Page 55 of 305 FirstFirst ... 545535455565765105155 ... LastLast
Results 541 to 550 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #541
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    முத்தான மூவாயிரம் பதிவுகளைத் தந்து ஜொலி ஜொலிக்கும் எங்கள் அன்புப் பம்மலாருக்கு மனமுவந்த நல் வாழ்த்துக்கள்.

    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #542
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்பு மிக்க பம்மலார் சார்,
    செப்டம்பர் 2009ல் தொடங்கிய தங்கள் சாம்ராஜ்ஜியத்தின் எல்லை விரிவடைந்து வருவது மட்டற்ற மகிழ்வைத் தருகிறது. மூவாயிரம் குறுநிலங்கள் தங்கள் ஆளுகையில் .. இவை மென்மேலும் தொடர்ந்து 5000, 10000 என்று வளரவேண்டும் என வாழ்த்துகிறேன்.

    தங்களுக்காக அடியேனுடைய சிறிய காணிக்கை

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #543
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Dear PAMMALAR - hearty congratulations - your dedication / committed cause amazing and we are all proud of you - kindly keep up

  5. #544
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Hi Pammalar sir,
    3000 posts is not a acheviement its a rare rest of rare feat which will take some time to supprass . Ur coverage of 150th event made us very exciting. I got a bit too emotional on hearing YG Mahendran's speech. He is one actor whose talent is not explored still he is the first pithan of NT

    Hats of Y G M sir.
    By the way what did Director P. Vasu said? I saw the clippings but could not find anything offensive.


    Once again Hearty congaratulations Pammalar sir
    What to say other than this?

  6. #545
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் பம்மலார்,

    முத்தான மூவாயிரம் பதிவுகளைத் தொட்டிருக்கும் தங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். மூவாயிரம் பதிவு என்றாலும், பதிவு ஒவ்வொன்றும் ரசிகர்கள் ஒரு பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படவேண்டியதாக, ஆவணங்களை அள்ளித் தந்த தங்களுக்கு விண்ணிலிருக்கும் நடிகர்திலகத்தின் ஆசியும், பல்லாயிரக்கணக்கான அன்பு இதயங்களின் வாழ்த்துக்களும் என்றும் இருக்கும்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  7. #546
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நம்முடைய நடிகர் திலகம் இணைய தளத்தில் கர்ணன் 150 நாள் விழா நிகழ்ச்சிகளைப் பற்றிய தொகுப்பு

    விழா நிழற்படங்கள்

    விழா காணொளிகள்

    மலர்கள் பத்திரிகைகள் செய்திகளின் தொகுப்பு

    சுவரொட்டிகள் பதாகைகள் ஆகியவற்றின் நிழற்படங்கள்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #547
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like

    Padhivuththilagam Pammalar!

    Hats off to you dear Pammalar Sir, for being the Padhivuththilagam of Nadigar Thilagam with a record of 3000 logs. For Sivaji fans Pammalar sir remains the bench mark and we are indebted to you.

  9. #548
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'சந்திப்பு' (16.6.1983)



    நடிகர் திலகத்தின் 235-வது காவியம்

    சந்திப்பை நாங்கள் சந்தித்த விதம்.(ஒரு வித்தியாச கடலூர் அனுபவம்)



    முந்தைய 1983 இல் வெளி வந்த நடிகர் திலகத்தின் படங்களான பெஜவாடா பெப்புலி (தெலுங்கு), நீதிபதி, இமைகள் படங்களுக்குப் பிறகு வெளிவந்த 'சந்திப்பு' க்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். 'இமைகள்' சரியாகப் போகாததால் சோர்ந்திருந்த ரசிகர்களுக்கு உற்சாக டானிக்காய் 'சந்திப்பு' அனைவரையும் சந்திக்கத் தயாராகி விட்ட நேரம். திரிசூலம், ரத்த பாசம் மற்றும் வா கண்ணா வா என்ற சிவாஜி புரடக்ஷன்ஸாரின் தொடர் வெற்றிக்குப் பின் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் ஏகத்துக்கு எகிற வைத்த படம் 'சந்திப்பு'.

