தேனினும் இனிய பாடல்களை பொழிந்திருப்பார்.
இந்தப் படம் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டு வருகிறது. பாடல்களும், பின்னணி இசையும் நவீன டால்பி இசை வடிவில் கொண்டு வரப்படுகிறது. அகன்ற திரையிலும் திரையிடப்பட இருக்கிறது. சண்முகம் பிலிம்ஸ் சார்பில் பி.சண்முகம் வெளியிடுகிறார்.
http://i67.tinypic.com/16h7zox.jpg
பி.ஆர். பந்துலுவின் மிகப்பெரிய வெற்றி படம் ரகசிய போலீஸ் 115 டிஜிட்டலில் இம் மாதம் திரைக்கு வர உள்ளது . எம்ஜிஆர் படங்களுக்கே உரிய இனிமையான பாடல்கள் , பிரமிக்க வைக்கும் சண்டை காட்சிகள்
என்று வந்த படம் .எம்ஜிஆரின் ஸ்டைல் , சுறுசுறுப்பான நடிப்பு - அவரின் ரசிகர்களை பரவசப்படுத்திய படம்
இந்த படம் 1968ல் வெளிவந்தது 100 நாட்கள் ஓடிய வெற்றி படம் . பின்னர் மறு வெளியீடுகளில் பல முறை இடை வெளி இல்லாமல் தொடர்ந்து ஓடிய படம் .
மதுரையை சேர்ந்த சண்முகம் என்பவர் இப்படத்தை தற்போது டிஜிட்டலில் மாற்றி புத்தம் புது படமாக தயாரித்து உள்ளார்.
courtesy - net
பாடலாசிரியர் முத்துக்குமரன் அவர்களின் மறைவு தமிழ் திரைப்படத்தினருக்கு பெரும் இழப்பாகும் .மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்
மகத்தான மந்திரிகுமாரி -1950
தமிழ்சினிமாவில் கதாநாயகன் என்ற புனிதபிம்பத்தை முற்றிலும் மாற்றிய இரண்டு திரைப்படங்கள் மந்திரிகுமாரி, மற்றும் ரத்தக்கண்ணீர். இரண்டையும் பத்து முறைகளுக்கு மேலாகப் பார்த்திருப்பேன்.
மந்திரிகுமாரி 1950ல் வெளியானது. ரத்தக்கண்ணீர் 1954 ம் ஆண்டு வெளியாகி உள்ளது. இரண்டின் கதாநாயர்களும் தன்னுடைய விருப்பதின் பாதையில் தன்னை உருவாக்கி கொண்டவர்கள்.
மந்திரி குமாரியில் வரும் பார்த்திபன் கொலை, கொள்ளைகளை விரும்பிச் செய்கிறான். கொலை தனது கலை என்று உரத்து சொல்கிறான். ரத்தகண்ணீரில் வரும் மோகன் வெளிநாட்டில் படித்து திரும்பிவந்து குடும்பம் சமூகம் இரண்டு தளத்திலும் உள்ள கட்டுபாடுகள்,ஒழுக்கவிதிகள், மூடநம்பிக்கைகளை எதிர்க்கிறான். சமூகத்தை கடுமையாக்க் கேலி செய்கிறான்.
இருவருமே காதலிக்கிறார்கள். திருமணமும் செய்து கொள்கிறார்கள். திருமணத்தின் பிறகும் அவர்கள் இயல்பு மாறிவிடவில்லை. தொழுநோயுற்ற போதும் மோகன் கடவுளிடம் தஞ்சம் புகவில்லை. அது போலவே மந்திரிகுமாரியில் சிறைப்பட்டு மரணதண்டனைக்காக காத்திருந்த போதும் பார்த்திபன் மாறிவிடவில்லை. அவன் பதிபக்தியைக் கேலி செய்கிறான். இந்த இரண்டு கதாபாத்திரங்களும் ஒரே கருத்துருவின் இரட்டையர்களைப் போலவே இருக்கிறார்கள்.
இரண்டு படங்களுமே திராவிட இயக்க கருத்துக்களைத் திரையில் நேரடியாகப் பேசுகின்றன. மதத்தின் பெயரால் நடைபெறும் மூடநம்பிக்கைகளை விவாதிக்கின்றன. அவ்வகையில் திராவிட இயக்க அரசியல் தமிழகத்தில் வேர் ஊன்ற செய்வதற்கு இருபடங்களும் முக்கியக் காரணிகளாக இருந்திருக்கின்றன.
