http://www.sivajiganesan.in/Images/DSC02365.jpg
நன்றி sivajiganesan.in
Printable View
http://www.sivajiganesan.in/Images/DSC02365.jpg
நன்றி sivajiganesan.in
http://www.sivajiganesan.in/Images/DSC02361.jpg
நன்றி sivajiganesan.in
http://www.sivajiganesan.in/Images/DSC02367.jpg
நன்றி sivajiganesan.in
http://www.sivajiganesan.in/Images/DSC02372.jpg
நன்றி sivajiganesan.in
http://www.sivajiganesan.in/Images/DSC02374.jpg
நன்றி sivajiganesan.in
http://www.sivajiganesan.in/Images/DSC02378.jpg
நன்றி sivajiganesan.in
http://www.sivajiganesan.in/Images/DSC02375.jpg
நன்றி sivajiganesan.in
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...bf&oe=5830A7D2
பிலிம்பேர் என்ற வட இந்திய சினிமா பத்திரிகையில் 1965 ல் நடிகர்திலகத்தை பற்றிய கருத்தை அப்போதைய இந்திப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய திலீப்குமார் அவர்கள் குறிப்பிடும் போது, " கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போல அதற்கு இணையாக உலகில் யாராவது நடிக்க முடியுமா? யாராவது இருந்தால் எனக்கு காட்டுங்கள் நான் அவரை வணங்குகிறேன், என வெளிப்படையாக கூறியிருந்தார்.ஒருவேளை அப்படியே நடித்திருந்தால் அவர் சிவாஜியை பின்பற்றித்தான் நடித்திருக்க முடியும், எப்படியாவது அவரின் சாயல் வந்துவிடும் எனவும் கூறினார்,
1952 வரை வட இந்திய நடிகர்களுக்கு தமிழ் நடிகர்கள் பற்றி மிக இகிழ்ச்சியான எண்ணம் இருந்து வந்தது, நடிகர்திலகத்தின் பட உலக பிரவேசத்திற்குப் பிறகு நடிப்பு என்றால் இவ்வளவு இருக்கிறதா? என்ற திகைப்பும் வாயடைப்பும் அவர்களுக்கு ஏற்ப்பட்டது.
நடிப்புக் கலையைப் பொறுத்தவரை நடிகர்திலகத்தை மிஞ்ச உலகிலேயே ஆள் கிடையாது. ஆனால் தமிழர்களுக்கு எப்போதுமே தங்கள் சகோதரர்களையே தாழ்த்தும் சுபாவம் இருப்பதால் நம்மில் சிலர் நடிகர்திலகத்தின் பெருமையை ஒப்புக் கொள்வது கிடையாது.
:- கட்டுரை வெளியீடு 19/02/1986
தினகரன் நாளிதழ்
நன்றி:- வரலாற்றுச் சுவடுகள் நூலிலிருந்து
(முகநூலில் இருந்து)
அன்புள்ள மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, 24.06.16 வெள்ளி அன்று மதுரை சென்ட்ரல் திரையரங்கில் மக்கள்தலைவரின் மகத்தான காவியமான 200 படம் திரிசூலம் படம் வெளியானது. விநியோகஸ்தர் மிகவும் சொற்ப அளவில் போஸ்டர் மட்டுமே ஒட்டியிருந்தார். மற்ற படங்களுக்கு ஒட்டப்படும் போஸ்டரில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே ஒட்டப்பட்டது. மதுரை சிவா மூவீஸ் சார்பில் திரையிடப்படும் மக்கள்தலைவரின் திரைப்படங்களுக்கு மட்டுமே நகர் முழுவதும் போஸ்டர் ஓட்டப்படும். மேலும் ஒட்டிய போஸ்டர் முழுவதுமே மிகவும் பழைய போஸ்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நமது மக்கள்தலைவரின் படங்களுக்கு மட்டுமே