Rahim says all are one !
http://www.youtube.com/watch?v=OiAD_5iGSOA
Printable View
Rahim says all are one !
http://www.youtube.com/watch?v=OiAD_5iGSOA
Who else has brought out the nature of motherhood in the best form than this ? - P.Vasu modified this with living mother in the film "Mannan"
http://www.youtube.com/watch?v=b1PuDk_WyS0
Hmmm....Time to Sleep - So....
http://www.youtube.com/watch?v=xawo1pow95Y
Good Night !
Courtesy Mr.Pammalar
small suggestion: if we can maintain such a big database of NT's rare videos in a separate thread and name it as NT's videography (or something like that) it would be a one-stop place for those who search for NT's film scenes / songs and also this thread could be utilized for news / information / discussion [about NT only] alone
அமெரிக்க ஜனாதிபதியாக கென்னடி இருந்தபோது (1962_ல்) அமெரிக்கக் குழந்தைகளுக்கு யானைக்குட்டி ஒன்றை சிவாஜி கணேசன் பரிசாக வழங்கினார். அமெரிக்காவில், இந்தியானா போலிஸ் என்ற இடத்தில் உள்ள பூங்காவுக்கு அந்த யானைக்குட்டி அனுப்பப்பட்டது.
இதுபற்றி தகவல் தெரிந்ததும், சிவாஜிகணேசன் பற்றிய விவரங்களை கென்னடி விசாரித்தார். சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், சிவாஜி பற்றிய முழு விவரங்களையும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது. அவற்றைப் படித்துப் பார்த்த கென்னடி, கலாசார பரிமாற்ற திட்டத்தின் கீழ், சிவாஜிகணேசனை அமெரிக்க அரசின் விருந்தினராக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்வதற்கு அழைக்குமாறு அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார். அதன்படி சிவாஜிக்கு அழைப்பு வந்தது.
இந்தியாவில் இருந்து நடிகர் ஒருவர் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டது அதுவே முதல் தடவை. அப்போது “உலகின் தலைசிறந்த நடிகர்” என்று அழைக்கப்பட்ட மார்லன் பிராண்டோவுக்கும் , நடிகர் திலகத்துக்கும் இடையேயான சந்திப்பு நிகழ்ந்தது.
அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய சிவாஜி கணேசனை எம்.ஜி.ஆர். மாலை அணிவித்து வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்து சிவாஜியை நடிகர்_நடிகைகள் ஊர்வலமாக அழைத்துச்சென்றனர்.
நடிகர் திலகத்தை, மக்கள் திலகம் வரவேற்ற அந்த அறிய புகைப்படம் உங்களுக்காக.
(Courtesy: Tamilcinema.com)
Attachment 2725
An Article from Actor/ producer/ journalist/ director Chitra Lakshman : (taken from his blog)
”நடிகர் திலகம் சிவாஜி என்ற மகா கலைஞனோடு ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கையாளன், பத்திரிகைத் தொடர்பாளன்,உதவி இயக்குநர், தயாரிப்பாளர் என்று பல தகுதிகளில் இணைந்து பணியாற்றக்கூடிய அரிய வாய்ப்பு பெற்றவன் நான். 1970 தொடங்கி 15 ஆண்டுகள் நான் நடத்திய “திரைக்கதிர்” பத்திரிகை அதன் ஆரம்பக்கட்டங்களில் சிவாஜி ரசிகர்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிக்கையாக வெளிவந்தது. இதழ்கள் தோறும் ரசிகர்களின் கேள்விகளுக்கான சிவாஜியின் பதில்கள், சிவாஜியின் டைரி என்ற பெயரில் மாதம் முழுவதும் சிவாஜி கலந்து கொள்ளும் படப்பிடிப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளின் தொகுப்புகள், சிவாஜி படச் செய்திகள் என்று முழுக்க முழுக்க சிவாஜி பற்றிய செய்திகளே அந்த இதழில் நிறைந்திருக்கும். இப்படிப் பத்திரிகையாளனாக அவரோடு தொடங்கிய நட்பு அவரைக் கதாநாயகனாக வைத்து படம் எடுக்கின்ற அளவிற்கு வளரும் என்று நான் கனவில் கூட எண்ணியதில்லை. அதை இறைவன் எனக்களித்த வரம் என்றுதான் கூறுவேன்.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான “மண் வாசனை”தான் தயாரிப்பாளராக எனது முதல் படம். அப்படத்தின் நூறாவது நாள் விழாவிற்குத் தலைமை தாங்கிய நடிகர்திலகம்தான் என் இரண்டாவது தயாரிப்பான ”வாழ்க்கை ” திரைப்படத்தின் நாயகன். ”வாழ்க்கை” படப்பிடிப்பில் நடைபெற்ற ஒரு சம்பவம் பத்திரிக்கைகளில் பதிவு செய்ய வேண்டிய ஒரு அரிய சம்பவம். எனக்குத் தெரிந்து சிவாஜி அவர்களின் திரைப்பட வாழ்க்கையில் அது வரை நடந்திராத ஒரு நிகழ்ச்சியாக அது இருக்கும் என்று நினைக்கிறேன்.
