-
18th February 2013, 09:47 AM
#1751
Senior Member
Seasoned Hubber
புயல் போல் உடனே விடையளித்து விட்டீர்கள் வாசு சார்... இனிமேல் நீங்களும் கேளுங்கள் ... மற்ற நண்பர்களும் பங்கு கொண்டு கேள்விகள் கேட்கட்டும், விடையளிக்கட்டுமே ...
தங்களுடைய நடிகர் திலகத்தைப் பற்றிய ஞானம் வியப்பூட்டுகிறது.. தொடருங்கள்..
நவ்ரங் முதலில் கருப்பு வெள்ளைத் திரைப்படமாகத் தான் வெளிவந்தது. அதனைத் தற்போது வண்ணமயமாக்கியுள்ளனர். இதே போன்று நம்முடைய தெய்வ மகனை வண்ணத்தில் எடுத்தால் ... நினைக்கும் போதே ... அட்டகாசமாக இருக்குமே ...
நவ்ரங் பாடலின் கருப்பு வெள்ளை வீடியோ இணையத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் இந்த காட்சியைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி வாசு சார்.
Last edited by RAGHAVENDRA; 18th February 2013 at 09:56 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
18th February 2013 09:47 AM
# ADS
Circuit advertisement
-
18th February 2013, 09:57 AM
#1752
Senior Member
Diamond Hubber
படம்: பெற்ற மனம்.
பாடல்: சிந்தனை செய்யடா சிரித்து பாரடா
இப்பாடலில் இடையிடையே வரும் நடிகர் திலகத்தின் கணீர்' என்ற சிம்மக் குரலைக் கேளுங்கள். அடடா! என்ன ஒரு மாடுலேஷன். எப்படிப்பட்ட ஏற்ற இறக்கங்கள். வாழத் தெரியாத ஒருவனின் ஏக்கப் புலம்பல்கள். அதிலும் குறிப்பாக
என்ன வேலை செய்வேன்
என்ன தெரியும் எனக்கு?...
சிந்திக்கும் வழக்கம் என் மூளைக்கும் இல்லை...
செயலாற்றும் திறன் என் கரங்களுக்கும் இல்லையே!...
கெட்டது உடம்பு என்று படுத்தது உண்டே தவிர வந்தது களைப்பு என்று சாய்ந்ததில்லை...
எப்படி வாழ்வேன்? எப்படி வாழ்வேன்?...
என்ற வசனங்களை அவர் பாவங்களுடன் உச்சரிக்கையில் உடலெல்லாம் புல்லரித்துப் போகிறதே! ராகவேதிரன் சார் காலையில் மிக உசுப்பேற்றி விட்டார். காலையிலிருந்து இதே பாடலைக் கேட்கிறேன்.. கேட்கிறேன்.. கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.
-
18th February 2013, 10:17 AM
#1753
Senior Member
Diamond Hubber
மிக்க நன்றி ராகவேந்திரன் சார். அருமையான பாடலில் என்னை மூழ்கடிக்கச் செய்து விட்டீர்கள். உயிரே போனாலும் மறக்க முடியாத பாடல்.
தங்கள் விருப்பப் பாடலான 'பட்டிக்காடா பட்டணமா' காவியத்தில் ஒலிக்கும் அம்பிகையே பாடல் தரணியின் விருப்பம் ஆகும். அற்புதம் சார். என்ன பாடல் சார் அது! என் வரையில் நடிகர் திலகத்தின் படங்களிலேயே அவர் அறிமுகமாகும் காட்சி படுஅமர்க்களமாய் அமைந்தது இதில்தான். (இரண்டாவது தெய்வ மகன்) திரையரங்கு சும்மா ரெண்டுபட்டுப் போகும். அதுவும் லைன் ஒர்க் ஆர்ட்டில் நெகடிவ் உருவங்களில் நடிகர் திலகம் அறிமுகப் படுத்தப்படும்போது எழும் அமர்க்களம் இருகிறதே! சொல்லி மாள முடியுமா! பொற்கால கலைஞன் இல்லை இல்லை கடவுள் ஆயிற்றே!
'என்னைப் போல் ஒருவன்' ஈரோடு விஜயா திரையரங்கில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி!
கோவை டிலைட் திரையரங்கில் நேற்று நடைபெற்ற 'ஹரிசந்திரா' கொண்டாட்டங்கள் பற்றிய நிழற்பட பதிவுகள் அளித்து மகிழ்ச்சிக் கடலில் மூழ்க வைத்து விட்டீர்கள்.
நண்பர் சிவராஜ் அவர்களுக்கு உளமார்ந்த என் நன்றிகளைத் தெரிவியுங்கள் சார்.
Rare Images வரிசையில் குங்குமப் பொட்டும் சொந்த முடியுமாய் அழகு தெய்வமாய் காட்சியளிக்கும் நான் வணங்கும் தெய்வத்தின் நிழற்படத்தை அளித்ததற்கு தங்களுக்கு கோடி கோடி நன்றிகள்.
