தலைவரின் முரட்டு பக்தர் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தலைவர் புகழ் போல இன்றுபோல் என்றும் வாழ்க.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Printable View
தாயின் காலில் விலங்கு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டால் துடித்துப் போகும் மகன், அதை உடைக்க பக்கத்தில் ஏதேனும் கிடைக்கிறதா என்றெல்லாம் தேடாமல், எதைப் பற்றியும் யோசிக்காமல் கையாலேயே அதை அறுக்கத்தான் முயற்சிப்பான். அதைத்தான் இந்தக் காட்சியில் செய்கிறார் தலைவர். என்ன ஒரு உடல் மொழி. இயற்கையான நடிப்பு.
நன்றி திரு முத்தையன் அம்மு சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நன்றி திரு.எஸ்.வி. சார். 15 நாட்களில் 2,000 பதிவுகளுடன் 200 பக்கங்களை நமது திரி கடந்துள்ளதற்கு, திரியை நான் துவக்கியிருந்தாலும் ஏற்கனவே நான் கூறியபடி நமது சகோதரர்கள் அனைவரின் உழைப்புக்கு கிடைத்த பெருமை, வெற்றி. அனைவருக்கும் நன்றி.
15 நாளில் 21,000 பார்வையாளர்கள் என்றால் சராசரியாக ஒரு நாளைக்கு 1,300 பேர் பார்வையிடுகின்றனர். திரியை பார்வையிட்டு எங்களை ஊக்கப்படுத்தும் நல்ல உள்ளங்களுக்கு எங்களின் அன்பான நன்றிகள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இன்று பிறந்த நாள் காணும் பேராசிரியர் திரு.சௌ. செல்வகுமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து இதய தெய்வம் எம்ஜிஆர் புகழ் பாட எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.
11000 பதிவுகள் கடந்த நம் தளபதி திரு. வினோத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
நண்பர்களுக்கு,
உரிமைக்குரல், ஊருக்கு உழைப்பவன் ஆகிய படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் திரு. என். பாலகிருஷ்ணன் சென்னையில் நேற்று காலமானதாக இன்றைய நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.
நல்ல திறமையான ஒளிப்பதிவாளர். உரிமைக்குரலில் குறிப்பாக, தலைவர் காவலுக்கு இருக்கும்போது இரவில் நடக்கும் களத்து மேட்டு சண்டைக் காட்சி, பொண்ணா பொறந்தா ஆம்பளை கிட்ட.. பாடலின் போது லதாவை முதுகில் தூக்கி தலைவர் சுற்றும்போது மரத்துக்கு மேலிருந்து டாப் ஆங்கிள் காட்சி (இந்தக் காட்சியில் தலைவரின் இடது கால் செருப்பு கழன்றுவிடும்), கிளைமாக்சில் தீப்பற்றி எரியும் பாலத்தை தலைவர் குதிரை வண்டியில் கடக்கும் காட்சி என்று பட்டியலிடலாம்.
ஊருக்கு உழைப்பவன் படத்தில் ஏற்கனவே நான் ஒருமுறை குறிப்பிட்டபடி, அழகெனும் ஓவியம் இங்கே.. பாடலின் கடைசி பாராவான ‘ஆடை விலக்கும் பூங்காற்றை...’ (இது ரெக்கார்டில் கிடையாது) வரிகளில் தலைவர் நமக்கு எதிரே வருவது போலிருக்கும். ஆனால், திடீரென தலைவர் நாம் பார்க்கும் வியூவில் இருந்து முன்னே செல்லும்போதுதான் ஏற்கனவே காட்டப்பட்டது பிம்பம் என்று தெரிய வரும். கண்ணாடியில் கேமரா விழாதபடி எடுக்கப்பட்ட அற்புத கேமரா கோணத்தில் அட்டகாசமான ஒளிப்பதிவு.
கிளைமாக்சில் ஹெலிகாப்டருக்கு மேல் இன்னொரு ஹெலிகாப்டரில் இருந்து படமாக்கியிருப்பார்கள். ஹெலிகாப்டரும் கீழே கடலில் செல்லும் மோட்டார் படகும் அருமையான ஏரியல் வியூ படமாக்கம்.
திறமையான ஒளிப்பதிவாளரை தமிழ் திரையுலகம் இழந்திருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன் தேவி வார இதழில் திரு.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில், தனது தாயார் இறந்த செய்தியை தெரிவிக்காததற்காக தலைவர் தன்னை உரிமையோடு கோபித்துக் கொண்டதாக கூறியிருந்தார். அன்னாருக்கு அஞ்சலி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://i58.tinypic.com/2cy0gw4.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
SELVAKUMAR SIR WISH U HAPPY BIRTHDAY SIR
http://i1170.photobucket.com/albums/...ps1d7a4775.jpg
http://i57.tinypic.com/2czsz0g.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மக்கள்திலகம்அருள் யொரு வெற்றிதிருமறை
இவ்வையம் உள்ளவரை பரிபாட
சித்தர் நெடுமுடியொத்த படைவித்தும்
அவன்தன் அடிசேர.