”வாழ்க்கை படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் சிவாஜி அவர்களின் மற்றொரு படத் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக நான் ஏவி.எம். ஸ்டூடியோ சென்றிருந்தேன். ஒப்பனை அறையில் படப்பிடிப்பிற்கு தயாராகிக்கொண்டிருந்த சிவாஜி அவர்களைச் சந்தித்தபோது. வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு,” படம் முழுவதும் பார்த்துவிட்டாயா? எப்படி வந்து இருக்கிறது” என்று கேட்டார் சிவாஜி. “மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. படம் பார்க்கும் போது பல காட்சிகளில் நான், டைரக்டர் சி.வி.ராஜேந்திரன் என்று பலரும் கண்கலங்கி விட்டோம்” என்றேன் நான்.
சிறிது நேரம் படத்தைப் பற்றியும் அதற்குப் பிறகு என் திருமணம் பற்றியும் பேசிவிட்டு (நான் ஒரு நடிகையைத் திருமணம் செய்யப் போவதாக பத்திரிக்கைகளில் எல்லாம் கிசு கிசுக்கள் பலமாக எழுதப்பட்ட நேரம் அது) நான் கிளம்புகின்ற நேரத்தில் “படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் என் நடிப்பு கொஞ்சம் குறைஞ்சிருக்குன்னா கூட தயங்காம சொல்லுப்பா. நான் திரும்பவும் நடிச்சித் தரத் தயாரா இருக்கேன்” என்றார் சிவாஜி.
அப்போது எனக்கு பெரிய அனுபவம் இல்லை என்பது தவிர அவ்வளவாக விவரம் இல்லாத வயசு என்றுதான் சொல்லவேண்டும். இல்லையென்றால் “சார் நானே உங்ககிட்ட சொல்லணும் என்று இருந்தேன். நல்ல காலம் நீங்களே கேட்டு விட்டீர்கள். எல்லா காட்சிகளும் ரொம்பப் பிரமாதமாக அமைந்திருக்கிறது. ஆனால் ஒரே ஒரு காட்சியை மட்டும் திரும்பவும் படமாக்கினால் நன்றாக இருக்கும் என்று எனக்குள் ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது. டைரக்டர் சி.வி.ராஜேந்திரனிடம் கூட சொல்லிப்பார்த்தேன். இல்லையில்லை இதுவே நன்றாக இருக்கிறது என்று அவர் சொல்லிவிட்டார். அந்த காட்சியை மட்டும் நீங்கள் மீண்டும் நடித்துத் தந்தால் நன்றாக இருக்கும்” என்று சொல்வேனா?
”வாழ்க்கை” சிவாஜிக்கு 242வது படம். எனக்கு இரண்டாவது படம்.
242 திரைப்படங்களில்இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குணச்சித்திரங்களைப் பிரதிபலித்து, நடிப்பிற்கு இலக்கணமாகவும்,பல்கலைக்கழகமாகவும் விளங்கிய கலைச்சக்க்ரவர்த்தியான அவரிடம் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் ஏற்கனவே அவர் நடித்த காட்சியை மீண்டும் நடித்துத் தரச் சொல்கிறேன்.
எப்படிப்பட்ட அறியாமை பாருங்கள்!
“எந்தக் காட்சி உனக்குத் திருப்தியாக இல்லை?” என்று கேட்டு விட்டு “ஓ அந்தக் காட்சியா? அந்தக் காட்சியில் அதற்கு மேல் நடித்தாலோ, அல்லது வேறு மாதிரி நடித்தாலோ சரியாக வராது நன்றாகவும் அமையாது.” என்றெல்லாம் சொல்லி சிவாஜி என்னை சமாதானப்படுத்தவில்லை.
