-
3rd April 2014, 01:20 PM
#2141
Junior Member
Seasoned Hubber
ஒரு அருமையான எந்த காலத்திற்கும் பொருந்த கூடிய பாடல்
ஒரிஜினல்
யாரடா மனிதன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே
யாரடா மனிதன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே
மனிதரில் நாய்கள் உண்டு , மனதினில் நரிகள் உண்டு
பார்வையில் புலிகள் உண்டு , பழக்கத்தில் பாம்பும் உண்டு
நாயும் , நரியும் புலியும் ,பாம்பும் வாழும் பூமியிலே
மானம் , பண்பு ,ஞானம் கொண்ட மனிதனை காணவில்லை
யாரடா மனிதன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே
சிரிப்பினில் மனிதன் இல்லை , அழுகையில் மனிதன் இல்லை
உள்ளத்தில் மனிதன் இல்லை - உறக்கத்துள் மனிதன் உண்டு
வாழும் மிருகம் தூங்கும் தெய்வம் , நடுவே மனிதனடா
எங்கோ ஒருவன் இருந்தால் அவனை உலகம் வணங்குமடா
யாரடா மனிதன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே
==================
இந்த பாடலை சற்றே மாற்றி எழுதியுள்ளேன் - NT க்கு எப்படி பொருந்துகின்றது என்று பாருங்களேன் !
யாரடா நடிகன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் கொலைவெறி தான் மீதி இங்கே
யாரடா நடிகன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் கொலைவெறி தான் மீதி இங்கே
நடிப்பினில் மேதை ஒன்று , மனதினில் நிலைத்தது உண்டு
தமிழகம் மறந்த ஒன்று , தமிழினை கொன்றதும் உண்டு .
நாயும் , நரியும் புலியும் ,பாம்பும் நடிக்கும் திரையினிலே
நடிப்பு , பண்பு ,ஞானம் கொண்டநடிகனை காணவில்லை
யாரடா நடிகன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் கொலைவெறி தான் மீதி இங்கே
சிரிப்பினில் நடிகன் இல்லை , அழுகையில் நடிகன் இல்லை
உள்ளத்தில் தமிழும் இல்லை - உறக்கத்துள் நடிப்பு உண்டு
வாழும் திரைஉலகம் தூங்கும் நடிப்பு , நடுவே நடிகனடா
எங்கோ திலகம் ஒருவன் இருந்தால் அவனை உலகம் வணங்குதடா
யாரடா நடிகன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் கொலைவெறி தான் மீதி இங்கே
-
3rd April 2014 01:20 PM
# ADS
Circuit advertisement
-
3rd April 2014, 01:41 PM
#2142
Junior Member
Seasoned Hubber
நாம் கல்யாண ராமனை சந்தித்து பூரித்து ஆனந்த கண்ணீர் சிந்தி இருக்கிறோம் - தசரத ராமனை பார்த்து இவரின் துணை நமக்கு என்றும் இருக்காதா என்று ஏங்கி இருக்கிறோம் - ரகுராமனை நெஞ்சிருக்கும் வரை நாம் மறக்க போவதில்லை --
இந்த பாடல் ராம நவமி யை முன்னிட்டு அந்த அழகிய ராமனுக்கு ஒரு கவிதை அஞ்சலி
ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்
இந்தப் பாடல் நம்மைப் பல தளங்களில் பல உணர்ச்சிகளில் ஆழ்த்துகிறது. ஆரம்பிக்கும் போது இசையும் , பக்தியும் நம்மை மயக்கினாலும்,இறுதியில், பாடலின் லயம் தீவிரமாகும் போது ராமனின் தோற்றம்,ஆகிருதி, அன்பு, கருணை , பாசம், போன்ற அனைத்து கல்யாண குணங்களும் தாண்டவமாடுகின்றன. அப்போது அங்கே பாட்டு இல்லை, இசை இல்லை.. பாடுபவர் இல்லை. ராமன் மட்டுமே மிஞ்சுகிறான். அற்புதம் !
-
3rd April 2014, 02:53 PM
#2143
Junior Member
Seasoned Hubber
ராமனை பற்றி சொன்னவுடன் கண்ணனை பற்றியும் சொல்லவேண்டுமே , தெய்வ மகனாக வந்து நம் எல்லோரையும் கௌரவித்த அந்த கண்ணனை ஒரு பெண் பிருந்தா வனத்திற்கு வருகின்றேன் , எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணையை கொடுக்க மாட்டியா என்று புலம்பி முறை இடுகின்றாள் - உருகவைக்கும் பாடல் - இன்று திருமணம் ஆகாத பல பெண்கள் மனதிற்குள் பாடும் பாடல் இதுவாகத்தான் இருக்கும் -
கண்ணதாசனின் வரிகளில் கண்ணன் வாசம் செய்வது தெரியும் - இந்த பாடல் உங்களுக்காக
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
பிருந்தாவனத்திற்கு வருகின்றேன் - என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன் - கிருஷ்ணா நான் ஒரு பாவியோ
என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ ?
(பிருந்தாவனத்திற்கு)
கீதையில் உன் குரல் கேட்டேனே - என் கிருஷ்ணனின் திருமுகம்
பார்த்தேனே - பாதையில் உன் துணை வரவில்லையே -பகவான்
திருவருள் தரவில்லையே !
