Originally Posted by
RAGHAVENDRA
அன்பு நண்பர்களே,
அன்று விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு அன்றிருந்த சூழ்நிலை நன்கு தெரியும். பி.வாசுவின் உரையினால் ரசிகர்கள் கொந்தளிப்பின் உச்சிக்கே சென்று விட்டார்கள். வெள்ளைக் காகிதம் போன்ற அவருடைய அருமையான மிகச் சிறப்பான உரையில் ஒரு சின்ன புள்ளி போல் அமைந்த ஒரு கருத்து அன்றைய சூழலினை சற்று அசாதாரணமானதாக ஆக்கி விட்டது. தொடர்ந்து வந்த திரு ஒய்.ஜி.மகேந்திராவின் உரை தான் சற்று அந்த சூழ்நிலையைத் தணித்தது. அப்பேர்ப்பட்ட சூழ்நிலையை மிகவும் அருமையாக தனக்கே உரிய ஒரு பக்குவத்துடன் பிரபு அவர்கள் கையாண்டதுடன் அந்த பக்குவத்தை அவருடைய உரையிலும் வெளிப்படுத்தினார். நடிகர் திலகத்தின் கர்ணன் திரைப்படம் பல ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. பல புதிய தலைமுறையினரை ஈர்த்திருக்கிறது. அதில் அனைத்து கலைஞர்களின் ரசிகர்களும் அடங்குவர். எனவே இதை அந்த முறையில் அணுகிப் பார்த்தால் பிரபு அவர்களின் பேச்சில் இருந்த முதிர்ச்சி தென்படும். அது மட்டுமல்ல, கும்கி விழாவில் கமலும் ரஜனியும் அந்த யானையின் இரு தந்தங்கள் என்று ஒரு கருத்து சொல்லப் பட்ட போது, அந்த யானையின் முகமே எங்கள் அப்பாதான் என்று சிறப்பாக நடிகர் திலகத்தின் மேன்மையை வலியுறுத்தியவர் பிரபு, அதே கருத்தைத்தான் இந்த விழாவிலும் கூறினார்.
எனக்குத் தெரிந்து பிரபு அவர்களையும் நடிகர் திலகத்தின் குடும்பத்தைப் பற்றியும் குறை சொல்லவேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிற வர்களுக்கு நாம் இனிமேல் எந்த பதிலும் சொல்வதில் அர்த்தமில்லை. நடிகர் திலகத்தின் உண்மையான ரசிகர்கள் என்றைக்குமே அன்னை இல்லத்தையும் நடிகர் திலகத்தின் குடும்பத்தையும் குறை சொல்லும் மன வலிமை இல்லாதவர்கள். மற்றவர்களைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நம்மிடைய உள்ள மற்ற நண்பர்கள் இனிமேல் இது போன்ற கருத்துக்களைப் படிக்கும் போது சற்று சிந்தித்து அதற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என்னுடைய தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் 4ம் தேதி நடந்த கர்ணன் 150-வது நாள் விழாவில் பிரபு அவர்களின் உரை மிகச் சிறப்பாக இருந்தது மட்டுமின்றி எந்த சூழ்நிலையையும் புரிந்து கொண்டு அதைக் கையாளும் விதத்தையும் அறிந்திருக்கும் அவருடைய அனுபவமிக்க முதிர்ச்சியைத் தான் காட்டுகிறது என்று நான் நம்புகிறேன்.
அன்புடன்