from dinamani
http://www.dinamani.com/tamilnadu/20...cle3569997.ece
எம்ஜிஆர் படம் பார்க்க சைக்கிளில் செல்வேன்
எம்ஜிஆரின் "ஒளிவிளக்கு' திரைப்படத்தை 3 முறை சைக்கிளில் சென்று பார்த்ததாக திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் ரத்தின சபாபதி பேசியது:
45 ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த திரைப்படங்களைப் பார்ப்பதற்கு காத்திருப்போம். ஒளிவிளக்கு படத்தில் இருவரும், "படி அரிசி கிடைக்கும் காலத்துல நாங்க படியேறி பிச்சை கேட்கப் போவதில்லே' என்றெல்லாம் பாடியிருப்பர். இப்போது விலையில்லா அரிசி அளிக்கப்பட்டு வருகிறது என்று பேசினார்.
அதன் பிறகு, "ஊதாரி பிள்ளைகளை பெக்க மாட்டோம், அதை ஊர் வம்பு வாங்கும்படி வைக்க மாட்டோம்' என்ற வரியையும் ரத்தின சபாபதி குறிப்பிட்டார்.
இதற்கு மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவினர் அனைவரும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
அமைச்சர் செல்லூர் ராஜு:
யாரையும் உறுப்பினர் குறிப்பிட்டுப் பேசவில்லை.
மு.க.ஸ்டாலின்: யாரோ எழுதிய பாடலுக்கு அவர் வாய் அசைத்து இருக்கிறார். அவ்வளவுதான்.
செல்லூர் ராஜூ: எம்ஜிஆர் சொல்லித்தான் இதுபோன்ற தத்துவப் பாடல்கள் எழுதப்பட்டன.
மு.க.ஸ்டாலின்: இதுபோன்ற பாடல்களைப் பாடி எத்தனையோ கலைஞர்கள் நடித்துள்ளனர். பல படங்களில் இதுபோன்ற பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக விவாதிக்கத் தயாராக உள்ளோம். நீங்கள் தயாரா?
அமைச்சர் ஜெயக்குமார்:
சின்ன பயலே, சின்ன பயலே சேதி கேளடா! போன்ற தத்துவப் பாடல்கள் எல்லாம் எம்ஜிஆர் படத்தில்தான் வந்தன. பராசக்தி படத்தில் "ஓ ரசிக்கும் சீமானே' என்று பாடல் வந்தது. அது தத்துவப் பாடலா?
மு.க.ஸ்டாலின்: எம்ஜிஆர் திமுகவில் பொருளாளராக இருந்தபோது வந்த திரைப்படம் ஒளிவிளக்கு. அந்தப் படத்தில் திமுகவின் கொள்கைகளைப் பரப்பும் வகையில் எம்ஜிஆர் நடித்தார். நானே சைக்கிளை மிதித்துக்கொண்டு சென்று அந்தப் படத்தை மூன்று முறை பார்த்திருக்கிறேன் என்றார்.
Bookmarks