எட்டுத்திக்கிலும் வெற்றிபறைக் கொட்ட
அவன் வெட்சி புகழ்திணை அறம்பாட
உயர்வெற்றி திருமகள் உன்சுற்றம் விளம்பினை
நின்கொற்றம் வழிபாட.
வெட்டிகுணத்தவர் கயமைகள்வர்கள்
கட்டிபுரண்டு புறம்ஓட - அவர்கள்
வெட்கித்தலைகுனியும் (நாணும்)
வித்தைபல கற்ற பெறுவீரா
வித்தைவிதைத்ததிரு புகழ்வீரா.
மொத்தம்பல்கலை கற்றனை நித்தமும்
அத்தனை பயிற்றினை பற்றுடன்வருவோர்க்கு
புவிஎட்டும் வியந்தன உளமாற-நித்தமும்
உந்தன் திறம்பாடி, கவிபாடி, புகழ்பாட.
நட்டஇரவினில் கடும்கொட்ட கடுதனில்
கத்தும்பேய்தனை விரட்டும் உன் புகழ்பாட்டில்
வகைவகுத்த களவீரா, மறவீரா - உன்சுட்டும்
விரலுக்கு பொல்லார் சரண்புனையும்நாள் நல்திருநாளாம்.
கச்சிபுலவர்உனை உச்சிபுகழ் திணைமொழி
அச்சிற்கொடுப்பினை உன்ஆட்சிதிறந்தனை
பொன்மாட்சி, புகழ்ஆட்சி வழங்கிய தமிழ்வீரா
என்றும் நின்வெற்றிக்கொடி பறந்தோடும்
பொற்கை இருகரம்; நற்கை நிரந்தரம்;
இயற்கை பொன்குணம் - பெருமானே.
கொட்டிமுகர்ந்தனை உன்உச்சிமுகம்தனை
நின்பெற்றன்னை வானுலகில்.
பாடல் வரிகள் - தியாகராஜன் (தெனாலிராஜன்)
பாடல் பாடுபவர் - தியாகராஜன்
Inspired by : மக்கள் திலகம்.
http://i62.tinypic.com/v65d79.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/257kkzn.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/slmjck.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
திரு.தெனாலிராஜன் சார், சென்ற பதிவில் உங்கள் எழுத்துக்களைப் பார்த்து அருமையாக எழுதுகிறீர்கள் என்று கூறியிருந்தேன். அதையும் தாண்டி சிறந்த கவிஞர் என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். இவ்வளவு திறமையை வைத்துக் கொண்டு எழுதாமல் இருக்கிறீர்களே. நியாயமா சார்? நம் காவியத் தலைவனுக்கு தொடர்ந்து கவி மாலை சூட்டுங்கள் சார். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு.யுகேஷ்பாபு, வர வர நீங்களும் திரு.சைலேஷ் பாசு சார் போல வார்த்தை இல்லாமல் படத்தின் மூலம் பேச ஆரம்பித்து விட்டீர்களே. ரெய்டு என்றதும் ரகசிய போலீசையே கொண்டு வந்து விட்டீர்களே. வாழ்த்துக்கள். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு.யுகேஷ் பாபு உங்கள் அட்டகாசம் தாங்க முடியல. தலைவரின் அட்டகாசம் அதுக்கும் மேலே. டிரஸ்சுக்கு தகுந்தார்போல ஷூ அணிவது தலைவரின் சிறப்பு. சிவப்பு சட்டை, வெள்ளை பேண்ட் என்றால், ஷூவும் அப்படியே. எந்த முயற்சியும் எடுக்காமலே அட்டகாச ஸ்டைல் போஸ்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பொன்னின் நிறம்பிள்ளைமனம்
வள்ளல்குணம்யாரோ
அதுஎங்கள்பொன்மனசெம்மல்
http://i1170.photobucket.com/albums/...psd5d2cb23.jpg
Congratulations Vinod Sir for crossing 11000 postings.
Well done.
THAI SOLLAI THATTATHE AND MUTHU
http://www.youtube.com/watch?v=WZL5skXkIEQ
http://i62.tinypic.com/2m2f4sy.png
என் தலைவன் இரட்டை வேடம் போட்டது திரையில் மட்டுமே !