    இனி மேட்டருக்கு வருவோம். கடலூரில் 'சந்திப்பு' எந்தத் தியேட்டரில் ரிலீஸ் என்பதுதான் அந்த நேரத்தில் எங்களின் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது. நண்பர்கள் அனைவரும் மஞ்சை நகர் மைதானத்தில்தான் மாலை நேரங்களில் ஒன்று கூடுவோம். அங்குதான் தலைவர் சம்பந்தப்பட்ட அனைத்து டிஸ்கஷன்களும் நடக்கும். சென்னை ரசிகர்களுக்கு சாந்தி தியேட்டர் போல எங்களுக்கு மஞ்சை நகர் மைதானம் தான் சொர்க்கபுரி.

    கடலூரில் அப்போது பாலாஜி, முத்தையா, நியூ சினிமா, வேல்முருகன், கிருஷ்ணாலையா, கமலம் என ஆறு தியேட்டர்கள். திரிசூலம், ரத்த பாசம் போன்ற புரடக்ஷன்ஸ் படங்கள் பாடலி தியேட்டரில் வந்து சக்கை போடு போட்டதால் அனைவரும் 'சந்திப்பு' பாடலியில்தான் வரும் என்று எதிர்பார்த்திருந்தோம்.
    தினமும் பாடலி சென்று "படம் இங்குதானே" என்று கேட்டு தியேட்டர் ஊழியர்களை நச்சரிப்போம். "இன்னும் தெரியிலப்பா" என்ற பதில்தான் கிடைத்து வந்தது.

    'சந்திப்பு' ரிலீஸ் ஆகும் முன் சரியாக ஒருவாரத்திற்கு முன்னர் கடலூரில் உள்ள மெயின் சுவர்களில் நாங்கள் கொஞ்சமும் எதிபாராத வகையில் 'சந்திப்பு' கமிங் போஸ்டர்ஸ். எங்களுக்கு ஒரே திகைப்பு. ஏனென்றால் படம் முத்தையா தியேட்டரில் என்று சுவர்களில் ஓட்டப் பட்டிருந்ததால். ஏன்?... முத்தையா தியேட்டருக்கு என்ன?... என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. கடலூரில் மிகப் பழமை வாய்ந்த தியேட்டர் முத்தையா. மணிலாப் பயிர் மூட்டைகள் அடுக்கும் குடோனாக இருந்த இடம் தியேட்டராக அவதாரம் எடுத்தது. அந்தக் காலங்களில் தலைவர் மற்றும் எம்ஜியார் அவர்களின் படங்கள் பல அங்கே ரிலீஸ் ஆகியுள்ளன. ஆனால் காலப் போக்கில் தியேட்டரின் அழகு முற்றிலும் குறைந்து பழைய படங்கள் வாரத்திற்கு ஒன்று என்று திரையிடப்பட்டன. பின் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல மலையாள, மற்றும் ஆங்கில ஏடாகூடப் படங்கள் திரையிடப்பட்டு வந்தன.