(பிருந்தாவனத்திற்கு)
குங்குமம் அணிந்தால் உன் தேவி - தன் கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி
சங்கமம் என்பது எனக்கு இல்லையோ - அந்த மங்கள
மரபுகள் உனக்கிலையோ
(பிருந்தாவனத்திற்கு)
கங்கையில் வெள்ளம் தண்ணீரோ இல்லை கன்னியர் விடும்
கண்ணீரோ - கண்ணனின் மனமும் கல்மனமோ -எங்கள்
மன்னனுக்கு இது தான் சம்மதமோ
(பிருந்தாவனத்திற்கு)
-
3rd April 2014, 03:08 PM
#2144
Junior Member
Veteran Hubber
Nowadays there is a paradigm shift in judging the level of success of a movie that is released in umpteen number of theatres at a time focusing on the initial collections before a movie is really a success or failure. Number of theatres mulltiplied by number of shows ... just 3 or 4 weeks the collections satisfy the producer and distributor. Hence a 100 days run or silver jubilee run are outdated. But in those days number of theatres were limited for release and hence 100 days or SJ mark decided the success. In my opinion thookku thookki is a fantastic demo of the versatility of NT and Thanga Padumai needless to say the impact of his acting on the audience. In their reruns these two movies have minted money and I have witnessed more than 5 weeks run even in a small town during rerelease. The everrefereshing Pudhiya Paravai and the timeless classics Karnan and Thillana Mohanambal still remain mystery in my mind as they are the top rated movies that pop up in anyone's mind whenever NT's acting prowess is thought of.
Last edited by sivajisenthil; 3rd April 2014 at 03:18 PM.
-
3rd April 2014, 03:28 PM
#2145
Junior Member
Platinum Hubber
1982- MAKKAL KURAL

-
3rd April 2014, 10:48 PM
#2146
Junior Member
Seasoned Hubber
அன்புள்ள வினோத் சார் - என் பதிவுகளை படித்துவிட்டு மனமார போனில் பாராட்டியதற்கு உங்களுக்கு என் உள்ளம் கனிந்த நன்றி - உங்கள் இந்த பாராட்டும் குணம் நான் முழுமையாக இன்னும் கற்றுக்கொள்ளவில்லை - மற்றவர்களின் பதிவுகளை நான் தாமதமாகத்தான் பாராட்டுகிறேன் - உங்கள் நடப்பின் மூலம் , இந்த குறைபாடை அறவே நீக்க முயற்ச்சிக்கிறேன்
உங்கள் மக்கள் குரல் பதிவுகள் மிகவும் அருமை - layout யை out of focus பண்ணாமல் சிரமம் மிக எடுத்து எங்களுக்காக பதிவிட்டுள்ளீர்கள் அதற்கும் எங்கள் மனமார்ந்த நன்றி - இரண்டு படங்களும் மிகவும் அருமையான படங்கள் - காலத்தால் அழிக்க முடியாதவைகள்
அன்புடன் ரவி
-
3rd April 2014, 10:57 PM
#2147
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Murali Srinivas
பின்னணி பாடகர்களில் மும்மூர்த்திகளாக விளங்கிய சீர்காழி,TMS மற்றும் PBS ஆகிய மூவரும் இணைந்து என் சிற்றறிவிற்கு எட்டிய வரை இரண்டு பாடல்களைத்தான் சேர்ந்து பாடியிருக்கிறார்கள். அதில் ஒன்று இந்தப் பாடல். [மற்றொன்று குழந்தைக்காக படத்தில் வந்த ராமன் என்பது கங்கை நதி]. தமிழ் சினிமாவின் அமரத்துவம் வாய்ந்த மிக இனிமையான பாடல் இது.
.
முரளி - கர்ணன் படத்தை விட்டு விட்டீர்களே - "மழை கொடுக்கும் கொடையும் ஒரு ------" படத்தில் பாடல்கள் தனி தனியாக வந்தாலும் மூவரும் சேர்ந்து பாடிய பாடல் தான் இதுவும் !
-
3rd April 2014, 11:01 PM
#2148
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
g94127302
உங்கள் நடப்பின் மூலம் , இந்த குறைபாடை அறவே நீக்க முயற்ச்சிக்கிறேன்
வினோத் சார் - ஒரு சிறிய திருத்தம் - நடப்பு அல்ல நட்பு .
-
4th April 2014, 07:14 AM
#2149
Junior Member
Newbie Hubber

Originally Posted by
g94127302
வினோத் சார் - ஒரு சிறிய திருத்தம் - நடப்பு அல்ல நட்பு .
சார்,
பத்திரம்.நல்லவர்கள் தன் இயல்பு போல இருப்பார்கள்.ஆனால் காட்டி கொள்ள மாட்டார்கள்.ஆளை கவிழ்க்க நினைக்கும் கவர்ச்சி வில்லன்களே மிக மிக நல்லவர்கள் போல இயல்பாக நடிப்பார்கள்.
Last edited by Gopal.s; 4th April 2014 at 07:25 AM.
-
4th April 2014, 08:08 AM
#2150
Junior Member
Platinum Hubber
Bookmarks