-
24th October 2014, 01:51 PM
#11
Junior Member
Veteran Hubber

Originally Posted by
MGRRAAMAMOORTHI
வேலூர்records 59
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
1970ம் வருடம் ஜூன் மாதம் 22ம் தேதி, அன்றைய போப் ஆண்டவர் JOHN PAUL VI அவர்களுக்கு நேரடியாக கடிதம் எழுதி பின்னர் அதற்கு பதிலாக 18-08-1970 அன்று திருவனந்தபுரம் பிஷப் அவர்களால் கடிதம் போடப்பட்ட, மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர் திருவனந்தபுரம் எஸ். எஸ். மணி என்பவர் இவர்தான்.

ஒரு படத்தயாரிப்பாளர் செய்ய வேண்டிய வேலையை, மக்கள் திலகத்தின் பால் கொண்ட பேரன்பு காரணமாக, ரோம் நகரில் உள்ள போப் ஆண்டவர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி, மக்கள் திலகத்தின் நற்பண்புகளுக்கு சான்றாக ஒரு கடிதம் பெற வைத்த இவரைப் பற்றிய ஒரு சுவாராசியமான தகவல் :
ஒரு முறை திருவனந்தபுரத்தை சேர்ந்த எம். எஸ். மணி என்பவர் ஒரு படப்பிடிப்பின் போது, நம் பொன்மனசெம்மலை சந்தித்து பேசிய பொழுது , நம் வள்ளல் அவர்கள், எம். எஸ்.மணி என்பதை எஸ். எஸ். மணி என்று புரிந்து கொண்டு, " நீங்கள்தான் திருவனந்தபுரத்திலிருந்து, என்னைப் பற்றி பத்திரிகையில் எழுதி வரும் எஸ். எஸ். மணியா ? என்று கேட்டுள்ளார். இதனை, எம் .எஸ். மணி அவர்கள் தன்னிடம் கூறிய போது, தான் அடைந்த மகிழ்ச்சி எழுத்தில் வடித்து முடியாது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். காரணம், எம். ஜி. ஆர். மனதில் தானும் இருந்துள்ளதாக புள காங்கிதம் அடைந்துள்ளார். இப்படி, தன்னைப்போல் எவ்வளவோ ரசிகர்கள் இன்றும் மக்கள் திலகத்துக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார். இந்த செய்தி, புரட்சித்தலைவரின் புகழ் பாடும் அப்போதைய " திரையுலகம் " போன்ற பத்திரிகையில் பிரசுரம் ஆகியுள்ளது.
2005 நவம்பர் மாத "இதயக்கனி" மாத இதழிலும், இது பற்றிய செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பொன்மண்செம்மலின் தீவிர ரசிகரான திருவனந்தபுரம் எஸ். எஸ். மணி அவர்கள், அன்றைய பிரபல நாளிதழ்களிலும், வார இதழ்களிலும், தனது கருத்துக்களை எழுதிவந்துள்ளார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Last edited by makkal thilagam mgr; 24th October 2014 at 01:55 PM.
-
24th October 2014 01:51 PM
# ADS
Circuit advertisement
Bookmarks