"தந்தைக்குப் பின் தனயன்" படம் பார்க்கப் போயிருப்பாங்களோ?
Printable View
//"தந்தைக்குப் பின் தனயன்" படம் பார்க்கப் போயிருப்பாங்களோ?// சத்தியமா புரியலை இந்த கான்வர்சேஷன்.. பட் ஒன் திங்க் நன்னாவே புரியுது..ராகவேந்திரா சாருக்கு ஆதவன் ரவியோட தமிழ் தான்பிடிக்கும்..(ம்ம் கண்ணா நீ எப்போ இம்ப்ரூவ் ஆகப் போற :sad: :)
தேவிகா பற்றி எதுவும் சொல்லாமல் கர்ணன் ரைட் அப் புதியதாக எழுதிய வாசுவை...யாரங்கே..பாண்டியிலிருந்து கொண்டு வந்த மோரை ஒரு குவளையில் கொண்டுவா..
//(ம்ம் கண்ணா நீ எப்போ இம்ப்ரூவ் ஆகப் போற,//,
தேவிகா நினைப்பிலேயே இருந்தா எங்கே இம்ப்ரூவ் ஆகிறதாம்....ஹி...ஹி.:)
Till further writeup from Neyveliar, Let Mr CK enjoy this song till such time
https://youtu.be/qCO-xsCktVo
ஓய்.. நான் எப்போதுமே அப்டுடேட் நு உமக்குத் தெரியாதா..:) Songs that made an impact on us திரியில் பெங்களூர் நாட்கள் பற்றி எழுதியது.. அப்புறம்
ஃபேஸ் புக்கில் எழுதிய தோழா விமர்சனம் அதற்குக்க் கீழே..
//கொஞ்சம் நன்றாக ஊறிய தயிர்வடையைப்போன்ற கன்னம், க்ராஸ் பண்ணலாமா பண்ணினால் அருகில் பிடிக்க வருவானா என்ன செய்யலாம் என்ற யோசனையுடன்பார்க்கும் பூனைக்குட்டியின் துறுதுறு கண்கள், நன்றாக கொஞ்சம் மீடியம் சைஸ் வெள்ளரிப்பிஞ்செடுத்து அதன் தோல் நீக்கி நெட்டுவாக்கில் ஒல்லி ஒல்லியாய் வெட்ட பளீரிடும் விதைகள் போலப் பளீரிடும் பெப்ஸோடெண்ட் பற்கள், வேறு உவமை அகப்படாததால் பழைய அன்றலர்ந்த செண்பகப்பூவைப் போன்ற நாசி, சொய்ங்க் என்று ஒட்டி வாராமல் கொஞ்சம் ஷாம்ப்பூ போட்டுக்காயவைத்தாற்போலச் சிலும்பும் தலைமுடி – இது அன்று இருந்த இன்றைய நஸ்ரியா ஃபகத் ஃபாசில்
கொஞ்சம் ஆஞ்சனேயர் வடையைப் போன்றத் தட்டைக் கன்னம், கொஞ்சம் ஆழ்கடலில் கிடைக்கும் அமைதியைப் பெற்றிருக்கும் கண்கள், துளியேனும் கவலைப்படாமல் நன்றாக வாரிய கரெண்ட்கட் இருட்டின் நிறத்தில் கூந்தல், தீர்க்கமான மூக்கு, மூன்று வருடமாக ஏறவே ஏறாத வயதும் இளமையும் – இது ஸ்ரீதிவ்யா
எதற்காக இந்தக் கம்பேரிசன் – பெங்களூர் டேஸ் மலையாளத்திற்கும் பெங்களூர் நாட்கள் தமிழுக்கும் நாயகிகள் இவர்கள்..
என்னமோ ஸ்ரீதிவ்யாவிற்கு நடிக்க வராது இன்னும்செய்திருக்கலாம் ஒன்றும் சரியில்லை..ஒரிஜினல் நஸ்ரியா அளவுக்குச் செய்யவில்லைஎன முக்கால் வாசி விமர்சனங்கள் வந்திருக்கின்றன..பட் பார்த்தால் ஸ்ரீ திவ்யா ஒன்றும் அவ்வளவு மோசமில்லை.. நன்றாகவே செய்திருக்கிறார்..
என்ன முதலில் மலையாள பெங்களூர் டேஸ் வந்துவிட்டது.அதனால் தான்..
மலையாளத்தில் பார்த்த போது சில விஷயங்கள் புரியவே இல்லை. என்ன பேஸிக் விஷயமான இவர்கள் கஸின்ஸ்..மூவரும் ஒன்று விட்ட சகோதர சகோதரி என்பதே எனக்குப் புரியாமல் இருந்தது..பட் இருந்தும் விஷூவலில் மிக மிக ஈர்த்திருந்தது படம்..தட்டூ நித்யா மேனன் இறுதியில் வரும் இரு நிமிடங்கள்..
தமிழ் பெங்களூர் நாட்களும் நேற்று கொஞ்சம் தயங்கிய வண்ணம் தான்பார்த்து முடித்தேன்..அப்படியொன்றும் மோசமில்லை.. தவிர மலையாளம்பார்க்காமல் த்மிழில் பார்த்தால் வியக்கத் தான் வைக்கும்..
எவ்ளோ ஆக்டர்ஸ் ஆக்ட்ரஸஸ் ஸ்ரீதிவ்யா,(ம…நஸ்ரியா) (இருவரிடமும் பொங்கி வழியும் இளமை) ஆர்யா (மலையாளத்தில் துலகர் சல்மான்) பாபி சிம்ஹா, ராணா(ஃபஹத் பாசில் ) லஷ்மி ராய், சமந்தா( நித்யா மேனன்) ப்ரகாஷ் ராஜ் ராதிகா, ஸ்ரீதிவ்யாவின் அம்மா அப்பா எல்லாமே சரியான தேர்வுகளே..
அதிலும்.. ஃபஹத் பாசில் ரோல் (முன்னால் ஃபீமேல் கோட்டய வில்லனாய்ப் பார்த்தது) இதில் இறுகிய கணவனாக நன்றாகவே மலையாளத்தில் செய்திருந்ததை – ராணா (பாகுபலி பல்லாள தேவன்) ஃப்பூ என ஊதித் தள்ளியிருக்கிறார்.. பேண்ட் ஷர்ட் க்ளாஸஸில் தெரிகின்ற கம்பீரம், மெல்ல மாட்டுவண்டி போலக் கார் ஓட்டுவதிலாகட்டும், பின் இறுதியில் சீறிப்பாய்ந்து வேகமெடுக்கும் காட்சியிலாகட்டும் சமந்தாவுடன் வ்ரும் இரு நிமிடமாகட்டும் நன்றாகவே செய்திருக்கிறார் மனிதர்..(த்ரிஷா ரினிவல் பண்ணுவதைப்பற்றி யோசிப்பது நல்லது!)
