https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...1e&oe=5B982458
Printable View
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...f5&oe=5B4EF899
Sundar Rajan
அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,கோவை மாவட்டத்தைச் சேர்ந்த
நடிகர்திலகத்தின் அன்பு இதயங்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற வந்து விட்டார் நமது மக்கள்தலைவர்.
... ஆம், நாளை வெள்ளி முதல் நடிகர்திலகத்தின் மாபெரும் வெற்றிக்காவியம் ஊட்டி வரை உறவு கோவை ராயல் திரையரங்கில் வெளியாகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவரும் மக்கள்தலைவரின் அட்டகாசமான ஸ்டைலில் உருவான ஊட்டி வரை உறவு திரைப்படத்திற்கு மாபெரும் வரவேற்பினைக் கொடுத்து,
கோவை சிவாஜி கோட்டை என்பதை உலகிற்கு உணர்த்துவோம்.
மதுரையில் சித்திரைத் திருவிழா இன்றுடன் (3.5.2018) முடிந்தது.
கோவையில் சித்திரைத் திருவிழா நாளை ( 4.5.2018) தொடங்குகிறது.
ஆம், மக்கள்தலைவரின் படம் வரும் நாளே எங்களுக்கு திருவிழா.....
சிவாஜி ஒரு அற்புதம்... மரணத்தோடு முடிந்து விடுவதில்லை வாழ்க்கை... காந்தியடிகள் கூட உயிரோடு இருந்த காலத்தில் பெற்ற புகழை விட... மரணத்திற்குப் பிறகுதான் மஹாத்மா என்ற பெயருடன் அழியாப் புகழ் பெற்றார்... பெருந்தலைவர் காமராஜரும் அப்படித்தான்.. இறப்பிற்குப் பின் அதிகமாக நேசிக்கப்பட்டார்... அவ்வாறேதான் நம் நடிகர் திலகமும் ஆவார்... இன்றும் நம்மோடு வாழ்ந்து வருகிறார்... மரணம் இதுபோன்ற மாமனிதர்களை ஒருபோதும் வென்றதில்லை... திரையுலகில் முக்கிய கதாபாத்திரம் மரணிப்பது போல் கதையமைத்தால் அந்த முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகசிகாமணிகள் 1000 வோல்ட் மின்சாரம் பாய்ந்தது போல் "ஷாக்" ஆகி விடுகிறார்கள்.. இயக்குநர்களிடமும் கதாசிரியர்களிடமும் கதையை மாற்றுங்கள், கிளைமேக்ஸை மாற்றுங்கள் என்று பஜனை பாட துவங்கி விடுவார்கள்... கதையை நம்பி கதாபாத்திரங்களை உருவாக்கப்பட்ட காலம் போய் கதாநாயகர்களை நம்பி கதைகளை உருவாக்கும் கர்ணகொடூரம் நிகழ்ந்ததன் கதை இதுதான்... சிவாஜி சினிமாக்கள் இன்னமும் பூஜிக்கப்பட காரணம் என்னவென்றால் வெரி சிம்ப்பிள்... கதை என்ன சொல்கிறதோ அதற்கேற்ற வகையில் தன்னை அவர் வடிவமைத்துக் கொண்டதுதான்... உட்சபட்ச நட்சத்திரமாக இருந்து கொண்டு போட்டி பொறாமை நிறைந்த திரையுலகில் பல்லாயிரக் கணக்கான மனிதர்களை வாழ வைத்த அவர் நினைத்திருந்தால் தன்னைச் சுற்றி புனையப்பட்ட கதைகள் வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருப்பார்... அதைச் செய்யவில்லை அவர். திரைக்கதை என்ன சொல்கிறதோ அதை செய்தார்... அதற்கேற்ப தன்னை வடிவமைத்துக் கொண்டார். பாசமலர் படக்கதை... களைமேக்ஸில் மரணித்து விடுவதாக காட்சி... மரணித்தார்.. காட்சியை மாற்றச் சொல்லவில்லை... முதல் மரியாதை.... மரணித்தார்... காட்சிக்கு அவரது மரணம் தேவைப்பட்டது... இயக்குநருக்கு ஏற்ற நடிகராக மாறிப் போனார்... சில படங்களில்... உதாரணமாக வெள்ளைரோஜா... பாதிரியார் மரணத்திற்குப் பிறகுதான் கதையோட்டமே சூடு பிடித்தது.. படையப்பாவும் தேவர் மகனும் ... அதுபோலத்தான்... வசந்த மாளிகை போன்ற படங்களில் மரணிக்கும் கிளைமேக்ஸ் ஆனாலும் சரி... மகி்ழ்வோடு முடியும் கிளைமேக்ஸ் ஆனாலும் சரி... இரண்டுமே பொருத்தமாக அமைந்ததுண்டு... தெய்வமகன் கிளைமேக்ஸ் கண்ணன் கதாபாத்திரம் மரணிக்கும்.. மற்ற இரு கதாபாத்திரங்களுக்கு உள்ளும் சோகம் நிரவி