OLD MEMORIES - MUST WATCH
OLD MEMORIES - MUST WATCH
MAKKAL THILAGAM MGR'S HAND WRITING
![]()
Russellisf thanked for this post
orodizli liked this post
MAKKAL THILAGAM MGR NARRATES ABOUT 1957 ELECTION........
1957-ம் ஆண்டின்போது தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது கழகத்துக்கு என்று உதவி செய்ய, பிரபல பத்திரிகைகளோ, புகழ் பெற்ற பெரியவர்களோ இல்லை. கழகத்தின் கையில் பணமும் இல்லை. பதவிகளும் கிடையா. வியாபாரிகளோ, மில் உரிமையாளர்கள், மிராசுதாரர்கள், மடாதிபதிகள் போன்றவர்களோ, கான்ட்ராக்டர் போன்றவர்களோ பணம் கொடுக்கத் தயாராக இல்லை.
எனவே, ஆடம்பரமாகச் செலவு செய்யப் பணமும் இல்லை. கழகத்தின் கொள்கையை விளம்பரப்படுத்த நாளேடுகள் போன்றவற்றின் உதவியும் இல்லை. அப்படிப்பட்ட நெருக்கடி நிலையில், இன்றைய தமிழக அமைச்சர்களில் ஒருவரான மாண்புமிகு திரு. ப.உ.சண்முகம் அவர்கள், தனது தொகுதியில் தேர்தலுக்கு நின்றார்.
அண்ணாவின் தம்பிக்குரிய நல்ல தன்மைகள் அனைத்தையும் ஒருங்கே பெற்று, கழகக் கோட்பாடுகளில் மிகமிக நெருக்க உணர்வுகொண்டு இருந்தார். இந்த நண்பர் எப்படியும் வெற்றி பெற்று, சட்டமன்றத்தில் அமர வேண்டும் என்று பெரிதும் ஆசைகொண்டேன். நான் அன்று அவருக்குப் பணம் கொடுக்கும் வசதியில் இருக்க வில்லை. அவருக்காக வாக்குகள் கேட்டு மக்களை ஈர்க்க முயலும் ஒரே ஒரு சக்திதான், அந்தத் தொண்டைச் செய்யும் வசதி மட்டும்தான் என்னிடம் இருந்தது. அவர்களுக்காக தொண்டாற்ற வேண்டும் என்ற பேராவலில் அவரிடம் நானே வலியச் சென்று கேட்டேன்.
அவர் எப்போதும் போல் சிரித்தவாறே சொன்னார், ''இந்தத் தேர்தல் நமது கழகத்துக்கு முதல் தேர்தல் அனுபவமாகும்! இதில் நாம் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நமது கழகத்துக்கு என்று தனிச் சின்னமே தரப்படவில்லை. அந்தத் தகுதி இப்போது நமக்கு இல்லை.
முதலில் அந்தத் தகுதியை நாம் இந்தத் தேர்தலில் பெற்றாக வேண்டும். எனது தொகுதியில் சிக்கல்கள், இடைஞ்சல்கள் அதிகம்தான். எனினும், நான் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடுவேன். வெற்றி பெறப் பெரிதும் போராடினாலும் வெற்றி கிட்டாது போலும் என்றிருக்கும் தொகுதிகள் நிறைய உண்டு. அப்படிப்பட்ட தொகுதிகளுக்கு நீங்கள் சென்று பிரசாரம் செய்வீர்களானால், அந்த நண்பர்களுக்கும் கழகத்துக்கும் நல்லதோர் உதவி செய்தவர்கள் ஆவீர்கள்!'' என்று சொன்னார். அவருடைய பேச்சு எந்த அளவுக்குப் பக்குவம் நிறைந்து இருந்ததோ அந்த அளவுக்குக் கண்டிப்பாக இருந்தது.
தேர்தல் முடிந்தது. கழகத் தோழர்கள் பலர் நல்ல பண்பு இருந்தும் மக்களுக்கு உழைக்கும் ஆர்வமும் ஆற்றலும் இருந்தும் தோற்றுவிட்டார்கள். தப்பியவர்களில் திரு. ப.உ.ச. அவர்களும் ஒருவர் என்ற சேதி கிடைத்தது. ஏனோ, மகிழ்ந்தேன். இந்த 15 பேர்களாவது வெற்றி பெற்றார்களே என்பதுதான்!
அடுத்த தேர்தலும் வந்தது. மதிப்புக்குரிய காமராசர் அவர்கள் பகிரங்கமாகச் சொன்னார்கள், '1962-ம் ஆண்டு தேர்தலின் முடிவில் இந்த 15 பேர்களும் தோற்றுவிட்டார்கள் என்ற சேதி வெளியிடப்படும்!’ என்று.
