டியர் ராகுல்ராம்,
விளையாட்டுப் பிள்ளை பற்றிய தங்களுடைய விமர்சனம் அருமை.
Printable View
நன்றி - லிஸ்டில் 100 நாட்களுக்கும் மேல் ஓடிய படங்களில் சில இடம் பெற வில்லை - ஓடியிய திரை அரங்குகளும் அதிகம் -
1. லிஸ்டில் சேர்க்க மறந்த படங்கள்
திருவருட்செல்வர் (சென்னை )
விளையாட்டுபிள்ளை (மதுரை )
என்தம்பி
சங்கலி
தியாகி ( ஸ்ரீலங்கா)
பரீட்சைக்கு நேரமாச்சு (சென்னை)
பெஜவாடா பொப்பிலி (ஆந்திரா )
விடுதலை (சென்னை)
ராஜா பார்ட் ரங்கதுரை ( சென்னை)
ராஜராஜ சோழன் (சென்னை)
சத்யம் ( யாழ் வின்சர் -ஸ்ரீலங்கா)
சந்திர குப்த சாணக்கியா ( ஆந்திரா )
2. அதிகமாக ஓடின திரைஅரங்குகள்
பராசக்தி - சென்னை (4) , மதுரை (2)
எதிர்பாராதது - சென்னை (5)
சம்பூர்ண இராமாயணம் - கோவை , தஞ்சை
கர்ணன் ( re release யையும் சேர்த்து ) - சென்னை -5
Pilot Prem Nath - கொலம்போ (3)
ராமன் எத்தனை ராமனடி - சென்னை 2
dear Murali - many thanks . Our analysis should always end up with your recalling the defining moments of the past - this would make the circuit complete . Neither I have this much memory nor I could correlate the way you do . hence this request.
நாம் எப்பொழுதும் இருப்பதை வைத்து சந்தோஷ படுவதில்லை - இருக்கும் குறைகளையே பெரிதாக நினைத்து கிடைத்த சந்தோஷத்தையும் தொலைத்து விட்டு எதையோ தேடிக்கொண்டே இருக்கிறோம்
இந்த பாடலை கேளுங்கள் :
நெஞ்சினில் ஒன்றாய் நிறைந்து விட்டவர்களுக்கு நினைவினில் குறைகள் வருவதில்லை! கண்களில் ஒன்றாய்க் கலந்து விட்டவர்களுக்கு இனி காட்சிகள் வேறாய்த் தெரிவதில்லை.
குறையில் நிறையை கண்டு மகிழ்ச்சியை தங்க வைத்து கொண்டால் வாழ்க்கையில் தோல்வி ஏது ? ஏமாற்றம் ஏது ? ---------------
தன்னால் நடக்க இயலாது என்பதைத் தலைவி கூற, தலைவன் அதற்கேற்றவாறு பதிலுரைத்துப் பாடுகிறான். மலரும் கொடியும் நடப்பதில்லை! அவை மணம்தர என்றும் மறப்பதில்லை! கோவிற்சிலைகள் நடப்பதில்லை! அதைக் குறையெனக் கலைகள் வெறுப்பதில்லை! தாமரை மலரும் நடப்பதில்லை! அதைத் தழுவும் கதிரவன் வெறுப்பதில்லை! முத்திரை பதிப்பதுபோல அமையும் இறுதி வரிகளைக் கவனியுங்கள்! நெஞ்சினில் ஒன்றாய் நிறைந்துவிட்டோம்; நினைவினில் குறைகள் வருவதில்லை! கண்களில் ஒன்றாய்க் கலந்துவிட்டோம்; இனி காட்சிகள் வேறாய்த் தெரிவதில்லை. அருமையான பாடல்!!!
http://youtu.be/IaxGu--YQpQ
NT யின் படங்களை கீழ்கண்டவாறு பிரிக்கலாம் :
1. சுனாமி , பூகம்பம் , மின்னல் , இடி இவைகளை சந்தித்து , அவைகளை வீழ்த்தி சாகா வரம் பெற்ற படங்கள் - வசூலிலும் மிக பெரிய புரட்சிகளை ஏற்படுத்திய படங்கள்
சில உதாரணகள் : ( not exhaustive )
1. பராசக்தி
2. வீரபாண்டிய கட்டபொம்மன்
3. திருவிளையாடல்
4. ராஜா
5. பட்டிகாடா பட்டணமா
6. ஞானஒளி
7. திரிசூலம்
8. வசந்த மாளிகை
9. தங்கபதக்கம்
2. போட்டி , பொறாமை , காழ்புணர்ச்சி இவைகளை சந்தித்தும் வெற்றி பெற்ற படங்கள் :
சில உதாரணகள் : ( not exhaustive )
1. தில்லானா மோகனாம்பாள்
2. கர்ணன்
3. பாபு
4. அவன்தான் மனிதன்
5. நவராத்திரி
6. சிவந்த மண்
7. தீபம்
8. கப்பலோட்டிய தமிழன்
3. தன் படமே தனக்கு போட்டியாக வந்து மகத்தான வெற்றிக்கு தடை போட்ட படங்கள்
சில உதாரணகள் : ( not exhaustive )
1. எங்க மாமா
2. அன்பு கரங்கள்
3. தேனும் பாலும்
4. நெஞ்சிருக்கும் வரை
5, ரத்த திலகம்
4. அரசியல் சூழ்நிலை , கூட்டாளிகளின் சதி , மற்றும் பல அரசியல் காரணங்கள் இவைகளால் தன் வெற்றியின் வேகத்தை சற்றே இழந்த படங்கள்
சில உதாரணகள் : ( not exhaustive )
1. பழனி
2. பாட்டும் பரதமும்
3. உனக்காக நான்
5. 100 நாட்கள் என்ற இலக்கை அடையாவிட்டாலும் , தயாரிப்பாளர்களுக்கும் , விநியோகஸ்தர்களுக்கும் மிகுந்த லாபத்தை தந்த படங்கள்
சில உதாரணகள் : ( not exhaustive )
1. எங்க மாமா
2. பழனி
3. தங்க சுரங்கம்
4. லக்ஷ்மி கல்யாணம்
5. ஊருக்கு ஒரு பிள்ளை
6. கவரிமான்
7. முரடன் முத்து
8. அன்பு கரங்கள்
9. நீலவானம்
6. கௌரமாக வந்து படத்தின் கௌரவத்தையும் , தயாரிப்பாளர்களின் கௌரவத்தையும் நிலை நிறுத்தின படங்கள்
சில உதாரணகள் : ( not exhaustive )
1. காவல் தெய்வம்
2. மனிதருள் மாணிக்கம்
3. தாயே உனக்காக
அவர் நடித்த படங்கள் எல்லாமே சாகா வரம் பெற்றவை - எந்த காலகட்டத்திலும் சோடை போகாதவை - நிரந்தரமானவை அதனால் அவைகளுக்கு என்றுமே மரணம் இல்லை
கண்ணன் சொல்வதுபோல
paritranaya sadhunam vinasaya cha duskrtam |
dharmasamsthapanaarthaaya sambhavami yuge yuge ||
ஒவ்வொரு யுகத்திலும் மீண்டும் மீண்டும் வெளி வந்து ஒரு புரட்ச்சியை செய்துகொண்டே இருக்கும்
தட்டுங்கள் திறக்கப்படும் , கேளுங்கள் கொடுக்கப்படும் !!
தேசபக்தியை பரப்பிவிட்டு , தெய்வீகத்தில் நம்பிக்கை வரவழைத்து , உணர்சிகளுக்கு உயிர் கொடுத்து , குடும்ப பாசத்தில் வாழவைத்து , மனித நேயத்திற்கு மதிப்பு கொடுக்க வைத்து , உரிமைக்கு குரல் கொடுக்க வைத்து , நண்பர்களுக்கு மதிப்பு கொடுக்க வைத்து , தியாக எண்ணத்திற்கு உயிர் கொடுத்து , கடமையை நல்லமுறையில் செய்ய வைத்து - பிறருக்காக வாழும் எண்ணத்தை வளர வைத்து - எத்தனை எத்தனை சாதனைகள் ?? - உழைப்புக்கள் !! அவர் படங்கள் மூலம் எவ்வளவு கற்றுகொண்டோம் - இன்னும் எவ்வளவு பாக்கி உள்ளது !! என்னும் எவ்வளவு ஜென்மங்கள் தேவைப்படும் ??
