DEAR FRIENDS RARE VIDEO OF SIVAJI SUITING SPOT FILM THILANA MOGANAMBAL FROM YOUTUBE
https://www.youtube.com/watch?v=O-jyzcFLYXo
Printable View
DEAR FRIENDS RARE VIDEO OF SIVAJI SUITING SPOT FILM THILANA MOGANAMBAL FROM YOUTUBE
https://www.youtube.com/watch?v=O-jyzcFLYXo
To
MR.VASU SIR
http://i1065.photobucket.com/albums/...psucklwtpb.gif
8000 பதிவுகள் என்பது சாதாரனமான விசயம் கிடையாது..வாசு சாருக்கு மக்கள் திலகம் திரியின் சார்பாக வாழ்த்துக்கள் ..தொடருங்கள்..
http://i60.tinypic.com/2nu642h.jpg
அன்பு நண்பர்களே, மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இந்த சான்றே போதுமானது. இது சிவாஜி ரசிகர்கள் எடுத்த கருத்துக் கணிப்புக் கிடையாது. தந்தி டி.வி.மக்களிடையே வாக்கெடுப்புப் போல் நடத்தி வெளியிட்ட கருத்துக் கணிப்பு.
மக்கள்தலைவர் இந்த மண்ணைவிட்டு மறைந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் 1980 வரை சிறந்த நடிகர் சிவாஜி என்று வாக்களித்து உள்ளனர் மக்கள்.
மேலும் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களுக்கு பெண் ரசிகைகளை விட ஆண் ரசிகர்களே அதிகம் என்பதும் கருத்துக் கணிப்பில் வெளிவந்துள்ளது.
https://scontent.fdel1-2.fna.fbcdn.n...07&oe=56A454E4
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
https://scontent.fdel1-2.fna.fbcdn.n...59&oe=56A66D60
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
எவரும் எட்டாததை எட்டிய
நம் நடிகர் திலகத்திற்கென
எட்டாயிரம் பதிவு தந்த
அய்யா வாசுதேவனாரை
வணங்கி வாழ்த்துகிறேன்.
தொலைக்காட்சியில் எஸ்.பி.பி
தோன்றி "பொட்டு வைத்த
முகமோ" பாடிக் கொண்டிருக்கிறார்.
பாட்டி சொல்கிறாள்..
"சிவாஜி மாதிரியே பாடுறாரே..
இவரு?"
அய்யா..!
இவ்வளவு தத்ரூபமாகவா
வாயசைப்பது?
( பழைய முகநூல் பதிவு .)
ஒளிரும் கண்களில்
இளமையுடன்..
பாடலுக்கு வாயசைப்பதில்
பழகிய புலமையுடன்..
அய்யா நடிகர் திலகம்.
வடிவான உடலழகை
மேலும் அழகாக்கும்
அவரின் மிடுக்கான கால்சட்டை.
ஒரு துளி கசங்கலின்றி
அதனுள் உள் நுழைத்த
எடுப்பான மேல்சட்டை.
நடிகர் திலகத்தின் வழியாக
யாரும் அதுவரை கேட்டறியாத
துள்ளலான அந்தப் புதுக்குரல்.
புதுக் குரலென்பதால்
அதற்கேற்றாற் போல்
அய்யா அள்ளித் தெளித்த
புதுப் பாவனைகள்.
முகம் முன் நீட்டி,
உடல் பின் தள்ளி,
கையை ஒயிலாய் வளைத்து,
உதடுகள் துடிக்க அவர்
உச்சரித்துப் பாடும்
"புன்னகை புரிந்தாள்."
பச்சை கொஞ்சும்
தேயிலைத் தோட்டத்தின்
குறுகலான பாதைகளில்
மின்னல் போல்
ஓடியாடும் கலைச் செல்வி.
காட்சி காட்டும்
சந்தோஷத்தை
இசையாலும் நிச்சயித்த
அய்யா எம்.எஸ்.வி.
"பாடும் நிலா"வின்
அந்த நாளைய
வெளிச்சக் குரல்.
இன்னும் என்னென்ன
சொல்ல..?
"பொட்டு வைத்த முகமோ?"
ரொம்பப் பிடிக்கும்.
( 27.12.2013 நாளில் என்
முகநூல் பதிவு.)
Dear Neyveli Vasudevan Sir,
My heart felt congratulations for your 8000th Special Post.
Pottu Vaiththa Mugamo - One of the best song of SPB.
If you notice, In Pottu Vaiththa Mugamo , when SPB sung the voice of the young SPB was little bold. SO, Nadigar Thilagam will also equally mime inline with the voice of SPB.
In films like Raja, SPB voice was little more matured and Nadigar Thilagam if you notice would have changed his style of Miming inline with SPB's matured Voice.
https://www.youtube.com/watch?v=LjD4VL33cnY
In Thirisoolam Era, SPB voice became more refined and Nadigar Thilagam would have mimed in a totally different way inline with the soothing voice of SPB....
https://www.youtube.com/watch?v=qbCqgaC3ZfQ
At all stages, Nadigar Thilagam has clearly noticed the voice change of SPB and would have equally matched miming of SPB.
That's the greatness of NT.
Excellent workings vasudevan sir . Advance Congrats for your 10,000 post.
Regards
RKS
கலையரசரும்,கவியரசரும்
கைகோர்த்து ஜெயித்த
எண்ணற்ற பாடல்களில் இதுவும் ஒன்று.
விறகுவெட்டியாக மாறி வரும்
இறைவன், வீதியில் வந்து
பேசும் எளிமைத் தத்துவம்
இப்பாடல்.
மனிதர்களை வாழ்விக்கிற
மகேசன், மனிதர்களின் உலகத்தில் கலக்கிற அதிசயம்
பேசுகிறது, இந்தப் பாடல்.
ஒன்றில் சந்தன வாசனை,
ஒன்றில் ஜவ்வாது வாசனை
என்று தலைவர் தலை சுமந்து வரும் விறகுகள் போலே பாடல் வரிகளும், ஒன்றில் சிந்தனை வாசனை,ஒன்றில்
தத்துவ வாசனையென்று
மணக்கின்றன.
"பத்துப் பிள்ளை பெத்த
பின்னும் எட்டு மாசமா?
இந்தப் பாவி மகளுக்கெந்த
நாளும் கர்ப்ப வேஷமா?"
-பிரசவ வலி காணுதலே தொழிலெனக் கொண்டோர்..
குறும்பான இந்தப் பாடல் வரிகள் தரும் ரகசிய வலியையும் தாங்கித்தான்
தீர வேண்டும்.
தன்னுடன் ஆடும் இளமங்கை, பாடல் முடியும் தருவாயில் கை
பிடித்திழுத்து காதலுங்
காமமுமாய்ப் பார்க்க...