மதுரை சிவா மூவீஸ் தவிர மற்றவர்கள் மிகவும் குறைந்த அளவில் விளம்பரம் செய்துவிட்டு அதிகளவில் இலாபம் சம்பாதிப்பது அன்று முதல் இன்று வரை தொடர்கதையாகிக் கொண்டு இருப்பது மிகவும் வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. நமது மக்கள்தலைவரின் படங்களின் மீது அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை போலும். இருந்தாலும் முழுக்க முழுக்க நமது மக்கள்தலைவரின் வேலைப்பாடுகள் தியேட்டர் கலை கட்டின. வெள்ளிக்கிழமை வசூல் 16 ஆயிரத்தை நெருங்கியது. படத்தை பார்த்த ரசிகர்களுக்கு மேலும் ஒரு தடங்கலான செய்தி, படத்தின் பிரிண்ட் சுத்த மோசாக இருந்தது என்பது தான். பாதி படத்தில் நமது தலைவரின் முகமே தெரியாத அளவிற்கு அலை அலையாய் இருந்தது. படம் பார்த்த பாதி பேர் இவ்வளவு மோசமான பிரிண்டால் படத்தின் தகுதியே போய் விட்டது என்று புலம்பினர். சனிக்கிழமையும் வசூல் விநியோகஸ்தருக்கு கல்லா கட்டியது. ஞாயிற்றுக் கிழமை மேலும் ஒரு இடியான செய்தி, ஹைகிளாஸ் டிக்கெட் நமது மக்கள் தலைவரின் படங்களுக்கு மட்டும் 250 முதல் 280 வரை போகும். தியேட்டரில் வேலைப்பாடு நடைபெறுவதால் ஹைகிளாஸ் டிக்கெட் 130 மட்டுமே கொடுக்கப்படும் என்றனர். ஞாயிறு மாலைக் காட்சிக்கு ரசிகர்கள் மாலை 4.30 மணியிலிருந்தே தியேட்டர் முன் குவியத் துவங்கினர். நேரம் ஆக ஆக ரசிகர்கள் அதிகளவில் குவிய ஆரவாரக் கொண்டாட்டங்கள் விண்ணிலிருக்கும் நமது தலைவரின் காதுகளுக்கே கேட்கும் வண்ணம் இருந்தது. கரிமேட்டை சேர்நத ரசிகர் படத்திற்கு வந்திருந்த ரசிகர்களுக்கு பிரியாணியும் அவித்த முட்டையும் கொடுத்தார். சரியான விளம்பரம் செய்திருந்தால் சென்ட்ரல் தியேட்டர் தாங்காது என்பதற்காகத் தான் விநியோகஸ்தர் குறைவான விளம்பரம் செய்தாரோ என்னும் அளவிற்கு கூட்டம் அலைமோதியது. ஹைகிளாஸ் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்து அரை மணி நேரத்திலேயே ஃபுல் ஆகிவிட்டது. எப்போதுமே நமது தலைவரின் படத்தை ஹைகிளாஸில் பார்த்தவர்கள் கீழே பார்க்காமல் திரும்பி போய்விட்டனர் என்பது மிகவும் வருத்தமளித்தது. டிக்கெட் கொடுங்கள் நாங்கள் நின்று கொண்டே எங்கள் தலைவரின் முகத்தைப் பார்க்கிறோம் என்று கூறியும் தியேட்டர் நிர்வாகம் ஒத்துக் கொள்ளவில்லை. இப்படி பல இடையூறுகளுக்கிடையும் படத்தின் மாலைக் காட்சி வசூல் 11 ஆயிரத்தைத் தொட்டது சினிமா விநியோகஸ்தர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. ஹைகிளாஸ் டிக்கெட் முழுவதும் கொடுத்திருந்தால் வசூல் 15 ஆயிரத்தை தாண்டியிருக்கும்.