https://youtu.be/qKjzzxsZSvE
Printable View
மயக்கத்தைத் தந்தவர் யாரடி...
சுசீலா என்னும் சுகம்தானடி
https://i.ytimg.com/vi/7IOGEkATffI/hqdefault.jpg
'இசைக்குயிலி'ன் குரலில் இன்னொரு அதிசயம். பாடலுக்குத் தகுந்த 'கலைச்செல்வி'யின் பரவச ஆட்டம். 'காதலில் சிக்கிக் கொண்டு விடாதே' என்று தோழிக்கு ஹீரோயினின் அறிவுறுத்தல்.
'மயக்கத்தைத் தந்தவன் யாரடி?' என்று தோழியிடம் விசாரித்து,
'அழகென்று நினைத்து பழகிடும் போது அசடாய் இருந்தால் என்னாவது?' என்ற நியாயமான கேள்வியை அவள் முன் வைத்து,
'சொத்து, சுகக்காரன் மெத்தப் படித்தாலும் பித்துக்குளியானால் சுகமேதடி?' என்று 'ஜாக்கிரதை'அறிவுரை சொல்லும் அழகு. (இன்னா படிச்சு இன்னா பிரயோஜனம்....இந்த லூஸைப் போய்க் காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டேனே!) (அதே சமயம் 'மறைவினில் நடந்தது என்னடி?' என்று நடந்ததை தோழியிடம் நைஸாகக் கேட்டு அறிந்து கொள்ளும் ஆர்வமும் இருப்பதை மறுப்பதற்கில்லை.
காதலைப் பற்றி.... அதில் மாட்டினால் படும் அவஸ்தையைப் பற்றி இந்த சாமர்த்தியசாலி சாதுர்ய நாயகி காதலிக்காமலே வெகு அழகாகத் தெரிந்து வைத்திருக்கிறாளே! (இதே நாயகி பின்னால் காதலில் விழுந்து, நாயகனுடன் 'பூமாலை சூட நல்ல நாள்' பார்க்க அவனிடம் சம்மதம் கேட்பது எந்த விதத்தில் நியாயம்?)
'ஒருநாள் பழக்கம்...மறுநாள் நெருக்கம்...உதவாது... வேலைக்கு ஆகாது... இதை அறியாயோ' என்று சிநேகிதியிடம் சிலிர்ப்பாகக் கேட்கிறாள் நம் நாயகி.
விட்டளா அத்துடன்?....
'கடற்கரை மணலில் வளர்கின்ற காதல் கல்யாணம் வரையில் போகாதடி' (அப்படிப்போடு...அந்தக் காலக் காதலும் பீச்சோடு போச்சா?)
'அடிக்கடித் துடிக்கும் அவசரக் காதல் உயிர் கொடுத்தாலும் தேறாதடி'
ம்...எப்படி?...எப்படி?.... அவசரக் காதலுக்கு இன்னா ஆக்ஸிஜன் கொடுத்தாலும் அது தேறாதாமே!
'முதலில் இனிக்கும்
முடிவில் கசக்கும்
இதுதான் காதல் வரலாரடி'
என்று 'லவ் ஹிஸ்டரி'யை பிய்த்து உதறுகிறாளே!
உண்மைதானே! இரண்டு நாட்கள் மட்டுமே இனித்து இல்லறம் முடிய கசக்கும் காதல்தானே! இவள் சொல்வதில் தவறென்ன?
சிக்கென்ற 'சுடி' யில் ஸ்லிம்மாக ஜெயலலிதா. என்னவொரு அழகு! குமாரின் இடையிசை கிடார் இனிமை ஒலிகளுக்கு ஜெயா அவர்களின் இடையசைவுகளும், கை கால் அசைவுகளும் களேபரம் புரிகின்றன. பாடலின் வரிகள் அர்த்தம் பொதிந்தவை என்று சந்தோஷிக்கும் போதே ஜெயாவின் நடனமும், அழகும், குதூகலமும் சேர்ந்து இன்னும் நமது சந்தோஷம் இரட்டிப்பாகிறது. இசைக்குயிலின் குரல் அந்த இரண்டு சந்தோஷங்களையும் மீறி 'நான் நான்தான்' என்று கொக்கரித்து நம்மை சந்தோஷ உச்சிக்கே தூக்கிச் செல்கிறது.
உடன் தோழி சச்சு. வழக்கமான முக்தாவின் படங்களின் நாயகி மற்றும் தோழி நெருக்கப் பாடல்களில் ஒன்று. எனக்கு மிக மிக நெருக்கமான பாடல்களிலும் ஒன்று. இதர பாடல்களால் நெருங்க முடியாத பாடல்களிலும் முதலிடப் பட்டியல்.
ஒவ்வொரு முறையும் புதிதாய் பிறந்த குழந்தையை அப்படியே அள்ளி அணைத்து மென்மையான மேன்மையான சுகத்தை அடைவோமே... அந்த மாதிரி இந்தப் பாடல் என்றும் இன்பப் பாடல்.
https://youtu.be/fPnEgr_7luQ
வாங்க வாங்க சிக்கலாரே..சுகமா இருக்கியளா..வாஸ்ஸூ எவ்ளோ நாளாச்சு ஓய் உம்மைப் பார்த்து.. ம்ம் பாலாடை பாட் கு தாங்க்ஸ் வாங்க வாங்க மேலும் தருக தருக..ஆமா இ.ஜோ ஸ்ரீ ரஞ்சனி பத்தி வியாசம்லாம் எழுதினீரா இல்லியா ( ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான் :) )
இதயம் பொல்லாதது கண்ணெதிரே பெண்ணழகைக்
கண்டபின்னே
இளமை வேகம் சொல்லாமல் நில்லாதது..
உண்மை தான்..:)
https://youtu.be/YJjmqos6xbU
முழுமதி போன்ற முகத்தினிலே
முத்து முத்தாக வியர்வை வர
அழகிய மேனி சதிராட
அன்னங்களே விளையாடுங்கடி...
ம்ம் எல்லாம் விளையாட்டாப் போச்சு :)
https://youtu.be/W7F-lMjg-GY
எல்லாமே விளையாட்டாப் போச்சு ( ஹை நல்ல தலைப்பா இருக்கே) - 2
அவன் விளையாடும் விளையாட்டை எங்கே சொல்ல..(ம்ம் இங்க சொல்லுங்க)
https://youtu.be/bvmxghzvaoE
சின்னா!
நன்றி!
இந்தாங்க....'இன்றைய ஸ்பெஷலி'ல் அப்போ நான் எழுதியது. மறுபடி நினைவூட்டியதற்கு நன்றி.
https://i.ytimg.com/vi/YJjmqos6xbU/hqdefault.jpg
இன்றைய ஸ்பெஷல் (33)
படம்: அன்று கண்ட முகம் (1968)
நடிப்பு: ரவிச்சந்திரன், ஜெயலலிதா, அசோகன், நாகேஷ், மனோரமா, மேஜர், வி.கே.ராமசாமி
வசனம்: மா.ரா.