பாடல்வரிகளிலிருந்து கவனம்
மாறாமல், "எனக்கு மணமாகி
இரண்டு மனைவியருண்டு.
என்னை விட்டு விடம்மா" என
சைகையிலேயே நடிகர் திலகம்
சொல்வாரே..
அதற்காகவே இந்தப்பாடலை
ஆயிரம் முறை காண வேண்டும்.
இந்தப் பாடல் -ஆணி.
நம் இதயம்- பசுமரம்.
https://youtu.be/3Fu0546rs1g
http://i160.photobucket.com/albums/t...psfgfscnf1.jpg
ஒப்பீடு என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் அது பெரும்பாலும் சார்பு நிலைக் கோட்பாட்டுக்குள் சென்று விடும் வாய்ப்பு மிகவும் அதிகம். அதுவும் இந்தக் கணிப்பினைப் பார்த்த பின் என்னுடைய நிலைப்பாடு இன்னும் நியாயமாகிறது. இவர்கள் இந்தக் கருத்துக்கணிப்பிற்கு எடுத்துக்கொண்ட அளவுகோல் என்ன, அல்லது கேட்கப்பட்ட கேள்விகள் என்ன போன்ற விவரங்கள் முழுதும் தெரிய வேண்டும். நடிகர் திலகத்தின் சதவீதத்திற்கும் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் கிடைத்துள்ள சதவீதம் இவ்வளவு அதிக வித்தியாசம் இருக்க வாய்ப்பே இல்லை. அதிக பட்சம் ஒன்று அல்லது இரண்டு விழுக்காடுகளுக்கு மேல் இருக்கக்கூடிய வாய்ப்பு என்னுடைய தனிப்பட்ட கருத்தின்படி இல்லை. 50-50 தான் உண்மையான அந்தக் கால நிலவரம். இது ஒன்று அல்லது இரண்டு விழுக்காடுகள் மட்டுமே FLUCTUATION எனப்படும் ஊசலாட்டத்தில் இருந்திருக்க முடியும். ஒரேயடியாக 14 விழுக்காடு வித்தியாசம் என்றால் மனம் ஏற்க மறுக்கிறது. அப்படியே அதிகம் என்றால் கூட அது 48-52 அல்லது 47-53 என்ற அளவிற்கு மேல் இருக்க முடியாது. அது மட்டுமல்லாமல் இது 1980வரை என்பதையும் ஏற்க முடியாது. இப்போது இருக்கக்கூடிய இளைஞர்கள் 1980ல் பிறந்திருக்கக்கூட மாட்டார்கள். அப்படிப்பார்த்தால் 1980ல் சிவாஜி-எம்.ஜி.ஆர். அபிமானத்தைப் பற்றிக் கருத்துக் கூற வேண்டுமானால் 1980ல் சுமார் 20 வயதாவது நிரம்பியவர்களால் தான் தெளிவாக சொல்ல முடியும்.
அப்படி இருக்கும் போது 1980 கால ஹீரோக்களைப் பற்றிச் சொல்லியிருக்கக் கூடியவர்கள் 1960ல் அல்லது அதற்கு முன்போ பின்போ தான் பிறந்திருக்க முடியும். அந்த பிராயத்தில் இருவருக்குமே ரசிகர்களின் அளவு மிகத் துல்லியமாக யூகிக்க வேண்டுமென்றால் 50-50 அளவில் தான் இருக்க வேண்டும்.
மணிமண்டபம் அரசு செலவில் கட்டக் கூடாது என்ற விவாதத்திற்கும் இந்த கருத்துக்கணிப்பிற்கும் ஏனோ மனம் முடிச்சுப் போட்டுப் பார்க்கிறது. அப்படி இருக்கக் கூடாது என மனம் விரும்புகிறது.
இதில் இன்னோர் விஷயமும் இருக்கிறது. சிவாஜி, எம்.ஜி.ஆர். இவர்களுக்கு சமமாக மூவேந்தராக ஜெமினியும் சேர்த்து தமிழ்த்திரையுலக ரசிகர்கள் கொண்டாடினர் என பல பத்திரிகைகள் எழூதின. அப்படியென்றால் அந்தக் காலத்தில் ஜெமினிக்கு அபிமானம் மிகவும் குறைவு 9 சதம் என கருத்துக் கணிப்புக் கூறுகிறதே.
இதில் எது உண்மை. ஜெமினி மூவேந்தரில் ஒருவராக விளங்கினார் என்பதா அல்லது அப்படியில்லை, சிவாஜி-எம்.ஜி.ஆர். இருவர் மட்டுமே கோலோச்சினர் என்பது உண்மையா என்பது தெரியவில்லை.
நண்பர்களே இது ஒரு தனிப்பட்ட எண்ணமாகத்தான் கூறுகிறேன். எந்த ஒரு கருத்து மோதலுக்காகவும் அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
வாசு சார்
ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு கனவுப்படம், ஒவ்வொரு கதாநாயகன் அல்லது கதாநாயகிக்கு ஒரு கனவுப்படம் என்று, திரையுலகைப்பொறுத்த மட்டில் ஒவ்வொரு பாலருக்கும் ஒரு கனவுப்படம் ஒன்று உண்டு. அப்படி ஒவ்வொரு ரசிகருக்கும் ஒரு கனவுப்படம் உண்டென்று ஒரு நியதி வகுத்தால் அதில் என்னுடைய கனவுப்படமாக நான் நினைத்துச் சுட்டிச்சொல்லக் கூடியது
சுமதி என் சுந்தரி
திரைக்காவியமே..
எண்ணற்ற முறைகள், சில நூறுகளைத் தொட்டிருக்கும் அளவிற்கு இப்படத்தைப் பார்த்து அதில் மூழ்கிப் போனவன் என்ற வகையில் தங்களுடைய 8000வது பதிவினை எனக்காக தாங்கள் வழங்கியதாகவே நான் நினைக்கிறேன்.
தங்களுடைய அட்டகாசமான விளக்கவுரை இப்படத்தின் மேல் மக்கள் ஏன் இவ்வளவு வெறித்தனமான மோகம் கொண்டிருக்கிறார்கள் என்பதை மிகத்துல்லியமாக எடுத்துரைத்துள்ளது.
தங்களுக்கு என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
EXCELLENT WORK S SUNDARI PHOTOGRAPHS AND ALL YOUR 8000 PLUS POSTINGS
VASU SIR No words to describe your hardwork continue and all the best
nlessings
ramajayam
Dear Vasudevan Sir,
CONGRATULATIONS FOR AMAZING 8000 POSTS and Amazing write-up on "Pottu vaitha mugamo" song, especially about various signature styles of NT.
