kaathavarayanai rasitha rasika sikaraththirku nandri!
kaathavarayanai rasitha rasika sikaraththirku nandri!
சென்ற வருடம் இதே நாளில் 'காத்தவராயன்' ரிலீஸ் மேளாவுக்காக நடிகர் திலகம் பாகம் ஒன்பதில் பதிவிடப்பட்ட மல்யுத்த சண்டைக்காட்சியும். அந்த சண்டைக்காட்சியைப் பற்றிய ஆய்வும் காண லிங்க் கீழே.
http://www.mayyam.com/talk/showthrea...-Part-9/page96
நன்றி வாசுதேவன் அய்யா! இதுபோன்ற அரிதாக தகவல் கட்டுரைகளை மட்டுமே மையத்தில் ஒரு தனித் திரியில் தொகுத்து வரப்போகும் தலைமுறை மக்களுக்கும் சிவாஜி என்ற மா-கலைஞனின் தளத்தில் எளிதாக நுழைய ஏற்பாடு செய்தால் என்ன?? இதுபோன்ற கட்டுரைகள் தொடர்ந்து சிவாஜிக்காக திரிகளில் வந்தாலும் குறைந்த பட்சம் அதற்கான பாயிண்டர்ஸ்களையாவது இன்னொரு பிரத்யேக திரியில் தொகுத்து வைக்கலாம் என்பது என் விருப்பம்.
வாசு சார்,
சில படங்கள் தானாகவே சென்று ரசிகர்கள்/மக்கள் மத்தியில் சேர்ந்து விடும். ஆண்டுகள் கடந்தாலும் அவை நிலைத்து நிற்கும். வேறு சில படங்கள் சிறப்புடன் அமைந்திருப்பினும் கால ஓட்டத்தில் அவை பற்றிய சரியான தகவல்கள் அடுத்தடுத்த தலைமுறைக்கு சென்று சேர்வதில் ஏற்படும் தொய்வு காரணமாக அப்படங்களின் சிறப்புகள் சரியான முறையில் வெளிப்படுவதில்லை. அப்படி ஒரு வரிசையில் இடம் பெற்ற படம்தான் காத்தவராயன். சென்ற வருடம் அந்த மல்யுத்தத்தை சாம்பிள் காட்டிய நீங்கள் இந்த வருடம் முழுப் படத்தையும் அளித்து மகிழ்ச்சிப்படுத்தி விட்டீர்கள். உங்களுக்கு நன்றி நன்றி நன்றி.
1958-ம ஆண்டின் வெற்றி படங்களில் ஒன்று மட்டுமல்லாது அதிக பட்ச நாட்கள் ஓடிய பெருமையையும் இந்த படத்திற்கு அளித்தது எங்கள் மதுரை மாநகரின் சிந்தாமணி திரையரங்கம்தான் எனபதில் கூடுதல் மகிழ்ச்சி.
அன்புடன்
Dear Gopal Sir,
My belated birthday wishes to you.
Hmmmm.....There is no need at this point in time to have a spread thread for whatsoever. The same strategy was implemented so meticulously sometime back that resulted in making TWO GROUPS basically.
Let there not be any ideas or suggestions if the ideas or suggestions
LET US STOP TALKING FURTHER ON BRINGING ANOTHER THREAD - A BREAKAWAY THREAD PARTICULARLY...PERIOD !!!!
:smokesmile:
Vaasu Sir,
KUNGUMAM THARUM DHEIVAMAGAN ANBUKARANGAL matrum KANDHANKARUNAI nigarkonda avar KANGAL PAARUNGALAEN !
I have reproduced your photo in Facebook on Mr.Kamalhassan's birthday. - I commented in Facebook the following "Thandhayin Sthanathil irundhu Vaazhthum Nadigar Thilagam" - Quite a number of friends liked this pic and my comment.. ! Thanks for this picture. I have told them, that the courtesy of this and appreciation should go to my friend Mr.Vasudevan from Neyveli and not me. I also told them that I will communicate their likes for this photo to you !
Paaraatukkal Adharku uriyavarukku selvadhudhaanae NEEDHI ?