    இந்த நேரத்தில் முத்தையா தியேட்டரின் அமைப்பை பற்றி சொல்லியே ஆக வேண்டும். மணிலா குடோனாக இருந்ததால் தியேட்டரின் உள்ளே ராட்சஷ சைஸ்களில் இரும்புப் பில்லர்கள் தியேட்டர் முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்திருக்கும். எனவே படம் பார்க்கும் போது அந்தத் தூண்கள் படம் பார்க்கச் செய்யாமல் மறைக்கும். தியேட்டரில் maintenance என்பது மருந்துக்கும் கிடையாது. அழுக்கடைந்த ஒரு வேட்டி போல பழைய 35mm திரை... ஏனோ தானோவென ஒரு ப்ரொஜெக்டர்.. .சுத்தமே இல்லாத அந்தக் கால பழைய வேலையாட்கள்... தலைக்கு மேலே, சரியாகச் சொல்லப் போனால் தலையிலிருந்து பன்னிரண்டு அடிக்குமேல் தலையில் என்று அறுந்து விழுந்து ஆளைக் குளோஸ் பண்ணுமோ என்று பயமுறுத்தும் கட கடா... லொடா லொடா... மின்விசிறிகள். தியேட்டர் முழுவதற்கும் வெளிச்சம் தர தியேட்டரின் நடு சீலிங்கின் உச்சியில் ஒரு சாதா குண்டு பல்ப், அதைச் சுற்றி கிண்ணம் போன்ற ஷேடோ ஒன்று நீண்ட கம்பி ஒன்றில் முடுக்கப்பட்டு தொங்கிக் கொண்டிருக்கும். அந்த முத்தையா டாக்கீஸ் ஷேடோ லைட் மிகவும் புகழ் பெற்ற ஒன்று. இடைவேளையில் அந்த ஒரு லைட்டைத் தான் போடுவார்கள். (ட்யூப் லைட்டுகள் எதையும் போட மாட்டார்கள் மின்சார சிக்கனம் வேண்டி) அந்த லைட்டே தியேட்டரில் நடுநாயகமாய் எல்லா பகுதிகளுக்கும் மங்கிப்போன மஞ்சள் கலரில் போதுமான வெளிச்சத்தைத் தந்து கொண்டிருக்கும். ஒரு டூரிங் டாக்கீஸ் கூட நல்லயிருக்கும்டா சாமி. தியேட்டர் கெப்பாஸிட்டி வேறு அதிகம். ஹவுஸ்புல் என்ற போர்டையே அங்கு யாரும் பார்த்தது கிடையாது. எந்தப் படமாக இருந்தாலும் இடைவேளை வரைக்கும் கூட டிக்கெட் தருவார்கள். இடைவேளைக்கு மேல் தியேட்டர் சிப்பந்திகளிடம் கையில் ஏதாவது சில்லறை வெட்டி விட்டு உள்ளே சென்று படம் பார்க்கலாம்.

    இப்போது நீங்களே சொல்லுங்கள். உங்களுக்கே கோபம் வருகிறதா இல்லையா? அப்படிப்பட்ட ஒரு கண்றாவி தியேட்டரில் 'சந்திப்பு' ரிலீஸ் என்றால் எங்கள் கதியைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். போஸ்டரைப் பார்த்து விட்டு துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அனைத்து ரசிகர்களும் முத்தையா நோக்கி ஓடினோம். மேனேஜரிடம் பேசினோம். "என்ன சார், தலைவர் படத்தை நீங்கள் ரிலீஸ் செய்கிறீர்களே" என்று பரிதாபமாகக் கேட்டோம்.
    அவர் கொஞ்சமும் பதட்டப் படாமல் கூலாக, "ஆமாம் தம்பி... இங்க தான் படம் ரிலீஸ்... என்று பெருமையுடன் கூற எங்கள் முகத்தில் ஈயாடவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் ஒருமாதிரி பார்த்துக் கொண்டோம்.

    பின் ஒருவழியாக சமாளித்துக் கொண்டு "எப்படி சார்?... இவ்வளவு மோசமான தியேட்டரில் தலைவரின் படம், அதுவும் அவரது சொந்தப்படம், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம்... சரிப்பட்டு வருமா? என்று கேட்டதும் மேனேஜர் "கவலைப்படாதீங்க... ஒங்க படத்துக்காகவே (எங்க படமாம்!) தியேட்டரை முழுதும் பழுது பார்க்கப் போறோம்... நாளையிலே இருந்து நாலு நாளைக்கு maintenance எடுக்கிறோம்... அப்புறம் பார்த்துட்டு சொல்லுங்க... ஜமாய்ச்சுடலாம்" என்றார் சிரித்தபடியே.

    விதியை எண்ணி நொந்துகொண்டே ,"தலைவர் ஏன் இந்த பாடாவதி தியேட்டரில் போய் படத்தைக் கொடுத்தார்?... என்று புலம்பிக்கொண்டே வெளியே வந்தோம். வேறு வழியுமில்லை. எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. மனதை தேற்றிக்கொண்டு சந்திப்பை முத்தையாவில் சந்திக்கத் தயாரானோம். நான்கு நாட்களும் தியேட்டர் பராமரிப்பு பணிகள் நடப்பதை சிரமேற்கொண்டு கவனித்து வந்தோம். இதில் "இப்படிப் பண்ணுங்கள்... அப்படிப் பண்ணுங்கள்" என்று மேஸ்திரி மாதிரி ஐடியா வேறு.