இது ஒரு அலசல் :
1. தேசபக்தி என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டுமா ?
பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )
1. கப்பலோட்டிய தமிழன்
2. நாம் பிறந்த மண்
3. வீரபாண்டிய கட்டபொம்மன்
4. ராஜபார்ட் ரங்கதுரை
2. தெய்வீகத்தை வளர்க்க வேண்டுமா ?
பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )
1. திருவிளையாடல்
2. திருவருட்செல்வர்
3. கந்தன் கருணை
4. ஸ்ரீவள்ளி
5. திருமால் பெருமை
3. மற்ற மதங்களின் உயர்வை தெரிந்து கொள்ள வேண்டுமா ?
பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )
1. பாவ மன்னிப்பு
2. எழுதாத சட்டங்கள்
3. ஞானஒளி
4. கடமை உணர்ச்சியை வளர்த்து கொள்ள வேண்டுமா ?
பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )
1. தங்கபதக்கம்
2. என் மகன்
3. ஜெனரல் சக்கரவர்த்தி
5. அண்ணன் தம்பி உறவில் தகராறா - திருத்திக்கொள்ள வேண்டுமா ?
பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )
1. சம்பூர்ண ஒரு கோயில்
2. பழனி
3. என் தம்பி
6. அண்ணன் தங்கை உறவில் தகராறா - திருத்திக்கொள்ள வேண்டுமா ?
பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )
1. பாசமலர்
2. தங்கைக்காக
3. தங்கை
4. அண்ணன் ஒரு கோயில்
7. வில்லன் எப்படி இருப்பான் என்று தெரிந்து கொண்டு உஷாராக வேண்டுமா ?
பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )
1. ரங்கோன் ராதா
2. அந்த நாள்
3. திரும்பி பார்
4.பெண்ணின் பெருமை
5. துளி விஷம்
8. உண்மையான நட்பை தெரிந்து கொள்ளவேண்டுமா ?
பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )
1. பார்த்தால் பசி தீரும்
2. உனக்காக நான்
3. கை கொடுத்த தெய்வம்
4. ஆலயமணி
9. மனிதனாக வாழ வேண்டுமா ?
பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )
1. அவன் தான் மனிதன்
2. அவன் ஒரு சரித்திரம்
3. பச்சை விளக்கு
4. உயர்ந்த மனிதன்
10. கௌரமாக வாழ்ந்து புகழ் பெற வேண்டுமா ?
பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )
1. கெளரவம்
2. வியட்நாம் வீடு
11. மென்மையான காதலை புரிந்து கொள்ள வேண்டுமா ?
பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )
1. வசந்த மாளிகை
2. தில்லானா மோகனாம்பாள்
சொல்லிகொண்டே போகலாம் -- எது இயற்க்கை எது செயற்கை என்று புரிந்து விடும் - முகத்தை மூடிக்கொண்டு அழுவதும் , கொள்ளு பேத்திகளுக்கு சம மானவர்களை கதாநாயகிளாக்கி கடைசியில் அவர்களில் பலரை தங்கைகளாக்கி , வில்லனை எமனுக்கு தம்பியாக்கி நடிக்கும் உலகத்தில் nt ஒருவரே தட்டுங்கள் திறக்கப்படும் , கேளுங்கள் கொடுக்கப்படும் என்று சொன்னவர், வாழ்ந்தவர் , இன்னும் வாழ்பவர்.
Films like thanga padumai, thookku thookki, enga mama, sumathi en sundari ....painful to observe that they have not reached 100 days mark. similarly Karnan, Paalum Pazhamum, aalaya mani, Pudhiya Paravai and TM expected as silver jubilee hits.
அன்புள்ள SS
தங்கபதுமை , தூக்கு தூக்கி - இரண்டுமே வெற்றி படங்கள் - The List Published by Gopal is not updated one . எனக்கு தெரிந்த உண்மைகள் : ( தேங்க்ஸ் டு முரளி -----)
Quote
முதன் முதலாக ஒரு நடிகர் நடித்த இரண்டு படங்கள் ஒரு வருடத்தில் ஒரே நாளில் வெளியிட்ட சாதனை மட்டுமல்லாது அதே வருடத்தில் மீண்டும் ஒரு முறை ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானதும் நடிகர் திலகம் மட்டுமே செய்த சாதனைகளாகும். அவை பின்வருமாறு
படங்கள் - அந்த நாள் & கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.
வெளியான நாள் - 13.04.1954.
படங்கள் - கூண்டுக்கிளி & தூக்கு தூக்கி.
வெளியான நாள் - 26.08.1954
சென்னை சினிமா ரசிகர்கள் சங்கம் துவங்கப்பட்ட முதல் வருடத்திலேயே முதன் முதலாக பரிசு பெற்ற படங்கள் - அந்த நாள் மற்றும் தூக்கு தூக்கி.
Unquote
இதில் கூண்டுக்கிளி சுமாரான வெற்றி அடைந்தது ஆனால் தூக்கு தூக்கி மகத்தான வெற்றியை தழுவியது
2. தங்கபதுமை - என் பதிவுகளை பாருங்கள்
3. எங்க மாமா - 100 நாட்களை கடக்க வில்லை ஆனால் வசூலில் புரட்ச்சியை ஏற்படுத்தியது - 85 நாட்கள் ஓடியது
4. சுமதி என் சுந்தரி - இதுவும் ஒரு வெற்றி படமே - 80 நாட்கள் ஓடியது
நீங்கள் சொன்ன படங்கள் SJ யை தொடாதது ஏமாற்றமே - போதிய இடைவெளியில் வந்திருந்தால் , 300 படங்களும் - ஒவ்வன்றாக 300 நாட்களுக்கு மேலாக ஓடியிருக்கும் - NT க்கு film planning இல் நம்பிக்கை இல்லை - எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் , வாழ வேண்டும் என்று நினைப்பவன் தனது வெற்றி,தோல்விகளை பற்றி கவலை பட மாட்டான் என்பதற்கு NT ஒரு நல்ல உதாரணம்
உங்களுக்கு தெரியுமா - சத்தியம் இங்கு சரியாக ஓடவில்லை ஆனால் ஸ்ரீலங்காவில் 100 நாட்களுக்கும் மேலாக ஓடியது --
PS : Murali - can you kindly validate my above inputs to SS ? Thanks
Blast from the past: Thanga Pathumai (1959)
RANDOR GUY
Thanga Pathumai
cinema
Tamil cinema
Sivaji Ganesan, Padmini, T. R. Rajakumari, M. N. Nambiar, M. N. Rajam, E. V. Saroja, N. S. Krishnan, R. Balasubramaniam, ‘Kuladeivam' Rajagopal and T. P. Muthulakshmi
One of the noteworthy films of 1959, which was also a box-office hit, was Thanga Pathumai, a Jupiter Pictures production. Directed by A. S. A. Sami, it has an interesting back story.
Jupiter Pictures entered the big league in 1942 with the phenomenal success of Kannagi, in which P. Kannamba created history with her scintillating performance in the title role. P. U. Chinnappa lent excellent support playing Kovalan.
During the late 1950s, Jupiter Somu thought of remaking Kannagi with Sivaji Ganesan as Kovalan. He projected the 1942 version to his intimate friend and mentor C. N. Annadurai who watched it along with Sami, who was to direct the second version. Annadurai rightly told them that remaking the film would not prove successful as much water had flowed under the Tamil Cinema bridge since 1942. The project was dropped but Somu carried in his mind the idea of making something similar about a woman, who is chastity personified fighting a relentless battle to win her husband back… the movie was Thanga Pathumai.
A writer who was popular during that period was Mika Waltari. He wrote ‘The Egyptian', a bestseller. The Hollywood movie mogul Darryl F. Zanuck, boss of 20th Century Fox, bought the novel and had it scripted by the well-known screenwriters of the day, Philip Dunne and Casey Robinson. He engaged Michael Curtiz (maker of the immortal classic Casablanca) to direct the film and Leon Shamroy to shoot it. Edmond Purdon was brought in to play the lead and the others in the cast included brilliant star and actor Peter Ustinov, Victor Mature, Gene Tierney, Jean Simmons and the famous character actor John Carradine. Set in ancient Egypt, the Hollywood film was about an abandoned baby who was brought up to become the physician of the Pharaoh of Egypt. The Hollywood movie was a success in India, and Sami, a keen student of literature and Western Cinema, engaged well known Tamil writer of the day Aru Ramanathan to do the screenplay and dialogue.