அவருடைய வழக்கம்போல் மக்களைச் சந்தித்தும் தேர்தலில் வெற்றி பெற அவர் செய்ய வேண்டிய தொண்டுகள் அனைத்தையும் புயல்போல் நிறை வேற்றினார். தமிழகத்தின் இன்றைய முதல்வர் கலைஞர் ஒருவரைத் தவிர, மற்ற 14 பேரும் தோற்றுப் போனார்கள்.
தோல்வியிலும் வெற்றியைக் காணும் அமரர் அண்ணாவின் கொள்கை, இதிலும் தோல்வியில் வெற்றியே கண்டது. 14 பேர்களைத் தோற்கடித்தார்கள். ஆனால், அதே சட்டமன்றத்தில் முன்பிருந்த 15 பேர்களுக்குப் பதிலாக 50 பேர்கள் கழகப் பிரதி நிதிகளாக அமர்ந்தார்கள்.
அந்தத் தேர்தலில் தோல்வி அடைந்த திரு. ப.உ.ச. அவர்கள் சென்னைக்கு வந்தபோது நாங்கள் சந்தித் தோம். அவரைப் பார்ப்பதற்கே எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. தோளில் பலமாகத் தட்டிய வாறு என்னை இழுத்து அணைத்துக்கொண்டு, அதே சிரிப்போடு உரத்த குரலில் கலகலவென்று வலுவோடு வார்த்தைகள் வெளியே வரும்படி பேசினார்...
''விஷயம் தெரியுமா? நான் தோத்துட்டேன். என்னை எதிர்த்தவர் நல்ல புத்திசாலி. மக்கள்கிட்ட எதெச் சொல்லி, எப்படி நெருங்கினா, ஓட்டு வாங்கலாங்கிறதெ, என்னைக் காட்டிலும் நல்லாத் தெரிஞ்சுவெச்சிருக்கார். அந்தத் தந்திரத்தை சரியாப் பயன்படுத்தி, அருமையா என்னைத் தோற்கடிச்சுட்டார்'' என்றார். நான் அவரையே பார்த்தேன். அது மட்டுமல்ல... 'திருவண்ணாமலையில் ஒரு பொதுக் கூட்டம் போடப் போகிறேன். அதில் வந்து பேச வேண்டும்’ என்றார்.
நான் விரக்தி மன நிலையில் கேட்டேன், ''எதுக்காகக் கூட்டம்? தோற்கடித்தார்களே அந்த மக்களுக்கு நன்றி சொல்லவா?'' என்று.
''தோற்றது உண்மைதான். ஆனால், ஜாமீன் பணத்தைத் திரும்பப் பெறும் அளவுக்கு ஓட்டுக்கள் போட்டிருக்கிறார்களே, அந்த வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டாமா?'' - இது சிரிப்போடும், தன்னம்பிக்கையோடும், ஏமாற்றமற்ற வகையிலும் உளமார என்னைத் திருப்பிக் கேட்ட கேள்வி.
அது மட்டுமல்ல, மேலும் தொடர்ந்தார்... ''ஒரு சில வாக்குகள் குறைந்ததால்தானே தோற்றேன். அந்த வாக்குகளும் கிடைத்திருக்குமானால், இப்போது எனக்கு அளித்திருக்கும் வாக்காளர்களையும் சேர்த்துப் போற்றிப் புகழ்ந்து நன்றி கூறியிருப்போம் அல்லவா? அப்போது நாம் காட்டும் நன்றியை இப்போதும் காட்டுவதற்கு நமக்கும் கடமை இருக்கிறது. அதைப் பெற அவர்களுக்கும் உரிமை இருக்கிறது!'' இதையும் அவருக்கே உரித்தான சிரிப்போடுதான் சொன்னார்!
Last edited by esvee; 8th June 2014 at 06:19 AM.
ainefal liked this post
இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு மற்றும் அனைத்துலக எம்.ஜி.ஆர் பொது நல சங்கம் இனைந்து ஏற்பாடு செய்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் " ஆயிரத்தில் ஒருவன் " திரைப்படம் 90வது நாள் சுவரொட்டி சென்னை நகரில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது . அதன் புகைப்படம் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
![]()
Last edited by puratchi nadigar mgr; 8th June 2014 at 09:47 PM.
இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு சார்பாக , கடந்த ஞாயிறு அன்று (1/6/14) சென்னை பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் அருகில் அதன் கிளை மன்றம் தொடங்கப்பட்டது . விழாவில் இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு உறுப்பினர்களும் அனைத்துலக எம்.ஜி.ஆர் பொது நல சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழா தொடங்கும் முன்பு காலை 7 மணி முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் படபாடல்கள் ஒலி
பரப்பப்பட்டன .
காலை 10 மணியளவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஆரத்தி எடுக்கப்பட்டது .
இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு தலைவர் திரு.எஸ்.ராஜ்குமார் தலைமை தாங்கி விழாவை இனிதே சிறப்பாக நடத்தினார்.
பின்னர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாகனங்களில் சென்றவர்களுக்கும் மோர் வழங்கப்பட்டது.
அதன் புகைப்படங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
![]()
Last edited by puratchi nadigar mgr; 8th June 2014 at 09:58 PM.
All matters, photos of MAKKAL THILAGAM simply superb... hubbers kindly go ahead... thank you all.....
9.6.1980
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்த தினம் இன்று .
1980 ஜனவரி மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மத்திய அரசு தமிழக அரசை 17.2.1980 அன்று
அரசியல் காரணமாக மக்கள் திலகத்தின் ஆட்சியை கலைத்தது .
தன்னுடைய ஆட்சியை டிஸ்மிஸ் செய்த மத்திய அரசின் செயலுக்கு மக்கள் திலகம் மக்கள் மன்றத்தில் நியாயம்
கேட்டார் .
சட்ட மன்ற தேர்தலில் மக்கள் மத்திய அரசிற்கும் அதற்கு துணை போனவர்களுக்கும் ,துள்ளி வருகுது வேல் என்று
துள்ளியவர்களுக்கும் சரியான பதிலை தந்து மக்கள் திலகத்தை வெற்றி பெற செய்தார்கள் .
மக்களின் பேராதரவுடன் இரண்டாவது முறையாக தமிழக முதல்வராக பல லட்சம் மக்கள் முன் பதவி ஏற்ற தினம்
இன்று .
Russellisf thanked for this post
தமிழக முதல்-அமைச்சராக 2-ம் முறையாக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார்
17 மந்திரிகள் கொண்ட மந்திரிசபையில் தமிழக முதல்-அமைச்சராக இரண்டாவது முறையாக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் 1980 ஜுன் 9-ந்தேதி பகல் 12 மணிக்கு நடைபெற்றது.
மேடை மீது காந்தி, ராஜாஜி, காமராஜர், அம்பேத்கார், 'காயிதே மில்லத்' இஸ்மாயில் சாகிப், முத்துராமலிங்க தேவர் ஆகியோருடைய பெரிய படங்கள் வைக்கப்பட்டு இருந்தன. நடுவில் அண்ணாவிடம் எம்.ஜி.ஆர். ஆசி பெறுவது போலவும், ஈ.வெ.ரா.பெரியார் வாழ்த்துவது போலவும் பெரிய படம் இருந்தது.
மண்டபத்துக்குள் 12.23 மணிக்கு கவர்னரும், எம்.ஜி.ஆரும் உள்ளே நுழைந்தார்கள். உடனே கூடியிருந்த பொதுமக்கள் 'எம்.ஜி.ஆர். வாழ்க' என்று குரல் எழுப்பினார்கள். பதவி ஏற்பு 'நீராரும் கடல் உடுத்த' என்ற தமிழ் வணக்க பாடலுடன் விழா தொடங்கியது.
முதல்-அமைச்சராக பதவியேற்க வரும்படி எம்.ஜி.ஆரை தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் அழைத்தார். எம்.ஜி.ஆர். எழுந்து, மேடையில் கவர்னர் பட்வாரி அருகில் போய் நின்றார். உறுதி மொழியையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் கவர்னர் பட்வாரி ஆங்கிலத்தில் வாசிக்க எம்.ஜி.ஆர். அதன் தமிழ் வாசகத்தை திரும்பிச் சொல்லி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
பதவி ஏற்றதும், எம்.ஜி.ஆரும், கவர்னரும் கை குலுக்கிக்கொண்டனர். பின்னர் கீழ்க்கண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
1. நெடுஞ்செழியன் (நிதி) 2. பண்ருட்டி ராமச்சந்திரன் (மின்சாரம்) 3. கே.ஏ.கிருஷ்ணசாமி (கிராமத்தொழில்) 4. எஸ்.டி.சோமசுந்தரம் (வருவாய்த்துறை) 5. ஆர்.எம்.வீரப்பன் (தகவல்) 6. அரங்கநாயகம் (கல்வி) 7. காளிமுத்து (விவசாயம்) 8. பொன்னையன் (சட்டம்) 9. குழந்தைவேலு (ஊராட்சி) 10. ராகவானந்தம் (தொழிலாளர் நலம்) 11. டாக்டர் ஹண்டே (சுகாதாரம்) 12. ராஜா முகமது (கூட்டுறவு) 13. எஸ்.முத்துசாமி (போக்குவரத்து) 14. திருநாவுக்கரசு (பெருந்தொழில்கள்) 15. எஸ்.என்.ராஜேந்திரன் (கைத்தறி) 16. விஜயசாரதி (அரிஜன நலம்) 17. கோமதி (சமூக நலம்)
ஒவ்வொரு அமைச்சரும் பதவியேற்றதும் எம்.ஜிஆரிடம் சென்று வணங்கி, ஆசி பெற்றனர். அமைச்சர் குழந்தைவேலு, முத்துசாமி, கோமதி ஆகியோர் எம்.ஜி.ஆர். காலை தொட்டு வணங்கினார்கள். தேசிய கீதத்துடன் விழா பகல் 1.32 மணிக்கு முடிந்தது.
