Page 58 of 67 FirstFirst ... 8485657585960 ... LastLast
Results 571 to 580 of 666

Thread: Ponmanachemmal m.g.r. Filmography news & events

  1. #571
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like


    Clear ad for Jenovah.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #572
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    MGR Image from Jenovah


  4. #573
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Another image.


  5. #574
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  6. #575
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    ஜெனோவா திரைப்படம் இன்றைக்கும் பார்த்து மகிழலாம். வெளியீடு மாடர்ன் சினிமா டிவிடி வடிவில்.
    Last edited by jaisankar68; 5th August 2013 at 01:01 AM.

  7. #576
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனச்செம்மல் நடித்த 31வது திரைப்படமாகிய "ஜெனோவா" படத்தின் கதைச்சுருக்கம் :


    பிரபந்த தேசத்து இளவரசி ஜெனோவா தன் தோழிகளுடன் கோச்சு வண்டியில் உல்லாசமாகப் பாடிக்கொண்டு போகிறாள். அச்சமயம், குதிரைகள் கட்டுக்கடங்காமல் போய் விடவே, அவர்களுக்குப் பின் வந்து கொண்டிருந்த ஆர்தீன தேசத்து அரசன் சிப்ரஸோ குதிரைகளை நிறுத்தி இளவரசியையும், அவளது தோழிகளையும் காப்பாற்றுகிறான்.

    தன் நன்றிக்கு அறிகுறியாக இளவரசி ஒரு மாலையை பரிசளிக்க, அரசன் தன்னை இன்னாரென்று தெரிவிக்காமல் தனக்கு பரிசு வேண்டாமெனச் சொல்லுகிறான். இளவரசி மறுபடியும் அவனை நிர்ப்பந்திக்க, சிப்ரஸோ அப்பரிசை வாங்கிக் கொண்டு தன் மந்திரி கோலோவுடனும், தன் பரிவாரங்களுடனும் கலந்து கொள்கிறான்.

    ஆர்தீன தேசத்து மந்திரி கோலோ, அரசர் பிரபானந்தரை அவரது அரண்மனையில் சந்தித்து, சிப்ரஸோ மகாராஜா, மறுநாள் வருவதாகத் தெரிவிக்கிறான். அங்கிருந்து, புது மாளிகைக்கு செல்லும் வழியில் இளவரசி ஜெனோவவை கோலோ சந்தித்து அவள் பேரில் காதல் கொள்கிறான்.

    மறுநாள், அரசர் சிப்ரஸோவுக்கும், இளவரசி ஜெனோவாவுக்கும் திருமணம் நடக்கிறது. அதன்பின் அவர்கள் பரிவாரங்கள் புடை சூழ ஆர்தீன தேசத்தை அடைகின்றனர். தளபதி அன்னாஸ், அரசனையும், அரசியையும் வரவேற்கிறான்.

    சிப்ரஸோ வும், ஜெனோவாவும் சதுரங்கம் விளையாடும் சமயத்தில், அரண்மனைச் சேவகன் கிராதூஸின் உயர்ந்த குணத்தை பற்றி பேசுகின்றனர். மூர் நாட்டு மன்னன் ஆர்தீன தேசத்து மக்களுக்கு துன்பம் கொடுப்பதை நிறுத்த சிப்ரஸோ தன் மனைவி ஜெனோவாவை, மந்திரி கோலோ, தளபதி அன்னாஸ், அரண்மனைச் சேவகன் கிராதூஸ் முதலியோரின் கவனிப்பில் விட்டு போருக்குச் செல்கிறான். தான் கருவுற்றிருப்பதைத் தன் கணவனிடம் சொல்ல வில்லையே என ஜெனோவா வருத்தப்படுகிறாள்.

    மன்னன் சிப்ரஸோ போரில் ஈடுபட்டிருக்கும் சமயம், ஜெனோவாவை அடைய கோலோ முயல்கிறான். தன் எண்ணம் பலிக்காததால் அரண்மனைச் சேவகன் கிராதூஸுடன் ராணி கள்ள நட்பு கொண்டதாக ஒரு பொய்க் குற்றத்தை சாட்டி அரண்மனைச் சேவகன் கிராதூஸையும், ஜெனோவாவையும் சிறையில் அடைக்கிறான்.

