பதிவுத்திலகம் வாசு சாரின் நிழற்படத் தொகுப்பிலிருந்து...
வாசு சாரின் பதிவிற்கான இணைப்பு -http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-9&p=767781&viewfull=1#post767781
பதிவுத்திலகம் வாசு சாரின் நிழற்படத் தொகுப்பிலிருந்து...
வாசு சாரின் பதிவிற்கான இணைப்பு -http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-9&p=767781&viewfull=1#post767781
லக்ஷ்மி கல்யாணம் - பாடல்களின் விவரங்கள்
1. ராமன் எத்தனை ராமனடி - பி.சுசீலா
2. பிருந்தாவனத்துக்கு வருகின்றேன் - பி.சுசீலா
3. யாரடா மனிதன் அங்கே - டி.எம்.,சௌந்தர்ராஜன்
4. போட்டாளே உன்னையும் ஒருத்தி - டி.எம்.சௌந்தர்ராஜன், ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி
5. தங்கத் தேரோடும் வீதியிலே - டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன்
6. வெட்ட வெளிப்பொட்டலிலே பட்ட மரம் ஒன்று - டி.எம்.,சௌந்தர்ராஜன்
பாடல் காட்சிகள்
தங்கத் தேரோடும் வீதியிலே
https://www.youtube.com/watch?v=oaM_xKSMHlg
ராமன் எத்தனை ராமனடி
https://www.youtube.com/watch?v=JMgbBfBTb6Q
யாரடா மனிதன் அங்கே
https://www.youtube.com/watch?v=Di6a4VogInA
பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்
https://www.youtube.com/watch?v=3OlXR8QkWnU
வெட்ட வெளிப்ப1ட்டலிலே
https://www.youtube.com/watch?v=YexKxLPSR28
போட்டாளே உன்ன1யும்
https://www.youtube.com/watch?v=UjrV08eC6XQ
http://i1146.photobucket.com/albums/...pstcryr1lq.jpg
நடிகர் திலகத்தின் 125வது வெற்றித் திரைக்காவியம் ... அடுத்து ...
Sivaji Ganesan Filmography Series
125. UyarndhaManidhan உயர்ந்த மனிதன்
https://scontent-sin1-1.xx.fbcdn.net...2e&oe=56DC7B65
தணிக்கை -25.11.1968
வெளியீடு - 29.11.1968
தயாரிப்பு - ஏவி.எம்.ப்ரொடக்ஷன்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, எஸ்.ஏ.அசோகன், சுந்தர்ராஜன், வாணிஸ்ரீ, பாரதி, மனோரமா, ஜி.சகுந்தலா, சீதாலட்சுமி, எஸ்.என்.பார்வதி, கே.ஆர்.தேவகி, சிவகுமார், வி.கே.ராமசாமி, வி.நாகையா, எஸ்.வி.ராம்தாஸ், வி.எஸ்.ராகவன், நம்பிராஜன், வசந்தகுமார், பூர்ணம் விஸ்வநாதன், டைப்பிஸ்ட் கோப் மற்றும் பலர்.
திரைக்கதை வசனம் - ஜாவர் என். சீதாராமன்
பாடல்கள் - வாலி
பின்னணி - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
ஒலிப்பதிவு - பாடல்கள் - ஜே.ஜே.மாணிக்கம், வசனம் - சி.டி.விஸ்வநாதன்
Recorded on RCA Sound System
ஒளிப்பதிவு டைரக்டர் - பி.என். சுந்தரம்
ஒளிப்பதிவு - ஏ. சோமசுந்தரம்
கலை - ஏ.கே. சேகர்
நடன அமைப்பு - ஏ.கே. சோப்ரா, ராமு
எடிட்டிங் - எஸ். பஞ்சாபி, ஓ. நரசிம்மன்
ப்ராஸஸிங் - சர்தூல் சிங் சேத்தி, டி.ராமசாமி - ஏவி.எம். ஃபிலிம் லேபரட்டரி, சென்னை-26.
மேக்கப் - டி.எம். ராமச்சந்திரன், எம். ரங்கசாமி
செட்டிங்ஸ் - வி.நாகன் ஆசாரி
உடைகள் - பி.ராமகிருஷ்ணன், கே.ஏ. காதர்
ஸ்டில்ஸ் - ஆர்.பி. ராஜமாணிக்கம்
செட் அலங்கார உதவி - பி.எல்.ஷண்முகம்
புரொடக்ஷன் எக்ஸிக்யூடிவ் - ஆர். ரெங்கஸ்வாமி
புரொடக்ஷன் மானேஜர் - சி. மோகன்
உதவி டைரக்டர்கள் - எஸ்.எல்.நாராயணன், ஆர்.பட்டாபிராமன், வி.எஸ்.ஷண்முகம்
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
ஸ்டூடியோ - ஏவி.எம்.ஸ்டூடியோஸ், சென்னை - 26
தயாரிப்பு - எம்.முருகன், எம்.குமரன், எம்.சரவணன்
இயக்குநர் - கிருஷ்ணன்-பஞ்சு
உயர்ந்த மனிதன் விளம்பர நிழற்படங்கள் - ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து..
Quote:
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...ar/UMAd1-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : டிசம்பர் 1968
http://i1110.photobucket.com/albums/...ar/UMAd2-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி : 20.12.1968
http://i1110.photobucket.com/albums/...ar/UMAd3-1.jpg
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 8.3.1969
http://i1110.photobucket.com/albums/...alaar/UM-1.jpg
பதிவுத் திலகம் வாசு சாரின் பொக்கிஷத்திலிருந்து
Quote:
http://i1087.photobucket.com/albums/...nithan-dvd.jpg
http://i1087.photobucket.com/albums/...g?t=1322535295
http://i1087.photobucket.com/albums/...g?t=1322535397
http://i40.photobucket.com/albums/e2...daleo/um/5.jpg
http://i40.photobucket.com/albums/e2...daleo/um/2.jpg
http://i40.photobucket.com/albums/e2...daleo/um/3.jpg
http://i40.photobucket.com/albums/e2...daleo/um/6.jpg
http://i40.photobucket.com/albums/e2...daleo/um/4.jpg
http://i1087.photobucket.com/albums/...g?t=1322535545
http://i1087.photobucket.com/albums/...n31355/um2.jpg
பதிவுத் திலகம் வாசு சாரின் பொக்கிஷத்திலிருந்து .... தொடர்ச்சி...
Quote:
http://i1087.photobucket.com/albums/...nap-184107.jpg
http://i1087.photobucket.com/albums/...nap-184175.jpg
http://i1087.photobucket.com/albums/...nap-184467.jpg
http://i1087.photobucket.com/albums/...nap-185638.jpg
http://i1087.photobucket.com/albums/...nap-187075.jpg
http://i1087.photobucket.com/albums/..._001392892.jpg
http://i1087.photobucket.com/albums/..._001595562.jpg
http://i1087.photobucket.com/albums/..._001600600.jpg
http://i1087.photobucket.com/albums/..._003329362.jpg
http://i1087.photobucket.com/albums/..._003363930.jpg
உயர்ந்த மனிதன் - சிறப்புச் செய்திகள்
1. நடிகர் திலகத்தின் 125வது படம் என்கிற பெருமையைப் பெற்ற திரைக்காவியம்.
2. 125வது பட விழாவில் பேரறிஞர் அண்ணா அவர்கள் கலந்து கொண்டு எங்கிருந்தாலும் வாழ்க என நடிகர் திலகத்தை வாழ்த்தியதும், இந்நிகழ்ச்சியே முதலமைச்சர் என்கிற முறையில் அவர் மேடையேறிப் பேசிய கடைசி நிகழ்ச்சி என்பதும் வரலாற்றில் இடம் பெற்று விட்டது. இந்நிகழ்ச்சியில் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ஒய்.பி.சவாண் அவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
3. தன்னைத் தரக்குறைவாக மேடைகளில் பேசிய எஸ்.ஏ.அசோகனையும் இப்படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்க வைத்து தன் சொந்த விருப்பு வெறுப்புகளைத் தன் தொழிலில் கொண்டு வராமல் உயர்ந்த மனிதன் என்கிற சொல்லுக்கு உயிர் கொடுத்த உத்தம புருஷர் நடிகர் திலகம் என்பதை நிரூபித்த படம்.
4. கடைசி நேரத்தில் ஒரு பாடலை சேர்க்க தீர்மானித்து, பாடலைப் பதிவு செய்து, நேரமின்மை காரணத்தால் கொடைக்கானல் சென்று படமாக்க முடியாமல், ஸ்டூடியோவிலேயே செட் அமைத்து படமாக்கப்பட்ட பாடல், தேசீய விருது அளவிற்கு மிகச் சிறந்த பாடலாகவும் அமைந்த சிறப்புக்குரிய பாடல், நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா.
5. நடிகர் திலகம் வாணிஸ்ரீ முதன்முறையாக இணைந்த படம்.
6. தேசிய திரைப்பட விருதுகளில் முதன் முறையாக பின்னணிப் பாடகர், பாடகியருக்கான விருது அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் விருதினையே இசையரசி பி.சுசீலா அவர்கள், உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் அவர் பாடிய நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா பாடலுக்காகப் பெற்றது சிறப்புக்குரியதாகும்.
http://iffi.nic.in/Dff2011/16th_nff/...1970_img_3.jpg
தேசிய திரைப்பட விருதுகளுக்கான இணையப் பக்கத்திற்கான இணைப்பு - http://iffi.nic.in/Dff2011/Frm16thNFAAward.aspx
உயரந்த மனிதன் - கோபால் சாரின் சிறப்புரை
Quote:
உயர்ந்த மனிதன்- 1968 தெய்வத்தின் 125 ஆவது சித்திரம்.
