-
புரட்சி தலைவரின் அன்பு இளவள்
திரு எஸ். எஸ் .ராஜேந்திரன் மறைந்தார்
லட்சிய நடிகர் எனப் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் (எஸ்எஸ்ஆர்) சென்னையில் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 86.
எஸ். எஸ். ராஜேந்திரன் என அழைக்கப்படும் சேடப்பட்டி சூரியநாராயண தேவர் ராஜேந்திரன் 1928ல் உசிலம்பட்டியில் பிறந்தார்.மேடை நாடகங்களில் நடித்து வந்த எஸ்எஸ்ஆர், 1947 ஆம் ஆண்டில் பைத்தியக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தார். தமிழ் சினிமாவின் ஜாம்பவான் எம்ஜிஆர்யுடன் நெருக்கமானார். திராவிட இயக்கத்தின் கொள்கைகளை திரையில் முழங்கியவர்களில் இவருக்கும் முக்கிய இடமுண்டு.1950கள், 60களில் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்று விளங்கினார். இவர் நடித்த பூம்புகார், மறக்க முடியுமா போன்ற திரைப்படங்கள் காலத்தால் அழியாதவையாகும்.பராசக்தி திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்தார். அதன் பின்னர் சிறு பாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த முதலாளி திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமாக திகழ்ந்தார் எஸ்எஸ்ஆர். எம்.ஜி.ஆர். இரண்டு வேடங்களில் தோன்றி நடித்த ராஜா தேசிங்கு (1960) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். 1960 ஆம் ஆண்டில் இவர் தங்கரத்தினம் என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கி நடித்திருந்தார். பார் மகளே பார், குங்குமம், பச்சைவிளக்கு, கைகொடுத்த தெய்வம், சாரதா போன்ற படங்களில் இவருடன் இணைந்து நடித்த விஜயகுமாரியைத் திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே திருமணமாகியுள்ள நிலையில் விஜயகுமாரியை மறுமணம் செய்த எஸ்.எஸ்.ஆருக்கு அவர் மூலமாக ஆண் குழந்தையொன்று பிறந்த நிலையில் அவரை விட்டுப் பிரிந்தார். பின்னர் இருவரும் தனித்தனியாக வசித்தாலும், மணமுறிவு ஏற்படவில்லை. பின்னர் இருவரும் இணைந்துவிட்டதாக பேட்டி கொடுத்தனர். 1962இல் தேனி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தி.மு.க.வின் சார்பில் 1970 முதல் 1976 ஏப்ரல் 02 நாள் வரை பணியாற்றினார். எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கியதும், அதில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். 1980இல் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அ.தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் எஸ் திருநாவுக்கரசு தனிக் கட்சி ஆரம்பித்தபோது, அதில் சேர்ந்தார். அவர் கட்சியைக் கலைத்ததும் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பினார். மார்புச் சளி, மூச்சடைப்பால் சிரமப்பட்ட எஸ்எஸ்ஆர் உடல்நிலை நேற்று கவலைக் கிடமானது. இன்று காலை வரை உயிருக்குப் போராடிய அவர், சிகிச்சைப் பலனின்று காலை 11 மணிக்கு மரணமடைந்தார்.
-
கண்ணதாசன் கொடுத்த வாத்தியார் விளக்கம்
ஒருமுறை உதவியாளர் கண்ணதாசரிடம் எம்ஜிஆரைவாத்தியார் என்கிறாகளே ஏன்என்றா ராம் கண்ணதாசன் அதற்க்கு என்பாடலையே திருத்துபவர்அல்லவா
என்றாராம்
-
இன்று பிறந்த நாள் காணும் இனிய சகோதரர் திரு. வினோத் அவர்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன் நீடூழி வாழ்ந்து, புரட்சித்தலைவரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்ர்க்க அன்புடன் வாழ்த்துகிறேன் !
http://i59.tinypic.com/2vneuzq.jpg
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
-
சென்னை: லட்சிய நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர் எஸ்.எஸ்.ஆர். அறிமுகமான படம் பராசக்தி தான் எனப் பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அது உண்மையில்லை, பராசக்திக்கு முன்பே பைத்தியக்காரன் என்ற படத்தின் மூலம் தான் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். தமிழ்த் திரையுலகில் நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமையாளராக விளங்கியவர் எஸ்.எஸ்.ஆர் என அழைக்கப் படும் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இவர் பழம் பெரும் நடிகராக மட்டுமின்றி, நீண்ட அரசியல் வரலாறு கொண்ட அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர். சமீபகாலமாக உடல்நலக் கோளாறால் அவதிப் பட்டு வந்த எஸ்.எஸ்.ஆர். இன்று காலமானார். அவருக்கு வயது 86.