மந்திரிகுமாரி வெளியான அதே காலகட்டத்தில் நாகையா நடித்த ஏழைபடும்பாடு வெளியானது, இந்தபடம் விக்டர் க்யூகோவின் லே மிசரபிள் நாவலை மையமாக கொண்டு உருவாக்கபட்டது. அதுவும் ஒரு திருடனைப் பற்றியே பேசுகிறது. அவன் மனம் திருந்திய திருடன். ஏழ்மை அவனைத் திருட செய்கிறது. அவன் தனது திருட்டிற்காக மனம் கலங்குகிறான். மீட்சிக்காகப் போராடுகிறான், அவனை தமிழ்சமூகம் தனது அடையாளமாக அங்கீகரிக்கவேயில்லை
இந்தியாவில் சினிமா அறிமுகமான காலத்தில் இருந்தே புராணங்களும் இதிகாசங்களும் தான் அதன் கதைக்களமாக இருந்திருக்கிறது. அரிச்சந்திரா சத்யவான் சாவித்ரி, பஸ்மாசுர மோகினி லங்கா தகனம், பக்த விதுரன், நள தமயந்தி, என உருவான மௌனப்படங்கள் இந்திய சினிமாவை கோவில்கலைகளில் ஒன்றாகவே மாற்றியிருக்கிறது.
இந்திய மக்கள் திரை அரங்கின் வழியாகவே கடவுள் எப்படிப் பேசுவார். எப்படி நடந்து கொள்வார் என்பதை அறிந்து வைத்திருக்கிறார்கள். சினிமா நாட்டார்மரபில் இருந்த கதைகளையோ. அல்லது மக்கள் வரலாற்றினையோ கவனம் கொள்ளவேயில்லை. சமகாலப் பிரச்சனைகளை முதன்மைப்படுத்தவேயில்லை. புராணம் மற்றும் தொன்மம் சார்ந்த மிகை கற்பனைதன்மையில் இருந்து இந்திய பாபுலர் சினிமா இன்று வரை விடுபடவேயில்லை. அந்தக் குறையே இன்றும் சினிமாவை முற்றிலும் வணிகமான ஒன்றாக மாற்றி வைத்துள்ளது.
மௌனப்பட காலத்தில் சினிமா பார்ப்பது பாவம், அது மனித மனதில் தீய எண்ணங்களை உருவாக்கிவிடும் என்ற நம்பிக்கையை மதம் உருவாக்கி மக்களைத் தடுத்து வைத்தது. காலமாற்றத்தில் அதே மதம் கடவுளின் அருட்கதைகள், திருவிளையாடல்களை பெருவாரியான மக்களின் நம்பிக்கை வடிவமாக மாற்றுவதற்கும் சினிமாவைப் பயன்படுத்த முயற்சி செய்து வெற்றியும் பெற்றது.
தமிழ்சினிமாவிற்கும் மதஅடையாளங்களுமான உறவும் எதிர்ப்பும் தனித்து விரிவாக அறிய வேண்டிய ஒன்று
மந்திரிகுமாரி தமிழ் இலக்கிய மரபிலிருந்து உருவானதொரு திரைப்படம். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியே இதன் மூலம். மூன்று தமிழ்காப்பியங்கள் பெண்களை முக்கியக் கதாபாத்திரமாகக் கொண்டு உருவாக்கபட்டவை. கண்ணகி, மணிமேகலை, குண்டலகேசி ஆகிய மூன்று பெண்களும் தனித்துவமானவர்கள்.
குண்டலகேசி ஒரு பௌத்த காப்பியம். அழிந்து போன அந்தக் காவியத்தின் பத்தொன்பது பாடல்கள் மட்டுமே இன்று வாசிக்க கிடைக்கின்றன. தேரிகதையில் வரும் புத்த பிக்குணியான குண்டலகேசியின் கதையை அடிப்படையாகக் கொண்டு இக்காப்பியம் உருவாக்கபட்டிருக்கிறது. தம்மபதத்தில் இக்கதை பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.
திருடர்களை முக்கியக் கதாபாத்திரமாக கொண்டு கதை சொல்வது இந்திய நாட்டார்கதைமரபில் தொன்று தொட்டுவரும் ஒன்றே. திருடர்கள் பெரும்சாகசக்கார்களாகவும், திருடுவதன் மூலம் அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தார்கள் என்றும் நாட்டார்கதைகள் சுட்டிக்காட்டுகின்றன. மனம் திருந்திய திருடனைப் பற்றிய கதைகள் பௌத்த கதைமரபில் காணப்படுகிறது. அந்த வகையின் தொடர்ச்சியே குண்டலகேசி காப்பியம், குண்டலகேசி என்றால் சுருண்ட கூந்தலை உடையவள் என்பதே பொருள்.
குண்டலகேசி காப்பியத்திலிருந்து மந்திரிகுமாரி திரைக்கதை எப்படி மாறிவந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள அதன் காப்பியக் கதையை வாசித்து அறிய வேண்டியது அவசியம்.