என்ன தான் அம்மா செய்த வெங்காய சாம்பார் வாசனை சுவையில் அதிகமாகத் தான் இருக்கும்.. அதே ரெஸிப்பி வைத்து வீட்டில் மனைவி வைத்தால் அந்த் அளவு வராது தான்.. ஏனெனில் அது ரீமேக்.. பட் அதற்காக மோசம் என்றெல்லாம் சொல்லக் கூடாது..(சொல்லவும் முடியாது வெ.சா பொறுத்தவரை என்பது வேறு விஷயம்)
அது போலவே பெங்களூர் நாட்கள்.. நன்றாகவே இருக்கிறது..தைரியமாகப் பார்க்கலாம்.
பார்வதி மேனனை விட்டு விட்டேன்.. வெகு அழகிய நடிப்பு..அவர் வரும் பாட்டு எனக்குப் பிடித்திருந்தது..உங்களுக்கு..//
தோழா..
*
//
முகத்தில் மட்டும் எக்ஸ்ப்ரஷன் படம் முழுக்க க்காட்டி வீல்சேரில் உட்கார்ந்த படி அடக்கி வாசிக்க மனோதிடமும் அசராத உழைப்பும் தொழில் பக்தியும் வேண்டும் அது இருக்கிறது நாகார்ஜூனுக்கு..அசத்தல் நடிப்பு தோழாவில்..
கார்த்தி ரொம்ப நாட்களுக்குப் பின் நடித்திருக்கிறார் எல்லாருக்கும் பிடித்தபடி..அனுஷ்கா, ஸ்ரேயா,விவேக்,கல்பனா,ஜெயசுதா, கார்த்தியின் தங்கை,பிரகாஷ்ராஜ் என குட்டிக்குட்டி ப் பாத்திரங்கள் ஆனாலும் சுவை..
வருகின்ற முக்கால் வாசிக்காட்சிகளில் உம்மென முகம் கடைசியில் மலர் சிரிப்பு என கார்ஜியஸ் தமன்னா..என் மனதில் இருக்கும் தேவிகா அமலாவை அசைத்துவிட்டார்!
அமலா அழகியாம் அன்றானால் இன்றோ
தமன்னாபோல் யாருமிலை தான்
நாகார்ஜுன் பாரிஸில்டேட் செய்யும் அழகியும் ஓ.கே.. வெகு நாட்களுக்குப் பின் வாய்விட்டுச் சிரித்து குடும்பத்துடன் பார்த்து மகிழ்ந்த படம் “தோழா” எனச் சொல்லலாம்..//
இப்போ நயனத்தில் நின்ற நயன் நு தொடர் எழுதலாமான்னு யோசிச்சுக்கிட்டிருக்கேனாக்கும் :)
கபாலி?
சின்னா!
இன்னா.... நேத்து முச்சூட ஒரு மார்க்கமா இருந்தா மாதிரி தெரியுது. தேவிகா, அமலா, தமன்னா.....ம்ம்....
புதுப்படம்லாம் பாக்கறீங்களா? என்ன இரும்பு இதயமப்பா உங்களுக்கு. விமர்சனம் வேறயா? 'தோழா'! இது தகுமா?:) .அன்றைய 'மதுரை நாட்கள்' போல இன்றைய 'பெங்களூர் நாட்கள்' வருமா? நாகார்ஜுனா! நாகார்ஜுனா!அமலாவின் வூட்டுக்காரர் என்பதை மறந்தும் பொறாமையின்றி அர்ஜுனாவை பாராட்டும் உம்ம மனசே மனசு.:) 'நினைக்கத் தெரிந்த மனமே.... உனக்கு மறக்கத் தெரியாதா?
வந்தனம் தந்த தம்பிக்கு வளமான நன்றி!
https://www.youtube.com/watch?v=yEiF1a8b-Lo
நல்ல பாட்டு. வாழ்க்கையின் தத்துவம் நிறைந்த பாட்டு.. அவ்வளவு தானுங்கோ.. சொன்னா நம்பணும்...
//பொறாமையின்றி அர்ஜுனாவை பாராட்டும் உம்ம மனசே மனசு. 'நினைக்கத் தெரிந்த மனமே.... உனக்கு மறக்கத் தெரியாதா?// :) வாஸ்ஸூ ஜி..பொற்ற்றாமை லாம் இல்லை.. ச்சும்மா ஒரு ரசனை தான்..(உமக்குத்தெரியாதா என்னைப் பற்றி..)
“மதுரை நாட்கள்” போல பெங்களூர் நாட்கள் வருமா // வராதே வாஸு.. ஆனா அந்தக்கால மதுரை டிவிஎஸ் நகரில் எடுத்தபாட்.. பட்டம் பாட்.. நினைவிருக்கா அதுலயே மதுரை பஸ்ஸ்டாண்டும் வரும்.. இப்பல்லாம் கொலை அடிதடி பேக்ரவுண்ட்டுக்காக மதுரை யூஸ் பண்றது கஷ்டமாத் தான் இருக்கு (மதுரை ஸ்ரீ தேவி தியேட்டரிலேயே முழுக்க முழுக்க எடுத்த படம் “ஹவுஸ் ஃபுல்” என்று அறிவீர்கள் தானே)
கனவு காணும் வாழ்க்கை யாவும்.. ரொம்ப பிடிக்கும் ராகவேந்தர் சார்..உடம்பு என்பது உண்மையில் என்ன கனவுகள் காணும் பை தானே..
தத்வப் பாட்டுல்லாம் லிஸ்ட் நு போட்டா
வீடு வரை உறவு
போனால் போகட்டும் போடா
சமரசம் உலாவும் இடமே
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
பிறக்கும் போதும் அழுகின்றாய்
சட்டி சுட்டதடா
போனால் போகட்டும் போடா
படைத்தானே படைத்தானே
அவனுக்கென்ன தூங்கிவிட்டான்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் வாழும் வகை புரிந்துகொண்டான்..
ஆட்டுவித்தால் யாரொருவர்
மனிதன் நினைப்பதுண்டு
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
இதயம் இருக்கின்றதே தம்பி
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திடு மகளே
இது கொஞ்சம் தான் இன்னும் நிறைய இருக்கு..பின்ன வாரேன்
மதுண்ணா.. ஓஹ்..தடால்னு என் சிற்றறிவுக்கு அது எட்டவில்லை விளக்கத்துக்கு நன்றி..