Read more at: http://tamil.filmibeat.com/news/s-s-...lm-031436.html
-
இலட்சிய நடிகர் எஸ் எஸ் இராஜேந்திரன் மறைவு....
===============================================
ஆழ்ந்த இரங்கல்...
.
வசனங்களை மிகத் தெளிவாகவும், இனிமையும் அழகும் கலந்த கம்பீரத்துடனும், ஏற்ற இறக்கத்துடனும் உச்சரிக்கக்கூடியவர்.
.
பேறிஞர் அண்ணாவின் இதயத்தில் தனி இடம் பிடித்தவர் .
"அரைக்கால் சட்டை போட்ட காலைத்திலேயே , என் கரம் பற்றி
அரசியலுக்கு வந்தவன் தம்பி ராஜு " என்று அண்ணாவால்
புகழப்பட்டவர். அண்ணாவின் வெளியூர்ப் பயணம் என்றாலே ,
அண்ணா கேட்காமலேயே இவர் பிளைமவுத் கார் அண்ணாவின் வீட்டு
வாசலில் நிற்கும் . சென்னை எல்டாம்ஸ் சாலையில் தான்
கட்டிய புது வீட்டுக்கு ' அண்ணா இல்லம் ' என்று பெயர் சூட்டி ,
அண்ணாவையே அந்த இல்லத்தைத் திறக்கச் செய்தார். நாடக உலகிலிருந்து , தன்னை ஆளாக்கிய கலைவாணரின் படத்தையும் அந்த இல்லத்தில் அண்ணாவைக் கொண்டே திறக்கச் செய்தார் .
,
தமது தேனாம்பேட்டை இல்லத் திறப்பு விழாவுடன், பேரறிஞர் அண்ணாவின் 50ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினைப் பொன் விழாவாகக் கொண்டாடினார். அண்ணாவுக்குப் பட்டு வேட்டி, பட்டுச் சட்டையுடன் 50 பவுன் தங்கச் சங்கிலி அணிவித்தார்.
.
புராணப் படங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்தார். சம்பூர்ண ராமாயணம் படத்தில் பரதன் வேடத்தில் நடிக்க அழைத்தும் மறுத்தவர்.
அதன் காரணமாகவே ' இலட்சிய நடிகர் ' என்று அண்ணா உட்பட அனைவராலும் போற்றப்பட்டவர்.
.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமாக திகழ்ந்தார் எஸ்எஸ்ஆர். புரட்சித்தலைவர் எம்ஜியார் தொடங்கிய அண்ணா திமுகவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். 1980இல் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அ.தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
.
பிரதமர் நேருவுக்கு கறுப்புக்கொடி காட்டிய அன்றைய திமுகவில் இருந்தபோது தன் வீட்டு மாடியில் கறுப்பு பிளாங்கெட் போர்வைவைக் கட்டிவிட்டு,வாசலில் துப்பாக்கியுடன் அமர்ந்து கொண்டிருந்த கொள்கைப்பிடிப்புள்ள துணிச்சல்காரர்.
.
எல்டாம்ஸ் சாலை வீட்டிற்கு முன்று வாசல்கள் (compound Gates )ஒவ்வொன்றிலும் அவர் எழுதியிருந்த வாசகம்
1.அன்னை இல்லம்
2.அண்ணா இல்லம்
3.கலைவாணர் இல்லம் ...
-
-
-
-
-
-
-
-
-
VEDAM PUTHITHU PADAM THODANGUVATHRKU MUNPU BARATHI RAJA RESPECT THALAIVAR
https://www.youtube.com/watch?v=5KUkL9wS870
-
http://i45.tinypic.com/2hov8mo.jpg
Many happy returns of the Day Vinod Sir.