குண்டலகேசி காப்பியம் திருடனைக் காதலித்த ஒரு இளம்பெண்ணைப் பற்றியது. பூம்புகாரில் உள்ள செல்வமிக்க வணிக குடும்பத்தில் பிறந்த அவள் தோழிகளுடன் பூபந்து விளையாடிக் கொண்டிருந்த போது பந்து தவறிப்போய் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு ஆணின் மீது விழுகிறது. குண்டலகேசி குனிந்து பார்க்கும் போது அவனும் திரும்பிப் பார்க்க, முதல்பார்வையில் அவளுக்கு அந்த ஆணைப் பிடித்துப் போய்விடுகிறது. அவன் யாரென விசாரிக்கத் துவங்குகிறாள்.
அவன் பெயர் காளன், மந்திரியின் மகன் என்றும் அவன் ஒரு திருடன் கொலையாளி, கொள்ளைக்காரன் என்பதால் மரணதண்டனை நிறைவேற்ற கொண்டு போகபடுகிறான் என்றும் தகவலை அறிகிறாள்.
பெற்ற தந்தையே இந்த தண்டனையை விதித்து அவனைக் கொல்ல அனுமதித்துள்ளார் என்பது அவளை வியப்பூட்டுகிறது. பூம்பூகாரில் இந்திரவிழா துவங்கிய நாட்களில் கொலைதண்டனை நிறைவேற்ற மாட்டார்கள். ஆகவே அவள் இதைப் பயன்படுத்தி திருடனை விடுவித்து மணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறாள்
மகளின் பிடிவாதத்தை கண்ட அவளது தந்தை அரசனிடம் சென்று காளனை விடுவிக்கும்படி கேட்கிறார். அவன் எடைக்கு எடை பொன்னும் எண்பத்தியோறு யானைகளும் தந்து காளனை விடுவிக்க வைத்து மகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.
காளனோடு குண்டலகேசி இன்பமாக வாழத் துவங்குகிறாள். காவிரியில் புதுவெள்ளம் வரும்போது புனலாட அவர்கள் கிளம்புகிறார்கள். காளன் வேண்டுமென்றே குண்டலகேசியின் குங்குமச்சிமிழை எடுத்து ஒளித்து வைக்கிறான். அதைக் காணாமல் தேடி அலைகிறாள் குண்டலகேசி. காளன் வேடிக்கை முடிந்து எடுத்து தந்துவிடவே உங்கள் கள்ளதனம் மாறவேயில்லையே என்று கேலியாக சொல்கிறாள். அது அவன் மனதில் தன்னைக் குத்திகாட்டுவது போல படுகிறது. தன் கடந்தகாலத்தை அவள் சொல்லிக்காட்டுவதாக நினைத்துக் கொண்டு அவளைக் கோவித்துக் கொள்கிறான்.
வீடு வந்த போதும் அவன் மனதில் குண்டலகேசியின் வார்த்தைகள் மறையவேயில்லை, மறுநாள் அவளைக் கொல்ல முடிவு செய்து மலைஉச்சியில் உள்ள தெய்வத்தை வழிபட துணை வர வேண்டும் என்று அழைத்துப் போகிறான். அங்கே காளன் தன்னைக் கொல்ல முயற்சிப்பதை அறிந்து அவனைத் தந்திரமாக கிழே தள்ளி கொன்றுவிடுகிறாள் குண்டலகேசி.
பிறகு தானும் குதித்து உயிர்விட முயற்சிக்கிறாள். அவளை ஒரு வேடுவப்பெண் தடுத்துக் காப்பாற்றுகிறாள். அதன்பிறகு அவள் பௌத்த சமயத்தில் சேர்ந்து துறவியாகி பல இடங்களில் தன் அறிவுத் திறனால் வாதிட்டு பௌத்த சமயத்தை பரப்பி ஞானம் அடைந்தாள் என்கிறது காப்பியம்.
காப்பியத்தின் சாரத்தை மட்டுமே திரைக்கதையாகக் கொண்டு சுவாரஸ்யமான புனைவை மேற்கொள்கிறது திரைப்படம், கலைஞரால் நாடகமாக எழுதப்பெற்று பல ஊர்களிலும் நடத்தப்பட்ட மந்திரிகுமாரியை மார்டன் தியேட்டர்ஸ் சுந்தரம் திரைப்படமாக்க முன்வந்தார், ஆகவே இப்படத்தின் ஆதார வடிவம் மேடை நாடகமே,
முல்லை நாட்டு மன்னரின் மகள் ஜீவரேகவும் (ஜி.சகுந்தலா) மந்திரியின் மகள் அமுதாவும் (மாதுரிதேவி) தோழிகள். தளபதி வீரமோகனை ( mgr) ராஜகுமாரி காதலிக்கிறாள். மன்னரை ஆட்டிப்படைக்கும் ராஜகுருவின் (எம்.என்.நம்பியார்) மகன் பார்த்திபன் (எஸ்.ஏ.நடராஜன்) ஒரு திருடன், அதிலும் ராஜகுருவின் மகன். ”கொள்ளையடிப்பது ஒரு கலை” என்பது அவனது கொள்கை.