Last edited by vasudevan31355; 18th February 2013 at 10:23 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
18th February 2013, 10:21 AM
#1754
Senior Member
Diamond Hubber
கண்ணன் சார்,
'முத்துமணிச் சிரிப்பிருக்க' பாடல் முத்தாய்ப்பு. அரிதான அற்புதமான பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி. தங்களுடைய அன்பு பாராட்டுதல்களுக்கும் என் நன்றிகள்.
-
18th February 2013, 10:25 AM
#1755
Junior Member
Seasoned Hubber
No Black & White movie can break the record of Pattikada Pattanama
-
18th February 2013, 10:25 AM
#1756
Senior Member
Diamond Hubber

Originally Posted by
s.vasudevan
No Black & White movie can break the record of Pattikada Pattanama
100000000000000000% true
-
18th February 2013, 10:29 AM
#1757
Senior Member
Seasoned Hubber
முத்து மணிச் சிரிப்பிருக்க
பாடல் இடம் பெற்ற படம் - ஊருக்கு ஒரு பிள்ளை
குரல்கள் - எஸ்.பி.பாலா, பி.சுசீலா
வரிகள் - முத்துலிங்கம்
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
அபிஷேக அலங்கார பாவை வரிகளின் போது பாலாவின் குரல்களில் சங்கதிகள் அட்டகாசமாக இருக்கும்.. எங்கே சங்கதிகள் வைக்க வேண்டும், எங்கே ஆலாபனை வைக்க வேண்டும் எங்கே இசைக் கருவிகள் ஒலி தூக்க வேண்டும் இவையெல்லாம் இலக்கணமாக வகுத்துள்ளார் மெல்லிசை மன்னர்.
இந்த பாடலுக்காக அவருக்கு ஒரு

இனி பாடலின் வரிகள் நமக்காக
முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..
முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..
தங்க நிறம் உனக்கிருக்க சித்திரமே தங்க நகை உனக்கெதற்க்கு..
தங்க நிறம் உனக்கிருக்க சித்திரமே தங்க நகை உனக்கெதற்க்கு..
முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..
முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..
தங்க நகை எனக்கெதற்க்கு எப்பொழுதும் உங்கள் விழி ரசிப்பதற்க்கு..
தங்க நகை எனக்கெதற்க்கு எப்பொழுதும் உங்கள் விழி ரசிப்பதற்க்கு..
முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..
அபிஷேக அலங்கார பாவை ஆசை அலைமோதும் புது மோக பார்வை..
அபிஷேக அலங்கார பாவை ஆசை அலைமோதும் புது மோக பார்வை..
தமிழ் கம்பன் பாடாத பாட்டு என் கண்கள் பாடும் காளை உனைப் பார்த்து..
தமிழ் கம்பன் பாடாத பாட்டு என் கண்கள் பாடும் காளை உனைப் பார்த்து..
முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..
மழையாலே நனையாத உள்ளம் உந்தன் மொழியாலே நனைந்தாடித் துள்ளும்..
மழையாலே நனையாத உள்ளம் உந்தன் மொழியாலே நனைந்தாடித் துள்ளும்..
இளங்காற்று தாலாட்டும் நேரம் புது இன்பம் கண்டு மஞ்சம் இளைப்பாரும்..
முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..
தங்க நகை எனக்கெதற்க்கு எப்பொழுதும் உங்கள் விழி ரசிப்பதற்க்கு..
முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
18th February 2013, 10:53 AM
#1758
Senior Member
Seasoned Hubber
அபூர்வ நிழற்படம்
ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தின் 100வது நாள் விழாவில் கங்கை அமரனுக்கு நடிகர் திலகம் கேடயம் வழங்கும் காட்சி
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
18th February 2013, 11:15 AM
#1759
Junior Member
Seasoned Hubber
Yesterday went to Vellore to purchase the DVD of Madi Veetu Ehzai and
when I asked for the DVD one more person who stand behind asked for
the same DVD. He has purchased three DVD's all of them are NT's Thiruppam,
Kavriman & the above movie.
It shows that as Mr Murali mentioned not only in chennai all the over the world
NT's movies are hot cake.
-
18th February 2013, 11:20 AM
#1760
Senior Member
Seasoned Hubber
தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை சித்தூர் வாசுதேவன் அவர்களே. திரையரங்குகளில் சக்கைப் போடு போட்டும், ரூ. 249 என்று விலை வைத்தும் மேலும் மேலும் பிரதிகள் எடுக்கப் பட்டு கர்ணன் நெடுந்தகடு அதிக அளவில் விற்பனையாவதே சான்று. கர்ணன் மட்டுமல்ல விலை அதிகம் வைத்தால் கூட நடிகர் திலகத்தின் படங்கள் நெடுந்தகடு விற்பனையில் பரவலாக உலகெங்குமே சாதனை புரிந்து வருகின்றன.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks