-
6th February 2015, 10:26 PM
#11
Senior Member
Senior Hubber
மிக்க்க்க நன்றி சிவாஜி செந்தில் பாடல்களுக்கும்.. அஃதென்ன கவிப் புலவ பாடலாசிரியர் என்று விளம்பி விட்டீர்கள்.இருந்தாலும் நான் முழுக்க ஆகவில்லை.. இன்னும் வெகுதூரம் போக வேண்டும்.
சரி சரீ ஈ ஒரு பழைய க்விஸ் எழுதியிருந்தேன் கண்டு பிடிங்க
பெண்ணாகப் பிறந்தாலே பேதமைதான் எனச்சிலரும்
..பேசிடுவார் பலவாறாய் இருந்தாலும் நானிங்கு
வண்ணமுடன் அழகாக வாகாய்த்தான் பூத்திட்ட
..சின்னப்பூ என்றாலும் என்நெஞ்சில் ஓர்குறையாம்
தீண்டிடுமா நங்கையரின் விரலென்னை என்றேதான்
..திகைத்துத்தான் நிற்கின்றேன் பலகாலம் ஆனாலும்
வேண்டிவிட்ட வரமெல்லாம் பொய்யாகப் போனதையா
..வேதனையைச் சொல்லாமல் மென்சிரித்தே மலர்கின்றேன்..
கண்சிரிக்கும் மங்கைக் கனியிதழின் வண்ணமும்
திண்ணமாய் என்நிறம் தான்
என்ன பூ கண்டு பிடிங்கள்..
மேல் கண்ட பாட்டுக்கும் நான் கீழே போடும் பாட்டுக்கும் எந்த சம்பந்தம் இல்லை பூ பூ என்று பாடலில் வருவதைத் தவிர!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th February 2015 10:26 PM
# ADS
Circuit advertisement
Bookmarks