Mangatha hit aanathila VP mela silarkku kadunkovam enna panrathu anban
Mangatha hit aanathila VP mela silarkku kadunkovam enna panrathu anban
ajay..unga message lam right than..... but if lingu was telling all those things, then this one would have been apt.. but Venkat prabhu Inga thannoda co-director ah (infact senior director) ah defend panraar........ at least he had the courtesy to do that when no one (including Suriya) did it.....so avara vittudalamae :)
He should not ask audience y they didn't make some films hit.....its a lesson for all the directors to speak less and concentrate on final output...vayamudikitae iruntha nothing will change...in fact even fans of actors have to leave their egos and come forward to criticize actors and his films even his looks rather than saying marana mass,tharu maru kind of things if it was actually not there....then don't expect actors to give quality commercial movies
சுப்பு,
சக படைப்பாளிக்கு ஆதரவாக வந்தீங்க, ரைட்டு. ஆனா மக்கள் என்ன படம் பாக்கணும், பாக்கக் கூடாதுன்னு சொல்றதுக்கு இவர் யார்? மக்கள் ரசனையை குறைத்து மதிப்பிடுவதை விட பெரிய தவறை எந்த படைப்பாளியும் செய்து விட முடியாது.
appadi kidayathu ajay........... naama panrathillaiya...yaaraiyavathu support pannumbothu.. un aal oda padam mattum enna ozhunga nu....... athu pola oru reaction ah eduthukkanum.. his view was definitely wrong....... no two opinions about that
VP should ask audience why movies like Yaan Korruttu are money spinners.
And I don't blame Lingu for giving over buildups. Biggest blame is for UTV Govind. Teaser ku success meet vechu, ithu fans meet solran aam. That guy argued that Anjaan will be biggest blockbuster. Eppadi iruntha ippadi.....fill in blanks.
Padatha release aagi, -ve review fb/twitter padichitu, avan vaaya mooditan. But Lingu has given new comedies fresh material. Direction vidu, he's now competing with Santhanam, Karunakar, etc.
Too fast
சன் டிவியில் விஜயதசமிக்கு அஞ்சான்
அஞ்சான் படம் வெளியாகி இரண்டுமாதம் கூட நிறைவடையாத நிலையில் விஜயதசமி விடுமுறைக்கு சன்டிவியில் ஒளிபரப்பாகிறது.லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா சமந்தா நடித்த திரைப்படம் அஞ்சான். பயங்கர பில்டப் உடன் சுதந்திரதினத்தன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.அடிவாங்கிய அஞ்சான் திரைபடம் ரிலீஸ் ஆன நாள் முதல் இதுநாள் வரை அதிகம் கலாய்ப்புகளுக்கு உள்ளான படம் அஞ்சான்தான் என்றால் மிகையாகாது. விடாமல் விரட்டி விரட்டி கலாய்க்கின்றனர்.சன்டிவியில் இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை அதிக விலைகொடுத்து சன்டிவி வாங்கியுள்ளது. அநேகமாக தீபாவளிக்கு ஒளிபரப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அக்டோபர் 3ஆம் தேதி விஜயதசமி விடுமுறை தினத்தில் ஒளிபரப்புகின்றனர்.ஆயுதபூஜைக்கு பிரம்மன்சன் டிவியில் அக்டோபர் 2ஆம் தேதியன்று காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை சிறப்புத் திரைப்படமாக பிரம்மன் படம் ஒளிபரப்பாகிறது.அதுக்குள்ளேயா?முன்பெல்லாம் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகி 100 நாட்களுக்கு மேல் ஆனால்தான் டிவியில் ஒளிபரப்புவார்கள். ஆனால் அஞ்சான் திரைப்படம் வெளியாகி 50 தினங்கள் கூட முடிவடையாத நிலையில் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது ‘சி' சென்டர்கள்தான் என்கின்றனர்.
'அஞ்சான்' டிவி ஒளிபரப்பு 'திடீர்' தள்ளிவைப்பு- the hindu
லிங்குசாமி - சூர்யா இணைப்பில் உருவான 'அஞ்சான்' விரைவில் திரையிடப்படும் என்று சன் டி.வி நிறுவனம் அறிவித்துள்ளது. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் 'அஞ்சான்'. லிங்குசாமி இயக்கி, தயாரித்த இப்படத்தை யு.டிவி நிறுவனம் வெளியிட்டது. சுதந்திர தின விடுமுறையை கணக்கில் கொண்டு இத்திரைப்படம் வெளியானது.
விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் 'அஞ்சான்' மிகவும் பாதகமான விமர்சனங்களை எதிர்கொண்டது. இதனைத் தொடர்ந்து இணையத்தில் பலரும் இயக்குநர் லிங்குசாமி கிண்டல் செய்து பதிவிட்டு வந்தார்கள்.