(Ramanathan was well known as the editor of a monthly magazine named Kaathal which created a sensation in those conservative days!)
In the Tamil movie, Sivaji Ganesan plays the younger physician to the king (R. Balasubramaniam) and his wife (Padmini) was modelled on Kannagi as the personification of female virtues. The physician is commanded to the palace to treat the king where the princess (M. N. Rajam) falls for him and virtually enslaves him, preventing him from going back to his wife. She even goes to the extent of blinding the hero and in a long drawn out song-oriented climax, the wife prays before the gold statue of Parvathi, hence the title, and gets back her husband's sight and happiness.
Running to well over three hours (18,449 feet), the film was interestingly narrated onscreen with excellent dialogue and music (Viswanathan-Ramamurthy, lyrics Udumalai Narayana Kavi, Pattukottai Kalyanasundaram, Kannadasan, Marudhakasi).
A. S. A. Sami told this writer years later about Padmini's devotion to work. During breaks for lunch and ‘tiffin', she would walk up and down the shooting floor with the script in her hand studying the dialogue over and over and delivering it, giving it different shades of meaning. Sivaji was, of course, his usual excellent self. Rajam was impressive in a difficult role. The film also had T. R. Rajakumari, Nambiar, E. V. Saroja, T. P. Muthulakshmi and ‘Kuladeivam' Rajagopal.
The film had picturesque sets by T. V. S. Sama. Thanga Pathumai proved to be a hit in its re-release, and is one of the classics of Tamil Cinema.
Remembered for Padmini's and Sivaji Ganesan's performance, and the classic song ‘Koduthavaney'.
Keywords: Tamil classic, Thanga Pathumai, Sivaji Ganesan
Thookku Thookki 1954
Mathrubhumi Yearbook 2014 - Complete reference book & ultimate guide for all competitive exams. mathrubhumi.com/Yearbook2014
Ads by Google
RANDOR GUY
SHARE · PRINT · T+
GREAT SUCCESS: Thookku Thookki.
GREAT SUCCESS: Thookku Thookki.
TOPICS
cinema
Tamil cinema
arts, culture and entertainment
Sivaji Ganesan, T. S. Balaiah, Lalitha, Padmini, Ragini, P. B. Rangachari, C. K. Saraswathi, M.S.S. Bhagyam and T. N. Sivathanu
Thookku Thookki was a popular folk tale and stage play. It was brought to the screen in 1935 by the famous Madurai-based Rayal Talkie Distributors with the movie pioneer R. Prakash directing it and handling the camera.
Noted star of that era C.V.V. Panthulu played the title role with K. T. Rukmini in the female lead. K. N. Kamalam and ‘Clown' Sundaram formed part of the cast. R. M. Krishnaswami (RMK), a young, talented camera assistant, was working with Prakash. This film was embedded in his mind. He turned producer in the 1950s with his Aruna Films and made his directorial debut with Rajambal. He took up Thookku Thookki as his next production, which turned out to be the biggest success of his career.
The tale was all about five maxims — 1. A father cares only for the riches earned by his son; 2. Only a mother stands by the son through thick and thin; 3. A sister values her brother only for the gifts he brings her; 4. A wife should never be relied on for she will even murder her husband; and 5. A friend in need is always a friend indeed. A prince (Sivaji Ganesan) listens to the maxims in a religious discourse and sets out to prove them wrong. He undergoes several adventures and finds more than a grain of truth in the maxims.
Sivaji as the hero came up with a fine performance, while T.S. Balaiah in the role of a North Indian Seth was superb. The scenes featuring Balaiah speaking Sowcarpet Tamil with his mistress (Lalitha, the hero's wife) were great.
What elevated this film to great success was its scintillating music composed by G. Ramanathan. The lyrics were by A. Marudhakasi, Thanjai Ramaiah Das and Udumalai Narayana Kavi.
An interesting back story about the song composing… Udumalai Narayana Kavi based in Coimbatore reached Madras by the Blue Mountain Express on the morning of the day scheduled for the song composing and recording. He was to leave by the same train from Central Station around eight in the night. In less than 12 hours, Narayana Kavi wrote five of the eight songs, which were composed immediately by G. Ramanathan, rehearsed by T. M. Soundararajan and others. An amazing feat of creativity, it vouches for the musical genius of G. Ramanathan, the poetic talent of Narayana Kavi and the captivating singing of TMS.
Many of the songs rendered by Soundararajan became popular and it was this film that laid the foundation for his glorious career. Female singers M. L. Vasanthakumari, M. S. Rajeswari, P. Leela and A. P. Komala also contributed to the richness of the music. Noted singer and actor V. N. Sundaram lent his voice to one of the songs along with TMS and others.
Remembered for: the impressive performance of Sivaji Ganesan and the songs rendered by TMS.
Keywords: Thookku Thookki, Sivaji Ganesan, T. S. Balaiah, Lalitha, Padmini, Ragini
சார்,
நீங்கள் எழுதுவதை பற்றி நான் ஒன்றும் கூற விரும்பவில்லை. தங்க பதுமை வெளியான போது சாந்தி,கிரவுன்,புவனேஸ்வரி மூன்றும் இல்லை. தாங்கள் வெளியிட்டிருக்கும் விளம்பரம் மறு வெளியீடு. என்னுடைய லிஸ்ட் மிக துல்லியமானது.பம்மலார் 95% சரி என்று சொன்னதாகும் .
நான் கொடுத்திருக்கும் லிஸ்ட் நூறு நாள் கண்ட படங்கள். வெற்றி தோல்வி அலசல்கள் அல்ல.நூறு நாள் படங்கள்தான் வெற்றி என்பது தவறான கணிப்பே. தூக்கு தூக்கி,தங்கபதுமை,சுமதி என் சுந்தரி ,செல்வம் போன்றவை நூறு நாள் எல்லை கோட்டை தொடாவிடிலும் மிக பெரிய வெற்றி படங்களே.
Silver Jubilee Films List of நடிகர் திலகம்
Film Name Theater Name(s)
1)Parasakthi Colombo - Mylon,
Trichy -Wellington
2)Sampoorna Ramayanam Madurai - Sridevi
3)Veerapandiya Kattabomman Madurai - New cinema
4)Bagapirivinai Madurai - Chinthamani
5)Irumbuthirai Kovai - Karnatick
6)Pava Mannippu Chennai - Santhi
7)Pasamalar Chennai - Chitra
8)Thiruvilaiyadal Chennai - Santhi, crown ,buvaneswari
9)Dharti (Hindi) Delhi - Amba, Liberty, Nataraj, Moti
Bombay - Minarva, Anand, Ashok
Kolkotta - Imperial
10)Pattikada Pattanama Madurai - Central
Chennai - Santhi & Chitra
Selam - Jeya & Nataraja
Trichy - Raxy & Balaji
11)Vasantha Maligai Chennai - Santhi
Madurai - Newcinema
Colombo - Kepptial
Yazh Nagar - Wellington
12)Thangapadakkam Chennai - Santhi, Crown, Bhuvaneswari
Trichy - Prabath
13)Uthaman Colombo - Central
Yazh Nagar - Rani
14)Thiyagam Madurai - Chinthamani
15)Pilot Premnath Colombo - Kepptial
Yazh Nagar - Vinsar
16)Tirisoolam Chennai - Santhi, Crown, Bhuvaneswari
Madurai - Chinthamani
Trichy - Prabath
Selam - Oriental
Kovai - Geethalaya
Vellor - Apsara
Colombo - Jesima
Yazh Nagar - Rani
17)Theerppu Madurai - Minipriya & Cinipriya
18)Needhipadhi Madurai - Cinipriya & Minipriya
19)Sandhippu Madurai - Sugapriya
20)Mudhal Mariyadhai Chennai - Santhi
Kovai - Archana & Darchana
Thanjai - Kamala
Madurai - Kuru & Saraswathy
21)Padikkadhavan Chennai - Bala Abirami
Madurai - Central
22)Devar Magan Chennai - Annai Abirami
Madurai - Meenachi Paradise
23)Padayappa Chennai - Albert & Baby Albert, Abirami & Bala Abirami, Brintha, Udayam,
Madurai - Amirtham
Kovai - Ragam & Anupallavi
24)School Master (Guest)(Kannada) Bangalore - States
25)Baktha Thukaram (Guest)(Telugu) Hyderabad - Santhi
திரு கோபால்
உங்கள் பதில் பதிவுக்கு நன்றி - உங்கள் விளக்கம் " 100 படங்கள் தான் வெற்றி என்பது தவறான கணிப்பே " மிகவும் தேவையானதும் கூட . பலருக்கு புரிவதில்லை - படங்கள் பல நடிகர்களுக்கு 100 நாட்கள் ஓட்ட பட்டுள்ளன - இன்று அப்படிபட்ட படங்களை அவர்கள் ஆதாரம் இல்லாமல் புகழ்வதும் உங்களுக்கு தெரிந்ததே --- NTயின் வெற்றி படங்கள் என்று list பதிவு செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் - லிஸ்டும் இன்னும் நீளமாக இருந்திருக்கும்
படிப்பவர்கள் மனதில் இவ்வளவுதானா NT யின் வெற்றி படங்கள் என்ற தாழ்வான எண்ணம் வந்து விடகூடாது அதனால் தான் SS க்கு விளக்கம் கொடுத்தேன் -
உங்கள் லிஸ்ட் கண்டிப்பாக Update ஆனது அல்ல - 100 நாட்கள் ஓடிய சில படங்கள் அந்த லிஸ்டில் இல்லை - If you have downloaded the list from www.nadigarthilagam.com and posted here then that list does not seem to be an updated one .
