Originally Posted by
chinnakkannan
சரி சரீ ஈ ஒரு பழைய க்விஸ் எழுதியிருந்தேன் கண்டு பிடிங்க
பெண்ணாகப் பிறந்தாலே பேதமைதான் எனச்சிலரும்
..பேசிடுவார் பலவாறாய் இருந்தாலும் நானிங்கு
வண்ணமுடன் அழகாக வாகாய்த்தான் பூத்திட்ட
..சின்னப்பூ என்றாலும் என்நெஞ்சில் ஓர்குறையாம்
தீண்டிடுமா நங்கையரின் விரலென்னை என்றேதான்
..திகைத்துத்தான் நிற்கின்றேன் பலகாலம் ஆனாலும்
வேண்டிவிட்ட வரமெல்லாம் பொய்யாகப் போனதையா
..வேதனையைச் சொல்லாமல் மென்சிரித்தே மலர்கின்றேன்..
கண்சிரிக்கும் மங்கைக் கனியிதழின் வண்ணமும்
திண்ணமாய் என்நிறம் தான்
என்ன பூ கண்டு பிடிங்கள்..