ரவி சார்
நீங்கள் கூறுவது வாஸ்த்தவம் !
மாயைகளுக்கு ஆயுள் கூட்டும் முயற்சி எப்பொழுதெல்லாம் நடக்கிறதோ ..அப்பொழுதெல்லாம் மெய்ஞானம் மற்றும் உண்மை உரத்த குரலில் ஒலித்து, கதிரவனை கண்ட பனிபோல மாயயை விலக செய்யும் ! ஆகையால் கவலை வேண்டாம் !
ஜெய் ஹிந்த் !
Rks
Printable View
பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம்!
சுதந்திர தியாகிகளை என்றும் நினைவு கூர்வோம்!
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
ஜெய்ஹிந்த்!
அன்புடன்
ரவி,
மீள் வருகைக்கு நன்றி! தொடர்க!
வாசு,
யாருமே யோசிக்காத ஒரு பாடலை அழகாய் விவரித்து பதிவிட உங்களால்தான் முடியம்! நாம் பிறந்த மண் பல நினைவுகளை பழைய நினைவுகளை கிளறி விடுகிறது. வியட்நாம் வீடு சுந்தரமும் வின்சென்டும் போட்டுக் கொடுத்த கோடு ஷங்கரால் ரோடாக மாறி வெற்றிப் பாதையாகவும் மாறியது. நாம் பிறந்த மண் தயாரிப்பில் இருந்தபோது படித்த கேள்விப்பட்ட பல விஷயங்கள் ஆவலை தூண்டியிருந்தது., நேரம் கிடைக்கும்போது அதைப் பற்றி பேசுவோம்!
அன்புடன்
செந்தில்வேல்,
நீங்கள் ஆவணங்களை மட்டும் எடுத்துப் போடும் நபரல்ல என்பதை அறிந்து, படத்தை காட்சிகளை கூர்மையாக கவனித்து ஏன் காமிரா கோணங்களை கூட நுணுக்கி ஆராய்ந்து எழுதுவதை படித்தபோது உண்மையிலே எனக்கு pleasant surprise தான். அதிலும் எனக்கு மிகவும் பிடித்த ஏன் நமது ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த யாரை நம்பி நான் பொறந்தேன் பாடலோடு நீங்கள் தொடங்கியது மிகவும் மகிழ்ச்சி. என்ன இருந்தாலும் விஜய ரகுநாத சேதுபதி அல்லவா! பெயரே என்ன கம்பீரம்! நடிகர் திலகத்திற்கேற்ற மாதிரி! இந்த விஷயம் முன்பே ஒரு முறை சொல்லியிருக்கிறேன். இந்த கேரக்டர்தான், அந்த மேக்கப்தான் இந்தியன் தாத்தாவிற்கு inspiration என்பது கமலே சொன்னது.
வாசு போல அரிதான் பாடல்களை எடுத்துக் கொள்வது இன்னொரு சுவை! தொடருங்கள்!
அன்புடன்
முத்தையன் அம்மு சார்,
உண்மையை சொல்லப் போனால் திரியில் படத்தின் ஸ்டில்களை பதிவிடுவதில் அவ்வளவு உடன்பாடு இல்லாதவன் நான். [வாசுவும் சரி ராகவேந்தர் சாரும் அவ்வப்போது சில அரிதான் அருமையான் ஸ்டில்ஸ் போடுவார்கள். அந்த விதிவிலக்குகளை தவிர்த்து விட்டு சொல்கிறேன்]. திரியில் பலரும் எழுத வேண்டும் என்று விரும்புவன் நான். அப்படிப்பட்ட மனம் கொண்ட என்னையே நீங்கள் போடும் சில ஸ்டில்ஸ் மயக்கி விடுகிறது. லேட்டஸ்ட் மருத நாட்டு வீரன்.
இன்றைக்கு நடந்த ஒரு நிகழ்ச்சியை சொல்கிறேன். நீங்கள் பதிவிட்டிருந்த மருத நாடு வீரன் ஸ்டில்ஸை பார்த்துவிட்டு ஒரு வினியோகஸ்தர் நண்பர் அதிலும் நடீகர் திலகத்தின் சில க்ளோஸ் அப் ஸ்டில்ஸ் பார்த்துவிட்டு இந்த படத்தின் விநியோக உரிமை எங்கே எவரிடம் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதை வாங்கி விட்டால் இந்த ஸ்டில்ஸ்தான் போஸ்டர் டிசைன் என்று சீரியஸாக சொன்னார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
வாழ்த்துகள்! நன்றி!
அன்புடன்
http://i501.photobucket.com/albums/e...psngmwkhow.jpg
TODAY's DINATHANTHI E-PAPER
[QUOTE=Murali Srinivas;1244173]செந்தில்வேல்,
திரி முரளி சீனிவாஸ் அவர்களுக்கு,
அன்புடன்
தங்களின் பாராட்டுகளுக்கு என் நன்றி.
1984ம் ஆண்டு தீபாவளிக்கு முன்பு திருச்சி மாரிஸ் ராக் அரங்கில் திரையிடப்பட்ட கட்டபொம்மன் 18 நாட்களில் 70 காட்சிகள் தொடர் ஹவுஸ்புல் சாதனை செய்தி
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...d7a3d6381f4981
திருச்சியில் அனேகமாக கலைஅரங்கம் (1250 இருக்கைகள் ) தியேட்டரில் திரையிடப்படலாம் என்ற தகவல் தெரிகிறது.
https://scontent-mxp1-1.xx.fbcdn.net...7b&oe=563EEAA5