We are all friends and fans of NT at the end of the day - we have our own style of describing and glorifying our acting god . There is no fixed or any standardized formula or format in narrating about NT. But I strongly believe in not hurting anyone unnecessarily and provoking them with any wrong /fake information and in the process , try to maintain that my stand is always correct. Let others practice this but certainly not we friends !!
with warm regards
http://youtu.be/RABmwdzsOYw
ஒரு அருமையான எந்த காலத்திற்கும் பொருந்த கூடிய பாடல்
ஒரிஜினல்
யாரடா மனிதன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே
யாரடா மனிதன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே
மனிதரில் நாய்கள் உண்டு , மனதினில் நரிகள் உண்டு
பார்வையில் புலிகள் உண்டு , பழக்கத்தில் பாம்பும் உண்டு
நாயும் , நரியும் புலியும் ,பாம்பும் வாழும் பூமியிலே
மானம் , பண்பு ,ஞானம் கொண்ட மனிதனை காணவில்லை
யாரடா மனிதன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே
சிரிப்பினில் மனிதன் இல்லை , அழுகையில் மனிதன் இல்லை
உள்ளத்தில் மனிதன் இல்லை - உறக்கத்துள் மனிதன் உண்டு
வாழும் மிருகம் தூங்கும் தெய்வம் , நடுவே மனிதனடா
எங்கோ ஒருவன் இருந்தால் அவனை உலகம் வணங்குமடா
யாரடா மனிதன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே
==================
இந்த பாடலை சற்றே மாற்றி எழுதியுள்ளேன் - NT க்கு எப்படி பொருந்துகின்றது என்று பாருங்களேன் !
யாரடா நடிகன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் கொலைவெறி தான் மீதி இங்கே
யாரடா நடிகன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் கொலைவெறி தான் மீதி இங்கே
நடிப்பினில் மேதை ஒன்று , மனதினில் நிலைத்தது உண்டு
தமிழகம் மறந்த ஒன்று , தமிழினை கொன்றதும் உண்டு .
நாயும் , நரியும் புலியும் ,பாம்பும் நடிக்கும் திரையினிலே
நடிப்பு , பண்பு ,ஞானம் கொண்டநடிகனை காணவில்லை
யாரடா நடிகன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் கொலைவெறி தான் மீதி இங்கே
சிரிப்பினில் நடிகன் இல்லை , அழுகையில் நடிகன் இல்லை
உள்ளத்தில் தமிழும் இல்லை - உறக்கத்துள் நடிப்பு உண்டு
வாழும் திரைஉலகம் தூங்கும் நடிப்பு , நடுவே நடிகனடா
எங்கோ திலகம் ஒருவன் இருந்தால் அவனை உலகம் வணங்குதடா
யாரடா நடிகன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் கொலைவெறி தான் மீதி இங்கே
நாம் கல்யாண ராமனை சந்தித்து பூரித்து ஆனந்த கண்ணீர் சிந்தி இருக்கிறோம் - தசரத ராமனை பார்த்து இவரின் துணை நமக்கு என்றும் இருக்காதா என்று ஏங்கி இருக்கிறோம் - ரகுராமனை நெஞ்சிருக்கும் வரை நாம் மறக்க போவதில்லை --
இந்த பாடல் ராம நவமி யை முன்னிட்டு அந்த அழகிய ராமனுக்கு ஒரு கவிதை அஞ்சலி
ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்
இந்தப் பாடல் நம்மைப் பல தளங்களில் பல உணர்ச்சிகளில் ஆழ்த்துகிறது. ஆரம்பிக்கும் போது இசையும் , பக்தியும் நம்மை மயக்கினாலும்,இறுதியில், பாடலின் லயம் தீவிரமாகும் போது ராமனின் தோற்றம்,ஆகிருதி, அன்பு, கருணை , பாசம், போன்ற அனைத்து கல்யாண குணங்களும் தாண்டவமாடுகின்றன. அப்போது அங்கே பாட்டு இல்லை, இசை இல்லை.. பாடுபவர் இல்லை. ராமன் மட்டுமே மிஞ்சுகிறான். அற்புதம் !
http://youtu.be/87V-TvibPfI
ராமனை பற்றி சொன்னவுடன் கண்ணனை பற்றியும் சொல்லவேண்டுமே , தெய்வ மகனாக வந்து நம் எல்லோரையும் கௌரவித்த அந்த கண்ணனை ஒரு பெண் பிருந்தா வனத்திற்கு வருகின்றேன் , எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணையை கொடுக்க மாட்டியா என்று புலம்பி முறை இடுகின்றாள் - உருகவைக்கும் பாடல் - இன்று திருமணம் ஆகாத பல பெண்கள் மனதிற்குள் பாடும் பாடல் இதுவாகத்தான் இருக்கும் -
கண்ணதாசனின் வரிகளில் கண்ணன் வாசம் செய்வது தெரியும் - இந்த பாடல் உங்களுக்காக
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
பிருந்தாவனத்திற்கு வருகின்றேன் - என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன் - கிருஷ்ணா நான் ஒரு பாவியோ
என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ ?
(பிருந்தாவனத்திற்கு)
கீதையில் உன் குரல் கேட்டேனே - என் கிருஷ்ணனின் திருமுகம்
பார்த்தேனே - பாதையில் உன் துணை வரவில்லையே -பகவான்
திருவருள் தரவில்லையே !
(பிருந்தாவனத்திற்கு)
குங்குமம் அணிந்தால் உன் தேவி - தன் கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி
சங்கமம் என்பது எனக்கு இல்லையோ - அந்த மங்கள
மரபுகள் உனக்கிலையோ
(பிருந்தாவனத்திற்கு)
கங்கையில் வெள்ளம் தண்ணீரோ இல்லை கன்னியர் விடும்
கண்ணீரோ - கண்ணனின் மனமும் கல்மனமோ -எங்கள்
மன்னனுக்கு இது தான் சம்மதமோ
(பிருந்தாவனத்திற்கு)
http://youtu.be/T6JLCKmwhbk
Nowadays there is a paradigm shift in judging the level of success of a movie that is released in umpteen number of theatres at a time focusing on the initial collections before a movie is really a success or failure. Number of theatres mulltiplied by number of shows ... just 3 or 4 weeks the collections satisfy the producer and distributor. Hence a 100 days run or silver jubilee run are outdated. But in those days number of theatres were limited for release and hence 100 days or SJ mark decided the success. In my opinion thookku thookki is a fantastic demo of the versatility of NT and Thanga Padumai needless to say the impact of his acting on the audience. In their reruns these two movies have minted money and I have witnessed more than 5 weeks run even in a small town during rerelease. The everrefereshing Pudhiya Paravai and the timeless classics Karnan and Thillana Mohanambal still remain mystery in my mind as they are the top rated movies that pop up in anyone's mind whenever NT's acting prowess is thought of.