    தியேட்டர் முழுதும் முற்றிலுமாகப் புதுப்பிக்கப்பட்டது. திரையரங்கு முழுதும் வெள்ளை அடிக்கப்பட்டது. 35 mm ஸ்க்ரீன் தூக்கப்பட்டு சினிமாஸ்கோப் ஸ்க்ரீன் நிறுவப்பட்டது. ஓடி ஓடித் தேய்ந்த ப்ரொஜெக்டர் பழுது நீக்கப்பட்டு பளபளப்பானது. தியேட்டர் ஓரளவிற்கு சரியானது போலத் தோன்றியது. என்ன இருந்தாலும் கிழவிக்கு மேக்கப் போட்ட கதைதான்.

    'சந்திப்பு' ரிலீசுக்கு முதல் நாள் முதல் தியேட்டர் களை கட்ட ஆரம்பித்து விட்டது. அக்கம் பக்கம், நகரப் பகுதி, கிராமப்பகுதி ரசிகர்கள் முதல் நாள் காலை பத்து மணிக்கெல்லாம் தியேட்டரில் கூட்டம் கூட்டமாக வந்து சேர ஆரம்பித்து விட்டார்கள். எங்கு பார்த்தாலும் ரசிகக் கண்மணிகள்தான். ஆளாளுக்குக் கொடிகள் என்ன... பேனர்கள் என்ன... மாலைகள் என்ன... தோரணங்கள் என்ன... வாழை மரங்கள் என்ன... சும்மா புகுந்து விளையாடி விட்டார்கள் நம் ரசிகர்கள். தியேட்டர் நிர்வாகிகளுக்கு ஒரே குஷி! இப்படி ஒரு தியேட்டர் அலங்காரத்தை அவர்கள் இதுவரை வாழ்நாளில் கண்டதில்லையே! தியேட்டர் முழுதும் அலங்காரங்களினால் நிரம்பி வழிகிறது. கொடிகளும், பேனர்களும் வண்டிகளில் வந்து இறங்கிக் கொண்டே இருக்கின்றன. கட்டத்தான் இடமில்லை. கிடைத்த இடத்திலெல்லாம் நம் கண்மணிகள் கொடிகளையும், தோரணங்களையும் கட்டி விட்டார்கள்.



    காங்கிரஸ் கட்சியினர் வேறு காங்கிரஸ் கொடிகளுடன் வந்து விட்டனர். ரசிகர் மன்ற ஷோ போடுவது அவர்கள்தானே!. மன்றம் அப்போது காங்கிரஸ் கட்சியின் பிடியில் அல்லவா சிக்குண்டு கிடந்தது?.. ரசிகர் ஷோ டிக்கெட்டுகள் முதல் நாளே காலி. டிக்கெட் விலை அப்படியே இரு மடங்கு. இரண்டு ரூபாய் டிக்கெட் நாலு ரூபாய். ஐந்து ரூபாய் டிக்கெட் பத்து ரூபாய். பிள்ளைகள் யாரும் தியேட்டரை விட்டு நகருவதாக இல்லை. தியேட்டர் வாசலில் இருக்கும் டீக்கடையில் செம வியாபாரம். திருவிழா போல முதல் நாளே அலங்காரம் செய்ய தியேட்டரில் அப்படி ஒரு கூட்டம். இதில் இந்தக் கூத்தையெல்லாம் வேடிக்கை பார்க்க பொது மக்கள் கூட்டம் வேறு, தியேட்டர் பஸ் ஸ்டேன்டை ஒட்டி இருந்ததால் பஸ்களில் இருந்து தலையை நீட்டி எட்டிப் பார்க்கும் கூட்டம் வேறு. எங்களுக்குப் பெருமை பிடிபடவில்லை. சந்தோஷத்தின் உச்சியில் இருந்தோம்.