    பகைவர்களை ஜெயித்து வெற்றியுடன் தன் நகர் திரும்பி வரும் சிப்ரஸோ மகாராஜாவை மந்திரி கோலோவும் தளபதி அன்னாஸும் வரவேற்கின்றனர். சிறையிலிருக்கும் ராணியும், அரண்மனைச் சேவகன் கிராதூஸும், தங்கள் துன்பங்கள் தீருமென்று எண்ணுகின்றனர்.

    ஜெனோவாவை காணாத அரசன் சிப்ரஸோ கோலோவிடம், "அரசி எங்கே" என்று கேட்கிறான். அதற்கு கோலோ, அரசி - கிராதூஸ் கள்ள நட்பையும், அதனால் ராணிக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்றும் அதற்கு அடையாளமாக அரசியின் முத்திரை மோதிரத்தையும் காண்பிக்கிறான். இது உண்மையாக இருக்குமா என்ற மனக் குழப்பத்துடன் அரசன் சிறைக்கு செல்ல, அங்கே அரசன் சிப்ரஸோ ஜெனோவாவையும், அவள் குழந்தையையும் பார்க்கிறான். ஜெனோவா ஆசையுடன் அரசனை அணுகுகிறாள். வெறுப்பும், கோபமும் கொண்ட அரசன் ஜெனோவாவைத் தள்ளி, கிராதூஸுக்கு மரண தண்டனையையும், ஜெனோவாவையும், குழந்தையையும், துஷ்ட மிருகங்கள் சஞ்ஜரிக்கும் காட்டிலிட்டு வர தன் சிப்பாய்களுக்கு உத்தரவிடுகிறான்.

    மழையிலும்,.வெய்யிலிலும் அவதிப்பட்டு, அன்ன ஆகாரமின்றி, தன் குழந்தையுடன் கஷ்டப்படும் ஜெனோவாவிற்கு தேவமாதாவின் அருள் கிடைத்து ஒரு குகையில் வாழ்கிறாள்.

    கோலோவும், அன்னாஸும் சதி செய்து, களங்கமற்ற அரசனைக் கைது செய்து, சபையை கூட்டி, அரசனுக்கு பைத்தியம் என்று ஜனங்களை நம்ப வைத்து, அரசன் சிப்ரஸோவை காவலில் வைக்கின்றனர். இச்சங்கதியை அறிந்த ரோஸி, சூழ்ச்சியால் அரசனை தப்புவிக்கிறாள்.


    அரசன் சிறையிருந்து தப்பிய செய்தியை ஞானம் மூலம் அறிந்த அன்னாஸ், கோலோவைப் பார்க்க புறப்படுகிறான். ரோஸி அதைத் தடுத்து, அரசனுக்கு துரோகம் செய்யக் கூடாதென்று சொல்ல, வாக்குவாதம் வலுக்கிறது. கோபமடைந்த அன்னாஸ், ரோஸியை கொன்று விடுகிறான். அரண்மனையில், கோலோவுக்கும், அரசனுக்கும் கத்தி சண்டை நடக்கிறது. அன்னாஸ், அரசனைக் கொல்ல வரும் சமயம், ஆரோக்கியம் அன்னாசைக் கொன்று விடுகிறான். சண்டையில், காயமுற்ற கோலோ தப்பி ஓடுகிறான்.

    அரண்மனையில் அரசன் மன நிம்மதியில்லாமல் அரண்மனையை விட்டுப் போய் விடுகிறான்.

    காட்டில், ஒரு அருவியினருகில் கோலோவுக்கும், சிப்ரஸோவுக்கும், சண்டை நடக்கிறது. அதில், சிப்ரஸோ, கோலோவை கொன்று விடுகிறான். மிக்க களைப்புடன், கரையை அடைந்த அரசனை ஒரு சிறுவன் அழைத்துச் செல்கிறான். ஜெனோவா தன் மகனைக் காணாது தேடி வரும் சமயத்தில் சிப்ரஸோவும், ஜெனோவாவும் ஒருவரையொருவர் சந்திக்கின்றனர்.


    --- பிரிந்தவர் கூடினால் பேசவும் இயலுமோ ......