இன்றைய தத்வ ப் பாட்டு..!
https://youtu.be/R_806iQ86Ns
காலை 10 மணிக் காட்சி பக்கா அனுபவங்கள்.
http://4.bp.blogspot.com/-I00wvE8YwO...12-1971_03.jpg
'மன்மத லீலை' கமலின் காமக் குதிரை போல் 70-களின் பக்கம் திரும்பி மனம் ரிவர்ஸ் அடிக்கிறது. என்ன பொன்னான தருணங்கள்! குடும்ப பாரமறியா குதூகல வாழ்க்கை. நல்லது கெட்டது அவ்வளவாகத் தெரியாத வயது. 'சினிமாவுக்குக் கூட்டிப் போ' என்றால் அப்போது அவன்தான் கெட்ட பையன். கோலி, கிட்டி விளையாண்டு, சோர்வுக்கு கோலி சோடா உடைத்து, காலி பண்ணின ஜாலி காலமது.
விஷயத்திற்கு வருகிறேன். காலைக் காட்சி என்று தனியே அப்போது போடுவார்கள். நான் எட்டாவது படிக்கும் போதே 'சனி, ஞாயிறு காலை பத்து மணி காட்சிக்கு மட்டும்' என்று நீலக்கலர் பவுடரில் பிரஷ்ஷால் தோய்த்து எழுதிய எழுத்துக்கள் ஒரு வால் போன்ற நீள்பேப்பரில் போஸ்டரின் மேல் எழுதி கிராஸாக ஒட்டப்பட்டிருக்கும். தனியாகவே அது நன்றாகத் தெரியும்.
காலை பத்துமணிக் காட்சி என்றாலே தெலுங்கு டப்பிங் படங்கள்தாம் கோலோச்சும். காந்தாராவ், என்.டி.ஆர் இந்த இரண்டு ஹீரோக்களின் படங்கள் வாராவாரம் எங்கள் கடலூர் கமரில் 10.00 மணிக் காட்சிக்கு திரையிடப்படும். படம் ஒரு வாரத்திற்கு முன் மெயின் பிக்சரின் இடைவேளையின் போது டிரைலராக காட்டப்படும்.
விட்டலாச்சார்யாவின்
'மன்னனைக் காத்த மாவீரன்'
என்று பழுப்புக் கலர் ப்ரின்ட்டில் டிரைலர் போடுவார்கள். இடைவேளையில் வெளியே 10 பைசா டீயை அரை ஜான் அளவு கிளாசில் முழுக்கப் பார்த்து 'நிறைய கொடுத்திருக்கான் டோய்' என்று மனசில் சந்தோஷப்பட்டு குடித்தால் ஐந்தாறு முனரில் கிளாஸ் காலியாயிடும். (ஆமா! முனருக்கு பெரிய ' று' வா சின்ன 'ரு' வா?... பேச்சு வழக்கு வார்த்தைதானே அது?) டீ குடித்து முடிப்பதற்குள் 'திடு'மென பத்து மணிக்காட்சி படம் டிரைலராக ஓட, 'டங்.. டங்' என்ற கத்திச் சத்தம் கேட்க, வேகவேகமாக இருட்டில் ஓடி, அனைவர் கால்களையும் மிதித்து, திட்டு வாங்கி இருக்கையை தேடித் பிடித்து அமர்ந்து, முன்னாடி இருக்கையில் அமர எத்தனிப்பவர்களை 'மறைக்கிறான் பார்'' என முறைத்து, மனதுக்குள் வசை பாடி, என்.டி. ஆரைக் கண்டவுடன் எக்காளக் குதூகலமிட்டது அந்தக் காலம்.
https://cdn.veblr.com/download/20130...4282705786.jpg
ஒரு நான்கைந்து நட்சத்திர ஷேப் வடிவங்கள் சிறிதும், பெரியதுமாய் லாங் ஷாட்டிலும், ஷார்ட் ஷார்ட்டிலும் தூர தூர போய், கிட்ட கிட்ட வந்து ஒளிர, அதன் நடுவே 'மாயா ஜாலங்கள் நிறைந்தது' என்று எழுத்துக்கள் 360 டிகிரி ஆங்கிளில் சுற்றி வரும். பார்க்கும் போது மனம் பரவசமடையும். பெரும்பாலும் ராஜநாளா தான் ஹீரோவிடம் கத்திச் சண்டை செய்து 'லெக்கின்ஸ்' கிழிந்து நிற்பார் பரிதாபமாக. அப்படியே அடுத்த காட்சியாக ராஜஸ்ரீயோ இல்லை விஜயலலிதாவோ ஸ்டுடியோ செட்டில் வெட்டப்பட்ட சின்ன குளத்தில் அழுக்குத் தண்ணியில் வெள்ளை உடை தரித்து 'ஓ...என் மதன ராஜா' என்று டிராக் பாடுபவர்களின் பின்னணயில் பாடுவார்கள். அப்போது அரங்கு திடீரென்று நிசப்தமாகி விடும். உச்சக்கட்ட மாணவப் பருவமாதலால் நம்மையறியாமல் இருக்கையில் நாம் உயருவோம்.:) பின்னால் இருப்பவர் நம் தலையில் தட்டி 'மறைக்குது....குனிந்து உட்கார்' என்று மிரட்டுவார்.
திடீரென்று குளியல் காட்சி மறைந்து அகோர உருவம் ஒன்று ராட்சஸனாக வந்து அவதாரம் எடுத்த ஆண்டவன் போல வந்து நின்று தடித்த குரலில் வசனம் பேசும். அப்படியே நாயகனை 'அலேக்'காகத் தூக்கி வீசும் போது நம் நெஞ்சமெல்லாம் நடுங்கும்.
'பயங்கரக் காட்சிகள் நிறைந்தது' என்று எழுத்துக்கள் மின்னியவாறு வந்து போகும்.
உடனே ஒரு டூயட்.
https://cdn.veblr.com/download/20130...8628969535.jpg
'ஏ... பெண்ணே! அழகுப் பெண்ணே!' என்று ஆலமர விழுதைப் பிடித்து காந்தாராவ் தொங்கி வருவார். சம்பந்தமே இல்லாமல் படுகவர்ச்சியாக காபரே உடை அணிந்து ஜோதிலஷ்மி இடுப்பை கிரைண்டராக மாற்றுவார். கொட்டாயில் சும்மா விசில் பிச்சி உதறும்.