    இரவு பன்னிரண்டு மணியளவில் தியேட்டர் அலங்காரங்கள் செய்த களைப்பினால் அனைவரும் மிகவும் டயர்ட் ஆகி விட்டோம். போக முடிந்தவர்கள் அவரவர்கள் வீட்டிற்குப் போய் சாஸ்திரத்திற்கு ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு (தூக்கம் வருமா!..) காலையில் ஏதோ அவசரக் குளியல் போட்டுவிட்டு ஏழு மணிக்கெல்லாம் 'டாண்' என்று முத்தையாவில் வெள்ளையும் சள்ளையுமாக ஆஜர். ஏதோ கும்பகோணம் மகாமகத் திருவிழாவிற்குத்தான் வந்து விட்டோமோ என்று என்னும் அளவிற்கு எள் போட்டால் எண்ணையாகத்தான் வழியும் என்பது போல கட்டுக்கடங்காத ஜனத்திரள். ஒலிபெருக்கிகளில் "சிங்கத் தமிழனடா...எங்கள் அண்ணனடா... சிவாஜி என்னும் பெயரைக் கொண்ட நடிகர் திலகமடா"... போடு போடுவென்று போட்டுக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் "சிம்மக்குரலோன் வாழ்க... சிங்கத்தமிழன் வாழ்க" என ஒரே ஆர்ப்பரிப்பு. படம் பார்க்கப் போகிற ஆர்வத்தில் தியேட்டரின் சூழ்நிலையைப் பற்றியே மறந்து விட்டோம்.

    சரியாக ஒன்பது மணிக்கெல்லாம் படம் போட்டு விட்டார்கள். 'உய்.. உய்' என்று ஒரே விசில் சத்தம். கைதட்டல்கள் காதைப் பிளக்கின்றன. "ஆனந்தம் விளையாடும் வீடு" பாடலில் தலைவர் வேட்டி சட்டையில் வரும் போது சும்மா அல்லோல கல்லோலம் தான். தியேட்டர் முழுவதும் ஒரே லாட்டரி சீட்டு கவுண்டர் பைல்கள்தான். தலைவர் உருவமே தெரியவில்லை. சீட்களில் உட்காராமல் ஆனந்தக் களிநடம் புரியும் ரசிகர்கள். தன்னை மறந்து இருக்கைகளின் மேல் எழுந்து நின்று குதிக்கும் வெறியர்கள். பூக்களை கூடைகளில் கொண்டு வந்து தலைவர் மேல் விசிறி வீசி மகிழும் விசிறிகள்.

    புது பளபளக்கும் ஸ்க்ரீன் வேறு. தியேட்டரில் அமரும் இருக்கைகள் தவிர உட்காரும் கெப்பாஸிட்டி அளவிற்கு இருக்கைகள் கிடைக்காமல் அமர்ந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கைக்கு ஈடாக நின்று கொண்டு படம் பார்க்கும் கூட்டம் வேறு. தியேட்டரின் மெகா சைஸ் தூண்கள் திரையை மறைப்பதால் அங்குட்டும் இங்குட்டும் தலைவர் முகத்தைப் பார்க்க அலைந்து மோதித் திரியும் அன்புப் பிள்ளைகள்... அவர்கள் செய்யும் ஆனந்தத் தொல்லைகள்...

    சீனுக்கு சீன் கைத்தட்டல்கள். சந்தோஷக் கூச்சல்கள். இப்படியே படம் போய்க் கொண்டிருந்த போதுதான் அந்த சம்பவம் நடந்தது. சரியாக இடைவேளைக்கு முன்னால் ஒரு பத்து நிமிடங்கள் இருக்கும் கூச்சலும் கும்மாளமுமாக போய்க்கொண்டிருந்த படத்தின் ரீல் சரேலென அறுந்தது. ஓடிக் கொண்டிருக்கும் பிலிமை கத்தரிக்கோலால் கிராஸாக கட் செய்தது போல பிலிம் ரோல் அறுந்ததுதான் தாமதம். பிலிம் ரோல் அறுந்து கிழித்துக் கொண்டு தொங்குவது திரையில் வேறு பட்டவர்த்தனமாக ஒளிக் காட்சியாக தெரிகிறது. ஒரே கூச்சலும், குழப்பமும், கூக்குரல்களும் தாண்டவமாட ஆரம்பித்தது. சட்டென லைட்டுகள் போடப்பட்டன. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

    புத்தம் புது திரைப்படம்... புதுப்பெட்டி... பராமரிப்பு செய்யப்பட்ட ப்ரொஜெக்டர். தொழிலில் வல்லுனரான இப்படத்திற்கென்றே பிரத்தியோகமாக நியமிக்கப் பட்ட ஆப்பரேட்டர்...இவ்வளவையும் மீறி படம் கட்டாகி விட்டது. சரமாரி வசைமாரி பொழிகிறது. எல்லோரும் எழுந்து நின்று திரும்பி ஆப்பரேட்டர் ரூமையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆப்பரேட்டரை அவனே... இவனே... மவனே.. என்று அர்ச்சனை பாடுகிறார்கள். மூன்று நிமிடங்களில் அறுந்து போன பிலிம் ஒட்டப்பட்டு படம் மீண்டும் ஓடத் துவங்கியது. மறுபடி ஒரே ஆர்ப்பாட்டம்தான்... தலைவர் வரும் சீன்களில் எல்லாம் ரகளைதான். குதூகலம் தான்.