பார்த்திபனை அவனது சுயரூபம் அறியாமல் மந்திரிகுமாரி அமுதா மணக்கிறாள். கொள்ளையர்களைப் பிடிக்கும் முயற்சியில் ராஜமோகன் ஈடுபட்டு, பார்த்திபனைப் பிடித்து அரச சபையின் முன் நிறுத்துகிறான். ஆனால் ராஜகுருவின் சூழ்ச்சியால் பார்த்திபன் விடுவிக்கபட்டு ராஜமோகன் குற்றப் பழிக்கு ஆளாகிறான்.
தன் கணவன் கொள்ளைக்காரன் என்பதை அறிந்த அமுதா அவனைத் திருத்த முயற்சி செய்கிறாள். ஆத்திரத்தில், அவளைக் கொல்ல முடிவு செய்த பார்த்திபன் வாராய் நீ வாராய் என்று பாட்டுப்பாடி, மலை உச்சிக்கு அழைத்துச் சென்று தள்ளிவிட முயற்சிக்கும் போது அவனைக் கிழே தள்ளி அமுதா கொன்றுவிடுகிறாள்
மந்திரிகுமாரியை எல்லிஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்தார். அவர் பாதியில் அமெரிக்கா போய்விட்டதால் மீதமுள்ள படத்தை டி.ஆர்.சுந்தரம் இயக்கியிருக்கிறார்.
ராஜகுருவாக வரும் நம்பியாரின் வழியே சனாதன அரசியல் சுட்டிக்காட்டப்படுகிறது, காப்பியக்கதையை அன்றைய தமிழக அரசியல் நிகழ்வுகளின் எதிரொலிப்பு போல உருமாற்றியதே திரைக்கதையின் தனிப்பலம், கலைஞரின் வசனங்கள் அதற்கு கூடுதல் துணை செய்கின்றன
மந்திரிகுமாரியில் தனது முழு ஆளுமையை வெளிப்படுத்தியவர் எஸ்.ஏ.நடராஜன், அவரே திருடன் கதாபாத்திரத்தில் நடித்தவர், வராய் நீ வராய் என்ற பாடலின் வழியே அவர் தனது மனைவியைக் கொலை செய்ய அழைத்துப் போகும்போது காட்டும் முகபாவங்கள் அற்புதமானவை,
மந்திரிகுமாரி காப்பியத்தில் இருந்த பௌத்த கூறுகள் திரைப்படத்தில் பெரிதும் அகற்றப்பட்டு அந்த இடத்தில் பிராமண ஆதிக்கமும் அதன் எதிர்ப்பு அரசியலும் முதன்மைபடுத்தபட்டிருக்கிறது, காட்சிபடுத்தபட்ட விதம், நடிப்பு, பாடல்கள், கூர்மையான வசனங்கள் என்று பலவிதங்களிலும் மந்திரிகுமாரி முக்கியமான ஒன்றாக விளங்குகிறது
குற்றம் என்று அடையாளம் காணப்பட்டவற்றை மறுதலிக்கும் குரலை படம் முழுவதும் நாம் கேட்க முடிகிறது
ஒரு இடத்தில் ராஜகுரு தன்மகனிடம் கொள்ளை அடிப்பதை நிறுத்த சொல்கிறார், அவன் பதில் சொல்கிறார்
“கொள்ளையடிப்பது ஒரு கலை. வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!”
அதைக்கேட்டு ஆதங்கமாக ராஜகுரு கேட்கிறார்,
மகனே இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?
அதற்கு பார்த்திபன் உற்சாகமாக பதில் சொல்கிறான்
“கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.”
இப்படி கொலையைக் கலையாக்கும் காரசாரமான விவாதம் இன்றைய சமகால உண்மைகளுக்கு நெருக்கமாகவே இருக்கிறது,
நாடகமேடை கதைகளிலும் மௌனப்பட யுகத்திலும் கடவுளின் அவதாரமாக முன்னிறுத்தப்பட்ட கதாநாயகன் என்ற பிம்பத்தை இந்த படம் தன்னளவில் முழுமையாகச் சிதறடித்தது, ஒருவகையில் எதிர்நாயகனை முதன்மைபடுத்தி உருவாக்கபட்ட முதல்படம் இதுவே,
courtesy - net
••••
அலி பாபாவும் 40 திருடர்களும்
மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம் சாகசக் கதைப் பிரியர் போலிருக்கிறது. அவர் ஆயிரத்தோர் இரவுகளிலிருந்து இந்த கதையை பிடித்திருக்கிறார். அருமையான த்ரில்லிங் கதை. கதை தெரியாதவர்கள் பார்த்தால் உண்மையிலேயே திருப்தி அடைவார்கள். மாஸ் ஹீரோவாகிக் கொண்டிருக்கும் எம்ஜிஆர், வீரப்பா, பானுமதி. ஒரு பிரமாதமான குகை. ஒன்பது முத்தான பாட்டுகள். பைசா வசூல்.
1956-இல் வந்த படம். எம்ஜிஆர், பானுமதி, பி.எஸ். வீரப்பா, எம்.ஜி.சக்ரபாணி, சாரங்கபாணி, எம்.என். ராஜம், தங்கவேலு, ஓ.ஏ.கே. தேவர் நடித்தது. பின்னாளில் புதிய வார்ப்புகளில் தொடங்கி ஒரு ரவுண்ட் வந்த கே.கே. சவுந்தரும் ஒரு சிறு ரோலில் வருவார். இசை எஸ். தக்ஷிணாமூர்த்தி. பாடல்கள் மருதகாசி. இயக்கம் டி.ஆர். சுந்தரம்.
தெரிந்த கதைதான். பணக்கார அண்ணன் காசிம் (சக்ரபாணி) மனைவி பேச்சை கேட்டு தம்பி அலி பாபா (எம்ஜிஆர்), அம்மா, தங்கை எம்.என். ராஜத்தை விரட்டி விடுவார். அலி பாபா விறகு வெட்டி பிழைப்பார். அழகான பொண்ணுதான் என்று பாட்டு பாடி பிழைப்பு நடத்தும் மார்ஜியானாவையும் (பானுமதி) அவருக்கு டோலக் வாசிக்கும் சாரங்கபானியையும் முரடர்களிடமிருந்து காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருவார். மீண்டும் ஒரு நாள் விறகு வெட்ட காட்டுக்கு போகும்போது 40 திருடர்களையும், அவர்களது ரகசிய குகையையும் பார்ப்பார். அவர்கள் போனதும் குகைக்குள் நுழைந்து கொஞ்சம் செல்வத்தை அள்ளிக் கொண்டு வருவார். தங்கக் காசுகளை என்ன முடியாது, அளக்கவோ வீட்டில் ஒன்றுமில்லை. அண்ணன் வீட்டிலிருந்து ஒரு மரக்காலை இரவலாக வாங்கி வருவார். ஏழைகளான இவர்கள் எதை அளக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள அண்ணி மரக்காலின் அடியில் கொஞ்சம் புளியை ஒட்டி அனுப்புவார். புளியோடு ஒரு தங்கக் காசு போகும். அதைப் பார்த்து தங்கக் காசுகளை மரக்காலில் அளக்கும் அளவுக்கு இவர்களுக்கு எப்படி பணம் வந்தது என்று தெரிந்து கொள்ள அலி பாபாவுக்கு காசிம் ஒரு விருந்து கொடுப்பார். அலி பாபாவை மிகவும் வற்புறுத்தி ரகசியத்தை தெரிந்து கொள்ளும் காசிம் குகைக்கு போவார். ஆனால் வெளியே வரும் கட்டளை மறந்து விடும். திருடர்கள் அவரைக் கொன்று அவர் பிணத்தை துண்டுகளாக வெட்டி குகையில் ஒரு எச்சரிக்கையாக மாட்டி வைப்பார்கள். காசிம் திரும்பி வராததால் அலி பாபா குகைக்கு செல்வார். பிணத்தை கொண்டு வருவார். யாருக்கும் விஷயம் தெரியாமல் இருக்க தையல்கார தங்கவேலுவை அழைத்து பிணத்தை தைக்க சொல்வார் மார்ஜியானா. பிணம் காணமல் போனதால் ரகசியம் தெரிந்த மனிதரை திருடர்கள் தேடுவார்கள். அவர்கள் தந்திரத்தை மார்ஜியானா முறியடிப்பார். கடைசியில் வீரப்பா தங்கவேலு மூலமாக வீட்டை தெரிந்து கொள்வார். அங்கே மாறு வேஷத்தில் வருவார். ஆனால் மார்ஜியானா அவரை அடையாளம் கண்டு கொள்வார். எண்ணை பீப்பாய்களில் இருக்கும் திருடர்களை கொன்று ஆற்றில் வீசி விடுவார். வீரப்பா மார்ஜியானவை கடத்தி செல்ல, அலி பாபா அவரை பின் தொடர்ந்து குகைக்கு செல்ல, அங்கே ஒரு த்ரில்லிங் சண்டைக்கு பின் அலி பாபா வீரப்பாவை கொன்று, மார்ஜியானாவை மணந்து, சுபம்!
ஒரிஜினல் கதையிலிருந்து சில மாறுதல்கள் இருக்கின்றன. மார்ஜியானா ஒரிஜினலாக அலி பாபாவின் அடிமைப் பெண். அவளது திறமையை மெச்சி அலி பாபா அவரை தன் அண்ணன் மகனுக்கு மனம் செய்து வைப்பார்.
இந்த படத்தில் நடிப்பு கிடிப்பு என்பதெலாம் பெரிய விஷயம் இல்லை. ஆனால் திரைக் கதை நன்றாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. அந்த குகை அற்புதம்! அதை திறக்க ஒரு பெரிய செக்கு மாதிரி ஒன்று சுழல்வதும், உள்ளே கொதிக்கும் நீருக்கு மேல் உள்ள குறுகலான பாலமும், அற்புதமான செட். வீரப்பா மிக பொருத்தமான casting. பானுமதி, எம்ஜிஆர் கூடத்தான். அதற்காகவே பாருங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் காண்பியுங்கள்.
பாட்டுகள் இந்த படத்தின் ஒரு பெரிய பலம். பாட்டுகள் கொஞ்சம் quaint ஆக இருக்கும். மருதகாசியின் வரிகள் மிக நன்றாக இருக்கும். என்ன அதிர்ஷ்டமோ எல்லாமே யூட்யூபில் இருக்கின்றன. நிறைய குத்துப் பாடல்கள்தான். எனக்கு மிகவும் பிடித்த பாட்டு, எஸ்.சி. கிருஷ்ணன், ஜமுனா ராணி பாடிய சின்னஞ்சிறு பூவே எந்தன் சீனா கல்கண்டே பாட்டுதான். கீழே காணலாம்.
அழகான பொண்ணுதான் பாட்டு மிக பிரபலமானது.
மாசிலா உண்மைக் காதலே குத்துப் பாட்டு இல்லை.:-) படத்தில் மிக புகழ் பெற்ற பாட்டு இதுதான் என்று நினைக்கிறேன். ஏ.எம். ராஜா அபூர்வமாக எம்ஜிஆருக்கு குரல் கொடுத்திருக்கிறார்.
சலாம் பாபு பாட்டுக்கு ஆடுவது வஹீதா ரெஹ்மான்! அந்த காலத்து ஐட்டம் நம்பர் போல. வஹீதா ரெஹ்மான் இன்னும் பிரபலம் ஆகாத காலம் என்று நினைக்கிறேன். சமீபத்தில் திருடா திருடி படத்தில் இந்த பாட்டையே வண்டார் குழலி வண்டார் குழலி என்று காப்பி அடித்திருந்தார்கள்.
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தங்கவேலு மேல் படமாக்கப்பட்டது.
நம்ம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு ஒரு நல்ல குத்துப் பாட்டு.
உன்னை விட மாட்டேன், என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டைக்குத்தான், அமீர் பூபதி ஆகியவை சுமாரான பாட்டுகள். இவற்றுக்கும் யூட்யூபில் வீடியோக்கள் இருக்கின்றன.
CORTESY - RV- NET
குடும்பத்தலைவன் - 15.8.1962 - 55 வது ஆண்டு துவக்கம்
நீதிக்கு பின் பாசம் . 15.8.1963 - 54 வது ஆண்டு துவக்கம்
கணவன் - 15.8.1968 - 49 வது ஆண்டு துவக்கம்
குடும்பத்தலைவன் - 15.8.1962 -
http://i68.tinypic.com/2mh6bg9.jpg
KANAVAN - 15..8.1962
http://i66.tinypic.com/2w6b97c.jpg
NEETHIKKU PIN PASAM - 15.8.1963
http://i65.tinypic.com/sws3eo.jpg
உலகம் சுற்றும் வாலிபனுக்கு வருவோம்! இந்த படத்திலே அவரோட அந்த காலத்திலே சக வில்லன்களா ஆக்ட் பண்ண எல்லாருமே நடிச்சிருந்தாங்க, அதாவது அசோகன், நம்பியார், ஆர்எஸ் மனோகர், ராமதாஸ், ஜஸ்டின் அப்படின்னு. அவரோட சண்டை காட்சிகள் எப்பவுமே பிரமாதமா இருக்கும்! அதாவது இப்பவும் படங்கள் வருது, அதிலே எதிரியை தாக்கறேன்னு ரத்தகளோபரமா இருக்கு, வன்முறைகளை தூண்டிவிடுகிற மாதிரி தான் வருது! அதாவது ஒருத்தன் எதிரின்னா அடிச்சி காலிப்பண்ணு, அப்படிங்கிற ரீதியிலே, பயங்கர ஆயுதங்களோட ஒரே ராசாபாசமா இருக்குது! ஆனா எம்ஜிஆர் படங்கள் எல்லாமே பாருங்க! அப்படி ராசாபாசம் எதுவும் தெரியாது! சண்டைங்கிறது ஆபத்தான வேளைகளில் தன்னை தற்காத்து கொள்ள வைத்திருக்கும் இன்னொரு கலை மாதிரி இருக்கும். அதிலே சண்டை போட அவரு எடுத்து வைக்கும் ஸ்டெப்பு, ஸ்டைல், ஆக்ஷன் எல்லாமே பார்க்க சந்தோஷமா இருக்கும். அதாவது குதுகூலமா சின்ன பசங்க கண்ணை மூடாம, பெரியவங்களும், சின்னவங்களும் சேர்ந்து பார்த்து மகிழ்ச்சியா பார்த்து ரசிக்கும் வண்ணம் இருக்கும்! அது தான் அவருடய படங்களுக்கு கிடைச்ச வெற்றி!