    முற்றிற்று



    அன்பன் : சௌ. செல்வக்குமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

  8. #577
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனச்செம்மல் நடித்த 31வது திரைப்படமாகிய "ஜெனோவா" படத்தில் இடம் பெற்ற பாடல்களின் முதலிரண்டு வரிகள் மட்டும்.

    1. குழுப் பாடல் : லல்ல லால்லா லல்லலல்லா புது மலர்
    வனந்தனைப் பாராய் இளந்தென்றல் உலாவுது நேராய்

    2. தனித்த பெண் குரலில் பாடல் : புதிதான குதுகூலம் தானே நினைவில் வந்தே .. கொஞ்சி
    கொஞ்சி விளையாடல் ஏனோ .. புதுமையில் மலருதே

    3. காதல் ஜோடிப்பாடல் : கண்ணுக்குள் மின்னல் காட்டும் தெய்வ காதல் ஜோதியா
    சிலை போல மௌனம் நீயே - செய்வதேனோ மானே !


    4. காதல் ஜோடிப்பாடல் : நாமே ஜீவ சுகம் உல்லாசம் தேடும் நேரமே
    போற்றிடு கவி போலவே புதுமை தரும் காதல் லோகமே

    5. காதல் ஜோடிப்பாடல் : ஆசையே அலை மோதுதே கசப்பாகுதே மநேமே தினமே
    தேடியே மனம் ஓடுதே அன்பே என் ஆருயிரே !

    6. தனித்த பெண் குரலில் பாடல் : துணை நீயே ... தேவத் தாயே ! அகில லோக ஜோதி நீயே
    கன்னி மரியே தாயே நீயே !



    7. தனித்த பெண் குரலில் பாடல் : காதல் வாழ்வில் கனியான கதிரே ! கண்ணான கண்ணே !
    கருமாமணியே ... ஆசையெல்லாம் வீணானதே !


    8. நடனப்பாடல் : பம் பம் பம் பம் சிலம்பம் ! பம் பம் பம் பம் சிலம்பம்
    எண்ணாமலே கண்ணே என்று சும்மா சொல்லாதே

    9. பெண் தனித்துப் பாடும் சோகப் பாடல் : பரிதபமில்லையா பரலோகமாதா பரதேசியானோம்
    பாரிலே .... முறையாகுமா இனியேது செய்வோம்

    10. பெண் தனித்துப் பாடும் சோகப் பாடல் தாயே ... ஜீவ ஜோதியே..... ஜெகமதில் எம் பாக்கியமே !
    பாத சேவை பாபம் நீங்கும் ...பாரிலெங்கும் ஞான தீபம்

    11. தனித்த பெண் குரல் பாடல் : ஆனந்தம் ஆனந்தம் காணேணே ஆதியே ... ஏ ஆதாரம் நின் மா ஜோதியே ...ஏ வானொடும்



    12. தனித்த ஆண் குரல் பாடல் : செய்த பாபத்தினலே நான் படும் வேதனை போதாதோ ! வெய்யிலிலே புழு போல ஆக முறையோ !


    ================================================== =================================


    அன்பன் : சௌ.செல்வ குமார்


    என்றும் எம். ஜி. ஆர்.

    எங்கள் இறைவன்
    !
    Last edited by makkal thilagam mgr; 12th August 2013 at 06:11 PM.

  9. #578
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனச்செம்மல் நடித்த 32வது திரைப்படமாகிய "மலைக்கள்ளன்" படத்தினைப் பற்றிய தகவல் :


    1. படம் வெளியான தேதி : 22-07-1954

    2. படத்தை தயாரித்து வெளியிட்ட நிறுவனம் : பக்ஷிராஜா
    3. கதாநாயகன் : நமது மக்கள் திலகம்
    4. மக்கள் திலகத்தின் கதா பாத்திரம் : "மலைக்கள்ளன்", குமாரவீரன், அப்துல் ரஹீம்
    5. கதா நாயகி : நடிகை பி. பானுமதி
    6. பாடல்கள் : கவிமணி தேசிகவி விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர், பாலசுப்ரமணியன், , ராமையாதாஸ், மக்களன்பன்
    7. இசை அமைப்பு : எஸ். எம். சுப்பையா நாயுடு

    8. தயாரிப்பாளர் - இயக்குனர் : எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு
    9. வசனம் : மு. கருணா நிதி.
    10. படத்தில் பங்கு பெற்ற இதர கலைஞர்கள் : ஸ்ரீராம், டி.எஸ். துரைராஜ், எம். ஜி. சக்கரபாணி, டி. பாலசுப்ரமணியன், இ. ஆர். சகாதேவன், எஸ். எம். சுப்பையா, பி. எஸ். ஞானம், சுரபி பாலசரஸ்வதி, சந்தியா சாந்தா, சாயி, சுப்புலக்ஷ்மி மற்றும் பலர்
    .




    குறிப்பு :

    1. நாமக்கல் கவிஞர் கதையில் உருவான திரைப்படம்.

    2. ஆறு மொழிகளில் தயாரான படம்.

    3. ஜனாதிபதியின் வெள்ளிப் பதக்கம் பெற்ற முதல் தமிழ் படம்.

    4. இப்படத்தில் நமது பொன்மனச்செம்மல் 3 கதா பாத்திரங்களில் தோன்றி மகிழ்விப்பார்.

    5. சென்னை காசினோ, பிரபாத், சரஸ்வதி, மதுரை தங்கம், திருச்சி வெல்லிங்டன்,
    சேலம் ஓரியண்டல், கோவை கர்னாடிக், நெல்லை ரத்னா, வேலூர் - தினகரன்,
    இலங்கை யாழ் நகர் - சென்ட்ரல் மற்றும் பெங்களூர் - லட்சுமி ஆகிய
    அரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு
    புதிய சாதனை படைத்தது.

    6. மக்களன்பன் என்ற ஒரு புதிய பாடலாசிரியர் நம் மக்கள் திலகம் படத்துக்கு பாடல் எழுதியுள்ளார் என்பது கவனிக்கத் தக்கது.



    இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

    "
    Last edited by makkal thilagam mgr; 12th August 2013 at 06:53 PM.

  10. #579
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like



  11. #580
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    1954_ம் ஆண்டு ஜுலை 22_ந்தேதி வெளிவந்த படம் "மலைக்கள்ளன்", எம்.ஜி.ஆரை "சூப்பர் ஸ்டார்" அந்தஸ்துக்கு உயர்த்தியது. இந்தப்படம், கோவை பட்சிராஜா ஸ்டூடியோ தயாரிப்பு. பட்சி ராஜா அதிபர் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு டைரக்டர் செய்தார். பொதுவாக பட்சிராஜா ஸ்டூடியோ அதிகப் படங்களைத் தயாரிப்பதில்லை. ஆனால் தயாரிக்கும் படங்கள் `சூப்பர் ஹிட்' படங்களாக அமைவது வழக்கம். பாகவதர் நடித்த "சிவகவி", பி.யு.சின்னப்பா நடித்த "ஆர்யமாலா", "ஜகதலபிர தாபன்" ஆகியவை பட்சிராஜா தயாரிப்புதான்.

    அதேபோல, "மலைக்கள்ள"னும், பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப்படம் தயாரானதில் ஒரு சுவையான பின்னணி உண்டு.

    "மலைக்கள்ளன்", நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை எழுதிய நாவலாகும். அதை படமாக்க ஸ்ரீராமுலு நாயுடு முடிவு செய்ததும், அதற்கு வசனம் எழுத கருணாநிதியை அழைத்தார். "பராசக்தி" வெளிவந்து, கருணாநிதி புகழேணியின் உச்சியில் இருந்த நேரம் அது. "மனோகரா" படத்துக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார்.

    "நாமக்கல் கவிஞர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், அவர் காங்கிரஸ்காரர். அவர் கதைக்கு நான் வசனம் எழுதினால், இரு தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்களா என்று அஞ்சுகிறேன்" என்று கூறி, வசனம் எழுத மறுத்து விட்டார்.

    இந்த சமயத்தில், ஸ்ரீராமுலு நாயுடுவை எம்.ஜி.ஆர். சந்தித்தார். "மலைக்கள்ளன் படத்திற்கு கலைஞர் வசனம் எழுத வேண்டும், நீங்கள் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் அவர் வசனம் எழுத மறுத்துவிட்டார். நீங்கள் அவரை சம்மதிக்க வைத்தால், நான் மலைக்கள்ளனை தயாரிக்கிறேன். நீங்கள்தான் கதாநாயகன்" என்றார், ஸ்ரீராமுலு நாயுடு. அப்போது, நடிகர் டி.பாலசுப்பிரமணியமும் (வேலைக்காரியில் நடித்தவர்) உடன் இருந்தார்.

    உடனே எம்.ஜி.ஆரும், டி.பாலசுப்பிரமணியமும் கருணாநிதியை சந்தித்தனர். "நாமக்கல் கவிஞர் காங்கிரஸ்காரர் என்றாலும், மலைக்கள்ளனில் எவ்வித கட்சிப் பிரசாரமும் இல்லை. நல்ல விறுவிறுப்பான நாவல். நீங்கள் வசனம் எழுதவேண்டும். எனக்கும் இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்" என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

    (1952 வரை காங்கிரஸ் அனுதாபியாக இருந்த எம்.ஜி.ஆரை, அண்ணாவிடம் நடிகர் டி.வி.நாராயணசாமி அழைத்துச்சென்று, அறிமுகப்படுத்தி வைத்தார். அண்ணாவால் கவரப்பட்ட எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் சேர்ந்தார். மலைக்கள்ளன் காலத்தில் அவர் தி.மு.க.வில் இருந்தார்.)

    கருணாநிதி யோசித்தார். மலைக்கள்ளன் கதையை அவர் ஏற்கனவே படித்திருந்தார். நிச்சயம் அது வெற்றிப்படமாக அமையும் என்பது அவருக்குத் தெரிந்தது. எனவே, வசனம் எழுத சம்மதித்தார்.

    கட்சிப்பிரசாரம் எதுவும் இன்றி, மலைக்கள்ளனுக்கு கருணாநிதி வசனம் எழுதினார். இந்தப்படத்தில் அவர் வசனத்தில் அனல் பறக்கவில்லை; தென்றல் வீசியது. கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வசனத்தை எளிய_ இனிய நடையில் எழுதியிருந்தார்.

    எம்.ஜி.ஆரும், பானுமதியும் ஜோடியாக நடித்தனர். எம்.ஜி.ஆர். பல மாறுவேடங்களில் வந்து அசத்தினார். அவருடைய முழுத்திறமையும் இந்தப் படத்தில் பிரகாசித்தது.

    மற்றும் எம்.ஜி.சக்ரபாணி, டி.எஸ்.துரைராஜ், ஈ.ஆர்.சகா தேவன், சந்தியா, சுரபி பால சரஸ்வதி ஆகியோரும் நடித்தனர். டி.எஸ்.துரைராஜ், மாம்பழ நாயுடு என்ற போலீஸ்காரராக வந்து, வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.

    பாடல்களை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, கு.மா.பாலசுப்பிரமணியம், தஞ்சை ராமையாதாஸ், மக்களன்பன் ஆகியோர் எழுதியிருந்தனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்தார்.

    பானுமதியை குதிரையில் அமரச் செய்து எம்.ஜி.ஆர். அழைத்துச் செல்லும் காட்சியில் இடம் பெற்ற "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடலை கணீர் குரலில் டி.எம்.சவுந்தரராஜன் பாட, அது சூப்பர் ஹிட்டாக அமைந்தது. எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ். குரல் மிகவும் பொருந்தியிருந்ததால், தொடர்ந்து அவர் எம்.ஜி.ஆருக்கு பாடலானார்.

    மற்ற எந்தப் படத்துக்கும் கிடைக்காத தனிச்சிறப்பை "மலைக்கள்ளன்" பெற்றது. தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் இக்கதை தயாரிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். நடித்த வேடத்தில் இந்தியில் திலீப்குமார் நடித்தார்.

    எல்லா மொழி கதாநாயகர்களும், எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே நடித்தனர். "மலைக்கள்ளன்" 6 மொழிகளிலும் மகத்தான வெற்றி பெற்றான்.


    Courtesy-malaimalar

Page 58 of 67 FirstFirst ... 8485657585960 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •