http://i67.tinypic.com/21mhwdu.jpg
Printable View
http://i66.tinypic.com/9s3wq1.jpg
எம்.ஜி.ஆரின் இசைஞானம்
M.G.R. அபாரமான இசை ஞானம் உள்ளவர். இசையமைப்பாளர்களுக்கே சொல்லித் தரும் அளவுக்கு இசையில் புலமை உண்டு. மெல்லிசை மட்டுமின்றி கர்னாடக இசையிலும் அவருக்கு சிறந்த ஞானம் உண்டு.
நவரத்தினம் படத்தில் கர்னாடக இசையின் பெருமையை உணர்த்தும் வகையில் ஒரு பாடல் உண்டு. மேற்கத்திய, இந்துஸ்தானி, கர்னாடக இசை எல்லாம் கலந்து அந்தப் பாடல் இருக்கும். எம்.ஜி.ஆருக்காக பாலமுரளி கிருஷ்ணா பாடியிருப்பார். படத்தின் இசையமைப்பாளர் பிரபல வயலின் இசைக் கலைஞர் மறைந்த குன்னக்குடி வைத்தியநாதன். கர்னாடக இசையின் சிறப்பை விளக்கும் அந்தப் பாடல் படத்தில் இடம்பெற வேண்டும் என்று ஆசைப்பட்டதே எம்.ஜி.ஆர்தான்!
பெங்களூரில் படப்பிடிப்பு நடந்தபோது குன்னக்குடி வைத்தியநாதனிடம், மற்ற சங்கீதங்களுக்கு எல்லாம் அடிப்படையே நமது பாரம்பரியமான கர்னாடக இசைதான் என்பதை விளக்கும் வகையில் பாடல் அமைய வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கூறியிருக்கிறார். புகழ் பெற்ற ஆங்கில இசைப் பாடலுக்குத் தகுந்த அல்லது அதோடு ஒத்திருக்கும் வகையில் ஒரு கீர்த்தனையை ஒப்பிட்டு காட்டினால் கர்னாடக சங்கீதத்தின் மதிப்பு புரியும் என்றும் சொல்லியிருக்கிறார்.
இவை கூட பெரிதல்ல, ஒரு ஆலோசனைதான். அடுத்து எம்.ஜி.ஆர். கூறியவை குன்னக்குடியை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது. மை ஃபேர் லேடி, சவுண்ட் ஆஃப் மியூசிக் ஆகிய ஆங்கிலப் படங்களில் இருந்து புகழ் பெற்ற பாடகர்கள் பாடிய பாடல்களைக் கூறி, அவற்றோடு ஒத்துப்போகும் தெலுங்கு கீர்த்தனைகளையும் எம்.ஜி.ஆரே சொல்லியிருக்கிறார். அவரது இசையறிவைப் பார்த்து பிரமித்துப் போய்விட்டார் குன்னக்குடி வைத்திய நாதன். எம்.ஜி.ஆர். கூறிய பாடல்களும் கீர்த்தனைகளுமே படத்தில் இடம் பெற்றன. மேலும், படத்தில் அந்தக் காட்சியில் மிகவும் இயல்பாக தேர்ந்த கலைஞ ரைப் போல எம்.ஜி.ஆர். வீணை வாசித்தார் என்று குன்னக்குடி அளித்த பேட்டியில் பாராட்டினார்.
வீணை என்றில்லை, எம்.ஜி.ஆருக்கு இருந்த இசையறிவு காரணமாக பணம் படைத்தவன் படத்தில் அகார்டியன், கண்ணன் என் காதலன் படத்தில் பியானோ, ஒருதாய் மக்கள் படத்தில் கிடார் என்று பல படங்களில் பல வாத்தியங்களை எம்.ஜி.ஆர். மிகவும் நுட்பமாக கையாண்டிருப்பார். எங்கள் தங்கம் படத்தில் பாகவதரைப் போல வேடமிட்டு கதாகாலட்சேபமே செய்வார். பாடுவது போல நடிப்பதைவிட பாடகரின் பேச்சுக்கு வாயசைத்து நடிப்பது மிகவும் கடினம். இப்போது போல தொழில்நுட்பம் முன்னேறாத அந்தக் காலத்தில் கதாகாலட்சேப காட்சியில், டி.எம்.சவுந்தரராஜனின் பேச்சுக்கு எம்.ஜி.ஆரின் வாயசைப்பு இம்மியும் பிசகாது.
கர்னாடக இசை மீது கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக இசைக் கலைஞர்களை எம்.ஜி.ஆர். மிகவும் மதிப்பார். அவர்களுக்கு உரிய மரியாதை அளித்து கவுரவிப்பார். கர்னாடக இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாட்டு எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடிக்கும். முதல்வராக இருந்த போது ஒருமுறை எம்.எஸ். கச்சேரியை முழுவதும் இருந்து ரசித்து கேட்டார். பல கலைஞர்களின் கச்சேரிகளை எம்.ஜி.ஆர். இதுபோல கேட்டிருக்கிறார்.
மன்னாதி மன்னன் படத்தில் இடம்பெற்ற ஆடாத மனமும் உண்டோ?... பாடல் தேவகானமாய் ஒலிக் கும். கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதனின் குருவும் நடிகை ஸ்ரீவித்யாவின் தாயாருமான மறைந்த இசை மேதை எம்.எல்.வசந்தகுமாரியும், டி.எம்.சவுந்தரராஜனும் பாடிய லதாங்கி ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல். ஒரு இடத்தில் தனக்கு முன்னே அரைவட்டமாக சுற்றி வைக்கப்பட்டிருக்கும் தபேலா தரங்கை சுருதிக்கு ஏற்ப எம்.ஜி.ஆர். வாசித்து, கடைசியில் வலது கையை மடக்கி இடது தோள் உயரத்துக்கு சிரித்தபடியே ஸ்டைலாக உயர்த்துவது கண்கொள்ளாக் காட்சி.
நாட்டியப் பேரொளி பத்மினியின் ஆடலுக்கு ஏற்ப, சிறிய வடிவில் இருக்கும் ஜால்ராவை (இதை தாளம் என்று கூறுவார்கள்) எம்.ஜி.ஆர். பட்டும் படாமலும் தேவை யான ஒலி அளவுக்கேற்ப தேய்த்து வாசிக்கும் அழகே அழகு. இன் னொரு இடத்தில் தபேலா தரங்கை வாசித்துவிட்டு ஷாட்டை கட் செய்யா மல், வாடாத மலர் போலும் விழிப் பார்வையில் என்ற வரிகளை மிகச் சரியாக டைமிங் தவறாமல் ஆரம்பித்து எம்.ஜி.ஆர். வாயசைப்பார்.
இதழ் கொஞ்சும் கனிய முதை மிஞ்சும் குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே என்ற வரி களில் கடைசி எழுத்தான வேயின் நீட்சியாக வரும் ஏ..ஏ.. என்பதில் டி.எம்.எஸ். குரல் மேல் ஸ்தாயியிலும் கீழ் ஸ்தாயியிலும் ஒலிக்கும்போது அதற்கேற்றபடி, முகத்தை உயர்த்தியும் தாழ்த்தியும் பாடுவது போல எம்.ஜி.ஆர். நடிப்பது அற்புதம்! இந்தப் பாடலை இப்போது பார்த்தாலும் ஒரு விஷயத்தை கவனிக்கலாம். லாங் ஷாட்டில் காட்டும்போது எம்.ஜி.ஆரின் பாதம் தரையில் தாளமிடும். என்ன ஒரு ஈடுபாடு இருந்தால் இப்படி செய்திருப்பார் என்று நினைக்கும்போது பிரமிக்காமல் இருக்கவே முடியாது.
