-
12th August 2015, 11:33 PM
#11
Junior Member
Junior Hubber
வணக்கம் !
சில நண்பர்களுக்கு எதர்கெடுத்தாலும் கோபம் வருகிறது !
சாதனைகள் இரண்டு வகைப்படும் . ஒருவர் செய்யும் சாதனை காலபோக்கில் மற்ற ஒருவரால் முறியடிக்கப்படும் ! அப்படி வேறு எவராலும்
இன்று வரை முறியடிக்க முடியாத சாதனைகளும் உண்டு ! திரிசூலம் அதிக இடங்களில் வெள்ளிவிழா ஓடியது என்று செய்தி பதிவிடுவதை விட
அந்த சாதனை இன்று வரை எவராலும் முறியடிக்க முடியாத ஒன்று என்று பதிவிட்டால் தான் சிவாஜிக்கு பெருமை ! அதுவே சிவாஜி ரசிகர்கள்
செய்யும் கடமை ! சிவாஜி உட்பட எவராலும் இன்று வரை முறியடிக்க முடியாத சில சாதனைகளை மற்ற சில நடிகர்களும் செய்திருப்பதும் உண்மை !
உதாரணத்துக்கு தமிழகத்தில் 85 ஆண்டு தமிழ் சினிமா வரலாற்றில் 71 நகரங்களில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் superstar திரு ரஜினிகாந்த் நடித்த
படையப்பா மட்டுமே! அவர் நடித்த சந்திரமுகியும் இதை நெருங்கியது ! இது சினிமாவரலாற்று உண்மை!
இப்படி வேறு எவராலும் இன்று வரை வெல்லமுடியாத சாதனைகளை அதிகமாக செய்திருப்பவர் சிவாஜி என்பதே நான் கூற விரும்புவது !
தன் அபிமான நடிகரை விட வேறு நடிகர்கள் சாதனையை ஏற்று கொள்ளாத குறுகிய மனம் எனக்கில்லை !
நன்றி !
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
12th August 2015 11:33 PM
# ADS
Circuit advertisement
Bookmarks