நிற்கும்... அதேபோலத்தான் கௌரவம் திரைப்படத்திலும் நிகழ்ந்தது... வியட்நாம் வீடு படத்திலும் அவன்தான் மனிதன் படத்திலும் நம்மை துள்ளத் துடிக்கவிட்டு மரணிக்கும் கதாபாத்திரங்களை மறக்க இயலுமா? இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்... சினிமாவில் நம்மவர் மரணிப்பதுபோல நடிக்கும் காட்சிகளை நம்மில் சிலர் பார்க்க விரும்ப மாட்டார்கள்... நம் உறவுகளுக்குள்ளே ஒருவர் மரணம் எய்தி விட்டால் போகாமல் இருந்து விடுவோமா என்ன?... உண்மையில் நடிகர் திலகம் திரையில் மரணிப்பது போல் நடித்து... இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பதே உண்மை.. இதுபோன்று பற்பல கதாபாத்திரங்களை துணிச்சலோடு ஏற்று யார் நடிக்க தயாராக இருக்கிறார்கள்... ஒரு சில படங்களில் கமல் செய்து இருக்கிறார்... நாயகனுக்கு பிறகு அவரும் அதை தவிர்த்து விட்டதாய் நினைக்கிறேன்... எனினும் சிவாஜி செய்த கதாபாத்திரங்கள் வலுவானவை... இன்றும் பிரமிக்கத் தக்கவை... இன்னும் சில படங்களை சொல்ல வேண்டுமெனில்... ரத்தத்திலகம்... ஒரு ராணுவ வீரன் தேசியக் கொடியை பறக்கவிட்டு அதன் காலடியில் மரணிக்கும் காட்சி... கண்களை நிறைக்கும்... பாபு ஒரு வயோதிக ரிக்ஷா தொழிலாளி.. தூக்குக் கயிற்றை புன்னகையோடு முத்தமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன்... அம்புகளை மார்பில் ஏந்தி மரணித்த கர்ணன்... நாடக மேடையிலேயே உயிர் துறந்த ராஜபார்ட் ரங்கதுரை ... இப்படி மறக்க முடியாத நினைவுகளை தந்து சென்ற கதாபாத்திரங்கள் இன்னும் வாழ்கிறது அல்லவா? அதுபோலவே கடவுள் நம்மவரை நம்மிடம் இருந்து "வெடுக்கென்று" பிடிங்கிக் கொண்டாலும் நம் இதயத்தில் குடிகொண்டு வாழ்கிறார் அல்லவா... ஒரு காந்தியைப் போல ஒரு காமராஜரைப் போல... அதுதானே நிரந்தர "வாழ்க்கை"...
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...12&oe=5B5F7B5A
courtesy jahir hussain f book
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...dc&oe=5B9746E3
courtesy vee yaar -nadigarthilagam fans f book
பிலிம்பேர் விருது ( ஒரு ரசிகனின் டைரி குறிப்பு)
1953 ஆம் ஆண்டிலிருந்து 1962 ஆம் ஆண்டுவரை பிலிம்பேர் விருதுகள் இந்திப் படங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தன.
1963 ஆம் ஆண்டிலிருந்துதான் தென்னிந்தியப் படங்களுக்கு வழங்கப்பட்டது
முதல் பிலிம்பேர் விருது பெற்ற தமிழ்ப் படம் நானும் ஒரு பெண்....
1965 -ல் மாபெரும் வெற்றிப்பெற்ற திருவிளையாடல் படமே நடிகர்திலகம் நடித்து பிலிம்பேர் விருது பெற்ற முதல் படமாகும்.
அதனைத் தொடர்ந்து,
1968 லட்சுமி கல்யாணம்
1970 எங்கிருந்தோ வந்தாள்
1971 பாபு
1972 பட்டிக்காடா பட்டணமா
1973 பாரதவிலாஸ் என்று நடிகர் திலகம் நடித்த ஆறு படங்களுக்கு பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர்களுக்கு அளிக்கப்படும் விருதுகள் 1972 ஆம் ஆண்டிலிருந்துதான் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்த்திரையில் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்ற முதல் நடிகர் நமது நடிகர் திலகமே. அது ஞானஒளி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக வழங்கப்பட்டது.
அதே ஆண்டு ஞானஒளி படத்தை இயக்கியதற்காக பி. மாதவனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருதும், பட்டிக்காடா பட்டணமா பத்தில் நடித்ததற்காக ஜெயலலிதாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டன.