Hats off!
'சுமதி என் சுந்தரி' படத்தின் 'பொட்டு வைத்த முகமோ' பாடல் பதிவைப் படித்துப் பாராட்டிய திரு. கோடல் ஸ்டார், வாசுதேவன் சார், கோபால் சார், சந்திரசேகரன் சார், ராதாகிருஷ்ணன் சார், பார்த்தசாரதி சார், சிவாஜி தாசன் சார், செந்தில்வேல் சிவராஜ் சார், முத்தையன் அம்மு சார், அருமைக் கவிஞர் ஆதவன் ரவி சார், ரவிகிரண் சூர்யா சார், ராகவேந்திரன் சார், பெரியவர் ராமஜெயம் சார், தம்பி ராகுல்ராம், மற்றும் 'லைக்'குகள் அளித்த பரணி சார், சுந்தரபாண்டியன் சார், சைலேஷ்பாசு சார் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முத்தையன் அம்மு சார்,
தங்களது பாராட்டுக்கு நன்றி. அது போலவே படத்தின் ஸ்டில்களை எடுத்து அவற்றிலிருந்து தேவையானவற்றை செலெக்ஷன் செய்து பின் ஒவ்வொன்றாக tiny pic-ல் அப்லோட் செய்வதும் சாதாரண காரியமல்ல. பல நாட்களில் இரவெல்லாம் தூங்காமல் நீங்கள் நடிகர் திலகத்தின் படஸ்டில்களை தரவேற்றுவதை நான் அடிக்கடி கண்டதுண்டு. மிகவும் கஷ்டமான வேலை. நீங்கள் அதை எங்களுக்காகச் செய்யும் போது மனம் மகிழ்கிறது. தங்கள் உடல்நலனையும் பேணுங்கள். தூக்கம் ரொம்ப முக்கியம். அதைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். எப்போதுமே தங்களது ரசனையான நடிகர் திலகத்தின் ஸ்டில்களை ரசிப்பவர்கள் மத்தியில் நானும் ஒருவன்.நன்றி!
சிவராஜ் சார்,
தாங்கள் அளித்த யுவராஜாவின் பச்சை,ரோஸ் நிறங்களில் மாறும் gif ஸ்டில்லை அப்படியே அள்ளிக் கொண்டேன். நன்றிகள்.
ராகுல்,
வாருங்கள்...வந்து எழுதுங்கள்.
ராகவேந்திரன் சார்,
மிக்க நன்றி! பாராட்டு ஸ்டில் அருமை.சுமதி என் சுந்தரி தங்களுடைய பேவரைட் என்று அனைவருக்குமே தெரியும். உங்களைப் போலவே என்னுடைய பள்ளித் தோழன் வேல்முருகன் என்று பெயர் அவன் சுமதி என் சுந்தரி படத்தை எத்தனை முறை பார்த்தான் என்று கணக்கே இல்லை. அவனாலேயே நான் பலமுறை இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். அவன் எப்படியும் 300 தடவைகளாவது பார்த்திருப்பான். அவன் வாயில் கணேசன்-லலிதா என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவுமே ஒலிக்காது. அந்த அளவிற்கு நடிகர் திலகம் ஜெயலலிதா ஜோடி என்றால் பைத்தியம். படத்தின் வசனக் காட்சிகளின் ஒவ்வொரு எழுத்தையும் மனப்பாடமாகச் சொல்வான். ஒரு நாளைக்கு எத்தனை காட்சிகளோ அத்தனை காட்சிகளையும் விடாமல் பார்ப்பான். இந்த ஊர் அந்த ஊர் என்ற கணக்கெல்லாம் இல்லை. தமிழ் நாட்டின் எந்த மூலையில் இந்தப் படத்தைப் போட்டாலும் அங்கு அவனைப் பார்க்கலாம். அவ்வளவு வெறித்தனம் இந்தப் படத்தின் மேல் அவனுக்கு. உங்கள் பதிவைப் பார்த்ததும் எனக்கு அவன் நினைவு வந்து விட்டது.
டியர் வாசு சார்,
எவரும் எட்டாத தரத்தில் எட்டாயிரம் பதிவுகளைத்தந்த உங்களுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.
அதில் மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக சுமதி என் சுந்தரி பாடலைப் பதித்து எட்டாயிரம் அடிகள் உயரத்தில் தூக்கி நிறுத்தி விட்டீர்கள்.
எப்படியாவது பதிவுகள் இட்டு எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்பது ஒருவகை. எத்தனை பதிவுகள் இட்டோம் என்பதைவிட, எப்படிப்பட்ட பதிவுகள் இட்டோம் என்பது இரண்டாவது வகை இந்த இரண்டாவது வகையில் கூட அதிக பதிவுகள் இட்டு சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு நீங்களே சான்று.
ஒவ்வொரு பதிவுக்கும்தான் எப்படிப்பட்ட உழைப்பு. அப்பப்பா மலைக்க வைக்கிறது. எந்த ஒரு சீரீஸை எடுத்துக்கொண்டாலும் அதை சிறப்பாக கொண்டுவர வேண்டும் என்பதில் உங்கள் மெனக்கெடல் அற்புதம். பதிவர் என்றால் இப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் நீங்கள். உங்கள் துளிவிஷம் பதிவை 'பாட்ஷா' பார்த்திருந்தால் "இந்த ஒரு பதிவு நூறு பதிவு மாதிரி ஹா.ஹா.ஹா." என்று பாராட்டியிருப்பார்.
எட்டாயிரத்தில்தான் எத்தனை எத்தனை அதிசயப்பதிவுகள். மக்களே மறந்துபோன பழைய படங்கள், பழைய பாடல்கள், பழைய (வெளிச்சத்துக்கு வராத) நடிகர் நடிகைகள், பாடகர் பாடகிகள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள். நினைத்தால் நிச்சயம் தலைசுற்றும். அத்தனை உழைப்பும் இந்த ஒல்லியான உடம்புக்குள்ளிருந்து.
பாலா நடிகர்திலகத்துக்காக பாடிய பாடல்களை ஒதுக்கி வைத்திருந்தபோதே ஒரு எண்ணம், ஏதோ ஒரு காரணத்துக்காக என்று நினைத்தேன். ஆனால் எட்டாயிரம் என்ற லேண்ட் மார்க்குக்காக என்று நினைக்கவில்லை. ஒளித்துவைத்து சமயம் பார்த்து பிரம்மாண்டமாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
பதிவு என்றால் தேடிப்பிடித்து ஏதாவது குறைசொல்ல வேண்டுமல்லவா?. அதுதானே மனித இயல்பு. அந்த நோக்கில் தேடியதில் என் காதலன் சி.வி.ராஜேந்திரனையும், என் மாமா ஒளிப்பதிவாளர் தம்புவையும் குறிப்பிடவில்லை என்பதைத்தவிர வேறு குறைகளையே காணோம்.
