Results 1 to 10 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

Threaded View

  1. #11
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    பெரியார்.(நான் புரிந்து கொண்ட வரை)

    பெரியார் கடவுள் மறுப்பு, உயர்சாதி எதிர்ப்பு இவற்றை கருவியாக்கி ,சமுதாய சாதி இறுக்கத்தை இளக செய்யவும் ,மூட நம்பிக்கை உடைப்பையும் ,அடிமை விலங்கருப்பதையும் மைய நோக்கமாக கொண்டவர்.

    தலித்தை விட தாழ்த்த படுவது தலித்தின் மனைவியே என்று புரிந்து ,பெண் விடுதலைக்கு தளம் அமைத்தவர்.

    மாற்று கருத்துகளை ஒடுக்க நினைக்காமல், கேட்டு பொறுமையாக விடையளித்தவர்.

    தன் கலகம் தனி மனித எதிர்ப்பாகவோ,இன துவேஷமாக மாறி சமூக கொந்தளிப்பு நேராமல் இயக்கத்தை நேரியக்கமாக நடத்திய தூய்மையாளர்.

    அவர் பேச்சை மூன்று முறை நேரில் கேட்டு ,நிறைய படித்து தெரிந்தது எனக்கு வாழ்வில் பாதை காட்டியது.

    இப்போது எனக்கு உள்ள வருத்தங்கள்-

    அவர் போட்ட பாதையில் நடப்பதாக கூறுபவர்களே,சாதி இன துவேஷத்தை முன்னிறுத்துவது.

    எல்லாமே விவாதத்துக்கு,கேள்விக்குரியது என்று சொன்ன அவரை பற்றியே விவாதிக்க விடாமல் அடக்க பார்ப்பது.

    தெய்வங்களின் சிலைகளை நீக்கி விட்டு அதற்கு பிரதியாக மனித சிலைகளை வணங்கும் மூட வழக்கங்களை வளர்ப்பது.(புத்தருக்கு நேர்ந்த அதே விபத்து)
    என்னதான் சொல்லுங்கள்..

    எனக்குள் இருக்கும் ஒரு ஞாயமான கேள்வி. அது பெரியார் ஆதரவாளர்க்கும் சரி அல்லாதவர்க்கும் சரி.

    ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை (பிராமணர்கள்) மட்டுமே ஜாதி த்வேஷம் செய்கிறார்கள் என்று சாடியவர் பெரியார் அவர்கள். பாம்பை பாப்பானை பார்த்தால், பாம்பை விட்டுவிடு பாப்பானை அடி என்று அறைகூவல் விடுத்தவர்கள் என்றால் எந்தளவுக்கு ஜாதி த்வேஷம் இருந்தது என்பதை அறியலாம்.

    அந்த காலத்தில் வேறு பல சமூஹதினர்களும் ஜாதிவெறி கொண்டவர்களாக கண்டிப்பாக இருந்திருக்கிறார்கள். உதாரணம் தேவர் சமூஹம். தேவர் - தலித் த்வேஷம் எவரும் அறியாதது இல்லை...வெட்டு குத்து நிகழ்வு அவளவு சாதாரணம்.

    அப்படி இருக்கையில் ஏன் பிராமணர்களை மட்டுமே சாடினார்கள்? தேவர்களை சாடவில்லை? காரணம் பிராமணர்கள் வாய்மூடி இருப்பார்கள்...ஆனால் தேவர் சமூஹத்தினர் ? வாய் திறந்தாள் அரிவாள் தான் பேசும் ! அதனால் வாய் திறக்கவில்லை இவர்கள். அப்போ இளிச்சவாயர்கள் பிராமணர்கள் ! இவர்கள் முழுமையான சமூக சீர்திருத்தவாதிகள?

    சரி அதை விடுவோம் ! கூத்தாடி..கூத்தாடி என்று ஒரு புறம் கூறியவர்கள் ....அப்படி கூதாடியவர்களுடன் எதற்கு உறவு வைத்துகொண்டு கொஞ்சி குழைந்தார்கள் ஆதிகாலத்திலிருந்தே ?

    கேட்டால் நட்பு வேறு அரசியல் வேறு என்பார்கள்..! மக்கள் என்றுமே ஆட்டுமந்தைகள் தானே என்ற எண்ணம் தான் காரணம் ! சீர்திருத்தம் கொண்டுவருகிறேன் என்று கூறி இன்று தமிழகம் எவ்வளவு சீரழிந்து போயிருக்கிறது என்பதை சற்று ஆராயிந்தால் புரியும்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •