-
15th August 2015, 09:28 PM
#541
Junior Member
Veteran Hubber

Originally Posted by
g94127302
திரு பாஸ்கர்
உங்கள் பதிவுகள் , ஆழமாகவும் , எதார்த்தமாகவும் , உண்மையை மட்டுமே எடுத்துச்சொல்வதாகவும் , மனதில் உண்மை என்று படுவதை நல்ல துணிவுடன் எடுத்துச் சொல்வதாகவும் அமைந்துள்ளது . நாம் எவ்வளவு தான் உண்மையை எழுதினாலும் அதை மறைத்து , அதை புதைக்க விரும்பவர்கள் அதிகம் உள்ள நாடு தமிழ் நாடு . நாம் திரை உலகம் என்னும் பூமியைத் தோண்டினால் - அங்கே மண்ணை விட அதிகமாக குழி தோண்டி புதைக்கப்பட்ட உண்மைகள் தான் வெளி வரும் . ஒருவரை மட்டம் தட்டியே , இன்னமொருவர் வாழத் துடிக்கும் நாடு இது - அதில் தமிழ் நாட்டுக்கு முதல் இடம் என்றால் அது மிகை ஆகாது . கற்பனைகளை உண்மையாக்கி , நடித்த நகல்களை மாபெரும் ஹீரோக்களாக்கி அதில் ஒரு அசட்டு சந்தோஷத்தை உண்டு பண்ணிக்கொண்டு வாழும் மக்கள் நிறைந்த நாடு இந்த தமிழ் நாடு . படங்கள் தரம் வாய்ந்ததா ? அப்படிப்பட்ட படங்கள் எவ்வளவு தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கப்போகின்றன என்று யாருமே அலசி உண்மைகளை கொண்டு வருவதில்லை - ஒரு vpkp மாதிரியோ , வ.வு சி மாதிரியோ இனி யாரால் படங்களில் நடித்து அழிந்துகொண்டிருக்கும் தேச பக்திக்கு உயிர் கொடுக்க முடியும் ?- இப்படிப்பட்ட படங்கள் என்றுமே வாழும் - அவைகளுக்கு என்றுமே மரணம் இல்லை . நாம் சிவாஜியின் மூலம் இந்த நாட்டின் பல தலைவர்களையும் , சரித்திர நாயகர்களையும் , தெய்வங்களையும் நம் அடுத்த தலைமுறைக்கும் விட்டு செல்கிறோம் - ஆனால் சிலர் எல்லா நாயகர்களையும் சிவாஜியின் உருவமாகவே பார்க்கிறார்கள் - அதனால் அவர்களால் அதன் சக்தியை , வீரியத்தை எடை போடமுடியவில்லை - அதனால் அவர்கள் தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை இழந்து , தங்கள் தலைவர்களை இன்னும் பல கற்பனைகளை சேர்த்து , வானளாவ புகழ்கின்றார்கள் - விட்டு விடுவோமே!! - தூங்கு பவர்கள் போல நடிக்கும் அவர்களை நம் எவருடைய பதிவுகளும் தட்டி எழுப்ப முடியாது ..இது என் சொந்த கருத்து
உங்கள் பதிவுகள் என்று வெற்றி அடைய மனமார இறைவனை வேண்டுகிறேன் .
அன்புடன்
ரவி
ரவி சார்
நீங்கள் கூறுவது வாஸ்த்தவம் !
மாயைகளுக்கு ஆயுள் கூட்டும் முயற்சி எப்பொழுதெல்லாம் நடக்கிறதோ ..அப்பொழுதெல்லாம் மெய்ஞானம் மற்றும் உண்மை உரத்த குரலில் ஒலித்து, கதிரவனை கண்ட பனிபோல மாயயை விலக செய்யும் ! ஆகையால் கவலை வேண்டாம் !
ஜெய் ஹிந்த் !
Rks
-
15th August 2015 09:28 PM
# ADS
Circuit advertisement
-
15th August 2015, 11:56 PM
#542
பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம்!
சுதந்திர தியாகிகளை என்றும் நினைவு கூர்வோம்!
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
ஜெய்ஹிந்த்!
அன்புடன்
-
16th August 2015, 12:45 AM
#543
ரவி,
மீள் வருகைக்கு நன்றி! தொடர்க!
வாசு,
யாருமே யோசிக்காத ஒரு பாடலை அழகாய் விவரித்து பதிவிட உங்களால்தான் முடியம்! நாம் பிறந்த மண் பல நினைவுகளை பழைய நினைவுகளை கிளறி விடுகிறது. வியட்நாம் வீடு சுந்தரமும் வின்சென்டும் போட்டுக் கொடுத்த கோடு ஷங்கரால் ரோடாக மாறி வெற்றிப் பாதையாகவும் மாறியது. நாம் பிறந்த மண் தயாரிப்பில் இருந்தபோது படித்த கேள்விப்பட்ட பல விஷயங்கள் ஆவலை தூண்டியிருந்தது., நேரம் கிடைக்கும்போது அதைப் பற்றி பேசுவோம்!
அன்புடன்
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
16th August 2015, 12:46 AM
#544
செந்தில்வேல்,
நீங்கள் ஆவணங்களை மட்டும் எடுத்துப் போடும் நபரல்ல என்பதை அறிந்து, படத்தை காட்சிகளை கூர்மையாக கவனித்து ஏன் காமிரா கோணங்களை கூட நுணுக்கி ஆராய்ந்து எழுதுவதை படித்தபோது உண்மையிலே எனக்கு pleasant surprise தான். அதிலும் எனக்கு மிகவும் பிடித்த ஏன் நமது ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த யாரை நம்பி நான் பொறந்தேன் பாடலோடு நீங்கள் தொடங்கியது மிகவும் மகிழ்ச்சி. என்ன இருந்தாலும் விஜய ரகுநாத சேதுபதி அல்லவா! பெயரே என்ன கம்பீரம்! நடிகர் திலகத்திற்கேற்ற மாதிரி! இந்த விஷயம் முன்பே ஒரு முறை சொல்லியிருக்கிறேன். இந்த கேரக்டர்தான், அந்த மேக்கப்தான் இந்தியன் தாத்தாவிற்கு inspiration என்பது கமலே சொன்னது.
வாசு போல அரிதான் பாடல்களை எடுத்துக் கொள்வது இன்னொரு சுவை! தொடருங்கள்!
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th August 2015, 01:01 AM
#545
முத்தையன் அம்மு சார்,
உண்மையை சொல்லப் போனால் திரியில் படத்தின் ஸ்டில்களை பதிவிடுவதில் அவ்வளவு உடன்பாடு இல்லாதவன் நான். [வாசுவும் சரி ராகவேந்தர் சாரும் அவ்வப்போது சில அரிதான் அருமையான் ஸ்டில்ஸ் போடுவார்கள். அந்த விதிவிலக்குகளை தவிர்த்து விட்டு சொல்கிறேன்]. திரியில் பலரும் எழுத வேண்டும் என்று விரும்புவன் நான். அப்படிப்பட்ட மனம் கொண்ட என்னையே நீங்கள் போடும் சில ஸ்டில்ஸ் மயக்கி விடுகிறது. லேட்டஸ்ட் மருத நாட்டு வீரன்.
இன்றைக்கு நடந்த ஒரு நிகழ்ச்சியை சொல்கிறேன். நீங்கள் பதிவிட்டிருந்த மருத நாடு வீரன் ஸ்டில்ஸை பார்த்துவிட்டு ஒரு வினியோகஸ்தர் நண்பர் அதிலும் நடீகர் திலகத்தின் சில க்ளோஸ் அப் ஸ்டில்ஸ் பார்த்துவிட்டு இந்த படத்தின் விநியோக உரிமை எங்கே எவரிடம் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதை வாங்கி விட்டால் இந்த ஸ்டில்ஸ்தான் போஸ்டர் டிசைன் என்று சீரியஸாக சொன்னார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
வாழ்த்துகள்! நன்றி!
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
16th August 2015, 08:48 AM
#546
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
16th August 2015, 09:02 AM
#547
Junior Member
Veteran Hubber