'இரண்டில் ஒன்று' பாடலை ஒன்பதாயிரம் என்ற லேண்ட்மார்க்குக்காக ஒளித்து வைக்காமல் உடனே தாருங்கள்.
சலியாத உழைப்புக்கு பாராட்டுக்கள்,
எங்களை பரவசத்தில் ஆழ்த்தியதற்கு நன்றிகள்,
மேலும் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்.
வாசுவின் பத்தாயிரமாவது பதிவுக்கு எப்படி வாழ்த்துச்சொல்லலாம் என்ற சிந்தனையுடன்.... உங்கள் ஆதி.
தந்தியின் கணக்குப்படி மக்கள் விரும்பிய சிறந்த நடிகர் இப்படி படித்திருக்கவேண்டும் - மக்கள் திலகம் அபிமான நடிகர் என்று உள்ள 14% அதிக சதவிகிதம் ஞாயப்படி மக்கள் விரும்பிய சிறந்த நடிகர் என்பதில் நடிகர் திலகம் அவர்கள் 41% உடன் 14% கூட்டி 55% என்பதே சரியான ஒரு சதவிகிதமாகும் என்பது எனது கருத்து காரணம் 1991 குமுதம் கருத்துகநிப்பும் அதுவே !
நடிப்பு என்பது கலையை சார்ந்தது - அபிமானம் என்பது அரசியலும் சார்ந்துள்ளது காரணம் திரு mgr அவர்கள் நடிகர் மட்டும் அல்ல..நாட்டை ஆண்ட முதல்வர் அவர் கட்சி இன்றும் ஆண்டுகொண்டிருக்கிறது. ஆகவே அபிமானம் என்பது வரைதான் செய்யும் அதிக சதவிகிதம் அரசியல் சார்ந்து அதனால் அதிகரித்துள்ள ஒரு விஷயம் கூட என்பது மறுக்கமுடியாத விஷயம்.
தந்தி கூரியிருக்கவேண்டியது மக்கள் தலைவராக அபிமானத்துடன் ஏற்றுகொண்ட நடிகர் யார் என்பதே சரியான கேள்வியாகும்.
சிறந்த நடிகர் என்று வரும்போது உலகம் அறிந்த ஏற்றுக்கொண்ட உண்மை...ஒரே ஒரு நடிகர் தான் என்பது ..அது நடிகர் திலகம் அவர்கள் தான் என்பது...இதற்க்கு ஒரு சதவிகிதமும் எவரும் கணிக்க முடியாதது !
எதற்கு இப்படி எல்லாம் இப்போது செய்கிறார்களோ தெரியவில்லை...சிலை...மணிமண்டபம்....என்ன நடக்குமோ அதுதான் நடக்கும்...நடக்கக்கூடாதது நடந்தால் ....நடக்ககூடாததேல்லாம் நடக்கவும் செய்யும் !
இது எனது பார்வையில் ...விவாதத்திற்கு அல்ல !
Rks
A writeup on Pazhani in The Tamil Hindu on the occasion of 50 years.
பழனி (1965)
விவசாயம் அழிந்து கொண்டிருக்கும் காலம் இது. விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழிலகங்களை அமைக்க விவசாய நிலங்களையே விழுங்குகின்றன. இந்த நிகழ்கால அவலத்தைச் சித்தரிக்கும் திரைப்படங்கள் போதுமான அளவுக்கு சமீபகாலத் தமிழ் சினிமாவில் வெளிவராதது பெரும் சோகம்.
விவசாயியாக நடித்தால் எந்த சாகசங்களையும் செய்ய முடியாது என இன்றைய நாயகர்கள் நினைக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆரும் சிவாஜியும் சூப்பர் ஸ்டார்களாக இருந்த காலத்தில் பாமர விவசாயிகளாக நடிக்கத் தயங்கவில்லை. சிவாஜி எளிய விவசாயியாக, கள்ளம் கபடமற்ற அப்பாவியாக நடித்த பல படங்களில் அவருக்கு மகுடமாக அமைந்த படம் 1965-ல் வெளியான ‘பழனி’.
தியாக தீபம்
கிராமத்து விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நகரத்தில் வாழ்பவன் சோற்றில் கை வைக்க முடியும் என்று வழக்கமாகச் சொல்வதுண்டு. அப்படிப்பட்ட விவசாயியும் விவசாயம் சார்ந்த கிராம வாழ்க்கையும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது பழனி படத்தின் கதை.
மனைவியை இழந்த கிராமத்து விவசாயி பழனி (சிவாஜி). இவருக்கு வேலு ( ராம்), ராஜூ (எஸ்.எஸ். ரேஜேந்திரன்), முத்து (முத்துராமன்) ஆகிய மூன்று தம்பிகள். இவர்களுடன் நிராதரவான அவர்களது அக்காள் மகள் காவேரியும் (தேவிகா) வசிக்கிறார். கிராமத்துப் பண்ணையார் சொக்கலிங்கத்தின் ( பாலையா) நிலத்தில் குத்தகை விவசாயம் செய்து, ஒற்றுமைக்குப் பேர்போன அண்ணன் தம்பிகளாக வசித்துவருகிறார்கள். இதே கிராமத்தைச் சேர்ந்த எமிலி (புஷ்பலதா) அருகிலுள்ள மதுரை நகருக்கு மிதிவண்டியில் சென்று கல்லூரியில் படித்துவருகிறாள். பழனியின் குடும்பத்தினருடன் நட்புடன் பழகிவருகிறாள். பழனியின் மூத்த தம்பியான வேலுவின் மனைவி நாகம்மா கூட்டுக் குடும்பத்தில் பிடிப்பில்லாமல் இருக்கிறாள். சமயம் பார்த்து சண்டையிட்டுத் தன் கணவனைத் தனியே பிரித்துச் சென்று தனிக்குடித்தனம் நடத்துகிறாள். பாம்பு கடித்து வேலு இறந்துவிட நாகம்மா கைம்பெண்ணாகிறாள்.
ஏழை விவசாயத் தொழிலாளர்களை வஞ்சிப்பதையே வாழ்க்கையாகக் கொண்ட பண்ணையார், எமிலியைத் தனது வீட்டுக்கு அழைத்துவந்து தவறாக நடந்துகொள்ள முயற்சிக்கிறார். இதனால் தனது தாயாருடன் கிராமத்தை விட்டுப் புறப்பட்டு சென்னை நகருக்குச் சென்றுவிடுகிறாள் எமிலி.