1982- MAKKAL KURAL
http://i62.tinypic.com/2prfzhw.jpghttp://i57.tinypic.com/28thlpd.jpg
அன்புள்ள வினோத் சார் - என் பதிவுகளை படித்துவிட்டு மனமார போனில் பாராட்டியதற்கு உங்களுக்கு என் உள்ளம் கனிந்த நன்றி - உங்கள் இந்த பாராட்டும் குணம் நான் முழுமையாக இன்னும் கற்றுக்கொள்ளவில்லை - மற்றவர்களின் பதிவுகளை நான் தாமதமாகத்தான் பாராட்டுகிறேன் - உங்கள் நடப்பின் மூலம் , இந்த குறைபாடை அறவே நீக்க முயற்ச்சிக்கிறேன்
உங்கள் மக்கள் குரல் பதிவுகள் மிகவும் அருமை - layout யை out of focus பண்ணாமல் சிரமம் மிக எடுத்து எங்களுக்காக பதிவிட்டுள்ளீர்கள் அதற்கும் எங்கள் மனமார்ந்த நன்றி - இரண்டு படங்களும் மிகவும் அருமையான படங்கள் - காலத்தால் அழிக்க முடியாதவைகள்
அன்புடன் ரவி
திரு கோபால் - உங்கள் பரிவுக்கு நன்றி - நீங்கள் இதை PM ஆக , இயல்பாக அனுப்பியிருக்கலாமே - பொதுவாக போட்டு ஒருவர் மனதை ஏன் புண் படுத்தவேண்டும் ? திரி தோய்ந்த இருந்த சமயத்தில் ( சிலை காரணமாக ) பதிவுகளை போட்டு இந்த திரியில் ஒரு உற்சாகத்தை கொண்டு வந்தவர் வினோத் - சிலை விஷயம் முடியும் வரை சோக கீதத்தைதான் இந்த திரியில் கேட்கவேண்டும் என்று சொன்னவர்களை அவர் போட்ட பதிவுகள் மனம் மாற வைத்தன ---- இயல்பாக இருப்பவர்கள் நல்ல பதிவுகளை ஏன் போடுவதில்லை ? திரியின் வேகம் ஏன் அடிக்கடி reverse gear இல் செல்கிறது ?
ஏன் நாம் மற்றவர்கள் இங்கு போடும் பதிவுகளை பாராட்ட தயங்குகிறோம்? - போடும் நபர்களை ஏன் உற்சாகம் படுத்துவதில்லை ? காசா ? பணமா ? சில நல்ல வார்த்தைகள் தானே ? கர்ணனை ரசிக்கும், போற்றும் நாம் மற்ற பதிவுகளை பாராட்டுவதில் ஏன் கர்ணனனுக்கு எதிர்மறையாக இருக்கிறோம் ? இதுதான் இயல்பா ? இதன் பெயர் ஈகோ --- மற்றவர்கள் பாராட்டவேண்டுமே என்பதற்காக பதிவுகள் இங்கு யாரும் போடுவதில்லை - ஒரு ஆத்ம திருப்தி அவ்வளவு தான் - இறைவனை வித விதமாக அலங்காரங்கள் செய்து அழகு பார்ப்பது போல நம் acting god யை வித விதமான கோணங்களில் அவருடைய பரிமாணங்களை கோர்த்து இந்த திரியில் அழகு பார்க்கிறோம் - இதை யார் வேண்டுமானாலும் புகழலாம் - இது இயல்புதானே !!
உங்கள் எழுத்தின் வளமையில் மனம் பறி கொடுத்தவர்களில் நானும் ஒருவன் , ஆனால் வளமையை நீங்கள் அதிகமாக மற்றவர்கள் மனதை புண் படுத்துவதில் செலவழிக்கிண்டீர்கள் என்று நினைக்கும் போது மனம் மிகவும் வேதனை படுகின்றது - நான் என் பதிலை PM ஆகத்தான் அனுப்பி இருப்பேன் - ஆனால் என்னுடைய பழைய PM யே நீங்கள் படிக்காத போது , இதை இங்கு பதிவிடுவதை தவிர்க்க முடியவில்லை
அன்புடன்
ரவி
Reproducing the second song posted in Padalgal Palavitham [பாடல்கள் பலவிதம்] thread in case people had missed out.
SIVAJI SEASON - SONG NO 2
SIVAJI SEASON - ELLORUM KONDAADUVOM
பாவ மன்னிப்பு - எல்லோரும் கொண்டாடுவோம்
Acknowledgement:
Various Magazines with special thanks to “AVM –60” by M.Saravanan
Mani Sir’s previous song threads
Fellow Hubber and actor Mohanram for his valuable info addition
PAAVA MANNIPPU
For the last 50 years, people who are aware of Tamil cinema (forget about their age - they can be between 15 and 75) will recognise one alphabet and immediately identify that with two people. The alphabet is pa and the people who readily come to mind are NT and BheemSingh. This duo of NT – BheemSingh literally swept the Tamil audience off their feet by delivering quality movies one after another with an unfailing consistency that marked a watershed in the annals of Tamil Cinema. So much so that other directors who were directing NT during those times had to make conscious efforts to make their movies stand. Some succeeded like K.Shankar (Aalaya Mani) and LV Prasad (Iruvar Ullam) whereas some good films like Punar Jenmam and Ellam Unakkaaga did not get the success they deserved. Even now that combination is spoken with awe. The song we had selected for discussion is from one such immortal movie of this combo – PAAVA MANNIPPU.
Paava Mannippu carries another distinction in the sense it came in 1961, a year that saw the release of three greatest Paa varisai movies and Paava Mannippu was the first one (16.03.1961) followed by Paasa Malar (27.05.1961) and then Paalum Pazhamum (09.09.1961) and it goes without saying that all three were Super duper hits. Now before proceeding to the song some background news on the movie. BheemSingh had started Buddha Pictures and produced Pathi Bakthi, the starting point of Pa. Then he did Baagha Pirivinai that was produced under the Saravana Pictures Banner. After this he planned a movie with Chandrababu in the lead. CB had given a knot for the story. A man born as a Hindu grows up as a Muslim and loves a Christian girl. Bheemsingh decided to developon this. He named the movie as Abdullah. Shooting started and around 2000 feet was shot.
On seeing the rushes, Bheemsingh had a feeling that something is amiss. He being very close to AVM Productions discussed the issue with AVM. Saravanan. Saravanan also saw the rushes and though he also felt the same about the portions shot, the knot attracted him. He spoke to his father AV.Meiyyappan about this and Bheemsingh went and met AVM Chettiar. It was decided that Buddha Pictures and AVM would co-produce the film. AVM would finance the project and profit would be equally shared. The Budget was fixed as 4.5 Lakhs. It was also decided to re work the script.
Bheemsingh had a unique style of script writing. He would always have some writers in his unit like Valampuri Somanathan, Arangannal and Irai Mudi. Everybody would write out a screenplay on their own and after discussion, Bheemshingh’s assistant Thirumalai (who later with another colleague Mahalingam formed a director duo and did Sadhu Mirandaal and Aalayam) would collate all three and form the screenplay that is going to be filmed and Solai Malai would write the dialogue. The Pooja of Paava Mannippu was held on Jan 20th of 1960. The screenplay writing was going on. At this point of time NT’s brother VC Shanmugam’s marriage took place in Abotsbury (He married the younger sister of Kamala Ammal, the wife of NT). During the marriage, Saravanan met Bheemsingh and enquired about the progress. Bheemsingh had replied that the script has shaped up very well. But he told Saravanan, that with the turn of events that took place in script writing, Chandrababu would not be able to do justice to the role and it required an actor of NT’s caliber to cope with. Saravanan though happy was apprehensive about how Chandrababu would take it. Because Chandrababu was known as a person who could have extreme mood swings and Bheemsingh himself took the responsibility of taking up matter with CB and Babu, to everyone’s surprise agreed to move out. Though CB had given the knot, it was fully developed by Bheemsingh’s unit and therefore in the titles the credit for story was given to Buddha Pictures Kadhai Ilakkaa, a common practice carried out during those days. Now the budget had to be reworked and it was revised to 10.5 Lakhs. What started as a simple story had by now grown into a story dealing with a much-discussed social topic – religious amity So NT came in as the hero and Bheemsingh immediately booked Gemini, Savithiri, Devika, MR Radha, SV Subbiah, and Balaiah. Naagaiah, MV Rajamma and Rama Rao were also there.
