kalakkal chakravarthi.
http://www.shotpix.com/images/93211859266553409697.jpg
Printable View
kalakkal chakravarthi.
http://www.shotpix.com/images/93211859266553409697.jpg
குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா என்பது போல் வாசு சார், அந்தக் குறையே தங்களுக்கு வேண்டாம்... இதோ வரைந்தாய் விட்டது ..
http://i872.photobucket.com/albums/a...write01fw2.jpg
Karnan Trailer was one of the attributes for Karnan's himalayan victory in a rerelease after 48 years. I hope for vasantha maaligai too a neat trailer with the impressive song and acting sequences may please be released through TV and main screens.Suggestions shall be invited from fans and public to improvise the presentation of this milestone NT movie.
குறை தீர்த்த வேந்தருக்கு குறைவில்லா நன்றி!
'வசந்த மாளிகை' ஆடியோ கவர் முகப்பு மற்றும் ஆடியோ சி.டி
http://www.grantimage.com/out.php/i2...i-00-front.jpg
http://www.grantimage.com/out.php/i2...ai-00-back.jpg
http://www.grantimage.com/out.php/i2...igai-00-cd.jpg
'வசந்த மாளிகை' நாயகருடன் தயாரிப்பாளர் டி.ராமாநாயுடு மற்றும் நாகேஸ்வரராவ்.
http://www.idlebrain.com/images2/new...amanaidu10.jpg
Thanks to idlebrain.com.
கடந்த மார்ச் மாதம் 'வசந்தமாளிகை' பெங்களூரு நடராஜ் தியேட்டரில் திரையிடப்பட்ட போது எழுந்த ரசிகர்களின் மகிழ்ச்சித் தாண்டவம். (ஒரு உற்சாக வீடியோ)
http://www.youtube.com/watch?feature...&v=yac3fJ9_iRI
http://mmimages.maalaimalar.com/Arti...b_S_secvpf.gif
Maalaimalar
வசந்த மாளிகையில் நடித்த வாணிஸ்ரீ
இன்றைய திரைப்பட ரசிகர்களாலும் 'காதல் காவியம்' என்று போற்றப்படுகிற 'வசந்தமாளிகை'யில், சிவாஜியுடன் நடித்தவர், வாணிஸ்ரீ.
மற்றும் 'உயர்ந்த மனிதன்', 'சிவகாமியின் செல்வன்', 'வாணி- ராணி', 'கண்ணன் என் காதலன்' உள்பட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
வாணிஸ்ரீயின் சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் நெல்லூர். அவரது இயற்பெயர் ரத்தினகுமாரி. நெல்லூரில் இருந்து சென்னைக்கு வந்து குடியேறியது, வாணிஸ்ரீ குடும்பம். அப்போது மயிலை ஆந்திரசபையில் படித்து வந்தார்.பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது நடனம் கற்றுக்கொள்ள ஆசைப் பட்டார். அந்த ஆசையை பெற்றோரிடம் வாணிஸ்ரீ தெரிவித்தார். எனவே, ஒரு நடனஆசிரியரை ஏற்பாடு செய்தார்கள்.
நடனம் கற்றுமுடித்ததும் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதன்விளைவாக நாடக மேடைகளில் நடிக்கத்தொடங்கினார். நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது 'பீஷ்மர்' என்ற தெலுங்குப்படத்தில் சிறுவேடத்தில் நடிக்கவாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் நாடகத்தில் நடிக்கத்தொடங்கினார்.
'சில்லரகொட்டு சின்னம்மா' என்ற நாடகத்தில் கதாநாயகியாக தோன்றிய இவரது நடிப்பு, பலரையும் கவர்ந்தது.
அதன்பின்னர் முதன்முதலாக 'வீரசங்கல்ப்' என்ற கன்னடப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பிறகு தொடர்ந்து தெலுங்கில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்தார்.
இந்த சமயத்தில் 'காதல் படுத்தும் பாடு' என்ற தமிழ்ப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் வெளிவந்த பிறகு தமிழ்படத்தில் நடிக்க வாய்ப்புகள் தேடி வரத்தொடங்கின.
