-
4th July 2016, 04:54 AM
#11
Senior Member
Devoted Hubber

Originally Posted by
Murali Srinivas
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். வேலை பளுவின் காரணமாக ஒரு சில தினங்கள் இடைவெளியில் மட்டுமே திரியை பார்வையிடும் வாய்ப்பு கிடைக்கிறது. நேற்றைய தினம் நண்பர் சிவா அவர்கள் பதிவிட்ட அன்றைய இலங்கை வாழ் நடிகர் திலகம் ரசிகர்களால் நடத்தப்பட்ட பத்திரிக்கைகள், வெளியிட்ட நோட்டீஸ் போன்றவற்றில் ஒரு சில வாசகங்கள் மாற்று திரி நண்பர்களுக்கு வருத்தத்தை அளித்திருப்பது தெரிகிறது.
நண்பர் சிவா அவர்களே,
நான் சென்ற முறை குறிப்பிட்டது போல நடிகர் திலகத்தின் சாதனைகளை பதிவிடுவதில் தவறில்லை. நீங்கள் பதிவிட்ட நோட்டிஸ்கள் 40 வருடத்திற்கு முந்தியவை என்பதும் அதை நீங்கள் எழுதவில்லை என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன். அதே நேரத்தில் நம்மால் யார் மனமும் புண்பட வேண்டாம். ஆட்சேபத்துக்குரிய வரிகளை நீங்களே நீக்கி விடுங்கள்.
உங்கள் ஒத்துழைப்பிற்கு அட்வான்ஸ் நன்றிகள்!
அன்புடன்
முரளி சார் வணக்கம்
அவர்கள் பழைய நோட்டீஸ்களை பதிவிட்டதுபோலவே
நானும் எமது பழைய நோட்டீஸ்களை பதிவிட்டிருந்தேன்
ஆனால் அவர்கள் பதிவிட்டபோது அவர்களது பதிவுகளில் உள்ள
தீய விடயங்களை நாங்கள் சுட்டிக்காட்டி பிரச்சினையை ஏற்படுத்தாததால்
அவர்கள் அப்படியான தீய பதிவுகளை வெளியிடவில்லையென்று
தவறாக அர்த்தம் கொள்ளப்படுகிறது
அவரவர்கள் தங்கள் அபிமான நடிகரை புகழ்ந்துகொள்வதில் தவறில்லை
என்று எழுதுகிறார்கள் ஆனால் அவர்கள் முன்னர் இட்ட பதிவுகளில் அப்படி இல்லையே.
மற்றும்அண்மையில் சிவகாமியின் செல்வன் கர்ணன் மறு மறு வெளியீட்டின் பின்னர்
அங்கு ஒரு நண்பர் அப்படங்களின் ஓட்டங்கள்பற்றி விவாதிப்போம் வாருங்கள்
என்று அழைப்பு விடுத்தார் .அவரவர் தங்கள் அபிமான நடிகரை
புகழ்ந்துகொள்வது தவறில்லை என்பவர்கள்
நடிகர் திலகத்தின் படங்களைப்பற்றி விவாதிக்க
ஏன் அழைக்கவேண்டும்?
இதுபற்றி அந்த நண்பருக்கு அங்கே யாரும் அறிவுறுத்தி பதிவிட்டதாகவும் தெரியவில்லை.
ஆனால் இது பற்றி நமது திரியின் பக்கமிருந்து நாங்கள் யாருமே
குய்யோ முறையோ என கத்திக் குளறி சர்ச்சையை கிளப்பவில்லை.
அங்கே ஒரு நீதி இங்கே ஒரு நீதி.
எனினும் உங்கள் வேண்டுகோளை ஏற்று அந்த பதிவை எடிற் பண்ண
முயற்ச்சித்தேன் சிரமமாக இருந்ததால் முழுமையாக அப்பதிவுகளை நீக்கிவிட்டேன்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th July 2016 04:54 AM
# ADS
Circuit advertisement
Bookmarks