-
4th July 2016, 12:13 AM
#11
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். வேலை பளுவின் காரணமாக ஒரு சில தினங்கள் இடைவெளியில் மட்டுமே திரியை பார்வையிடும் வாய்ப்பு கிடைக்கிறது. நேற்றைய தினம் நண்பர் சிவா அவர்கள் பதிவிட்ட அன்றைய இலங்கை வாழ் நடிகர் திலகம் ரசிகர்களால் நடத்தப்பட்ட பத்திரிக்கைகள், வெளியிட்ட நோட்டீஸ் போன்றவற்றில் ஒரு சில வாசகங்கள் மாற்று திரி நண்பர்களுக்கு வருத்தத்தை அளித்திருப்பது தெரிகிறது.
நண்பர் சிவா அவர்களே,
நான் சென்ற முறை குறிப்பிட்டது போல நடிகர் திலகத்தின் சாதனைகளை பதிவிடுவதில் தவறில்லை. நீங்கள் பதிவிட்ட நோட்டிஸ்கள் 40 வருடத்திற்கு முந்தியவை என்பதும் அதை நீங்கள் எழுதவில்லை என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன். அதே நேரத்தில் நம்மால் யார் மனமும் புண்பட வேண்டாம். ஆட்சேபத்துக்குரிய வரிகளை நீங்களே நீக்கி விடுங்கள்.
உங்கள் ஒத்துழைப்பிற்கு அட்வான்ஸ் நன்றிகள்!
அன்புடன்
-
4th July 2016 12:13 AM
# ADS
Circuit advertisement
Bookmarks