Adhai Uriyavaridathil Serpadhudhanae NAERMAI ?
Kaaranam Indha ariya pugaipadangal dhanae avargalukku oru PUDHAYAL?
:smokesmile:
நன்றி சுப்பு சார். இதில் என் பங்கு ஒன்றுமில்லை. அந்த அரிய புகைப்படம் இணையத்திலிருந்து எடுத்ததுதான். credit goes to the uploader. அவரை நாம் மனதார வாழ்த்துவோம். பாராட்டுவோம்.
என் உயிர்க் 'காத்தவராயன்'
நன்றி முரளி சார்.
Taste விஷயத்தில் நமக்குள் ஒற்றுமை இருப்பது 100% நேற்று உறுதியாகி விட்டது. காத்தவராயனைப் பற்றித்தான் சொல்கிறேன். ஞான ஒளி, தெய்வ மகன், சவாலே சமாளி, ராமன் எத்தனை ராமனடி, உயர்ந்த மனிதன், வசந்த மாளிகை போன்ற காவியங்கள் எந்த அளவிற்கு ஆழ என்னுள் ஊடுருவி இருக்கிறதோ அந்த வரிசையில் நான் சேர்த்துக் கொண்டுள்ள மற்றொரு காவியம் "காத்தவராயன்" சார். அதே போல இன்னொன்று "அம்பிகாபதி". காத்தவராயனை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று கணக்கே கிடையாது. அவ்வளவு மனம் கவர்ந்த படம் அது. உங்களுக்கும் அவ்வாறே என்று நினைக்கும் போது சந்தோஷம் இரட்டிப்பாகிறது. தாங்கள் கூறியுள்ளது போல சட்டென்று சில படங்கள் பார்த்த மாத்திரத்தில் பசுமரத்தாணியாய் மனதில் பதிந்து போய்விடும். சில பார்க்க பார்க்க மனம் லயிக்க ஆரம்பிக்கும்.(முதல் மரியாதையை இதற்கு உதாரணமாக சொல்லலாமா!). எனக்கு 'காத்தவராயன்' முதல் வகை. படத்தின் முதல் நொடி முதல் கடைசி நொடி வரை இமை கொட்டாமல் பார்த்து பார்த்து பரவசப்பட்ட படைப்பு. அம்பிகாபதியிலும், காத்தவராயனிலும் அளவுக்கதிகமாக அழகாகத் தெரிவார். "இந்த தருக்கர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தி மலைகளாகக் குவித்து விடுகிறேன்...பார்த்து விடுகிறேன் படைபலத்தை"...என்று சங்கிலியால் பிணைக்கப்பட்டு இறுதியில் அவர் முழங்கும் போது அவர் குரல் புரியும் சாகசம்.... அடேயப்பா! அந்த மலைப்பு இன்று வரை அடங்கவே இல்லை. அவர் போர்ஷன் மட்டுமல்லாது அனைத்து காட்சிகளுமே அற்புதம். படத்துவக்கத்தில் வரும் கோபிகிருஷ்ணா மற்றும் குமாரி கமலா என்ற இரு நாட்டிய ஜாம்பவான்களின் ருத்ரதாண்டவமாக மாறும் அருமையான சிவதாண்டவம், (கோபி கிருஷ்ணா என்ன மார்க்கண்டேயனா! காத்தவராயனிலும், ஜனக் ஜனக் பாயல் பஜேவிலும், பின்னாளில் வந்த தங்களுக்கு மிக மிகப் பிடித்த 'பாட்டும் பரதமும்' படத்திலும் (உலகம் நீயாடும் சோலை) ஒரே மாதிரியாகவே இருப்பார்) கொல்லிமலை சகோதரிகளின் ஆரம்பப் பாடல் (வெற்றியே அருள் அம்மா...)... காத்தன் குழந்தையாய் காட்டில் வளரும் காட்சிகள்...(முக்கியமாக கோழிக்குஞ்சுகள் நடனக் காட்சி (அய்யா கொல்லாதே...சாமி கொல்லாதே)...பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும்) பாலையா, சந்திரபாபு இவர்களின் மந்திரப் பிழைப்புக் காட்சிகள், (வித்தை காட்டுகையில் சந்திரபாபுவின் மேல் விபூதி அடித்து பாலையா மயங்கி விழச் செய்ய, போட்டிக்கு நம்மவர் பதிலுக்கு மயங்கிக் கிடக்கும் சந்திரபாபு அருகே அமர்ந்து "அடச் சே"..என்று ஜெபித்து எழுப்பி விட, மறுபடி பாலையா தன் பங்கிற்கு "அடத்தூ" என்று மீண்டும் பாபுவை மயக்கமடைய வைக்க, திரும்ப நடிகர் திலகம் "அடச் சே" என்று எழுப்ப... மறுபடி பாலையா "அடத்தூ" என மயங்க வைக்க, இருவருக்கும் ஈடு கொடுத்து சந்திரபாபு 'டக்'கென மயக்கமடைவதும், உடனே மயக்கம் தெளிந்து எழுந்திருப்பதுமாய் ஒரே நகைச்சுவைக் கூத்துதான் போங்கள்!) நாட்டின் தளபதியாய் வந்து தங்கவேலு தரும் தாங்கமுடியாத வயிற்றுவலி நகைச்சுவைக் காட்சிகள்... (மரத்தை சுற்றி நம்மவர் கிழ வேடம் தரித்து மந்திர வட்டம் போட்டு விட்டு மரத்தடியில் அமர்ந்து "ஆரியமாலா... ஆரியமாலா" என்று துந்தனாவை சுண்டிக்கொண்டே ஜெபிக்க, இவரைப் பிடிக்க வரும் படைவீரரர்கள் ஒவ்வொருவராக வட்டத்தைத் தாண்ட முடியாமல் அந்த வட்டக் கோட்டிலேயே மந்திரத்துக்குக் கட்டுண்டு குத்தாட்டம் போட்டுக் கொண்டு சுற்ற ஆரம்பிக்க, இந்தக் கூத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் தளபதி தங்கவேலு அனைத்தையும் ஒருகணம் மறந்து ஆடிக்கொண்டு செல்லும் ஒரு படை வீரனைப் பார்த்து "பய நல்லாத்தான் ஆடுறான்" என்று ரசிக்கும் ஒரு கட்டம் போதும்) சிறைப்பட்டிருக்கும் நம் சிங்கத்தைக் காப்பாற்ற பாலையா சந்திரபாபு மற்றும் எம்.என்.ராஜம் சகிதம் சிறைக்குள் நைசாக நுழைந்து நடத்தும் அதியற்புதமான பொம்மலாட்ட நடன நிகழ்ச்சி (எலாஸ்டிக் கயிறுகளுடன் சந்திரபாபுவும் ராஜமும் பின்னி எடுத்திருப்பார்கள்)..("ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜீயாலகடி ஜீயாலோ") துப்பறிய வரும் தளபதி தங்கவேலுவை தங்கள் வீட்டில் பாபு, பாலையா இருவரும் பெண் வேடங்கள் இட்டுக்கொண்டு இம்சை அளித்து அடிக்கும் கூத்துக்கள்...கண்ணாம்பாவின் கனல் கக்கும் வசன மழை... சாவித்திரியின் பாந்தமான அதேசமயம் அழுத்தமான,பிடிவாதத்தனமான நடிப்பு... ஈ.ஆர்.சகாதேவனின் சீறல்... செருகளத்தூர் சாமா அவர்களின் குருதேவப் பொருத்தம்... ஈ.வி.சரோஜாவின் அட்டகாசமான நடனங்கள்... ஓ .ஏ.கே. தேவரின் சில நிமிட கம்பீரம்... மல்யுத்த பயில்வான் அமீர் அலியின் வாளிப்பான வழவழ மொழுமொழு பளபள உடம்பு... காத்தன் ஊரை அழிக்கும் பிரம்மாண்டங்கள்... (வீடுகளின் தூண்களை மட்டும் பிடுங்கி துவம்சம் செய்வார்) கழுமரம் ஏற்றப்படுமுன் யானையுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டு சாட்டையடி பெற்று துடித்து துவளும் தலைவர்... அதன் பின்னணியில் சிதம்பரம் S.