    இடைவேளை விடப்பட்டது.. ஆத்திரம் தாங்காத ரசிகர்கள் தியேட்டர் கேண்டீனில் டீ குடித்துக் கொண்டே ஆப்பரேட்டரையும், தியேட்டர் நிர்வாகத்தையும் திட்டத் துவங்கினர். படத்தை இப்படி ஒட்டுகிறானே என்று எல்லோருக்கும் மூட் ஆட். இடைவேளை முடிந்து படம் தொடங்கியது. எல்லோரும் அந்தப் பேச்சை மறந்து விட்டு படத்தில் மூழ்க, சரியாக அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மறுபடியும் பிலிம் சுருள் கிழிந்து தொங்கியது...மீண்டும் கட்.

    அவ்வளவுதான் சாமி... வெறி கொண்ட வேங்கை போல ஆகி விட்டனர் ரசிகர்கள். சும்மா தியேட்டரின் இருக்கைகள் அனைத்தும் சட்ட சபையில் பறப்பது போல மேலும் கீழுமாய் அந்தரத்தில் பறக்க ஆரம்பித்து விட்டன. சேர்களும் பெஞ்ச்களும் ஒரு சேர உடைய ஆரம்பித்து விட்டன. யார் எதைத் தூக்கி அடிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஒன்றும் புரிய வில்லை. ஒரே ரணகளம். கூச்சல்... குழப்பம்... ரகளை....தியேட்டரின் இருக்கைகளுக்கு மேல் உள்ள மின்விசிறிகளின் மீது பெஞ்ச்கள் பறந்தன. அனைத்து மின் விசிறிகளின் இறக்கைகளும் கொத்துக் கிண்ணம் கவிழ்த்து வைத்தது போல கீழ்நோக்கி கவிழ்ந்து தொங்குகின்றன. அப்போதெல்லாம் தரை டிக்கெட் எடுப்பவர்களுக்கு அமர்வதற்காக நீண்ட பெஞ்ச்கள் வரிசையாகப் போடப்பட்டிருக்கும். ஒரு பெஞ்ச்சில் ஏழு அல்லது எட்டு பேர் அமரலாம். அந்த பெஞ்ச்களை நம் மக்கள் ஆளுக்கு ஒரு பக்கமாகப் பிடித்து மேலே தூக்கிக் கிடாச சீலிங் fan கள் எல்லாம் காலி. முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு இருக்கைகள் 'சர் சர்'ரென கிழிக்கப்பட்டு தியேட்டர் முழுதும் ஒரே பஞ்சு மயமும் தேங்காய் நார் மயமும் தான். தனக்கு முன் இருக்கும் இருக்கைகளை எட்டி எட்டி உதைத்து சின்னபின்னமாக்கினர் சிலர். பிளேடுகளால் பல இருக்கைகள் கிழிக்கப்பட்டன. தியேட்டரே நாஸ்தி. ஒரு சீட் கூடத் தேறாது. ரசிகர்களின் வெறித்தனத்தில் முத்தையா தியேட்டர் சூறையாடப்பட்டது. போலீஸ் வரவழைக்கப் பட்டு லத்தி சார்ஜ் நடக்க ஆரம்பித்தது. ஆளுக்கு ஆள் தலை தெறிக்க அங்கும் இங்கும் ஓட , மாட்டிக் கொண்டவர்கள் போலீசிடம் சக்கையாக வாங்க, தப்பித்தோம் பிழைத்தோம் என அனைவரும் ஒரே மூச்சில் தியேட்டரை விட்டு வெளியே ஓடிவந்து விட்டோம். பின் என்ன நடந்தது என்றே எங்களுக்குத் தெரியாது. பசி மயக்கம் வேறு. காதையும் கண்ணையும் அடைக்கிறது. ஒரு வழியாக அனைவரும் வழக்கமான மஞ்சை நகர் மைதானத்தில் ஒன்று கூடி தியேட்டர்காரனைத் திட்டித் தீர்த்துவிட்டோம். "நெனச்சது போலவே பழி வாங்கிட்டான்யா".. என்று கொட்டித் தீர்த்து விட்டோம். "மொத நாளே இப்படி படத்தை அறுத்து அறுத்து ஒட்டினானே... படம் ஓடுமா? என்று எல்லோர் முகங்களிலும் ஒரே கவலை ரேகை. பின் அடுத்த ஷோ ஓடவில்லை. ஓரளவிற்கு ஏதோ ஒப்பேற்றி மாலைக் காட்சி போலீஸ் பந்தோபஸ்தோடு. மறுபடி தொடங்கப்பட்டது. காலைக் காட்சிக்கு பந்தோபஸ்து வந்த போலீஸ்காரர்கள் யாருடைய கண்களிலாவது மாட்டிக் கொள்ளப் போகிறோம் என பயந்து பயந்து ஒருவழியாக தியேட்டரில் வேலை செய்யும் பழக்கமான ஒரு ஆளிடம் பணத்தை அடித்து உள்ளே சென்று விட்டோம்.
    ஆனால் நிலைமை அவ்வளவு மோசம் இல்லை. 'கட்' ஆகாமல் படம் ஓடியது. ஆனால் கட்டுக்கடங்காத கூட்டம். மின்விசிறிகள் தொங்கியபடியே கிடந்தன. ஒரு மின்விசிறி கூட ஓடவில்லை.ஒரு சீட் கூட ஒழுங்காக இல்லை. ஆனால் படம் பார்க்கும் interest இல் யாரும் எதையும் கண்டு கொள்ளவில்லை.