May God Bless you with all cheer and health
-
http://i59.tinypic.com/264qjuv.jpg
இன்றுபோல என்றும் வாழ்க!
எங்கள் வீட்டு திருமகனே!
வாழைக் கன்றுபோல தலைவன் பக்கம்
சாய்ந்திருக்கும் குலமகனே!
இன்று பிறந்த நாள் காணும் திரு. வினோத் அவர்கள் தலைவர் புகழ் போல வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Dear Essvee. Happy Birthday wishes to the thread spinner who has secured the top berth in our Mayyam with his 10K mark!Every birthday is not only for the reminiscence of the past but also for the reminders on the aspirations of future, and I wish you turn a new leaf of victory on a bed of roses though we experience a path of thorns here and there before reaching that bed!!
regards, senthil
-
லட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் மரணம் குறித்து கருணாநிதியின் அரிய புகைப் படங்களுடன் இணைந்த டார்ச்சர் பதிவுகள் அவரது பக்கத்தில் எதிர்பார்க்கலாம் என்ற பொழுதிலும் ... லட்சிய நடிகர் கருணாநிதி பற்றிய ஒரு மலரும் நினைவுகள் பேட்டியில் சொன்னதை அதற்கு முன்னரே இங்கே பதிவு செய்கிறேன் ... அவர் சொன்னது இது தான் ....
1967 இல் தி மு க முதன் முதலில் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து எல்லா தி மு க தலைவர்களும் அண்ணாவை சந்தித்த வண்ணம் இருந்தனர் .
அப்பொழுது நான் அண்ணாவுடன் தான் இருந்தேன் , ஒவ்வொரு தலைவராக உள்ளே வந்து அண்ணாவைச் சந்திக்க , அண்ணா அவர்களோ ஒவ்வொருவரிடமும் அவருக்கான அமைச்சரவை துறை எது என்று விவரித்துக் கொண்டிருந்தார் . அப்பொழுது அடுத்து வரப் போவது கருணாநிதி என்று தெரிவிக்கப் பட்டவுடன் ...
அண்ணா அவர்கள் சிரித்த படி என்னிடம் சொன்னது " இப்ப தம்பி கருணாநிதி வந்து காவல் துறை அமைச்சகம் தான் வேணும்னு கேட்பார் பாருங்க " என்றார் ...
சொல்லி முடிப்பதற்குள் கருணாநிதி உள்ளே வந்து விட்டார் . வந்தவர் அண்ணாவிடம் வாழ்த்து பெற்று , தனக்கு பொதுப் பனித் துறையை அண்ணா அவர்கள் ஒதுக்கியிருக்கிறார்கள் என்று தெரிந்துக் கொண்ட மாத்திரமே முகத்தில் தயக்கம் தெரிய காணப் பட்டார் ...
தயங்கிய படியே தனக்கு காவல் துறை அமைச்சகம் வேண்டும் என்றும் கேட்டார் ... அண்ணா என்னைத் திரும்பிப் பார்த்தார் ... பின்னர் கருணாநிதியிடம் " தம்பி பொதுப் பனித் துறை தான் நான் உனக்கு ஒதுக்கியிருக்கிறேன் என்று சொல்ல ...
" இல்லை அண்ணா , காவல் துறை அமைச்சகம்... " என்று கருணாநிதி இழுக்க ....
அண்ணாவோ " தம்பி , இரண்டு துறைகள் தான் என்னிடம் தற்பொழுது கொடுக்கும் நிலையில் உள்ளது , ஒன்று பொதுப் பனித் துறை , இன்னொன்று முதல்வர் பதவி , பொதுப் பனித் துறை உனக்கு வேண்டாம் என்றால் முதல்வர் பதவியை எடுத்துக் கொள் ... என்று சொல்ல .... அதிர்ந்து போனார் கருணாநிதி ...
உடனே , பொதுப் பனித் துறையை தான் ஏற்பதாக கூறிவிட்டு கிளம்பினார் ... பின்னர் நான் அண்ணாவிடம் கேட்டேன் , எப்படி உங்களால் அவர் அதைத் தான் கேட்பார் என்று கணிக்க முடிந்தது என்று ... அதற்கு அண்ணா சொன்னார் ...