இதற்கிடையில் வினோபா பாவேவின் பூமி தான இயக்கம் பழனியின் கிராமத்துக்கு வருகிறது. பழனியின் விவசாய ஈடுபாட்டைக் கண்டு அவருக்கு ஐந்து ஏக்கர் நிலத்தைப் பண்ணையார் சொக்கலிங்கத்திடமிருந்து தானமாகப் பெற்றுத்தருகிறது. ஆனால், அது கடும் பாறை நிலம். அதைச் சீர்திருத்தி விளைநிலமாக மாற்ற 2,000 ரூபாயை பழனிக்குக் கடனாகத் தருகிறார் பண்ணையார். ஆனால், பழனி ரூ. 12,000 கடன் வாங்கியதாக ஊரை நம்ப வைத்து நிலத்தையும் பிடுங்கிக்கொள்கிறார். அண்ணனின் ஏமாளித்தனத்தைக் கண்டு குமுறும் தம்பிகள் ராஜு, முத்து இருவரும் அவரைப் பிரிந்து சென்னைக்குச் செல்கிறார்கள். அங்கே எமிலி அவர்களுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்கிறாள். ஆனால், நகர வாழ்க்கை ராஜூவைச் சிறையில் தள்ளுகிறது. தம்பிகளைக் காண சென்னை வரும் பழனி ராஜூவின் நிலையை எண்ணித் துடித்துப்போகிறார்.
கிராமத்திலோ பண்ணையாரின் கொடுமைகள் உச்சத்தை எட்டுகின்றன. தன் இச்சைக்கு இணங்காத நாகம்மாள் மீது அவர் இழிபெயர் சுமத்த, சாதுவாக இருந்த பழனி கொதித்தெழுகிறார். சிறையிலிருந்து விடுதலையாகி வரும் ராஜூ நடந்ததை அறிந்து சொக்கலிங்கத்தைத் தாக்குவதற்காகத் துரத்த, அவருடன் மொத்த கிராமமும் சேர்ந்துகொள்கிறது. உயிருக்கு பயந்து ஊர்க்கோயிலில் ஓடி ஒளியும் சொக்கலிங்கத்தை பழனி காப்பாற்றுகிறார். பழனியின் நல்ல குணத்தால் வெட்கித் தலைகுனியும் பண்ணையார் தான் செய்த குற்றங்களை ஏற்றுக்கொண்டு போலீஸில் சரணடைகிறார்.
இறுதியில் பண்ணையாரின் கைவசம் இருந்த பெரும் பகுதி நிலம் அவருடையது அல்ல என்பது தெரியவர, நிலத்தைக் கூட்டுறவுச் சங்கம் எடுத்துக்கொண்டு விவசாயிகளுக்குப் பிரித்துத் தருகிறது. மீண்டும் விவசாயம் செழிக்கிறது. அறுவடையின் முழுப் பலனும் உழுத விவசாயிக்கே கிடைக்கின்றன. பழனியும் சகோதரர்களும் பாசத்துடனும் ஒற்றுமையுடனும் வசிக்கிறார்கள்.
ஒரு பொங்கல் இரு திலகங்கள்
1965-ல் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியானது ‘எங்க வீட்டுப் பிள்ளை’. அதே நாளில் சிவாஜி நடிப்பில் வெளியானது ‘பழனி’. இரண்டு படங்களுமே வெள்ளிவிழா கொண்டாடிய படங்கள். ஏ. பீம்சிங் இயக்கம், சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, சரோஜாதேவி நடிப்பு, கண்ணதாசனின் பாடல்கள், விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை என்கிற வலுவான கூட்டணியில் வெளியான பல படங்கள் வெற்றிபெற்றன.
ஆனால், பழனி படத்தில் சிவாஜியுடன் எஸ்.எஸ். ராஜேந்திரன், ஆர். முத்துராமன், ஸ்ரீ ராம், தேவிகா, புஷ்பலதா ஆகியோர் இணைந்தனர். வில்லன்களாக டி.எஸ். பாலைய்யாவும் எம்.ஆர். ராதாவும் நடித்தனர். வில்லன்களோடு வளையவந்தாலும் நியாயத்தின் பக்கம் நிற்கும் நகைச்சுவையாளராக நாகேஷ் நடித்திருந்தார். சின்னக் கணக்குப்பிள்ளை சந்தானமாக நாகேஷ் செய்யும் கதா கலாட்சேபம் படத்தில் சிரிப்பு மழையைப் பொழிந்து, சிந்திக்கவும் வைத்தது.
விவசாயத் தொழிலின் மேன்மையையும் சகோதர பாசத்தின் உன்னதத்தையும் உயர்வாகப் பேசிய இந்தப் படத்தில் தமிழ்க் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாக விளங்கிய கூட்டுக் குடும்ப முறையையும் முன்னிறுத்தியது பழனி படத்தின் கதையை எழுதியவர் ஜி.வி. ஐயர். படத்துக்குத் திரைக்கதை எழுதி, இயக்கியவர் ‘குடும்பப் படங்களின் பிதாமகன்’ பீம்சிங். தமிழ் கிராமியத்தைக் கண்முன் நிறுத்திய வசனங்களை எழுதியவர் எம்.எஸ். சோமசுந்தரம்.
விருதும் தாக்கமும்
படத்தில் நடித்த அனைவருமே குறைவான நாடகத்தனத்துடன் நடித்திருந்த படம் இது. தனது குடும்பத்தின் நலனுக்காகத் தியாக தீபமாக திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் அண்ணன் பழனியாக சிவாஜியின் நடிப்பும், தீமையை எதிர்க்கும் அவரது தம்பி ராஜூவாக எஸ்.எஸ். ராஜேந்திரனின் நடிப்பும் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் பாரட்டப்பட்டன.
சிறந்த படத்துக்கான நற்சான்றிதழை (தேசிய விருது) பழனி படம் வென்றது. படிக்காதவர்கள் நகரத்துக்கு வந்தால் பிழைக்க முடியாது என்ற எண்ணத்தை எடுத்துக் காட்டியது பிற்போக்கான கருத்தென்று விமர்சனங்களில் சுட்டிக் காட்டப்பட்டது. அதேபோல் கிராமத்து வாழ்க்கையைப் பற்றிய சித்தரிப்புகளில் வில்லன்கள் பெண் இச்சையோடும், ஏமாற்றுவதை மட்டுமே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருப்பார்கள் என்பதும் வழக்கமான சித்தரிப்பாக இருந்ததை மறுக்க முடியாது.