காமெரா: கர்ணன்
பாடல்கள்: கவிஞர் கண்ணதாசன்
இசை: 'திரை இசைத் திலகம்'
கதை, தயாரிப்பு, டைரக்ஷன்: ஜி.ராமகிருஷ்ணன்
ஆத்மநாபன் (அசோகன்) என்ற பாரிஸ்டரிடம் அவருடைய நண்பர் கல்லூரி பிரின்சிபால் லா பிராக்டிஸ் செய்ய ஒருவரை சிபாரிசு செய்து அனுப்புகிறார். ஆத்மநாபன் ஆண் ஒருவரைத்தான் பிரின்சிபால் வக்கீலாக பிராக்டிஸ் செய்ய அனுப்புவார் என்று பார்த்தால் வந்து நிற்பது ஒரு அழகு தேவதை. பெண்கள் என்றால் பத்தடி தூரம் விலகி நிற்கும் ஆத்மநாபன் அந்த சுந்தரியிடம் வேறு எங்காவது பிராக்டிஸ் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார். ஆனால் அந்த இளம் பெண் வக்கிலோ அவரிடம்தான் பிராக்டிஸ் செய்வேன் என்று பிடிவாதமாக கெஞ்ச இறுதியில் ஆதம்னாபன் சம்மதிக்கிறார்.
அந்த இரவு தான் சந்தித்த அந்த தேவதையின் அழகை நினைத்து அவர் மனம் தடுமாறுகிறது. அப்படியே அந்த தேவதை அவர் கனவில் வந்து....
என்ன அழகான அருமையான பாடல்! ஆனால் பாப்புலர் ஆகாத பாடல். கடுப்பு.
கண்ணியப் பாடகியின் கல்கண்டு குரலில் கேட்க, கேட்க அப்படி ஒரு சுகம். அதுவும் 'கண்ணெதிரே.......ஏ' என்று அவர் இழுத்து பாடும் போது மயங்காதவர்களே இருக்க முடியாது.
இப்பாடலின் ஆரம்ப இசை அமர்க்களம். பேங்கோஸ், ஆர்மோனியம், கிடார் என்று கலக்கல் உபகரணங்களை அம்சமாகக் கலந்து திரை இசைத் திலகம் அமர்க்களமான அமர்க்களப்படுத்தி விட்டார்.
ஜெயா செம கியூட். இப்பாடலில் 'மணி' மேகலையாய்க் (இடையணி வேறு.) காட்சி அளிக்கிறார். கொள்ளை கொள்ளும் அழகு. அதே போல டான்ஸ் மூவ்ஸ் செக்ஸியான அற்புதம். ஆடைகளுக்கு மேல் டிரான்ஸ்பரென்ட் அங்கி போல வேறு அணிந்து படுகவர்ச்சியாக வேறு பரிமளிப்பார்.
ஆண்குரல் இல்லையென்றாலும் அசோகனுக்கும், ஜெயாவுக்கும் டூயட் போலவே தெரியும் பாடல் இது. இதுவும் ஒரு வித்தியாசம்.
'காட்டுக்கு ஓடிய முனிவர்களும், வீட்டுக்குத் திரும்பிய விஷயம் இது' என்று காதலை காமத்துடன் இணைத்துப் பெருமைப்படுத்தும் நம் கவிஞன். வரிகள் எளிமையான அமர்க்களம்.
அதிகம் வெளியே தெரியாத அற்புத பாடல். அனுபவித்துக் கேளுங்கள். ஆழ்ந்த சுகத்தை உணர்வீர்கள். முடிவு உங்கள் கையில்
இதயம் பொல்லாதது
இதயம் பொல்லாதது
கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது
இதயம் பொல்லாதது
கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது
காட்டுக்கு ஓடிய முனிவர்களும்
வீட்டுக்குத் திரும்பிய விஷயமிது
காட்டுக்கு ஓடிய முனிவர்களும்
வீட்டுக்குத் திரும்பிய விஷயமிது
காவலை மீறிய போதையிது
காவலை மீறிய போதையிது
கண்மூடி நடக்கின்ற பாதை இது
ஆஹா ஓஹோ ம்ஹூம்
(இடையிசை இடையசைவிற்குத் தகுந்தமாதிரி பிரம்மாண்டம்)
இதயம் பொல்லாதது
கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது
சட்டமும் இதனை மறுத்ததில்லை
தருமமும் இதனை வெறுத்ததில்லை
பட்டங்கள் வாங்கிப் பயனுமில்லை
பயிர் செய்யாவிடில் நிலமுமில்லை
சட்டமும் இதனை மறுத்ததில்லை
தருமமும் இதனை வெறுத்ததில்லை
பட்டங்கள் வாங்கிப் பயனுமில்லை
பயிர் செய்யாவிடில் நிலமுமில்லை
கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது
இதயம் பொல்லாதது
கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது
ஆசையில் இதயம் கனிந்திருக்கும்
சந்தோஷம் கண்ணில் மலர்ந்திருக்கும்
ஆசையில் இதயம் கனிந்திருக்கும்
சந்தோஷம் கண்ணில் மலர்ந்திருக்கும்
நினைவுக்குள் நினைவு வளர்ந்திருக்கும்
நினைவுக்குள் நினைவு வளர்ந்திருக்கும்
இல்லையென்றால் எது பிறந்திருக்கும்
இதயம் பொல்லாதது
கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது
எல்லா நண்பர்களும் சுசீலாம்மா பாடல்களை அள்ளி வழங்கும்போது கையைக் கட்டிக்கிட்டு உட்கார முடியுமா ?
ஆரம்ப காலத்தில் இசைக்குயிலின் குரலில் இளங்கிளியும் இழையும்.. மிஸ்ஸியம்மாவின் பிருந்தாவனமும் நந்தகுமாரனும் போல இந்தப் பாடலும் அந்தக் கிளிக்குரல் கொஞ்சலில் துள்ளி வருகுது..
அறியா பருவமடா.. மலர் அம்பையே வீசாதடா.. மதனா
https://www.youtube.com/watch?v=s9RnRKsteMM
(இடையிசை இடையசைவிற்குத் தகுந்தமாதிரி பிரம்மாண்டம்)// :) நன்றி வாசுஜி..உங்களோட பதிவு படித்த நினைவு..ஆனால் தேட சோம்பல்..உங்களை மாதிரி இசையெல்லாம்விலாவாரியாக எனக்குச் சொல்ல வராதே.நைஸ் அண்ட் தாங்க்ஸ்
எல்லாமே விளையாட்டாப் போச்சு...3
சுசீலாம்மா எல் ஆர் ஈஸ்வரி..