இயக்குநர் சி.வி.ராஜேந்திரனுக்கு போன் செய்து “ சித்ரா விவரமில்லாம ஏதோ ஒரு சீன்ல நான் திரும்பவும் நடிச்சி தரணும்னு கேட்கிறான். அதெல்லாம் சரியா வருமாப்பா? நீ கொஞ்சம் சித்ரா கிட்ட போன் பண்ணி அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிடு” என்று சொல்லவில்லை.
நான் சொல்லி முடித்தவுடன் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் “ சரிப்பா நீ படப் பிடிப்பிற்கு ஏற்பாடு செய். நான் வந்து மீண்டும் நடித்துத் தருகிறேன் என்றார்..
அடுத்த வாரமே பிரசாத் ஸ்டுடியோவில் செட் போடப்பட்டு அந்தக்காட்சி மீண்டும் படமாக்கப் பட்டது.
இந்த சம்பவம் நடந்தபோது சிவாஜி அவர்கள் திரையுலகில் இருந்த உயரத்தையும், அவரது திரையுலக அனுபவத்தையும் மனதில் இருத்திக் கொண்டு இன்றைய சினிமாவின் நிலையோடு இந்த சம்பவத்தை ஒப்பிட்டுப் பார்த்தால்தான் இந்த சம்பவத்தின் அருமை புரியும்.
சிவாஜி என்ற அந்த மாமேதையோடு நானும் என் சகோதரர் சித்ரா ராமுவும் இணைந்து தயாரித்த “ஜல்லிக்கட்டு” திரைப்படத் தயாரிப்பின் போது நடந்த இன்னொரு நிகழ்ச்சியும் என் வாழ் நாளில் நான் மறக்க முடியாத ஒரு இனிய நிகழ்ச்சி.
ஒரு நாள் காலையில் சிவாஜி சார் அவர்களின் வீட்டிற்குச் சென்ற நான் அவரிடம் “ சார். நாளை காலையில் ‘டப்பிங்’ கிற்கு ஸ்டுடியோ புக் பண்ணியிருக்கிறேன். நீங்கள் எத்தனை மணிக்கு வருகிறீர்கள்” என்று கேட்டேன்.
சிவாஜியின் கூரிய கண்கள் என்னை ஒரு முறை ஊடுருவிப் பார்த்தன. “அண்ணனைப் பத்தி நீ என்ன நினைச்சிக்கிட்டு இருக்கே? உன்னை என் தம்பி மாதிரி நினைச்சி பழகறதினாலே எப்படி வேணும்னாலும் என்னோட ‘டீல்’ பண்ணலாம்னு நினைச்சிட்டியா? உன் இஷ்டத்துக்கு டப்பிங்
தியேட்டரை புக் பண்ணிட்டு என்னை டப்பிங்கிற்கு வரச் சொல்லி கூப்பிடறே? என்றார்.
சிவாஜி அவர்கள் அப்படி என்னிடம் கடுமையாக என்றும் பேசியதேயில்லை. ஒரு நிமிடம் என்ன பதில் பேசுவது என்றே எனக்குப் புரியவில்லை. நான் என்ன தவறு செய்தேன் என்று யோசித்துப் பார்த்தேன். அப்போதுதான் எனக்கு நான் செய்த தவறு புரிந்தது. அவ்வளவு பெரிய கலைஞனிடம் முறையாக தேதி வாங்கிவிட்டு அதற்குப் பிறகு ‘டப்பிங்’கிற்கு ஏற்பாடு செய்யாமல் நானாக ‘டப்பிங்’கிற்கு ஏற்பாடு செய்துவிட்டு அவரை அழைப்பது எந்த வகையில் நியாயம்?
என் தவறை உணர்ந்த அடுத்த நிமிடம் அவரிடம்,” SORRY SIR ஏதோ அவசரத்தில் தவறு செய்து விட்டேன். நாளைக்கு தியேட்டரை கேன்சல் செய்து விடுகிறேன். உங்களுக்கு எப்போது முடியுமோ அப்போது சொல்லுங்கள் தியேட்டரை புக் செய்கிறேன்” என்றபடி சோபாவை விட்டு நான் எழுந்தேன்.
