அன்பு பம்மலார் சார்,
'ராஜபார்ட் ரங்கதுரை' பற்றிய ஆனந்த விகடன், கல்கி, ராணி விமர்சனங்களை அளித்து அருள் பாலித்து விட்டீர்கள். கிட்டத் தட்ட மூன்று விமர்சனங்களும் ஒரே நேர்க்கோட்டில் பயணித்த மாதிரி இருந்தன. அற்புதம்.
"களம் கண்ட கவிஞன்" நாடகத்துக்கு தந்தை பெரியார் அவர்கள் தலைமைதாங்கி நடிகர் திலகத்தின் நடிப்பினை மனமார பாராட்டி வாழ்த்தியதை விடுதலை பத்திரிக்கையின் மூலம் பதிவு செய்து வியக்கச் செய்து விட்டீர்கள். வியப்பில் ஆழ்த்துவது தங்களுக்கு ஒன்றும் புதியதல்லவே! மிக அரியதொரு பதிவு. கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் தலைவரை கலையுலகில் தமது பிள்ளை என்று பாரட்டிப் பேசியது நெஞ்சை நெகிழ வைத்தது.
முன்னாள் தமிழக முதல்வர் அமரர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நம் தலைவர் பொம்மை இதழிற்கு அளித்த பேட்டியை வைத்தே 24வது ஆண்டு நினைவாஞ்சலி செலுத்தியது 'சபாஷ்' போட வைக்கிறது.
தலைவரின் கல்மனமும் கரையும் பேட்டி அருமை! எம்.ஜி.ஆர் அவர்களுக்காக தன் சிறுநீரகத்தையும் தர தயாராய் இருந்த அந்த உத்தமனைப் பற்றி கூற என்ன இருக்கிறது?... அதே போல இப்படிப்பட்ட அரிய, அற்புத பதிவுகளைத் தரும் தங்களைப் பற்றிக் கூற இனி என்ன இருக்கிறது? எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் நெஞ்சார்ந்த நன்றி! நன்றி! நன்றி!
அன்புடன்,
வாசுதேவன்.