பாடலில்தான் இப்படி அருமையாக நடித்திருக்கிறார் என்றால், பாடல் காட்சி முடிந்த பின்னும் தனக்கே உரிய நுணுக்கமான நடிப்பை எம்.ஜி.ஆர். வெளிப்படுத்தியிருப்பார். நாமே கூட, காலையில் ஒரு பாடலைக் கேட்டு அது மனதில் பதிந்துவிட்டால் அன்று முழுவதும் அதையே முணுமுணுத்துக் கொண்டிருப்போம். இதை ஆங்கிலத்தில் earworm என்று சொல்வார்கள். பாடல் காட்சி முடிந்த பின் அடுத்து வரும் காட்சியில் நடந்து வரும்போது, ஆடாத மனமும் உண்டோ?... என்று சன்னமான குரலில் எம்.ஜி.ஆர். பாடிக்கொண்டே வருவார். பாடல் எப்படி தன்னை ஈர்த்துள்ளது என்பதை இதன் மூலம் காட்டியிருப்பார். படத்தில் மட்டுமல்ல; இசை ஞானத்திலும் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்.!
இந்தப் பாடலில் எம்.ஜி.ஆருக்கென்றே கவிஞர் மருதகாசியால் வார்த்தெடுக்கப்பட்ட வைர வரிகள் இவை:
நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்
ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
தனி இடம் கொண்ட உமைக் கண்டும் இப்பூமியில்
ஆடாத மனமும் உண்டோ?...
http://i67.tinypic.com/349fmo8.jpg
நன்றி - தி இந்து
நன்றி - மயில்ராஜ் முகநூல் பக்கம்
http://i68.tinypic.com/erfnu8.jpg
நான்கு நாட்கள் முன் ( செவ்வாய் கிழமை ) ஒரு இனிய அனுபவம்...
காலை 7 மணி சுமாருக்கு... மதுரை... தமிழ்ச் சங்கம் அருகில்... சில கல்லூரி மாணவமணிகளின் நாடித்துடிப்பை அறிந்து கொள்ள சென்றிருந்தேன்... பொன்மனம் பண்பலை தொடர்பாக...
போக்குவரத்து இன்னும் நெருக்கடி ஆகாத அந்த நேரத்தில் 65 - 70 வயதில் ஒரு அம்மா கையில் கூடையுடன்... சாலையை 2 - 3 முறை நான் பார்க்கவே கடந்து கொண்டு இருந்தார்...
ஏதோ தேடுகிறார் அது மட்டும் தெரியுது...?! ஆனால் எதை...?
4 - ஆம் முறை சாலையை கடக்க முயன்ற அவரை நான் தடுத்தேன்... இனி... நானும் அந்த அம்மாவும்...
நான் : என்னம்மா என்ன தேடுறீங்க... ரோட்டை 3 வாட்டி கிராஸ்
பண்ணீட்டீங்க... அட்ரஸ் ஏதும் மறந்துடுச்சா...?
அம்மா : இல்ல கண்ணு... இங்கன... ஒரு எம்.சி.ஆரு படம் இருந்ததா
ஞாபகம்... அதான்...
நான் : ( மெய் சிலிர்க்க... ) என்ன விஷயம் அம்மா... என்றேன்...
அம்மா : நான் பூக்காரி ராசா...
நான் : தெரியுது... கூடைய பாத்தா... நீங்க விவரத்தை சொல்லுங்க...
அம்மா : இந்த ரோட்ல 6 - 7 வருசத்துக்கு முன்ன பூ வித்தேன்... இங்கன
ஒரு எம்.சி.ஆரு படம்...
நான் : அது இருக்கு ... நான் சொல்லுறேன்... நீங்க ஏன் அந்த படைத்த
தேடுறீங்க...
அம்மா : நான் எப்போவுமே மொத பூவ... அந்த மவராசனுக்கு
போட்டுட்டு தான் பொழப்ப பாப்பேன்... இங்கன தான் பாத்தா
மாதிரி இருக்கு மட்டுபட மாட்டேங்குது...
நான் : அம்மா... இங்கே ஒரு பாலம் கட்டுனதால உங்களுக்கு இப்போ
தெரியல... "நம்ம தலைவர்" படம் இங்கன இல்ல... இதே ரோட்ல
அந்த கடைசியில இருக்கு... நீங்க மதுரா கோட்ஸ் வழியா வந்து
இருப்பீங்க... அதான் இப்போ கொழப்பம்... நீங்க இதே ரோட்ல
இன்னும் கொஞ்சம் போங்க... ரைட் சைடுல "நம்ம தலைவர்"
படம் இருக்கு...
நான் "தலைவர்" என ரெண்டு தரம் சொல்லவும்... அந்த அம்மா முகத்தில் பூரிப்பை பார்க்கவேண்டுமே...?!
என் முகம் தடவி... "அந்த மவராசன தலைவர்னு சொல்ற பாரு... அதான் என்னய பாத்து என்னமோ ஏதோனு உதவி செய்யணும்னு தோணி இருக்கு... எத்தன பேரு போறாங்க யாராவது வந்து ஓதவணும்னு தோணுச்சா... அதான்... அதான்..." - என அவராகவே பேசிக்கொண்டு போனார்...
உண்மையில்... இப்போதும் இந்த விபரத்தை உங்களுடன் பகிரும் போதே... என்னால் என் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை...
அதுதான்... நம் "மக்கள் திலகம் ஒரு மஹா சக்தி" என்பது...
இன்னும் இன்னும் எங்கெங்கோ நிறைய உண்மையான மக்கள் திலகத்தின் பக்தர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...
- நெகிழ்ச்சியின் உச்சத்தில் ... மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ்
Makkalthilagam, Emperor of Emperors----- Cinema Field All ways ... Digital Versions "Rickshawkaaran". may be screening coming September 30 th. Onwards...
11/9/2016 (நேற்று தினமலர் நாளிதழி்ல் வாசகர் கடிதம் பகுதியில் வெளியான கடிதம்
http://i64.tinypic.com/aaw1hd.jpg
http://i64.tinypic.com/mls409.jpg
http://i68.tinypic.com/30tqr1l.jpg
காவிரி நீரை நீதி மூலம் போராடி பெற்றுத் தந்த புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு நன்றி.
தமிழ் மக்கள் தங்கள் உரிமையை காக்க தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பின்னால் ஓரணியில் திரளுவோம்.
சென்னை சரவணாவில் 02/09/2016 முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
"தாழம்பூ "தினசரி 3 காட்சிகளில் வெளியாகி வெற்றி நடை போட்டது.
இந்த ஆண்டில் (2016) இணைந்த 14 வது எம்.ஜி.ஆர். வாரம் .
http://i64.tinypic.com/349b52c.jpg
கடந்த ஆண்டில் (2015) சரவணாவில் 06/03/2015 முதல் திரைக்கு வந்து ஒரு வாரம்
தினசரி 3 காட்சிகள் நடைபெற்றது .