மறக்க முடியாத பாடல்கள்
இந்தப் படத்தில் கிராமத்து வாழ்க்கையைப் பாடல் காட்சிகள் வழியே சித்தரித்த விதம் இயக்குநர் பீம்சிங்குக்கே உரிய தனித்துவம். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் ‘ஆறோடும் மண்ணில் இன்றும் நீரோடும்’ பாடல் இன்றும் ஏர் உழும் காட்சியையும் நடவு நடும் காட்சியையும் நம் கண்முன் கொண்டுவரும். ஹரி காம்போதி ராகத்தில் சாயலில் அமைந்த இந்தத் தெம்மாங்குப் பாடல் மட்டுமல்ல, படத்தின் அத்தனை பாடல்களும் மறக்க முடியாத கதைப் பாடல்களாக அமைந்தன. இன்றைய சூழ்நிலையில் மறுஆக்கம் செய்யப்பட வேண்டிய படம் பழனி என்பதில் ஐயமில்லை.
பார்த்ததில் பிடித்தது -52
தெனாலிராமன் , 1956 ல் தமிழ் , தெலுங்கு இரு மொழியிலும் ஒரே நேரத்தில் உருவான திரைப்படம் , தமிழில் நடிகர்திலகமும் , தெலுங்கு பதிப்பில் நாகேஸ்வர ராவ் தெனாலிரமனாகவும் நடிக்க, இரு மொழிகளிலும் மன்னராக NTR .
நம்மில் பலருக்கு தெனாலிராமன் கதைகள் தெரிந்து இருக்கும் , ஆனால் அதே சமயம் தெனலிராமனின் ஆரம்பகால வாழ்கை தெரியாமல் இருக்கும் , இந்த திரைபடம் தெனாலிராமன் ஆரம்பகாலத்தில் பட்ட பொருளாதார நெருக்கடி , காளிமாதா அருளில் அவருக்கு வந்த வாழ்வை பற்றி அழகாக விவரிக்க படுகிறது . படத்துக்கு , தெனலிராமனின் துடுக்கு ஆதாரமாக விளங்குகிறது இந்த முதல் 30 நிமிடங்கள்
தெனாலிராமன் கதைகள் மட்டுமே கேட்டு வளந்தவர்களுக்கு இந்த 30 நிமிடங்கள் கொஞ்சம் மெதுவாக தான் நகரும் , ஆனால் இதை கடந்து வந்தால் படம் முழுவதும் சிரிப்பு , சிலிர்ப்பு , மதியுகம் அனைத்தும் கலந்த அழகான பூமாலை
வாழ்க்கையில் சோதனையை , எப்படி அணுக வேண்டும் என்று அழகாக விவரித்து இருப்பார் இயக்குனர் BS ரங்கா .
17 யானைகளை முன்று பேருக்கு பங்கு போடும் காட்சி , யானை கால்களால் நசுக்க படும் பொது சாதுர்யமாக தப்பித்து கொள்ளும் காட்சி , கிளைமாக்ஸ் காட்சி , நான் மிகவும் ரசித்த காட்சிகள்
தெனலிராமனாக சிவாஜி கணேசன் : பராசக்தி , மனோகரா போன்ற படங்களில் angry young man , திரும்பிப்பார் , நானே ராஜா படத்தில் வில்லன் என்று படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் நடிகர் திலகம் , நகைச்சுவை படங்களில் அழகாக கலக்கி இருப்பார் ,
உதாரணம் : கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி , சபாஷ் மீனா , கலாட்ட கல்யாணம்
ஆனால் தெனாலிராமன் completely different ,எப்படி என்றால் , தெனாலிராமன் என்பவர் புத்திசாலி , சவால்களை எதிர்கொண்டு ஜெயித்து விடுவர் , அதே சமயம் முகத்தில் அப்பாவி தோற்றம் இருக்க வேண்டும் , மேலே சொன்ன படங்களில் situation காமெடி என்றால் , இந்த படத்தில் solutions மட்டுமே காமெடி , ஆனால் வர போகும் ஆபத்து மிகவும் பெரியது , இந்த மாதிரி சத்தமே இல்லாமல் அழகாக பொரிந்து விடுவார் நடிகர் திலகம் ,
நாகையையும் -சிவாஜியும் கலக்கும் நாட்டு ஜனங்க பாடல் இன்றும் பொருந்தும் , அதில் அவர் தோற்றம் அசல் மாறுவேடம் - அடையாளம் கண்டுபிடிப்பது மிகுவ்ம் கடிதம்
காளி அறிவு , செல்வம் இரண்டையும் கொடுத்து எதை வேண்டுமோ எடுத்துகொள் என்று சொல்லும் பொது இரண்டையும் எடுத்து கொண்டு கண்களில் ஒரு twinkle உடன் காரணம் சொல்லும் பொது அவர் மீது ஈர்ப்பு அதிகம் ஆகிறது
மலையாள ஜோதிடராக மலையாளம் கலந்த தமிழில் சம்சாரிக்கும் பொது , அதே காட்சியில் அவர் சிகைஅலங்காரம், மீசை அனைத்தும் பொருத்தமாக அமைந்து இருப்பதில் அவர் எடுத்து கொண்ட அக்கறை அழகாக தெரிகிறது . பானுமதி உடன் அவர் உரையாடல் கண்ணதாசன் அவர்களின் trademark வசனங்கள் இனிமையான தமிழ்
இந்த படத்தின் அடுத்த ஆச்சர்யம் நம்பியார்
இவர் தான் வில்லன் என்று நினைத்து பார்க்கும் பொது , இவர் செய்கையும் அதை உறுதி படுத்த , அங்கே இருக்கும் ஒரு திருப்பம் , நம் எதிர்பாராத ஒன்று ,அவர் சாந்தமான முகம் அவர் மீது சந்தேகத்தை அதிக படுத்தும் ஒரு factor
பானுமதி :
traitor பாத்திரத்தில் அழகாக பொருந்துகிறார்
NTR :
படத்தில் இவர் பாத்திரம் வரும் கொஞ்ச நேரத்தில் இவர் தோற்றத்தில் நம்மளை இவர் ராஜா என்றே தோன்ற வைத்து விடுகிறார்
இந்த படம் இன்னும் அதிகமாக கொண்டாட படவில்லை என்றே தோன்றுகிறது
ஆதிராம் சார்!
தங்கள் மனமுவந்த பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி! தலைவர் பாடல் ஏன் தாமதமானது என்று அழகாகக் கண்டு பிடித்து விட்டீர்களே!