    படம் வந்து ஒரு வாரத்திற்கு பிறகு ஓரளவிற்கு தியேட்டர் நிர்வாகம் நிலைமையை சமாளித்தது. இருக்கைகள் ஓரளவிற்கு சரி செய்யப்பட்டுவிட்டன. ஆனால் கூட்டம்... கூட்டம்... தேர்க்கூட்டம்... திருவிழாக் கூட்டம்... ஆனால் யாருக்கும் டிக்கெட் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒவ்வொரு ஷோவிலும் குறைந்தது மூவாயிரம் பேர்களாவது 'சந்திப்பு' படம் பார்த்து (முதல் இரண்டு வாரங்களுக்கு), கடலூரில் அதுவும் முத்தையாவில் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்து, ஐம்பது நாட்கள் அற்புதமாக ஓடி வசூல் சாதனை புரிந்து எங்கள் எல்லோரையும் காலரைத் தூக்கி விடச் செய்தது தலைவரின் 'சந்திப்பு'. அதுமட்டுமா? தியேட்டரில் பணி புரிந்த ஊழியர்கள் அனைவரும் ப்ளாக்கில் டிக்கெட் விற்று ஆளாளுக்கு குறைந்தது ஐந்து பவுன் செயினோ அல்லது மோதிரமோ போட்டுக் கொண்டு மகிழ்ந்து தலைவர் புகழ் பாடியது தனிக்கதை.

    இப்ப சொல்லுங்க... சந்திப்பை நாங்க சந்திச்ச விதம் எப்படி?

    {குறிப்பு: 'சந்திப்பு' பட முதல் நாள் அனுபவத்தை எழுத வாய்ப்பளித்த அன்பு பம்மலாருக்கு நன்றி!}

    கார்த்திக் சார் தயைகூர்ந்து பொறுத்தருள்க...(உங்கள் job-ஐ நான் எடுத்துக் கொண்டதற்கு)


    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 8th August 2012 at 10:44 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #549
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள வாசுதேவன் சார்,

    'சந்திப்பு' படத்தின் கடலூர் முத்தையா தியேட்டர் அனுபவம் மிக மிக அருமை. நாங்களே அங்கே நின்று அனைத்து நிகழ்வுகளையும் நேரில் பார்த்து மகிழ்ந்தது போல இருந்தது. சூப்பர் கமெண்ட்ரி.