09/09/2016 முதல் சென்னை பாட்சாவில் (மினர்வா ) திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த "ஆசை முகம் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/dzgtxi.jpg
கலைமகள் மாத இதழ் -செப்டம்பர் 2016
http://i68.tinypic.com/2nv72c4.jpg
http://i63.tinypic.com/11aeiiv.jpg
தினத்தந்தி இணையதளத்தில் இருந்து..
http://www.dailythanthi.com/News/Ind...requesting.vpf
தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் சித்தராமையாவுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம்
பதிவு செய்த நாள்:
திங்கள் , செப்டம்பர் 12,2016, 9:35 PM IST
சென்னை,
சென்னை,
கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எழுதிஉள்ள கடிதத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்திஉள்ளார்.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வெளியானதால் பெங்களூரு, மைசூரு, மாண்டியா உள்பட மாநிலம் முழுவதும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.
கர்நாடகாவில் தமிழகர்களின் கடைகள், வாகனங்கள் குறிவைத்து தாக்கப்படுகிறது. பெங்களூருவில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மேலும் நகர் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மைசூரிலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே ராணுவத்தை அனுப்ப கர்நாடக அரசு கோரிக்கை விடுத்து உள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு இந்த விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதி உள்ளார். கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திஉள்ளார். தமிழக மக்கள் மற்றும் அவர்களுடைய உடமைகள் மீதான தாக்குதல்கள் வருத்தம் அளிக்கிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.
ராஜ்நாத் சிங்
இதற்கிடையே உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், கர்நாடக, தமிழக சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார். நிலை குறித்து தமிழக மற்றும் கர்நாடக முதல்வர்களிடம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேசிஉள்ளார். மத்திய அரசு இரு மாநிலங்களுக்கும் அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்று ராஜ்நாத் சிங் கூறிஉள்ளார்.
http://i66.tinypic.com/r2tj5z.jpg
நன்றி - மயில்ராஜ் முகநூல் பக்கம்
மக்கள் திலகத்தின் மாபெரும் மாண்புகளில் ... அற்புதமான ஒன்று ... தான்...இன்றைய எனது களம்...
ஒரு பாடகர்... மக்கள் திலகத்திடம் வாய்ப்பு கேட்டு வருகிறார்... தலைவர்... எதனையும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவர் ஆதலால்... "ஆகட்டும் பார்க்கலாம்..." என்கிறார்... அது தான் அவருக்குரிய மரியாதை... அதோடு அவர் போய் இருந்தால்... மக்கள் திலகத்தின் மாண்பு வெளிப்பட்டு இருக்காது... அரை நூற்றாண்டை நெருங்கும் இந்த பழைய நிகழ்வை நாமும் அசை போட்டு இருக்க மாட்டோம்... ஆசை...ஆசையாய்...
"நானும் உங்க ஆளுதான்... நானும் கேரளாதான்... அதுனால கொஞ்சம் பாத்து பண்ணுங்க..." - என்று சொல்ல...
கண்கள் கனல் கக்க... தலையை மட்டும் ஆட்டி நாகரீகமாக அனுப்பி வைத்து விட்டு... சிபாரிசுக்கு அழைத்து வந்தவரை உண்டு... இல்லை... என்று... பண்ணி விட்டாராம்... நம் பண்பாளர்...
பின்னாளில் அதே பாடகரை மன்னித்து வாய்ப்பு அளித்தார்! என்பதே நம் மக்கள்திலகத்தின் மாண்புமிகு வரலாறு...
நான் ஏன் சொல்கிறேன்... என்றால்... இன-மத-பேதமறியா நம் உன்னதரின் வழியில்... நாமும் இணைந்தே... இன்னும் பல சாதனை சாதிக்க வேண்டிய சூழலில்... ஆங்காங்கே... ஒற்றுமை எனும் பேரில்... இன ரீதியான வேற்றுமையே... இப்போது தாண்டவமாடுகிறது...
அதை தூண்டும் எவரும் ... மக்கள்திலகத்தின் பெயரை கூட உச்சரிக்கும் தகுதி அற்றவரே...!
இன பேதம் தூண்டுவோரே...!
உன்னதரின் பெயரை உச்சரிக்காதீர்...!
- மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ்
http://i68.tinypic.com/oa2fyw.jpg
நமது மக்கள் திலகம் பக்தர்களுக்கு என்று இல்லை. திரியை படிக்கும் எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள். மற்ற மாநில மக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் செய்திகளையோ கருத்துக்களையோ தயவு செய்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிடாதீர்கள் என்று இதைப் படிக்கும் நண்பர்களை பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.
வன்முறை எதற்கும் தீர்வு இல்லை. மக்கள் திலகம் தனது வாழ்க்கையில் மட்டுமல்லாது, படத்திலும் கூட எதிரிகளை அவர்கள் என்ன கொடுமை செய்திருந்தாலும் மன்னிப்பார்.
அவர் வழியில் நாமும் காவிரி பிரச்சினையில் நல்லது நடக்கும் என்று நம்பிக்கையுடன் பொறுமையாக இருப்போம்.
http://i67.tinypic.com/30db0qu.jpg
நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்!
M.G.R. பற்றி பொதுவாக ஒரு விமர்சனம் உண்டு. அவர் நல்லவர். மனிதாபிமானம் மிக்கவர். என்றாலும் அரசு நிர்வாகத்தில் அவர் அத்தனை சிறப்பாக செயல்படவில்லை என்று கூறப்படுவது உண்டு. ஆனால், முதல்வராக இருந்தபோது நிர்வாகத்தில் எவ்வளவோ சிக்கலான விவகாரங்களுக்கும் உணர்வுபூர்வமான பிரச்சினைகளுக்கும் தனக்கே உரிய மதிநுட்பத்தோடு காதும் காதும் வைத்தது போல கச்சிதமாக தீர்வு கண்டவர் எம்.ஜி.ஆர்.
காவிரிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரி டெல்லியில் விவசாயிகள் இரண்டு நாட்கள் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடத்தியுள்ளனர். கர்நாடகாவுக்கும் தமிழகத்துக் கும் காவிரிப் பிரச்சினை இன்று நேற்றல்ல; காலம் காலமாக இருந்து வரும் ஒன்று.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சையில் குறுவை பயிரிடும்போதுதான் வழக்கமாக காவிரி தண்ணீர் பிரச்சினை தலைதூக்கும். குறுவை பெயருக்கேற்றபடி குறுகிய காலப் பயிர். எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்கும்போதும் தண்ணீர் இல்லாமல் குறுவை கருகும் அபாயம் ஏற்பட்டது. அப்போது, கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். அவருடன் எம்.ஜி.ஆர். உடனடியாக பேச முடியாத நிலை.
அந்த நேரத்தில் கர்நாடகாவில் கல்வி அமைச் சராக இருந்தவர் ரகுபதி. எம்.ஜி.ஆருக்கு நெருங் கிய நண்பர். ரகுபதியின் தாயார் எம்.ஜி.ஆர். மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஒரு நாள் காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூ ருக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். புறப்பட்டார். அவரு டன் இரண்டு அதிகாரிகள் மட்டுமே சென்றனர். பெங்களூர் சென்ற எம்.ஜி.ஆர்., கர்நாடகா அமைச்சர் ரகுபதியை தொடர்பு கொண்டு விமான நிலையத்துக்கு வரச் சொன்னார்.