1968-ம் ஆண்டு வெளியான 'உயர்ந்த மனிதன்' படத்தில் சிவாஜியுடன் வாணிஸ்ரீ ஜோடி சேர்ந்தார்.
ஏவி.எம்.தயாரிப்பில் வெளிவந்த 'உயர்ந்த மனிதன்' வெற்றிப் படமானது.
சிவாஜியுடன் நடித்தது பற்றி வாணிஸ்ரீ கூறியதாவது:-
'நெல்லூரில் நான் வசித்தபோது, சிவாஜி நடித்த 'மனோகரா' தெலுங்கில் 'டப்' செய்யப்பட்டு வெளிவந்தது. அந்த படத்தில் தான், முதல் முதலாக சிவாஜியை பார்த்தேன்.
பின்னர், சிவாஜியுடன் நடிக்க ஆரம்பித்த பிறகுகூட, அவரிடம் பேச எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏவி.எம்மின் உயர்ந்த மனிதன் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற இருந்தது. அதில் நடிக்க, நானும் சென்றேன்.
இதில் சிவாஜி எனக்கு ஹீரோ என்றதும், இரவு முழுக்க தூக்கமே வரவில்லை. மறுநாள் காலையில் சிவாஜியுடன் நடிக்கவேண்டும். முன்பின் அறிமுகம் கூடநமக்கு இல்லையே, எப்படி சமாளிக்கப்போகிறோம் என்று கலக்கமாக இருந்தது.
நெல்லூரில் திரையில் பார்த்தவரை, நேரில் பார்த்தேன். அதுவும் அவரது கதாநாயகியாக.
சிவாஜி என்னை பார்த்தவுடன் 'உன் போட்டோக்களை பத்திரிகைகளில் பார்த்து இருக்கிறேன். நல்லா நடிப்பியா? தமிழ் நன்றாக பேசவருமா?" என்று கேட்டார். நான் சிரித்தபடி தலை அசைத்தேன்.
'வெள்ளிக்கிண்ணம் தான்' என்ற பாட்டுக்குத்தான் முதன் முதலாக சிவாஜியுடன் நடித்தேன்'.
இவ்வாறு வாணிஸ்ரீ கூறினார்.
'உயர்ந்த மனிதன்' படத்திற்கு பிறகு சிவாஜிக்கு ஜோடியாக அதிக படங்களில் நடிக்க வாணிஸ்ரீக்கு வாய்ப்புகள் கிடைத்தன.
அப்படி நடித்தப்படங்களில் `சிவகாமியின் செல்வன்', `வசந்தமாளிகை' ஆகிய படங்களில் வாணிஸ்ரீ நடிப்பின் சிகரத்தைத் தொட்டார் என்று கூறலாம். இந்தியில் வெளியாகி, சக்கைபோடு போட்ட 'ஆராதனா' படம், 'சிவகாமியின் செல்வன்' என்ற பெயரில் தமிழில் தயாராகியது. சூப்பர் ஸ்டார் ராஜேஷ்கன்னா நடித்த இரட்டை வேடத்தில் சிவாஜி நடித்தார். சார்மிளா டாகூர் நடித்த வேடத்தில் வாணிஸ்ரீ நடித்தார்.
முன் பகுதியில் இளமையான கதாநாயகி. பின் பகுதியில், வயோதிகத் தோற்றம்! மாறுபட்ட இரு வேடங்களில் அற்புதமாக நடித்தார், வாணிஸ்ரீ. அதேபோலத்தான் தமிழத் திரைப்பட ரசிகர்களால், காதல் காவியம் என்று போற்றப்படும் 'வசந்தமாளிகை' திரைப்படத்தில் வாணிஸ்ரீ நடிப்பில் அசத்தி இருந்தார்.
எந்த நேரமும் போதையில் தள்ளாடும் சிவாஜியை திருத்தி காதலிக்கும் விமானப் பணிப்பெண் கதாபாத்திரத்தில் வாணிஸ்ரீ நடித்தார். அனைத்து பாடல்களும் அருமையாக அமைந்த 'வசந்தமாளிகை', சிவாஜி, வாணிஸ்ரீ நடிப்பால், என்றென்றும் வாழும் காவியமாக இருந்து வருகிறது.