//பதிவு என்றால் தேடிப்பிடித்து ஏதாவது குறைசொல்ல வேண்டுமல்லவா?. அதுதானே மனித இயல்பு. அந்த நோக்கில் தேடியதில் என் காதலன் சி.வி.ராஜேந்திரனையும், என் மாமா ஒளிப்பதிவாளர் தம்புவையும் குறிப்பிடவில்லை என்பதைத்தவிர வேறு குறைகளையே காணோம்.//
கண்டிப்பாக சார். நிச்சயம் அது ஒரு குறைதான். பாலா தொடரில் ஒளிப்பதிவாளர்களையும், இயக்குனர்களையும், இதர டெக்னீஷியன்களையும் பெரும்பாலும் குறிப்பிடாமல் இருந்தது கிடையாது. இதில் குறிப்பிடவில்லை. காரணம் இரண்டு.
ஒன்று
நம் ஸ்டைல் சக்கரவர்த்தியின் அங்க அசைவுகளிலேயே மைண்ட் செட் ஆகி இருந்தது. வேறு எதையுமே நினைக்கத் தோன்றவில்லை. எத்தனை முறை பார்த்தாலும் அவரது ஸ்டைல் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது.
இரண்டு
நம் அனைவருக்கும் 'சுமதி என் சுந்தரி' பற்றி புள்ளி விவரமாகத் தெரியும். உங்களுக்கு மட்டுமல்ல... நம் ஒட்டுமொத்த நடிகர் திலகம் ரசிகர்களின் 'டார்லிங்' சி.வி.ஆர் தானே! ஒளிப்பதிவு இயக்குனர் தம்பு என்பதும் அனைவரும் அறிந்ததே.
இப்போது வட்டியும் முதலுமாகச் சேர்த்து டைட்டில் கார்டையே போட்டால் போயிற்று மூலவரையும் சேர்த்து.
அப்புறம் இன்னொரு சின்ன உரிமை வருத்தம். திடீரென்று அடிக்கடி சொல்லாமல் கொள்ளாமல் காணமல் போய் விடுகிறீர்கள். அலுவலகப் பணி அதிகமோ? பதிவுகளுக்கு தோதான துணைப் பதிவுகளையும் இணைப் பதிவுகளையும் சப்போர்ட்டாக அளிக்க உங்களை விட்டால் வேறு யார்? அதனால் நிறைய உங்களையும், நீங்கள் அளிக்கும் அற்புதமான விஷயங்களையும் மிஸ் செய்கிறோம். பாகம் 4 இல் நிறைய பதிவுகளுக்கு உங்கள் பின்னூட்டப் பதிவுகள் இல்லாமல் முழுமை பெறவில்லை. நல்லது கெட்டது என்று நடுநிலைமையுடன் எல்லாவற்றையும் சுட்டிக் காட்டுவதில் வல்லவர் தாங்கள். அதனால் திரியில் தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன்.
அதே போல 'உங்கள் ஆதி'யை அதே உரிமையுடன் ஆனந்தமாய் அனுபவித்தேன். நன்றி!
http://i59.tinypic.com/2mrbkw1.jpg
http://i61.tinypic.com/11vpqfp.jpg
http://i59.tinypic.com/2cd7ehw.jpg
ராகுல்,
எனக்கு மிக மிகப் பிடித்த 'தெனாலி ராமன்' படத்தைப் பற்றி எழுதி சந்தோஷப் படுத்தியுள்ளீர்கள். இந்தப் படத்தைப் பற்றி காட்சி காட்சியாக எழுத வேண்டும் என்று ரொம்ப நாட்களாக ஆசை. என் உயிரினில் கலந்த படம் என்றும் கூட கூறலாம். பானுமதியை மிரட்டும் காட்சி ஒன்று போதும். இந்தப் படத்தில் தலைவர் ஆக்டிங் பற்றி துண்டு துண்டாக அங்கங்கே எழுதியுள்ளேன். மனம் நிறைவு பெறவில்லை. கண்டிப்பாக எழுத வேண்டும்.
சுருக்கமாக அழகாக பதிவு செய்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள். ஆனால் சமுத்திரத்தை பானைக்குள் அடைக்க முடியாதல்லவா? மதியூகி, விதூஷுகன், தேசப் பற்றாளன், குடும்பத் தலைவன், ராயர் நேசன், கலாட்டா விற்பன்னன் என்று ஏகப்பட்ட முகங்கள் தெனாலிராமனுக்கு. அதைவிட அதிக முகங்கள் நம் தானைத் தலைவருக்கு. அறிவு ஒன்றையே பிரதானமாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'அறிவாளி' நடித்த காவியப் படம் இது. 1956-ல் வெளிவந்த படம். தலைவருக்கு வயது 28 தான். மிகச் சிறிய வயது. ஆனால் தெனாலிராமன் கதாபாத்திரம் வலியது. சிறிது தப்பினாலும் வேறு மாதிரி நகைச்சுவை கேலிக் கூத்து ஆகிவிடும். நகைச்சுவைக்கு நகைச்சுவை, சதிக்கு சதி, போட்டிக்குப் போட்டி, அறிவுக்கு அறிவு, சமயோசிதம் என்று ஒவ்வொன்றையும் கவனமாகக் கையாள வேண்டும். அந்த இளம் வயதில் நம் நடிகர் திலகக் குருவி இந்த பனங்காய் ரோலை அப்படியே தன்னந்தனியே அலட்சியமாய் சுமந்து பறந்தது. இத்தனைக்கும் அவரது 29 ஆவது படமே. 2000 படங்களில் நடித்து முடித்தது போன்ற அனுபவத்தை இந்த ஒரு படத்தில் அவரிடம் நாம் காணலாம். தெரியாதவர்கள் ஒரு முறை பார்த்தாலே நடிப்பின் நுணுக்கங்களை, பரிணாமங்களைக் கற்றுக் கொள்ளலாம். எந்த நடிப்புப் பயிற்சிக் கல்லூரியும் தேவை இல்லை. 'தெனாலி ராமன்' ஒன்று போதும்.
அன்பு நண்பர் நெய்வேலி வாசுதேவன் சார் ,
தாங்கள் 8000 பதிவுகள் கடந்தமைக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!
office work மற்றும் சொந்த வேலைகளினால் தாமதமான வாழ்த்துக்கு sorry sir!
சுமதி என் சுந்தரி உங்கள் எழுத்து நடை as usual மிகவும் பிரமாதம். உங்கள் எழுத்துக்கள் யாருக்கு தான் பிடிக்காமல் போகும்? keep it up sir!
அந்த படத்தில் வாணிஸ்ரீ அல்லது காஞ்சனா நடித்திருந்து அந்த பாடல் காட்சியை கற்பனை செய்து பாருங்கள் !
கற்பனை செய்து பார்த்தாலே கற்கண்டாய் இனிக்கிறதே!
நன்றி வாசு சார்!
http://i58.tinypic.com/29oiq0x.jpg
Thanks Facebook
1990 இல் குமுதம் பத்திரிகை மக்கள் அபிமானம் பெற்ற நடிகர் யார் என்ற கருத்துகணிப்பு நடத்தியது.
மக்களிடம் அரசியல் கலக்காமல் சினிமாத்துறை பற்றி மட்டுமே கொண்ட கேள்விகளை கேட்டு அன்று முதல் இன்று வரை மக்கள் அதிகம் விரும்பும் நடிகர் யார் என்ற கருத்துகணிப்பு நடத்தி அதன் முடிவை இப்படி பதிவிட்டது !
1990 இல் இந்த கருத்துகணிப்பு தமிழகத்தின் பெருவாரியான நகரத்தில் பிப்ரவரி மாதம் நடத்தி முடிவை வெளியிட்டனர்.
http://i501.photobucket.com/albums/e...ps6jfy1iee.jpg
காலங்கள் உருண்டோடினாலும் எத்துனை எத்துனை நடிகர்கள் இருந்திருந்தாலும், புதிது புதிதாக வந்தாலும் நடிகர் திலகம் அவர்கள் எந்தளவிற்கு ஒரு அசைக்க முடியாத ஒரு தூணாக திரையில் இருந்துள்ளார் என்பதற்கு இந்த சான்று !
http://i501.photobucket.com/albums/e...ps93242399.jpg
Even in 1990, 58.76% சதவிகிதம் பெற்று PEOPLE's MOST FAVOURITE HERO வாக இருந்துள்ளார் என்பதற்கு 1990 இல் கருத்துகணிப்பு செய்து பிப்ரவரி மாதம் 1990, முடிவு வெளியிட்ட குமுதம் பத்திரிகை ஆவணம் ! .
இந்த நிலையில் 2015 இல் தினத்தந்தியின் மக்கள் அபிமானம் 1980 வரை பெற்ற நடிகர் யார் என்று கூறி அபிமான நடிகரில், நடிகர் திலகத்திற்கு எவ்வளவு DELIBERATE அக சதவிகிதம் குறைத்துள்ளனர், குறைத்து BIASED ஆக பதிவு செய்துள்ளனர் என்பது இதன் மூலம் விளங்கும்.
RKS
திரு சுந்தர்ராஜன் சார்
2015 இல் தினத்தந்தியின் 1980 வரை என்ற CONDITION மிக மிக தவறு. காரணம் STATISTICS & REASONING அவர்களுக்கு பூரணமாக நேர்மையான ஒத்துழைப்பை தராது. ஏனென்றால் கிட்டத்தட்ட 35 வருட இடைவெளி எனும்போது எப்படி இவர்களுடைய STATISTICAL SAMPLING & REASONING சரியாக அமையும் ?
இதோ...குமுதம் பத்திரிகை 1990 ஆம் வருடம் FEBRUARY யில் நடத்திய கருத்துகணிப்பு, அதன் முடிவை பாருங்கள் :
மக்கள் மனதில் பிரபலமான பிடித்தமான கதாநாயகன் யார் என்று கேள்வியை முன் நிறுத்தி அதில் அரசியல் ஆட்சி கட்சி என்று எந்த விஷயமும் கலக்காமல் சினிமா மட்டுமே சார்ந்த கேள்விபதில் கொண்டு எடுக்கப்பட்ட கருத்துகநிப்பும் அதன் முடிவு பிப்ரவரி மாதம் குமுதத்தில் ப்ரசூரித்தது ! உங்கள் பார்வைக்கு
http://i501.photobucket.com/albums/e...ps6jfy1iee.jpg
1990 இல் 58.76 சதவிகிதம் பெற்று முதல் நிலையில் உள்ள நடிகர் திலகம்....2015 இல் தந்தி தொலைகாட்சியின் " 1980 வரை" என்ற கருத்துகணிப்பில், 1980 இல் நடிகர் திலகம் 34% அபிமானம் பெற்றிருந்தார் என்று கூறுவது எப்படி சரியான கருத்துகணிப்பு என்று ஏற்றுக்கொள்ளமுடியும் ?
RKS
இந்தப பத்திரிகையை சாடுவதற்கென்றே ஒரு திரைப்படமும் அந்தக் காலத்தில் வெளிவந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இவர்கள் ஆரம்ப காலத்தில் அதாவது 60களிலிருந்தே நடிகர் திலகத்திற்கு முக்கியத்துவம் அளித்ததில்லை. விளம்பரங்களில் இடம் பெற்றதோடு சரி. இன்றும் இந்தப் பத்திரிகையின் அணுகுமுறை அவ்வாறே தொடர்வதாகத்தான் தெரிகிறது. இத்தனைக்கு இவர்களுடைய சமுதாயத்தின் தலைவரான பெருந்தலைவர் காமராஜரைத் தான் நடிகர் திலகம் தன் தலைவராக ஏற்றுக் கொண்டார். அதற்கான விளைவும் அவருக்குத் தான் நேர்ந்தது. தமிழ் மக்களின் ஒட்டு மொத்த அபிமானம் பெற்று விளங்கி இன்று வரையிலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் அவரே அசைக்க முடியாத தமிழ்த்திரையுலக கல்தூணாக விளங்கி வருகிறார். இவருடைய தூண் பலத்தில் தான் தமிழ் சினிமா என்ற கட்டிடமே நிமிர்ந்து நிற்கிறது.
தமிழ் சினிமாவின் விளம்பரத்தாலேயே இன்று விற்பனையில் முன்னணியில் இருக்கும் பத்திரிகை, அந்த திரையுலக பிதாமகனுக்கே மணிமண்டபம் கட்டக்கூடாது என்று சொல்வதிலிருந்தே நடிகர் திலகத்திற்கென அந்த ஊடகம் தனி அணுகுமுறை வைத்துள்ளது என்பது புலனாகிறது.
உண்மையை வெகு நாள் மூடி மறைக்க முடியாது. 1967 கால கட்டத்தில் எப்பேர்ப்பட்ட பெரும் சுனாமியிலிருந்து தேசிய இயக்கத்தையும் பெருந்தலைவரின் மாண்பையும் நடிகர் திலகம் கட்டிக்காத்தார் என்பதிலிருந்தே அவர் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்ந்தார் என்பதும், 1971லிருந்து பெருந்தலைவரும் நடிகர் திலகமும் விளைத்து வளர்த்து வைத்திருந்த ஆளும் கட்சி எதிர்ப்பலை என்கிற பயிர் யாருக்கு அறுவடையாகியது, அதை அவர்கள் எவ்வாறு பயன்படுத்திக்கொண்டனர் என்பதும் வரலாறு.
மீண்டும் கூற விரும்புகிறேன்.
கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது. அது பலனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்.
Leading ladies of Sinhala cinema fondly remember Sivaji Ganesan
http://www.ceylontoday.lk/90-51252-n...i-ganesan.html