தம்பி கருணாநிதிக்கு பழி வாங்கும் எண்ணம் அதிகம் உண்டு , காழ்புணர்ச்சியால் காங்கிரஸ் காரர்களை பழி வாங்குவதற்காகவே அந்தத் துறையைக் கேட்கிறார் , அதனால் தான் அதைத் தர நான் மறுத்து விட்டேன் என்று சொனனர் .... அதிகாரத்தை கொண்டு அரசியல் எதிரிகளை பழி வாங்குவதில் கருணாநிதிக்கு நிகர் அவரே என்பதற்கு இது சிறந்த அத்தாட்சி ...
பி .கு : அப்பொழுது குண்டடி பட்டு மருத்துவமனையில் இருந்த மக்கள் திலகத்திடம் அமைச்சர்களின் பட்டியல் அண்ணாவினால் கொடுத்தனுப்பப் பட்டது , தன்னிடம் தகவலை தெரிவிக்க அண்ணா முடிவு செய்ததை பார்த்து நெகிழ்ந்தார் மக்கள் திலகம் , அதில் ஒரு மாற்றமும் செய்யச் சொல்லி கேட்டார் ... சி . ப ஆதித்தனார் அவர்களுக்கு மந்திரியாக பதவி தருவதில் தனக்கு ஒப்புதல் இல்லை என்று மக்கள் திலகம் கூற அதை ஏற்றுக் கொண்டார் அண்ணா
courtesy net
-
அது மக்கள் திலகமோ , அவர்கள் நிலைத்திருப்பது முழுக்க முழுக்க மக்கள் சக்தியால் மட்டுமே , மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்ட நிலையில் வேறு எந்தச் சக்தியும் அவர்களை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது .
அதற்கு பல உதாரணங்கள் இருப்பினும் , ஒன்றை முன் வைக்கிறேன் , 1973 ம் ஆண்டு .... மதுரைக்கு வந்திருந்தார் பிரதமர் இந்திரா காந்தி . அப்பொழுது அ தி மு க துவங்கிருந்த நேரம் , கருணாநிதி தலைமையிலான தி மு க ஆட்சியின் ஊழல்கள் குறித்த புகார்களை இந்திரா காந்தி அம்மையாரிடம் கொடுக்க நினைத்த மக்கள் திலகம் , மதுரைக்கு சென்று கொடுக்க முடிவெடுத்தார் .
ரயிலில் பயணம் , வழி நெடுகிலும் தொண்டர்கள் கூட்டம் , எங்கும் மக்கள் வெள்ளம் . ரயில் ஊர்ந்து செல்கையில் அதனுடன் மக்கள் நடந்து வருகிறார்கள் , சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி ரிக்ஷாவைப் போல மெதுவாக நகர விட்டனர் தொண்டர்கள் .
காலை 7 மணிக்கு வர வேண்டிய ரயில் 10 மணி நேரம் தாமதாகி மாலை 5 மணிக்குத் தான் மதுரையை தொட்டது . மதுரையில் ரயிலுடன் சேர்ந்து மக்கள் வெள்ளம் நடந்து வருகையைப் பார்த்து ரயில்வே துறை அதிகாரிகளே அசந்தனர் ,
தாமதத்தினால் , கொடை ரோடு ஸ்டேஷனில் இறங்கி கார் மூலம் மதுரைக்கு சென்று விடலாம் என்று திட்டமிட்ட மக்கள் திலகத்திடம் , ரயில் ஓட்டுனரும் , ஸ்டேஷன் மாஸ்டரும் , " கொடை ரோடு முதல் மதுரை வரை வழி நெடுகிலும் மக்கள் வெள்ளம் காத்திருக்கிறது , நீங்கள் இல்லாமல் , ரயிலை மதுரைக்குக் கொண்டுச் செல்ல முடியாது , நீங்கள் தொடர்ந்து ரயிலில் பயணம் செய்தால் தான் பாதுகாப்பு " என்று கேட்டுக் கொண்டனர் ....
