OLD MEMORIES - MUST WATCH
http://www.youtube.com/watch?v=ppNBX...960F05A124FBBB
Printable View
OLD MEMORIES - MUST WATCH
http://www.youtube.com/watch?v=ppNBX...960F05A124FBBB
MAKKAL THILAGAM MGR'S HAND WRITING
http://i62.tinypic.com/dgkz8i.jpg
MAKKAL THILAGAM MGR NARRATES ABOUT 1957 ELECTION........
1957-ம் ஆண்டின்போது தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது கழகத்துக்கு என்று உதவி செய்ய, பிரபல பத்திரிகைகளோ, புகழ் பெற்ற பெரியவர்களோ இல்லை. கழகத்தின் கையில் பணமும் இல்லை. பதவிகளும் கிடையா. வியாபாரிகளோ, மில் உரிமையாளர்கள், மிராசுதாரர்கள், மடாதிபதிகள் போன்றவர்களோ, கான்ட்ராக்டர் போன்றவர்களோ பணம் கொடுக்கத் தயாராக இல்லை.
எனவே, ஆடம்பரமாகச் செலவு செய்யப் பணமும் இல்லை. கழகத்தின் கொள்கையை விளம்பரப்படுத்த நாளேடுகள் போன்றவற்றின் உதவியும் இல்லை. அப்படிப்பட்ட நெருக்கடி நிலையில், இன்றைய தமிழக அமைச்சர்களில் ஒருவரான மாண்புமிகு திரு. ப.உ.சண்முகம் அவர்கள், தனது தொகுதியில் தேர்தலுக்கு நின்றார்.
http://i62.tinypic.com/hvuxjq.jpg
அண்ணாவின் தம்பிக்குரிய நல்ல தன்மைகள் அனைத்தையும் ஒருங்கே பெற்று, கழகக் கோட்பாடுகளில் மிகமிக நெருக்க உணர்வுகொண்டு இருந்தார். இந்த நண்பர் எப்படியும் வெற்றி பெற்று, சட்டமன்றத்தில் அமர வேண்டும் என்று பெரிதும் ஆசைகொண்டேன். நான் அன்று அவருக்குப் பணம் கொடுக்கும் வசதியில் இருக்க வில்லை. அவருக்காக வாக்குகள் கேட்டு மக்களை ஈர்க்க முயலும் ஒரே ஒரு சக்திதான், அந்தத் தொண்டைச் செய்யும் வசதி மட்டும்தான் என்னிடம் இருந்தது. அவர்களுக்காக தொண்டாற்ற வேண்டும் என்ற பேராவலில் அவரிடம் நானே வலியச் சென்று கேட்டேன்.
அவர் எப்போதும் போல் சிரித்தவாறே சொன்னார், ''இந்தத் தேர்தல் நமது கழகத்துக்கு முதல் தேர்தல் அனுபவமாகும்! இதில் நாம் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நமது கழகத்துக்கு என்று தனிச் சின்னமே தரப்படவில்லை. அந்தத் தகுதி இப்போது நமக்கு இல்லை.
முதலில் அந்தத் தகுதியை நாம் இந்தத் தேர்தலில் பெற்றாக வேண்டும். எனது தொகுதியில் சிக்கல்கள், இடைஞ்சல்கள் அதிகம்தான். எனினும், நான் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடுவேன். வெற்றி பெறப் பெரிதும் போராடினாலும் வெற்றி கிட்டாது போலும் என்றிருக்கும் தொகுதிகள் நிறைய உண்டு. அப்படிப்பட்ட தொகுதிகளுக்கு நீங்கள் சென்று பிரசாரம் செய்வீர்களானால், அந்த நண்பர்களுக்கும் கழகத்துக்கும் நல்லதோர் உதவி செய்தவர்கள் ஆவீர்கள்!'' என்று சொன்னார். அவருடைய பேச்சு எந்த அளவுக்குப் பக்குவம் நிறைந்து இருந்ததோ அந்த அளவுக்குக் கண்டிப்பாக இருந்தது.
தேர்தல் முடிந்தது. கழகத் தோழர்கள் பலர் நல்ல பண்பு இருந்தும் மக்களுக்கு உழைக்கும் ஆர்வமும் ஆற்றலும் இருந்தும் தோற்றுவிட்டார்கள். தப்பியவர்களில் திரு. ப.உ.ச. அவர்களும் ஒருவர் என்ற சேதி கிடைத்தது. ஏனோ, மகிழ்ந்தேன். இந்த 15 பேர்களாவது வெற்றி பெற்றார்களே என்பதுதான்!
அடுத்த தேர்தலும் வந்தது. மதிப்புக்குரிய காமராசர் அவர்கள் பகிரங்கமாகச் சொன்னார்கள், '1962-ம் ஆண்டு தேர்தலின் முடிவில் இந்த 15 பேர்களும் தோற்றுவிட்டார்கள் என்ற சேதி வெளியிடப்படும்!’ என்று.
அவருடைய வழக்கம்போல் மக்களைச் சந்தித்தும் தேர்தலில் வெற்றி பெற அவர் செய்ய வேண்டிய தொண்டுகள் அனைத்தையும் புயல்போல் நிறை வேற்றினார். தமிழகத்தின் இன்றைய முதல்வர் கலைஞர் ஒருவரைத் தவிர, மற்ற 14 பேரும் தோற்றுப் போனார்கள்.
தோல்வியிலும் வெற்றியைக் காணும் அமரர் அண்ணாவின் கொள்கை, இதிலும் தோல்வியில் வெற்றியே கண்டது. 14 பேர்களைத் தோற்கடித்தார்கள். ஆனால், அதே சட்டமன்றத்தில் முன்பிருந்த 15 பேர்களுக்குப் பதிலாக 50 பேர்கள் கழகப் பிரதி நிதிகளாக அமர்ந்தார்கள்.
அந்தத் தேர்தலில் தோல்வி அடைந்த திரு. ப.உ.ச. அவர்கள் சென்னைக்கு வந்தபோது நாங்கள் சந்தித் தோம். அவரைப் பார்ப்பதற்கே எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. தோளில் பலமாகத் தட்டிய வாறு என்னை இழுத்து அணைத்துக்கொண்டு, அதே சிரிப்போடு உரத்த குரலில் கலகலவென்று வலுவோடு வார்த்தைகள் வெளியே வரும்படி பேசினார்...