எப்போதுமே ஞாயிறு மொத்த வசூல் 23 ஆயிரத்தை நெருங்கும் ஆனால் இருக்கை குறைப்பு காரணமா படத்தின் ஞாயிறு வசூல் 19 ஆயிரம் தொட்டது. எப்படியும் ஒரு லட்சத்தை தாண்ட வேண்டிய திரைப்படம் விநியோகஸ்தரின் சரியான விளம்பரமின்மை மற்றும் தியேட்டரின் இருக்கை குறைப்பு போன்ற காரணங்களால் படத்தின் வசூல் 85 முதல் 90 ஆயிரத்திற்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் நமது மக்கள்தலைவரின் வசந்தமாளிகைத் திரைப்படத்திற்கு பிறகு இரண்டு பெரிய படங்கள் திரையிடப்பட்டன, எந்தப் படமும் ஒரு லட்சத்தை தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கவை. திரிசூலம் படத்தின் வெற்றிக்கு மிகவும் உழைத்திட்ட சிவாஜி மன்ற நகர்தலைவர் ஜோதிபாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள், சிவாஜி சமூகநலப் பேரவையைச் சேர்ந்த பாண்டி, சிவாஜி செல்வம், பச்சைமணி, மற்றும் என்றும் சிவாஜி புகழ்பாடும் வெங்கடேஷ், சிவாஜிகுமார், சிவாஜிராஜன் அனைவருக்கும் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும் சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
http://www.sivajiganesan.in/Images/DSC02376.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
அன்பு நண்பர் சிவா அவர்களுக்கு,
என் வேண்டுகோளை ஏற்று பதிவுகளை நீக்கியதற்கு நன்றி. நீங்கள் குறிப்பிடும் விஷயங்கள் பற்றி நானும் அறிவேன். அது போன்ற பதிவுகள் இனியும் வராதிருக்க செல்வகுமார் சாரும் நெறியாளர் ரவிச்சந்திரன் அவர்களும் ஆவன செய்வார்கள் என நம்புகிறேன்.
அன்புடன்
ஜூலை மாதத்தில் நாம் இருக்கிறோம், நடிகர்திலகத்தின் நினைவு மாதம்,
நினைவு சிறப்பு பதிவு.
ஒரு காலத்தில் அயல்நாட்டினர்
தமிழகத்தை 'சிவாஜி கணேசன் தேசம்' என்றுதான் குறிப்பிடுவார்களாம் , அந்த அளவிற்கு நடிகர்திலகத்தின் நடிப்பானது கடல் கடந்த புகழினை எட்டியிருந்தது, ...
என்பது வருட தமிழ் சினிமாவில்
ஐம்பது வருடங்களுக்கு மேலும் நடிகர்திலகத்தின் ஆளுகைக்குள் இருந்து வந்தது.
பராசக்தி- - குணசேகரன்,
பாகப்பிரிவினை- - கன்னையா,
வீரபாண்டிய கட்டபொம்மன்,
கப்பலோட்டிய தமிழன்-- வ.உ.சி,
சேரன் செங்குட்டுவன்,
சாக்ரடீஸ்,
ஒத்தெல்லோ,
அசோக சக்கரவர்த்தி,
வீர சிவாஜி,
வாஞ்சி நாதன்,
திருப்பூர் குமரன்,
பாசமலர் ராஜ சேகர்,
அப்பர்,
சிக்கல் சண்முக சுந்தரம்,
பாரிஸ்டர் ரஜினிகாந்த்,
டி.எஸ்.பி.சௌத்ரி,
பிரிஸ்டீஜ் பத்மனாபன்,
பாவமன்னிப்பு ரஹீம்,
ஞானஒளி ஆன்டனி,
இத்தனை நீண்ட நடிப்புப் பட்டியல் கொண்ட உலகத்து நடிகர் ஒருவரும் இல்லை,
காலம் அந்தக் கலைப்பெட்டகத்தை கைப்பற்றிக் கொண்டது, கண்ணாடி பெட்டகத்துக்குள் கண் மூடிக்கிடந்த நடிகர்திலகத்தைப் பார்த்து கவிஞர் வைரமுத்து சொன்னது,
ஒரு மனிதன் இறந்து போகும் போது நான்கு பேர் இறந்து போகின்றனர்,
ஒரு கணவன் இறந்து போகிறான்,
ஒரு தகப்பன் இறந்து போகிறான்,
ஒரு மாமன் இறந்து போகிறான்,
ஒரு மைத்துனன் இறந்து போகிறான்,
ஆனால் மாபெரும் நடிகர்திலகத்தை இழந்து பார்க்கும் போது
சாக்ரடீஸ் இறந்து கிடப்பதைப் பார்க்கிறேன்,
சேரன் செங்குட்டுவன் இறந்து கிடப்பதைப் பார்க்கிறேன்,
கட்டபொம்மன் இறந்து கிடப்பதைப் பார்க்கிறேன்,
ராஜ ராஜ சோழன் இறந்து கிடப்பதைப் பார்க்கிறேன்.