சிலருக்கு மட்டும் வாழ்க்கை வச படுவதில்லை. ஆணாக(பணக்கார??) பிறந்தாலும் ,பலன் பூரணமாய் அனுபவிக்க படுவதில்லை.சூழ்நிலை கைதி -அதுவும் ராஜலிங்கம் போல் எல்லோருக்கும் நல்லவனாக வாழ விரும்பும் உயர்ந்த மனிதனுக்கு....
எல்லோருக்கும் எதிர்காலம் குறித்து குழப்பம் உண்டு.நிகழ் காலம் குறித்து அதிருப்தி உண்டு. ஆனால் ராஜுவுக்கோ எதிர்காலம் சூன்யம்.நிகழ்காலம் தண்டனை.கடந்த காலமோ குழப்பம். அவன் அறிவு,விருப்பம் எதுவும் பயன் படாமல் அவன் நாட்கள்.... பாரம்பரியம்,கெளரவம்,மனசாட்சி எல்லாவற்றையும் கேள்வி குறியாக்கி கேலி செய்கிறது.அவன் சுதந்திரம் பெற்ற மனிதனாக வாழவே இல்லை.
பார் மகளே பார் படத்தில் NT கதாபாத்திரம்தான் உயர்ந்த மனிதனில் NT தந்தை பாத்திரம் -சங்கரலிங்கம்.தன் அந்தஸ்துக்கு குறைந்த எதுவுமே துச்சம்.அடுத்தவர் சுதந்திரத்தை பிடுங்கி (மகன் ஆனாலும்) அடிமை படுத்தும் சுயநல மூர்க்கன்.எல்லாவற்றையும் வாய் மூடி மௌனியாய் சகித்து வாழும் ராஜு தான் விரும்பிய ஏழை பெண்ணை மணந்து சில காலம் வாழ்கிறான். ஆனால் கண்ணெதிரே தந்தையால் அவள் எரிக்க பட்டு, ஒரே மாதத்துக்குள் மருமணம் புரிய நிர்பந்திக்க பட்டு, ஒட்டாமல் அமைதி வாழ்க்கை வாழும் அவன் வாழ்க்கையில், சத்யா என்ற அநாதை ஒருவன் வேலையாளாய் நுழைந்து ,அன்பிற்கு பாத்திரமாகி,சோதனை கடந்து ,இறுதியில் சத்யா தன் மகனே என்ற உண்மை தெரிந்து சுபம்.
உருவம்,உள்ளடக்கம் எதிலும் சோதனை முயற்சி செய்யாமல் , சில பாத்திர வார்ப்புகள்,சில பாத்திர திரிபுகள், நேர்மையான ஆற்றோட்டமாய் திரைகதை. அற்புதமான வசனங்கள். மிக மிக நேர்த்தியான நடிப்பு, இவற்றை வைத்து அற்புதமான படத்தை கொடுத்தனர் கிருஷ்ணன்-பஞ்சு,மற்றும் ஏ.வீ.எம்.(உபயம்-உதர் புருஷ்-பெங்காலி)
காட்டாற்று வெள்ளமாய் ஓடிய சிவாஜியின் 68 ஆம் வருடத்திய நடிப்பில் அணை போட்டு வரம்பில் நிறுத்திய இரு படங்கள் தில்லானாவும்,உயர்ந்த மனிதனும்தான். இதில் அவர் பங்கு தில்லானாவை விட காம்ப்ளெக்ஸ் ஆனது. அவர் விரும்பாத பாத்திரம்.(விரும்பியது டாக்டர் பாத்திரம்).வேறு எந்த படத்திலாவது அவர் பாத்திரம் படத்திலேயே இந்த அளவு சுய விமரிசனத்திற்கும் ,பிறர்(முக்கியமாய் நெருங்கிய நண்பன்) விமர்சனத்திற்கும் ஆளாகி இருக்குமா என்பது சந்தேகம்.
கோழை,சில உயர்ந்த மனிதர்கள்,சூன்யமாய் பொய் வாழ்க்கை, சுமைதாங்கி,தியாகி,தனது சுய துக்கம் சுகம் நினையாத பொதிமாடு,என்று சுயமாகவும்,
கோழை,சுயநலக்காரன்,அப்பனை சமாளிக்க முடியாதவன்,தன்னை நம்பியவர்களை காப்பாற்ற முடியாதவன்,என்று டாக்டரும்,
ஜென்டில்மன்,பொய்யன்,காட்டுமிராண்டி என்று மனைவியும்,
உதட்டில் ஒன்று உள்ளத்தில் ஒன்று என்று சுந்தரம் மகள் கவுரியாலும்
விமரிசிக்க படும் இந்த ராஜு யார்?
சுருக்கமாக சொன்னால் ,தன சுயத்தை இழந்து வாழ்பவன். அதனால்,பிறரால்,அவரவர் சௌகரியத்திற்கு விமரிசிக்க படுபவன். இப்போது புரிந்திற்குமே சிங்கத்திற்கு சற்றே தீனி கிடைத்திருக்கும் என்று?
உ.ம வை வித்தியாசமான படமாக்குவது டாக்டர் பாத்திரம். நண்பன் என்றாலே,பின்னால் விரோதியாக போகும் இந்நாள் alter -ego என்ற சம்பிரதாயத்தை முறியடித்து, ஒரு தாட்சண்யம் இல்லாத மனசாட்சி,இங்கிதமற்ற இரக்கமற்ற உறுத்தி கொண்டே இருக்கும் அனுகூல சத்ரு, சங்கீதத்தில் கவுன்ட்டர்-பாயிண்ட் என்று சொல்லும் படியான அபஸ்வர இசைவு . தனக்கு சொந்தமில்லாத பொருளை ,விட்டு கொடுத்து விட்ட பாவனையில்,தானும் அந்த அசம்பாவித சம்பவத்தில் கூட இருந்தும் தன்னாலும் தான் ஆசை பட்டவளை காப்பாற்ற முடியாத உண்மையை வசதியாக மறந்து,கல்யாணமும் செய்து கொள்ளாமல் எல்லா சந்தர்பங்களிலும் ராஜுவை இடித்து கொண்டே இருக்கும் ஒரு பாத்திரம்.ஆனால் மக்களின் மனதில் ராஜுவை விட அதிக இடம் பிடிக்கும் வாய்ப்பு. ராஜு அபார சுய இரக்கம்,சுய வெறுப்புக்கு ஆளாகி ஒருவித துறவு நிலை குற்ற உணர்வுடன் இந்த சித்ரவதை நண்பனை விரும்பி ஏற்கும் மேசொகிஸ்ட்(Masochist) ஆன மனநிலையை வெளிபடுத்துவான் நட்பின் உயர்வை காட்ட ஒரு காட்சியும் வலிந்து இருக்காது.
இதன் protoganist ஆக வந்த நடிப்பு கடவுளின் படம் நெடுக மிளிரும் நடிப்பை விவரிக்க இந்த பகுதி சமர்ப்பணம்.
இந்த படத்தின் அழகே,அவர் வசனம் பேசும் காட்சிகளை விட reaction காட்டும் காட்சிகள் அதிகம். சிவாஜியின் மேதைமை ஜொலிக்கும்.
முதல் காட்சியிலேயே அந்தந்த பத்திர வார்ப்புகள் சித்திரிக்க படும்.நாடகத்தனம் கொஞ்சம் இருந்தாலும் சிவாஜியின் magic அதனை சமன் செய்யும்.
ரொம்ப uneasy restraint என்று சொல்லப்படும் பாணியில் தந்தை எதிரே நடப்பதில் ஒட்டாமல், நடப்பதை மனதளவில் அங்கீகரிக்காமல் ஆனால் எந்த வெளிப்படையான எதிர்ப்பும் காட்டாமல் கடந்து செல்வார். தனது சம நண்பன் கோபாலுடன் சமமில்லாத பால்ய நண்பன் சுந்தரத்திற்கு நேர்ந்த ஒரு அநீதியை கூட ஒட்டாமல் துறவு நிலையாய் விளக்குவார். பிறகு சிறிது குற்ற உணர்வு உறுத்த நான் உன்னை சம நிலையில் அங்கீகரிக்கிறேன் என்ற தேற்றலோடு, சிகரெட் கொடுத்து சமாளிப்பார். அனால் ராஜு ,கோபால்,சுந்தரம் உடன் பழகும் விதம் சமூக நிர்பந்த நியதிற்குட்பட்டே (சமம், சமமின்மை )இருக்கும்.பின்னால் ராஜுவின் எந்த act of commission ,omission எல்லாவற்றுக்கும் இந்த ஒரு காட்சியே நம் மனநிலையை தயார் செய்து விடும்.
கதையின் நாயகி,பார்வதியிடம் பழகும் போது inhibition துறந்து உரக்க பேசுவார்,நையாண்டி செய்வார்,இயல்பை மீறி நடப்பார்.பார்வதி அந்தஸ்தில் குறைந்திருப்பதும்,சுந்தரத்திற்கு கொடுக்க இயலாத முக்கியத்துவத்தை இந்த உறவிற்கு கொடுக்க முடிவதும், ஒரு அசட்டு தைரியத்தையும் அவருக்கு அளிக்கும்.(தந்தையை மீறியும் ,சமாளிக்கலாம் என்று) ஒரு liberated மனநிலையில் இருப்பார். இந்த மனநிலை பின்னால் ஒரே ஒரு காட்சியில் வெளிப்படும்.அதை பிறகு பார்க்கலாம்.