Madurai formed the backdrop of the story, where MRR (Aalavandar) would be running a diamond business. MV Rajamma as his wife and Balaiah as his driver, Rama Rao as his assistant and Subbiah as his friend James completed the casting. MRR is shown as a greedy person and as usual his wife is a good woman. They have two sons. Balaiah has one daughter and his wife is in an advanced stage of pregnancy. A north Indian businessman who comes to sell diamonds is tricked and murdered by MRR and the blame is put on the head of Balaiah, who is arrested. His wife delivers a female child and dies.
MV Rajamma, who wants to atone for her husband’s sin, gives this child to James. The elder girl is taken care of by an elderly woman neighbour of Balaiah. Balaiah on hearing about the developments escapes from the prison and kidnaps the younger son of MRR and in a fit of anger throws the child on to the railway track but the child is saved by an Islamic Medical practitioner who with a help of a Hindu friend sets up a dispensary (BharathiVaidya Salai) in Ponnagaram a suburb of Madurai which is inhabited by the poor. He names the child as Rahim. So the stage is set with one son of MRR growing up in his own home as a Hindu (Gemini-who becomes a Police Inspector), while the other son grows up as a Muslim and engages himself in social service. In the same manner, whileBalaiah’s elder daughter (Savithiri) is a Hindu, his second daughter (Devika) who is brought up by James grows up as a Christian, though all four are by birth Hindus. With such a plot, Bheemsingh simply delivered.
Now coming to the songs.
There is still a large section of Population (believe me – it is really large) who are of the firm opinion that when it comes to songs, its contents, its tune, its BGM, its filming and enactment, the combination of NT –Bheemsingh- Kannadasan- VR is unbeatable. On any given day this combo would rock.
Paava Mannippu was one among the golden musicals dished out by this combo. All the songs were Super Duper hits and the fact that even after 53 years have gone by, all the songs retain their charm and craze speaks for their longevity.
The Film in total had eight songs and all were hits. (In fact in later years, when the film was re- released), the advertisement was like this.
பாடல்கள் எட்டு! அத்தனையும் தேன் சொட்டு!
All the songs were recorded. Saravanan had an idea and he with the help of the radio advertiser L.R.Narayanan had sent the record containing all songs to Mayil Vahanan, the announcer in Radio Ceylon. All the songs were played in Radio Ceylon and they became a big hit. Bheemsingh had a fear that repeated playing might make the songs stale during release. But Saravanan was very confident and he even cited the example of Kohinoor tuned by Naushad, which had been aired for a longer period, and it helped the film. Saravanan was right and when the movie was released, the public received the song sequences with thunderous applause.
SONG SITUATION
Now coming to our song, this serves as the introduction of NT in the movie. Not only him, GG, Savithiri and Devika are introduced during the song. So a single song had served to introduce all main characters and it has been done clearly without creating any confusion in the minds of the audience. But it seems that the song was not in the scheme of things in the first place. Later when discussions were in the advanced stage, this song situation was thought of and it made Bheemsingh’s task easier. Kannadasan was assigned the task.
The period was 1960 and Kannadasan was still with DMK. So he was supposed to be an atheist. But as for as Kannadasan was concerned, beliefs and business were different things and it should be said here that he had a vast knowledge about all religions. He who was known as a Kannan devotee had also written about other religions in the films. His combination with APN in films like Thiruvilayadal, Saraswathy Sabatham, Kandhan Karunai, and Thiruvartuselvar brought out the saivaite based songs and Thirumal Perumai saw him penning Vaishanvaite songs (Thirumal Perumaikku Nigarethu – a
classic on the Dasavatharam). Devar used him to bring out the glories of Muruga in his Dhandayuthapani Films movies. If this is the case for his own religion, Kannadasan for Christianity came out with songs which are ever green and aired till today.
In Thaaye Unakkaaga, the song “Yesunathar Pesinal avar enna pesuvaar?” is one example. Kannadasan had read all Holy books and just as he put the Gita in simple Tamil in Karnan (Maranathai Enni Kalangum Vijaya), he used biblical language in Devane Ennai Paarungal (Gnana Oli) and Vaanamennum Veedhiyile (Annai Velankanni). In fact the songs of Annai Velankanni would highlight his knowledge on Christianity. No wonder he wrote “Yesu Kaaviyam” in the last leg of his life. Another song where he brought out the goodness of all religions is from Kuzhandhaikkaga. The song “Devan Vandhan” would have a pallavi
ராமன் என்பது கங்கை நதி
அல்லா என்பது சிந்து நதி
இயேசு என்பது பொன்னி நதி
(This was only the second time the combo of Sirkazhi, TMS and PBS had come together, the only other occasion being Aarodum Mannil engum Neerodum in Pazhani).
So Ellorum Kondaaduvom was a starter for all these songs, which came later.
SONG
Kannadasan aided by a powerful pen always highlighted the songs with a large dose of practical and philosophical thoughts thrown in. For practical life he advises against laziness. Like this
கல்லாக படுத்திருந்து
களித்தவர் யாருமில்லே
கை கால்கள் ஓய்ந்த பின்னே
துடிப்பதில் லாபம் இல்லே
His favourite philosophy comes behind. Simple but see how effective are the words
ஆடையின்றி பிறந்தோமே
ஆசையின்றி பிறந்தோமா
ஆடி முடிக்கையிலே
அள்ளி சென்றோர் யாருமுண்டோ
He also advocates the religious amity in his unique style
நூறு வகை பறவை வரும்
கோடி வகை பூ மலரும்
ஆட வரும் அத்தனையும்
ஆண்டவனின் பிள்ளையடா
கடலுக்குள் பிரிவுமில்லை
கடவுளில் பேதமில்லை
With Kannadasan completing his task and the Mellisai Mannargal churning out a simple but lovely melody the stage was set for TMS to breathe life into it. At this time the MDs and Bheemsingh had a thought and they decided to implement it. When we say Islamic songs, the name that first comes to mind is Nagoor Haneefa. (Everyone would have listened to Iravanidum Kaiyenthungal). Here the MDs decided to make use of him. Thus Nagoor Haneefa also sang the song along with TMS. That added lustre to the song.
With all things done, now it was the turn of our beloved Nadigar Thilagam to enact the song. For this movie, the first shot NT faced was for this song. NT came for the make up and the same was done. NT called up Bheemsingh and enquired “Bheembhai, indha character-ai eppadi panniyirukke? Edhaavadhu negative shades varudhaa?” For which Bheemsingh replied “No Sivaji Bhai! Rahim character is a good-hearted Samaritan” (NT and Bheemsingh always used to address each other as Bhai). On hearing this NT called up the make up man and asked him to sport a black mark in his forehead. He told Bheemsingh “ Oru unmaiyaana Muslim, dhinam 5 neram thozhanum. Thariyile nethiyai vachu namaz pannumpothu indha mark vizhum”. Bheemsingh though well aware of NT’s character study was still moved.
Of course there are hundreds of incidents where NT had taken extreme pain to do justice to the roles he played. The make up he sported for Leprosy patient in Navarathiri; he had come to the Saradha Studio at 6 am in the morning and stayed back till 10 pm the next day without even going home. He had only liquid food through straw. The Deiva Magan make up; again the pain he underwent during the make up and its removal was tremendous. Blood used to ooze out. The most challenging part is he had to enact the second son’s character also whose face should be free from any scars. During the filming of mythological movies, he had avoided Non – Veg, cigarette etc. Especially for Appar in Thiruvarutselvar. While he was shooting for Paritchaikku Neramacchu where he played the character of Nadathoor Narasimhachari, an octogenarian Vaishnavaite, he had gone to Kanchi Mutt along with Muktha Srinivasan and Sri Jayendra Saraswathi, the pontiff of Kanchi Mutt saw him wearing a Poonool (sacred thread) and enquired about it. NT replied that to get into the character, he has been wearing the same. That is NT’s Thozhil Bakthi for you. But he never trumpeted about all these things. He never said “ indha padathukkaaga 10 kilo weight kootinen, illai kuraichen, vaazhai pazham mattume saapiten, mottai adichhikkiten “ etc. His philosophy was simple. “ Eppo kadhai kettu padam panneren-nu kai neeti kaasu vaangitomo, appo andha characterkku enna thevaiyo adhai seivadhu oru nadiganoda kadamai. Adhai veliye sollitirukkakoodathu”.