தன் கைகளால் என் தோளைத்தொட்டு என்னை அமர்த்தினார் சிவாஜி. “எனக்காக தியேட்டரை எல்லாம் கேன்சல் செய்ய வேண்டாம்.நான் நாளைக்கு காலையில் டப்பிங் பேச வர்றேன். ஆனால் ஒரு கண்டிஷன்” என்றார்.
“எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் சார் செய்யறேன்” என்றேன்.
“நாளை முதல் டப்பிங் முடியறவரைக்கும் நீ என் கூடத்தான் காலையில டிபன் சாப்பிடணும். சம்மதம்னா சொல்லு டப்பிங் பேச வர்றேன்” என்றார்.
கரும்பு தின்னக் கூலியா? உடனே சரி என்று ஒப்புக்கொண்டேன். இரண்டே நாட்களில் முழு படத்திற்கான டப்பிங்கையும் பேசி முடித்து விட்டார். அவர் கொண்டு வந்த டிபனில் நான் மட்டுமல்ல அந்த தியேட்டர் ஒலிப்பதிவாளர், டைரக்டர், உதவி டைரக்டர்கள் என்று பத்து பேருக்கு மேல் இரண்டு நாளும் சாப்பிட்டோம்.
”வாழ்க்கை” திரைப்படத் தயாரிப்பின் போது இன்னொரு சம்பவம்.
படம் முடிந்து வெளியீட்டிற்கு தயாரானபோது படத்தில் நடித்ததற்காக 50 சதவிகித சம்பளத்தைத்தான் பெற்றிருந்தார் சிவாஜி. 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதியன்று படத்தை வெளியிடுவது என்று முடிவெடுத்திருந்த நிலையில் மீதி சம்பளப் பணத்தைக் கொடுப்பதற்காக ஏப்ரல் 13ஆம் தேதியன்று சிவாஜி அவர்களைத் தொடர்பு கொண்டேன்.
“பணம் எல்லாம் நான் அப்புறம் வாங்கிக்கறேன். நீ நாளைக்கு காலையில புறப்பட்டு முதல்ல தஞ்சாவூர்ல நாங்க கட்டியிருக்கிற சாந்தி-கமலா தியேட்டர் திறப்பு விழாவிற்கு வர்ற வேலையைப் பாரு. உனக்கு ஃபிளைட்ல டிக்கட் எல்லாம் கூட போட்டாச்சி” என்றார் சிவாஜி.
தியேட்டர் திறப்பு விழா முடிந்ததும் சூரக்கோட்டையில் நண்பகல் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சூரக்கோட்டைக்கு வந்த எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து கே.பாக்கியராஜ் செல்ல அவருக்கு பின்னால் நான் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு உயர் காவல்துறை அதிகாரி பாக்கியராஜைக் காட்டி “ நல்லா பார்த்துக்கய்யா அடுத்த சி.எம். இவர்தான்” என்று ஒரு இன்ஸ்பெக்டரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். (இது ஒரு கூடுதல் தகவல்)
தியேட்டரைத் திறந்து வைத்த எம்.ஜி.ஆர். நண்பகல் விருந்து முடிந்து நீண்ட நேரம் சிவாஜி அவர்களோடு உரையாடிவிட்டு பிறகு சென்னை திரும்பினார். அவ்விழா நடந்த பிறகு ஒரு வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக நான் வீர்பாண்டி கோவிலுக்குச் சென்றுவிட்டு
ஒருவாரம் சென்ற பிறகுதான் சென்னை திரும்பினேன். அதற்குப்பிறகே மீதி சம்பளத்துக்கான காசோலையை பெற்றுக்கொண்டார்சிவாஜி.
எம்.ஜி.ஆர். அவர்களும் சிவாஜி அவர்களும் எதிரும் புதிருமானவர்கள் என்ற எண்ணம் இன்றுவரை தமிழக மக்கள் மனதில் நிலவி வருகின்றது. ஆனால் அதை பலமாக பல தடவை மறுத்திருக்கிறார் சிவாஜி.