இந்தக் காலத் தாமதத்தால் , இந்திரா காந்தியை மக்கள் திலகம் மதுரையில் சந்திக்க முடியாமல் போனது . மதுரை ரயில் நிலையத்தில் அவர் வந்திறங்கியதும் மக்கள் கூட்டம் அலை மோதியது , மக்கள் திலகம் மயக்கமடையும் அளவிற்கு கூட்ட நெரிசல் . அப்படியே அவரை வேனுக்கு அழைத்துச் சென்று பாண்டியன் ஹோட்டலுக்கு விரைந்தனர் .... பின்னர் ஓய்வெடுத்துக் கொண்டு மாலை பொதுக் கூட்டத்தில் பேசினார் ....
அது தான் மக்களின் உணர்ச்சி ... அவர்களுக்கு அரசியல் என்பதையும் கடந்து மக்கள் திலகமும் , அவர்கள் இதய தெய்வங்கள் ... எந்தக் காலக் கட்டத்திலும் மக்களிடமிருந்து அவர்களை பிரிக்க முடியாது
courtesy net
-
மறக்க முடியுமா?
எஸ்.எஸ்.ஆர் என்று அன்போடு அழைக்கப்பட்ட சேடப்பட்டி சூரிய நாராயணத் தேவர் ராஜேந்திரன் அவர்கள் அமரராகி விட்டார். லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட திரு. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தயாரித்து 1947ம் ஆண்டு வெளியான, தலைவர் நடித்த பைத்தியக்காரன் திரைப்படத்தில் அறிமுகமானவர் எஸ்.எஸ்.ஆர்.
தமிழ் திரையுலகில் தனியான ஒரு நடிப்பு பாணியை ஏற்படுத்திக் கொண்டு தனது பிசிறில்லாத கம்பீர குரலால் வசனங்களை அர்த்த புஷ்டியுடன் உச்சரித்து தமிழுக்கு அழகு சேர்த்ததுடன் திரைத்துறையில் தனக்கென்று ஒரு இடத்தையும் பிடித்துக் கொண்டவர் எஸ்.எஸ்.ஆர். அவர்கள்.
மறக்க முடியுமா? திரைப்படத்தின் கிளைமாக்சில் குடிபோதையுடன் தாசி வீட்டுக்கு செல்லும் எஸ்.எஸ்.ஆர்., அந்தப் பெண் வறுமையின் கொடுமையால் அந்த நிலைக்கு தள்ளப்பட்ட தனது சகோதரி என்று தெரிந்து கொள்வார். அந்த சகோதரியும் வந்திருப்பது தனது தம்பி என்று அறிந்த அந்த மோசமான சூழ்நிலையில் அரிவாள்மனையால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டபின், குடிபோதையில், அதிர்ச்சியால் தெளிந்தும் தெளியாத மயக்க நிலையில், சோகத்தையும், அவமானத்தையும், குற்ற உணர்வையும் கொண்ட கலவையான உணர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக டெம்போவை கூட்டிக் கொண்டே சென்று கடைசியில் கதறும் காட்சியை யாரும் மறக்க முடியுமா?
புராணப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் பகுத்தறிவுக்கு முரணான கதைகளில் நடிக்க மாட்டேன் என்று கூறி வருமானம் போனாலும் பரவாயில்லை என்று கொள்கைக் குன்றாக நின்ற லட்சிய நடிகர் அவர்.
1962ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அண்ணா கண்ட திமுக சார்பில் வெற்றி பெற்றதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் நடிகர் என்ற பெருமை எஸ்.எஸ்.ஆருக்கு உண்டு. அந்தத் தேர்தலில் நம் தலைவர் போட்டியிடவில்லை. ‘நின்றால் பொதுக் கூட்டம், நடந்தால் ஊர்வலம், பேசினால் மாநாடு, முகத்தைக் காட்டினால் 30 ஆயிரம் வாக்குகள்’ என்று தன்னால் புகழப்பட்ட மக்கள் திலகத்தை தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட பேரறிஞர் அண்ணா கோரியதால், தேர்தலில் தலைவர் போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆசை இல்லாமல் கட்சிக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நம் தலைவரை தேர்தலுக்கு பின் எம்.எல்.சி. ஆக்கி அழகுபார்த்தார் நம் அண்ணா.