எம்.ஜி.ஆரின் திடீர் வருகையும் தன்னை வரச் சொல்வதன் காரணமும் புரியாமல் பரபரப்புடன் பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்த ரகுபதி, எம்.ஜி.ஆரை வரவேற்றார். தன்னுடன் வந்த தமிழக அதிகாரிகளை அரசு காரில் செல்லச் சொல்லிவிட்டு, எம்.ஜி.ஆர். மட்டும் ரகுபதியின் காரில் ஏறிக் கொண்டார். நேராக ரகுபதியின் வீட்டுக்கே காரை விடச் சொன்னார்.
ரகுபதியுடன் சாதாரணமாக பேசிக் கொண்டு வந்தாரே தவிர, விவரம் எதுவும் சொல்லவில்லை. அது காலை நேரம். தங்கள் வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆரைக் கண்ட ரகுபதியின் தாய் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்து சிற்றுண்டி பரிமாறினார். எம்.ஜி.ஆர். சாப்பிட்டு முடித்தார். சாப்பாட்டின்போதும் சரி, சாப்பிட்டு முடித்த பிறகும் சரி, அருகே வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எம்.ஜி.ஆர். குடிக்கவே இல்லை. ஏன் தண்ணீரை குடிக்கவே இல்லை? வேண்டாமா? என்று ரகுபதியின் தாய் கேட்டார்.
அதை எம்.ஜி.ஆர். பிடித்துக் கொண்டார். ரகுபதியை பார்த்து சிரித்துக் கொண்டே, தண்ணீர் வேண்டும்தான். ஆனால், உங்கள் மகன் கொடுக்க மாட்டேன் என்கிறாரே? அப்புறம் நான் எப்படி தண்ணீர் குடிப்பது? என்று கேட்டார். ரகுபதிக்கு பொறி தட்டியது. எம்.ஜி.ஆர். தனியாக வந்த நோக்கத்தை புரிந்து கொண்டார். தன் கையாலேயே எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுத்து உபசரித்ததுடன் காரியத்தில் இறங்கினார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாதான் அப்போது, கர்நாடகாவின் பொதுப்பணித்துறை அமைச்சர். அவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்த ரகுபதி உடனடியாக வரச் சொன்னார். அங்கிருந்து மூவரும் மருத்துவமனையில் இருந்த ராம கிருஷ்ண ஹெக்டேவை பார்க்கச் சென்றனர்.
அங்கே, பிரச்சினையை எப்படி சமாளிப்பது, கர்நாடகாவில் தண்ணீர் இருப்பு, இருக்கும் நீரை இரு மாநிலங்களும் பாதிக்காத வகையில் பகிர்ந்து கொள்வது ஆகியவை குறித்து சிறிது நேரத்தில் விவாதிக்கப்பட்டு தமிழகத்துக்கு விளம்பரம் இல்லாமல் தண்ணீர் விட முடிவு செய்யப்பட்டது.
உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் ராம கிருஷ்ண ஹெக்டேவை எம்.ஜி.ஆர். பார்த்து நலம் விசாரித்தார் என்று செய்திகள் வெளியானது. ஆனால், இந்த சந்திப்பின் நோக்கமே வேறு. சத்தமே இல்லாமல், தமிழகத்தின் கடைமடைப் பகுதிக்கு காவிரி தண்ணீரை எம்.ஜி.ஆர். கொண்டு வந்து விட்டார்.
படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், வியாபாரி, ஊழியர், அதிகாரிகள், விஐபிக்கள் என்று பல தளங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் உண்டு. இந்த பிரிவினரில் சதவீதம் மாறலாமே தவிர, எல்லாத் தரப்பிலும் ரசிகர்களை எம்.ஜி.ஆர். பெற்றிருந்தார். அந்த விஐபிக்களில் ஒருவர் கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவ். தன்னை எம்.ஜி.ஆர். ரசிகர் என்று பகிரங்கமாக அறிவித்தவர் அவர். எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி படத்தில் இடம் பெற்ற
ஒன்றும் அறியாத பெண்ணோ...
பாடல் காட்சி கர்நாடக மாநிலம் கூர்க்கில் உள்ள குண்டுராவுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில்தான் படமாக்கப்பட்டது. குண்டுராவிடமும் ஒருமுறை எம்.ஜி.ஆரே பேசி விளம்பரமே இல்லாமல் காவிரியில் தண்ணீர் விடச் செய்தார் .
எம்.ஜி.ஆர். நடித்த ஊருக்கு உழைப்பவன் படத்தில் பல காட்சிகள் கர்நாடகா மாநிலம் பெங்களூர், மைசூர் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டன. படத்தில்
இதுதான் முதல் ராத்திரி... அன்புக் காதலி என்னை ஆதரி...
என்ற இனிமையான டூயட் இடம்பெறும். எம்.ஜி.ஆரை பார்த்து நாயகி பாடுவார்...
அடிமை இந்த சுந்தரி.... என்னை வென்றவன் ராஜதந்திரி...
http://i65.tinypic.com/2076n85.jpg
கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவுடன் எம்.ஜி.ஆர்.
நன்றி - தி இந்து
http://i65.tinypic.com/1zz3ji8.jpg
இன்று (13/09/2016)பிற்பகல் 2 மணிக்கு வசந்த் டிவியில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த "ராஜா தேசிங்கு " ஒளிபரப்பாகிறது
இன்று பிற்பகல் 3 மணிக்கு பாலிமர் டிவியில் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த
"சக்கரவர்த்தி திருமகள் " ஒளிபரப்பாக உள்ளது .
http://i65.tinypic.com/2emeg51.jpg
இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்
ராணி வார இதழ் -18/09/2016
http://i63.tinypic.com/2iw2720.jpg
பிரபல பின்னணி பாடகர் திரு.ஏ .எல்.ராகவன் அவர்களின் தந்தையார் திரு.ஏ .ஆர் .
லட்சுமண பாகவதர். நாடகங்களில் ராஜபார்ட் வேடம் போட்டவர் .அந்தக் கால
பிரபல நடிகர் பி.யு. சின்னப்பாவுடன் இணைந்து நடித்தவர் .
நாடகங்களில் ராஜபார்ட் வேடம் போட்டபோது , அவருக்கு ஜோடியாக பெண் வேடம் போட்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
ராணி வார இதழ் -18/09/2016
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர் திரு. நாகராஜன் (M.T.C.-RETD.) அவர்களின்
மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி , சென்னையை அடுத்த வேலப்பஞ்சாவடியில்
உள்ள திருமண மண்டபத்தில் இன்று (13/09/2016) இரவு சிறப்பாக நடைபெற்றது .
ஏராளமான எம்.ஜி.ஆர். பக்தர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் .
http://i68.tinypic.com/n2iq7d.jpg
புகைப்படத்தில் மண மக்களுடன் திரு.நாகராஜன் குடும்பத்தினர் .
http://i63.tinypic.com/1zq9e7r.jpg
இன்று (13/09/2016) இரவு 7 மணி முதல் சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலாக நடித்த
"குடியிருந்த கோயில் " ஒளிபரப்பாகியது
http://i64.tinypic.com/14x1nyt.jpg
http://i66.tinypic.com/a0htea.jpg
நாளை (14/09/2016) காலை 11 மணிக்கு சன் லைப் டிவியில் , மக்கள் தலைவர்
எம்.ஜி.ஆர். "ஆனந்த ஜோதி " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர் .
http://i67.tinypic.com/pairo.jpg
அன்புள்ள
முகநூல் நண்பர்களுக்கு,
"பொன்மனச் செம்மல்"
எம்ஜிஆர் அவர்களின்
நல்லாசியுடன்
அன்பின் இனிய வந்தனங்கள்..,
கடந்த 26.8.2016
தினமலர் நாளிதழில்
"விழியிழந்த வெண்கலக் குரலோன்"
என்ற தலைப்பில்
எம்ஜிஆர் பக்தர் பற்றிய ஒரு
கட்டுரை வெளியானது.