அப்படிதான் இந்த படத்திலே முதல்ல ஆர்எஸ் மனோகரோட போடற சண்டையிலே, எம்ஜிஆரை லதா துப்பாக்கியாலே சுட்டு தப்பிக்க வச்சிட்டு, அதுக்கப்பறம் மேஜையிலே பலம் யாரு காட்டறதுன்னு வைக்கும் ஸ்டெப்புகள், அப்பறம் கைநெகத்திலே கண்ணத்தை கிழிச்சு இரண்டு கட்டைவிரலை வச்சிக்கிட்டு சண்டை போட்டுக் காமிக்கும் லாவகமே தனி! அப்ப எல்லாம் இந்த மாதிரி புதுசா ஸ்டைலா சண்டை போட அவருக்கிட்ட புது ஆளுங்க வருவாங்க, அதிலே ஜஸ்டின் ஒருத்தரு, அப்பறம் எதிரியை அடிச்சி போட்டுட்டு ஓடறதுங்கிறது அவருடய வழக்கமே கிடையாது! அடிபட்டவன் திருந்தனும், அதுக்கு அடிச்சிட்டு அவனுக்கே தண்ணி எல்லாம் கொடுத்து சிகிச்சை பண்ணுவாரு!
அப்பறம் எதிரி பக்கம் நியாம் இருந்தா, அதுக்கு துணை போவாரு! இதிலேயும் அப்படிதான் அரைகுறையா ஆட சொல்லி வற்புறுத்தன ஜஸ்டினை அடிச்சிட்டு, அப்பறம் அவரு பக்கத்து நியாத்தை தெரிஞ்சு பணத்தை கொடுத்துட்டு சந்திரகலாவை மீட்டு காதலிப்பார்! இது மாதிரி ஆபத்துகள், ஆக்ஸிடண்டான கட்டங்கள்ல கதாநாயகியை காப்பாத்தி, கடைசியிலே அவங்களையே காதலிச்சி கல்யாணம் பண்ணி அவங்களுக்கு கலங்கம் எதும் வரமா பார்த்துக்கிற எம்ஜியார் ஃபார்முலாவை தான் கமலு தேவர் மகன்லேயும் செஞ்சு காமிச்சிருப்பாரு, ரேவதியை கல்யாணம் பண்ணிக்கிப்பற! ஆக இன்னைக்கு எந்த நடிகர்களா இருந்தாலும் சரி, அன்னைக்கு சில நல்ல வழி என்ற எம்ஜிஆர் போட்டு கொடுத்த ஃபார்முலாக்களை விட்டு அகன்றதே இல்லை!
அது மாதிரி காதல் கொள்வதில் அவருக்கு உண்டான பிரத்யோகமான ட்ரேட் மார்க்குகள் உண்டு! இந்த படத்திலே சந்திரகலாவை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு, அதுக்கு ஆசீர்வாதம் வாங்குகிற காட்சிகள் அமைப்பு சமுதாயத்தின் எல்லா மக்களையும் கவரும் வண்ணம் இருக்கும்! இந்த படத்திலே கல்யாணம் முடிச்சு ஜேசுதாஸ் வாயஸ்ல ஒரு அருமையான பாட்டுக்கு ஹாங்காங் சுத்தி போட்ல ஆடிப்பாடி காட்சிகள், அப்பறம் இந்த வெளி நாடு போன அங்கே அப்ப அதியமா இருந்த டால்ஃபின் மீன் காட்சிகள், டிஸ்னிலேன்டு, எக்ஸ்போ 70, இது எல்லாம் அப்படியே கண்ணுல ஒத்திக்கிற மாதிரி படம் புடிச்சு கொண்டு வந்தாங்க!
அப்பறம் இன்னொன்னு நம்ம மக்கள் திலகத்துக்கு எப்பவுமே புதுசா புதுசா, இளசா ஹீரோயின்கள் வேணும்! நம்ம ஊரு பத்தலைன்னு, வெளியிலே தாய்லேந்துல படம் புடிக்க வந்து அந்தவூரு பொண்ணை போட்டு கனவு காண வச்சு ஒரு துள்ளலா பாட்டு ஒன்னயும் பாடவச்சி தூள் கிளப்பி இருப்பாரு நம்ம தலைவரு!
courtesy - net
http://i64.tinypic.com/v8geub.jpg
ஏவி.எம். தயாரித்த 'அன்பே வா' படப்பிடிப்பைக் காண, அவர்களின் அழைப்பின்பேரில் ஆனந்த விகடன் சார்பாக சிம்லா சென்றிருந்தார் சாவி. அங்கே, 'புதிய வானம், புதிய பூமி, எங்கும் பனிமழை பொழிகிறது' என்ற பாடல் காட்சியில், தம்மோடு சாவியையும் நடந்து வரச் சொல்லி அன்புக் கட்டளை இட்டார் எம்.ஜி.ஆர். ஆம்... மறுமுறை உங்கள் தொலைக்காட்சியில் அந்தப் பாடல் காட்சி ஒளிபரப்பாகும்போது கவனித்துப் பாருங்கள்... எம்.ஜி.ஆருடன் கோட் சூட் அணிந்தபடி கம்பீரமாக நடந்து வருவார் சாவி. 'அன்பே வா' படம் சூப்பர் டூப்பர் ஹிட்! 'இந்தப் பெருவெற்றிக்குக் காரணம், நான் அதில் நடித்திருந்ததுதான்!' என்று தமாஷாகச் சொல்வார் சாவி.
எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையான குணம் குறித்தும் பகிர்ந்துகொண்டிருக்கிறார் சாவி. சிம்லாவில் படப்பிடிப்பு நடந்த சமயத்தில், எம்.ஜி.ஆரைக் காண ராணுவ வீரர்கள் சிலர் விரும்பினார்களாம். எம்.ஜி.ஆரும் அவர்களிடம் அன்பாக உரையாடி, அவர்களின் பணிகளையும், அவர்களுக்கு இருக்கும் சிரமங்களையும் அக்கறையோடு கேட்டறிந்தாராம். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டாராம். அந்த வீரர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரின் தாயார் இங்கே தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் குக்கிராமத்தில் வசிக்கிறார். அந்த வீரர், தான் இங்கே மிகவும் நலமாக இருப்பது குறித்து தன் அம்மாவுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும், தாயாருக்காக தான் வாங்கி வைத்திருக்கும் ஒரு எளிய புடவையை தன் அம்மாவிடம் சேர்க்க வேண்டும் என்றும் எம்.ஜி.ஆரைக் கேட்டுக்கொண்டு, அவசரம் அவசரமாக தன் தாயாருக்கு ஒரு கடிதம் எழுதி, அதையும் எம்.ஜி.ஆரிடம் கொடுத்து, அதை எப்படியாவது தன் தாயிடம் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம்.
"நாமாக இருந்தால் ஆகட்டும் என்று சொல்லி, அதை அத்தோடு மறந்திருப்போம். எம்.ஜி.ஆர். அப்படிச் செய்யவில்லை. சென்னை திரும்பியதும் முதல் காரியமாக அந்தப் புடவை, அந்த வீரர் கொடுத்த கடிதம் ஆகியவற்றோடு தனது அன்பளிப்பாக ஒரு பெரிய தொகையை வைத்துப் 'பேக்' செய்து, தனது உதவியாளரை அழைத்து, ஒரு காரில் உடனடியாகக் கிளம்பிச் சென்று, அந்த வீரரின் கிராமத்தைத் தேடிக் கண்டுபிடித்து, அவரின் தாயாரிடம் இந்த பார்சலை சேர்த்துவிட்டு வரும்படி உத்தரவிட்டார். அங்கே அந்த அம்மாவின் மகன் மிகவும் நலமாக இருக்கும் சேதியையும் சொல்லிவிட்டு வரும்படி சொன்னார். இந்த மனிதாபிமான பண்பை வேறு எவரிடமும் நான் பார்க்கவில்லை. அவரை 'மக்கள் திலகம்' என்று அழைப்பது மிகவும் சரியே!" என்று சிலாகித்துச் சொன்னார் சாவி.
நன்றி - விகடன் இ-மேகசின்