    முதலில் கடலூர் முத்தையா தியேட்டரின் முந்தைய கோலத்தை நீங்கள் விவரித்த விதமே அலாதி களை கட்டியது. பின்னர் சந்திப்பு படத்துக்காக 'மணிலாப்பயிறு குடோன்' புதுப்பிக்கப்பட்ட விவரமும், அதை மன்றத்துப்பிள்ளைகள் அலங்கரித்த விதமும் மிகவும் அருமையாக இருந்தன.

    படம் ரிலீஸான அன்று தியேட்டருக்குள் நடந்தவைகளை விவரித்த விதம். அத்திரையரங்கின் உள்ளே நாங்களும் இருந்த உணர்வை ஏற்படுத்தியது. ரொம்ப ரொம்ப சுவாரஸ்யமான எழுத்து நடை. நான் மிகவும் ரசித்து ரசித்து படித்தேன். முன்பு நீங்கள் 'பாதுகாப்பு' படப்பிடிப்பை விவரித்த விதத்தை மிஞ்சும் வண்ணம் அமைந்துள்ளது. இவ்வளவு இடையூறுகளுக்கிடையேயும் அந்த ........வதி தியேட்டரில் சந்திப்பு 50 நாட்கள் ஒடியது, மற்ற தியேட்டர்களில் 100 நாட்கள் ஒடியதற்கு சமம்.

    தியேட்டர் கெப்பாஸிட்டியைப் பார்த்தால், கடலூர் 'முத்தையா' மதுரை 'தங்க'த்துக்கு தம்பியாய் இருப்பார் போலும். நல்ல அனுபவம் வாய்ந்த விவரிப்பு.

    அந்தக்கடைசி வரி மட்டும் தேவையில்லையென்று கருதுகிறேன். இன்னின்ன விஷயங்களை இன்னார்தான் பதிவிட வேண்டும் என்ற வரைமுறையெல்லாம் எதுவும் கிடையாது. நல்ல சுவாரஸ்யமான விஷயங்களை யார் வேண்டுமானாலும் பதிவிடலாம். அந்த சுதந்திரத்துக்காகத்தானே நாம் 'இங்கே' கூடியிருக்கிறோம்.

    அற்புதமான பதிவுக்கு பாராட்டுக்கள், நன்றிகள்.

    இன்னும் இதுபோன்ற சுவாரஸ்யமான அனுபவங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

  11. #550
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள பம்மலார் சார்,

    'மூவாயிரம்' வெற்றிப்பதிவுகளைக்கடந்து வீறு நடைபோட்டுக்கொண்டிருக்கும் எங்கள் அருமை இளவல் 'பம்மலார்' சுவாமிநாதன் ஆகிய தங்களுக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

    வெட்டி விவாதங்களாலும், ஒருவரி கமெண்ட்டுகளாலும் ஆயிரக்கணக்கில் பதிவுகளை அடுக்கியவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் தங்களது பதிவுகள் மூன்றாயிரமும் (அருமைச்சகோதரர் சந்திரசேகர் அவர்கள் சொன்னதுபோல) மூவாயிரம் பொக்கிஷங்கள். அப்பதிவுகளை சேமித்து, சேமித்து ரசிகப்பெருமக்களின் பென்ட்ரைவ்களும், ஃப்ளாஷ் மெமோரிகளும் நிரம்பி வழிகின்றன. அத்தனையும் முத்தான, சத்தான பயனுள்ள பதிவுகள், ஆவணப்பொக்கிஷங்கள்.

    மூவாயிரமாவது பதிவாக தாங்கள் அளித்துள்ள 'இருவர் உள்ளம்' திரைக்காவியத்தின் கிடைத்தற்கரிய பேசும் படம் இதழ்த் தொகுப்பு, நம் இருவர் உள்ளமும் நினைப்பது ஒன்றையே, அது நடிகர்திலகத்தின் புகழ்பாடுவதே என்பதை உணர்த்துகிறது.

    நீங்கள் இடப்போகும் இன்னும் பல ஆயிரம் பதிவுகளையும், அவற்றில் இடம்பெறவிருக்கும் கனவிலும் நினையாத பொக்கிஷங்களையும் காண காத்துக்கிடக்கிறோம். அதற்காக தாங்கள் பூரண உடல்நலத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து சேவை செய்திட வாழ்த்துகிறோம்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •