-
12th December 2014, 05:54 PM
#11
Junior Member
Devoted Hubber
மக்கள்திலகம்அருள் யொரு வெற்றிதிருமறை
இவ்வையம் உள்ளவரை பரிபாட
சித்தர் நெடுமுடியொத்த படைவித்தும்
அவன்தன் அடிசேர.
எட்டுத்திக்கிலும் வெற்றிபறைக் கொட்ட
அவன் வெட்சி புகழ்திணை அறம்பாட
உயர்வெற்றி திருமகள் உன்சுற்றம் விளம்பினை
நின்கொற்றம் வழிபாட.
வெட்டிகுணத்தவர் கயமைகள்வர்கள்
கட்டிபுரண்டு புறம்ஓட - அவர்கள்
வெட்கித்தலைகுனியும் (நாணும்)
வித்தைபல கற்ற பெறுவீரா
வித்தைவிதைத்ததிரு புகழ்வீரா.
மொத்தம்பல்கலை கற்றனை நித்தமும்
அத்தனை பயிற்றினை பற்றுடன்வருவோர்க்கு
புவிஎட்டும் வியந்தன உளமாற-நித்தமும்
உந்தன் திறம்பாடி, கவிபாடி, புகழ்பாட.
நட்டஇரவினில் கடும்கொட்ட கடுதனில்
கத்தும்பேய்தனை விரட்டும் உன் புகழ்பாட்டில்
வகைவகுத்த களவீரா, மறவீரா - உன்சுட்டும்
விரலுக்கு பொல்லார் சரண்புனையும்நாள் நல்திருநாளாம்.
கச்சிபுலவர்உனை உச்சிபுகழ் திணைமொழி
அச்சிற்கொடுப்பினை உன்ஆட்சிதிறந்தனை
பொன்மாட்சி, புகழ்ஆட்சி வழங்கிய தமிழ்வீரா
என்றும் நின்வெற்றிக்கொடி பறந்தோடும்
பொற்கை இருகரம்; நற்கை நிரந்தரம்;
இயற்கை பொன்குணம் - பெருமானே.
கொட்டிமுகர்ந்தனை உன்உச்சிமுகம்தனை
நின்பெற்றன்னை வானுலகில்.
பாடல் வரிகள் - தியாகராஜன் (தெனாலிராஜன்)
பாடல் பாடுபவர் - தியாகராஜன்
Inspired by : மக்கள் திலகம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th December 2014 05:54 PM
# ADS
Circuit advertisement
Bookmarks