Quote:
ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரமும் துப்பறியும் சிங்கமானாலும் ஜெமினி கணேசனைப் போல ஒரு காதல் மன்னன் பாத்திரம்தான். என்ன....ஜெமினியின் காதல்வெஜிடேரியன் ஜேம்ஸ்பாண்டின் காதல் நான்வெஜிடேரியன் !! அத்தோடு ஜேம்ஸ்பாண்டிற்கு துப்பாக்கியும் மூர்க்கமான சண்டைகளும் மூளையுள்ள
வில்லன்களும் கொஞ்சும் குமரிகளும் வாழ்வின் அங்கம். நம்மவர் தொடாமல் காதலிப்பதோடு சரி!
இதுவரை ஜேம்ஸ்பாண்டாக ஆறு நடிகர்கள் ....ஒரிஜினல் ஷான் கானரி, தொடர்ந்து ஜார்ஜ் லாசன்பி, ரோஜர் மூர், திமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன்
மற்றும் தற்போதைய டேனியல் க்ரைக் .....1962ல் டாக்டர்நோ படத்தில் தொடங்கி இன்றுவரை 24 பிரம்மாண்ட வெற்றிப்படங்கள்!!
ஜெமினிக்கும் இதுவரை ஆறு பிரதான பாடகர்கள் ..... ஒரிஜினல் ஏஎம் ராஜா தொடர்ந்து பிபிஸ்ரீநிவாஸ், ஏஎல் ராகவன், எஸ்பி பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ் மற்றும் டிஎம் சௌந்தரராஜன்...அவரது குரலாக வாழ்ந்துள்ளனர்.