The song was filmed and you can see how with the simple steps of graceful walk and hand synchronisation (using the tape which he holds) he makes acting look so easy. An actor’s calibre has to be measured by how he conducts himself in a song sequence. How he performs, whether it is action or reaction in that song shows his ability and in this regard NT is streets ahead of all actors. This song is one more evidence for the same.
The movie was progressing and AVM had planned for an Oct 26th.Unforeseen incident happened. At the start Kannamba had been booked for the mother role and she took part in shooting. But during the shooting she took ill and she was hospitalized due to which she excused herself from the film. So instead of her MV Rajamma was booked and the portions were re shot. So the film release got post phoned to March 1961.
During those days in Chennai (Madras then) NT’s movies were released in Chitra, Sayani and Crown etc. For Paava Mannippu, AVM Chettiar had wanted the movie to be released in Shanthi. (Actually Shanthi was built and owned by G.Umapathy, who later sold it to NT and with that, built Anand and later Little Anand. During Paava Mannippu’s release, Umapathy owned the theatre). Shanthi had the biggest Balcony (421 seats) of all Chennai theatres and so AVM wanted to release the movie in that. But till that time Shanthi never had a great BO record and so Bheemsingh and VC Shanmugam were bit skeptical. But Chettiar stood by his stand and how well he was proved right. Paava Mannippu released in Shanthi was a blockbuster and celebrated Silver Jubilee there. So it became the first movie in Shanthi to complete 25 weeks.
As a novel way of advertising, AVM imported a gigantic balloon from Japan and tied it atop Shanthi theatre. The balloon had Hydrogen inside it and to sustain the gas inside Hydrogen cylinder was also placed atop. The balloon had an inscription of AVM in English and Paava Mannippu in Tamil. As Mount Road was devoid of skyscrapers during those days, the balloon was visible even from far off places and every one who was passing through the road had a look at the balloon with awe. This helped the film. But one unforeseen problem cropped up. During those days for placing any material which would extending into the high skies, it was mandatory for the people concerned to get a permission from the Chennai Airport authority. Similarly placing a gas cylinder atop
a building has to be approved by Directorate of Explosive factories. AVM unaware of both these things had failed to take the requisite permission and only when they received notices from both the authorities realised their error. But AVM Chettiar tactfully handled the situation and problem was solved.
As the songs had become so popular, AVM decided to conduct a contest. The public were asked to assign the songs in the order of their liking and it was announced that one could send any number of entries. The persons whose choice gets the maximum number of votes would be given a cash prize of Rs 10,000/-, it was announced. There was tremendous response and entries started pouring on. An entire room was allotted for keeping the covers and it started to overflow. So for counting, the entire lot was removed to an open area and the entire staff of AVM Studios was assigned to do the job. A Black
board was placed with all the songs written on that and votes (!) were added.
The winning order was like this.
1.சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்!
2. அத்தான்! என்னத்தான்
3. வந்த நாள் முதல் இந்த நாள் வரை
4. காலங்களில் அவள் வசந்தம்
5. எல்லோரும் கொண்டாடுவோம்
6. பாலிருக்கும்! பழமிருக்கும்! பசியிருக்காது
7. ஓவியம் கலைந்ததென்று
8. சாய வேட்டி தலையிலே கட்டி
So many people had won and when the prize money was shared, it was doubtful whether it covered even their postal expenses. But this was the first time a contest was held for public and by this count also Paava Mannippu becomes unique.
I always used to say and I have posted in this thread also that NT and his songs carry a special place in Tamil Homes. If it is marriage it is வாராய் என் தோழி, if it is farewell it is பசுமை நிறைந்த நினைவுகளே, in the same manner for any Islamic festival there will be this song. Foe ever.
The lyric is given below.
எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாஹ்வின் பெயரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
(எல்லோ---)
கல்லாக படுத்திருந்து
களித்தவர் யாருமில்லே
கை கால்கள் ஓய்ந்த பின்னே
துடிப்பதில் லாபம் இல்லே
வந்ததை வரவில் வைப்போம்
செய்வதை செலவில் வைப்போம்
இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்
(எல்லோ---)
நூறு வகை பறவை வரும்
கோடி வகை பூ மலரும்
ஆட வரும் அத்தனையும்
ஆண்டவனின் பிள்ளையடா
கருப்பிலே வெளுப்புமிலே
கனவுக்கு உருவமில்லே
கடலுக்குள் பிரிவுமில்லை
கடவுளில் பேதமில்லை
முதலுக்கு அன்னை என்போம்
முடிவுக்கு தந்தை என்போம்
மண்ணிலே விண்ணை கண்டு ஒன்றாய் கூடுவோம்
(எல்லோ------)
ஆடையின்றி பிறந்தோமே
ஆசையின்றி பிறந்தோமா
ஆடி முடிக்கையிலே
அள்ளி சென்றோர்யாருமுண்டோ
படைத்தவன் சேர்த்து தந்தான்
வளர்த்தவன் பிரித்து வைத்தான்
எடுத்தவன் மறைத்து கொண்டான்
கொடுத்தவன் தெருவில் நின்றான்
எடுத்தவன் கொடுக்க வைப்போம்
கொடுத்தவன் எடுக்க வைப்போம்
இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்.
எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாஹ்வின் பெயரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடுவோம்
Regards
இந்த படம் போதித்த ஒற்றுமையை நாம் எல்லோரும் கடை பிடித்தால் உலகில் மத கலவரமே இருக்க முடியாது - Consequently there will not be any political gain as well. என்ன செய்வது , நாம் தான் எந்த பாடத்தையும் சரியாகவே கற்று கொள்வதில்லையே -----
அருமை முரளி - வார்த்தைகளே இல்லை உங்கள் பதிவுகளை வர்ணிக்க - தொடுருங்கள்
:):smokesmile:
Dear Vinoth Sir,
Nice pics of NT garuda Sowkiyama , Thunai, thanks