அவரின் துயர் துடைக்கும்
முயற்சியின்
முதல் "மைல் கல்"நிகழ்ச்சியாக
""பொன்மனம் எம்ஜிஆர்"பொது நலச்சங்க
பக்தர்களான..,
திரு.சிவக்குமார்,
திரு. வெங்கட்ராமன்தியாகு,
திரு.பாலசுப்பிரமணியன்,
திரு. சுந்தரராஜன்,
திரு. கோவிந்தராஜன் இவர்களின்
கூட்டு முயற்சியில்
ஆதரவற்ற அப்பெரியவருக்கு
ரூபாய் 11.100 உதவி வழங்கப்பட்டது...
இந்நிகழ்ச்சியை காணும்
பாக்கியம் கிடைத்ததில் நானு
பெருமை அடைகிறேன்....
உதவிய அன்பு உள்ளங்களுக்கு
எங்கள் நெஞ்சம் நிறைந்த
வாழ்த்துக்கள்...!!!
http://i66.tinypic.com/34e2hd5.jpg
பொன்மனம் பொது நலபேரவை!
ஆங்காங்கே நிதி வசூல் நடத்தி அறக்கட்டளை ஆரம்பிக்கிறோம் என்று சிலர் எல்லோரையும் ஹிம்சித்துக் கொண்டிருந்த தருணங்களில் திரு பொன்மனம் பண்பலை சிவகுமார் அவர்களால் சிந்தையாக்கப்பட்டு எத்தகைய வசூலும் இல்லாமல் அதே சமயம் சிறு கிளைகளாக சிதறியிருக்கும் அமைப்புகளில் உள்ள உண்மையான செயல் வீரர்களைக் கொண்டு நலிவுற்ற நல்லோருக்கு நம்மால் இயன்றதை வெகு துரிதமாக உதவவும் பேரியக்கம் என்பதன் மூலம் தலைவரின் தொண்டர் பலத்தை பெருக்கவும் மேற்படி அமைப்பின் நாம கரணம் நடந்தேறியது!
இதன் அடிப்படையாக மூன்று கொள்கைகளை முழங்கினார் சிவகுமார்!
உண்மை! உழைப்பு! உடனே!!
சிந்தனை என்ற ஒன்றைக்கூட அவர் ஏற்கவில்லை?
காரணம் அந்த கால அவகாசத்தில் நம் உதவி பெறுவோர்க்கு பயனற்றதாக மாறவும் ஏன்? நம் மனமே மாறலாம் என்றும் அவர் சிந்தித்தார்?/
இத்தகைய சூழலில் இதற்கான ஆரம்ப கட்ட அஸ்திவாரத்தை பலமாக எழுப்ப அவர் முயன்று கொண்டிருந்த வேளையில்தான் ஒளிவிளக்கை இதயத்தில் இருத்தி அவர்தம் பாடல்களை உதட்டில் அசைக்கும் விழி இழந்த காரணத்தால் வாழ வழி இழந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்து தன் தொண்டர் கோவிந்தரஜன் மூலம் அனுப்பி வைத்தார் நம் தலைவர்!
வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நினைத்த பொன்மனத்தாரும் உடனே செயலில் இறங்கினார் சென்றது உதவி அப்பெருமகனார்க்கு!
ஆக திறப்பு விழாவை சிறப்பு விழாவாக்க தன் தொண்டருக்காக தாமே தன் தொண்டர் மூலம் நடத்திக் கொடுத்து நாளை அகிலம் முழுதும் அமைப்பு பலம் பெற அனுமதித்துள்ளார் அந்த ஊருக்கு உழைப்பவன்!!!
நன்றி -வெங்கட்ராமன் தியாகு அவர்களின் முகநூல் பக்கம்.
http://i66.tinypic.com/2jb6137.png
எம்.ஜி.ஆர்.- சிவாஜி படத்துக்கு ஒரு பாட்டால் வந்த பிரச்சினை!
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கொடிக்கட்டி பறந்த காலமது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடிக்கும் படங்கள், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிக்கும் படங்கள் அனைத்துக்கும் ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்தான். இந்தஇரண்டு முன்னணி ஹீரோக்களுக்கும் பிடித்த இசையமைப்பாளர்
எம்.எஸ்.விஸ்வநாதன்தான். ஒரே நேரத்தில் இரண்டு ஹீரோக்களின் படங்களின் பாடல்களுக்கும் ட்யூன் போட்டு கொடுத்துதிருக்கிறார். பாடல் பதிவும் நடந்திருக்கிறது. எதற்காகவும் இந்த ஹீரோக்களுக்குள்ளும் 'ஈகோ' வந்துடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார் எம்.எஸ்.வி.
சிவாஜி படத்திற்கு கவியரசர் கண்ணதாசன் பாடல் எழுதுவார். எம்.ஜி.ஆர்.படத்திற்கு கவிஞர் வாலி பாடல் எழுதுவார். இரண்டு கவிஞர்கள் எழுதிய பாடல்களுக்கான பாடல் பதிவும் பிரச்சனையில்லாமல் நடத்திருக்கிறது. ஆனால் எப்போதுமே இரண்டு ஹீரோக்களின் படங்களுக்கும் பிரச்சனை இல்லாமல் கம்போஸிங், ரெகார்டிங் நடந்துவிடுமா என்ன? ஒருநாள் சிக்கல் வந்தே விட்டது.
எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி நிறுவனம் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக நடிக்க வைத்து 'ஒளிவிளக்கு' படத்தை தயாரித்தது. ஜெமினி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கும் முதல்படம், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு அது 100வது படம். அதனால் அந்தபடத்தின் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள். பாடல் டியூன்கள் புதுசாக இருக்க வேண்டும் அனைவரையும் கவரும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று எம்.எஸ்.வியிடம் வலியுறுத்தி விட்டு போனது ஜெமினி நிறுவனம்.
'ஒளிவிளக்கு' படத்திற்காகபாடல் சிச்சுவேஷனை எம்.எஸ்.வியிடம் சென்னார் எம்.ஜி.ஆர். நிஜத்திலும் திரையிலும் குடிப்பழக்கமில்லாத எம்ஜிஆர், ஒரு காட்சியில் குடிப்பது போல நடிப்பார். "இதுவரையில் எந்தப் படத்திலும் நான் குடிப்பது போல் நடித்ததில்லை. இந்தப் படத்தில் குடித்துவிட்டு வருவதுபோல் நடிக்கிறேன். அப்பொழுது எனது மனசாட்சி என்னை குத்திக் காட்டி அறிவுரை சொல்கிறது. இதுதான் பாடலுக்கான சிச்சுவேஷன் இதற்குப் பொருத்தமான பாடல் வேண்டும். தத்துவப் பாடலாக இருக்க வேண்டும்," என்று சொல்லி விட்டு போய்விட்டார்.
இதை கவிஞர் வாலியிடம் எடுத்துச் சொல்லி இந்தப் பாடல் எம்.ஜி.ஆரின் இமேஜ் கெடாமல் எழுதப்பட வேண்டும் என்று சொன்னார் எம்.எஸ்.வி. அதற்கு ஏற்ற வகையில் டியூன் போட்டு கொடுத்து அதன்படி பாடலை எழுதும்படி வாலியிடம் வலியுறுத்தினார் எம்.எஸ்.வி.
எம்.எஸ்.வியிடம் ஒரு கொள்கை உண்டு. தன்னிடம் பாட்டு எழுதவருபவர்கள் யாராக இருந்தாலும் அந்தப்பாட்டின் வரிகள் முழுவதையும் தன்னிடம் தான் முதலில் படித்துக்காட்ட வேண்டும் அது இந்த டியூனுக்கு பொருந்தி வருகிறதா? இல்லையா?என்று பார்த்த பிறகுதான் மற்றவர்களுக்கு படித்துக் காட்ட வேண்டும் எனபதில் பிடிவாதமாக இருப்பார்.
'ஒளிவிளக்கு' படத்தின் சிச்சுவேஷனுக்கு ஏற்றவகையில் பாடலை எழுதியவுவடன் முதலில் எம்.ஜி.ஆர். அவர்களிடம் போய் படித்துக் காட்டினார் கவிஞர் வாலி. எம்.ஜி.ஆரும் பாடலை ஒகே சொல்லி விட்டார். எம்.எஸ்.விக்கு கோபம் வந்தது. "இந்தப் பாட்டை ஒகே பண்ண எம்.ஜி.ஆரிடமே போய் டியூனையும் ஒகே பண்ணிக்கோ," என்று கோபத்தில் சீறினார். "எம்.ஜி.ஆர் அவர்கள் 'எழுதின பாட்டை வந்து படித்துக் காட்டுங்க' என்றுஅழைத்தார்.அதனால் தான் நேரில் போய் படித்துக் காட்டினேன் இது தப்பா? ஆமா... நீங்க போட்டிருக்கும் டியூனுக்கு பொருத்தமாகத்தானே பாடலை எழுதியிருக்கிறேன் பின்னே ஏன் கோபப்படறீங்க?," என்றார் கவிஞர் வாலி.
'தைரியமாக சொல் நீ மனிதன்தானா?' என்ற பாட்டுக்காகதான் இருவருக்குள்ளும் மோதல் நடந்தது. எம்.எஸ்.வி. போட்ட டியூனுக்கு கவிஞர் வாலி பொருத்தமாகத்தான் பாடலை எழுதியிருந்தார். வார்த்தைகளும் அப்படியே பொருந்தி வந்தன. எம்.ஜி.ஆரும் பாடலை ஒகே பண்ணதும் சரிதான் என்பதை எம்.எஸ்.வி.உள்ளுக்குள் உணர்ந்தேதான் இருந்தார். ஆனால் அவருக்கு வேறு இக்கட்டான நிலை. அதற்காகத்தான் அந்த சண்டை.
எம்.ஜி.ஆருக்கு 'தைரியமாக சொல் நீ மனிதன் தானா' என்றுகவிஞர் வாலி பல்லவி எழுதியிருந்த அதே சமயத்தில் சிவாஜி நடித்து வந்த 'லட்சுமிக் கல்யாணம்' என்ற தனது சொந்தப் படத்துக்காக 'யாரடா மனிதன் அங்கே, கூட்டி வா அவனைஇங்கே...' என்று கவியரசர் கண்ணதாசன் ஒரு பல்லவி எழுதியிருந்தார். அந்தப் பாட்டுக்கும் எம்.எஸ்.வி.தான் டியூன் போட்டார் ஒலிப்பதிவும் நடந்து முடிந்தது.
இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக நேராக எம்.ஜி.ஆரிடம் சென்று அவரைத் தனியாகச் சந்தித்து இந்த இக்கட்டான நிலையை ஒளிவு மறைவு இன்றி எடுத்துச் சொன்னார் எம்.எஸ்.வி. "இரண்டு படத்தின் பாடல்வரிகளும் கிட்டதட்ட ஒன்னாயிருக்கு, நாளைக்கு படம் ரிலீசானதும் 'என்ன விசு நீ அங்கேயும் வேலை செய்யற இங்கேயும் வேலை செய்யற' எங்கிட்ட ஒரு வார்தத்தை சொல்லியிருக்கலாமேனு ன்னு நீங்கஎன்கிட்ட கேட்டிங்கன்னா... அதனாலதான்...," என்று இழுத்தார் எம்.எஸ்.வி.
"வாலியோட பல்லவியும் நன்றாகத்தான் இருக்கிறது. இந்த இக்கட்டாலதான் வேணாம்னு சொன்னேன்," என்று அதையும் வெளிப்படையாகச் சொன்னார் மெல்லிசை மன்னர். கவியரசர் கண்ணதாசனுக்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கும் மனக்கசப்பு இருந்து வந்த நேரம் அது. எம்.ஜி.ஆர்.எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, "விசு, நீ வேணும்னா கவிஞர் கிட்ட பேசிப்பாரு," என்றார்.
எம்.எஸ்.வியும் கவிஞர் கண்ணதாசனிடம் போய் பேசினார். அவர் சத்தம் போட ஆரம்பித்தார். "நான் வட்டிக்கு வாங்கி 'லட்சுமிக் கல்யாணம்' படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் பாட்டு சீனும் எடுத்து முடிச்சாச்சி.. இனிமாத்த முடியாது," என்று மறுத்து விட்டார். மறுபடியும் எம்.ஜி.ஆரிடம் போய்நின்றார் விஸ்வநாதன். கண்ணதாசனின் கோபத்தை விளக்கிச் சொன்னார்.
எம்.ஜி.ஆர், "விசு, கவிஞர் எழுதி ஒலிப்பதிவான அந்தப் பாடலை ரிகார்ட் பண்ணிக் கொண்டு வா, கேட்டுப் பார்க்கிறேன். அப்புறம் ஒரு முடிவுக்கு வருவோம்," என்றார். எம்.எஸ்.வி.யும் 'ஒளிவிளக்கு', 'லட்சுமிக் கல்யாணம்' படங்களின் பாடல்களான 'தைரியமாக சொல் நீ மனிதன் தானா' பாடலையும் 'யாரடா மனிதன் அங்கே கூட்டிவா அவனை இங்கே' பாடலையும் ரெக்கார்ட் பண்ணிக் கொண்டு வந்து எம்.ஜி.ஆரிடம் போட்டுக் காட்டினார். இரண்டு பாடல்களையும் கேட்டஎம்.ஜி.ஆர். பதட்டப்படாமல், "விசு இரண்டு பாட்டுலேயும் 'மனிதன்' என்கிற வார்த்தை வருவதுதான் ஒற்றுமை. மற்றபடி வாலி எழுதின பாட்டு குடிகாரனைப் பார்த்து மனசாட்சி சொல்வது... கவிஞரின் பாட்டு பொதுவா ஒரு நல்ல மனிதனைத் தேடி அலைவது போன்ற சிச்சுவேஷன். இதனால் பாதிப்பு உனக்கும் வராது, எனக்கும் வராது... எதையும் மாத்த வேணாம்," என்று முடிவு சொன்னார்.
பிரச்சனை தீர்ந்தது. இரண்டு பாடல்களுமே காலத்துக்கும் நிலைத்து நிற்கின்றன!
Read more at: http://tamil.filmibeat.com/specials/...l6-042144.html
நன்றி : ஒன் இந்தியா இணையதளம்
http://i64.tinypic.com/hwgytt.jpg
பேரறிஞர் அண்ணாவின் பெருமைகள் ......
உயிருக்கு உயிராய் தொண்டர்களிடம் பாசத்தை கொட்டிய மற்றொரு உத்தமப்பிறவி (ஏற்கனவே ஒரு தனிப்பிறவி உண்டு அவர்தான் மக்கள் நெஞ்சை கொள்ளை கொண்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.) வைரக்கல்லாய் ஒளி பரப்பிய ஓர் அறிவுச்சுடர், மக்களாட்சி நெறிமுறைக்கு தக்க மதிப்பளிக்கும் ஒரு மணி விளக்கு, அகந்தை என்பதே அணுவும் இல்லாத ஓர் அன்புக்கடல். பெருந்தன்மையின் சிகரம்,
மேல் நாட்டு பேச்சாளர்களான டெமாஸ்தனிஸ், ஆன்டனி, சிசரோ, சர்ச்சில், ஆட்லாய், ஸ்டிவன்சன் முதலான பேச்சுப்புலிகளின் மொத்த உருவமாக பேரறிஞர் அண்ணா அவர்கள் விளங்கினார்.
தமிழ் நாட்டின் சிறந்த பேச்சாளர்களான சர். ஏ. இராமசாமி, ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி, ஞானியார் சாமிகள், திரு.வி.க., மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், எஸ். சத்யமூர்த்தி, ரா. பி. சேதுப்பிள்ளை, பா. ஜீவானந்தம், தந்தை பெரியார் போன்றவர்களால், தலை சிறந்த சொற்பொழிவாளர் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் பாராட்டப்பட்டார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் அமெரிக்கா சென்றிருந்தபோது, அவரிடம் கேட்கப்பட்ட வினாக்களுக்கு அவர் உடனக்குடன் அளித்த பதில்கள் :
கொலம்பியா பல்கலை கழக பேராசிரியர் டாக்டர் ஷெட்டி எழுப்பிய வினா : மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறீர்களே, தொழிலுக்கும், கல்விக்குமல்லவா முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும், அப்போதல்லவா நாடு முன்னேறும் ?
பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : எங்கள் நாட்டில், அரசாங்கம் மொழிப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதால், நாங்கள் சமாளிப்பதற்காக அதனை மேற்கொண்டோம். மொழிப்பிரச்சினை உள்நாட்டு போரில் முடியுமோ என்று அஞ்சுவதால், அதற்கு முக்கியத்துவம் அளிக்க நேரிடுகிறது.
தொடர்ந்து, கொலம்பியா பல்கலை கழகத்தில் விடுக்கப்பட்ட வினா (பேரறிஞர் அண்ணா அவர்களின் உலக அரசியல் ஞானம் பற்றி தொடுக்கப்பட்ட சம்பந்தமில்லாத வினா) :
1. இத்தாலியில் வடக்கு வளமுடனும், தெற்கு ஏழ்மையிலும் இருக்கிறதே ?
பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : செல்வம் கொழிக்கும் அமெரிக்காவில் கூட ஏழ்மையும், நிற வேற்றுமை கொண்ட நீக்ரோக்கள் வாழும் பகுதிகள் இருக்கின்றன. இந்தப்பிரச்சினைகளும், வேறுபாடுகளும் உள்நட்டு போரை கொண்டு வந்து விட்டன. பிரச்சனையிலிருந்து நழுவப்பார்ப்பவர்கள் உள்நாட்டு போர் வந்து விடும் என்று பயமுறுத்தி பிரச்சினையிலிருந்து தப்பிக்க பார்க்கிறார்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன். நாம் பிரச்சினைகளை தீர்க்க முயல வேண்டுமேயன்றி அவற்றிலிருந்து நழுவ முயலக்கூடாது.
2. மற்றொரு வினா .....உங்கள் கொள்கைகளால் இந்திய ஒற்றுமை பாதிக்கப்படாதா ?
பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : நாங்கள் பிரிவினை கொள்கையை விட்டு விட்டோம். நான் ராஜ்ஜிய சபாவில் இது பற்றி பேசும்பொழுது, இனி எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து வாழ்வோம் என்று கூறியபொழுது, பாரளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சி ஆராவாரம் செய்தனரே !
3. வேறொரு வினா : உங்கள் கல்விக் கொள்கையை காட்டி டில்லி அரசு இடையூறு கொடுக்காதா ?
பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : "கல்வி" என்பது ஒரு மாநில விஷயம் - டில்லிக்கு அதில் உரிமை ஏதும் கிடையாது.
======== ================================================== ================================================== =
யேல் பல்கலை கழக மாணவர்களின் வினாக்களும், பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில்களும் ......
1. நீங்கள் திராவிட நாடு பிரிவினை வேண்டுமெனக் காங்கிரஸை எதிர்க்க வில்லையா ?
பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : "ஏன் செயின்ட் பால் கூடத்தான்
2. உங்கள் நாட்டில் மாணவர் போராட்டம் அதிகமாகி கொண்டு வருகிறதே ?
பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : எங்கள் நாட்டில் மட்டுமா மாணவர் போராட்டம் நடைபெறுகிறது ! உலகம் பூராவிலும் தான் நடைபெறுகிறது. நேற்று இரவு உங்கள் நாட்டு செய்திகளை அலசியபொழுது,கொலம்பியா பல்கலை கழக மாணவர்கள் நீக்ரோ இனத்தவருக்கு சம உரிமை தர வேண்டும் என்று கல்லூரியில் மறியல் செய்து, கல்லூரி தலைவரை வெளியே வராதபடி அறைக்குள் விட்டு அடைத்துள்ளனர்.
3. கள் குடி உங்கள் நாட்டில் உண்டா ?
பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : "எங்களைப்போன்ற வெப்ப நாட்டில் "கள்" தேவையில்லாத ஒன்று.
4. ஏன் பிரிவினை கொள்கையை கை விட்டீர்கள் ?
பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியா மீது படையெடுத்ததினால், நாட்டின் ஒருமைப்பாட்டினை கருத்தில் கொண்டு, தனித்திருப்பது அபாயகரமானது என்பதால் கைவிட்டோம்.
5. காங்கிரஸ் கட்சி உங்களை ஆட்சி பீடத்திலிருந்து வெளியேற்ற முயல்கிறது என்று கூறுகிறார்களே !
பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : " நான் அதை நம்ப வில்லை. ஏன் அவர்கள் செய்ய வேண்டும் ? நான் உள்ளே இருப்பதை விட்டு வெளியே இருந்தால் அவர்களுக்கு தான் தலைவலி அதிகம்.
அப்போதைய பிரதமர் இந்திரா பற்றிய கருத்து பற்றி அமெரிக்கர்கள் கேட்டதற்கு .... இந்தியாவில் பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில், இந்தியப்பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்கள் செயல் புரிகிறார் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறினார்.
அடுக்கடுக்காய் வினாக்கள் பல தொடுக்கப்பட்டாலும், சளைக்காது அவற்றுக்கு ஆணியடித்தாற்போல் நெத்தியடி பதில்களை தந்த பேரறிஞர் அண்ணா அவர்களை, "தமது கொள்கைகளின் மூலம் பொது மக்களின் ஆதரவை திரட்டுவதில் வல்லமை பெற்றவர் " என்று யேல் பல்கலை கழக ஏடு கட்டுரை வெளியிட்டு பாராட்டியது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் இத்தகைய பெருந்தன்மையான பேச்சுக்களும், பண்புகளும், அவர் தெரிவித்த உன்னதமான கருத்துக்களும், அவர் திறமை மிக்கதொரு மாநிலத்தலைவர் மட்டுமல்லர், இந்தியாவின் தேசியத்தலைவராகவும் உயர்ந்து வருகிறார் என்று "ராம்ப்ளர்" என்ற ஆங்கில வார ஏடு வெகுவாக பாராட்டியிருந்தது.
1968ம் ஆண்டு செப்டம்பர் 8ம் நாள் அண்ணாமலை பல்கலைக்கழகம், அப்போதைய குடியரசு தலைவர் டாக்டர் ஜாகிர் உசேன் அவர்களோடு, அறிஞர் அண்ணா அவர்களுக்கும் இலக்கிய அறிஞர் என்கின்ற DOCTOR OF LITERATURE பட்டத்தை அளித்து பெரும் மகிழ்வு கொண்டது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் படைப்புக்கள் :
..... தம்பிக்கு மடல்கள் 315
..... கட்டுரைகள் 560
..... நாடகங்கள் 13
..... குறு நாடகங்கள் 18
..... புதினங்கள் 6
..... சிறு கதைகள் 118
..... கவிதைகள் 77
பத்திரிகை உரைகள் : சுமார் ஆயிரத்துக்கும் மேல்
பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி.மு.க. வின் முதல் மாநகராட்சி வெற்றி ..
1959ம் ஆண்டில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் 90 இடங்களில் போட்டியிட்டு 45 இடங்களில் வெற்றி பெற்று, ஏப்ரல் திங்கள் 24ம் நாளில், தி.மு. க. வை சார்ந்த அ. பொ. அரசு மேயராக பதவி ஏற்றார். 100 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
பேரறிஞர் அண்ணா அவர்கள் ராஜ்ய சபா (மாநிலங்களவை)வில் ஆற்றிய முதல் உரையை பற்றி பத்திரிகைகள் கருத்து :
"தி ஹிந்து" ஆங்கில நாளேடு : கொள்கையில் கொண்ட உண்மைப்பிடிப்பாலும், தமது ஆற்றல் மிக்க திறமையாலும், சந்தேகத்துக்கு இடமின்றி, அண்ணாத்துரை அவர்கள் இராஜ்ஜிய சபாவை கவர்ந்து விட்டார்.
"ஹிந்துஸ்தான் டைம்ஸ்" : தி. மு. க. தலைவர் அண்ணாதுரை அவர்கள் தென்னகத்துக்கு சுய நிர்ணய உரிமை வேண்டும் என்ற கோரிக்கையைத் தெளிவாக எடுத்துரைத்தார். மாநிலங்களவை, இன்று திராவிட நாட்டின் கொள்கைக்காக பாடுபடும் சொல்லாற்றல் மிக்க தலைவரின் பேச்சை கேட்டது., தேசியத்துக்கு அவர் ஒரு புதிய விதியை தந்தார்.
"டைம்ஸ் ஆப் இந்தியா" : இந்தியாவிலிருந்து பிரிந்து போக வேண்டும் என்னும் குரல் முதன் முதலாக சுதந்திர இந்தியாவின் பாராளுமன்றத்தில் இன்று (01-05-1962) ஒலித்தது. இந்த முழக்கத்தை தி. மு. க. தலைவர் திரு அண்ணாத்துரை அவர்கள், மாநிலங்கள் அவையில் முழக்கினார். இந்திய யூனியனிலிருந்து தென்னகம் பிரிந்து போக வேண்டும் என்ற அவரின் துணிவான வாதம், பாராளுமன்றத்தையே நிலை குலையச் செய்து விட்டது.
"மாத்ரு பூமி" : ஆட்சி அமைப்பு முறையின் எதிரி என்ற அளவில் அறியப்பட்ட திரு. அண்ணாத்துரை அவர்களின் சொற்பொழிவு என்ன இருந்தாலும் பல முறை குறிப்பாக வட இந்தியாவிலிருந்து வந்திருந்த பல உறுப்பினர்களை வியப்பில் ஆழ்த்தியது. சிறந்த பேச்சாளர் என்றுள்ள நிலையில் சிறந்த பெயர் பெற்றுள்ள அண்ணாத்துரை அவர்கள் அன்று மாநிலங்கள் அவையில் தம் திறமை முழுவதையும் வெளிப்படுத்தினார். சாதாரணமாக தமிழிலிருந்தும், ஆங்கிலத்திலிருந்தும் தான், பொன்மொழிகளை மேற்கோள் காட்டி பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், இந்த முதல் மாநிலங்களவை சொற்பொழிவு .. அவரால் வட மொழியிலிருந்தும் பொன்மொழிகளை மேற்கோள் காட்ட முடியும் என்பதை எடுத்தனுப்பியது.
அந்த முதற் சொற்பொழிவினால் மட்டுமின்றி பின்னர் தாம் ஆற்றிய ஒவ்வொரு உரையினாலும், பாராளுமன்ற பேச்சுக்கலைக்கே ஒரு புத்துயிரும், புதிய பொலிவும் அளித்து விட்டார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
இந்தி திணிப்பை கண்டித்தும், சீன ஆக்கிரமிப்பைக் கண்டித்தும் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய பாராளுமன்ற உரைகள் வரலாற்று புகழ் படைத்தவை ஆகும்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி. மு. க. வின் வெற்றி :
உலகில் வேறு எந்தக் கட்சியும் தனது அடிப்படை இலட்சியத்தை கை விட்ட பிறகு, தொடர்ந்து வளர்ந்ததாக வரலாறு உண்டா ?
பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி. மு. க. வோ, தன் உயிர் கொள்கையை கைவிட்ட பிறகும் ஓங்கி வளர்ந்தது. காங்கிரஸ் பேரியக்கத்தை கதி கலங்கிட செய்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. இந்த மாபெரும் வெற்றிக்கு, பின்னணியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்தது உலகறிந்த உண்மை.
பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி. மு. க. என்பது வெறும் கொள்கை ஒன்றினால் மட்டும் கட்டப்பட்டது அன்று. அண்ணாவின் தனி ஆற்றல், தனிப்பண்பாடு, தனிக்குடும்ப பாசம், ஆகிய அடித்தளங்கள் மீதே எழுப்பப்பட்டது.
தொண்டர்களை வெறும் தொண்டர்கள் மட்டுமே என்று நினைக்காமல், உடன் பிறந்த தம்பிகளை விட மேலானவர்களாக, அன்புக்குழந்தைகளாக பாவித்து, பேரறிஞர் அண்ணா அவர்கள் பொழிந்த தாய்மைபாசமே தி. மு.க. வை இந்த அளவுக்கு செழிக்க செய்தது.
தமிழக முதல்வரான பின், 26-02-1967 அன்று நடந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் முதல் பொதுக்கூட்ட, நன்றியறிவிப்பு உரை
மாலை முரசு -15/09/2016
http://i65.tinypic.com/2rh7of7.jpg