-
9th May 2018, 08:59 PM
#11
Senior Member
Devoted Hubber
நம் மன்றத்தைச் சேர்ந்தவர்.தீவிர ரசிகர்.இருதயநோயால் இளம் வயதில் இறந்துவிட்டார்.அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் .ஒரு ஆண் குழந்தை.அவருடைய குடும்பம் வருமானம் இன்றி வறுமையில் வாடியது.ரசிகர்மன்றத்தை சேர்ந்த சிலர் இளையதிலகத்தை வெளியூர் சூட்டிங்கில் நேரில்சந்தித்து அவருடைய இழப்பையும் அதனால் அந்த குடும்பத்தின் சிரமங்களையும் எடுத்துக் கூறிஉதவிசெய்யகோரினர்.
.இளையதிலகமும் அன்னை இல்லத்தில் வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார்.
அவர்களும் குறித்த தேதியில் அன்னை இல்லதிற்கு வந்தனர்.மூன்று குழந்த...ைகளுடன் தாயையும் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர் அழைத்து வந்துள்ளார்.
இளையதிலகம் அவசர சூட்டிங் காரணமாக சென்றிருந்தார்.அவர் வந்து விடுவார் என்று தகவல் கூறி அவர்களை காத்திருக்குமாறு ஊழியர்கள் கூறினர்.
அந்த நேரம் வந்த நடிகர்திலகம் அவர்களை பார்த்து விவரம் கேட்க அவர்கள் இளையதிலகத்தை பார்க்க வந்திருப்பதாக கூறினர்.குழந்தைகளை பார்த்து புன்னகையுடன் பேசி நலம் விசாரிக்கையிலே அவர்களின் முகங்களை பார்க்கிறார்.இயல்பான சந்தோசம் அந்த முகங்களில் எதுவும் தெரியாததை அவர் உணர்ந்து கொண்டார்.மேலும் பேசி விஷயத்தை தெரிந்துகொண்டார்.
உதவியாளரை அழைத்து அவர்களின் பெயர், விலாசம் குறிக்கச் சொல்லிவிட்டு,
அவர்களிடம் பிரபு அவசரமாக சூட்டிங் போயிருக்கான் போல, வெயிட் பண்ணுங்க. "என்று சொல்லிவிட்டு
பின் நடிகர்திலகம் சென்று விட்டார்.
இரண்டு மணி நேரத்திற்கு மேலானது.
மீண்டும் வருகிறார் நடிகர்திலகம்.கையில் ஏதோ பேப்பர்களை வைத்திருக்கிறார்.அவர்களை அழைக்கிறார்.
ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ரூபாய் ஐம்பதினாயிம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பத்திரங்களை ஒப்படைக்கிறார்.மொத்தம் ஒன்றரை லட்சம் . மாதந் தோறும் கிடைக்கும் வட்டியை வைத்து குடும்பம் நடத்துமாறும், குழந்தைகளை நன்றாக படிக்க வைக்குமாறும் அறிவுரைகள் கூறினார்.மேஜர் ஆகும் வரை பணவட்டியிலேயே குடும்பத்தை நடத்துமாறும் அதற்குண்டான அவசியங்களையும் எடுத்துக் கூறினார்.
பின் அழைத்து வந்த மன்றத்தலைவர் குடும்பத்தினரை பார்த்து இந்த விஷயம் இந்த விஷயம் இந்த வீட்டு வாசலோடு மறந்து விடுங்கள்.ஊரில் போய் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்க கூடாது சிறிது கண்டிப்புடன் கூறி அனுப்பி வைத்தார்.
இச்சம்பம் நடந்தது 1995 களில்.
நண்பர் பகிர்ந்த விஷயம்.

courtesy senthilvel f book
பாத்திரம் அறிந்து கொடை கொடுத்த வள்ளல். . கொடுத்த பணத்தை செலவழித்தபின் மீண்டும் அவர்கள் வறுமை கோட்டுக்கு செல்லாமல் இருக்க சிறப்பான ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.நடிகர் திலகம் விட்ட பிழை தான் செய்த உதவியை ஊர் அறிய செய்யவிடாமல் தடுத்ததுதான்.
.................................................. ..............................................
இது போன்ற நிகழ்வுகளை யாரிடமும் சொல்லக் கூடாது என்பது அன்னை இல்லத்து அன்புக் கட்டளை. இது பற்றி ஏற்கனவே விசிறிகள் குழுவில் பல தடவைகள் பதிவிட்டுள்ளேன்.
கொடுத்த கர்ணனும் சொன்னதில்லை வாங்கிய குசேலர்களும் சொன்னதில்லை. இந்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது. நாளையும் தொடரும். யார் என்ன சொன்னால் என்ன. மனசாட்சி உள்ள மனிதர்களுக்கு தெரியும். அவன் தான் மனிதன் என்று.
.................................................. .................................................. ..
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
9th May 2018 08:59 PM
# ADS
Circuit advertisement
Bookmarks