Dear Murali sir,
You always transport us to that era through your writings (time machine) superb sir
பார்த்ததில் பிடித்தது – 22
இந்த பார்த்ததில் பிடித்தது என்ற ஒரு series ஆரம்பித்த உடன் தான் நான் பார்க்கும் நடிகர் திலகத்தின் படங்களில் தான் எதனை விஷயம் தென்படுகிறது , அதே படம் தான் , பார்ப்பதும் நான் தான் , ஆனால் பார்க்கும் பொது ஆச்சர்யம் படுத்தும் விஷயம் பல . அப்படி ஒரு படம் தான் 1958 ல் வெளி வந்த நடிகர் திலகத்தின் 52வது படமான காத்தவராயன்
கிட்ட தட்ட 3.15 மணி நேரம் ஓடும் படம் , அதில் 1 மணி நேரம் பாடல்கள் ,அதனால் வழக்கம் போல் பாடல்களை skip செய்யமால் முதல் முறையாக எழுதி உள்ளேன் , இனி படத்தை காண நான் நந்தி போல் குறுக்கே நிற்க போவது இல்லை
முதலில் கதை :
ஈசனிடம் நடனித்தில் தோல்வியுற்ற உமையாள் சினம் கொண்டதால், பூமிக்கு சென்று உணர்வடிக்கி வாழப் பணிக்கப்படுகிறாள், உமையாள் பூமிக்கு செல்லும் பொது வீரபாகு ஈசனை கேள்வி கேட்பதால் ஈசனின் கட்டளை படி வீரபாகுவும் உமையின் குழந்தையாக பூமிக்குச் செல்கிறான். காட்டுக்கு வரும் இருவரையும் அங்கு வேடர் குலப்பெண்கள் உமையாளிடம் (கண்ணாம்பா) குழந்தையைத் தாங்கள் வளர்ப்பதாக பெற்றுச் செல்கிறார்கள்., இவர்கள் மொத்தம் 7 பேர் , யாருக்கும் குழந்தை பாக்கியம் இல்லாததால் உமையாளிடம் கேட்க அவரும் கொடுத்து விடுகிறார்
அடுத்த காட்சியில் ராஜகுருவுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது , அந்த குழந்தை பிறந்த நேரம் ஒரு கருவேல மரம் முளைக்க அது அபசகுனமாக கருதப்பட்டு , பெற்றோர்யின் விருபத்துக்கு மாறாக அந்த பெண் திருமணம் செய்து கொள்வர் என்பதும் , சோகமான வாழ்கை அந்த பெண்ணுக்கு அமையும் என்கிறது சாஸ்திரம் , அதை தவிர்க்கும் பொருட்டு ராஜா அந்த குழந்தையை தத்து எடுத்து ஆரியமாலா என்று பெயர் வைக்கிறார்
வேடர் குளத்தில் வளரும் காத்தவராயன் (சிவாஜி சார் ) மிக பெரிய வீரனாக வளர்கிறார் , நன்றாக வளர்ந்த உடன் அவர்க்கு அவர் தான் வளர்ப்பு மகன் என்று தெரிய வர , தன் தாயை (கண்ணாம்பா) பார்க்க வருகிறார் , உலக அறிவு பெற ஊர் சுற்றி வர தாயின் ஆசிர்வாதத்தை கேட்டு செல்லும் வேளையில் , அவன் தாய் அவனிடம் மனதை கட்டுபடுத்த வேண்டும் என்றும் மோகத்தை அடக்க வேண்டும் என்று சொல்லுகிறார் ( முந்தய பிறவியில் இளங்கன்னி குளித்து கொண்டு இருக்கும் பொது அவரை பார்க்கும் காத்தவராயன் அவரை அடைய நினைக்க இளங்கன்னி தற்கொலை செய்து கொள்ளுகிறார் , அந்த கர்மாவை கழிக்க தான் இப்போது இருவரும் (காத்தவராயன், இளங்கன்னி , ஆரியமாலா என்ற பெயரில் பூமியில் பிறந்து காதலிக்க வேண்டும் என்றும் காத்தவராயன் காதலை அடைய சாக வேண்டும் என்பதே விதி , ஆரியமாலா இப்போ ராஜாவின் மகள் , காத்தவராயன் சாதாரன வேடன் ( கடவுள் தான் best screenplay writer ) )
தாயின் கட்டளை படி ஊர் சுற்றி பார்க்க செல்லுகிறார் , கேரளாவுக்கு செல்லும் காத்தான் அங்கே ஒரு மலையாள மந்திரவாதி (பாலையா , சந்திரபாபு ) இருவரும் ஊரை பயமுறுத்துவதை பார்த்து , அவர்களை தன் வீரம் மற்றும் தந்திரத்தில் எதிர் கொண்டு வெற்றி பெறுகிறார் , அவர்களை தன் அடிமையாக தன் தாயிடம் கொண்டு போய் சேர்கிறார் , காத்தானின் தாய் அதை மறுத்து கடித்து, கண்டித்து விடவே , காத்தான், சின்னா (பாலையா ), அவர் மனைவி mn ராஜம் , அவள் தம்பி சந்திரபாபு அனைவரும் நண்பர்களாக வாழ்கிறார்கள் .
காட்டுக்கு வேட்டை வரும் ராஜா , சேனாதிபதி தங்கவேலு கூட , ஆரியமாளவும் வருகிறார் , அவரை பார்த்த உடன் மனதை பரி கொடுக்கும் காத்தான் ஆரியமாலாவை சந்திக்க மீன் ரூபத்தை எடுக்கிறார் ( உமையாள் காத்தான் ஊர் சுற்ற அனுமதி கேட்கும் பொது வேண்டும் உருவம் பெற ஆசீர்வதிகப்படுகிறான். கூடவே தேவை இல்லாத காரியங்களுக்கு இதை பயன் படுத்த கூடாது என்று எச்சரிக்கை செய்கிறார் ). சின்னா காத்தனின் தாயிடம் இதை சொல்ல , காத்தான் கண்டிக்க படுகிறார் .
சேனாதிபதி (தங்கவேலு ) ஆரியமாலவை கல்யாணம் செய்ய திட்டம் போடுகிறார் . மனதை கட்டுபடுத்த முடியமால் காத்தான் அரசியை சந்திக்க கிழவனாக வருகிறான். காவலர்கள் பிடிக்க பட்டு சிறைவைக்க படுகிறார் , கலையில் அரசவையில் ஒப்படைக்க சாக்குப்பையிலிருந்து குடுகுடுப்பைக்காரனாக உருமாரி விடுகிறார் , நடக்க போவதை சொல்லிவிடுகிறார் , மீண்டும் சிறைச்சாலை .
இந்த முறை சிறையிலடைப்பட்டு பிறகு நண்பர்கள் உதவி உடன் மற்றும் பட்டத்து யானையோடு தப்பி விடுகிறார் . காவல் அதிகரிக்க படுக்கிறது , காதனை பிடிக்க சேனாதிபதி பனிக்க படுகிறார் , வேறு வழி இல்லாமல் , தப்பிக்க காத்தான் கிளியாக உருமாரி மறுபடி ஆரியமாலாவை சந்திக்கிறார் , அரசன் இதை அறிந்து விடவே , மீண்டும் தப்பிக்கிறார் , ஆரியமாலவுக்கு கல்யாணம் நிச்சயம் செய்ய படுகிறது , மீண்டும் வளையல்காரன் வேடத்தில் வருகிறார் , மீண்டும் மாட்டி கொண்டு , சங்கிலியால் காதனை பிணைத்து அவனை அரசன் கொல்ல முனையும் போது, ஆரியமாலா கத்திக்குத்து பட்டு விழுகிறாள். காத்தான் சாவதை காண பொறுக்காமல்
ஆரியமாலா இறந்துவிட்டாள் என்று எண்ணி ஊரை துவம்சம் செய்கிறான் காத்தவராயன். ராஜாவையும் கொள்ள வரும் பொது கன்னமபவின் பேச்சுக்கு மரியாதை கொடுத்து , surrender ஆகிறார் சங்கிலியால் பிணைத்த அவனை யானை தரையோடு இழித்துச் செல்கிறது. பின் சாட்டையடி வாங்கிக்கொண்டு ஊரார் காண தண்டனை நிறைவேற்றப்படவேண்டிய பெருவெளிக்கு செல்கிறான். அங்கு ஒரு பிரம்மாண்டமான அய்யனார் சிலை. கண்ணாம்பா மகனை விடுவிக்க முறையிட மறுக்கிறான் அரசன் . கண்ணாம்பா உத்தரவு கொடுக்க மீண்டும் சண்டை போடுகிறார் காத்தான் .பிரம்மாண்ட சிலைய உடைத்து பேரழிவை ஏற்படுத்துகிறான். ஓடிவரும் ஆரியமாலாவும் அதில் சிக்குகிறாள்.அனைவரும் இறந்து விடுகிறார்கள்
சிவபெருமான் அருளால் பார்வதி, காத்தவராயன், ஆரியமாலா யாவரும் வானுலகம் ஏறுகிறார்கள்.
சுபம்
படத்தை பற்றி என் பார்வை :
எனக்கு பிடித்த பழைய பொழுது போக்கு படங்களில் திரு ராமண்ணாவின் படங்கள் பிரதானம் , முன்று எழுத்து , நான் , கன்னிதீவு , சொர்க்கம் , என்னைப்போல் ஒருவன் , பறக்கும் பாவை , பாக்தாத் பேரழகி சட்ட என்று நினைவுக்கு வரும் படங்கள் , அந்த இயக்குனர்யின் இயக்கத்தில் வந்த அடுத்த பொழுது போக்கு படம் தான் காத்தவராயன் , படத்தின் கதை , வசனம் துறையூர் மூர்த்தி , இந்த கதை 1941 super hit ஆரியமாலாவின் ரீமேக் , திரு சின்னப்பாவை சூப்பர் ஸ்டார் ஆக்கிய படங்களில் இந்த படத்துக்கு முக்கிய பங்கு உண்டு.
இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது மக்கள் திலகம் MGR அவர்கள் , ஜோடி PS சரோஜா , தன் கட்சி கொள்கைக்கு எதிராக இருபதாக பிறகு நடிக்க மறுக்கவே , நடிகர் திலகம் தன் நண்பர் ராமண்ணாவுக்கு உதவிக்கு வந்தார் , நடிகர் திலகம் நடித்த ஒரே மந்திர ஜால படம் இது தான் , இந்த படத்தினால் எனக்கு ஏற்பட்ட மனநிறைவான விஷயம் , சளைக்காமல் கால்ஷீட் கொடுத்த நடிகர் திலகத்தின் கமிட்மென்ட் நல்ல உள்ள்ளமும் தான் (ராமண்ணா ஒரு பேட்டியில்)