ஒரு எழுபது வருட மனித வாழ்க்கையில் மூவாயிரம் வருடம் வாழ்ந்த ஒரே நடிகன்" நடிகர் திலகம்"
மட்டுமே.
ஒரு முகத்தில் ஓராயிரம் பாவங்கள் காட்டிய ஒப்பற்ற கலைஞர்,
ராமனின் பாதம் பட்ட கல் அகலிசை ஆனது போல் நடிகர்திலகம் பேசிய வசனங்களால் தமிழ் மேலும் இனிமையானது.
நாளைக்கும் சேர்த்து உணவைத் தேடுகிற எறும்பு போல,
பாலைவனப் பயணத்தில் தன்னீரை சேமித்து வைத்துக் கொள்ளும் ஒட்டகம் போல இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கானப் புகழை சேர்த்து சென்றிருக்கிறார் நம் நடிகர்திலகம்
நன்றி :- பிலிம் காட்டியவர்கள் என்ற நூலிலிருந்து
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...d6&oe=5802AE04
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...df&oe=57FC49E2
(முகநூலில் இருந்து)
முரளி,
நாம் அளவுக்கு மீறியே பொறுமை காட்டியதாலேயே ,கடந்த காலத்தில் ,ஒரு குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்கள் ,தி.மு.க என்ற வலிமையான பிரச்சார இயக்கத்தின் துணை கொண்டு ,தமிழ் நாட்டில் பொய்களை அற்புதமாக விற்பனை செய்துள்ளனர். இன்றும் நாம் பொறுமை காக்கிறோம். சிவாவின் பதிவுகளில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.
திரும்ப திரும்ப கர்ணனின் வெற்றியை பற்றிய பொய் .4 திரையரங்குகளில் நூறு நாள் ஓடிய கர்ணன் தோல்வியாம். 3 தியேட்டரில் மட்டும் (சென்னை) நூறு நாள் ஓடிய ஆயிரத்தில் ஒருவன் பிரம்மாண்ட வெற்றியாம். நாமோ நவராத்திரி என்ற கருப்பு வெள்ளைக்கு போட்டியாக வந்து மகா தோல்வி கண்ட படகோட்டி பற்றி பேசுவதே இல்லை. சிவந்த மண் ரிலீஸ் ஆகு முன்பே , தோல்வி,தோல்வி என்று துர்பிரச்சாரம் மேற்கொண்ட பல தி.மு.கவினரை எனக்கு தெரியும்(ஒரு தமிழாசிரியர் ஆளவந்தார் உட்பட). நான் கேட்ட கேள்வி படம் வெளிவரட்டும். எனக்கு தெரிந்து சிவந்த மண் ஒரு பிரம்மாண்ட வெற்றி படம். ஆனால் சரித்திரத்தில் பொய்கள் இடம் பெற்று ,இன்றைய அரைகுறை பத்திரிகையாளர்கள் வரை தொடர்கிறது.
இந்த அபத்தம் தொடராதிருக்க ,தமிழ் நாட்டில் majority ஆக உள்ள நாம், நம்மை பற்றிய பொய்களை தொடர்ந்து முறியடித்து ,அவர்கள் போலவே தீவிரமாக செயல் பட வேண்டும்.
ஏனெனில், நமது பம்மலார் சொன்னது போல ,நமது படையை கண்டு ஒருவர் அரசியல் ரீதியாக பயந்தார்.மற்றொருவர் சினிமா தொழில் ரீதியாக பயந்தார். இந்த இருவரும் 56 இல் இணைந்ததால் ,இந்த மாதிரி துர்பிரச்சாரங்களும் ,பொய்மைகளும் வீதிக்கு வந்தன.