1973 ல் மீண்டும் பாரதவிலாஸ் படத்தில் நடித்த நடிகர்திலகம் சிறந்த நடிகராகவும், அப்படத்தை இயக்கிய ஏ.சி.திருலோகச்சந்தர் சிறந்த இயக்குநராகவும், சூர்யகாந்தி படத்தில் நடித்த ஜெயலலிலிதா சிறந்த நடிகையாகவும் பிலிம்பேர் விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மீண்டும், மூன்றாம் முறையாக முதல் மரியாதை படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது நடிகர்திலகத்திற்கு வழங்கப்பட்டது.
எனது பழைய நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்த தகவல் இது. பிழையிருப்பின் குறிப்பிடுங்கள் தோழர்களே..!
(நன்றி : ஒவியம் - திரு.கௌசிகன்)
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...3b&oe=5B8A0ED9
courtesy vaannila f book
அன்பு...
பேரன்பு...
மாசற்ற அன்பு...
உண்மை அன்பு...
உன்னதமான அன்பு...
இவையெல்லாம் இசை வடிவம் கொண்டு நம்மை
நோக்கி வந்தால் எப்படி இருக்கும்?
இதோ... இந்தப் பாடல் போல இருக்கும்.
----------
நம் நாட்டின் குடிமக்கள் அனைவரும் அன்றைய தினங்களில், குறைந்தபட்சம் வாரத்திற்கு ஏழு முறையாவது பார்த்து மகிழ்ந்த ஒரு திரைப்படம்
உண்டு. " திரிசூலம்".
எங்கள் ஊரில் இந்தப் படம் ஓடிய போது, படம் வெளியான திரையரங்க வாசலை நான் நெருங்கவே வாரக் கணக்கிலானது.
தவிப்பும், பரவசமாய்ப் பார்த்த இப்படத்தின் முதல்
பாடலே இதுதான் என்பதாலோ என்னவோ.. இந்தப் பாடலின் மீது அநியாயத்துக்கு ஒரு ஈர்ப்பு.
----------
கல்யாணம் செய்து கொண்டு வாழ்வுக் களம் கண்டு விட்ட இரண்டு உயிர்களின் அபார மகிழ்வை இந்தப் பாடல் தன்னுள் அழகாகச் சுருட்டி
வைத்திருக்கிறது.
தான் அப்பனாகப் போகிற அளவற்ற சந்தோஷம்
நாயகனுக்கு என்றால், தனக்கு மற்றுமொரு அம்சமான இசைக் குழந்தை என்கிற சந்தோஷம்
நம் மெல்லிசை மாமன்னருக்கு.
--------
புன்னகை அரசி, நடிகர் திலகத்துடன் இணைந்த
காவியங்களெல்லாம் ஏன் ஜெயிக்கிறது என்பதற்கு இந்தப் பாடல் தெளிவாக விடை தருகிறது.
சும்மா " ஈ..ஈ " என்று பல்லைக் காட்டி சிரிப்பதால் புன்னகை அரசி ஆகி விட முடியாது.. யாராலும்.
அந்த அற்புதமான அள்ளிக் கொண்டு போகிற
புன்னகை... கொஞ்சல், கெஞ்சல், பெருமிதம், நாணம், பெருமகிழ்வு, மனநிறைவு என்று அத்தனை மனித உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வல்லமை கொண்டதாய் இருப்பது.. பெரு வியப்பு.
"கண்ணான மணவாளன் சேயாகிறான்.
கல்யாண மகராசி தாயாகிறாள்.
கட்டில் கொண்டால் அங்கு நான் பிள்ளையே..
தொட்டில் கண்டால் அங்கு என் பிள்ளையே.."
"என் பாட்டில் ஒரு ராகம் உண்டானது.
என் வீட்டின் எண்ணிக்கை மூன்றானது."
"மீன்கள் நாறும் சினிமாச் சந்தையில், விண்மீன்களை விற்ற பைத்தியம்" என்று கவிக்கோவால் வர்ணிக்கப்பட்ட கண்ணதாசர்,
தான் விதைத்த விண்மீன்களால் சந்தைகள் பரவிய இடங்களையெல்லாம் சாதனை வானமாக்கியதை யாரும் எழுதவில்லை.
----------
தொழில் தொடர்பான கருவிகளுடன் நூறு பேர்
சூழ்ந்து கொண்டு தன்னையே பார்க்க, இருநூறு
கண்கள் போதாதென்று காமிராவின் கண்ணும்
குறுகுறுவென்று பார்க்க, மனைவியாய் உடன் நடிக்கும் நடிகையைக் கொஞ்சிக் குழைந்து கொண்டாடும் கணவனாக, இன்னும் கொஞ்ச நாளில் ஒரு குழந்தைக்குத் தகப்பனாகப் போகிற
குஷியிலிருக்கிற கணவனாக... பளீரென்று மாறிப் போவது அய்யனால் மட்டுமே முடிகிற அதிரடி அதிசயம்.
" மங்கை எந்தன் ராஜாத்திக்கு நானே" என்று பாடும் போது தனக்கே தனக்கானவளை தாயாக்கிய பெருமிதம், நாளைய பிள்ளைக் கொஞ்சலுக்குக்கான ஒத்திகை போல் அந்த துள்ளி விளையாடல்கள்...
பாடலுக்கு வாயசைத்து நடிப்பது சாதாரண காரியமல்ல. சும்மா காட்சியை அழகாக நிரப்பி வென்று விட நினைக்கிற எண்ணற்ற நடிகர்களின்
அசட்டுத்தனங்களுக்கு, இந்தப் பாடலில் பாடங்கள்
இருக்கின்றன.
பேரன்பும், பரவசமுமாய் இரண்டு உயிர்கள் கலந்து, தமக்கென்று இன்னொரு உயிர் உருவாக்கும் பெருங் கனவு, நாட்கள் தாண்டி, வாரங்கள், மாதங்கள் கடந்து நனவாகும் ஒரு பொன்னாளில் அந்தக் கணவனின் மனோநிலை
எப்படி இருக்குமென்பதை அப்படியே நடித்துக்
காட்டியிருக்கிற நடிகர் திலகம்.. கண்களெனும் திரை முழுக்க வியாபிக்கிறார்.
"தன் கைகள் கொட்டட்டும்" என்று மனைவியைக்
குழந்தையாய்ப் பாவித்து, தன் கன்னத்தோடு அவள் கைகள் இணைக்கும்போது அய்யனின்
நடிப்பழகு ஆயிரம் முறை பார்த்தாலும் தீராது.
இந்தப் பாடல் மீதான என் காதல், கால காலத்துக்கும் மாறாது.
அப்படியே தன் நாயகியைச் சுழற்றி அரை வட்டமடித்துப் பாடும் போது, பின்னணியில் இன்றைய அய்யனின் வணங்குதலுக்குரிய அந்த தந்தம் வைத்த நினைவுச் சின்னம் அன்று வேறொரு விதமாய் காட்சிப்படுகிறது.
சட்டென்று கண்கள் பனிக்கிறது.
அய்யனின் அவதார தினங்களில், அதே இடத்தில்தான் அய்யனை வணங்கி நான் மலர் கொடுத்தேன்.
https://youtu.be/vMrEvt61Nek
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...6a&oe=5B4FCD1ECovai Royal theatre
பிரான்ஸ் அரசாங்கம் உலகம் முழுவதிலும் இருந்து சாதனையாளர்களுக்கு செவாலியர் விருது வழங்கி வருகிறது,
ஆனாலும் இந்நாள் வரையிலும் நடிகர் திலகம் அவ்விருதை பெரும் போது சென்னையில் கடலென திரண்ட ரசிகர்கள் கூட்டத்தைப் போல உலகின் எந்தப் பகுதியிலும் பார்த்திருக்க முடியாது! இனி அது போன்ற விழாவைக் காணவும் முடியாது!!
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...44&oe=5B5DA0E1https://scontent.fykz1-1.fna.fbcdn.n...4f&oe=5B50144A
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...3c&oe=5B98F395
courtesy sekar f book
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...57&oe=5B9276CC
courtesy vee yaar f book
ஹப்பி ஏபரல் 4 முதல் ஹப்பி
ஹப்பி தொடர் ஹப்பி.....
..............................
மேடையில் நடிகர் திலகமும் நடிகையர் திலகமும்..
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...2e&oe=5B91038D
courtesy abdul kadar abdul salam
makkal thilakam m g r திரியின் நெறியாளர் திரு ரவிச்சந்திரன் அவர்கட்கு வணக்கம்
தங்கள் திரியில் அண்மையில் சில பதிவாளர்களால் பதியப்பட்ட சில பதிவுகளுக்கு
பதில் ஏதும் எழுதாமல் காத்திருந்தேன் தங்களின் வரவுக்கும் எண்ணங்களுக்கும்
வந்தீர்கள் எண்ணமின்றி சென்றுவிட்டீர்கள் நன்றி நன்றி நன்றி
எந்தத்திரியிலும் உங்களுக்கு சம்மந்தமில்லாத விடயத்தை எழுதினாலும் அதற்கு
பதில்எழுதலாம் என்ற உங்கள் விட்டுக் கொடுப்புக்கு நன்றி காரணம்
உங்கள் திரியில் எங்கள் சம்மந்தப்பட்ட பல விடயங்கள் வந்தும்
நாங்கள் மௌனம் காத்தோம் அப்படி மௌனம் காக்கத் தேவையில்லை
நீங்களும் எழுதுங்கள் என சொல்லாமல் சொல்லியதற்கு நன்றி
நக்கீரன் பத்திரிகையில் வந்த கட்டுரை எங்கள் திரியில் பதிவிட்டிருந்தோம்
அதில் ராஜபார்ட் ரங்கதுரை படம் ஓடிய நாள் விபரம் பிழையாக குறிப்பிடப்பட்டிருந்தது
ஆனால் உங்குளுக்கு பாதகமான எந்த விடயமும் அதில் இல்லை
ஆனால் உங்கள் பக்கமிருந்து ஆட்சேபனை பதிவு
நாங்கள் நேர்மையாளர்கள் நீதியாளர்கள் உங்களைப்போல அல்ல
என்று எங்களை குறிப்பிட்டு பதிவிடப்பட்டது
ஆனாலும் அதற்கு எங்கள் பக்கமிருந்து எந்த எதிர் பதிவும் வெளியிடவில்லை
அண்மையில் நாடோடி மன்னன் படம்பற்றிய பத்திரிகை செய்தி
தங்கள் திரியில் பதிவிடப்பட்டிருந்தது அதில் தவறான விபரம் இருந்தது
நக்கீரன் பத்திரிகை பதிவுக்கு நீதி நேர்மை என எழுதியமையால்தான்
அதற்கு நீதி நேர்மை எங்கே என கேட்டிருந்தேன்
அதுவும் வேறு எதுவும் எழுதாமல் ஒற்றை வரியில்
ஆனால் இங்கே தொடர்கின்றார்கள் அந்த ஒற்றை வரியைவைத்து
ஆட்சேபனை இல்லை தொடர விடுங்கள்
உங்கள் நேர்மையான நெறியாளலுக்கு நன்றி
தொடரப்போகும் எழுத்துப்போருங்கு வழி அமைத்து தந்தமைக்கு நன்றி
நம் மன்றத்தைச் சேர்ந்தவர்.தீவிர ரசிகர்.இருதயநோயால் இளம் வயதில் இறந்துவிட்டார்.அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் .ஒரு ஆண் குழந்தை.அவருடைய குடும்பம் வருமானம் இன்றி வறுமையில் வாடியது.ரசிகர்மன்றத்தை சேர்ந்த சிலர் இளையதிலகத்தை வெளியூர் சூட்டிங்கில் நேரில்சந்தித்து அவருடைய இழப்பையும் அதனால் அந்த குடும்பத்தின் சிரமங்களையும் எடுத்துக் கூறிஉதவிசெய்யகோரினர்.
.இளையதிலகமும் அன்னை இல்லத்தில் வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார்.
அவர்களும் குறித்த தேதியில் அன்னை இல்லதிற்கு வந்தனர்.மூன்று குழந்த...ைகளுடன் தாயையும் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர் அழைத்து வந்துள்ளார்.
இளையதிலகம் அவசர சூட்டிங் காரணமாக சென்றிருந்தார்.அவர் வந்து விடுவார் என்று தகவல் கூறி அவர்களை காத்திருக்குமாறு ஊழியர்கள் கூறினர்.
அந்த நேரம் வந்த நடிகர்திலகம் அவர்களை பார்த்து விவரம் கேட்க அவர்கள் இளையதிலகத்தை பார்க்க வந்திருப்பதாக கூறினர்.குழந்தைகளை பார்த்து புன்னகையுடன் பேசி நலம் விசாரிக்கையிலே அவர்களின் முகங்களை பார்க்கிறார்.இயல்பான சந்தோசம் அந்த முகங்களில் எதுவும் தெரியாததை அவர் உணர்ந்து கொண்டார்.மேலும் பேசி விஷயத்தை தெரிந்துகொண்டார்.
உதவியாளரை அழைத்து அவர்களின் பெயர், விலாசம் குறிக்கச் சொல்லிவிட்டு,
அவர்களிடம் பிரபு அவசரமாக சூட்டிங் போயிருக்கான் போல, வெயிட் பண்ணுங்க. "என்று சொல்லிவிட்டு
பின் நடிகர்திலகம் சென்று விட்டார்.
இரண்டு மணி நேரத்திற்கு மேலானது.
மீண்டும் வருகிறார் நடிகர்திலகம்.கையில் ஏதோ பேப்பர்களை வைத்திருக்கிறார்.அவர்களை அழைக்கிறார்.
ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ரூபாய் ஐம்பதினாயிம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பத்திரங்களை ஒப்படைக்கிறார்.மொத்தம் ஒன்றரை லட்சம் . மாதந் தோறும் கிடைக்கும் வட்டியை வைத்து குடும்பம் நடத்துமாறும், குழந்தைகளை நன்றாக படிக்க வைக்குமாறும் அறிவுரைகள் கூறினார்.மேஜர் ஆகும் வரை பணவட்டியிலேயே குடும்பத்தை நடத்துமாறும் அதற்குண்டான அவசியங்களையும் எடுத்துக் கூறினார்.
பின் அழைத்து வந்த மன்றத்தலைவர் குடும்பத்தினரை பார்த்து இந்த விஷயம் இந்த விஷயம் இந்த வீட்டு வாசலோடு மறந்து விடுங்கள்.ஊரில் போய் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்க கூடாது சிறிது கண்டிப்புடன் கூறி அனுப்பி வைத்தார்.
இச்சம்பம் நடந்தது 1995 களில்.
நண்பர் பகிர்ந்த விஷயம்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...95&oe=5B96F9A0
courtesy senthilvel f book
பாத்திரம் அறிந்து கொடை கொடுத்த வள்ளல். . கொடுத்த பணத்தை செலவழித்தபின் மீண்டும் அவர்கள் வறுமை கோட்டுக்கு செல்லாமல் இருக்க சிறப்பான ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.நடிகர் திலகம் விட்ட பிழை தான் செய்த உதவியை ஊர் அறிய செய்யவிடாமல் தடுத்ததுதான்.
.................................................. ..............................................
இது போன்ற நிகழ்வுகளை யாரிடமும் சொல்லக் கூடாது என்பது அன்னை இல்லத்து அன்புக் கட்டளை. இது பற்றி ஏற்கனவே விசிறிகள் குழுவில் பல தடவைகள் பதிவிட்டுள்ளேன்.
கொடுத்த கர்ணனும் சொன்னதில்லை வாங்கிய குசேலர்களும் சொன்னதில்லை. இந்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது. நாளையும் தொடரும். யார் என்ன சொன்னால் என்ன. மனசாட்சி உள்ள மனிதர்களுக்கு தெரியும். அவன் தான் மனிதன் என்று.
.................................................. .................................................. ..
தமிழகமெங்கும்
தொடர்ந்து சாதனை படைத்து வரும் மக்கள்தலைவரின் மகத்தான காவியம்
பாவமன்னிப்பு நாளை முதல் திண்டுக்கல்
சரித்திரம் படைக்க வருகிறது.
... நல்ல படங்களை பார்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு மதநல்லிணக்கத்தை உணர்த்தும் பாவமன்னிப்பு வரபிரசாதமாக இருக்கும்.
திண்டுக்கல் நகரைச் சார்ந்த அன்பு இதயங்களே,
பாவமன்னிப்பு திரைப்படத்திற்கு
மாபெரும் வரவேற்பை தந்து,
கலையுலகின் சாதனைத்திலகம்
நடிகர்திலகம் தான் என்பதை உணர்த்துவோம்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...3d&oe=5B8B05EC
courtesy net
நடிகர் திலகம்... நட்புக்கும் திலகமானவர்... தமிழ் சினிமாவின் சக்கரவர்த்தி ஆயினும் அவரது நட்பின் எல்லை பரந்து விரிந்த ஒன்று... அவரது சாம்ராஜ்யத்தில் அடங்காத குறுநில மன்னர்களே இல்லை எனலாம்... என் வீடு பெரியது உன் வீடு பெரியது என்று கட்டிடங்களின் உயரங்களுக்கு வேண்டுமானால் அளவுகோல் உண்டு... ஆனால் அதையும் தாண்டிச் சென்றால் வானமே எல்லை... நம்மவரின் நட்பும்... புகழும் அத்தனை உயரமானது... உயர்வானதும் கூட.. தமிழ்த் திரையுலகை தாண்டியும் அவரது நட்பு வட்டம் ஆழஅகல விரிந்த ஒன்று... கேரள சினிமாவை எடுத்துக் கொள்ளுங்கள்... நஸீர் முதல் லால் வரை... சத்தியன் முதல் திலகன் வரை நம்மவரைக் கண்டு வியக்காத கலைஞர்கள் ஒருவரும் இல்லை... தெலுங்குப் படவுலகை எடுத்துக் கொண்டால் நாகேஸ்வரராவ் முதல் ராமராவ் வரை... போற்றிப் புகழாத நெஞ்சமில்லை... கன்னடப்படவுலகின் ராஜ்குமார்... ஹிந்தித்திரையுலகின் சுனில்தத் முதல் ராஜ்கபூர் வரை நம்மவரைக்கண்டு வியந்து போய் நின்று இருக்கிறார்கள்... கடல்கடந்தாலும் நம்மவரின் புகழ் ஓங்குதாங்கி ஒலித்துக் கொண்டு இருப்பதில் மாற்றம் இல்லை... சாம்பிளுக்கு சில... தெலுங்கு திரை சாம்ராஜ்யத்தின் மன்னர் நாகேஸ்வரராவ் உடனான நட்பு அலாதியானது... "டே நாகேஸ்".. என்று உரிமையோடும் அன்போடும் நம்மவரால் அழைக்கப்படுபவர் நாகேஸ்வரராவ்.. தேவதாஸ் படம் மூலம் தமிழகத்திற்கு மிக பரிட்சயமானவர்.. வி.