உடனே எம்.ஜி.ஆர். மேடையில் இருந்து இறங்கி முன் வரிசையில் இருந்த தலைமை நீதிபதி இஸ்மாயில், முன்னாள் முதல்-அமைச்சர் பக்தவச்சலம் ஆகியோரை வணங்கி வாழ்த்துப் பெற்றார். அண்ணனின் ஆசி பிறகு, தன்னுடைய அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் காலைத்தொட்டு கும்பிட்டு எம்.ஜி.ஆர். ஆசி பெற்றார்.
விழாவுக்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், மேல்-சபைத் தலைவர் ம.பொ.சி. மற்றும் நீதிபதிகள், அனைத்துக்கட்சி தலைவர்கள் வந்து இருந்தார்கள். எம்.ஜி.ஆரும் மற்ற அமைச்சர்களும் அண்ணா சாலைக்குச் சென்று பெரியார் சிலைக்கும் பின்னர் அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்தனர்.
அண்ணா சிலை அருகே லட்சக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். மேடையில் ஏறி எம்.ஜி.ஆர். உரை நிகழ்த்தினார். அவர் கூறியதாவது:-
அமரர் அண்ணா சொன்னதுபோல மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற வகையில் உங்கள் முன்னால் தொண்டர்களாகிய நானும் என் நண்பர்களும் உறுதிமொழியை எடுத்துக்கொள்கிறோம். அறிஞர் அண்ணா அவர்களின் பெயரால் அமைந்த தமிழக ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாங்கள் மக்கள் மன்றத்தின் முன்னால் நின்று கீழ்க்கண்ட உறுதிமொழிகளை அளிக்கின்றோம்.
1) தேர்தலின்போது அ.தி.மு.க.வின் சார்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவோம். 2) வறுமை கோட்டின் கீழே உள்ள மக்கள் எந்த சமூகத்தினராக இருந்தாலும், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர முன்னுரிமை கொடுத்து பாடுபடுவோம். 3) தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோரின் நலன்களை காப்பாற்றி அவர்களை மேம்படுத்த பாடுபடுவோம். 4) சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகளும், நலன்களும் எல்லா வகையிலும் காப்பாற்றப்படும். 5) விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், மீனவர்கள், தொழிலாளிகள், பாட்டாளிகள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், காவலர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கம் ஆகியோரின் உரிமைகளும், நலன்களும் பேணப்படும்.
அண்ணாவின் கொள்கைகள் அறிஞர் அண்ணா அவர்களின் கொள்கையான தமிழ் மொழி ஆக்கம், தமிழர் உணர்வு, தமிழ்நாட்டின் மேம்பாடு, மாநில உரிமைகள், ஏழை-எளிய மக்களின் ஏற்றம், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை, சாதி மத வேறுபாடற்ற முறையில் அனைவருக்கும் வாழ்வளிக்க தொடர்ந்து பாடுபடுவோம் என்று உறுதிமொழி அளிக்கிறோம்.
அனைத்து அரசியல் கட்சிகளையும் விருப்பு வெறுப்பின்றி நல்லுணர்வோடு அரவணைத்து அன்புடன் பாதுகாப்பு கொடுப்போம். எங்களை வாழவைக்கும் தெய்வங்களாகிய நீங்கள் என்றும் எங்களுக்கு ஒத்துழைப்பு தந்து எங்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன். மேற்கண்டவாறு எம்.ஜி.ஆர். கூறினார்.
Last edited by esvee; 9th June 2014 at 04:58 AM.
Russellisf thanked for this post
Bookmarks