நடிகர்திலகத்தின் பெருந்தன்மை,துரதிருஷ்ட்ர வசமாக அவர் ரசிகர்களுக்கும் தொற்றி கொண்டிருப்பது, நம்மை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் ஊமைகளாக்கி விட்டது.
நாமாக எந்த வம்புக்கு போகும் எண்ணம் எப்போதுமே நமக்கு இருந்ததில்லை. ஆனால் நம்மை சீண்டும் போக்கு தொடர கூடாது. சிவா சொன்னது போல ,நம்மை தாக்கும் சிறிய பதாகைகளை வெளியிட்டது அவர்களே. சிவா புரிந்தது எதிர்வினையே.
ஆனால் ஒன்று. மாற்றணி நண்பர்களுக்கு கூறி கொள்வேன்.யாரையும் எதிர்ப்பதால் சரித்திரம் மாறி விடாது என்பது இருவருக்கும் தெரிந்த ஒன்று. இனியாவது மோதல் போக்கை கை விடுதல் நல்லது.
நாமோ நவராத்திரி என்ற கருப்பு வெள்ளைக்கு போட்டியாக வந்து மகா தோல்வி கண்ட படகோட்டி பற்றி பேசுவதே இல்லை.
:cool2::cool2::cool2::cool2::cool2:
good joke mr gopal sir neengal tamilagathil than irunthirgalal illai poranthahu veli naddaa santhadi sakkula theivathin perumaigalai kurai sollum gopal ungal samarthiyam yarukumae varathu
murali sir itharkku enna solla pokirirgal
இந்த அபத்தம் தொடராதிருக்க ,தமிழ் நாட்டில் majority ஆக உள்ள நாம், நம்மை பற்றிய பொய்களை தொடர்ந்து முறியடித்து ,அவர்கள் போலவே தீவிரமாக செயல் பட வேண்டும்.
ஏனெனில், நமது பம்மலார் சொன்னது போல ,நமது படையை கண்டு ஒருவர் அரசியல் ரீதியாக பயந்தார்.மற்றொருவர் சினிமா தொழில் ரீதியாக பயந்தார். இந்த இருவரும் 56 இல் இணைந்ததால் ,இந்த மாதிரி துர்பிரச்சாரங்களும் ,பொய்மைகளும் வீதிக்கு வந்தன.
adutha capatain rediyacchu aduthathu ungal aatchi than
valthukkal gopal sir
nallu suvarukkul unkarnthu eluthum neengal engalai pola indrum aatchiyil irunthal ?????????????????????????????????????????????????? ????????????????????
1956 poyi 60 varusham aananthu 2016 naangal than innum evalavu naal ippadi manathai thetri kolla pogirirgal???????????????????????????
ஆனால் ஒன்று. மாற்றணி நண்பர்களுக்கு கூறி கொள்வேன்.யாரையும் எதிர்ப்பதால் சரித்திரம் மாறி விடாது என்பது இருவருக்கும் தெரிந்த ஒன்று. இனியாவது மோதல் போக்கை கை விடுதல் நல்லது.
oruvarai mikavum asingamaga thitti vittu appuram sorry ketpathu pola ullathu ungal pathivu great gopal sir
athey paniyil nanum sila pathivugal pottu vittaen ini melavathu mothal illatha sumugamana pokkai iru thiri nanabargalum merkollavendum
Take Diversion 5
Between the Deep Sea and the Devil! இருதலைக் கொள்ளி எறும்பாக.....
Quote:
குடும்ப உறவுகளின் உரசல்களே தமிழ் சினிமாவின் சென்டிமென்டுகளின் மொத்த அடையாளம் !
கதாநாயகனோ கதாநாயகியோ....பாத்திரத்தின் வாழ்க்கை நல்லாத்தானே போயிட்டு இருக்கு என்று நினைக்கும்போதே வில்லங்கங்கள் குடும்ப
உறவுகளிடமிருந்தே வில்லம்புகளாகக் கிளம்பிவரும் இருதலைக்கொள்ளி சிச்வேஷன்கள் ....மசாஜ் பார்லரில் முழு உடம்பையும் எண்ணையில் முக்கிநீவி விடுவது போன்ற உணர்வைத் தோற்றுவித்து பொங்கிப்பொங்கி கண்ணீரில் கன்னங்களில் கோலமிட்டு வீட்டுக்கு வந்ததும் குடும்பத்தில் யாரையும் நம்பவிடாமல் குழப்பத்தை உண்டு பண்ணுவதில் தமிழ் படங்களே என்றும் டாப் !!
பாசமலரின் இந்த முக்கியமான குடும்பவில்லியின் குழப்படியால் மன்னரும் திலகங்களும் கொதிக்கும் சாம்பாரில் கரைந்த புளியாய் கொப்பளித்துக் குமுறுவதை பார்த்து விட்டு வந்ததும் எங்க அப்பாவைப் பெத்த பாட்டியிடம் அம்மாவும் எங்க அம்மாவைப் பெத்த பாட்டியிடம் அப்பாவும்முன்னைபோலப்பேசிக்கொள்ளாமலிருந்ததைக் கண்ணாரக் கண்டு வளரும்போதுதான் திரை சென்டிமென்டுகளின் தாக்கம் மனதில் சுரீரென்று உரைக்கத்தொடங்கியது!
ரியல் லைஃப் வேறு ரீல் லைஃப் வேறு என்பதை புரிந்து கொள்ளவே நிறைய ஆண்டுகளாயிற்று!! எங்கே நாமும் கைவீசம்மா கைவீசு ரேஞ்சுக்குப் போய்விடுவோமோ என்று தங்கையை பார்க்கும்போது லேசாகப் பயந்ததுமுண்டு !!
இருதலைக் கொள்ளி எறும்பாக ஜெமினிக்கும் சிவாஜிக்கும் இடையே சாவித்திரி படும்பாடு இப்போது பார்த்தாலும் ஏற்படுத்தும் தாக்கம் மாறவில்லை !!
https://www.youtube.com/watch?v=SfVcsfcCxOk
குய்யோ முறையோ கீதகூ(கே)வல்கள் !
சேவல் 2 கூவல் 1
பிரச்சினை என்ற வெள்ளி முளைக்கும்போது பேச்சுலர் சேவல்கள் பேச்சிலராகி குய்யோமுறையோ என்று கூவிகூவி ஊரைக்கூட்டுமாம்!
கிடைத்தற்கரிய பிரம்மச்சாரி வாழ்க்கைப் பாதையில் நதிமூலம் ரிஷிமூலம் தெரியாத குழந்தை இடறினால் ...... இப்படித்தானே கூவ முடியும் !!
https://www.youtube.com/watch?v=UlWMzNfdliY
சேவல் 1 கேவல் 1
ஜோடிக்கோழி த்ராட்டிலில் விடும்போது துன்பமழையில் நனையும் சேவல் இப்படித்தானே கேவிக்கேவிக் கூவும்!
https://www.youtube.com/watch?v=rMHD71WSkqg
கார்மேகம் கண்டகவும் நர்த்தன மயிலாள் !
தோகை விரித்தாடும் மயிலின் ஆனந்த நடனம் நமது நாடி நரம்புகளை சுண்டி மகிழ்வலைகளால் இதயத்தை சுரண்டிவிடும் !
கார்மேகமாக நடிகர்திலகம் குடைவிரிக்கும்போது நர்த்தனமயில்களும் தோகை விரிப்பது இயல்பே !
https://www.youtube.com/watch?v=ZthbaddX8do
https://www.youtube.com/watch?v=nlwqwn793Xk
Violin maestro Dr L Subramaniam
http://www.deccanherald.com/content/...oard-dr-l.html
அன்னை இல்லத்திலிருந்து மற்றொரு சினிமா தயாரிப்பு நிறுவனம் உருவாகியுள்ளது. ஏற்கனவே சிவாஜி பிலிம்ஸ், சிவாஜி புரொடக்சன்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வந்தது அனைவரும் அறிந்ததே. சிவாஜி புரொடக்சன்ஸ் சார்பில் அஜித் நடித்த அசல் திரைப்படத்திற்கு பிறது எந்தப் படமும் தயாரிக்கப்படவில்லை. விஜயின் அடுத்த படம் சிவாஜி புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு தளபதி ராம்குமார் அவர்களின் புதல்வன் துஷ்யந்த் அவர்கள் ஈசான் புரொடக்சன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி முதல் படமாக இளையதிலகம் பிரபு அவர்கள் நடிக்க மீன்குழம்பும் மண்பானையும் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். அந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.
