Quote:
உலகமே ஒரு நாடக மேடை. அதில் நாமெல்லோருமே இறைவனால் இயக்கப்படுகிற நடிகர்களே ! நடிப்புக்குள் நடிப்பாக எத்தனை முக மூடிகளை நாம் போட வேண்டியிருக்கிறது !
இயல்பாகவே இயல்பாகவே மாறுவேடம் தரிக்கும் ஆசை நமது மனதின் ஒரு மூலையில் படுத்து உறங்கிக் கொண்டுதானிருக்கிறது! சந்தர்ப்பங்கள் சரிவர அமைவதில்லை ..அவ்வளவே! சந்தர்ப்பம் கிடைத்தால் யோக்கியனும் ஒரு நூலிழையில் அயோக்கியனாக மாறும் சாத்தியக்கூறுகள் அதிகமே!
ஒரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்துக் கொண்டிருக்கும் போது அக்கதாபாத்திரமே ஒரு மாறு வேடமிட்டு பல்வேறு நோக்கங்களை நிறைவேற்ற
வேண்டிய சூழலில் திரைக்கதை வடிவமைக்கப் படும்போது திறமை வாய்ந்த கலைஞனால் மட்டுமே மாறுவேட குணாதிசயத்தையும் உயிர்ப்பித்து
ரசிகர்களைக் கட்டிப் போட இயலும்!