''விஷயம் தெரியுமா? நான் தோத்துட்டேன். என்னை எதிர்த்தவர் நல்ல புத்திசாலி. மக்கள்கிட்ட எதெச் சொல்லி, எப்படி நெருங்கினா, ஓட்டு வாங்கலாங்கிறதெ, என்னைக் காட்டிலும் நல்லாத் தெரிஞ்சுவெச்சிருக்கார். அந்தத் தந்திரத்தை சரியாப் பயன்படுத்தி, அருமையா என்னைத் தோற்கடிச்சுட்டார்'' என்றார். நான் அவரையே பார்த்தேன். அது மட்டுமல்ல... 'திருவண்ணாமலையில் ஒரு பொதுக் கூட்டம் போடப் போகிறேன். அதில் வந்து பேச வேண்டும்’ என்றார்.
நான் விரக்தி மன நிலையில் கேட்டேன், ''எதுக்காகக் கூட்டம்? தோற்கடித்தார்களே அந்த மக்களுக்கு நன்றி சொல்லவா?'' என்று.
''தோற்றது உண்மைதான். ஆனால், ஜாமீன் பணத்தைத் திரும்பப் பெறும் அளவுக்கு ஓட்டுக்கள் போட்டிருக்கிறார்களே, அந்த வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டாமா?'' - இது சிரிப்போடும், தன்னம்பிக்கையோடும், ஏமாற்றமற்ற வகையிலும் உளமார என்னைத் திருப்பிக் கேட்ட கேள்வி.
அது மட்டுமல்ல, மேலும் தொடர்ந்தார்... ''ஒரு சில வாக்குகள் குறைந்ததால்தானே தோற்றேன். அந்த வாக்குகளும் கிடைத்திருக்குமானால், இப்போது எனக்கு அளித்திருக்கும் வாக்காளர்களையும் சேர்த்துப் போற்றிப் புகழ்ந்து நன்றி கூறியிருப்போம் அல்லவா? அப்போது நாம் காட்டும் நன்றியை இப்போதும் காட்டுவதற்கு நமக்கும் கடமை இருக்கிறது. அதைப் பெற அவர்களுக்கும் உரிமை இருக்கிறது!'' இதையும் அவருக்கே உரித்தான சிரிப்போடுதான் சொன்னார்!
இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு மற்றும் அனைத்துலக எம்.ஜி.ஆர் பொது நல சங்கம் இனைந்து ஏற்பாடு செய்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் " ஆயிரத்தில் ஒருவன் " திரைப்படம் 90வது நாள் சுவரொட்டி சென்னை நகரில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது . அதன் புகைப்படம் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
http://i57.tinypic.com/167m7w2.jpg
இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு சார்பாக , கடந்த ஞாயிறு அன்று (1/6/14) சென்னை பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் அருகில் அதன் கிளை மன்றம் தொடங்கப்பட்டது . விழாவில் இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு உறுப்பினர்களும் அனைத்துலக எம்.ஜி.ஆர் பொது நல சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழா தொடங்கும் முன்பு காலை 7 மணி முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் படபாடல்கள் ஒலி
பரப்பப்பட்டன .
காலை 10 மணியளவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஆரத்தி எடுக்கப்பட்டது .
இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு தலைவர் திரு.எஸ்.ராஜ்குமார் தலைமை தாங்கி விழாவை இனிதே சிறப்பாக நடத்தினார்.
பின்னர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாகனங்களில் சென்றவர்களுக்கும் மோர் வழங்கப்பட்டது.
அதன் புகைப்படங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
http://i61.tinypic.com/4iza6f.jpg
All matters, photos of MAKKAL THILAGAM simply superb... hubbers kindly go ahead... thank you all.....
9.6.1980
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்த தினம் இன்று .
1980 ஜனவரி மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மத்திய அரசு தமிழக அரசை 17.2.1980 அன்று
அரசியல் காரணமாக மக்கள் திலகத்தின் ஆட்சியை கலைத்தது .
தன்னுடைய ஆட்சியை டிஸ்மிஸ் செய்த மத்திய அரசின் செயலுக்கு மக்கள் திலகம் மக்கள் மன்றத்தில் நியாயம்
கேட்டார் .
சட்ட மன்ற தேர்தலில் மக்கள் மத்திய அரசிற்கும் அதற்கு துணை போனவர்களுக்கும் ,துள்ளி வருகுது வேல் என்று
துள்ளியவர்களுக்கும் சரியான பதிலை தந்து மக்கள் திலகத்தை வெற்றி பெற செய்தார்கள் .
மக்களின் பேராதரவுடன் இரண்டாவது முறையாக தமிழக முதல்வராக பல லட்சம் மக்கள் முன் பதவி ஏற்ற தினம்
இன்று .
தமிழக முதல்-அமைச்சராக 2-ம் முறையாக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார்
http://i62.tinypic.com/2hrlvrn.jpg
17 மந்திரிகள் கொண்ட மந்திரிசபையில் தமிழக முதல்-அமைச்சராக இரண்டாவது முறையாக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் 1980 ஜுன் 9-ந்தேதி பகல் 12 மணிக்கு நடைபெற்றது.
மேடை மீது காந்தி, ராஜாஜி, காமராஜர், அம்பேத்கார், 'காயிதே மில்லத்' இஸ்மாயில் சாகிப், முத்துராமலிங்க தேவர் ஆகியோருடைய பெரிய படங்கள் வைக்கப்பட்டு இருந்தன. நடுவில் அண்ணாவிடம் எம்.ஜி.ஆர். ஆசி பெறுவது போலவும், ஈ.வெ.ரா.பெரியார் வாழ்த்துவது போலவும் பெரிய படம் இருந்தது.
மண்டபத்துக்குள் 12.23 மணிக்கு கவர்னரும், எம்.ஜி.ஆரும் உள்ளே நுழைந்தார்கள். உடனே கூடியிருந்த பொதுமக்கள் 'எம்.ஜி.ஆர். வாழ்க' என்று குரல் எழுப்பினார்கள். பதவி ஏற்பு 'நீராரும் கடல் உடுத்த' என்ற தமிழ் வணக்க பாடலுடன் விழா தொடங்கியது.