தற்போது இளையதிலகத்தின் புதல்வன் வின் ஸ்டார் விக்ரம்பிரபு அவர்கள் நடிப்பதுடன் ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ளார். தனது தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் தானே நாயகனாக நடிக்கிறார். படத்திற்கு நெருப்புடா என்று பெயர் வைக்கபட்டுள்ளது.
ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் தொடக்க விழா 6.07.2016 நடைபெற்றது. விழாவிற்கு கலையுலகைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
துஷ்யந்த் அவர்கள் தொடங்கியுள்ள ஈசான் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் லோகோ நமது மக்கள்தலைவரின் செவாலியே பட்டம் பெற்றபோது இருந்த தோற்றத்தைக் கொண்டதாக உள்ளது. விக்ரம்பிரபு அவர்கள் தொடங்கியுள்ள ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் நிறுவனத்தின் லோகோ பராசக்தி படத்தில் நமது தலைவர் பேசிய சக்சஸ் என்று பேசிய புகைப்படம் உள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அன்னை இல்லத்திலிருந்து உருவாகியுள்ள இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் பல நல்ல தரமான படங்களை தயாரித்து மென்மேலும் சிறக்க உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும் சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் வாழ்த்துகிறோம்.
http://www.sivajiganesan.in/Images/060716_2.jpg
http://www.sivajiganesan.in/Images/060716_3.jpg
http://www.sivajiganesan.in/Images/060716_5.jpg
http://www.sivajiganesan.in/Images/060716_4.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
10.7.2016 ஞாயிறு மாலை திரையரங்கில் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் 101வது நாள் வெற்றி விழா கொண்டாடப்படுகிறது.
8.7.2016 வெள்ளி முதல் சிவகாமியின் செல்வன் திரைப்படம் தினசரி 2 காட்சிகள் நடைபெறும். காலை 10.30 மாலை 6.30 மணி.
அனைவரும் 10.7.2016 சீனிவாசா திரையரங்கில் கூடிடுவோம், மக்கள்தலைவர் சிவாஜி விழாவைக் கொண்டாடிடுவோம்.
https://scontent-sin1-1.xx.fbcdn.net...c7&oe=57F8D01C
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
மக்கள்தலைவரின் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி விழா சென்னை ஸ்ரீநிவாசா திரையரங்கில் 10.07.2016 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
நடிகர்திலகத்தின் அன்பு இதயங்களே, இதுவரை சென்னை கண்டிராத அளவிற்கு ரசிகர் அலை அலையாய் குவிந்து விழாவினை சிறப்பிக்க இன்றே தயாராவோம்.
என்றும் நமது மக்கள்தலைவரை மிஞ்ச கலையுலகில் எவருமில்லை என்பதை நிரூபிக்க நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை கொடுத்த மதுரை சிவா மூவீஸாருக்கு வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
படத்தின் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த ராமஜெயம், ஜெயக்குமார், நாகராஜன் மற்றும் நடராஜன் அனைவருக்கும் அனைத்து சிவாஜி ரசிகர்கள் சார்பில் நன்றியினைக் காணிக்கையாக்குகிறோம்.
https://scontent-sin1-1.xx.fbcdn.net...f5&oe=57F6FEFB
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...10&oe=57F8DC85
அனைவருக்கும் உளமார்ந்த ரமலான் நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
Dear Beloved N.T. Fans,
I'm planning to come to Chennai on 10th July to celebrate our Legend Success.
Please don't feel offended on my request. Kindly advice how is the theater, as I'm coming with wife and children, they should feel the pulse of our Legend.
Hence please suggest.
Thank you.
JAIHIND
M. Gnanaguruswamy
Dear Sir,
The theatre is somewhat OK and you can watch the movie in BOX which contains about 60 to 70 seats that will be suitable
those who comes with family.