காவேரித் தண்ணியிலே குளிச்சி வந்தேண்டி
கரிகால் சோழன்கிட்டே படிச்சி வந்தேண்டி
காவிரிப் பூம்பட்டினத்தை பார்த்திருக்கியாடி
கண்ணகி வீடு எங்க வீட்டு பக்கம் தாண்டி
சர்ரூ,மணிமாலா+இளமை+ சடுகுடு சடுகுடு :)
https://youtu.be/O98bLpYUOl4
Congratulations to P. Susheela! :)
Here's a song from Dasari Narayana Rao's 1982 Telugu movie MEGHASANDESAM, composed by
Ramesh Naidu, and for which Susheela won the National Award for Best Female Vocalist...
https://www.youtube.com/watch?v=rDe3pmCOTYY
engeyum eppodhum PS mayam.... maayam...
mm.. RDji... Is it not "Priye charuseele" which got the National award in Mega sandhesam ? ( I may be wrong )
உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம் நாடுதே
உறங்காமலே என் மனம் வாடுதே
எழில் ராணி போலே எனை காண்பதாலே
ஜகமே என் காலில் சுழன்றாடுதே பார்
ஜகமே என் காலில் சுழன்றாடுதே
எனதாவல் யாவுமே நிறைவேறும் திண்ணமே
https://youtu.be/t7obk2bXYe4
ராஜ் ராஜ் சாருக்கு ரொம்ப்பப் பிடிச்ச பாட்டாம்..யாரோ சொன்னாங்க.. :) ( கண்ணா உனக்கு ரொம்ப வம்பு :) )
Madhuji: You and me both may be wrong! :) The citation on P. Susheela's award that year was: "For her immense contribution to the musical excellence of the film." In other words, the award was for her overall singing in the movie and not for a specific song. All the music awards that year went to MEGHASANDESAM. Yesudas's citation was: "For his rich contribution to the musical element of the film." ; and for Ramesh Naidu, it was: "For his use of classical music to enhance the aesthetic quality of the film." By the way, "priyE chaaruseelE..." in this movie was a duet.
(Sorry for the digression)
Courtesy: Tamil Hindu
திரையில் மிளிரும் வரிகள் 8 - காதல் கீதமா, குழந்தைப் பாடலா?
பாரதியாரின் பாடல்கள் திரைப்படங்களில் காலங்காலமாக இடம் பெற்றுவந்தாலும் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ பாடலுக்கு இணையான புகழை வேறு எந்தப் பாடலும் பெற்றுவிடவில்லை எனலாம். இசையறிவு இல்லாதவர்கள்கூட அப்பாடலின் மெட்டைச் சட்டென அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.
இப்பாடலைப் பொறுத்தவரை பாரதியார் பைரவி ராகத்தில்தான் மெட்டமைத்துள்ளதாக பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதன் தெரிவிக்கிறார். ஆனால், இன்று வழக்கத்தில் இருக்கும் ராகமாலிகை மெட்டை அமைத்தவர் திரைப்பட இசையமைப்பாளர் சி.ஆர். சுப்பாராமன். ‘மணமகள்’ படத்தில் இப்பாடல் இடம் பெற்றது. கண்ணனைக் குழந்தையாக்கிக் கொஞ்சும் தொனியில் அமைந்த இப்பாடலின் கடைசி சரணத்தைக் காதலை வெளிப்படுத்தும் வகையில் சுப்பாராமன் அமைத்திருந்தார். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தயாரித்த இப்படத்துக்கு திமுக தலைவர் கருணாநிதிதான் வசனம்.
பாடல் காட்சியில் பத்மினியும் லலிதாவும் டி.எஸ். பாலையாவும் நடித்திருக்கிறார்கள். அதன் பிறகு இப்பாடல் காதல் கீதமாகவே மாறிவிட்டது. “கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி” என்னும் வரிகளை மனதுக்குள் பாடிப் பார்க்காத காதலர்கள் யார் இருக்கிறார்கள்?
இது போலத்தான் பாரதிதாசன் எழுதிய ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்க்க மாட்டாயா?’ என்ற தேஷ் ராகப் பாடலும் குழந்தைக்காக எழுதப் பட்டு ‘ஓர் இரவு’ திரைப்படத்தில் காதல் பாடலாக மாறிவிட்டது.
‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ காபி ராகத்தில் தொடங்கி, ‘ஓடி வருகையிலே கண்ணம்மா’வில் மாண்டுக்கு மாறுகிறது. ‘உச்சிதனை முகர்ந்தால்’ வசந்தாவில் ஒலிக்கிறது. ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ வரிகள் திலங்குக்கு மாறுகின்றன. ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ வரிகள் உருக்கத்தை வெளிப்படுத்தும் நீலமணியில் ஒலிக்கின்றன. திரைப்படத்திலும் பின்னர் கச்சேரி மேடைகளிலும் பாடிப் பிரபலப் படுத்தியவர் எம்.எல். வசந்தகுமாரி. கடைசி சரணத்தை ஆண் குரலில் வி.என். சுந்தரம் பாடினார். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் “வெற்றிவடிவேலனே சக்தி உமைபாலனே” என்ற தொகையறாவைப் பாடியவர் சுந்தரம். இப்பாடலை நாகசுரக் கலைஞர் காருக்குறிச்சி அருணாசலம் வாசித்ததும் அதற்கு இன்னொரு பரிமாணம் கிடைத்தது.
‘தில்லானா மோகனாம்பாள்’ படம் உருவானபோது தஞ்சாவூர் ரயில்வே நிலையத்தில் சண்முகசுந்தரமும் மோகனாவும் சந்திக்கும் காட்சியில் “சண்முசுந்தரம் மோகனாவை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து ஒப்படைக்க வேண்டிய இடத்தில் ஒப்படைத்துவிட்டேன்” என்று பரேதசியாக நடிக்கும் எஸ்.வி.சகஸ்ரநாமம் சொல்கிறார். மோகனாவின் கையைப் பிடித்துப் பெட்டியில் ஏற்றுகையில் பின்னணியில் ‘சின்னஞ்சிறு கிளியே’ கண்ணம்மாவே ஒலிக்கிறது. ஆயிரம் வார்த்தைகளைக் கொட்டி எழுதினாலும் சொல்ல முடியாத உணர்வுகளை அந்த மெட்டு வெளிப்படுத்துகிறது.
சென்னையின் திரைப்படத் துறை குறித்து பிரெஞ்சு மொழியில் உருவாகியுள்ள ஆவணப்படத்தில் ‘தில்லானா மோகனாம்பாள்’ படம் உருவாக்கப்பட்ட காட்சியும் இடம்பெற்றுள்ளது. திருவாரூரில் மோகனாம்பாளின் வீட்டுக்கு வெளியே அமர்ந்து சண்முகசுந்தரமும் குழுவினரும் வாசிப்பது போன்ற காட்சி. வாசிக்கும் பாட்டு ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’தான். ‘என் கண்ணில் பாவையன்றோ’ என்ற வரிகளை முதலில் சிவாஜி கணேசன் வாசிப்பது போன்ற காட்சி.
பின்னர் திரைப்பட இயக்குநரான ஏ.பி. நாகராஜன் “அங்கே பார்த்திட்டிருந்தீங்க. மோகனாவை” என்று சொல்லிவிட்டு, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ வரிகளைப் பாடிக் காட்டுகிறார்.
