ஆதிராம் சார்,
நன்றி! தங்களைப் போலவே எனக்கும் 'தங்கச் சுரங்கம்' என்றால் மிக மிக பிடிக்கும். நடிகர் திலகத்திற்காக சில சென்டிமெண்ட் காட்சிகளை ராமண்ணா கூடச் சேர்த்திருப்பார். முழுமையான ஜேம்ஸ்பாண்ட் பாணியில் எடுத்திருந்தால் ராஜாவுக்கு முன்னோடியாய் இருந்திருக்கும். முதல் சில நிமிடங்களுக்கு வரும் கிராமத்துக் காட்சிகளைக் குறைத்திருந்தால் (முக்கியமாக "சக்தி தன்னாடு தென்னாடு பொன்னாடு"...பாடல்) இன்னும் விறுவிறுப்பு ஏறியிருக்கும். ஆனால் சென்டிமெண்ட் காட்சிகளைச் சேர்த்ததால் தாங்கள் குறிப்பிட்ட அட்டகாசமான கிளைமாக்ஸ் சர்ச் காட்சியும், தாயைக் கைது செய்து அனுப்பிவிட்டு துவளும் காட்சியும் என்றும் நம் இதயத்தில் குடிகொண்டு விட்டதே! இதயத்தை திருடிய படம்.