ஜெயராமன் குரலில் ஒலிக்கும் "விதியா... சதியா"பாடல்... பிரம்மாண்ட ஐயனார் சிலை?!.. சிலையின் கால்களை தன் கைகளால் நகர்த்தி மலை போன்ற சிலையை விழச் செய்து ஊரை அழிக்கும் பிரம்மிப்பு...வளையல்காரன், குடுகுடுப்பைக்காரன், வயோதிகக் கிழவன் என வேடங்கள் பல தரித்து நம் வேட்கை தணிக்கும் நடிகர் திலகம்... தஞ்சை இராமையாதாஸ் அவர்களின் கருத்தான பாடல்கள்...ஜி.ராமனாதனின் அருமையான இசை... T.K..ராஜாபாதர் அவர்களின் கண்களை விட்டகலாத ஒளிப்பதிவு... 'ஸ்டன்ட்' சோமுவின் தயவால் அருமையான மயிர்க்கூச்செறியும் சண்டைக்காட்சிகள்... பணத்தைத் தண்ணீராய் செலவு செய்த பிரம்மாண்டம்... சற்றும் தொய்வில்லாத ராமண்ணாவின் டைரக்ஷன்...
என்ற சகல அம்சங்களும் சரியாகக் கலக்கப்பட்ட கற்கண்டு பால் போன்றவன் என் ஸாரி நம் 'காத்தவராயன்'. இத்தனை அம்சங்கள் கொடிகட்டிப் பறந்த'காத்தவராயன்' என்னைப் பொறுத்தவரை வெள்ளிவிழா கண்டிருக்க வேண்டும்.
vasu sir,
whenever you write about kathavarayan,you put your heart in it. I saw that film in the year 1969 in a touring talkies(thirupuvanam santhi). I cant remember well but you have written to perfection to kindle my interest. I'll see the movie with you .( I was born together with that film)
நன்றி கோபால் சார். நிச்சயம் இருவரும் சேர்ந்து காத்தனைப் பார்த்து களிப்புறலாம்.
சிவந்த மண்- 1969 -சில நினைவுகள்.(9th Nov )
ஆயிரம் படங்கள் வரலாம்,போகலாம், ஆனால் ,சில படங்கள் குறிஞ்சி மலர் போல மனதில் தங்கி, நினைக்கும் தோறும் இனிக்கும்.
தமிழ் திரை பட உலக சரித்திரத்திலேயே இவ்வளவு hype உடன் வெளியான இரண்டே படங்கள் சந்திரலேகா, சிவந்த மண் .இரண்டும் பெரும் பொருட்செலவில் தயாரிக்க பட்ட பிரம்மாண்டங்கள். முதல் முறை வெளிநாட்டில் தமிழ் படம். ஹேமமாலினி நடிப்பதாக இருந்த படம்.(கஸ்டடி battle கோர்ட் கேஸ் இருந்ததால் ஹேமா மாலினி நடிக்க முடியவில்லை. பெரிதும் வருந்தி தமிழில் ஒரே படம்தான் நடிப்பேன்.அது சிவாஜி கணேசனுடன்தான் என்று பேட்டி கொடுத்தார்). 1967 என்று நினைவு. சிவாஜி,ஸ்ரீதர் கலந்து கொண்ட கூட்டத்தில் ,ஸ்ரீதர் இந்த படத்தை அறிவித்து ,தமிழிலேயே முத்த காட்சி இடம் பெற போகும் முதல் படமாக இருக்கும் என்றார். பின்னால் பேசிய சிவாஜி, அதெல்லாம் சரிதான்,என் மனைவி இருக்கும் போதா இதை சொல்வது என்று ஜோக் அடித்தார். தமிழ் நாடே திரு விழா கோலம் பூண்டு இந்த படத்தை வரவேற்றது. சிவாஜி வேறு ஆனந்த விகடனில் "அந்நிய மண்ணில் சிவந்த மண்" என்ற தொடர் எழுதி இருந்தார்.