1980-களில் எம்,எஸ். விஸ்வநாதன் இசையில் ‘நீதிக்குத் தண்டனை’ திரைப்படத்தில் வேறொரு மெட்டில் இப்பாடல் இடம் பெற்றது. கே.ஜே. யேசுதாசும் ஸ்வர்ணலதாவும் அற்புதமாகப் பாடியிருந்தாலும் தமிழர்களின் மண்டைக்குள் ‘சின்னஞ்சிறு கிளியே’ என்றாலே சி.ஆர். சுப்பாராமனின் மெட்டு மட்டுமே ஒலிக்கிறது.
சமீபத்தில் ‘குற்றம் கடிதல்’ படத்தில் சேர்ந்திசையில் பியானோ ஒலிக்க, வரிக்கு வரி இப்பாடலைக் கச்சிதமாகப் படமாக்கியிருக்கிறார்கள். ‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ வரிகள் அற்புதமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு ஏற்படும் நெருக்கடியின்போது சற்றும் எரிச்சலடையாமல், நிதானம் இழக்காமல், விட்டுக்கொடுக்காமல் அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கும் கணவன் மணிகண்டனைப் போல் கணவனைப் பெற்றிருக்கும் பெண்கள் பாக்கியவதிகள்தான்.
Courtesy: Tamil Hindu
மறக்கப்பட்ட நடிகர்கள் 4: வெண்கலக் குரல் வித்தகர்! - ஓ.ஏ.கே. தேவர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள ஒத்தப்பட்டி கிராமம்தான் ஒ.ஏ.கே. தேவரின் பூர்வீகம். பெற்றோர் இட்ட பெயர் கருப்புத் தேவர். பள்ளிக்கூடத்தில் மற்றொரு கருப்பு இருந்ததால் ‘ஒத்தப்பட்டி ஐயத் தேவர் மகன் கருப்புத் தேவர்’ என்பதைச் சுருக்கி ஆசிரியர் வைத்த பெயர்தான் ஓ.ஏ.கே. தேவர். மதிய உணவு இடைவேளையில் நாடகப் பாடல்களைப் பாடுவதிலும் நீளமான வசனங்களைக் கணீர்க் குரலில் பேசுவதிலும் சிறந்து விளங்கினார்.
இதைக் கருப்புத் தேவரின் தந்தையிடம் பள்ளி வாத்தியார் பெருமையாகச் சொல்லிவிட்டுப்போக, கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார் ஐயத் தேவர். “இவனை இப்படியே விட்டா கூத்தாடிப் பயலா போயிடுவான். நாட்டுக்கு எந்தப் பிரயோசனமும் இருக்காது” என்று கூறி, பள்ளிப்படிப்பு முடிந்ததும் ஊர் வழக்கப்படி மகனை ராணுவத்தில் சேர்த்துவிட்டார் ஐயத் தேவர்.
தந்தையின் சொல்லை மதித்து 17 வயதில் ராணுவத்தில் சேர்ந்தவர், அங்கேயும் பாட்டுப் பாடி, நடித்துக்காட்டி சக ராணுவ வீரர்களைச் சந்தோஷப்படுத்த, ஓ.ஏ.கே. வேலை செய்த சவுத் பட்டாலியன் முழுவதும் பிரபலமானார். நான்கு ஆண்டுகள் ராணுவச் சேவையை முடிந்திருந்த நிலையில் தந்தையார் இறந்த செய்தி தந்தியாக வர, அப்போது ஊருக்கு வந்தவர், திரும்பவும் தனது முகாமுக்குத் திரும்பவில்லை. நாடகம் அவரைக் கவர்ந்து சென்றுவிட்டது.
சக்தி நாடக சபாவின் மாணவர்
திருச்சியில் முகாமிட்டிருந்த ‘சக்தி நாடக சபா'வின்’ ‘கவியின் கனவு’ நாடகத்துக்குச் சென்றார் தேவர். நாடகம் முடிந்ததும், சபாவின் முதலாளி, சீர்திருத்த நாடகங்களின் சிற்பியாகக் கொண்டாடப்பட்ட ‘சக்தி’ டி.கே. கிருஷ்ணசாமியைச் சந்தித்தார்.
‘கவியின் கனவு’ நாடகத்தை தேவர் பார்ப்பது இது முதல்முறையல்ல; 25-வது முறை. சர்வாதிகாரியை எதிர்த்துக் கதையின் நாயகன் பேசும் வசனங்களை, கிருஷ்ணசாமியின் முன்னால் அட்சரம் பிசகாமல் கணீர்க் குரலில் தேவர் பேசிக்காட்ட, “ உன் ரத்தத்தில் நடிப்பு ஓடுகிறதடா!” என்று கிருஷ்ணசாமியிடமே பாராட்டு பெற்றார். கையோடு தனது சபாவிலும் சேர்த்துக்கொண்டார். எந்த நாடகத்தை நேசித்தாரோ அதே நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் தேவர். அப்படிப்பட்ட சக்தி நாடக சபாவில்தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா உள்ளிட்ட பலர் நடிகர்களாக இருந்தனர்.
‘கவியின் கனவு’ நாடகத்தில் ராஜகுருவாக நடித்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒ.ஏ.கே. தேவரின் நெருங்கி நண்பரானார்.
நாடக சபாவிலிருந்து மாடர்ன் தியேட்டர்
சக்தி நாடக சபாவில் சில ஆண்டுகளைக் கழித்த தேவருக்கு, அதன் நாடகங்கள் ஒவ்வொன்றாய்த் திரைப்படமாகிவந்த நிலையில், தனது சக நடிகர்களைப் போல் தனக்கும் சினிமா வாய்ப்புகள் அமையும் என்று எதிர்பார்த்தார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சேலத்திலிருந்து சென்னை திரும்பினார். உயிர் நண்பரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமோ நடிப்பை விட்டுவிட்டுப் பாடல் எழுதும் கலையைக் கற்றுகொள்ள புதுச்சேரி சென்று ‘புரட்சிக்கவி’ பாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்துவிட்டார்.
நண்பரைப் பிரிந்த தேவர், சென்னையில் எங்கே சென்று தங்குவது என்று தெரியாமல் பகல் முழுவதும் கீழ்ப்பாக்கம் ஸ்டூடியோக்களில் சுற்றித்திரிந்துவிட்டு, இரவில் மெரீனா கடற்கரையில் படுத்துறங்குவதை வழக்கமாகக் கொண்டார். கடற்கரையில் உறங்கினாலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள அதிகாலையில் எழுந்து குஸ்தியும் சிலம்பமும் விளையாடுவார்.
