Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார் சார்,
'கர்ணன்' திரைக்காவியத்தின் 150-வது வெற்றித்திருநாள் கொண்டாட்டங்களை சுடச்சுட தந்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி விட்டீர்கள். நிழற்படங்கள் அனைத்தும் சூப்பராக அமைந்துள்ளது. செய்தித்தாள் விளம்பரங்கள், அன்புள்ளங்கள் வெளியிட்ட குறும்பிரசுரங்கள், டிஜிட்டல் பேனர்கள், சுவரொட்டிகள், தீப ஆராதனைகள், வெற்றிக்கேடயங்களுடன் வி.ஐ.பிக்கள் என அனைத்தையும் விடாது தொகுத்து அளித்துள்ளீர்கள். என்ன ஒரு சேவை மனப்பான்மை. விழாவில் கலந்துகொண்ட அன்புள்ளங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வழக்கமாக திரைப்படங்களுக்கு வெளியீட்டு நாளன்று கொண்டாட்டம் இருக்கும், அதையடுத்து வெற்றிவிழா நாளன்று கொண்டாட்டம் இருக்கும். ஆனால் நமது டிஜிட்டல் 'கர்ணனுக்கோ' வெளியிட்ட நாளிலிருந்து தினம் தினம் கொண்டாட்டம்தான், திருவிழாதான். தினம் தினம் ஏதாவதொரு பத்திரிகையில் கர்ணன் பற்றிய செய்திகள் வந்துகொண்டே இருந்தன. எந்தப்படத்துக்கும் கிடைக்காத பெரிய பேறு இது.
சத்யம் திரையரங்குக்கு வெற்றிக்கேடயம் வழங்கப்பட்டதா என அறிய விரும்புகிறேன். ஏனென்றால் வி.ஐ.பி.க்களுக்கு வழங்கப்படும் ஷீல்டுகள் அவரவர்கள் வீடுகளுக்குள் போய் முடங்கி விடும். திரையரங்குகளுக்கு வழங்கப்படும் கேடயங்கள் மட்டுமே ரசிகர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, அத்திரையரங்கில் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஆண்டாண்டு காலத்துக்கும் கர்ணன் வெற்றியை பறைசாற்றிக்கொண்டிருக்கும்.
பம்மலார் அவர்களே, நேற்றிரவு பத்து மணிவரை காமராஜர் அரங்கத்தில் இருந்திருப்பீர்கள். (அதற்கு மேலும் இருந்திருக்கலாம்). அதன்பிறகு உங்களது பதிவுகளைப்பார்த்தால் நள்ளிரவு 11.45 மணியிலிருந்து விடியற்காலை 3.20 வரை பதிவுகளை இட்டிருக்கிறீர்கள். தங்கள் உடல் நலம் குறித்து எங்கள் அனைவரையும் கவலைகொள்ள வைக்கிறீர்கள். பதிவுகளை சுடச்சுட தரலாம், தவறில்லை. அதற்காக உங்கள் உடல நலனைப்பொருட்படுத்தாமல் கொதிக்கக் கொதிக்கத் தரவேண்டுமா?. பதிவுகளும், திரியும், நாங்களும் எங்கும் ஓடிவிடப்போவதில்லை. ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் கட்டாய ஓய்வெடுங்கள். இது எங்களது அன்பு வேண்டுகோள்.