பி.ராஜேந்திர பிரஸாத் (இன்றைய சினிமாக்களின் மெய்ன் வில்லன் ஜெகபதி பாபு வின் தகப்பனார்).. என்பவர் தெலுங்கு படவுலகின் மாபெரும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்... நம்ம பாலாஜி எப்படி நடிகர் திலத்தின் ஆஸ்தான தயாரிப்பாளரோ அதுபோல தெலுங்கில் நாகேஸ்வரராவின் ஆஸ்தான தயாரிப்பாளர்... அவர் மாபெரும் கமர்ஷியல் ஹிட் பட தயாரிப்பாளர்.. தமிழில் அவர் தயாரித்து இயக்கிய படங்கள் மூன்றே மூன்றுதான்... மூன்றும் நம்மவரின் சினிமாக்களே... தன்னுடைய ஜெகபதி ஆர்ட்ஸ் மூலமாக எங்கள் தங்க ராஜா, உத்தமன், பட்டாக்கத்தி பைரவன் படங்களை உருவாக்கி கோடி கோடியாக தமிழகத்து ரூபாய் நோட்டுகளை கொள்ளை கொண்டு சென்றவர்... ஆம் மூன்று படங்களுமே நல்ல வசூலை அள்ளிக் குவித்தது... இன்னும் ஒரு பத்து படங்கள் நம்மவரைக் கொண்டு உருவாக்கி இன்னும் பெரிய கமெர்ஷியல் ஹீரோவாக நம்மவரை பயன்படுத்தி இருக்கலாமே... என்ற ஆதங்கம் சராசரி ரசிகனான என்னைப்போன்ற பல பிள்ளைகளுக்கு இருக்கத்தான் செய்கிறது...
"கடகடால ருத்ரைய்யா"... தெலுங்குப் படத்தின் தமிழ் வடிவம்தான் "பட்டாக்கத்தி பைரவன்"... மஹாபாரத கர்ணனை நிகழ்காலத்தில் பொருத்திப் பார்க்க முயற்சித்த படம்... அதன் பின்னாளில்தான் மணிரத்னம் கூட அதே இன்ஸ்ப்ரேஷனுடன் தளபதி என்ற படத்தை எடுத்தார்... தெலுங்கில் கிருஷ்ணமராஜூ நவீன கர்ணன் வேடம் பூண்டவர்... இந்தப் படமும் கமர்ஷியலாக நல்ல வசூலை தந்தது... நடிகர் திலகத்தின் சகோதரர் வி.சி.சண்முகம் அவர்களை மதுரை திருநெல்வேலி ஏரியா விநியோக உரிமை வாங்கச் சொல்லி வற்புறுத்தி நல்ல வசூலை பெற்றுத்தர யோசனை சொன்னவர் வசன ஆசிரியர் ஆரூர்தாஸ்.. இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.. இளையராஜா இசையில் நமமவருக்கு அமையப் பெற்ற சூப்பர்ஹிட் மெலோடி பாடல்கள் ஏராளம்.. அதில் இந்தப் படத்தில் இடம் பெற்ற "எங்கெங்கோ செல்லும்" என்கிற பாடல் குறிப்பிடத்தக்கது... மன்மோகன் தேசாய்... ஹிந்தி சினிமாவில் புகழ் பெற்ற இயக்குநர்.. பின்னாட்களில் அமிதாப் பச்சனை வைத்து பல ஹிட்ஸ் கொடுத்தவர்... சசிகபூர்- ஷர்மிளா டாகூரை வைத்து ஹிட்டடித்த "ஆ கலே லாக் ஜா"... படம்தான் தமிழில் உத்தமன்... நம்மவரின் சூப்பர் ஹிட் மூவி... பின்னாட்களில் "நான் அடிமை இல்லை" என்றும் வந்தது... இந்த உத்தமன் படம் குடும்பம், லவ் சென்டிமென்ட் என்று பல கோணங்களில் ரசிகர்களைக் கடந்தும் பார்வையாளர்களை கவர்ந்தது.. இன்றும் நினைவில் நிலைத்த பாடல்கள்.. இந்தப் படத்தின் அதிசயம்.. இதற்கும் முன்பாக வெளிவந்த படம் "எங்கள் தங்க ராஜா"... ஹியூஜ் ஹிட்ன்னு சொல்வார்களே... அந்த மாதிரி ஒரு வெற்றிப்படம்... வித்தியாசமான கோணத்தில் நம்மவரை பயன்படுத்தி எடுக்கப்பட்ட படம்.. ஒற்றை மனிதர் இரட்டை நடிப்பு என்று இருவேறு கதாபாத்திரங்களுக்கும் செம்ம வித்தியாசத்தை காண்பித்து புதிய பரிமாண நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருப்பார் நம்மவர்...