முதல்-அமைச்சராக பதவியேற்க வரும்படி எம்.ஜி.ஆரை தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் அழைத்தார். எம்.ஜி.ஆர். எழுந்து, மேடையில் கவர்னர் பட்வாரி அருகில் போய் நின்றார். உறுதி மொழியையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் கவர்னர் பட்வாரி ஆங்கிலத்தில் வாசிக்க எம்.ஜி.ஆர். அதன் தமிழ் வாசகத்தை திரும்பிச் சொல்லி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
பதவி ஏற்றதும், எம்.ஜி.ஆரும், கவர்னரும் கை குலுக்கிக்கொண்டனர். பின்னர் கீழ்க்கண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
1. நெடுஞ்செழியன் (நிதி) 2. பண்ருட்டி ராமச்சந்திரன் (மின்சாரம்) 3. கே.ஏ.கிருஷ்ணசாமி (கிராமத்தொழில்) 4. எஸ்.டி.சோமசுந்தரம் (வருவாய்த்துறை) 5. ஆர்.எம்.வீரப்பன் (தகவல்) 6. அரங்கநாயகம் (கல்வி) 7. காளிமுத்து (விவசாயம்) 8. பொன்னையன் (சட்டம்) 9. குழந்தைவேலு (ஊராட்சி) 10. ராகவானந்தம் (தொழிலாளர் நலம்) 11. டாக்டர் ஹண்டே (சுகாதாரம்) 12. ராஜா முகமது (கூட்டுறவு) 13. எஸ்.முத்துசாமி (போக்குவரத்து) 14. திருநாவுக்கரசு (பெருந்தொழில்கள்) 15. எஸ்.என்.ராஜேந்திரன் (கைத்தறி) 16. விஜயசாரதி (அரிஜன நலம்) 17. கோமதி (சமூக நலம்)
ஒவ்வொரு அமைச்சரும் பதவியேற்றதும் எம்.ஜிஆரிடம் சென்று வணங்கி, ஆசி பெற்றனர். அமைச்சர் குழந்தைவேலு, முத்துசாமி, கோமதி ஆகியோர் எம்.ஜி.ஆர். காலை தொட்டு வணங்கினார்கள். தேசிய கீதத்துடன் விழா பகல் 1.32 மணிக்கு முடிந்தது.
உடனே எம்.ஜி.ஆர். மேடையில் இருந்து இறங்கி முன் வரிசையில் இருந்த தலைமை நீதிபதி இஸ்மாயில், முன்னாள் முதல்-அமைச்சர் பக்தவச்சலம் ஆகியோரை வணங்கி வாழ்த்துப் பெற்றார். அண்ணனின் ஆசி பிறகு, தன்னுடைய அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் காலைத்தொட்டு கும்பிட்டு எம்.ஜி.ஆர். ஆசி பெற்றார்.
விழாவுக்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், மேல்-சபைத் தலைவர் ம.பொ.சி. மற்றும் நீதிபதிகள், அனைத்துக்கட்சி தலைவர்கள் வந்து இருந்தார்கள். எம்.ஜி.ஆரும் மற்ற அமைச்சர்களும் அண்ணா சாலைக்குச் சென்று பெரியார் சிலைக்கும் பின்னர் அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்தனர்.
அண்ணா சிலை அருகே லட்சக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். மேடையில் ஏறி எம்.ஜி.ஆர். உரை நிகழ்த்தினார். அவர் கூறியதாவது:-
அமரர் அண்ணா சொன்னதுபோல மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற வகையில் உங்கள் முன்னால் தொண்டர்களாகிய நானும் என் நண்பர்களும் உறுதிமொழியை எடுத்துக்கொள்கிறோம். அறிஞர் அண்ணா அவர்களின் பெயரால் அமைந்த தமிழக ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாங்கள் மக்கள் மன்றத்தின் முன்னால் நின்று கீழ்க்கண்ட உறுதிமொழிகளை அளிக்கின்றோம்.
1) தேர்தலின்போது அ.தி.மு.க.வின் சார்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவோம். 2) வறுமை கோட்டின் கீழே உள்ள மக்கள் எந்த சமூகத்தினராக இருந்தாலும், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர முன்னுரிமை கொடுத்து பாடுபடுவோம். 3) தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோரின் நலன்களை காப்பாற்றி அவர்களை மேம்படுத்த பாடுபடுவோம். 4) சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகளும், நலன்களும் எல்லா வகையிலும் காப்பாற்றப்படும். 5) விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், மீனவர்கள், தொழிலாளிகள், பாட்டாளிகள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், காவலர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கம் ஆகியோரின் உரிமைகளும், நலன்களும் பேணப்படும்.
அண்ணாவின் கொள்கைகள் அறிஞர் அண்ணா அவர்களின் கொள்கையான தமிழ் மொழி ஆக்கம், தமிழர் உணர்வு, தமிழ்நாட்டின் மேம்பாடு, மாநில உரிமைகள், ஏழை-எளிய மக்களின் ஏற்றம், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை, சாதி மத வேறுபாடற்ற முறையில் அனைவருக்கும் வாழ்வளிக்க தொடர்ந்து பாடுபடுவோம் என்று உறுதிமொழி அளிக்கிறோம்.
அனைத்து அரசியல் கட்சிகளையும் விருப்பு வெறுப்பின்றி நல்லுணர்வோடு அரவணைத்து அன்புடன் பாதுகாப்பு கொடுப்போம். எங்களை வாழவைக்கும் தெய்வங்களாகிய நீங்கள் என்றும் எங்களுக்கு ஒத்துழைப்பு தந்து எங்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன். மேற்கண்டவாறு எம்.ஜி.ஆர். கூறினார்.
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு மிகவும் பெருமையும்
இனிய நினைவுகள் நிறைந்த நாள் என்றால் அது
30.6.1977 அன்று நமது இதய தெய்வம் மக்கள் திலகம்
முதல் முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்ற அந்த பொன்னான நாள் .
