கோபால்,
நண்பர் அசோகனைப் பற்றிய என் கருத்துதான் உங்களுக்கும் என்று கூறியதற்கு நன்றி.
இவ்வளவு திரையரங்குகளில் இவ்வளவு ஓட்டம் என்பதும் கூட இன்றைய தலைமுறைக்கு ஒரு புதிய செய்திதான். அதை எல்லா படத்துக்கும் போட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. வசந்த மாளிகை செய்திக்கு பக்கத்திலேயே இடம் பெற்றிருந்த மற்ற படங்களுக்கும் (‘அன்பே வா’ உட்பட) ஓட்ட விவரங்கள் இல்லை. அதை ஒரு பத்திரிகையின் ஆசிரியர் குழுதான் முடிவு செய்யும். அதே நேரம், இடைச் செருகலாக யாரும் எதையும் செய்ய முடியாது. அப்படியே, ஆசிரியர் ஓ.கே.செய்த இறுதி வடிவத்துக்கு பின் ரகசியமாக யாரும் திருத்தங்கள் செய்தால் மறுநாள் காலை வெட்ட வெளிச்சமாகி விடாதா?
மக்கள் திலகத்தை பற்றி பத்திரிகையில் வரக் கூடாது என்றெல்லாம் கூற முடியாது. அவரை பற்றிய செய்திகளுக்கு எவ்வளவு வரவேற்பு கடிதங்கள் வருகின்றன என்று அங்குள்ளவர்களைக் கேட்டால் தெரியும். இப்போது கூட 15ம் தேதி எங்க வீட்டுப் பிள்ளை பொன் விழா பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. திருமதி. சரோஜாதேவி, ராஜ ஸ்ரீ, சச்சு, பி.சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி, உட்பட வி.ஐ.பி.க்கள் விழாவில் கலந்து கொள்கிறார்கள். இதுபற்றிய செய்தி நாளிதழில் (இந்து அல்ல, வேறொரு பத்திரிகையில்) வெளியாகி அது மக்கள் திலகம் திரியில் பதிவிடப்பட்டுள்ளது. விழா பிரம்மாண்டமாக நடந்து விஐபிக்கள் கலந்து கொண்டு பேசும்போது எல்லா பத்திரிகையிலும் பெரிதாக போடுவார்கள். அதற்கு என்ன செய்ய முடியும்?
இதையெல்லாம் விவரம் தெரியாதவர்கள் அல்லது தெரிந்தும் தெரியாதது போல இருப்பவர்கள் யாராவது குற்றம்சாட்டி, தாங்களே நீதிபதிகளாகி தீர்ப்பும் அளிப்பார்களானால் புரிந்து கொள்ள முடியும். விவரம் அறிந்த நீங்கள் குற்றம் சாட்டுவது வியப்பளிக்கிறது.
உங்களின் புதிய பொறுப்புக்கும் வாழ்த்துக்கள். பீச்சுக்குப் போய் காத்தாட பேசிவிட்டு அப்படியே அருகில் ரத்னா கபே இருக்கிறதே போகலாம் என்று நினைத்தேன். மதுராவுக்கு போகலாம் என்றால் எனக்கு ஆட்சேபம் இல்லை. வள்ளல் வழியில் வந்த எங்களுக்கு ஏன் கஞ்சத்தனம்? செலவு என்னுடையதுதான். கவலை வேண்டாம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்