'கவர்ச்சி நடனங்கள் நிறைந்தது' என்று எழுத்துக்கள் ஓடியாரும்.
அடுத்து காட்சி மாறி கண் தெரியாத நாயகனின் அம்மா சென்டிமெண்ட் வசனம் பேசுவார்கள். வசனம் பேசி முடித்தவுடன்தான் நம் காதுகளில் அது கேட்கும். 'ச்சூடம்மா' என்பது வசனகர்த்தாவின் சாதுர்யத்தால் 'பாரம்மா' என்று கேட்கும். 'பாடல்கள் புரட்சிதாசன்' என்று டைட்டில் வரும்.
ஒன்றா.... இரண்டா.. இப்படி மாயாஜாலப்படங்கள் வரிசயாக. தியேட்டர் கண்டிப்பாக நிரம்பி விடும். பெண்கள் யாருமே வரமாட்டார்கள். போஸ்டரில் கூட்டத்தை இழுக்க 'தெலுங்கு எம்.ஜி.ஆர்' காந்தாராவ் நடித்தது' என்று பட்டமெல்லாம் புத்திசாலித்தனமாக கொடுத்திருப்பார்கள்.
மன்னனைக் காத்த மாவீரன்,
வீரவாள்,
மாயத்தீவு ரகசியம்,
பட்டி விக்கிரமாத்தன்,
காவேரி மன்னன்,
மாய மோதிரம்,
https://i.ytimg.com/vi/m1YxtQVXX7E/hqdefault.jpg
இந்த மாதிரி ராஜ மந்திரக் கதைகள் நிறைந்த படமே ஆரமபத்தில் காலைக் காட்சிப் படங்களாக வெற்றிநடை போட்டு ஆந்திரக் கதாநாயகர்களை ஈஸியாக தமிழ் பாமர ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி நெஞ்சில் பதிய வைத்தன.
இதில் இன்றுவரை அதிசயக்கும் விஷயம் என்னவென்றால் காந்தாராவ், ராமாராவ் அணியும் அன்றைய உடலின் நிறத்தை அப்படியே காட்டும் 'லெக்கின்ஸ்' உடைகள்தான். இதுபற்றி எங்களிடம் விவாதமே நடக்கும். அது 'எலாஸ்டிக் டிரஸ்' என்று ஒருவன் சாதிப்பான். 'போடா முண்டம்... பின்னால 'ஜிப்' இருக்கும்டா... நம் கண்ணுக்கு அது தெரியாம மறைச்சி காண்பிப்பாங்க'.... என்று இன்னொருவன் புத்திசாலியாவான்.
எப்படியோ இப்படி ஒரு டைட்டான உடை அணிந்த தெலுங்கு நாயகரின் கஷ்டத்தை நாம் பாராட்டத்தான் வேண்டும். எப்படித்தான் அதை அணிந்து நடித்தார்களோ!
பின் ஒரு கட்டத்தில் ரசிப்பு முன்னேற்றத்தின் காரணமாக நவீன சமூக படங்கள் மாயாஜாலப்படங்களை தள்ளி ஓரம் கட்டிவிட்டு அவைகளின் இடத்தைப் பிடித்தன.
http://www.iqlikmovies.com/modules/a...7_09_43_22.jpg
இப்போது கிருஷ்ணாதான் 74,75 களின் காலைக்காட்சி ஹீரோ. போஸ்டரில் துப்பாக்கி பிடித்தபடி கிருஷ்ணா வீரமாக போஸ் கொடுக்க, கீழே விஜயலலிதா டைட் பேன்ட் போட்டு, மேலே ஷர்ட் போட்டு அதை முடிச்சியும் போட்டு இடுப்பில் கைவைத்தபடி டான்ஸ் போஸ் கொடுப்பார். அப்புறம் கிருஷ்ணா வில்லனுடன் மோதுவது போல ஒரு காட்சியும் அதில் இருக்கும். கத்திச் சண்டைகளையும், மாய வேஷங்களையும் பார்த்து சலித்து, புளித்துப் போன போது புது தீபாவளி துப்பாக்கி 'டுமீல்...டுமீல்' சப்தம் காதுகளுக்குள் இனிமையாக விழுந்தது.
நாகேஸ்வரராவ் 'சோகராவ்' என்பதால் காலைக் காட்சிகளில் அவருக்கு இடம் இல்லை.
https://i.ytimg.com/vi/K-kd2QhVqVk/hqdefault.jpg
இந்தப் படங்களில் பழைய வில்லன்கள் இருக்க மாட்டார்கள். சத்யநாராயணா, பிரபாகர் ரெட்டி என்று வில்லன்கள் 'கௌபாய்' ரேஞ்சில் துப்பாக்கி பிடித்து ஓரிரு பெண்களை கற்பழித்து, 'கேம்ப்ளிங்' விடுதி நடத்தி, அதில் காபரே ஆடவிட்டு, பல கொலைகள் செய்து, நம்பிக்கை துரோகம் செய்து காட்டிக் கொடுத்த தன் கூட்டத்து ஆளை முதலை வாயில் தள்ளி, மற்றவர்களுக்கும் அதே நிலைமைதான் என எச்சரித்து எக்காளமும், கும்மாளமும் இடுவார்கள்.
வெட்டவெளி சென்னை மகாபலிபுரம் தார் ரோட்டில், சவுக்குத் தோப்புகள் சரமாரியாய் சைடில் வளர்ந்து கிடக்க, ஒப்பன் ஜீப்பில் வில்லன் ஜீப்பை துரத்துவார் ஹீரோ. ஜீப்களின் டயர் திரும்பும்போது 'குளோஸ்-அப்' ஷாட் அதம் பறக்கும். வெத்து ரோடு 'விர்'ரென்று பறக்கும் வளைவுகளில் வந்த ஷாட்களே திரும்பத் திரும்ப வரும். அதைக் கண்டு பிடித்து பெயர் வாங்கி விடுவேனாக்கும். ஹ.. ஹ. ஹீரோ' கிருஷ்ணா வந்து (இவர் தெலுங்கு 'ஜேம்ஸ் பாண்ட்') வில்லன்களுடன் படம் முழுக்க பத்து சண்டைகள் போட்டு, இறுதியில் போலிசிடம் பிடித்துக் கொடுத்து படத்தின் முதல் டூயட் பாடலை இறுதியில் மீண்டும் நாயகியுடன் சேர்ந்து நான்கு வரி பாடி நம்மை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு அனுப்புவார்.
