Originally Posted by
puratchi nadigar mgr
அன்பு நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களே,
உலகம் சுற்றும் வாலிபனின் உலகம் போற்றும் சாதனைகளை சில புள்ளி விபரங்களுடன் பதிவிட்டமைக்கு இதயபூர்வ பாராட்டுக்கள்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சில படங்கள் முதல் வெளியீட்டில் எதிர்பார்த்த வெற்றி பெறாவிட்டாலும் ,மறு வெளியீடுகளில் அதை ஈடு கட்டிவிடும் என்பதை பல விமர்சகர்கள் பத்திரிகைகளின் வாயிலாக உலகிற்கு உணர்த்திருக்கிறார்கள் .
சமீபத்தில் திரு.வை கோ அவர்களின் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா
நிகழ்ச்சியில் பேசிய வசனகர்த்தா திரு. ஆரூர்தாஸ் இதை உறுதிப்படுத்துவதுபோல யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்கிற பழமொழியை நினைவுபடுத்தி குறிப்பிட்டுள்ளார் என்பதை ஒரு உதாரணமாக கொள்ளலாம் .
40 ,50 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த புரட்சி தலைவரின் படங்கள் இன்றும் மறு வெளியீடுகளிலும் , டிஜிட்டல் வெளியீடுகளிலும் நல்ல வரவேற்பை பெறுகின்றன .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "ஆயிரத்தில் ஒருவன் " சத்யம் சினிமா அரங்கில்
161 நாட்களும், பேபி ஆல்பட்டில் 190 நாட்களும் திரையிடப்பட்டு சாதனை
புரிந்தன . சமீபத்தில் சென்னை மகாலட்சுமியில் 2 வாரங்கள் ஓடி, சுமார்,ரூ.2,15000/-வசூல் ஈட்டியது .
மேலும் எம்.ஜி.ஆர். பிக்ச்சர்சின் "அடிமைப்பெண்", உலகம் சுற்றும் வாலிபன் ,
மற்றும் நினைத்ததை முடிப்பவன் , மாட்டுக்கார வேலன் ஆகிய படங்கள்
டிஜிட்டல் வடிவில் விரைவில் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன.
பாகுபலி போன்ற படங்கள் முதல் வெளியீட்டில் சாதனை புரிந்தாலும் ,50 ஆண்டுகள் கழித்து மறுவெளியீடுகளில் சாதனை புரியுமா என்பது கேள்விக்குறியே .இவையெல்லாம் முதல் வெளியீட்டோடு சரி.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "இன்று போல் என்றும் வாழ்க "படத்தின் விமர்சனங்களும் வரவேற்க தக்கவை.