இதனால் தேவருக்குக் கடற்கரையில் நண்பர்கள் கிடைத்தார்கள். தினசரி கடற்கரைக்கு நடைப்பயிற்சிக்கு வரும் என்.எஸ். கிருஷ்ணனைச் சந்தித்தார். தேவரின் வாட்டசாட்டமான உடல்வாகையும் தமிழ் உச்சரிப்பையும் கண்ட கலைவாணர், அவரை சேலம் வரச்செய்து மார்டன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் மாதம் 10 ரூபாய் சம்பளத்துக்கு கம்பெனி நடிகராகச் சேர்த்துவிட்டார். அங்கே 100 ரூபாய் மாதச் சம்பளம் பெறும் துணை நடிகராக உயர்ந்தாலும் உருப்படியான வேடங்கள் எதுவும் அமையாததால் மார்டன் தியேட்டரை விட்டு விலகி வெளியே வந்தார் தேவர்.
மீண்டும் சென்னைக்கு வந்தவரை அரவணைத்துக்கொண்டார் உயிர் நண்பரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். ராயப்பேட்டை பொன்னுசாமி நாயக்கர் தெருவில் கதவெண் 10-ல், ஐந்து ரூபாய் வாடகைக்கு ஒர் அறையை எடுத்துத் தங்கிக்கொண்டு, சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தார்கள். இவர்கள் இருவருடனும் மூன்றாவதாக இதே அறையில் வந்து சேர்ந்தார் ஓவியர் ராமச்சந்திரன்.
ரோஷத்துடன் மார்டன் தியேட்டரை விட்டு, வந்துவிட்டாலும் உடனடியாகத் துணை நடிகர் வாய்ப்பு கூட கிடைக்காத நிலை. பட்டுக்கோட்டைக்கும் வாய்ப்புகள் இல்லாமல் சாப்பாட்டுக்கே திண்டாடினார்கள். தேர்ந்த ஓவியரான ராமச்சந்திரன், சினிமா செட் வேலைகளுக்குப் போய் வந்துகொண்டிருந்தார். அவர் வாங்கிவரும் வாரக் கூலிதான் நடிகரையும் கவிஞரையும் காப்பாற்றிவந்தது. ஒரு சூழ்நிலையில் ஓவியருக்கும் சம்பள பாக்கி விழ, பல நாட்கள் பட்டினியாகவே ஓடியிருக்கின்றன.
பசி தாள முடியாத நண்பர்கள், வீட்டு உரிமையாளரின் துணைவியாரிடம் சட்டைக்குக் கஞ்சி போட வேண்டும் என்று கூறி அரிசிச் சோறு வடித்த கஞ்சியை வாங்கிவந்து உப்பு போட்டுப் பருகிப் பசி தீர்த்திருக்கிறார்கள். இந்த இக்கட்டான நிலை ஓவியர் ராமச்சந்திரன் மூலம் கலைவாணருக்குத் தெரிய, தேவரை உடனே அழைத்துவரும்படி ஆள் அனுப்பினார்.
கைகொடுத்த கலைவாணர்
திறமையானவர்களைக் கைதூக்கிவிடுவதிலும் கையில் இருக்கும் அனைத்தையும் அள்ளிக் கொடுப்பதிலும் பெயர் பெற்ற வள்ளலாக விளங்கிய கலைவாணர், அப்போது பிரபல எடிட்டர் ஆர்.எஸ். மணி தயாரித்து இயக்கிய ‘மாமன் மகள்’(1950) படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஓ.ஏ.கே. தேவருக்குப் பெற்றுக் கொடுத்தார். வீராசாமி என்ற அடியாளாக நடித்தாலும் அந்தப் படத்தின் மூலம் பளிச்சென்று அடையாளம் கிடைத்தது தேவருக்கு.
அந்தப் படத்தில் ஏற்ற கதாபாத்திரம் காரணமாக தேவருக்கு எதிர்மறைக் கதாபாத்திரங்களே அமைய, மறுபடியும் கலைவாணரிடம் வந்து நின்றார் தேவர். அப்போது ‘மதுரை வீரன்’ படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. எம்.ஜி.ஆரிடம் எடுத்துச் சொல்லி ‘மதுரை வீரன்’ படத்தில் திருமலை நாயக்கர் மன்னன் வேடத்தை தேவருக்கு வாங்கிக் கொடுத்தார் கலைவாணர். திருமலை மன்னராக வெண்கலக் குரலில் தேவர் பேசி நடிக்க, மதுரை வீரனின் பெரிய வெற்றி தேவரைப் பிரபலப்படுத்தியது.
எம்.ஜி.ஆருடன் நெருக்கமான நட்பும் உருவானது. எம்.ஜி.ஆர் படங்களில் அடுத்தடுத்து இடம்பெறத் தொடங்கியதும் சிவாஜி நடிக்கும் படங்களுக்கும் அழைப்புகள் குவிந்தன. இருபெரும் கதாநாயகர்களின் படங்களில் மாறி நடிக்க ஆரம்பித்த தேவரின் நடிப்பு சிவாஜிக்குப் பிடித்துப்போக, தனது சொந்த நாடக மன்றமான சிவாஜி நாடக மன்றத்தில் மிகப் பெரிய இடம்கொடுத்தார் சிவாஜி. சிவாஜியுடன் திரையில் நடிக்கும் அதேநேரம் நாடகமேடையிலும் வெளுத்துக்கட்டினார் தேவர்.
அன்று இரக்கமில்லாத வில்லன் கதாபாத்திரங்கள் என்றால் எம். என். நம்பியார், பி.எஸ்.வீரப்பா, டி.எஸ். பாலைய்யா ஆகிய மூன்று நட்சத்திரங்கள்தான் ரசிகர்கள் மனதில் நின்றார்கள். அதை மாற்றிக்காட்டியது 1957-ல் வெளியான ‘மகாதேவி’. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். பி.எஸ். வீரப்பாவுடன் இணைந்து நடித்தார்.
“வாள் பிடிக்கத்தெரியாத பேடியிடம் போய்ச் சொல் இந்த வார்த்தையை” என்ற தேவர் பேசிய வசனமும் அவரது நவரச நடிப்பும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக மிரட்டலான வில்லன் நடிகராக எழுந்து நின்றார் ஓ.ஏ.கே.தேவர். அவரது அடையாளம் வில்லன் நடிப்பு மட்டும்தானா? அவரது திரையுலகப் பயணத்தின் சுவடுகள் நிறைவுப் பகுதியாக அடுத்த வாரம்.
சுசீலாம்மமா பாடல்களில் என்னுள் முதல் இடத்தைப் பிடித்த பாடல் இந்தப் பாடல்தான். இதை பலமுறை சொல்லியிருக்கிறேன். இந்தப் பாடலில் அவர் தரும் வைப்ரேஷன்கள் தெளிந்த குளத்தில் கல்லெறிந்தால் தோன்றும் அதிர்வலைகளை ஒப்பும்.
http://static.gulfnews.com/polopoly_...3691577900.jpghttps://qph.is.quoracdn.net/main-qim...t_to_webp=true
இந்தப் பாடல் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தை சொல்லி மாளாது. படத்தில் இப்பாடல் இல்லாமல் போனாலும் 'யூ டியூபி'ல் 'அம்மம்மா.... காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்' பாடலுக்கு பதிலாக 'ரீமிக்ஸ்' காட்சியாகிறது. பார்க்க நன்றாகவே பொருத்தமாக இருக்கிறது. ஆனாலும் காதலின் வேதனை நெஞ்சில் கனலாய் வீச, விரசமின்றி, விரகதாபமின்றி, தூய காதலை மனதில் வைத்து நாயகி பாடும் இப்பாடலை அருவியில் குளிக்கும் மகிழ்ச்சிப் பாடலுக்கு ரீமிக்ஸ் செய்திருப்பது ....'அம்மம்மா'.... ரொம்பவே ....இடிக்கிறது. மாற்றம் செய்த நண்பருக்கு தொழில் நேர்த்திக்காக பாராட்டுக்கள். அப்படியே குட்டுக்களும், திட்டுக்களும்.