1936ல் ஒரு சிறிய நடிகராக அறிமுகமாகி
1947 வரை கடுமையான போராட்டத்துக்கு பின் கதாநாயகனாக
உயர்ந்து 1950ல் புகழ் பெற்ற நடிகராக காங்கிரஸ் இயக்கத்தில் அங்கத்தினாராக இருந்து பின்னர் 1953ல் திமுகவில் இணைந்து
1954ல் நாடறிந்த நாயகனாக வளம் வந்து பட்டி தொட்டி எங்கும் திமுக கட்சியின் கொள்கைகளை மேடைதோறும் முழங்கியும்
தன்னுடைய படங்களில் திமுகவின் கொள்கைகளையும் ,சின்னத்தையும் இடம் பெற செய்து 1957- 1962 தேர்தல்களில் தமிழக சட்டசபைக்கு முதல் முறையாக உறுப்பினர்களை வெற்றி பெற உழைத்தவர் நடிகர் எம்ஜியார் .
1958ல் வந்த மக்கள் திலகத்தின் ''நாடோடி மன்னன்'' படம்
தமிழ் திரை உலகில் ஒரு மாபெரும் புரட்சி செய்தது .
மக்கள் திலகத்தின் அரசியல் செல்வாக்கும் , திரைப்பட புகழும்
1960ல் மேலும் உச்சத்திற்கு சென்ற நிலையில் 1967ல் துப்பாக்கி மூலம் உயிருக்கு உலை வைத்த நேரத்தில் அவரின் தர்மம் தலை காத்தது .குரலில் பாதிப்பு ஏற்பட்டாலும்
கோடிக்கணக்கான மக்கள் இதயங்களிலும் , ரசிகர்களின் உள்ளங்களிலும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை . மாறாக அவருடைய புகழும் -இளமையும் நாளுக்கு நாள் மெருகேறியது
1972ல் மக்கள் திலகத்திற்கு சத்திய சோதனை ஏற்பட்டது .
சோதனையில் மக்களின் - ரசிகர்களின் ஆதரவை பெற்று
அண்ணாதிமுக நிறுவனாராக ஒருபக்கம் திரை உலக சக்ரவர்த்தியாக மறுபக்கம் என்று இரட்டை குதிரை சவாரியில்
பிரமாண்ட வெற்றி கண்ட ஒரே உலக புகழ் நடிகர் எம்ஜியார் .
நடிகர் கட்சி
100 நாள் கட்சி
என்றெல்லாம் தரமற்ற முறையில் மிகவும் கேவலமாகவும்
மேடையிலும் , பத்திரிகைகளிலும் எம்ஜியாரை பற்றி
விமர்சித்தனர் .
உண்மையான மக்கள் திலகத்தின் ரத்தத்தின் ரத்தங்களும்
உலகமெங்கும் வாழ்ந்து வந்த மக்கள் திலகத்தின் ரசிகர்களின்
அமோக ஆதரவும் . கடுமையான உழைப்பும் , மக்களின் பேராதரவும் 30.6.1977 அன்று தமிழக முதல்வராக அமர்த்தி அழகு பார்த்த இனிய நன்னாள் மறக்க முடியுமா ?
எம்ஜியார் ரசிகர்களின் கனவு
எம்ஜியார் ரசிகர்களின் உழைப்பு
நனவான நாள் - வெற்றி திரு நாள்
எங்கும் வெற்றி ... எதிலும் வெற்றி
வெற்றி மேல் வெற்றி
மக்கள் திலகத்தின் கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்றும்
எண்ணி மகிழும் திரு நாள் .
1972ல் அதிமுக கட்சியினை துவங்கி 1977ல் அதிமுகஆட்சி அரியணை ஏறியது உலக வரலாற்று சாதனை .
ஒரு தனி மனிதரின் அயராத உழைப்பு - மக்களுக்கு சேவை
பொன்மனம் - ஏழைகளுக்கு அருளிய கொடைகள்
நல்ல எண்ணம் -இவை எல்லாம்தான் நம் மக்கள் திலகத்திற்கு
மக்கள் தந்த பரிசு - 1977 தமிழக முதல்வர் எம்ஜியார் .
மக்கள் திலகம் அவர்கள் தேர்தல் முடிவு வெளியான நேரத்தில் மீனவநண்பன் - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
படங்களில் நடித்து முடித்து வந்தார் .
மக்கள் திலகத்தின் ''இன்றுபோல் என்றும் வாழக '' திரைப்படம்
தமிழகமெங்கும் 50வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது .
வரலாற்று உலக சாதனை நாயகனின்
ஒரு புதிய வரலாறு துவக்க நாள்
30.6.1977
மக்கள் வெள்ளத்தில் அண்ணாசாலை மட்டுமல்ல ....
தமிழகமே சென்னை நகருக்கு படை எடுத்தது போல்
எல்லா சாலைகளிலும் மக்கள் வெள்ளம்
தென்கோடி கன்னியாகுமரி ... நெல்லை .. மதுரை
ராமநாதபுரம் --
திருச்சி - தஞ்சை -நாகை
வட -தென் ஆற்காடு
கோவை - சேலம் - தர்மபுரி
செங்கை -சென்னை பகுதியினை சேர்ந்த மக்கள் -தொண்டர்கள் - ரசிகர்கள்
ஆந்திரம் - கர்நாடகம் - மகாராஷ்டிரா - டெல்லி -அந்தமான்
புதுவை -கேரளா போன்ற மாநிலங்களிலி ருந்தும்
இலங்கை - சிங்கப்பூர் - மலேசியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் திலகத்தின் ரசிகர்கள்
சென்னை வந்திருந்து மக்கள் திலகத்தின் பதவி ஏற்பு நிகழ்ச்சியினை கண்டு களித்த திருநாள் .
''உலக திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரு நடிகரின் அரசியல் மக்கள் செல்வாக்கு எந்த அளவிற்கு இருந்தது என்று அன்றையதினம் சென்னை நகரில் திரண்ட
லட்சக்கணக்கான மக்களே சாட்சி '' என்று வெளிநாட்டு பத்திரிகைகளும் - இந்திய பத்திரிகைகளையும் பாராட்டினார்கள் .