ஆனால் மனைவி எரிபடும் காட்சியில், ஒரு ஊமை புலம்பலோடு,ஒரு குழந்தையின் இயலாமை கதறலோடு முடிப்பார். பிறகு தந்தை தன்னை மறுமணத்திற்கு ,துப்பாக்கியை வைத்து தற்கொலை மிரட்டலோடு ,மன்றாடும் போது, கோபம்,அதிர்ச்சி,இயலாமை,சுய-வெறுப்பு,விரக்தி அத்தனையையும் ஒரு பத்து நொடி close -up ஷாட்டில் காட்டி விடுவார்.(சிவாஜிக்கு இது புதிதல்ல).அரை மனதோடு சம்மதிக்கும் காட்சியில் அடுத்த பத்தொன்பது வருட வாழ்கை சித்திரம் நமக்கு கோடி காட்ட பட்டு விடும்.
வயதான பிறகு,வரும் காட்சிகளின் அழகு மனைவி விமலாவுடன் பாந்தமான ,இதமான ஆனால் ஒட்டாத ஒரு உறவு.(விமலாவின் இயல்பே அதற்கு ஒரு காரணம் என்றாலும்). நண்பன் கோபாலுடன் வரும் அனைத்து காட்சிகளிலும்,இதமோ,இங்கிதமோ இல்லாத கோபாலின் பேச்சுகளுக்கு, ஒரு தந்தை,ஒரு ரெண்டுங்கெட்டான் நண்பன்,குத்தும் தன மனசாட்சி மூன்று நிலையிலும் கோபாலை வரித்து ,மிக அழகாக கையாள்வார்.அவருக்கு ஒருவேளை உறுத்தல் குறைய ,ஈகோவை கோட் ஸ்டாண்டில் மாட்ட,தந்தையின் இழப்பை சரி செய்ய , இந்த நண்பன் அவசிய தேவை போலும்!
கோபாலுடன் நண்பன் என்ற உரிமையில் பேசும் கணங்கள்,கோபாலின் உடல்நிலை சம்பந்தமான இடங்கள்.கோபால் நிதானம் தவறும் இடங்கள்.குழந்தையை போல் நடத்துவார். இந்த இடங்களை கையாள இனி ஒரு நடிகன் பிறப்பது இயலாது.(பாத்திரத்தை அதன் குணாதிசயம்,கதையியல்பு,மனோதத்துவ பின்னணியில் புரிந்து,அதை நேர்த்தியுடன் செயல் படுத்தும் நடிப்பு வெளிப்பாடு.)
சோர்ந்து இருக்கும் போது ,உடல் கோளாறு என்று டாக்டரை கூப்பிடும் இடத்தில், விமலா,கோபால் இருவருக்குமான இடம் ,ராஜுவின் உடல் மொழியில்,பொய் அனுசரணையுடன் பிசைதலுக்கு இசையும் காட்சியில் ஒரு revelation போல பரவச படுத்தும்.
NT யின் நடிப்பு பரிமாணங்களை அலசும் போது ,இந்த படத்தில் மறக்க முடியாத இன்னொரு புது பரிமாணம், சத்யாவுடன் அவருக்கு develop ஆகும் உறவு. பல படங்களில் இந்த மாதிரி உறவுகள் வரும் போது pre -Emptive & Prevailing mood பாணியிலோ அல்லது விரோத அடிப்படையிலோ தான் பிளாட் development premise ஆக இருக்கும். இந்த படத்திலோ முற்றும் புது பரிமாணம். அதை சிவாஜி ஆண்டிருக்கும் விதம் ஒரு தனி சுவை. ஒரு வெகுளி தனமான ,rawness கொண்ட படிப்பறிவில்லா ஒரு பையன் மேல் ஒரு soft -corner என்பதற்கு மேல் செல்ல மாட்டார். முதல் முறை பார்க்கும் போது சாதா அறிமுகம், டாக்டர் சிபாரிசில் வேலை என்பதுடன் , மற்ற படி எந்த ஒரு கவனிப்பும் காட்ட மாட்டார். சத்யன் ஆங்கிலம் தெரியாமல் ,விமலாவுடன் மாட்டி கொண்டு முழிக்கும் காட்சியில் ஆகட்டும், பிறகு சம்பளத்தை கொடுத்து ஆசிர்வாதம் வழங்கும் காட்சியில் ஆகட்டும்(முதலில் அம்மாவிடம் என்பார்) ,ஒரு செல்லமான தோரணையில் ஒரு நல்ல ரெண்டுங்கெட்டான் வேலைகார பையன் என்ற அளவிலேயே நிற்கும். அம்மா படத்திற்கு நேர்ந்த அவமானத்தை சகிக்காமல்,சத்யம் விலக விரும்பும் காட்சியில் கூட டாக்டரிடம் ,முதல்லே அவனுக்கு புத்தி சொல்லு என்று பொறுப்பை டாக்டரிடம் கொடுப்பார். டாக்டர் குடித்து விட்டு நிதானம் இழக்கும் காட்சியிலும் ,வேலையாளாகவே நடத்தி வெளியேற சொல்வார். ஆனால் டாக்டரின் மரணத்திற்கு பிறகான வெற்றிடத்தில்,சத்யனின் பிரத்யேக அக்கறை தன்மையிலும்,retire ஆன மாணிக்கம் என்ற முதிய வேலையாளின் வேண்டுகோள் படியும் துளி அக்கறையும் , நெருக்கமும் கூடும் வெகு இயல்பாக. அந்த சாப்பிடும் காட்சி ஒரு கவிதை. பிறகு கூட மனைவியின் தலையீட்டில் சத்யன் பாதிக்க படும் போது ஓவர்-ரியாக்ட் செய்யாமலே அன்பை விளக்குவார்.
விமலாவுடன் வரும் வெடிக்கும் காட்சியில்(வசனப்படியே கட்டுபடுத்தி வைத்திருந்த எரிமலை) கொஞ்சம் ஏமாற்றம்.வழக்கமான NT பாணி முத்திரைகளுடன் கூடிய சாதாரண சீற்றமாய் வெளிப்படும். அந்த காட்சியில் நான் எதிர்பார்த்த நடிப்பு, நெருப்பில் தன மனைவியை காப்பாற்ற தவறி ,பொய் வாழ்கை வாழும் ஒருவனின் ,inhibition துறந்த சீற்றம்.Incoherent ஆய் துவங்கி,கோபமாய் வெடித்து,நிலை உணர்ந்து படி படியாய் அடங்க வேண்டிய காட்சி. ஆனால் follow thru காட்சியில் நடிப்பு தெய்வம் நிலைமையை சீர் செய்யும். கோபம் சிறிதே அடங்கி,சோபாவில் கால் போட்டிருக்கும் போது ,சமாதானமாய் shoe அவிழ்க்க வரும் வரும் மனைவியிடம் பிணக்கமுற்ற சமாதான கோடி காட்டும் அந்த சிறிய கால் மாற்றும் gesture கோடானு கோடி கதை பேசி விடும்.
விமலாவிடம் வெடித்த பின் ,planter 's conference செல்ல ,புறப்படும் போது, விமலா சத்யனை கூப்பிட்டு போக சொல்லும் போது ,ஒரு அன்னியோன்யமான ,ஆச்சர்யத்தை வார்த்தையின்றி வெளிப்படுத்துவார். அந்த வெடிப்புக்கு பின், விமலாவும் இல்லாமல் இருக்கும் சூழ்நிலையில்,டிரைவர் சுந்தரத்தை பழைய சிறு வயது நண்பராக்கி, பார்வதியுடன் இருந்த போது அடைந்த சுதந்திரத்தை உணர்வார்.
அந்த நாள் ஞாபகம் பாடல்,தமிழ் பட சரித்திரத்தில் மைல் கல். Dancing இல் ஒரு பகுதி usage of property for effective rendering . என்று ஒன்று உண்டு. இந்த பாடலில், வாக்கிங் ஸ்டிக்கை ஒரு துணை பாத்திரம் ஆகவே உபயோக படுத்தி இருப்பார். அவர் சிறு வயது சந்தோஷங்களை விவரிக்கும் போது ,ஒரு விளையாட்டு பொருளாய் கையில் சுழலும். உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்ற வரிகளில் அவர் உயர்ந்திருக்கும்.வாக்கிங் ஸ்டிக்கை, கீழே விடும் அழகே தனி.(வீரபாண்டிய கட்டபொம்மனின் வாள் உரையில் போடும் அழகை ஒத்தது ) டென்ஷன் ஆன வரிகளில் வாக்கிங் stick கழுத்திலும், மிக மிக மன அழுத்தத்திற்கு ஆட்படும் வரிகளில் ,நடக்கவே ஒரு சப்போர்ட் போலவும் பயன்படுத்துவார்.நண்பனுடன் சம நிலையில் பழ குவதாய் பாவனை செய்தாலும்,அலட்சியமாய் கழுத்தில் மாட்டி இழுப்பார். ராஜுவின் குணாதிசயம் வன்மைக்கு பணிதல்(தந்தை,விமலா, கோபால்),கீழோரிடம் empathy இருந்தாலும், ஒரு அந்தஸ்து தோரணை ஒட்டி பிறந்த குணம் போலும்!!
அடுத்த காட்சியில் அவர் வாக்கிங்கிற்கு சுந்தரத்தை அழைக்கும் போது தொப்பியை கழற்ற சொல்லும் gesture . கவுரி-சத்யா காதலை உணர்ந்து அவர் அதை அணுகும் பிரச்சனைக்குரிய காட்சி, NT யின் மேதைமைக்கு ஒரு சான்று. conference போய் வந்த தோரணையில் பிரச்சனையை அணுகுவார். தள்ளி நிற்பார், மிரட்டுவார், ஆழம் பார்ப்பார், ஒரு உயர்ந்த ,வறண்ட,flat வாய்ஸ் இல் பேசுவார்.இறுதியாய் உறுதியை உணர்ந்து சிறிதே உணர்ச்சி வச பட்டு ஒபபுவார். எனக்கு தெரிந்து இவ்வளவு காம்ப்ளெக்ஸ் ஆக ஒரு காட்சியை யாரும் அணுகியதில்லை.
