Originally Posted by
Gopal,S.
பெரியார்.(நான் புரிந்து கொண்ட வரை)
பெரியார் கடவுள் மறுப்பு, உயர்சாதி எதிர்ப்பு இவற்றை கருவியாக்கி ,சமுதாய சாதி இறுக்கத்தை இளக செய்யவும் ,மூட நம்பிக்கை உடைப்பையும் ,அடிமை விலங்கருப்பதையும் மைய நோக்கமாக கொண்டவர்.
தலித்தை விட தாழ்த்த படுவது தலித்தின் மனைவியே என்று புரிந்து ,பெண் விடுதலைக்கு தளம் அமைத்தவர்.
மாற்று கருத்துகளை ஒடுக்க நினைக்காமல், கேட்டு பொறுமையாக விடையளித்தவர்.
தன் கலகம் தனி மனித எதிர்ப்பாகவோ,இன துவேஷமாக மாறி சமூக கொந்தளிப்பு நேராமல் இயக்கத்தை நேரியக்கமாக நடத்திய தூய்மையாளர்.
அவர் பேச்சை மூன்று முறை நேரில் கேட்டு ,நிறைய படித்து தெரிந்தது எனக்கு வாழ்வில் பாதை காட்டியது.
இப்போது எனக்கு உள்ள வருத்தங்கள்-
அவர் போட்ட பாதையில் நடப்பதாக கூறுபவர்களே,சாதி இன துவேஷத்தை முன்னிறுத்துவது.
எல்லாமே விவாதத்துக்கு,கேள்விக்குரியது என்று சொன்ன அவரை பற்றியே விவாதிக்க விடாமல் அடக்க பார்ப்பது.
தெய்வங்களின் சிலைகளை நீக்கி விட்டு அதற்கு பிரதியாக மனித சிலைகளை வணங்கும் மூட வழக்கங்களை வளர்ப்பது.(புத்தருக்கு நேர்ந்த அதே விபத்து)