உலகில் எம்.எல்.ஏ.ஆன முதல் நடிகர் எஸ்.எஸ்.ஆர். என்றால் அவரது வெற்றிக்கும் பிரசாரம் செய்து (1962ம் ஆண்டு தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதிக்கும் தலைவர் தீவிர பிரசாரம் செய்து வெற்றிக்கு உறுதுணையாக விளங்கினார்) பின்னர் எம்.எல்.சி. ஆன முதல் நடிகர் நம் தலைவர். காஞ்சித் தலைவன் படத்தின் டைட்டிலில் நம் தலைவர் பெயருக்குப் பின்னால் எம்.எல்.சி. என்றும் திரு.எஸ்.எஸ்.ஆர். அவர்கள் பெயருக்குப் பின்னால் எம்.எல்.ஏ. என்றும் காட்டுவார்கள்.
மருதுபாண்டியர் வரலாற்றைக் கூறும் சிவகெங்கை சீமை திரைக் காவியத்தில் (சிலர் இந்தப் படத்தை திரு.எஸ்.எஸ்.ஆர். தயாரித்ததாக கருதிக் கொண்டிருக்கின்றனர். அருமை நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் கூட இன்று இந்த படத்தை எஸ்.எஸ்.ஆர். எடுத்தார் என்று குறிப்பிட்டுள்ளார். சிவகெங்கை சீமை படத்தை தயாரித்தது கவியரசர் கண்ணதாசன் என்பதை பணிவோடு அவருக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்) மருதுபாண்டிய மன்னர்களுக்கு தளபதியாக மாவீரன் முத்தழகு தேவராக வாழ்ந்து காட்டியவர் திரு.எஸ்.எஸ்.ஆர்.
அந்த மனிதனின் மரணத்தில்தான் என்ன ஒரு உன்னதம் பாருங்கள். எந்த மன்னர்களுக்கு தளபதியாக நடித்தாரோ அந்த மன்னர்களை.... மருது பாண்டியர் சகோதரர்களை வெள்ளையர் அரசு தூக்கிலிட்ட நாள் 24-10-1801. அதே தேதியில் எஸ்.எஸ்.ஆர். மறைந்துள்ளார். அந்த மறவர் குல திலகத்தின் புகழ் வாழ்க.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
-
-
-
-
மக்கள் திலகம் நடிப்பில் மட்டுமல்ல இரட்டை வேட சண்டை காட்சிகளிலும் வித்தியாசம் காட்டி இருப்பார் அதற்கு சிறந்த காட்சி சிரித்து வாழ வேண்டும் படத்தில் வரும் இரு தலைவர்களும் மோதி கொள்ளும் சண்டை காட்சி நான் சிறுவயது முதல் இன்று வரை ரசித்து ரசித்து பார்க்கும் சண்டை காட்சி அன்பர்களே நீங்களும் ரசியுங்கள் உண்மை வீரனின் சாகசங்கள்
http://www.youtube.com/watch?v=lBiUKEFV15s
-
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
1970ம் வருடம் ஜூன் மாதம் 22ம் தேதி, அன்றைய போப் ஆண்டவர் JOHN PAUL VI அவர்களுக்கு நேரடியாக கடிதம் எழுதி பின்னர் அதற்கு பதிலாக 18-08-1970 அன்று திருவனந்தபுரம் பிஷப் அவர்களால் கடிதம் போடப்பட்ட, மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர் திருவனந்தபுரம் எஸ். எஸ். மணி என்பவர் இவர்தான்.