'காதலைத் தேடி நான் அழுதேனோ... ஓ....ஓ...ஓ....ஓ....
காரணத்தோடே நான் சிரித்தேனோ... ஓ....ஓ...ஓ....ஓ....
அடடா! உயிரையே விலையாகத் தந்து விடலாம் கில்லாடி 'கின்னஸ்' ராணிக்கு.
உன் குரல் கேட்கும் போது வேறு நினைவுகள் எமக்கேது?
https://youtu.be/rP73pGZNYog
மது அண்ணாவிற்கு பாட்டு கொடுத்து நாளாச்சு....டெலிபோன் பண்ணியும் நாளாச்சு.... சரி! டெலிபோன் பெருமையை பேபி இந்திரா சௌகாருக்கு விளக்க கிடச்சுது அபூர்வ பாட்டு 'ஸ்கூல் மாஸ்டர்' பேராசிரியர் மூலமாக.
'பார்த்தா சிறிசுதான் பாட்டி
இது தாத்தாவைக் கொண்டு வரும் கூட்டி
காதோரம் மெல்ல மெல்ல மாட்டி
சேதி தருவது இது செய்யும் பியூட்டி
டில்லியும் பேசும் மதுரையும் பேசும்
நேருக்கு நேராக
தெரியாத ஆள் கூட அறிமுகமானங்க'
https://youtu.be/P-Da4L-1X_w
மதுண்ணா..விக்கல் பி.பானுமதியா..எனக்குத் தெரியாதே..தாங்க்ஸ்
வாஸ்ஸூ.. நீராடும் கண்கள் இங்கே இந்தப் பாட் படத்துல கட்டா..எனக்கென்னமோ ரேடியோல மட்டும் கிட்டத் தட்ட போன ஜன்மத்தில கேட்ட மாரி ஃபீலிங்க்.. சீரியஸா.. ஆனா கேட்டிருக்கேன்.. பார்த்ததில்லை என நினைக்கிறேன்... ரீமிக்ஸா இருந்தாலும் எடுத்துச் சொல்லி போட்டட்தற்கு ஒரு ஓ..
கொஞ்சூண்டு வாட்டர்லயும் குளிக்கலாம்னு இன்னிக்குத் தான் தெரிஞ்சுது..அதுக்கு இன்னொரு ஓ :)
பெட்ரோ மாக்ஸ் லைட்ட்டே தான் வேணும் என விடாப்பிடியாக அபூர்வ பாடல்களை தேர்வு செய்து இடும் ராகவேந்தர் வாஸ்ஸு மது ராகதேவனுக்காக இன்று மதுண்ணா புண்ணியத்தில் நான் கேட்ட ஒரு சுவையான டூயட் பாடலின் இனிமைத்தன்மையை உங்கள் காதுகளின் ப்ளஸ் கண்களின் முன்னும் சமர்ப்பிக்க்ன்றேன் (ஹப்பா எவ்ளோ நீளமான வாக்கியம் :) )
https://youtu.be/OZOgfqSoRhE
பி.சுசீலாம்மாவ க் கொண்டாடறச்சே இந்தப் பாட்டுப் போடலைன்னா தெய்வ குத்தமாகிடும்..அதுக்காகச் சும்மா போடமுடியுமா..
முன்னால எழுதின ரைட் அப் போட்டு அப்புறம் பாட்..ஓகேயா (வேற வழியில்லைங்கறீங்களா :) )
*
சிரிப்பு பாதி அழுகை பாதி
அத்தியாயம் எட்டின் இறுதி….
*
அழுகை எனப்படுவது ஏதென்றால் நெஞ்சம்
பழுதான போதில் வரும்
*
நெஞ்சம் எப்போது பழுது வரும்… துன்பத்தில்.. மீளாத் துயரில்…அப்போது என்னாகும்..கண்ணில் ஒரு காலத்தில் வைகையில் வந்த வெள்ளம் போல பெருக்கெடுத்து நீர் வரும்…
*
ஆனால் அப்படி வெள்ளமாகப் பெருக்காமல் ஆச்சர்யத்தில், அன்பை உணர்ந்த தவிப்பில் வரும் கண்ணீர் எப்படி இருக்கும்..
*
மெல்லச் சிரிப்பு வரும் – பின்னே
மேவி விழிகளினிடை
துள்ளித் துளிர்த்திடுமே ஒரு
சின்னத் துளியாக
*
அப்படி ஒரு துளி சொட்டுகண்ணீர் விடும் ந.தியின் இந்தக் காட்சி எனக்கு வெகுவாகப் பிடிக்கும்..படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் மின்னினாலும் ந.தி பாதிச் சந்திர வேஷம் ஏற்றிருப்பார்..(கண்டுபிடிச்சுட்டீங்களா)
சிரிப்பு பாதி அழுகை பாதி 9
மிகப் பெரிய இடைவேளைக்கப்புறம் தொடர்கிறது..!
*
ந.தியின் மிகப் பிடித்த பாடலொன்றில் இருக்கும் வரி..
*
கண்களின் தண்டனை காட்சிவழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளைத் தண்டிக்க என்ன வழி எனக் கேட்டிருப்பார் கண்ணதாசனின் பாடல் வாயிலாக.. ஸோ இன்பம் தருவதும் காதல்..துன்பம் தருவதும் காதல் (எவ்ளோ பெரிய கண்டுபிடிப்புடா – மன்ச்சு ஷ்ஷ்)
*
உலகத்தில் இதைப்பற்றி பேசாதவர்கள் வெகு சொற்பமே
*
மின்னலது ஊடுருவி மென்நெஞ்சில் பாய்ந்ததுபோல்
கன்னமிடும் காதலும் காண்..
*
யெஸ்.. காதல்..விதைவிட்டுச் சாகுபடி செய்யவேண்டிய அவசியமே இல்லை.. படக்கென ஒரு பார்வை, ஒரு குறுஞ்சிரிப்பு, ஒரு உரையாடல், ஒரு – வாகான நுதலில் சுருண்டு பெருமையுடன் புன்சிரிக்கும் சிறு சுருள் முடி அதன் கீழ் குறுகுறு கண்கள் எனப் பார்க்கையில், ஒரு துளி கண்ணீர், ஒரு ஒயில் நடை, ஒரு வீரச் செயல் ஆணிற்கு, ஒரு கவிதை.. இன்னும்..என்னவிதத்தில் வரும் என்றும் சொல்ல முடியாது..
*
ந.தியின் இந்தப் படத்தில் அவர் முகம்மதிய இளைஞர்..சூழலால்.. மென்மை மனம்..அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற நெஞ்சம்..
*
அவர் சைக்கிளின் மீதும் மனதின் மீதும் மோதும் ஹீரோயின் ஒரு கிறிஸ்தவப் பெண்.. அந்த இளைஞரின் அமைதிப் பார்வை, அலட்டலில்லாத போக்கு, நாகரீகமான பேச்சு, மற்றவருக்கு உதவும் தன்மை என எல்லாவித நல்ல குணங்களும் பிடித்துப் போய்விட..மே ஐ கமின் என்று கேட்டுக் கொள்ளாமலேயே அவளுக்கு அந்த இளைஞன் மேல் காதல் வந்து விடுகிறது..
*
அந்த இளைஞன் யெஸ் ரஹீம் தான்..அவருக்கும் காதல் வந்துவிடுகிறது.
*
மனதிலோ..
இரவேறுது நிலவேறுது இளமையினி விழித்தே
புறந்தள்ளிடும் சலனந்தனை பொறுக்காமலே அவளை
அறந்தானென அழகாய்ப்பல விதமாய்ச்சொலி அணைத்தே
கரம்பிடித்திடும் உணர்வைவெகு கனிவாய்த்தொடுத் திடுமே
என்றெல்லாம் எண்ணம் பலவாறாய்த் தோன்றினாலும்..முடியவில்லையே..
*
காரணம்..ஜாதி.. நான் முஸ்லிம்..அவள் கிருஸ்தவப் பெண்.. சமூகம் ஏற்குமா..தவிக்கிறார் ரஹீன்..
*
அவளும் அவரை நாடி வருகிறாள்..வெகு அழகாய் வெகு இயல்பாய்ப் வெகு இனிமையாய்ப் பாடலும் வருகிறது
*
பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது..
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது..
*
காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே
கண்கள் பேசும் பாஷையிலே பேதமில்லையே
*
கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும்
பாதிக் கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்
வட்ட நிலா வான்வெளியில் காவியம் பாடும்
கொண்ட பள்ளியறை ப் பெண்மனதில் போர்க்களமாகும்
*
அவள் பாடுவதற்கு ம்ம் என்று ஆமோதிக்கிறார் ரஹீம்..பாடல் இறுதியில் இருவருக்குமே இது கையறு நிலை…சமூகம்..என்றெல்லாம் தோன்றிவிட..
*
ரஹீமின் விரித்த கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு குலுங்குகிறது அந்தத் தாமரை.. ரஹீமின் ஆழ்ந்த கண்களுக்குள் ஒரு வித வெறுமை படர்ந்து உணர்வுகளின் கொந்தளிப்பால் ஒரு துளி கண்ணோரம் வந்து பொங்கி..அவள் தலையில் விழுகிறது..வாவ்..
*
கண்ணோரம் ஈரமின்று காயலாச்சே
..கன்னியவள் எண்ணமதும் தெரிய லாச்சே
வண்ணமகள் சொல்லிவிட்டாள் நெஞ்சத் தீயை
..வாய்த்திடுமா அவள்கரத்தைப் பற்றும் நேரம்
பெண்ணவளே சொன்னபின்னும் தவிக்கின் றேனே
..பேதமையா பின்விளைவா என்றே உள்ளம்
எண்ணியெண்ணிப் புலம்புவதை எங்கே சொல்ல
..ஏந்திழைக்கு எப்படித்தான் சொல்வேன் மெல்ல
*
ம்ம் ரஹீமின் உள்ளத்தில் புயல் அடிக்கிறது..
..*
காட்சியில் யாரென்று தெரிந்திருக்குமே.. ந.தி, தேவிகா தான்.. எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காத சீரிய காதலுக்கான காட்சி என்பேன்.. படம் பாவ மன்னிப்பு..
*
ம்ம் ஒரு துளிக் கண்ணீர் சொல்லிவிடும் பல பக்கங்களால் சொல்ல இயலாததை..
https://youtu.be/xqofnfgytws
சுட்டெரிக்கும் வெயிலில் கோடை மழையாக வந்து குளிர்வித்து எங்களை மகிழ்விக்கும் நெய்வேலி வாசு சார் அவர்களை மகிழ்வுடன் வரவேற்கிறேன்.
வேலைப்பளுவில் இருந்து மீண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். வரும்போதே அபூர்வப்பாடலான அதே சமயம் நம் உள்ளங்களை கொள்ளை கொண்ட "மயக்கத்தை தந்த, தந்துகொண்டிருக்கின்ற, இனிமேலும் தரப்போகிற" பாடலோடு வந்து அசத்தி விட்டீர்கள். நன்றி.
ஒரு அசைன்மெண்ட் கொடுக்கலாமா?. "மயக்கத்தை தந்த" பாடலைப்போலவே முக்தாவின் இன்னொரு படமான தேன்மழையில் இடம்பெற்ற கானக்குயில் சுசீலாம்மாவின் அபூர்வமான, அதே சமயம் அழகான பாடலான "நெஞ்சே நீ போ சேதியைச் சொல்ல, நானும் வருவேன் மீதியைச் சொல்ல" என்ற பாடலை தங்கள் கைவண்ணத்தில் கண்டு பரவசமடைய விரும்புகிறோம்.
தங்கள் வசதியைப்பொருத்து செய்யுங்கள். அவசரமில்லை.
// அவள் பாடுவதற்கு ம்ம் என்று ஆமோதிக்கிறார் ரஹீம்..பாடல் இறுதியில் இருவருக்குமே இது கையறு நிலை…சமூகம்..என்றெல்லாம் தோன்றிவிட..
ரஹீமின் விரித்த கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு குலுங்குகிறது அந்தத் தாமரை.. ரஹீமின் ஆழ்ந்த கண்களுக்குள் ஒரு வித வெறுமை படர்ந்து உணர்வுகளின் கொந்தளிப்பால் ஒரு துளி கண்ணோரம் வந்து பொங்கி..அவள் தலையில் விழுகிறது..வாவ்
ம்ம் ரஹீமின் உள்ளத்தில் புயல் அடிக்கிறது..
..*
காட்சியில் யாரென்று தெரிந்திருக்குமே.. ந.தி, தேவிகா தான்.. எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காத சீரிய காதலுக்கான காட்சி என்பேன்.. படம் பாவ மன்னிப்பு..
*
ம்ம் ஒரு துளிக் கண்ணீர் சொல்லிவிடும் பல பக்கங்களால் சொல்ல இயலாததை..
//
சின்னக்கண்ணன் சார்,
அற்புதமான ஒரு கட்டத்தை மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள். என்ன ஒரு உணர்ச்சிகளின் சங்கமம். இந்தப்பாடல் துவங்கும்போதெல்லாம் நான் தீர்க்கமாக ரசித்தாலும், ஆவலோடு காத்திருப்பது இந்த இறுதிக் கட்டத்துக்குத்தான் குறைந்த வேகத்தில் பின்னணியில் சுசீலாவும், எம்.எஸ்.வி.யும் பாட, மத எல்லைகளைக் கடக்கமுடியாமல் இரு உள்ளங்களின் கொந்தளிப்பில் நம்மையெல்லாம் அழ வைத்து விடுவார்கள்.
ஆனால் முரசு சேனலின் இப்பாடலை ஒளிபரப்பும்போது, 'தூக்கம் வராது தூக்கம் வராது தூக்கம் வராது' என்ற வரிகளோடு கட் பண்ணிவிடுவார்கள். ரசனைகெட்ட ஜென்மங்கள். பாடலின் ஜீவனே இந்த இறுதிக் கட்டம்தானே. அந்த சேனலின் பாடல் தொகுப்பாளர் ஒவ்வொரு முறையும் என் சாபத்துக்கு ஆளாகிறார்.
பக்கா ரைட்டிங் சின்னா! நிஜமாகவே ஜமாய்த்து விட்டீர்கள். 'பாவ மன்னிப்பு' பாடல் காட்சியை இதைவிட சிறப்பாக யாரும் எழுத இயலாது. இத்தோடு மூன்று முறை படித்து சுவைத்து அழுது விட்டேன்.
//என்ன ஒரு உணர்ச்சிகளின் சங்கமம். இந்தப்பாடல் துவங்கும்போதெல்லாம் நான் தீர்க்கமாக ரசித்தாலும், ஆவலோடு காத்திருப்பது இந்த இறுதிக் கட்டத்துக்குத்தான் குறைந்த வேகத்தில் பின்னணியில் சுசீலாவும், எம்.எஸ்.வி.யும் பாட, மத எல்லைகளைக் கடக்கமுடியாமல் இரு உள்ளங்களின் கொந்தளிப்பில் நம்மையெல்லாம் அழ வைத்து விடுவார்கள். //
மிக்க நன்றி ஆதிராம்..
// 'பாவ மன்னிப்பு' பாடல் காட்சியை இதைவிட சிறப்பாக யாரும் எழுத இயலாது.// மிக்க நன்றி வாசு... வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி என வாங்கியது கொஞ்சம் ரொம்பவே மகிழ்ச்சியாய் இருக்கிறது.. படம்பார்த்தது இளமைக் காலத்தில் ஸ்ரீதேவி தியேட்டரில் தான்..ரீ ரன்.. மூன்று நாளோ ஒரு வாரமோ ஒரு வித பித் பிடித் இருந்தேனாக்கும்..
ஆதிராம் சார்,
மிக்க நன்றி. மயக்கத்தை தரும் 'நெஞ்சே நீ போ' சேதியை சொல்ல நான் எழுத முடிவு செய்திருந்தேன். நீங்களும் மிகச் சரியாக அதையே எனக்கு அசைன்மெண்ட்டாக தந்து விட்டீர்கள். நீங்களும் ஒரு இடைவெளிக்குப் பின் வந்து சின்னாவின் 'பாவ மன்னிப்பு' பாடலுக்கு அழகான அருமையான பின்னூட்டம் இட்டு அந்தப் பதிவை பெருமைப்படுத்தி மேலும் அதை உயர்த்தி விட்டீர்கள். அதற்கு என் மனமார்ந்த நன்றி. சுசீலாம்மாவின் அரிய பொக்கிஷங்கள் ஏராளம் உண்டு. ஒவ்வொன்றாக எடுக்கலாம். தாங்களும் அதற்கு உதவி செய்வீர்கள் என்று நம்புகிறேன். சற்றே தொய்ந்திருந்த மதுர கானம் அனைவரின் வருகையால் மீண்டும் பரிமளிக்கத் தொடங்கியுள்ளது. அதற்காக அனைவருக்கும் நன்றி.
Welcome to my James Bond / Jai Shankar Archipelago with Love!
Jai Sankar's James Bond Shadow!
பாலசந்தரின் இயக்கத்தில் ஒரு கல்லூரிப் பேராசிரியராக ஜெய் சங்கரும் கல்லூரி முதல்வராக ஜெமினியும் வாழ்ந்தே காட்டிய நூற்றுக்கு நூறு திரைப்படத்தில் கூட கண்ணாடி போட்ட ஜெய்யின் ப்ரொபசர் நடையுடை பாவனைகளில் ஜேம்ஸ் பாண்டின் தாக்கம் வெளிப்படையாகத் தெரியும்!Quote:
Sean Connery the original James Bond OO7 often felt haunted by his Bond image inseparable from him just like his shadow and his non-Bond movies were not so successful inasmuch as the fans also could not come out of his Bond moments!
Same happened to Jai too! He was also seen as the tamil reincarnation of Connery's Bond and in all his movies and song sequences too he could not avoid his mentor's shadow!!
பளிங்கினால் ஒரு மாளிகையாக விஜயலலிதா ஜேம்ஸ் பாண்ட் வில்லியாகத்தான் தெரிகிறார் ஜெயசங்கர் ஜேம்ஸ் பாண்ட் வட்டத்திற்குள் !
https://www.youtube.com/watch?v=H_Hh2gGuh1k
மனோகரும் ஜேம்ஸ் பாண்ட் வில்லனாகத்தான் தெரிகிறார் ...!!
https://www.youtube.com/watch?v=Qmq9Fglh7Lo
Harrison Ford is stunned by this 'James Bond' movement of his father Sean Connery!! We too....Connery the greatest ever!!!!Quote:
No escape from the clutches of his James Bond shadow for Sean Connery too at this ripened age....Indiana Jones and the last crusade exhibits this illusion!!
https://www.youtube.com/watch?v=PzE6-WZtOi4
From Jai Shankar's Archipelago with Love!
மதுர கான மது மயக்கத்தில் மூழ்கும் முன் நில் கவனி காதலி !
From the South Indian James Bond Jai Shankar's Nil Kavani Kaadhali!
Again Jai reprised his CID inspector Shankar role as the desi equivalent to Sean Connery's James Bond OO7!
This film directed by CVR has good songs too!!
In the line of Palinginaal oru maaligai......My name is rosy!! Enjoy this collection of songs!!
https://www.youtube.com/watch?v=yy2AkmOmJ3E
Belly becoming jelly keeping our Jolly mood on Sundays!!
From the Islands archipelago of Jai Shankar, the James Bond of South!!
Belly dancing in James Bond movies...in Jai's CID shankar movies it is low keyed!!
https://www.youtube.com/watch?v=WrsRapiOMn0
https://www.youtube.com/watch?v=JnuJYS_Gzak
https://www.youtube.com/watch?v=b97WYHteq5E
There was a discussion about a composition from Jayadeva's ashtapathi.
Here its from Megasandhesam(1982)
priye charuseele.........
http://www.youtube.com/watch?v=BuAh6fkzSYg
This composition is known by another line -'vadasiyadi kinchitapi..........'.
I think I posted this in the thread on 'Sanskrit classical compositions in movies' .