கடைசி காட்சி (நாகேஷ் அவர்களை ஒரு விமான பயணத்தில் சந்தித்த போது இக்காட்சியை சிலாகித்தார்).Acting is not about discipline ,Technic , Perfection ,control and execution alone .Some times you loose your control and self to surprise yourself to surprise the audience .இதற்கு நல்ல உதாரணம் அவர் திருட்டு பழி விழுந்து தன நம்பிக்கையை குலைத்த சத்யாவை manhandle செய்யும் விதம்.(தில்லானா காட்சியில் அடிக்காமல் பாய்வார்) தன்னிடம் பேசும் கவுரி
விமலாவிடம் பேசாதே என்ற விஷயத்தை பேச முயலும் போது ,விமலா இருக்கும் போது இந்த விஷயத்தை என் பேசுகிறாய் என்பது போல் உடல் மொழி ,முகபாவத்தில் சொல்லும் அழகில்....
இந்த படத்தின் தனி சிறப்பு ஆற்றோட்டமான திரைகதை. Flashback அது இது என்று போட்டு (நிறைய சந்தர்பங்கள் இருந்தும் ) கதையின் மெல்லிய ஓட்டத்தை சிதைக்காமல், நேரடியாக கொண்டு சென்றிருப்பார்கள். ஜாவர் சீதாராமனின் வசனங்கள் (அந்த நாள்,ஆண்டவன் கட்டளை) தமிழ் பட நியதிகளை மீறாமல் , பாத்திர இயல்புகளை முன்னிறுத்தி ,மிக polish ஆக இருக்கும். கோபால்-ராஜூ உரையாடல்கள்,விமலா-ராஜூ, தொழிலாளி-முதலாளி உறவு சார்ந்தவை,கோபால் மரண காட்சி, கொடைக்கானல் காட்சிகள் குறிப்பிட வேண்டியவை.(ஒருவேளை உதர் புருஷ் வசனங்களை மொழி மாற்று செய்திருப்பார்களோ என்ற அளவு வித்யாசமாக இருக்கும்.) Hats off ஜாவர்.மற்ற படி ரொம்ப Technical விஷயங்கள் தேவை படாத கதை.
கிருஷ்ணன்-பஞ்சு சிவாஜியுடன் பிணங்கி (குங்குமம்)இந்த படத்தில் இணைந்தார். அமைதியான துருத்தாத இயக்கம்.
அடுத்த படி சரியான பாத்திர தேர்வு. சுந்தர் ராஜன் ,டாக்டர் வேஷத்திற்கு தேர்வு செய்ய பட்டிறிந்தாலும் ,அவரால் நேர் அல்லது எதிர் நிலைகளில் இயங்கியிருக்க முடியுமே தவிர நேர்-எதிர்,எதிர்-நேர் என்ற கோபாலின் புதிர் நிலை மனபான்மைகளுக்கு அசோகனின் கோமாளி தனம் கலந்த mystic ஆன நடிப்பு ஒரு புதிர் தன்மையை நிலை நிறுத்துகிறது.(Dark knight Heath Ledger போல்) .அசோகன் நல்ல தேர்வு.
வாணிஸ்ரீ ஒரு அற்புதம்.அறிமுகமாகி இரண்டாம் வருடத்தில் ஒரு rawness , Passion ridden poor teenager , பாத்திரத்துக்கு பொருத்தம். சௌகார், sophisticated ,obsessive -compulsive குணங்கள் நிறைத்த இந்த பாத்திரத்திற்கு இரண்டாவது nomination கூட இருக்க முடியாது. சிவகுமார் இதே குணாதிசயம் கொண்ட மனிதர்.கேட்கவா வேண்டும்?
நாகையா,சுந்தர ராஜன்,ராமதாஸ் அத்தனை பெரும் நல்ல பங்களிப்பை செய்திருப்பார்கள்.
இசை புரட்சி நிகழ்த்தியிருப்பார் விஸ்வநாதன்.(ராமமூர்த்தியை பிரிந்த பின் தனியாய் போட்ட படங்களிலேயே மிக சிறந்த படம்) பால் போலவே,வெள்ளிக்கிண்ணம்தான்,என்-கேள்விக்கென்ன பதில்,அந்த நாள் என்ற பாடல்கள் வாலி கூட்டணியில்.உறுத்தாத பின்னணி இசை.
ஏ.வீ.எம்.செட்டியார் சிவாஜியை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி (இந்த படத்தை re-make செய்ய முடியாது என்று சொன்னார்)
கிருஷ்ணன்-பஞ்சு சிவாஜியை best perfectionist என்று பாராட்டினார்கள்.
ரசிகர்களின் பார்வையில் இன்றளவும் மறக்க முடியாத படம்.
உயர்ந்த மனிதன் - பாடல்களின் விவரங்கள்
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்கள் - வாலி
1. நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா - பி.சுசீலா
2. வெள்ளிக்கிண்ணம் தான் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
3. என் கேள்விக்கென்ன பதில் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
4. அத்தானின் முத்தங்கள் - பி.சுசீலா
5. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே - டி.எம்.சௌந்தர்ராஜன். மேஜர் சுந்தரராஜன்.
Superb Body Language by NT in this film which no other actor can match forever.
உயர்ந்த மனிதன் - திரு முத்தையன் அம்மு அவர்களின் பொக்கிஷப் பதிவிலிருந்து...
மேலும் கண்ணைக் கவரும் உயர்ந்த மனிதன் நிழற்படங்கள் ... திரு முத்தையன் அம்மு அவர்களின் பங்களிப்பில்...
http://www.mayyam.com/talk/showthrea...=1#post1224112
உயர்ந்த மனிதன் - பாடல் காட்சிகள்
அத்தானின் முத்தங்கள்...
https://www.youtube.com/watch?v=cepwzi21AkE
உயர்ந்த மனிதன் - பாடல் காட்சிகள்
என் கேள்விக்கென்ன பதில்
https://www.youtube.com/watch?v=xPofOU6YGvI
உயர்ந்த மனிதன் - பாடல் காட்சிகள்
வெள்ளிக்கிண்ணம் தான்
https://www.youtube.com/watch?v=4BdsKO2Aoac
உயர்ந்த மனிதன் - பாடல் காட்சிகள்
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
https://www.youtube.com/watch?v=rXRnAigZCVg
உயர்ந்த மனிதன் - பாடல் காட்சிகள்
நாளை இந்த வேளை பார்த்து
https://www.youtube.com/watch?v=uePGiT9g2Z0
Sivaji Ganesan Filmography Series
126. Anbalippu அன்பளிப்பு
http://i1146.photobucket.com/albums/...psd3wrluof.jpg
தணிக்கை - 27.12.1968
வெளியீடு - 01.01.1969
தயாரிப்பு - கமலா மூவீஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், அபிநய சரஸ்வதி பி. சரோஜா தேவி, எம்.என்.நம்பியார், நாகேஷ், வி.கே.ராமசாமி, டி.ஆர்.ராமச்சந்திரன், செந்தாமரை, விஜய நிர்மலா, கீதாஞ்சலி, பண்டரிபாய், சச்சு, மற்றும் பலர்.
வசனம் - ஆரூர்தாஸ்
பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன்
பின்னணி பாடியவர்கள் - டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், தாராபுரம் சுந்தர்ராஜன், பி.சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, பி.பி.ஸ்ரீநிவாஸ்
ஒலிப்பதிவு - ஜே.ஜே.மாணிக்கம்.
ரீரிக்கார்டிங் - ஜே.ஜே.மாணிக்கம் - ஏவிஎம், ஏ.ஆர்.சுவாமிநாதன் - விஜயா
ஒலிப்பதிவு வசனம் - வி.எஸ்.எம்.கோபால் ராம் - ஏவிஎம்
கலை - ஏ.பாலு
செட்டிங்ஸ் - வி.நாகன் ஆச்சாரி
அரங்கப்பொருட்கள் - சினி கிராஃப்ட்ஸ்
மேக்கப் - ஆர்.ரங்கசாமி, சகாதேவராவ், மாணிக்கம், கே.ராமன், எம்.ராமசாமி, மாதவ ராவ், நாராயணசாமி, பாண்டியன்
உடைகள் - பி.ராமகிருஷ்ணன், கே.ஏ.ரெஹ்மான்
நடனம் - ஏ.கே. சோப்ரா
சண்டப்பயிற்சி - டி.வெங்கடேசன், சாமிநாதன்
வெளிப்புறப்படப்படிப்பு - பிரசாத் புரொடக்ஷன்ஸ் யூனிட், விஜயலக்ஷ்மி போட்டோ சவுண்டு யூனிட்
விளம்பரம் - எலிகண்ட்
விளம்ர டிசைன்கள் - ஈஸ்வர்
டைட்டில் டிசைன் - டைட்டில்
புரொடக்ஷன் நிர்வாகம் - எம்.கே.ராமன்
ஆபீஸ் நிர்வாகம் - எஸ்.சிவலிங்கம், மதுரை பத்மனாபன்
ஸ்டில்ஸ் - சாரதி
ஆபரேடிவ் காமிராமேன் - கே.எஸ்.பாஸ்கர் ராவ்
ப்ராஸஸிங் - டி.ராமசாமி - ஏவி.எம்.பிலிம் லாபரட்டரி, சென்னை-26.
ஸ்டூடியோ - ஏவி.எம்.