http://i58.tinypic.com/1on8fs.jpg
ஒரு படத்தயாரிப்பாளர் செய்ய வேண்டிய வேலையை, மக்கள் திலகத்தின் பால் கொண்ட பேரன்பு காரணமாக, ரோம் நகரில் உள்ள போப் ஆண்டவர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி, மக்கள் திலகத்தின் நற்பண்புகளுக்கு சான்றாக ஒரு கடிதம் பெற வைத்த இவரைப் பற்றிய ஒரு சுவாராசியமான தகவல் :
ஒரு முறை திருவனந்தபுரத்தை சேர்ந்த எம். எஸ். மணி என்பவர் ஒரு படப்பிடிப்பின் போது, நம் பொன்மனசெம்மலை சந்தித்து பேசிய பொழுது , நம் வள்ளல் அவர்கள், எம். எஸ்.மணி என்பதை எஸ். எஸ். மணி என்று புரிந்து கொண்டு, " நீங்கள்தான் திருவனந்தபுரத்திலிருந்து, என்னைப் பற்றி பத்திரிகையில் எழுதி வரும் எஸ். எஸ். மணியா ? என்று கேட்டுள்ளார். இதனை, எம் .எஸ். மணி அவர்கள் தன்னிடம் கூறிய போது, தான் அடைந்த மகிழ்ச்சி எழுத்தில் வடித்து முடியாது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். காரணம், எம். ஜி. ஆர். மனதில் தானும் இருந்துள்ளதாக புள காங்கிதம் அடைந்துள்ளார். இப்படி, தன்னைப்போல் எவ்வளவோ ரசிகர்கள் இன்றும் மக்கள் திலகத்துக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார். இந்த செய்தி, புரட்சித்தலைவரின் புகழ் பாடும் அப்போதைய " திரையுலகம் " போன்ற பத்திரிகையில் பிரசுரம் ஆகியுள்ளது.
2005 நவம்பர் மாத "இதயக்கனி" மாத இதழிலும், இது பற்றிய செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பொன்மண்செம்மலின் தீவிர ரசிகரான திருவனந்தபுரம் எஸ். எஸ். மணி அவர்கள், அன்றைய பிரபல நாளிதழ்களிலும், வார இதழ்களிலும், தனது கருத்துக்களை எழுதிவந்துள்ளார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
சகோதரர் திரு.செல்வகுமார் குறிப்பிட்டுள்ளதைப் போல, ஒரு படத்தைப் பற்றிய சர்ச்சை எழுந்தால் அந்த பிரச்னையை தீர்த்து வைப்பதும் தொடர்ந்து படம் வளர ஆர்வத்துடன் செயல்படுவதிலும் தயாரிப்பாளருக்கு முக்கிய பங்கு உண்டு.
ஆனால், ஏசுநாதர் படத்துக்கு பிரச்னை எழுந்தபோது தலைவர் மீது கொண்ட பேரன்பால் தனியொரு மனிதனாக போப்பாண்டவருக்கு கடிதம் எழுதி, மக்கள் திலகத்தின் நற்பண்புகளுக்கு அவரிடம் இருந்து சான்று பெற காரணமாக இருந்த திரு.எஸ்.எஸ்.மணி அவர்கள் நமது போற்றுதலுக்குரியவர். அவரைப் பற்றிய தகவலையும் அவரது படத்தையும் போற்றி பாதுகாத்து, நமது திரியில் வெளியிட்டு அந்த நண்பரை நாமெல்லாம் அறியச் செய்த திரு. செல்வகுமார் அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
மாலை முரசு நாளிதழில் வெளிவந்த செய்தி.
http://i58.tinypic.com/ok7n8l.jpg
கணீர் குரலில் கத்தி வீச்சு போல தமிழ் வசனம் பேசியவர் ;
மருதுபாண்டியர் நினைவு நாளில் மறைந்த இலட்சிய நடிகர்
எஸ்.எஸ். ஆர்.
http://i58.tinypic.com/jpbl20.jpg
-
http://i61.tinypic.com/300glyu.jpg
தி இந்து (தமிழ் ) தினசரியில் வெளியான செய்தி.
---------------------------------------------------------------------------
http://i57.tinypic.com/2ns0584.jpg
-
thirunindravur lakshmi
-
இந்த பாடலில் தலைவரின் நடனம் மிகவும் அற்புதமாக இருக்கும் அதுவும் கடைசி காட்சிகளில் தலைவர் உயர உயர பறந்து தன்னுடைய நடனத்தை வெளிப்படுத்தி இருப்பார் . மேலும் அவர் அணிந்து உள்ள சூ சூப்பர் ஆக இருக்கும் (shoe ) எத்தனை ஜென்மங்கள் புண்ணியம் செய்ததோ அந்த சூ நம் தெய்வத்தின் செந்தாமரை பாதங்களை சுமப்பதற்கு
http://www.youtube.com/watch?v=RNZlFZM60SQ
-
http://i58.tinypic.com/w1tc1z.jpg
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் திரு. வினோத் அவர்கள் இன்று போல என்றும் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க.
