பொன்மனச்செம்மல் நடித்த 32வது திரைப்படமாகிய "மலைக்கள்ளன்" படத்தினைப் பற்றிய தகவல் :
1. படம் வெளியான தேதி : 22-07-1954
2. படத்தை தயாரித்து வெளியிட்ட நிறுவனம் : பக்ஷிராஜா
3. கதாநாயகன் : நமது மக்கள் திலகம்
4. மக்கள் திலகத்தின் கதா பாத்திரம் : "மலைக்கள்ளன்", குமாரவீரன், அப்துல் ரஹீம்
5. கதா நாயகி : நடிகை பி. பானுமதி
6. பாடல்கள் : கவிமணி தேசிகவி விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர், பாலசுப்ரமணியன், , ராமையாதாஸ், மக்களன்பன்
7. இசை அமைப்பு : எஸ். எம். சுப்பையா நாயுடு
8. தயாரிப்பாளர் - இயக்குனர் : எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு
9. வசனம் : மு. கருணா நிதி.
10. படத்தில் பங்கு பெற்ற இதர கலைஞர்கள் : ஸ்ரீராம், டி.எஸ். துரைராஜ், எம். ஜி. சக்கரபாணி, டி. பாலசுப்ரமணியன், இ. ஆர். சகாதேவன், எஸ். எம். சுப்பையா, பி. எஸ். ஞானம், சுரபி பாலசரஸ்வதி, சந்தியா சாந்தா, சாயி, சுப்புலக்ஷ்மி மற்றும் பலர்.
http://i43.tinypic.com/2v86c6h.jpg
குறிப்பு :
1. நாமக்கல் கவிஞர் கதையில் உருவான திரைப்படம்.
2. ஆறு மொழிகளில் தயாரான படம்.
3. ஜனாதிபதியின் வெள்ளிப் பதக்கம் பெற்ற முதல் தமிழ் படம்.
4. இப்படத்தில் நமது பொன்மனச்செம்மல் 3 கதா பாத்திரங்களில் தோன்றி மகிழ்விப்பார்.
5. சென்னை காசினோ, பிரபாத், சரஸ்வதி, மதுரை தங்கம், திருச்சி வெல்லிங்டன்,
சேலம் ஓரியண்டல், கோவை கர்னாடிக், நெல்லை ரத்னா, வேலூர் - தினகரன்,
இலங்கை யாழ் நகர் - சென்ட்ரல் மற்றும் பெங்களூர் - லட்சுமி ஆகிய
அரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு
புதிய சாதனை படைத்தது.
6. மக்களன்பன் என்ற ஒரு புதிய பாடலாசிரியர் நம் மக்கள் திலகம் படத்துக்கு பாடல் எழுதியுள்ளார் என்பது கவனிக்கத் தக்கது.
இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
"