உதவி டைரக்ஷன் - நாஞ்சில் எஸ். ராஜேந்திரன், ப.புகழேந்தி, டி.எஸ்.பாலன்
எடிட்டிங் பி. கந்தசாமி
ஒளிப்பதிவு டைரக்டர் - தம்பு
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்விஸ்வநாதன்
தயாரிப்பு - எஸ். காந்திராஜ்
கதை டைரக்ஷன் - ஏ.சி. திருலோகசந்தர்.
அன்பளிப்பு - விளம்பர நிழற்படங்கள் - ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து
Quote:
காவிய விளம்பரம் : பொம்மை : ஜனவரி 1969
http://i1110.photobucket.com/albums/...GEDC5468-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5466-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : ஜனவரி 1969
http://i1110.photobucket.com/albums/...GEDC5471-1.jpg
இரண்டாவது வார விளம்பரம் : தினத்தந்தி : 8.1.1969
http://i1110.photobucket.com/albums/...GEDC5467-1.jpg
அன்பளிப்பு - பாடல்களின் விவரங்கள்
பாடலாக்கம் - கவிஞர் கண்ணதாசன்
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
1. வள்ளிமலை மான்குட்டி எங்கே போறே - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
2. தேரு வந்தது போலிருந்த்து - டி.எம்.சௌந்தர்ராஜன்
3. என் வேஷப் பொருத்தம் எப்படி இருக்கு - டி.எம்.சௌந்தர்ராஜன்
4. மாதுளம் பழத்துக்குப் பெயர் தான் மாதுளம் - பி.பி.ஸ்ரீநிவாஸ், பி.சுசீலா
5. எனக்குத் தெரியும் - எல்.ஆர்.ஈஸ்வரி
6. கோபாலன் எங்கே உண்டோ - டி.எம்.சௌந்தர்ராஜன், தாராபுரம் சுந்தர்ராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, கோரஸ்
பாடல் காட்சிகள்
வள்ளி மலை மான் குட்டி எங்கே போறே
https://www.youtube.com/watch?v=HFP_8KGB3d0
தேரு வந்தது போலிருந்தது
https://www.youtube.com/watch?v=0eTOWFNLasw
மாதுளம் பழத்துக்கு மாதுளம்
https://www.youtube.com/watch?v=jeMhToHx0NI
எனக்குத் தெரியும்
https://www.youtube.com/watch?v=FxPyFYOZa3U
என் வேஷப் பொருத்தம்
https://www.youtube.com/watch?v=TbEnzRg1lkw
கோபாலன் எங்கே உண்டோ
https://www.youtube.com/watch?v=jcl0Z3c3tgU
அன்பளிப்பு - சிறப்பு செய்திகள்
1. மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த முதல் படம்.
2. நடிகர் திலகத்தின் திரையுலக வரலாற்றில் ஆங்கிலப் புத்தாண்டு நாளான ஜனவரி 1ம் தேதியில் வெளியான ஒரே படம்.
3. வள்ளிமலை மான்குட்டி பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள திரு வீயார் அவர்களுக்கு
அன்பளிப்பு அணிவகுப்புக்கு மிக்க நன்றி....
மக்கள் கலைஞர் வெளிநாட்டில் இருந்து நடிகர் திலகம் வீட்டுக்கு வரும் காட்சியில் நடிகர் திலகம் வலது கை விரலில் ஒரு பேண்ட் எய்ட் சுற்றி இருப்பதைப் பார்த்தேன்...அந்த ஒரு சில காட்சியில் மட்டும் அது இருந்தது...கையில் சிறிய அடிப்பட போதும் பட பிடிப்பைத் தள்ளி வைக்காமல் நடித்துள்ளார் என நினைக்கிறேன்..
நன்றி..
சுந்தர பாண்டியன்
அன்புள்ள திரு வீயார் அவர்களே
கண்ணில் ஒற்றிக்கொள்ளும் வகையில் தில்லானா மோகனாம்பாள் பட காட்சிகள் இருந்தது ... நன்றி...
மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற மற்ற கலைஞர்கள் ... ஏ.கருணாநிதி, பி.டி. சம்பந்தம், ராமராவ், மனோரமா நாடக குழுவில் ஆர்மோனியம் வாசிப்பவர் (???) என எல்லோரையும் படத்துடன் அறிமுகம் செய்ய வேண்டுகிறேன்...
நன்றி
சுந்தர பாண்டியன்
அன்பு சுந்தரபாண்டியன்
தங்கள் பாராட்டிற்கும் ஆலோசனைக்கும் உளமார்ந்த நன்றி.
தாங்கள் கூறியவாறே மற்றவர்களின் படங்களும் சேர்க்கப்பட்டு விட்டன.
மனோரமாவின் குழுவில் ஹார்மோனியம் வாசிப்பவர் சந்திரன் பாபு. அவர் ஏ.பி.என். படங்களில் தவறாமல் இடம் பெறுவார்.
அன்புடன்
ராகவேந்திரன்
Filmography திரியில் அடுத்து
https://www.youtube.com/watch?v=AgUzhulHAvk
டிரைலருக்கு நன்றி அன்பிற்கினிய நெய்வேலி வாசு சார் மற்றும் யூட்யூப் இணையதளம்
http://i1146.photobucket.com/albums/...psakgyrhnq.jpg
நடிகர் திலகம் திரைப்பட விவரங்களுக்கான திரி துவங்கப்பட்ட போது எத்தனை பெரிய பணி என்பதை ஓரளவு அனுமானித்திருந்தாலும் அதனுடைய செயலாக்கத்தின் போது தான் அதன் முழுமையான பரிமாணம் தெரிய ஆரம்பித்தது. 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் மக்கள் தலைவர் காவிய நாயகன் நடிகர் திலகத்தின் பங்களிப்பினையும் அவருடன் பணியாற்றியவர்களின் விவரங்களையும் சேகரித்து இங்கே அளிக்கலாம் என்ற எண்ணம் தோன்றி அதை செயல்படுத்தத் துவங்கிய போது அதற்கான வரவேற்பு எப்படி இருக்குமோ என்ற ஐயமும் தோன்றியது. ஆனால் சுமார் இரண்டு ஆண்டுகளாக இதில் தொடர்ந்து சிவாஜி ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் பார்வையாளர்களின் அமோக ஆதரவில் இன்று
2,00,000 இரண்டு லட்சம்
என்கிற எண்ணிக்கையைக் கடந்து பயணிக்கிறது. இதற்காக அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.
தொடர்ந்து அனைவரின் ஆதரவையும் பங்களிப்பையும் எதிர்நோக்கித் தொடர்கிறது பயணம்.
அன்புடன்
ராகவேந்திரன்
Sivaji Ganesan Filmography
127. Thanga Surangam தங்க சுரங்கம்
https://scontent-sin1-1.xx.fbcdn.net...51&oe=5721E456
தணிக்கை 26.03.1969
வெளியீடு 28.03.1969
தயாரிப்பு - E.V.R. பிக்சர்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாகேஷ், மனோகர், ஜாவர் சீதாராமன், டி.எஸ்.முத்தையா, ஓ.ஏ.கே.தேவர், சுந்தர்ராஜன், ஹரிகிருஷ்ணன், பாரதி, வெண்ணிற ஆடை நிர்மலா, எஸ்.வரலக்ஷ்மி, குமாரி ராதா மற்றும் பலர்
பாடல்கள் கவிஞர் கண்ணதாசன்
டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, வி.வி.ராஜாராம் (அறிமுகம்)
நடன அமைப்பு - ஹீராலால், தங்கராஜ், சுந்தரம், ஜோசப், கிருஷ்ணா
உடை - பி.ராமகிருஷ்ணன்- சிவாஜி, சி.கே.கண்ணன், மாஸ்டர் ஜி. மணி
ஒப்பனை - ரங்கசாமி, எம்.ராமசாமி, சீனிவாசன், மோஹன் ராவ், தனகோடி
புகைப்படங்கள் - நாகராஜ ராவ், சங்கர் ராவ், நரசிங்க ராவ்
வசன ஒலிப்பதிவு - எஸ்.ப்ரஸன்னகுமார் - பரணி
ஒளிப்பதிவு - விஜயசுந்தரம், தசரத ராமையா - பரணி
பாபுல் நாத்வாக், ஏ.துலுக்காணம் - வாசு
புரொகிராம் - வி.ராமச்சந்திரன் - பரணி, என்.ஜி.கிருஷ்ணன், ஆர்.கே.ஆர். கோபால்
செட்டிங்ஸ் - ஜேசுதாஸ்
பாடல்கள் ஒலிப்பதிவு - எஸ்.பி.ராமனாதன் - கோல்டன், டி.எஸ்.ரங்கசாமி- சாரதா, ஜே.ஜே.மாணிக்கம் - ரீரிக்கார்டிங் - ஏவி.எம்.
அலுவலக நிர்வாகம் - எஸ்.தேவனாதன், வி.பி.ராமதாஸ், எம்.எஸ்.காசி செட்டியார், ஈ.எஸ்.ஜோஷி
விளம்பர நிர்வாகம் - எஸ்.தேவனாதன்,
பத்திரிகை விளம்பரங்கள் - செம்பி ப்ப்ளிசிட்டீஸ் by மின்னல்
புரொடக்ஷன் மானேஜர் - கே.சண்முகநாதன், உதவி திருச்சி ஆர்.ராமச்சந்திரன், திருச்சேரை கிருஷ்ணமூர்த்தி.
ஸ்டூடியோ - பரணி, வாசு
புரொடக்ஷன் எக்ஸிக்யூடிவ் - வி.எஸ்.ரங்கநாதன்
கலர் ப்ராஸ்ஸிங் by ஜெமினி கலர் லேபரடரி, சென்னை-6.
சண்டைப்பயிற்சி - திருவாரூர் எம்.எஸ்.தாஸ் -
விளம்பர ஓவியம் - பரணி
டைட்டில்ஸ் - எஸ்.எஸ்.லால்
ஆர்டிஸ்ட் - ஈஸ்வர்
கலை செல்வராஜ்
படத்தொகுப்பு - எம்.எஸ்.மணி
உதவி டைரக்ஷன் - பி.எம்.மணிவண்ணன், வி.என்.திருவேங்கடம், யூ.ராஜேந்திரன்
அஸோஸியேட் டைரக்டர் - கனக சண்முக சுந்தரம்
இசை - மெல்லிசை மன்னர் டி.கே. ராம்மூர்த்தி
கதை - ஜி.பாலசுப்ரமணியம்
திரைக்கதை வசனம் - சக்தி டி.கே.கிருஷ்ணசாமி
ஒளிப்பதிவு - ஜி.துரை - அமிர்தம்
தயாரிப்பு - ஈ.வி.ராஜன்
டைரக்ஷன் - ராமண்ணா
தங்க சுரங்கம் - விளம்பர நிழற்படங்கள் - ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து..
Quote:
முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 28.3.1969
http://i1110.photobucket.com/albums/...aa9d2b62ac.jpg
தங்க சுரங்கம் - காணொளிகள்
முன்னோட்டம்.. நன்றி நெய்வேலி வாசு சார்
https://www.youtube.com/watch?v=AgUzhulHAvk
சந்தனக் குடத்துக்குள்ளே
https://www.youtube.com/watch?v=lnObODMJnHY
நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு
https://www.youtube.com/watch?v=LiK_4pdcvv4
கட்டழகுப் பாப்பா
https://www.youtube.com/watch?v=TojrKH2x7lo
ஓ.. நதியே மதுவானால்
https://www.youtube.com/watch?v=8CKktGVrQvU
சக்தி தன்னாடு
https://www.youtube.com/watch?v=grfh0K9aqko
சண்டைக் காட்சி - நன்றி நெய்வேலி வாசு சார்
https://www.youtube.com/watch?v=Ti7xJd4q18c
தங்க சுரங்கம் - பாடல்களின் விவரங்கள்
1. பங்கப் பழனத்து உழும் உழவர்க்கு - வி.வி. ராஜாராம்
2. நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது - டி.எம்.சௌந்தர்ராஜன்
3. கட்டழகுப் பாப்பா கண்ணுக்கு - டி.எம்.சௌந்தர்ராஜன்
4. சக்தி தன்னாடு தென்னாடு - டி.எம்.சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி குழு.
5. சந்தனக் குடத்துக்குள்ளே - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
6. ஓ.. நதியே மதுவானால் - எல்.ஆர். ஈஸ்வரி
7. பெற்ற மனம் சிறையிலே - எஸ்.வரலட்சுமி
தங்க சுரங்கம் - சகோ. சாரதா அவர்களின் ஆய்வுரை -
saradhaa_sn
16th December 2006, 05:27 PM
http://www.mayyam.com/talk/showthrea...l=1#post192344
16th December 2006, 05:53 PMQuote:
"தங்கச் சுரங்கம்"
ஒரு காலம் இருந்தது. நடிகர்திலகத்தின் சமூகப்படங்களில் வண்ணப்படங்களைக் காண ஏங்கிய நேரம். ஆம் 1964 ல் ஒரு 'புதிய பறவை', 1967 ல் ஒரு 'ஊட்டி வரை உறவு' என்று அத்தி பூத்தாற்போலவே அவரது சமூகப்படங்களில் வண்ணப்படங்களைக் காண முடியும். மற்றபடி நடிகர்திலகத்தின் வண்ணப்படங்கள் என்றால் அது திரு ஏ.பி.என். எடுத்த (திருவிளையாடல், சரஸ்வதிசபதம், கந்தன்கருணை, திருவருட்செல்வர், திருமால்பெருமை போன்ற) புராணப்படங்கள்தான். அந்த வகையில் இப்போதுள்ள நடிகர், நடிகையர் அதிர்ஷ்டம் செய்தவர்கள். திரைப்படங்கள் என்றாலே வண்ணம்தான் என்று முன்னேறிவிட்ட காலம் இது. அப்போதெல்லாம் அப்படியில்லை. எப்போதாவதுதான் வண்ணப்படங்கள் வரும். 1964ல் அறிமுகமான ஜெய்சங்கர் கூட முப்பது கருப்பு வெள்ளைப் படங்களில் நடித்த பின்பே முதல் வண்ணப்படமாக 'பட்டணத்தில் பூதம்' படத்தில் நடித்தார். இந்த வகையில் ரவிச்சந்திரன் கொடுத்து வைத்தவர். முதல் படமான 'காதலிக்க நேரமில்லை'யே வண்ணத்தில் அமைந்தது. தொடர்ந்து இதயக்கமலம், நான், மூன்றெழுத்து, உத்தரவின்றி உள்ளே வா, அதே கண்கள் என்று வண்ண நடை போட்டார். மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு படகோட்டி, எங்கவீட்டுப்பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, ரகசியபோலீஸ் 115, பறக்கும் பாவை என்று வண்ணத்தில் வந்து கொண்டிருந்தபோது சிவாஜி ரசிகர்கள் வண்ணப்படங்களுக்கு ஏங்கினார்கள் என்பது உண்மை. அவர்களுக்கு தீனி போட்டது ஏ.பி.என்னின் புராணப்படங்கள் மட்டுமே. எம்ஜிஆர் அவர்களை வைத்து வண்ணத்தில் ஒளிவிளக்கு, அன்பேவா படங்களை எடுத்த ஜெமினி வாசன், மற்றும் ஏ.வி.எம் செட்டியார் ஆகியோர் கூட நடிகர்திலகத்தை வைத்து 'மோட்டார் சுந்தரம் பிள்ளை', 'உயர்ந்த மனிதன்' ஆகிய படங்களை கருப்பு வெள்ளையில் எடுத்து சிவாஜி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர்.
மற்றபடி நடிகர் திலகத்துக்கு தன் திறமையைக்காட்ட கருப்பு வெள்ளை ஒரு தடையாக இல்லையென்பதோடு அவரது நடிப்புக்கு சவாலாகவும், திறமைக்கு உரைகல்லாகவும் அமைந்தவை யாவும் (பாவ மன்னிப்பு, பாசமலர், பழனி, நவராத்திரி, ராமன் எத்தனை ராமனடி, தெய்வமகன், வியட்நாம் வீடு உள்ளிட்ட) கருப்பு வெள்ளைப் படங்களே. இருந்தாலும் ரசிகர்களுக்கென்று ஒரு ஆசை இருக்கிறதல்லவா?
எதற்கு இத்தனை பீடிகை போடுகிறாள் என்று உங்களுக்கு தோன்றலாம். ஆம், நடிகர் திலகத்தின் சமூகப்படங்களில் புதியபறவை, ஊட்டிவரைஉறவு படங்களுக்குப்பின் நீண்ட இடைவெளிக்குப்பின்னர் வந்த வண்ணப்படம்தான் "தங்கச்சுரங்கம்".
செயற்கைத்தங்கம் உற்பத்தி செய்து, நல்ல தங்கத்தோடு கலந்து விட்டு, நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரிய மோசடியையும், பாதிப்பையும் ஏற்படுத்தி வரும் சதிகாரக் கும்பலைப் பிடிக்கும் சி.பி.ஐ.அதிகாரி பாத்திரம் நடிகர் திலகத்துக்கு. அதற்கு ஏற்றாற்போல வாகான ஒல்லியான உடலமைப்பு இருந்தது அப்போது அவருக்கு. அதனால் ரோலுக்கு கனகச்சிதமாக பொருந்தினார். கூடவே வசீகரமான சுருள், சுருளான சொந்த தலைமுடி எல்லாம் சேர்ந்து அப்பாத்திரத்துக்கு மெருகூட்டின. (அப்போதெல்லாம் படங்களில் சி.ஐ.டி.என்பதுதான் புழக்கத்தில் இருந்ததே தவிர சி.பி.ஐ. என்பது ரொம்ப பேருக்கு வித்தியாசமான வார்த்தையாக இருந்தது. இப்போது, சின்னக் குழந்தைக்கு கூட தெரியும்படியாக சி.பி.ஐ.என்ற வார்த்தை புழக்கத்தில் உள்ளது).
படம் துவங்கும்போது, இரண்டாம் உலகப்போரின் பிண்ணனியோடு துவங்கும். ஆங்காங்கே பீரங்கித்தாக்குதல்கள், அதை விட மோசமாக போர் விமானங்கள் குண்டு வீசி பர்மாவின் தலைநகரான ரங்கூனை தாக்கிக்கொண்டிருக்கும்போது இந்தியர்கள் கப்பலில் தாய்நாடு திரும்பிக்கொண்டிருப்பர். அப்போது தன்னுடைய சின்னஞ்சிறு மகன் ராஜனுடன், கப்பலில் ஏறப்போகும் காமாட்சியம்மாளை (எஸ்.வரலட்சுமி), கப்பலில் இடம் நிறைந்து விட்டது என்று அதிகாரிகள் தடுக்க, தான் பர்மாவில் இருந்து அழிந்தாலும் பரவாயில்லை, தன் மகன் ராஜன் இந்தியாவில் எங்காவது போய் நலமாக இருக்கட்டும் என்று, தனக்கு முன்னர் ஏறிய டாக்டரிடம் (ஜாவர் சீதாராமன்) மகனை கண்கலங்க ஒப்படைக்கிறார். காட்சிகள் அத்துடன் கட் பண்ணப்பட்டு டைட்டில் ஓடத்துவங்குகிறது.
'தங்கச் சுரங்கம்' படத்தின் டைட்டில் வித்தியாசமாகவும், துடி துடிப்புடனும் செய்யப்பட்டிருந்தது. புதுமையாக செய்ய வேண்டும் என்ற ராமண்ணாவின் துடிப்பு அதில் தெரிந்தது.
டைட்டில் முடிந்ததும், படம் தற்காலத்துக்கு வந்து விடும். பள்ளிக் குழந்தைகளோடு வந்துகொண்டிருக்கும் வரலட்சுமி எதிரே வரும் பாதிரியாரைக்கண்டு திகைத்து நிற்க பாதிரியாரும் திகைத்து நிற்பார். அந்தப் பாதிரிர்யார் வேறு யாருமல்ல. ரங்கூனில் கப்பலில் ஏறும்போது வரலட்சுமி தன் மகனை ஒப்படைத்தாரே அந்த டாக்டர் ஜாவர் சீதாராமன் தான். காமாட்சியம்மாள் தன் மகனைப்பற்றி ஆவலுடன் விசாரிக்க, அவன் தற்போது குற்றப்பிரிவு இலாக்காவில் உயர்ந்த பதவியில் இருப்பதாக சொல்ல... உடனே காட்சி மாற்றம். டெல்லியிலிருந்து வரும் விமானத்தில் இருந்து டார்க் ப்ரவுன் கலர் ஃபுல் சூட், மற்றும் கறுப்புக்கண்ணாடியுடன் விமானத்திலிருந்து வெளியே வரும் நடிகர் திலகம் அறிமுகம். விமான அதிகாரியிடம் கைகுலுக்கி விட்டு தனக்கே உரிய ஸ்டைலுடன் படிகளில் இறங்கி வருவார்.
அவரது மேலதிகாரியான மேஜர் சுந்தர்ராஜன், போலித்தங்கம் செய்யும் கும்பலைப்பிடிக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைப்பார். அது பற்றி மேலும் தகவல்களைச் சேகரிக்க சிறிது நாளாகும் என்பதால் தன் ஊருக்குச் சென்று தன்னை வளர்த்த பாதிரியாரைப்பார்த்து வர விரும்புவதாகச் சொல்லி அனுமதி பெற்று ஊருக்கு வருவார். அங்கே பாதிரியார், அவருக்கு மிகப்பெரிய பரிசு தருவதாகச்சொல்லி ராஜனின் (சிவாஜி) அம்மாவை அவருக்கு அறிமுகம் செய்து வைப்பார். இன்ப அதிர்ர்ச்சியில், பாசத்தைக் கொட்ட சிவாஜிக்கும் வரலட்சுமிக்கும் அருமையான கட்டம். போட்டி போட்டுக்கொண்டு நடிப்பார்கள். நாள் முழுக்க பேசிக்கொண்டிருந்து விட்டு இரவில் சிவாஜியைத் தூங்கப்போகச்சொல்லும் அம்மாவிடம் சிவாஜி ஒரு அஸ்திரத்தை தூக்கி வீசுவார்.
"அம்மா நானும் காலையில் இருந்து பாத்துக்கிட்டு இருக்கேன். மகனைப் பாத்த சந்தோஷத்தில எல்லா விஷயத்தையும் பற்றி விவரமா பேசினீங்க. ஒரு பெண்ணுக்கு மகன் எப்படி முக்கியமோ அதுபோல கணவனும் முக்கியமல்லவா? அப்பாவைப்பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலையே. ஏம்மா?".
மகனின் இந்தக்கேள்வியில் அதிர்ச்சியில் உறைந்து போவார் வரலட்சுமி. எப்படி சொல்ல முடியும்?. சொல்வது போலவா நடந்து கொண்டார் அவர்?. 'ராஜன், இப்போ என்னை எதுவும் கேட்காதே, சமயம் வரும்போது நானே சொல்றேன்' என்று சமாதானப்படுத்துவார்?. ஆனால் அவர் சொன்ன 'அந்த சமயம்' எவ்வளவு தர்ம சங்கடமான, இக்கட்டான சமயமாக அமையும் என்று அவர் நினைத்தே பார்த்திருக்க மாட்டார்.
16th December 2006, 06:11 PMQuote:
“தங்கச் சுரங்கம்” (PART – II )
ஆம். எந்த போலித்தங்க கும்பலைப்பிடிக்க சிவாஜி அமர்த்தப்பட்டாரோ, அந்தப்போலித் தங்க கும்பலுக்கு தலைவனே ராஜனின் அப்பா 'மிஸ்டர் பை' (ஓ.ஏ.கே.தேவர்)தான் என்று அறியும்போது வரலட்சுமியே அதிர்ச்சியில் மூழ்கி விடுவார். முன்னதாக தன்னைப்பிடிக்க வந்த சி.பி.ஐ. ஆபீஸர் விட்டுச்சென்ற பர்ஸில் ராஜனின் படமும் தன் மனைவியின் படமும் இருப்பதைப் பார்த்து, அது தன் மகன் தான் என்பதை அறியும் 'பை', பாசத்தையே கேடயமாகக்கொண்டு தப்பிக்க எண்ணி, பர்ஸில் இருந்த விலாசத்தில் வரலட்சுமியை சந்தித்து, கொஞ்சம் கொஞ்சமாக செண்டிமெண்ட் வார்த்தைகள் மூலம் அவரை நிலைகுலையச்செய்து, இறுதியில் தன்னைப்பிடிக்க தன் மகன் போடும் திட்டங்களை தன் மனைவி மூலமாகவே தெரிந்துகொள்ளும் அளவுக்கு தன் மனைவியைப் பக்குவப்படுத்தியிருப்பார். இதையறியாத சி.பி.ஐ ஆபீஸர் ராஜன், மிஸ்டர் பையைப் பிடிக்கப்போகும் திட்டத்தை தன் அம்மாவிடம் சொல்லி விட்டுப்போக, போன இடத்தில் சிவாஜிக்கு தோல்வி. 'மிஸ்டர் பை' தன்னுடைய ஜீப்பில் தனக்கு பதிலாக ஒரு கழுதையை அனுப்பிவைத்து அவமானப்படுத்தியிருப்பார்.
இதைப்பற்றி ஆலோசிக்கும் மேஜரும் சிவாஜியும், 'நம் இருவரைத்தவிர யாருக்கும் தெரியாத இத்திட்டம் 'பை'க்கு தெரிந்தது எப்படி?. நீங்கள் யாரிடமும் சொன்னீர்களா?' என்று மேஜர் கேட்க இல்லையென்று மறுக்கும் சிவாஜிக்கு சட்டென்று ஒரு பொறிதட்டும். அம்மாவிடம் மட்டும் தானே இதைச்சொனோம். 'பை'க்கு தெரிந்தது எப்படி?. சந்தேகம் என்று வந்து விட்டால் யாரையும் சந்தேக வட்டத்தில் இருந்து நீக்க முடியாதே. சிறிது நேரத்தில் திரும்புவதாகச்செல்லும் சிவாஜி நேராக தன் அம்மாவைப் போய்ப்பார்ப்பார். அப்போது நடக்கும் உரையாடல்கள் உணர்ச்சி மயமானவை.
மகனுடைய கூரிய பார்வையின் உக்கிரத்தை நேருக்கு நேர் சந்திக்க முடியாத தாய், தலையைத் தாழ்த்திக்கொண்டு கடைக்கண்ணால் பார்க்க, மகனின் கேள்விக்கணகள்....
"அம்மா, நான் பார்க்கும் உத்யோகம் எவ்வளவு பொறுப்பானது, ஆபத்தானதுன்னு உங்களுக்கு தெரியுமில்லே?" அவள் ஆம் என்று தலையாட்டுவாள்.
"இன்னைக்கு 'பை'யைப் பிடிக்கப்போகும் விஷயத்தை நான் தானே வாய் தவறி உங்களிடம் சொன்னேன்?". அவள் மீண்டும் தலையாட்டல்
"அதை நீங்க யார்கிட்டேமா சொன்னீங்க?"
"ராஜன், நான் யார்கிட்டேயும் சொல்லலைப்பா"
"பொய்.... நீங்க பை கிட்டே சொல்லியிருக்கீங்க...ஏன்...ஏன்.., அதுக்கென்ன அவசியம் வந்தது?. தலைக்கு ஒசந்த மகனை வச்சுகிட்டு அந்த 'பை' கூட ரெண்டாவது வாழ்க்கை வாழறீங்களா அம்மா?"
(ஒரு மகன் தன் தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி. ஆனால் தோல்வியின் பாதிப்பு, மனத்திலிருந்து இப்படி கேள்வியாக வெடித்துக் கிளம்ப)
"அய்யோ ராஜன், அவர்தாண்டா உங்க அப்பா"
அதிர்ச்சியின் உச்சிக்குப்போவார் நடிகர் திலகம். என்னது அப்பாவா?. நான் பிடிக்கணும்னு கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் அந்த தேசத்துரோகியா என் அப்பா?.
மகனிடம் விவரத்தைச்சொல்லத் துவங்க, மீண்டும் ஃப்ளாஷ் பேக்கில் ரங்கூனில் நடந்த இரண்டாம் உலகப்போர். இடிபாடுகளில் சிக்கிய காமாட்சியும் கனகசபையும் தப்பிக்கும் சமயம், காமாட்சி மகன் ராஜனை தேடிக்கொண்டிருக்கும்போது கனகசபைக்கு ஒரு பெட்டி நிறைய பணம் கிடைக்க, மனைவியையும் மகனையும் உதாசீனப்படுத்தி விட்டு தான் மட்டும் தப்பித்துப்போய்விட, வேறு வழியிறி மகன் ராஜனுடன் இந்தியா வரும் கப்பலில் காமாட்சி ஏறப்போகும்போதுதான் மகனை டாக்டரிடம் ஒப்படைக்கிறார் (படத்தின் முதல் காட்சியில் வந்தது).
அதன்பிறகு ராஜன் தன் தாயையே கைது செய்வதும், பாதிரியார் அவரை ஜாமீனில் விடுவித்து அழைத்து வருவதும், தொடர்ந்து 'பை' யைப்பிடிக்க ராஜன் முனைந்து ராஜன் வெற்றி பெறுவதும் சுவாரஸ்யமானவை.
பாடலும் இசையும்...
இப்படடத்துக்கு மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தன.
விடுமுறையில் கிராமத்துக்கு வரும் நடிகர் திலகம், தலையில் தொப்பியும் கையில் பெட்டியுமாக பாடிக்கொண்டு வரும் பாடல்
நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது
தென்னாட்டிலே தண்ணீரும் பொன்னீரும் விளையாடுது
மூன்று தமிழ் ஓங்கும் இடம் எங்கள் நாடு.... ஓய்...
பொட்டழகும் கட்டழகும்
பூவழகும் தண்டைக் காலழகும்
எங்கள் மங்கையரின் கலையல்லவா
திருமஞ்சள் முக சிலையல்லவா
நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது
யானைகட்டி போரடிக்கும் பாண்டி நாட்டிலும்
பொன்னி வீடுதோறும் தீபம் ஏற்றும் சோழ நாட்டிலும்
தென்னை இளநீர் சொரியும் சேர நாட்டிலும்
திருக்கோயில் சிறந்தோங்கும் தொண்டை நாட்டிலும்
நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது
மேலை நாடு பரபரப்பில் வாழ்ந்து பார்க்குது
எங்கள் கீழைநாடு தனி வழியே நடந்து பார்க்குது
விஞ்ஞானம் அந்த நாட்டில் போரை நாடுது
எங்கள் மெய்ஞானம் உலகமெங்கும் அமைதி தேடுது
நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது
அருமையான பாடல். பாடியவர்.... வேறு யார்? கம்பீரக்குரலோன் டி.எம்.எஸ் அண்ணாதான். ராமமூர்த்தியின் அருமையான இசையில். துரை-அமிர்தத்தின் கண்ணில் ஒத்திக்கொள்ளும் ஒளிப்பதிவு. அழகான ஒல்லியான உடல்வாகுடன் வெள்லை பேண்ட், சந்தன வண்ண சட்டை, சிவப்பு தொப்பி, கையில் சின்ன பெட்டி மற்றும் ஒரு குச்சியுடன் வழக்கமான ஸ்டைல் நடையில் நடிகர் திலகம்...
ராமண்ணா.... அற்புதம் அண்ணா...
http://www.mayyam.com/talk/showthrea...l=1#post192359
Quote:
“தங்கச் சுரங்கம்” (PART – III & Last )
பெங்களூரில் இருந்து காரில் வரும்போது, நள்ளிரவில் நடிகர் திலகத்திடமிருந்து தப்பிக்க எண்ணி, சேற்றில் விழுந்துவிடும் பாரதியை கிண்டல் செய்து நடிகர் திலகம் பாடும் "கட்டழகு பாப்பா கண்ணுக்கு... கள்ளத்தனம் ஏனோ பெண்ணுக்கு" பாடல் ரசிக்க வைக்கும். பாடலின் துவக்கத்தில் வரும் சிரிப்பில், நடிகர்திலகம் வயிற்றை பிடித்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரிப்பது அவரது முத்திரை.
ராமண்ணாவுக்கு பாடல் காட்சிகளைப் படமாக்க சுவிட்சர்லாந்து தேவையில்லை. ஆஸ்திரேலியா தேவையில்லை, நயாகரா நீர்வீழ்ச்சி தேவையில்லை. பத்தடிக்கு பத்தடியில் ஒரு இடத்தைக்கொடுத்து விட்டால் போதும். அருமையாக படமாக்கி தந்துவிடுவார்.
குமரிப்பெண்ணில் ஒரு ரயில் பெட்டிக்குள் 'வருஷத்தைப்பாரு அறுபத்தியாறு'
நான் படத்தில் சின்னஞ்சிறு ஃபியட் காருக்குள் 'போதுமோ இந்த இடம்'
மூன்றெழுத்தில் சிறிய பெட்டிக்குள் ரவி-ஜெயாவை வைத்து 'பெட்டியிலே போட்டடைத்த பெட்டைக்கோழி'
போன்ற பாடல்களை அருமையாகத் தந்த இயக்குனர் ராமண்ணா 'தங்க சுரங்க'த்திலும் தன்னுடைய சேட்டையை விடவில்லை.
ஆம். நடிகர்திலகமும் பாரதியும் பாடும் டூயட் பாடலான
"சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு வந்து விளையாடுது"
பாடலை முழுதும் கிணற்றுக்குள்ளேயே எடுத்திருப்பார். கிணற்றுக்குள் படிக்கட்டில் நின்றுகொண்டும், கயிற்றில் தொங்கிக்கொண்டும் பாடும் அந்தப்பாடல் கண்களுக்கு விருந்து.
மயக்க ஊசி ஏற்றப்பட்டு நடிகர் திலகத்துக்கு மயக்க ஊசி போட ஏவி விடப்பட்ட்ட பாரதி, நடிகர் திலகத்தை மயக்க பாடும்..
"உன் நினைவே நதியானால்.. என் உடலே படகானால்
அந்த நதியினிலே... இந்த படகினிலே.. ஆடு... ஆட வா"
பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருப்பார். ஊட்டி கார்டனில் எடுக்கப்பட்ட பாடல் இது. அதிகம் பிரபலம் ஆகாத பாடலும் கூட.
இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள். பாரதி மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலா. முதலில் நிர்மலா நல்லவராகவும் பாரதி போலித்தங்கக் கும்பலைச் சேர்ந்தவராகவும் தோன்றும். ஆனால் இடையிலேயே பாரதிதான் நல்லவர் என்றும் நிர்மலா மோசடிக்கும்பலைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வரும். போலித்தங்க கும்பலின் தலைவன் 'மிஸ்டர் பை' ஆக (சி.பி.ஐ.ஆபீஸர் ராஜைன் தந்தையாக) ஓ.ஏ.கே. தேவரும், அவரது கையாள் வேலாயுதமாக ஆர்.எஸ்.மனோகரும் நடித்திருப்பார்கள். நகைச்சுவைக்கு நாகேஷ். இவர் அதிகம் பயன்படுத்தப்படவில்லை.
நடிகர்திலகம், பாரதி, நிர்மலா, ஓ.ஏ.கே.தேவர், மனோகர், மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், எஸ்.வரலட்சுமி, ஜாவர் சீதாராமன், முத்தையா (போலித்தங்க விஞ்ஞானி) ஆகியோர் நடித்திருந்தனர்.
நடிகர் நடிகையர் தேர்வில் ராமண்ணா கோட்டை விட்டு விட்டாரோ என்று எண்ணத்தூண்டும் அளவுக்கு வீக்னஸ். நடிகர் திலகத்துக்கு பொருத்தமில்லாத ஜோடிகளில் பாரதிக்கு நிச்சயம் இடம் உண்டு. கொஞ்சம் கூட ஒட்டவில்லை. அது மட்டுமல்லாது மெயின் வில்லனாக ஓ.ஏ.கே.தேவரும் ரசிகர்கள் மனத்தில் நிற்கவில்லை. ‘பாரதிக்கு பதிலாக ஜெயலலிதாவும், ஓ.ஏ.கே.தேவருக்கு பதிலாக நம்பியாரும் இடம் பெற்றிருந்தால் படத்தின் ரிஸல்ட்டே வேறு’ என்பது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட விஷயம்.
'தங்கச்சுரங்கம்' என்றாலே நமக்கு தவறாமல் நினைவுக்கு வருவது, கிளைமாக்ஸில் சர்ச்சில் (மாதாகோயிலில்) நடிகர்திகத்தின் அற்புத நடிப்பு. சர்ச்சுக்குள் ஆயுதங்கள் எடுத்துப்போக பாதிரியார் தடை விதித்ததால், சர்ச்சுக்குள் ஒளிந்திருக்கும் தந்தையைப்பிடிக்க நிராயுதபாணியாக உள்ளே போகும் நடிகர்திலகத்தை, துப்பாக்கியோடு ஒளிந்திருக்கும் 'மிஸ்டர் பை' இரண்டு கைகளிலும் இரண்டு கால்களிலும் மாறி மாறி சுட, அப்படியே பெஞ்சிலும் தரையிலும் விழுந்து நடிகர் திலகம் துடிக்கும்போது நம் கண்ணில் ரத்தம் வராத குறை. அத்துடன் ஒரு சந்தேகமும் வரும். "காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்ற பேராசையில் நிஜமான துப்பாக்கியால் சுட்டுட்டாங்களோ?"
"தங்கச்சுரங்கம்" பற்றிய என் இனிய நினைவுகளைப் படித்த அன்பு இதயங்களுக்கு நன்றி.
தங்க சுரங்கம் - கண்கவரும் கொள்ளை அழகில் மக்கள் தலைவரின் அட்டகாசமான தோற்றங்கள் - அணிவகுப்பு
http://i1146.photobucket.com/albums/...ps3y18cdek.jpg
http://i1146.photobucket.com/albums/...pseahehuid.jpg
http://i1146.photobucket.com/albums/...psapbvw3c3.jpg
http://i1146.photobucket.com/albums/...ps8mitsf8u.jpg
http://i1146.photobucket.com/albums/...pskctce17l.jpg
தங்க சுரங்கம் படத்தின் முகப்பிசை
https://www.mediafire.com/?3jajdxjf0xbt8iy