ஆர். லோகநாதன்.
-
-
-
-
http://i61.tinypic.com/28gsdxy.jpg
இதய வீணை - சிறப்பு பார்வை
-----------------------------------------------
வெளியான நாள்:20/10/1972.
42 ஆண்டுகள் நிறைவு பெற்றது.
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆகிய பின் வெளியான படம்.
"பாரத் எம்.ஜி.ஆர். " என்கிற அடைமொழியுடன் டைட்டிலில்
வெளியான படம்.
வடசென்னை ஸ்ரீ கிருஷ்ணாவில் முதல் வாரத்தில் முதன் முறையாகவும் , பின்பு 6 வது வாரத்திலும் , 10 வது வாரத்திலும் கண்டு களித்தேன் .
ஆரம்ப காட்சிகளே அமர்க்களம். கண்ணுக்கு குளுமையான எழில் கொஞ்சும் காஷ்மீர் நகரில் எடுக்கப்பட்ட காஷ்மீர் பியூடிபுல் பாடலுடன் தொடக்கம்.படு உற்சாகமாக தொடக்கம்.
ஆனந்தம் இன்று ஆரம்பம் - படத்தின் முதல் முதலாக பதிவு செய்யப்பட்ட பாடல். புரட்சி தலைவர் இளமை துள்ளலுடன் கிளுகிளுப்பாக நடித்த பாடல்.
பொன்னந்தி மாலைப்பொழுது - பல மெட்டுகள் போட்டு குழம்பி இருந்த இசைஅமைப்பாளர் சங்கர் கணேஷ் தலைவரிடம் அணுகி 13 மெட்டுகளை காண்பித்தபோது ,
தலைவர் அவற்றை கோர்வையாக வரும்படி தொகுத்து உருவான பாடல். தலைவரின் இசைஞானத்திற்கு இந்த பாடல் ஒரு சான்று. இந்த செய்தியை பல நிகழ்ச்சிகளில்
இசை அமைப்பாளரே தெளிவு படுத்தியுள்ளார்.
எனக்கு பிடித்த தலைவரின் காதல் பாடல்களில் இதுவும் ஒன்று. தலைவரின் ஸ்டெப்புகள், ட்விஸ்ட் மூவ்மெண்ட்ஸ் அருமையாக இருக்கும்.
திருநிறைச்செல்வி - மணமக்களை வாழ்த்தும் பாடல்.
அருமையான கருத்துக்கள் .தலைவருக்கு இந்த பாடலில்
ஒப்பனை நன்றாக இருக்கும் .
நீராடும் அழகெல்லாம் - ரசிக்கும்படியான பாடல். படத்தில்
திருப்பம் ஏற்பட உதவும் பாடல்.
ஒருவாலுமில்லெ -தத்துவக் கருத்துக்கள் நிறைந்த இனிமையான பாடல்.
மக்கள் திலகம் பல மாறுபட்ட வேடங்களில் , அருமையான ஒப்பனைகளில் (விவேகானந்தர் , சந்நியாசி ) தோற்றங்களில் கன கச்சிதமாக நடித்திருப்பார்.
எனக்கு நினைவு தெரிந்தவகையில் 25,40, 50,60,70,80,100
என விநியோகஸ்தர் சுவரொட்டிகள் ஒட்டியது இந்த படத்திற்கு தான் இருக்கும்.
குளோபில் 105 நாட்கள், ஸ்ரீ கிருஷ்ணாவில் 87 நாட்கள் .
மகாலட்சுமி, ராஜகுமாரியில் 10 வாரங்கள் ஓடிய வெற்றிப்படம்.
மற்றும் மதுரை , திருச்சி ஆகிய ஊர்களில் 100 நாட்கள் மேல் ஓடியது. மறு வெளியீடுகளில் பல நகரங்களில் வெளியாகி
வெற்றி நடை போடும் படங்களில் ஒன்று.
-
-
-
-