Originally Posted by
joe
சிவாஜியும் ஒரு சினிமாப் பைத்தியமும் என்ற ஈர்ப்பான தலைப்பில் திரு வேணுகோபாலன் ரெங்கன் அவர்களின் இப்படைப்பு ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் பதிவிறக்கம் செய்து பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்!! நன்றிகள் நண்பர் ஜோ!
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
16th August 2015, 09:27 AM
#548
Junior Member
Veteran Hubber

TODAY's DINATHANTHI E-PAPER
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
16th August 2015, 01:14 PM
#549
Junior Member
Diamond Hubber
[QUOTE=Murali Srinivas;1244173]செந்தில்வேல்,
திரி முரளி சீனிவாஸ் அவர்களுக்கு,
அன்புடன்
தங்களின் பாராட்டுகளுக்கு என் நன்றி.
-
16th August 2015, 02:46 PM
#550
Junior Member
Senior Hubber
1984ம் ஆண்டு தீபாவளிக்கு முன்பு திருச்சி மாரிஸ் ராக் அரங்கில் திரையிடப்பட்ட கட்டபொம்மன் 18 நாட்களில் 70 காட்சிகள் தொடர் ஹவுஸ்புல் சாதனை செய்தி

திருச்சியில் அனேகமாக கலைஅரங்கம் (1250 இருக்கைகள் ) தியேட்டரில் திரையிடப்படலாம் என்ற தகவல் தெரிகிறது.
-
Post Thanks / Like - 3 Thanks, 5 Likes
Bookmarks