இந்நிலையில், விஜயதசமி அன்று சிறப்புத் திரைப்படமாக சன் டி.வியில் 'அஞ்சான்' திரையிடப்படும் என்று விளம்பரம் செய்தார்கள். ஆனால், இரண்டாம் நாளிலேயே அந்த விளம்பரங்கள் நிறுத்தப்பட்டது. மாறாக, 'பிரம்மன்' திரையிடப்படும் என்று விளம்பரம் செய்தார்கள்.
ஏன் 'அஞ்சான்' திரையிடப்படவில்லை என்று காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை உண்டாக்கியது.
இந்த நிலையில், "சூர்யா, சமந்தா ரசிகர்களே, 'அஞ்சான்' படம் விரைவில் சன் டி.வியில் ஒளிபரப்பப்படும்" என்று சன் டி.வியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
'அஞ்சான்' படத்தை தீபாவளிக்கு சிறப்புத் திரைப்படமாக ஒளிபரப்ப திட்டமிட்டு இருப்பதாக சன் டி.விக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறி வருகிறார்கள்.
லிங்குசாமி பேட்டியால் நோக்கத்தை மாற்றிக்கொண்டது கிண்டல் ஃபேஸ்புக் பக்கம்
Attachment 3777
'லிங்குசாமி மீம்ஸ்' என்ற ஃபேஸ்புக் பக்கத்தை அகற்ற முன்வந்துள்ளனர் அந்தப் பக்கத்தை ஆரம்பித்தவர்கள்.
சமீபத்தில் இயக்குநர் லிங்குசாமி, 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டியில், அஞ்சான் படத்தைத் தொடர்ந்து அவர் சமூக வலைதளங்களில் சந்தித்த கிண்டல்களும், நையாண்டிகளும் தன் பிள்ளைகள் வரை சென்றதாகவும். அதனால் தான் காயப்பட்டு, தர்மசங்கடத்திற்கு ஆளானதாகவும் தெரிவித்திருந்தார். | விரிவாக படிக்க - சமூக வலைதளங்கள் ஏற்படுத்திய காயங்களின் உச்சம்: லிங்குசாமி மனம் திறந்த பேட்டி |
இதைத் தொடர்ந்து, லிங்குசாமியை கிண்டல் அடிப்பதற்கென உருவாக்கப்பட்ட 'லிங்குசாமி மீம்ஸ்' என்ற பக்கத்தை உருவாக்கியவர்கள், தாங்கள் அந்த பக்கத்தை நீக்கவோ அல்லது வேறு விதங்களில் அந்தப் பக்கத்தை பெயர் மாற்றி பயன்படுத்தவோ முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
இது குறித்து, 'தி இந்து'விற்கு அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில், “எங்கள் கிண்டல் அவரை எப்படி பாதிக்கும் என்பது எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை. இன்றைய காலத்தில் ஒவ்வொரு திரைப்படமும், வசனங்களும் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகின்றன. அப்படி நினைத்துதான் நாங்களும் ஆரம்பித்தோம். ஆனால் யாரையும் புண்படுத்தும் நோக்கில் அதைச் செய்யவில்லை. அவரது பிள்ளைகள் வரை இது பாதித்துள்ளது என்பது தெரியவந்தபோது எங்கள் தவறை உணர்ந்தோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் கிண்டலடிப்பது தற்போது கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. சமீபத்தில் கோவா திரைப்பட விழாவில் பெண் தொகுப்பாளர் செய்த தவறு ஒன்று சமூக வலைதளங்களில் பெரிதாக கிண்டலடிக்கப்பட்டது. இது பற்றி தெரிந்த பிறகு, தான் தற்கொலை செய்து கொள்ள நினைத்தாக அந்த தொகுப்பாளர் தெரிவித்திருந்தார்.
மன அழுத்தத்தில் தவிப்பவர்கள் மற்றும் தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்களை மீட்க உதவும் ’ஸ்னேஹா’ அமைப்பின் தலைவரும், மனநல மருத்துவருமான லக்*ஷ்மி விஜயகுமார் இது குறித்து கூறும்போது, “இணையத்தில் கிண்டலடிப்பது, திட்டித் தீர்ப்பது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இளைய தலைமுறையினர் இணையத்தில் அதிக நேரம் செலவு செய்கின்றனர். அவர்கள் கிண்டலடிக்கப்படும்போது காயமடைகின்றனர். நல்ல வேலையில் இருப்பவர்கள் கூட, இதுபோல ஆபாச, இன ரீதியான தாக்குதலுக்கு ஆளாகின்றனர்”என்றார்.
மேலும் “இதற்கெல்லாம் சரியான பதில், இவற்றை கண்டுகொள்ளாமல் விடுவதே. இத்தகைய கிண்டலுக்கெல்லாம் அடித்தளமே அவர்களுக்கு மற்றவர்களின் கவனம் வேண்டும் என்பதுதான். அதை அவர்களுக்குத் தராமல், நாமும் சிரித்துவிட்டு போவதே நல்லது” என்றார்.