Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார் சார்,
'மூவாயிரம்' வெற்றிப்பதிவுகளைக்கடந்து வீறு நடைபோட்டுக்கொண்டிருக்கும் எங்கள் அருமை இளவல் 'பம்மலார்' சுவாமிநாதன் ஆகிய தங்களுக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
வெட்டி விவாதங்களாலும், ஒருவரி கமெண்ட்டுகளாலும் ஆயிரக்கணக்கில் பதிவுகளை அடுக்கியவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் தங்களது பதிவுகள் மூன்றாயிரமும் (அருமைச்சகோதரர் சந்திரசேகர் அவர்கள் சொன்னதுபோல) மூவாயிரம் பொக்கிஷங்கள். அப்பதிவுகளை சேமித்து, சேமித்து ரசிகப்பெருமக்களின் பென்ட்ரைவ்களும், ஃப்ளாஷ் மெமோரிகளும் நிரம்பி வழிகின்றன. அத்தனையும் முத்தான, சத்தான பயனுள்ள பதிவுகள், ஆவணப்பொக்கிஷங்கள்.
மூவாயிரமாவது பதிவாக தாங்கள் அளித்துள்ள 'இருவர் உள்ளம்' திரைக்காவியத்தின் கிடைத்தற்கரிய பேசும் படம் இதழ்த் தொகுப்பு, நம் இருவர் உள்ளமும் நினைப்பது ஒன்றையே, அது நடிகர்திலகத்தின் புகழ்பாடுவதே என்பதை உணர்த்துகிறது.
நீங்கள் இடப்போகும் இன்னும் பல ஆயிரம் பதிவுகளையும், அவற்றில் இடம்பெறவிருக்கும் கனவிலும் நினையாத பொக்கிஷங்களையும் காண காத்துக்கிடக்கிறோம். அதற்காக தாங்கள் பூரண உடல்நலத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து சேவை செய்திட வாழ்த்துகிறோம்.