“தனிப்பட்ட முறையில் எங்களுக்கிடையே நல்லுறவு இல்லையென்றால் எதற்காக கடிதம் எழுதி என்னை அமெரிக்கா வரச் சொல்லுகிறார் எம்.ஜி.ஆர்? எதற்காக நான் ‘சார்ட்டர்ட் ஃப்ளைட்’ வைத்துக் கொண்டு பால்டிமோர் சென்று அவரைப் பார்க்கிறேன்? எதற்காக அவர் காலமாவதற்கு நான்கு நாட்கள் முன்பு “வீட்டிற்கு வா முக்கியமான பொறுப்பை உன்னிடம் கொடுக்கணும்” என்று சொல்லப்போகிறார்.இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். தனிப்பட்ட முறையில் நாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம்” என்று தன் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் சிவாஜி. அவர்கள் இருவரது நெருக்கத்தை உணர்கின்ற வாய்ப்பு சிவாஜி அவர்கள் டாக்டர் பட்டம் பெற்றதையொட்டி அவருக்கு திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தியபோது எனக்குக் கிடைத்தது. அந்த பாராட்டு விழாக் குழுவில் பாரதிராஜா, ஏவி.எம்.சரவணன், ரஜினிகாந்த்,கமல்ஹாசன் ஆகியோரோடு நானும் இடம் பெற்றிருந்தேன்.
அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். விழாவிற்கு தலைமை தாங்கினால் நன்றாக இருக்கும் என்று விழாக் குழுவினர் அனைவரும் முடிவெடுத்தோம். அதில் சிக்கல் என்னவென்றால் விழா நடைபெற இருந்ததற்கு முதல் நாள்தான் எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்புவதாக இருந்தார். ஆகவே தனது பாராட்டு விழாவிற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்க வேண்டும் என்று கேட்டு எம்.ஜி.ஆருக்கு சிவாஜியே தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி அவரை அழைத்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த கடிதத்தை இயக்குநர் பாரதிராஜா எடுத்துச் சென்று தில்லியில் வந்து இறங்கப் போகும் எம்.ஜி.ஆர்.அவர்களிடம் தந்து விழாவிற்கு எம்.ஜி.ஆரை தலைமை தாங்கக் கேட்டுக் கொள்வது என்றும் திட்டமிடப்பட்டது.
கடிதத்தில் கையெழுத்திட வேண்டிய சிவாஜி அவர்கள் கோபிசெட்டிப்பாளையத்தில் “மண்ணுக்குள் வைரம்” படப்பிடிப்பில் இருந்தார். கோபிச்செட்டி பாளையம் சென்று எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதும் கடிதத்தில் கையெழுத்து வாங்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி நான் கொபிசெட்டிபாளையம் சென்று சிவாஜி அவர்களிடம் கையெழுத்தை வாங்கிக்கொண்டு சென்னை திரும்பினேன். எனக்குத் தெரிந்து எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதிய ஒரே கடிதம் அதுவாகத்தான் இருக்கும் என்பதால் புகழ் பெற்ற அக்கடிதத்திற்கு ஒரு பிரதி எடுத்து பத்திரப் படுத்துக் கொண்டேன். இத்தனை தீவிர முயற்சிகளுக்குப் பிறகும் அந்த விழாவில் எம்.ஜி.ஆர். அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. அந்தக் குறையை நானும் எனது சகோதரர் சித்ரா ராமுவும் இணைந்து தயாரித்த “ஜல்லிக்கட்டு”நூறாவது நாள் விழாவில் தீர்த்துக் கொண்டேன்.
சிவாஜி அவர்கள் நடித்த ஜல்லிக்கட்டு திரைப்படத்தின் 100வது நாள் விழாவிற்கு எம்.ஜி.ஆர்.தான் தலைமை. ”பல்லாண்டு காலம் திரையுலகை ஆண்ட ஈடு இணையற்ற கலைச் சக்ரவர்த்திகளாக எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இருந்த போதிலும் சிவாஜி நடித்த திரைப்படத்தின் 100வது நாள் விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொள்வது இதுவே முதல் முறை” என்று விழாவில் கலந்து கொண்ட அனைவரும் பாராட்டிய போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
ஜல்லிக்கட்டு நூறாவது நாள் விழாவின் போது நடந்த இன்னொரு ரசமான நிகழ்ச்சி என்னால் எப்போதும் மறக்க முடியாத ஒன்று.
ஜல்லிக்கட்டு நூறாவது நாள் விழா அழைப்பிதழின்.முகப்பில் எம்.ஜி.ஆர். படத்தையும்,நடுப்பக்கத்தில் சத்தியராஜ் அவர்கள் படத்தையும்.கடைசீ பக்கத்தில் சிவாஜி அவர்கள் படத்தையும் அச்சிட்டிருந்தோம். அந்த அழைப்பிதழை எப்படி வேண்டுமானாலும் மடிக்கலாம் என்பதால் சிவாஜி அவர்களிடம் அழைப்பிதழைக் கொடுக்கும்போது சிவாஜி அவர்கள் படம் முதலில் வரும்படி மடித்து அவரிடம் கொடுத்தேன். அழைப்பிதழைப் படித்துப் பார்த்துவிட்டு அழைப்பிதழை என்னிடம் திரும்பக் கொடுத்தார் சிவாஜி. அதில் முதல் பக்கத்தில் எம்.ஜி.ஆர். என் மனதைக் காயப் படுத்தாமல் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவன் நான் என்று அவர் சொல்லாமல் சொன்ன விதம் இருக்கிறதே அது இன்றளவும் என் மனதில் ஆழப் பதிந்துள்ள ஒன்று.
சிவாஜி போன்ற இமாலயத் திறமை கொண்ட நடிகரை இனி எக்காலத்திலும் இந்தத் திரையுலகம் சந்திக்கப் போவதில்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதைப்போல நூறு மடங்கு உண்மை சிவாஜி போன்று பழகுவதற்கு எளிமையான, இனியவரான மனிதனை இந்தத் திரையுலகம் இனி எந்தக்காலத்திலும் சந்திக்கப் போவதில்லை என்பதும்.
.
ராகுலு
நீ இழுத்து போட்டத படிச்சுகினேன் கண்ணு.நல்லாருக்கு.இப்பிடியாச்சும் ஒப்பேத்த வேண்டிதுதான்:banghead:
Dear NT fans.
Bharat Ratna for Sivaji----signature campaign may be initiated in internet/thro' Samooha Nala Peravai.
the wish I wanted to share.
யப்பா உத்தமபுத்ரா
வா வந்து நீயாச்சும் ஒருபத்து பக்கம் டியூப்ல இருந்து பாட்ட இஸ்து போடு.பட்டாணி துன்னுகினே பாத்துகினு கெடக்கலாம்
டியர் பார்த்தசாரதி சார்,
12-ஆம் பாகத்தை, திரியின் சாரதியாக துவக்கிவைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நன்றி.
உத்தம புத்திரன்
நடிகர்திலகத்தின் பாடல், நடிப்பு என்று பல பரிமாணங்களை நச்சென்ற கமென்ட்டோடு, இணைப்புகளாக, அருமையாக தொகுத்தளித்தமைக்கு நன்றி. அப்பப்பா! என்ன Variety..
டியர் சங்கரா சார்,
தங்கள் ஆதங்கம் உங்களைப் போன்ற என்னைப் போன்ற எல்லா ரசிகர்களிடமும் உள்ளது. ஆனால் இது கையெழுத்து இயக்கத்தினால் மட்டும் முடியாது. நடிகர்திலகம் இறந்தவுடனேயே, தி.மு.க வின் திருச்சி சிவா மற்றும் சிலர் இதற்காக முயற்சித்தனர். ஆனால், இறந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதில்லை என்று ஒரு கொள்கை 1996 வாக்கில் எடுக்கப்பட்டுள்ளதால் கொடுக்க இயலாது என்று கூறிவிட்டார்கள்.
தற்போதைய நிலையில் மத்தியில் ஆளும் கட்சியில் நிறைய அழுத்தம் கொடுத்து முதலில் இறந்தவர்களுக்கும் பாரத ரத்னா கொடுக்கலாம் என்ற சட்ட திருத்தம் செய்யப்படவேன்டும். அதன்பின்தான் கோரிக்கையே வைக்கமுடியும் என்பதுதான் யதார்த்த உண்மை.
சிவாஜி - ஒரு வரலாற்றின் வரலாறு நூலில் இடம்பெற்ற நெல்லை கண்ணன் கவிதையையே இதற்கு பதிலாக தருகிறேன்..
http://i1234.photobucket.com/albums/...pscd1257e5.jpg
இன்னாது.பாரதரத்னாவா.அடப் போங்கப்பா,எவனுக்கு வேணும்யா அது.அந்த ஒலக ரத்னா சிவாஜிசாருக்கு இந்தபாழாப் போன நாடு குடுக்குற எந்தப் பட்டமும் வேணாம்யா.ஜானகியக்காவுக்கு யிருக்குற ரோஷம் கூடவா இல்லாம போச்சு.போங்கடா நீயுமாச்சு ஒங்க அவார்டுமாச்சுன்னு தூக்கிப்போட்டு மிதிச்சுதே அந்தபொம்பள
ஒலகமே உசந்தநடிகன்னு தலையில சிவாஜி கணேசனதூக்கி வச்சிகினு கொண்டாடுச்சு.இந்த குச்சு ஐஸ்கிரீமு இன்னாத்துக்கு.இல்ல.இன்னாத்துக்கினு கேக்குறன்.போங்க போங்க.கெஞ்சிக் கேட்டுகினு வாங்கிறதவிட நாட்டுகினு சாவலாம்.வேறபொழப்பு இருந்தா கவனிங்க.போங்க
Very true...Similarly, this thread can be utilized exclusively for those who contribute. For, those who give only comments and suggestions, we can have an exclusive thread called NT thread 12 Comments / Suggestions (or something like that) it would also be one-stop place for those who wants to write / view only comments / feedback / suggestions :-)
kenji kettu vaangum endha virudhukkum madhippu illai, mariyaadhaiyum illai. adhu kittaththatta pichai eduppadarku samam.
kaalam kadandhu kodukkappatta 'Dada Saheb Palke' awardai NT accept panniyadhe niraiya perukku pidikkalai theriyumaa?.
avar reject pannuvaarnu aavaludan edhirpaarththanar niraiya fans.
Chevalier award faunctionil Manirathnam sonnadhu innamum ninaivil irukkiradhu. Rasigarkalaip paarththu "innum balamaaga kaithattungal. Delhiyilirukkum sevidargal kaadhil vizhattum" endraar.
தியாகம்
நேக்குப் புடிச்ச இன்னோர் படம்.நேத்து வூட்டுல டெக்குல போட்டுப் பாத்தோம்.சிவாஜி ஒரு ஜமீன்தாரு.அவுரு கூட இருக்குற கணக்குபுள்ள வி.கே ராமசாமி.அவரு புள்ள எம்.ஆரு.வாசு ரெண்டு பேரு சதியாலவும் சிவாஜி ஜெயிலுக்குப் போயி திரும்பி சொத்தெல்லாம் பறிகுடுத்துட்டு நடுத்தெருக்கு வந்துடறாரு.ஒரு பொண்ணக் கெடுத்ததா வேற அவுரு மேல வீணா பழி போட்டுடறாங்க.சிவாஜி காதலிச்ச டீச்சரு லஷ்மி பொண்ணு சிவாஜியவ குடிகாரன் பொம்பள பித்தன்னு தப்பா நெனச்சி வெறுக்குது.சிவாஜி கடல்ல போட்டு ஓட்டி மீன் புடிச்சி புழைக்கிறாரு.ஏழைகளுக்கு ஒதவி செய்யிறாரு.காதலி நெனப்புல நெறைய குடிக்கிறாரு, சிவாஜியவ ஏமாத்தி சொத்தப் புடுங்கிகிட்ட ராமசாமியும் வாசுவும் சிவாஜிக்கு எதிரா எதனாச்சும் பண்ணிகினே கெடக்கறாங்க.சிவாஜி அவுங்கள நல்லா சமாளிக்கிறாரு.அந்த ஊருக்கு இன்ஸ்பெக்டரா வர பாலாஜிக்கும் சிவாஜிக்கும் முதல்ல வில்லப் பயலுவளால மோதல் வருது.அப்புறம் சிவாஜி நல்லவருன்னு சுந்தரராசன் மூலியமா பாலாஜி உணருராறு.ரெண்டு பேரும் சேர்ந்து பிரண்டாயி ஊருக்கு அணை கட்றாங்க.லஷ்மி புள்ளையும் சிவாஜி நல்லவருன்னு தெரிஞ்சிக்குது.ஊர் சனங்க அல்லாம் சிவாஜிக்கு சப்போர்ட் பண்ணுது.அல்லாத்துக்கும் ராமசாமியும் வாசுவும்தான் காரணும்னு புரிஞ்சுக்குது.அப்புறம் சிவாஜி குடிக்கறத விட்டுடுராறு.அல்லாம் நல்லபடியா முடியுது.ஜோடி ஒன்னாயிடுது.படம் பாத்தவன் சிரிச்சுகினே வெளிய வரான்.நல்லா துட்ட கரந்துகினு பாலாஜி சிரிச்சுகினான்.