இந்திய திரைப்பட உலக நடிக - நடிகைகள் - எல்லோரும்
மக்கள் திலகத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்கள் .
MGR with Prime Minister Indira Gandhi after the Emergency was lifted in 1977
Once he became Chief Minister of Tamil Nadu, he placed great emphasis on social development, especially education.
One of his most successful policies was the introduction of the "Mid-day Meal Scheme" introduced by the popular Congress Chief Minister and Kingmaker K Kamaraj to a nutritious Mid-day Meal Scheme in the Government-run and aided schools in Tamil Nadu, which encouraged underprivileged children to attend schools. This scheme was at a cost of Rs.100 crore and was imposed in 1982.
He also introduced Women's Special buses. He introduced Liquor ban in the state and Preservation of old temples and historical monuments, ultimately increasing the state's tourist income. He set up a free school for the Cinema Technicians children in Kodambakkam called MGR Primary & Higher Secondary School which provided Free Mid-Day meals in the 1950s.
He led the ADMK to victory in the 1984 assembly elections despite not taking part in the campaigning. At that time he was undergoing medical treatment in America and his images were broadcast in Tamil Nadu through cinema halls. This was an effective campaign tactic and ADMK won the elections, indicating the depth of his popular support.
He won the election in a double landslide victory in 1984.He still holds the record of being the chief minister with the highest consistent longevity of more than a decade .
Courtesy - net
சமீபத்தில் "நாடாளுமன்றத்தில் வைகோ"என்ற நூலைப் படித்தபோது,
முதலமைச்சராக இருந்தபடி எம்.ஜி.ஆர்.எடுத்த ஒரு முக்கிய நிலைப்பாட்டை நூலாசிரியர் திரு.மு.செந்திலதிபன் மிக செறிவாகப்
பதிவு செய்திருப்பதைப் பார்த்தேன்.
இராமேஸ்வரத்திலிருந்து ஈழத்திற்கு ஆயிரம் இளைஞர்களுடன் படகில்
செல்லப்போவதாய் திரு.பழ.நெடுமாறன் அறிவித்தார். அவர் புறப்படும்
இடத்தில் கைதாவார் என்றும் இராமேஸ்வரத்தில் கைதாவார் என்றும்
வதந்திகள் உலவின. இராமேஸ்வரம் கடற்கரைக்கு நெடுமாறன் குழுவினர்
சென்று நின்றபோது கரையில் ஒரு படகைக்கூட காணோம். போராட்டக்
குழுவினர் திரும்ப நேர்ந்தது.
இதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதம் எழுந்தபோது எம்.ஜி.ஆர் தந்த
பதில் இது: " அன்னை இந்திராகாந்திக்கு ஓர் ஆபத்து நேர்ந்தபோது,
அவர் உயிரைக் காத்தவர் மாவீரர் நெடுமாறன்.ஆனால் கடலில் போகும்
வேளையில் அவர் உயிருக்குப் பாதுகாப்பு உண்டா?எதிரிகள் வந்து சுட்டால் அவரால் தன்னை தற்காத்துக் கொள்ள முடியுமா? ஒரு நெடுமாறனை இழந்தால் இன்னொரு நெடுமாறனை உருவாக்க முடியுமா?
அதனால்தான் படகுகளை அப்புறப்படுத்தச் சொன்னேன்.
ஆனால் மக்கள் நடுவே இனவுணர்வை மேம்படுத்த அவர் செய்து வரும்
பிரச்சாரம் விலைமதிப்பில்லாதது.ஒரு முதலமைச்சராக இருப்பதால் நான்
செய்ய முடியாத பிரச்சாரத்தை அவர் செய்கிறார். எனவே அவரைக் கைது
செய்ய வேண்டாமென்று சொன்னேன்"என்றாராம் எம்.ஜி.ஆர்.
படகோட்டிகளை அப்புறப்படுத்தியதிலும் அந்தப் படகோட்டி
வித்தியாசமாகத்தான் சிந்தித்திருக்கிறார்.
தெய்வமாக்கிய பாடல்
எம்.ஜி.ஆரின் வேறு பல திரைப்பாடல்களில் உள்ளதைப் போன்ற நேரடியான அரசியல் எதுவும் இல்லாத அந்தப் பாடல் எம்.ஜி.ஆரைப் பற்றிக் கட்டமைத்த பிம்பம்தான் அவரை மற்றவர்களோடு ஒப்பிடப்பட முடியாதவராக மாற்றியது. 1984இல் எம்.ஜி.ஆர்., உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த தருணத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவரது கட்சிக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுத் தந்த பாடல் அது. கடவுள் நம்பிக்கையற்ற, பகுத்தறிவுக் கொள்கையில் தீவிரமான நம்பிக்கை கொண்ட ஒரு கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான எம்.ஜி.ஆரை தெய்வமாக்கியது.
http://i62.tinypic.com/14n1hs8.jpg
உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வா என்றால் மண்ணுலகம் என்னாகும்?
உன்னுடனே வருகின்றேன் என்னுயிரைத் தருகின்றேன்
மன்னனுயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு
படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்தில் நேர்த்தியற்ற முறையில் உருவாக்கப்பட்ட முருகனின் உருவ பொம்மை ஒன்றின் முன்னால் நின்று உள்ளம் உருகும் குரலில் சௌகார் ஜானகி பாடுவதை இப்போது கேட்டாலும் கண்கள் சுரக்கும். சௌகாரின் குளமான கண்களில் நிழலாடும் சோகத்தையும் எம்.ஜி.ஆரின் மார்பின் மீது முகம் புதைத்து அவர் பரிதவிப்பதையும் கவனியுங்கள். அது தமிழக மக்களின் சோகம், அவர்களது பரிதவிப்பு. அந்தப் பாடலில் இடம் பெற்றிருக்கும் மற்ற சில வரிகளைக் கவனியுங்கள். அவர் தெய்வமாக்கப்பட்டிருப்பது தெரியும்.
Courtesy
the hindu
http://i60.tinypic.com/ehay48.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மக்கள் திலகத்தின் நான் ஏன் பிறந்தேன் முதல் காட்சி பார்த்த அனுபவம் .
9.6.1972
அண்ணா சாலையில் இருந்த குளோப் திரை அரங்கில் முதல் நாள் மேட்னி காட்சி பார்க்கும் வாய்ப்பு
கிடைத்தது .ரசிகர்கள் வெள்ளத்தில் ஆரவாரங்களுடன் படம் துவங்கிய முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை ரசித்து பார்த்தேன் .
அறிமுக காட்சியில் தாய்குலத்திற்கு பெருமை சேர்த்த விதம்
நான் ஏன் பிறந்தேன் பாடலில் சமூக சீர்திருத்த கருத்துக்கள்
தன்னுடைய தாய் - மனைவி - உடன் பிறந்தோர் செய்யும் கடின வேலைகளை பார்த்து மக்கள் திலகம் கண் கலங்கும் காட்சிகள்
அனைவரையும் அழைத்து உரிமையுடன் பேசுமிடம்
வீட்டை விற்கும் காட்சியில் காட்டும் நேர்மை .தம்பி தங்கைகளுக்கு அறிவுரை பாடல் .
வேலை தேடி சென்னையில் அடையும் ஏமாற்றங்கள் . நண்பர் கோபால் மூலம் மேஜரை சந்திக்குமிடம் .
அழுபவர்களை சிரிக்க வைக்க வேண்டும் . சிரிப்பவர்களை சிந்திக்க வைக்க வேண்டும் என்று
மக்கள் திலகம் கூறுமிடத்தில் பலத்த கைதட்டல்கள் .
காஞ்சனா சந்திப்பில் இடம் பெற்றமக்கள் திலகத்தின் நான் படும் பாடல் ....வர்ணிக்க வார்த்தைகள் இல்லை . அத்தனை அற்புதம் .
என்னம்மா சின்ன பொண்ணு - பாடலில் மக்கள் திலகத்தின் நடன அசைவுகள் - நடிப்பு பிரமாதம் .
தன்னுடைய தம்பி தங்கைகள் சோகத்துடன் பாடும் பாடலை கேட்டு சந்தர்ப்ப சூழ் நிலையால் உடனே அவர்களை சந்திக்க முடியாத நிலையில் அவர் காட்டும் முக பாவங்கள் அருமை .
கே .ஆர் .விஜயாவுடன் படும் உனது விழியில் எனது பார்வை ......காவிய பாடல் .
படம் மக்கள் திலகத்தின் கச்சிதமான நடிப்பு ரசிகர்களுக்கு விருந்து .இரண்டு சண்டை காட்சிகள் அளவோடு இருந்தது .
மக்கள் திலகத்திற்கு சிறந்த நடிகருக்கான விருது இந்த படத்திற்கு கிடைத்திருக்க வேண்டும் .
மிகபெரிய வெற்றி அடைந்திருக்க வேண்டிய படம் .ரசிகர்களால் சுமாராக ஓடிய வெற்றி படம் .
42 ஆண்டுகள் கடந்தாலும் நான் ஏன் பிறந்தேன் படம் - இன்று பார்த்தாலும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்குகிறது என்றால் அது மக்கள் திலகத்தின் இயல்பான நடிப்பு - இனிமையான பாடல்கள்
என்றால் அது மிகை அல்ல .குடும்ப கதை கொண்ட படங்களிலும் மக்கள் திலகம் ஜொலித்தார் .
09-06-1972 அன்று வெளியான நம் கலைச்சுடரின் "நான் ஏன் பிறந்தேன் " காவியத்தை பற்றிய ஒரு சிறு நினைவு கூறும் தொகுப்பு
http://i59.tinypic.com/2l9gu4m.png
மக்கள் திலகத்தின் எல்லா காவியங்களும் ரசிக்கக் கூடியதே !. இருப்பினும் அதில் தனித்துவமும் மகத்துவமும் பெற்று விளங்குவது "நான் ஏன் பிறந்தேன்" காவியம். புரட்சித் தலைவருக்கு மிகவும் பிடித்தமான தலைப்பு. சிறந்த கதையமைப்பு கொண்ட குடும்பப்பாங்கான இக்காவியத்தில் இடம் பெற்ற அத்தனை பாடல்களும் செவிக்கினியது.
இலங்கை மண்ணில் .100 நாட்கள் மேல் ஓடி சாதனை படைத்திட்டது. யாழ் நகர் ராணி அரங்கில் வெற்றிக்கொடி நாட்டிய திரைக்காவியம்.
குறிப்பாக "உனது விழியில் எனது பார்வை" என்ற அருமையான காதல் பாடல் காண்போரை மெய் மறக்க செய்யும். எத்தனை முறை கேட்டாலும், சலிப்பு ஏற்படாத பாடல்களில் இதுவும் ஒன்று. . சங்கர்-கணேஷ் இசையமைப்பில் வெளிவந்த மற்றுமோர் மக்கள் திலகத்தின் காவியம்.
வடசென்னை ஸ்ரீ கிருஷ்ணா அரங்கில், எங்கள் திருவொற்றியூரை சார்ந்த மக்கள் திலகத்தின் அன்பர்கள் பலரும், முதல் நாள் மாலைக் காட்சிக்கு சென்று கண்டு களித்தோம். திரையரங்கில், வடசென்னை மாவட்ட எம். ஜி. ஆர். மன்ற அமைப்புக்கள் பல, பல்வேறு வடிவங்களில்,சிறியதும், பெரியதுமாக star கள் கட்டி தொங்க விட்டது. எங்கள் திருவொற்றியூர் பகுதி அன்பர்கள் (நான் உட்பட) எங்கள் பங்கிற்கு, மூங்கில் கொம்புகளால் ஆன ஒரு சிறு அழகிய star ஒன்றினை உருவாக்கி அதில் நம் கலை வேந்தனின் கண்கவர் புகைப்படங்கள் ஒட்டி அரங்க வாயிலில் கட்டி மகிழ்ந்தோம். தி.மு.க. கொடிகளும், தோரணங்களும் கிருஷ்ணா அரங்கின் முன் அலங்கரித்தன.
கையால் வரையப்பட்ட பேனர்களுக்கு பல மன்ற அமைப்புக்களின் சார்பில், ஏராளமான மாலைகள் அணிவிக்கப்பட்டன. எல்லா எம். ஜி. ஆர். மன்ற அமைப்புக்களும் ஒரு புரிந்துணர்வோடு, ஒற்றுமையோடு செயல் பட்டன. மாநில அளவில் ஒருங்கிணைப்பாளர் இருந்தபடியால் இது எளிதாகவும் சாத்தியமாகவும் இருந்தது.
ஸ்ரீ கிருஷ்ணா திரை அரங்கம், தங்கசாலை பேருந்து நிலையம் எதிரில் அமையப்பெற்றதால், எழில்வேந்தன் எம். ஜி. .ஆர். காவியங்கள் இங்கு எப்பொழுது திரையிடப்பட்டாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். காவல் துறையினர், கட்டுக்கடங்கா கூட்டத்தை சமாளிக்கவும், போக்குவரத்து நெரிசலை சீர் செய்யவும் ஈடுபடுத்தப்படுவர்.
திரையில், பொன்மனசெம்மல் முதன் முதலில் தோன்றும் காட்சியில் வழக்கம் போல் மகிழ்ச்சி ஆரவாரம், பலத்த கை தட்டல், உற்சாகம். வசனங்கள் காதில் தெளிவாக கேட்க வில்லையாயினும் அந்த முதல் நாள் காணும் அனுபவம் ஒரு தனி சுகம் தான். சில உருக்கமான காட்சிகள் கண்ணீர் வரவழைத்தன என்று கூறினால் அது மிகையாகாது.
படம் முடிந்து அரங்கின் வெளியே வந்த பொது மக்களின் கருத்துக்கள் :
1. மிக மிக அருமையான படம்.
2. குடும்பத்துடன் வந்து காண வேண்டிய படம்
3. மக்கள் திலகம் ஆரம்பித்திலேய குடும்பஸ்தனாக காண்பிக்கப்படுவதால் ஒரு வித்தியாசமான திரைப்படம்
4. கருத்து செறிவுள்ள பாடல்கள் ரசிக்கும் படி அமைந்துள்ளது.
5. மாறுபட்ட கதாபாத்திரத்தில் பொன்மனச்செம்மல் தோன்றி அசத்தியுள்ளார்.
6. நிறைவான ஒரு படம்
மொத்தத்தில், எல்லா தரப்பு மக்களிடையேயும் ஏகோபித்த வரவேற்பை பெற்ற காவியம்தான் "நான் ஏன் பிறந்தேன் ? "
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
MGR AND HIS DIRECTOR'S- VIEW BY CGHANDRAN - NET
M.G R. was hardly a director's actor.When I say this I do not mean that this mass hero would not have cooperated with his directors.What on the other hand, I mean to say, is that it would have been very difficult to direct someone, whose image was always at its peak, on account of his own set theories of film making and his much cherished concept of what really a hero is and how he should be presented on screen.The three lettered hero was so charismatic that those who directed him came to be known as MGR directors and not as the directors of that hero.
One who had watched most of the movies of MGR,directed by three or four popular directors, could easily conclude that the films were of a set pattern with a prioritization of theme,story line, characterization lyrics and music composition that would not deviate from the MGR dictionary of film making.Every MGR fan knew pretty well, that any new release of their favorite hero would have speed,considerable action segment, mother sentiment,at least one solo song with socially enlightening messages, not less than three duet songs of which one would form a dream sequence, inspired by the imagination of the heroine.All these constituted the MGR package, but it was the level of energy transmitted by MGR to the audience that mattered.
The leading MGR directors were P.Neelakandan,M.A.Thirumugam,T.R.Ramanna T.R.Sundaram, Chanakya, and K.Shankar. Of these committed personalities,Neelakandan has directed a little less than twenty films of MGR followed by M.A.Thirumugam around fifteen movies. T.R.Ramanna has done seven movies followed by the other three taking a share of approximately three to five films each.But each of them created records in drawing crowds to the theatres and making hits of one hundred days and silver jubilees.Besides these men, the veteran duo Krishnan Panju, P.Madhavan, M.Krishnan,Prakash Rao, B.R.Pantulu C.V.Sridhar and A.P.Nagarajan have also worked with MGR as his directors for one or two movies each.
T.Ramanna takes the credit for bringing MGR and Sivaji Ganesan together for their one and only joint show in 'Koondukkili' in which Sivaji played a negative role. From the MGR collections of this great maker,p.Neelakantan great hits like 'Chakravarthithirumagal' 'Kaavalkaaran' 'Kannan En Kadalan''Maatukkaara Velan','En Annan','Ninaithathai Mudipavan' 'Neethikku Thalaivanagu' and 'Netru Inru Naalai'.MGR has also played dual roles in some of these.While 'Kavalkaaran' was reputed for its suspense value,MGR's boxing style and the much valued romantic element besides the usual MGR thrust for rich music,'Kannan En Kadalan' was noted for its significant story value.All the other films in the list were fast moving entertainers.
M.A.Thirumugam,the standard Devar Films'director who made easy entertainers with in short schedules of production period, impressed us by his movies like 'Thaikkuppin Thaaram' 'Thai Sollai Thattadhe','Thayai Katha Thanayan' 'Vettaikkaran' 'Dharmam Thalaikakkum' Thanippiravi and 'Nalla Neram' .In all the Devar films, there would be an animal participant say,a dog or bull or elephant.Most of the films from the Devar films exhibited the spirit of adventure and unrelenting bravery that MGR was capable of essaying, in his inimitable style.The stunt scenes in Devar films were their trade marks too.
Starting from 'Gulebagavali',T.R.Ramanna was a variety provider and a great action maker. Almost all his films like 'Pudhumai Pithan','Perya Idathu Pen','Parakkum Paavai' and 'Panam Padaithavan' proved his variety throw in terms of different story line,scenic sequence and the final impact.There was an element of adventure coupled with shrewdness in display of heroism in the first two movies. 'Periya Idathu Pen' had a strong story line and was emotion packed.' Parakkum paavai' was a great thriller with a thread of suspense running through out, making the audience get seriously involved in the process. 'Panam Padaithavan' established the supremacy of traditional values, over money and the craze for modernity.His other film 'Paasam' presented MGR for the first time in a different character, facing love disappointment and a tragic end on seeing his mother being killed.All these films were successful at the box office and their musical component is an eternal treat.
Modern Theatres T.R.Sundaram has made four films ['Mandhirikumari' 'Sarvathikaari' ,Alibabavum Naarpathu Thirudargalum' and Bagdad Perazhagi] and all were grand shows, known for speed in narration, sustenance of tempo and substance full of entertainment.All these films effectively handled the action formula and Alibabavun Naarpathu Thirudargalum in particular, captured the imagination of everybody in a beautifully adventurous mode. Mandhirikumari could be called a trend setter in several respects, such as dialogues,delineation of characters,catchy out door shootings and captivating music.MGR's films with the Modern Studios on the whole, never failed to create an exotic feel through exquisite presentation of scenic sequences.
K.Shankar made block busters like 'Kdiyirundha Koil' 'Adimaipen' and 'Pallaandu Vazhga' though his other films like 'Panathottam',and 'Chandhrodhayam' were only moderately successful. Chanakya's 'Enga Veettu Pillai' was more than a silver Jubilee hit.It ran almost for a year.His other victory march was for Gemini Studio's 'OliVilakku' that was released soon after the first DMK government was formed However his later film 'Pudhiya Boomi' did not do well at the box office. P.Madhavan came out with his single MGR film 'Deivathai' produced by Sathya Movies and it proved his name as a seasoned director,renowned for high quality film making. Incidentally, this was the only movie of MGR, for which K.Balachander wrote the script.
Prakash Rao's 'Padahotti' made history as a mass entertainer with all songs making waves as sweet melodies .Jambulingam's 'Namnaadu' was appreciated by most people for its plot, characterization, music and the magnificent show of M.G.R. Maniyan's 'Idhyaya Veenai' and his other Udhayam productions' release 'Sirithu Vaazhavendum' [a remake of Hindi 'Zanjeer']were both great in theme and over all content. B.R.Pantulu's 'Ayirathil Oruvan' was a block buster of epic grandeur; but his other three films [Ragasia Police115, Naadodi and Thedivandha Mappillai] did well.
C.V.Sridhar and A.P.Nagarajan who had never directed MGR movies during their hey days, ultimately got a chance to be his directors .Sridhar's 'Urimaikkural' was a tremendous success.His next film 'Meenava Nanban' yielded moderate results. A.P.Nagarajan's 'Navarathinam' was a dampener.MGR's 'Petralthan Pillaiya' was another creditable movie directed by Krishnan Panju and for the first time MGR appeared in a different character reflecting the plight of a man longing for a child.The story value of the film was a special attraction, in addition to MGR drawing the sympathy of the audience, because, he was always seen as an optimist and a source of positive energy.The other MGR movie directed by Krishnan Panju was 'Engal Thangam' which was also received well, for its story value and it was the only film that MGR acted with AVM Rajan and the last one he worked under the Mekala Pictures with Kalaignar M.Karunanidhi as the script writer.
The other two box office hits were, Sathya Movies''Idhyakkani' directed by A.Jaganathan and 'Richshakkaaran' filmed by Krishnan Nair.Among the old movies 'Malaikkallan' of Pakshiraja Sudios,directed by Sri Ramulu Naidu and Jupiter Pictures' Mahadevi' made by Sundarao Nadkarni were crowd pullers on account of their clean and high quality narration. To add to the long list of MGR directors,this mighty hero himself directed two of his successful films 'Nadodi Mannan' and 'Ulagam Sutrum Vaaliban'.Film personalities who knew MGR closely,used to say that he was a precise editor of films. But he had also proved that he could direct films with conviction.Perhaps it was his dynamism and versatility in film making, that made his directors look upon him for encouragement and support.So in a way, they can be rightly called,the MGR directors.
===============0=================
நான் ஏன் பிறந்தேன் ? தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை தோற்றம் :
http://i57.tinypic.com/2hrco6t.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
நான் ஏன் பிறந்தேன் ? தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் அட்டை தோற்றம் :
http://i58.tinypic.com/t0kj5t.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i59.tinypic.com/2lkcyvt.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i61.tinypic.com/2yl1wmw.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
விழாகுழுவினர் அமைத்த பேனர்
http://i58.tinypic.com/20to2ky.jpg
http://i60.tinypic.com/2chkr42.png
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i57.tinypic.com/2z9l64k.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i58.tinypic.com/2n87qiq.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! ! அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
விழாவில் கலந்து கொண்டவர்கள் திருவாளர்கள் ரகு,எஸ்.ராஜ்குமார்,ஆர்.லோகநாதன்,மற்றும் பலர்.
http://i59.tinypic.com/30mrasw.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு திரு.எஸ்.ராஜ்குமார் ஆரத்தி.
http://i59.tinypic.com/a087i9.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு திரு.பாண்டியராஜன் ஆரத்தி அருகில் திரு.எஸ்.ராஜ்குமார்.
http://i59.tinypic.com/atu6nk.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு திரு.ரகு(தொழிலதிபர்) ஆரத்தி அருகில் திரு.எஸ்.ராஜ்குமார்.
http://i62.tinypic.com/akbwhu.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு திரு.ஆர்.லோகநாதன் ஆரத்தி அருகில் திரு.எஸ்.ராஜ்குமார்.
http://i62.tinypic.com/20a58q1.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு திரு.பிரபு ஆரத்தி அருகில் திரு.எஸ்.ராஜ்குமார்.
http://i61.tinypic.com/wsglf.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு திரு.சச்சிதானந்தம் ஆரத்தி அருகில் திரு.எஸ்.ராஜ்குமார்.
http://i61.tinypic.com/2ro6qur.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு ஆரத்தி,மன்ற பெயர் பலகை திறந்த பின்,அனைவருக்கும் மோர் வழங்க தயாரானபோது எடுத்த படம்.
http://i62.tinypic.com/ay3uwx.jpg
விழாவை தலைமை தாங்கி சிறப்பாக நடத்திவைத்த திரு.எஸ்.ராஜ்குமார் அவர்களுக்கு மன்ற பொறுப்பாளர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கிறார்
http://i61.tinypic.com/1zqydrm.jpg