சிவந்த மண் போல் பிரம்மாண்டம் கொண்ட படம் ,இந்திய திரையுலகம் இது வரை கண்டதில்லை. வெளி நாடுகள்(அதுவும் ஐரோப்பிய) படபிடிப்பு, கப்பல்,ஹெலிகாப்ட்டர், காட்டாறு,சுழல் மேடை என்று ஏக தட புடல். படமும் மிக மிக பிரம்மாண்ட வெற்றி படமாய் பத்து திரையரங்குகளில் நூறு நாள் கண்டது. பெரும்பான்மையான திரையரங்குகளில் ஐம்பது நாட்களும், repeat ரன்களில் பிரமாதமாய் ஓடி(பைலட் தியேட்டரில் 80 களில் 75 நாட்கள்)
எனக்கு தெரிந்த எந்த சிவாஜி படத்திலும்,heroine அறிமுகம் ஆகும் முதல் காட்சி இவ்வளவு அமர்க்களமாய் வரவேற்பு பெற்றதில்லை.(காஞ்சனா போன் பேசும் காட்சி). சிவந்த மண்ணின் சிறப்பே அதுவரை வந்த action படங்களில் இருந்து மாறு பட்டு ,கதாநாயகன் திட்டமிடுவார். வில்லன் ரியாக்ட் செய்வார். திட்டங்கள் படு சுவாரஸ்யமாய் ,படம் விறு விறுப்பாய் செல்ல உதவும். மூன்று மணி நேர இன்ப பயணம்.helocopter fight , கப்பல் வெடிகுண்டு காட்சி,தொடரும் சேஸிங், பட்டத்து ராணி, ரயில் பால வெடிகுண்டு காட்சி, அமர்க்களமாய் மாறி மாறி ஊசலாடும் உச்ச காட்சி என்று தமிழில் வெளி வந்த மிக மிக சிறந்த action ,adventure படமாய் இன்றளவும் பேச படுகிறது.
எம்.எஸ்.விஸ்வநாதனின் பங்களிப்பு இந்த படத்தின் பிரம்மாண்டத்தை தூக்கி நிறுத்தியது.(கார்த்திக் சார் சொன்னது போல் அவரின் மிக சிறந்த படம்)ஒரு ராஜா ராணியிடம், முத்தமிடும் நேரமெப்போ, ஒரு நாளிலே உறவானதே,பட்டத்து ராணி, பாவை யுவராணி கண்ணோவியம்,சொல்லவோ சுகமான என்று ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகை பாணி,ஒவ்வொரு நாட்டு இசை கோர்ப்பு, பின்னணி இசை(முக்கியமாய் கப்பலில் ராதிகா டான்ஸ்,மாறும் காட்சிகளுகேற்ப மாறும் இசை,) ஹாட்ஸ் ஆப் எம்.எஸ்.வீ சார். உங்களுக்கு கடன் பட்டுள்ளோம்.
சிவாஜி இந்த படத்தில் மிதமான make -up ,natural hair style , rugged ,manly , subtle உடையலங்காரங்களில் படு படு படு இளமையாய், handsome ஆக இருப்பார்.காஞ்சனா பொருத்தமான ஜோடி. என் தூக்கத்தை பல இரவுகள் கெடுத்த romance சீன் ஒரு நாளிலே உறவானதே. ஒரு ஷாட்டில் கட்டி அணைத்து, சிவாஜி சொக்கி போவார்.எந்த வேடத்திலும் ,எப்படிபொருந்துகிறார் சிவாஜி?? அராபிய உடையிலும் !!! action ,ரொமான்சில் கூட சிவாஜியிடம் யாரும் நெருங்க முடிந்ததில்லை.
ஹெலிகாப்ட்டர் காட்சி ,கப்பல் காட்சி, ஜெயில் சண்டை காட்சிகள் மிக மிக சிறப்பாக வந்திருக்கும். தேங்காயுடன் விமான சண்டை,செஞ்சி கிருஷ்ணனுடன் ஆற்றில் சண்டை, உச்ச கட்ட பலூன் சண்டைகள் சொதப்பல். (ஷ்யாம் சுந்தர் down down ) .வெளி நாட்டு காட்சிகள் சிறப்பாக படமாக்க பட்டிருக்கும்.(ஓடம் பொன்னோடம் படமாக்கம் படு மோசம் . பனி சறுக்கு காட்சியில் இசை உச்ச வேகம் பிடிக்கையில் skate செய்து கொண்டிருப்பவர் நின்று விடுவார்!!)
ஸ்ரீதரின் திரைக்கதையமைப்பு புத்திசாலிதனமாய்,விறு விறுப்புடன் இருக்கும். இயக்கம் கேட்கவே வேண்டாம். சிவாஜி-ஸ்ரீதர் இணைவில் மிக சிறந்த படைப்பு இதுதான்.அடிமை பெண்ணிற்கு போட்டியாக வந்திருக்க வேண்டியது ,தீபாவளிக்கு தள்ளி போனது. அதனால் என்ன,நமக்குதான் தீபாவளி ராசியாயிற்றே.!!! இந்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து சிவாஜி பிலிம்ஸ் ஒரு படத்தை கீழை நாடுகளில் (ஜப்பான் உள்ளிட்ட) படமாக்க திட்டமிட்டு ,திட்டம் கசிந்து விட்டதால்,மாற்று முகாம் அள்ளிதரித்த அவசர கோலத்தில் முந்தி கொண்டது.(மணியன் என்ற ........)
A RARE STILL FROM NET
http://i50.tinypic.com/2le0vlx.jpg
Mr. esvee,
Can you please list down the members name in order from the above picture ?
Thanks.
Dear gopal sir
very nice review about sivandha mann-1969- today 43rd anniversary
journalist manian - main co-ordinator for makkal thilagam mgr in ulagam sutrum valiban.
Manian ..... Still you are in fire . Hope so . Cool
Dear raghavendran sir
can u help me to find out the names of the artists.
Known persons
nt- savithri - msv-
doubt- devika - mv rajamma
pl clarify sir
rare pic from net
http://i45.tinypic.com/23vkpdc.jpg
I think the last one on the left next to Bhim Singh is the Production Executive of Buddha Pictures (shall conform it soon). I don't remember the name of the last on the right.
Thank you essvee sir for the rare photo link
டியர் கோபால்,
சிவந்த மண் .... ரியல்லி சூப்பர் படம் ...
நடிகர் திலகம் மட்டும் தொடர்ந்து action படங்களை மட்டுமே தந்திருந்தால் ...
..................
[QUOTE=Gopal,S.;976546]சிவந்த மண்- 1969 -சில நினைவுகள்.(9th Nov )
* ஹேமமாலினி நடிப்பதாக இருந்த படம்.(கஸ்டடி battle கோர்ட் கேஸ் இருந்ததால் ஹேமா மாலினி நடிக்க முடியவில்லை. பெரிதும் வருந்தி தமிழில் ஒரே படம்தான் நடிப்பேன்.அது சிவாஜி கணேசனுடன்தான் என்று பேட்டி கொடுத்தார்). - It would have been nice to see her in Tamil movies.
1967 என்று நினைவு. சிவாஜி,ஸ்ரீதர் கலந்து கொண்ட கூட்டத்தில் ,ஸ்ரீதர் இந்த படத்தை அறிவித்து ,தமிழிலேயே முத்த காட்சி இடம் பெற போகும் முதல் படமாக இருக்கும் என்றார். பின்னால் பேசிய சிவாஜி, அதெல்லாம் சரிதான்,என் மனைவி இருக்கும் போதா இதை சொல்வது என்று ஜோக் அடித்தார். - That was a kiss on the cheek, unfortunately!
*சிவாஜி இந்த படத்தில் மிதமான make -up ,natural hair style , rugged ,manly , subtle உடையலங்காரங்களில் படு படு படு இளமையாய், handsome ஆக இருப்பார். Very true!
* காஞ்சனா பொருத்தமான ஜோடி. என் தூக்கத்தை பல இரவுகள் கெடுத்த romance சீன் :-D
ஒரு நாளிலே உறவானதே. ஒரு ஷாட்டில் கட்டி அணைத்து, சிவாஜி சொக்கி போவார்.எந்த வேடத்திலும் ,எப்படிபொருந்துகிறார் சிவாஜி?? அராபிய உடையிலும் !!! action ,ரொமான்சில் கூட சிவாஜியிடம் யாரும் நெருங்க முடிந்ததில்லை.
* ஜெயில் சண்டை காட்சிகள் மிக மிக சிறப்பாக வந்திருக்கும் - very cleverly co-ordinated fight! I really liked it!
சறுக்கல். பனி சறுக்கு காட்சியில் இசை உச்ச வேகம் பிடிக்கையில் skate செய்து கொண்டிருப்பவர் நின்று விடுவார்!!) - exactly.
'சிவந்த மண்' உதயதினம். நவம்பர் 9, 1969 (சிறப்பு நிழற்படங்கள்)
http://padamhosting.com/out.php/i754...snap-52122.pnghttp://padamhosting.com/out.php/i75417_vlcsnap49681.png
http://padamhosting.com/out.php/i75416_vlcsnap57263.pnghttp://padamhosting.com/out.php/i75411_vlcsnap44225.png
http://padamhosting.com/out.php/i754...snap-33148.pnghttp://padamhosting.com/out.php/i75406_vlcsnap57604.png
Sivandha Mann. another feather on the cap of NT for its unique features of foreign locations, NT's fitting body and energy during the helicopter scene ( in line with James Bond Sean Connery's From Russia With Love) where like Connery NT has done the scene without a stunt double.We can see how close the helicopter comes nearer to NT's head when he jumps into a pit. L.R. Eswari's melodious Pattaththu Rani song and sequences, the richness of frames comparable to Vasantha Maaligai, ... of course due to some technical flaws the climax balloon fight could not be choreographed properly. Director Shridar could mint money with this extravaganza with NT shouldering the frames start to end.
Mr Gopal!, I particularly enjoy reading your inputs on NT's movie romances! Expecting more!:smokesmile: It was an un-written knowledge that Gemini Ganesan was the romantic hero during those times, but in my opinion, Sivaji didn't leave that part of the nuances alone, either! He did it much better than any other romantic heros in the past and the current ones. His romances in movies are really enjoyable; especially movies in late 60's and 70's! (he gradually became expert on showing that expression, I guess!). He didn't have to go physically too deep in expressing love, just his eyes alone did the magic in most of his movies!
http://i1087.photobucket.com/albums/..._000578112.jpg
http://i1087.photobucket.com/albums/..._000589723.jpg
http://i1087.photobucket.com/albums/..._001334153.jpg
http://i1087.photobucket.com/albums/..._000236282.jpg
http://i1087.photobucket.com/albums/..._000633537.jpg
http://i1087.photobucket.com/albums/..._000650149.jpg
http://i1087.photobucket.com/albums/..._000778782.jpg
http://i1087.photobucket.com/albums/..._000789192.jpg
http://i1087.photobucket.com/albums/..._004912805.jpg
http://i1087.photobucket.com/albums/..._084548997.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
The best Love Songs of NT(Ofcourse my choice)
1)Mayakkamenna (VM-with ultimate pair)
2)OruDharam ore Dharam(SES-with JL)
3)Madi meedhu(A L with devika)
4)Nenjathile(Shanthi-Devika)
5)Amma Kannu(G.O with V.N)
6)Mannikka vendugiren(I.M-All time Pair)
7)Vinnodum Mugilodum(Pudhayal -all time Pair)
8)Kana Inbam Kanindhadheno(S.M-with one movie wonder)
9)Aha Mella Nada(PP-with pinnazhagi)
10)Kandene unnai Kannale(N.S.R with anjali-PBS only duet for NT)
Other good love songs are Oru Nalile uravanadhe,Undhan Kannukkulle,Nenjil Kudiyirukkum,Kannoru Pakkam,Vellikinnandhan,Pottu vaitha mugamo,Ange Malai Mayakkam,Muthukkalo Kangal,Santhana kudathukkulle,Mela thalam Ketkum,Iniyavale endru Padi Vandhen,Agaya Pathalile,Varuvan Mohana Roopan,Poo Malaiyil,Anbale Thedia,Pudhu Pennin Manasai Thottu,Idhaya oonjal adava,Inge Ha ha Inge,Ondra Iranda,Paththu Pathinaru muththam muththam,Devan Vandhandi,Iravukkum Pagalukkum,Yamuna Nadhi Inge,Ennanga Sollunga,Kanavin maya Logathile,Kathalikka Katru Kollungal,Oh Little Flower,Oh ho ho Odum ennangale,Palakkattu Pakkathile,Palliyaraikkul,Mella Varum,nalla Idam Nee vandha Idam,Irandil Ondru,Nee Vara Vendum,Kalyana Ponnu,Sindhu nadhi Karai oram,Gangai Yamunai,Nalu Pakkam vedarundu,Kadhal rani Katti Kidakka,Pavai Yuvarani,Ethanai Azhagu,Aadikku pinne,Pudhu Nadagathil,Senthamizh Padum,Thirumalin Thirumarbil.