கடைசி வரை இரட்டை வேடம் என்று நம்ப வைப்பதுபோல அமைக்கப்பெற்ற திரைக்கதை 1973ல் புதிய அணுகுமுறை... திரையிசைத் திலகம் பாடல்களில் பட்டையை கிளப்பி இருப்பார்... குறிப்பாக "கோடியில் ஒருவன்" பாடல்.. நம்மவரை கோடியில் ஒருவராக பரிமளிக்க வைத்தது உண்மை.. இம் மூன்று படங்களையும் வெறும் மசாலா தடவிய படங்கள் என்று தள்ளிவிட முடியாது.. கதையம்சமும் நடிப்பாற்றலும் ஒருங்கே அமைந்து சிவாஜி சினிமாக்களுக்கு ஒரு புதிய வழித்தடம் அமைத்துக் கொடுத்தது என்பதில் வேறு கருத்துகள் இல்லை... வசந்த மாளிகை போன்ற பெரு வெற்றி பெற்ற படங்களையும் நம்மவருக்கு பிரஸன்ட் பண்ணியவர்களும் தெலுங்கு தேசத்து நட்புகளே... அதனால்தான் பங்காரு பாபு, சந்திரகுப்த சாணக்யா உள்ளிட்ட பல தெலுங்கு சினிமாக்களில் சிறப்புத் தோற்றம் கொண்டு இருக்கிறார்... எல்லாம் நட்புக்காக... தெலுங்கு படங்களில் கொஞ்சம் உப்பு,புளி, காரம் தூக்கலாக இருக்கும்... கன்னட சினிமாக்களில் ஊறவெச்ச ஊறுகாய்கூட சப்பென்று இருக்கும்.. மலையாள சினிமாக்களோ இயல்புநிலை மாறாமல் யதார்த்த வரம்புகளோடு பதமாக குருமா வைப்பார்கள்... நம் தமிழ் சினிமாவோ "எல்லாம் கலந்தது".. எனக்குள் உள்ள நடிப்பில் உனக்கு என்ன வேண்டுமோ சொல்லிவிடு... நான் தருகிறேன்.. இதுதான் நம்மவரின் ஸ்டேட்மென்ட்... ஸோ எந்த மொழி படங்களுக்கும் சரியாக தன்னை பொருத்திக் கொள்வார்... அதுவே அவரது சிறப்பு... அவரே நமக்கு கிடைக்கப் பெற்ற வரப்ரசாதம்...
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...b5&oe=5B9723B8
courtesy Jahi husain f book
வணக்கம் தோழர்களே!
இன்று முதல் இப்புதிய பகுதி ஆரம்பம்.
நடிகர்திலகம் நடித்து, சென்னை மாநகரில்
நூறு நாட்களைக் கடந்த வெற்றிப் படங்களின் பட்டியலை,அரங்குகளின் பெயரோடு இங்கே பதிவிடுகிறேன்...
இது 99.9% நம்பத் தகுந்தவை....
சென்னையில் ஓடாமல், பிற ஊர்களிலும், இலங்கையிலும் நூறு நாட்களைக் கடந்த வெற்றிப் பட்டியல் பின்ணிணைப்பாக இறுதியாக வரும்.
( நன்றி : பம்மல் திரு.சுவாமிநாதன் )
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...8a&oe=5B9D0E31
courtesy vaannila f book
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...b2&oe=5B9C46C6
courtesy n. thilagam fans( V .Rajkumar f book)
மதுரையில் நடைபெற்ற இசை விழா
"சிவாஜிக்கு மரியாதை" என்ற தலைப்பில் நடிகர்திலகம் சிவாஜி புகழ் பாடும் இசை விழா 13 -05 -2018 , ஞாயிறு மாலையில் மதுரை காந்தி மியூசியம...் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது.
நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை மற்றும் நக்கீரர் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய இந்த இசை விழாவிற்காக போடப்பட்டிருந்த 2000 இருக்கைகளும் நிரம்பி வழிந்தது. ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் குடும்பத்தோடு வந்திருந்து ரசித்தனர். முகநூல் மற்றும் WhatsApp மூலமும் தகவல் தெரிந்து பல்வேறு ஊர்களிலிருந்து நம் ரசிகர்கள் வந்திருந்தனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு திறந்தவெளி அரங்கில் நடிகர்திலகத்தின் நிகழ்ச்சி மதுரையில் சிறப்பாக நடந்தேறியது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது.
இனி இதே பாணியில் நடிகர்திலகம் புகழ் பாடும் இசைவிழாக்களை வெவ்வேறு நகரங்களில் நடத்திட வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.
நன்றி.
K .சந்திரசேகரன்
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...4d&oe=5B971E61
courtesy sivaji peravai f book