இப்படி
மோசக்காரனுக்கு மோசக்காரன்,
கில்லாடிக்குக் கில்லாடி;
துடிக்கும் துப்பாக்கி,
கத்திக்குத்து கந்தன்
சென்னையில் சி.ஐ.டி 77
(இந்தப் படத்தில் கிருஷ்ணாவுக்கும், வில்லனுக்கும் கைபலப் பரிசை போட்டி ஒன்று நடக்கும் சூதாட்ட விடுதியில். இருவரும் அவரவர்கள் கைகளை டேபிள் மீது வைத்து கோர்த்து வலது பக்கமும் இடதுபக்கமும் ஒருவரை ஒருவர் சாய்த்து மிஞ்சப் பார்ப்பார்கள். இதில் என்ன விசேஷம் என்றால் வலது பக்கம், இடது பக்கம் இரு பக்கங்களிலும் பெரிய கொடுக்கு கொண்ட தேள்கள் சில நகர்ந்து கொண்டிருக்கும். வில்லன் கிருஷ்ணாவின் கைகளை பிடித்து சாய்த்து அப்படியே ஜெயிப்பது போலக் கொண்டு போகும் போது தேள்கள் கொடூரமாய் கிருஷ்ணாவின் கையைக் கொட்ட எக்கும். பார்க்கும் நாங்கள் படுடென்ஷனாக நகம் கடிப்போம். பின் பதிலுக்கு கிருஷ்ணா வில்லனின் கைகளை சாய்த்து இறுதியில் தேள் வில்லன் கைகளைக் கொட்டும்போது நம் முகத்தில் சின்னா தமன்னாவைப் பார்த்தால் எவ்வளவு சந்தோஷப்படுவாரோ அதைவிட சந்தோஷ ரேகைகள் எங்கள் முகத்தில் படர்ந்த காலம் அது.
அடுத்த நாள் திங்களன்று ஸ்கூலில் பத்து மணிக் காட்சி பார்த்த கதை நடக்கும். சுற்றி அனைத்து நண்பர்களும் காதில் ஈ புகுவதைக் கூட கவனியாமல் கதை கேட்பார்கள். இதில் நண்பர்கள் கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா?
'படத்துல எத்தனை சண்டைடா?'
http://www.thehindu.com/multimedia/d...02_204316g.jpg
ஏன்னா அத்தனை பசங்களுக்கும் சண்டைக் காட்சின்னா அவ்வளவு உயிர். எட்டு சண்டைகளாவது ஒரு படத்தில் இருக்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு சண்டைக் காட்சிகள் அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு பசங்களுக்குப் பிடிக்கும்.
அப்புறம் ஹீரோக்கள் டாமினேஷன் போரடிச்சுப் போய் ஹீரோயின்கள் கட்டிப் பிடித்து ஸ்டன்ட் பண்ணி, ரிவால்வார் பிடித்து 'டுமீல்' பண்ணி எதிரிகளை துவம்சம் செய்தார்கள். குறிப்பாக ஜோதிலஷ்மி, விஜயலலிதா. இந்தப் படங்களுக்கு கூட்டம் எக்ஸ்ட்ராவாக வரும். இடம் கிடைக்காமல் நின்று கொண்டே பார்ப்போம். கவர்ச்சிக் காட்சிகள் வேறு அதிகம்.
https://i.ytimg.com/vi/la6N7aJZVaY/hqdefault.jpg
ரிவால்வார் ரீட்டா,
கன் பைட் காஞ்சனா
இப்படி படங்கள் வந்து சக்கைப் போடு போடும்.
இதுவல்லாமல் கன்னட ராஜ்குமார் தமிழ் பேசுவார். அவர் படங்களுக்குத் தக்கவாறு' கோவாவில் சி.ஐ.டி, பெங்களூரில் சி.ஐ.டி, காட்டுக்கு ஒரு தோட்டக்காரன்' என்று சாமர்த்தியமாக வியாபாரத் தந்திரப் பெயர் சூட்டிவிடுவார்கள்.
பக்த ஆஞ்சநேயா, ஸ்ரீ ராம ஹனுமான் யுத்தம், லட்சுமி கடாட்சம் என்று பக்திப் படங்களும் அவ்வப்போது காலைக் காட்சியில் மிளிருவதுண்டு.
பத்துமணிக் காட்சி முடிந்து ஞாயிறு அன்று மதியம் ஒரு மணிக்கு வீட்டுக்குப் போனால் பாட்டி 'எங்கேடா போயிட்டு வர்றே?' என்று தன் அதிகாரத்தைக் காட்டும்.
'இன்னைக்கி ஸ்கூல்ல்ல 'ஸ்பெஷல் கிளாஸ்' பாட்டி' என்று கூசாம பொய் சொல்லிட்டு, மீன் நடுமுள்ளை மட்டும் விட்டுவிட்டு, 'முதல் மரியாதை' தலைவர் கணக்காய் இழுத்து இழுத்து உறிஞ்சி ருசித்து சாப்பிட்டது மறந்து போகுமா?
http://www.joblo.com/images_arrownews/gz01.jpg
அப்புறம் இதெல்லாம் போரடிச்சுப் போய் இங்கிலிபீஷ் படங்கள் தமிழ்ப்படுத்தப்பட்டன. காட்ஜில்லா, கிங்காங் என்று இப்படி படங்கள். 'இன்னா சொல்லு... இங்கிலிஷ்காரன் இங்கிலிஷ்காரன்தான்... அவனை மாதிரி எடுக்க முடியாது... என்று காந்தாராவை புகழ்ந்து பேசிய வாய் அப்படியே தடம் புரளும்.
இதன் நடுவில் நாகேஷ் இங்கு பிரபலம் என்பதால் அவர் நடித்த தெலுங்குப் படங்கள் தமிழாக்கம் செய்து வெளியிடப்படும். 'நகைச்சுவை நாயகன்' நாகேஷ் என்று போஸ்டர் அடித்து வந்த 'நியூவேவ்' பாணி படம் ஒன்றை நான் அப்போது ரசித்துப் பார்த்திருக்கிறேன். கீழே 'இது ஒரு நியூவேவ் படம்' என்று போஸ்டரில் படித்தது நினைவிருக்கிறது. ஆனால் படத்தின் பெயர் நினைவில்லை. ஆனால் நிறைய கவர்ச்சி நாயகிகள்.
அப்புறம் பேய்ப்பட வரிசையில் டப்பிங்கில் பேயோட்டம் ஓடியது 'கதவைத் தட்டிய மோகினிப் பேய்'.
காந்தாராவ், ராமாராவ் இவர்களெல்லாம் அரச கதைகளிலிருந்து மீண்டு வந்து கால மாற்றம் காரணமாக 'பாண்ட்' பாணியில் துப்பாக்கி பிடித்து தோற்றுப் போனார்கள். காந்தாராவ் பேன்ட் சூட் அணிந்தால் யார் பா ர்ப்பார்கள்? அவருக்கு விட்டலாச்சார்யா பாணி டிரஸ்தான் பொருத்தம். பின்னாளில் நரசிம்மராஜு அதைத் தக்க வைத்துக் கொண்டார்.
ஆனால் கிருஷ்ணாவை வெல்ல வேறு எந்த நாயகர்களின் துப்பாக்கிகளும் இல்லை. அவர் இளமை மாறா தனிக்காட்டு 'சுடு'ராஜா.
'மெக்கனாஸ் கோல்ட்' தாக்கத்தில் மனைவி விஜயநிர்மலா எடுத்த 'மோசக்காரனுக்கு மோசக்காரன்' படம் தெலுங்கிலும், தமிழிலும் சக்கை போடு போட்டது.
இதற்கு மேல் எழுதினால் கோபால் 'கொல்டி...அவன் வேலையைக் காட்டிவிட்டான் என்று 'அறம்' பாடுவார்.
இத்தோடு விட்டு விடுகிறேன் என் காலை காட்சி அனுபவங்களை.
நீங்களும் மல்லாந்து படுத்து பழசை அசை போட்டு, உங்க காலைக் காட்சி அனுபவங்களை எழுதுங்களேன்.
நம்ம கிருஷ்ணா சாருக்கு இப்படிப்பட்ட பதிவுன்னா ரொம்ப பிடிக்கும். மனுஷர் சிக்க மாட்டேன் என்கிறார்.
//அப்புறம் பேய்ப்பட வரிசையில் டப்பிங்கில் பேயோட்டம் ஓடியது 'கதவைத் தட்டிய மோகினிப் பேய்'. // இந்த டைட்டில் சொல்லணும்னு நினைச்சிருந்தேன் சொல்லிட்டீங்க..பேயோட்டம் ஓடியதா..மதுரை இம்ப்பீரியலோ வெள்ளைக்கண்ணு மட்டும் தான் இந்த கருஞ்சிவப்பு, கருமஞ்சள், கரும்பச்சை நிறத்தில் கருப்பு எழுத்துக்களில் போஸ்ட்ர் ஒட்டியிருப்பாங்க..அதில் பார்த்த நினைவு..
காலைக்காட்சி ரைட்டப் மிக்க நன்று..அண்ட் நன்றி..ஆனாக்க மதுரைல சனி ஞாயிறு ரெகுலர் படங்கள் தான் 4 காட்சிகள்.. வீக் டேல தான் 11 மணிக் காட்சி மட்டும் நு போடுவாங்க.. மீனாட்சில சில பழைய படங்கள் பார்த்திருக்கேன்..ம்ம் நைட் ம.ப யோ பின் எழுதறேன் :)
//இதற்கு மேல் எழுதினால் கோபால் 'கொல்டி...அவன் வேலையைக் காட்டிவிட்டான் என்று 'அறம்' பாடுவார். // நீங்க தமிழனா அல்லது தமிழ் கற்றுக்கொண்ட தமிழனா?! :)
Oh. Green T yaa :) aamaa ji yai engae kaanavillai..
// சின்னா தமன்னாவைப் பார்த்தால் எவ்வளவு சந்தோஷப்படுவாரோ அதைவிட சந்தோஷ ரேகைகள் எங்கள் முகத்தில் படர்ந்த காலம் அது.// ஓய் மொதல்ல படிக்கச்சொல்ல இந்த லைன் விட்டுட்டேன்.. :) டாங்க்யூ
//சின்ன குளத்தில் அழுக்குத் தண்ணியில் வெள்ளை உடை தரித்து 'ஓ...// அது நல்ல தண்ணீர் தான் ப்ளாக் அண்ட் ஒய்ட்ல கறுப்பாத் தான் இருக்கும்.. ஆமா.. முனரு என்ன கடலூர் பாஷையா மிடறு தானே வரும்..
எப்படியோ இப்படி ஒரு டைட்டான உடை அணிந்த தெலுங்கு நாயகரின் கஷ்டத்தை நாம் பாராட்டத்தான் வேண்டும். எப்படித்தான் அதை அணிந்து நடித்தார்களோ!// அந்தக் கால சென்சாருக்குப் பயந்து ஹீரோயின்கள் அணியும் ஸ்கின் ட்ரஸ் பற்றி எதுவும் சொல்லியிருக்கிறீர்களா.. ஐ திங்க் திருவருட் செல்வரிலும் பத்மினி ஸ்கின் அணிந்து இருப்பார்..பட் எல்லாமே ஹாரிபிளா இருக்கும்..
சுசீலாம்மா பாட்ல இது மறக்க முடியுமா..ஹம்மிங்க்க்.. அண்ட் பி.பி.எஸ்..
https://youtu.be/5FvC0Bf_f9U
4 மணி நேரம் ஐந்து மணி நேரமாய் கஷ்டப்பட்டு அப்பர் வேஷம் போட்டு தலைவர் மாங்கு மாங்குன்னு உழைச்சி நடிச்சி நல்ல பக்திப் படத்தைக் கொடுத்தா...அந்தப் படத்தை எதற்காக பார்த்திருக்கிறீர் என இப்போத் தான் தெரியுது ஓய்...Quote:
ஐ திங்க் திருவருட் செல்வரிலும் பத்மினி ஸ்கின் அணிந்து இருப்பார்..பட் எல்லாமே ஹாரிபிளா இருக்கும்..
Song: : kasme waade pyaar wafa sab
Movie: Upkaar (1967)
Lyrics: Indeevar
Music: Kalyanji-Anandji
Singer: Manna Dey
Featuring Pran and Manoj Kumar
https://www.youtube.com/watch?v=oIiH...&nohtml5=False
பெரியவா ஷமிக்கணும் :) சித்தமெல்லாம் எனக்கு சிவ மயமேன்னு உங்களுக்குத்தெரியாதாங்காணும்.. (டாமில் லிட்ரேச்சர்ல கோள்கள் என்ன செய்யும் கவனீச்சீங்க தானே.. உஸ்கே பாத்..அதற்கப்புறம் இடர் களையும் பதிகத்துக்கு வேற சின்ன உரை எழுதிப் பார்த்திருக்கேனாக்கும்) சட்டுனு கண்ணீல் ரொம்ப நாளைக்கு முன்னாடி பட்டது நினைவுக்கு வந்ததைச் சொன்னா தப்பா..:) ( அப்பரையும் அவரை க் கண்முன் கொணர்ந்தவரைப் பத்தியும் முன்னமேயே எழுதியிருந்தேன் )
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறையிரைவா நின்ற வளை
என்ன அர்த்தமாம்..
என் ஆளு இருக்கானே.. செம்ம.. ரொம்ப ச் சமர்த்து...அழகன் ஹேண்ட்ஸம்.. அவன் பார்த்து ரசிக்கணும்னு நான்பார்த்துப்பார்த்து காசுகொடுத்து இந்த வளையல்களை வாங்கி என் கையிலிட்டு அழகு செய்தேன்.. அவையும் கம்பீரமாய்ச் சிரித்து கலகலவென்றிருந்தன..
ஆனா என் ஆளு என்னை விட்டுப் போய்ட்டான்.. அது எனக்குத் தெரியலை..இந்த வளையல்களுக்குத்தெரிஞ்சுடுத்து போல..என் கைகளிலிருந்து நழுவி விழுந்துவிட்டன.. அப்படி விழும்போதாவது... அடி பெண்ணே..உன் தலைவன் உன்னை விட்டுப் போய்ட்டான்னு ஒரு கோடி..சொல்லியிருக்க வேணாமோ சொல்லலையே
எனப் புலம்புகிறாள் தலைவி...எனச் சொல்கிறார் வள்ளுவர்..
அது சரி..இதையே ஒரு பாட்டில கண்ண தாசன் சொல்றார்..என்னவாக்கும்..
கையிலே வளையலில்லை
கண்ணிரண்டில் தூக்கமில்லை
கட்டியுள்ள ஆடைகளும் ,கடலலையே -என்
சிற்றிடையில் தங்கவில்லை கடலலையே
பாவம் இந்தப் பொண்ணுக்கு தலைவன் பிரிந்திருந்த துக்கத்தில் உடல் இளைத்து கட்டியிருந்த ஆடைகளும் நெகிழ்கின்றனவாம்.. ம்ம்
பாட் சுசீலாம்மா.. ஆடியோ தான் கிடைச்சது..
https://youtu.be/SZysNIvToDg
gap filler from the same GG starrer Porchilai!
https://www.youtube.com/watch?v=ufdC38lwPfo
வாசு ஜி.... வாவ்... அப்படியே மறுபடி 10 மணி ஷோவுக்கே அழைச்சுக்கிட்டு போயிட்டீங்க...
ம்ம்... அப்போ ரிலீசான ஒரு டப்பிங் படத்தின் எழுத்துக்களை என்ணி "பறக்கும் மனிதனும் பயங்கரப் பேய்களும்" மொத்தம் 21 எழுத்து வருது. அதனால் இனிமேல் "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" படம் நீளப் பெயர் கொண்டது இல்லைனு பெரிய டிஸ்கஷன் எல்லாம் நடந்திருக்கு...
"Fantastic three superman" படத்தை "மூன்று எம்.ஜி.ஆர். வீரர்கள்" என்ற பெயரில் போட்டாங்க.. அதுக்கு அலைமோதிய கூட்டம் ... அப்பாடியோ..
சிக்கா.. ராகவ்ஜி சொல்றது என்னன்னா... அப்பர் படத்துக்கு போயிட்டு ஏன் லோயர் போர்ஷனை கவனிச்சீங்க... அப்படின்னுதான்.. வேற ஒண்ணுமில்லே..:)
ம்ம்.. அப்புறம் "நீ போகுமிடமெல்லாம்" பாட்டில் சுசீலாம்மா அங்கங்கே ஹம்மிங் கொடுப்பார். ஆனா இந்தப் பாட்டில் முழுக்க ஹம்மிங்தான்..
https://www.youtube.com/watch?v=0x9hJk8cVnY
.
Happy Tamil New Year ! :)
//சிக்கா.. ராகவ்ஜி சொல்றது என்னன்னா... அப்பர் படத்துக்கு போயிட்டு ஏன் லோயர் போர்ஷனை கவனிச்சீங்க... அப்படின்னுதான்.. வேற ஒண்ணுமில்லே..:)//
நன்றி மதுண்ணா!
மேலே நீங்க எழுதியிருக்கிறதை படிச்சிட்டு சிரிக்கிறேன்...சிரிக்கிறேன்....சிரித்துக் கொண்டே இருக்கிறேன்:)...அம்மாடியோ...வயிறு வலி கண்டிடிச்சு. குறும்பு...குறும்பு.:) உங்க சிக்கா 'ஸ்கின்' பத்தி எழுதினதும் எனக்கென்னவோ 'sin of adam and eve' படம் மனசுல 'பாவமா' ஓடுது.:)
'டக்'கென்று இந்தப் பாடல் மூளையின் ஒரு மூலையில் மின்னியது.
வித்தியாசம் கொஞ்சம் தெரியும். மலையாள பாலச்சந்திரனும், நம்ம பேவரிட் கீதாஞ்சலியும் ஊட்டி ஹேர்பின் பெண்டுகளில் காரில் உல்லாசப் பயணம். உபயம் 'தெய்வத்தின் தெய்வம்'. பாடலும் விறுவிறு. டியூனும் ஜோரான ஜோர்.
பிபிஎஸ் 'லிலி லிலி லிலி லி' ஹம்மிங் தரும்போது 'க்ளுக்' என்று சிரிக்காமல் இருக்க முடியாது.
https://youtu.be/_BE3Hqgcl2M
//சிக்கா.. ராகவ்ஜி சொல்றது என்னன்னா... அப்பர் படத்துக்கு போயிட்டு ஏன் லோயர் போர்ஷனை கவனிச்சீங்க... அப்படின்னுதான்.. வேற ஒண்ணுமில்லே..// :) ஓய்.. தோள்ல தான் அவங்க ஸ்கின் போட்டிருப்பாங்கன்னு நினைவு.. ஸோ நானும் தோளைத் தான் சொன்னேன்..
//எனக்கென்னவோ 'sin of adam and eve' படம் மனசுல 'பாவமா' ஓடுது.// நம்ம தோஸ்த் கோபால் இருந்தார்னா இதப் பத்தி ஒரு வியாசமா ஏதாவது எழுதியிருப்பார்.. நான் இந்தப் படம்லாம் பார்த்ததில்லையே..ம்ம்..
அந்தக் காலத்தில.. ச்ச்சின்னக் கண்ணன் வேலை சேர்ந்த புதிதில்
இருந்த இளம் மலையாளப் பெண்ணிடம் தயங்கிய வண்ணம் இன்னிக்கு
உங்களுக்கு விஷூ தானே ஹாப்பி விஷூன்னு சொன்னானா..அதுக்கு
அந்த சேர நனனாட்டிளப் பாவை வெள்ளரிக் கீற்றை வெள்ளியில் வடித்தாற்போல
பளீர்ச்சிரிப்பு க் கொடுத்து யெஸ் கண்ணுன்னு சொல்லி கை குலுக்கினாளா
சடனா நினைவுக்கு வந்துச்சா.. இதை எழுதிட்டேனா..( நம்பணும்ங்க.)
ஆமா மெனச்சொல்லி அல்லிவிழி மேலுயர்த்தி
தாமாகக் கைகொடுத்த தண்ணிலவே - போனாலும்
நீங்கா திருக்கிறதே நின்நினைவு நெஞ்சத்தில்
பாங்காய்ச் சிரிக்கிறதே பார்....
//மனச் சோலையிலே வட்டமிடும் வாசமென
உள்ளத்தில் நீ பொங்க// ம்ம்.. டி. ராஜேந்தர்..
https://youtu.be/F75_LCOzjeA
ஏதோ ஒரு புண்ணியவான் அருமையாக மிக்ஸ் செய்து ஒரு காட்சி விரிகிறது. பாலும் பழமும் சாந்தியுடன் இணைத்து பார்க்க முடியாவிட்டாலும் ,பாட்டின் துடிப்பில் இணைய முடிகிறது. மூல படத்தில் சௌகாரை வைத்து படமாகியிருந்ததாக ஞாபகம்.இதுவும்,காதலெனும் வடிவம் கண்டேன் பாடலும் சுசீலா (கின்னஸ் சாதனை நாயகி) குரலில் அப்படி....அப்படி...இருக்கும். ஒரு இளம் பெண் தண் மனத்தை கட்டுக்குள் வைக்காமல்,மணத்தில் வைத்தால் இப்படித்தான் என்ற இலக்கணம் ,தேன் குரலில் சொல்ல படும் அதிசயம்.(ராட்சசிக்கும் அம்மம்மா கருப்பு பணம் உண்டே?)
http://youtubehd.in/watch/ptyn9VWa_MA
P.SUSEELA'S MELODY VOICE.
https://youtu.be/KpPiNH7Erk0
கோ,
நாம் இது பற்றி போனில் நிறைய தடவை பேசியிருக்கிறோம். அந்த இரண்டுடன் இதையும்தான் நான் சேர்த்துக் கொள்வேன். இரண்டுக்கும் இது இளைத்ததல்ல...சளைத்ததல்ல. இரண்டுமே இன்பத் தென்றல்கள் தாம்.
இது இன்னும் உற்சாகம் கொப்பளிக்கும் தென்றல்.
கதவு திறந்ததா காட்சி தெரிந்ததா
காணும் உலகம் புரிந்ததா
காணும் உலகம் புரிந்ததா
'ஹஹ..ஹஹா... ஒஹொஹொஹோ...ஹோஹோஹஹோ'
இந்த ஹம்மிங் ஹசத்தல்தானே!
இதோ இதோ இந்த பூமியிலே
எத்தனை ஜாலங்கள் பாதையிலே
அதே அதே நிலை நீ அறிந்தால்
ஆனந்தம் வேறில்லை வாழ்க்கையிலே
சிலை சிலை ஒன்று நேரினிலே
சிரிப்பதன் காரணம் புரிகின்றதா
அலை அலை என்று கண்களிலே
ஆயிரம் கலைகள் தெரிகின்றதா
மலர் மலர் மணம் வருகின்றதா
மயக்கத்திலே மனம் அசைகின்றதா
இனம் இனம் அது புரிகின்றதா
இயற்கையின் ரகசியம் தெரிகின்றதா
பாடலின் ஆரம்பத்தில் வரும் சுசீலாவின் ஹம்மிங் கொஞ்சம் 'நெஞ்சம் மறப்பதில்லை'யை நினைவூட்டத்தான் செய்யும்.
பாடலின் மூன்று சரணங்களின் முதல் வரிகளில் ஒரே வார்த்தை இரண்டாக இனியவளின் குரலில் ஒலித்து இனிக்கும் சுவையை நாம் பெற என்ன தவம் செய்தோமோ!
http://img.youtube.com/vi/IX8GKUqMVlo/mqdefault.jpg
கோபுரக் கொண்டையில் காட்டுவாசிப் பெண் வேடம் பத்மினிக்கு பரிமளிக்காதுதான். யெஸ்.ஜோடியும் பொருந்தாதுதான். ('ராஜா'வுக்கு 'ராணி'யை ஜோடியாய் பார்த்துவிட்டு ராஜேந்திரனுக்கு எப்படி பார்ப்பதாம்!)
மலைப்பாங்கான இடங்களின் வெளிப்புறப் படப்பிடிப்ப்பின் ஜாலமும், பாடலின் நாயகி குரலும், உற்சாக இசைவெள்ளமும், தவழ்ந்து படர்ந்து செல்லும் பனி மேக மூட்டங்களும் பரவசம் அடைய வைக்கும்தானே!
மாமாவின் முத்திரையைப் பற்றி கேட்கவே வேண்டாம். அது பற்றி உங்களுக்கு நான் சொல்லுவதா?
'இனம் இனம் அது புரிகின்றதா
இயற்கையின் ரகசியம் தெரிகின்றதா'
என்று இன்பம் நிறைந்த வாழ்க்கையின் நிலையை ரசிக்கக்கூடிய, முகம் சுளிக்க முடியாத இரண்டே வரிகளில் 'நாட்டு' நாயகனுக்கு 'காட்டு ரோஜா' விளக்கி விடுவது தனி அழகுதானே!
இப்போ ஆடியோ மட்டும் வீடியோவில் கேளுங்கள். மனம் மறுநாள் வரை உற்சாகம் குறையாமல் இருப்பதையும் கவனியுங்கள்.
இப்போது வீடியோவைத் திறவுங்கள். காட்சி தெரியாது. கானம் மட்டுமே.
https://youtu.be/4jfQxMcjR9s
ஹாய் வாஸ்ஸூ நீவிர் போட்ட பாட் ஏற்கெனவே போட்டாச் போட்டாச்சாக்கும்.. நெய்வேலி யானையும் மஸ்கட் பூனையிடம் சறுக்குமாக்கும்.. இருப்பினும் கோ வைக் கொஞ்சி தாங்கள் செய்த வர்ணனை யாமும் ரசித்தோம்.. நன்றி ந்றி றி...:)
http://www.mayyam.com/talk/showthrea...AF%8D-5/page52