சிவந்த மண்ணின் அற்புத ஹெலிகாப்டர் சண்டைக்காட்சி
http://www.youtube.com/watch?list=UU...&v=Gew4yzciSc4
இருநூறாம் பக்கத்திற்கு படு பொருத்தம்!!!
Thank u Gopal sir for write about sivantha mann.
Thank u vinodh sir.
ஷியாம் சுந்தர் சண்டைக்காட்சி நம்மவருக்கு அமைத்துக் கொடுத்த மற்றொரு படம் 'சாணக்ய சந்திரகுப்தா'
Thanks sasitharan sir.
கடலூர் ரமேஷ் தியேட்டரில் 49 நாட்கள் ஓடி அசுர வசூல் சாதனை புரிந்தது சிவந்த மண். தியேட்டர் சிப்பந்திகளுக்கு ஐம்பது நாட்களானால் போனசும், துணிகளும் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற கஞ்சத்தனத்தினால் ஹவுஸ்புல் காட்சிகளுடன் அநியாயமாகத் தூக்கப்பட்டது.
My top favourite NT duets are:
1. Ullangal onragi – Punar Janmam
2. Anbe amuthey – Uthama puthiran
3. Unthan kannukkulle- Maragatham
4. Mayakkam enna- Vasantha maligai
5. Sindhu nadhikkaraiyoram – Nallathoru kudumbam
6. Iniyavaley enru padi vanthen – Sivakamiyin Selvan
7. Pavadai thavaniyil- Nitchcaya thampoolam
8. Kannethirey thonrinaal – Iruvar Ullam
9. Manthorana veethiyil – Pattum bharathamum
10. Kaana inbam kaninthatheno – Sabash Meena
11. Madimeethu thalai vaithu – Annai Illam
12. Malare kurinji malare – Dr Siva
13. Poomalaiyil Or malligai – Ooty varai uravu
14. Oru naalile – Sivantha mann
.....the list is endless
ஒருவாரம் முன்னமே ரிசர்வேஷன் தொடங்கியது. அப்போதெல்லாம் ரிசர்வேஷன் என்பது கடலூரில் பெரிய விஷயம். நீண்ட கியூ... கிட்டத்தட்ட அரை கிலோமீட்டருக்கும் மேல். தியேட்டரிலிருந்து இப்போது இருக்கும் சுமங்கிலி சில்க்ஸ் வரை. போலீசால் கட்டுப்படுத்த முடியவில்லை. கைகளை ஒவ்வொருவராக அணைத்துக் கொண்டு மற்றவர்கள் குறுக்கே புகுந்து விடாமல் இருக்க மணிக்கணக்கில் நின்றார்கள். நான் என் மாமாவுடன் நின்றிருக்கையில் போலீஸின் தடியடியில் என் மாமாவின் வாட்ச் உடைந்து சுக்கு நூறானது. அப்படி ஒரு கூட்டத்தை ரிசர்வேஷனுக்கு அதற்கு முன்னும் பின்னும் நான் பார்த்ததில்லை.