சிவாஜியை பத்தி சொல்லனும்னா சூபரப்பு சூபரப்பு சூபரப்பு.மீன் சந்தைய்லே அவரு அழகா நடந்துகின்னு என்ட்ரி குடுப்பாரு.சாராய பட்டைய அடிக்கடி ஊத்திகினு குடுக்குற நடிப்பு இருக்கே.ஜோரான ஜோரு.கோவில்ல சிவாஜி சாமி கும்பிட்டுகினு வர போவும்போது அங்க கோயில் குருக்கள் தேங்கா சிறிநிவாசன் கோவிலுக்குள்ள நொழய வேணாம்னு தடுக்க சொல்ல மனோரமாவோடு ஹோலி பண்டிக கொண்டாட்ற மாறி சிவாஜி ஆடுறபோடற ஆட்டம் இன்னைய இளசுங்க கூட ஆடமுடியாதுயோவ்.அப்புறம் எம்ஜியார்ஆளு ஜஸ்டினு லஷ்மி பொண்ணான்ட மீனுசந்தையில கைபுடிச்சி இழுத்து ராவடி பண்ணுறப்போ சிவாஜி வந்து ஒரு பைட்டு குடுப்பாரு. அம்மாடியோவ்.இன்னா கண்ணு பைட்டு அது.உருட்டுகட்ட எடுத்துகிட்டு ஜஸ்டின தர்ம சாத்து சாத்துவாரு.பட்டாக்கத்திய வச்சுகினு பெருசுபெருசா கடையில தொங்கற மீனையெல்லாம் வெட்டுவாரு ஜஸ்டினு.சிவாஜி அவருக்கு செம்ம ஆட்டம் காட்டுவாரு.உட்டாலக்கடி பைட்டு.யாராச்சும் அந்த பைட்ட போடுங்கலேன்பா.
தேன்மல்லி பூவுன்னு ஒரு டூயட்டு சாங்கு.சிவாஜி அறியாபுள்ள கணக்கா கலரு கலரா சட்டைங்க போட்டுகினுவருவாரு.அவுருக்கு இன்ன வயசு அப்போ.ஜோராக்கீறாரே.அப்புறம் போலீஸ் ஸ்டேஷன்ல சிவாஜிய இழுதுகினு வரசொல்லி பாலாஜி ஆள் அனுப்புவாரு.சிவாஜி குடிச்சி இருப்பாரு.ஸ்டேஷனுக்கு வந்து பாலாஜிக்கு சரிக்குசரியா சேர் இழுத்துபோட்டுகினு ஒக்காந்து முடியை ஒதுக்கிகினே பேசுற கட்டம் தூக்கிடும் தல.பயபுள்ள இன்னாம்மா நடிச்சிக்குராறு இந்தக் கட்டத்துல.பாலாஜி வேற சாட்டையால சிவாஜியவ கோவத்துல பொரட்டி எடுத்துடுவாரா பாவம்மா பூடுதுப்பா.அப்புறம் சரக்க கையில வச்சுகினு குடிக்காமளியே குடிச்சா மாறி ஆக்ட்டு குட்த்து ஒலகம் வெரும் இருட்டு ன்னு ஒரு குத்துப்பாட்டு போடுவாரு சிவாஜி. ங்கொக்கா மக்கா டக்கரு ஆட்டம் மச்சி.கப்பல்ல ஸ்டைலா நின்னுகினு நல்லவர்க்கெல்லாம் சாச்சிக ரெண்டு அப்படின்னு ரொம்ப பாப்புலாரானா பாட்டு ஒன்னு இருக்கு.அதிலேயும் சிவாஜி செம்ம ஸ்டைலு காட்டுவாருப்பா.நீங்க அல்லாரும் சொல்றது கரெக்ட்டுபா.ஸ்டைலு காட்டுறதுல சிவாஜிதான்யா டாப்பு. ஒத்துகினேன்.ஆமாப்பு
லஷ்மி புள்ளகூட சிவாஜி லவ்வுல கலாய்க்குற கட்டம் நல்லா இருக்கும்பா.மாடுவெரட்டு பாக்கும்போது லஷ்மிபொண்ண ஷோக்கா பாதுகாப்பா இன்னா ஜாக்கிரதையா சிவாஜி பின்னால இழுத்துக்குவாறு தெரியுமா.கில்லாடியா சிவாஜி கணேசன்.லஷ்மிபொன்னாண்ட இளநீ குடுத்து குடிக்க சொல்லக்கூட குஜிலியா இருக்கும்பா.லஷ்மி குளிக்க சொல்ல சிவாஜி பார்வ அங்கிட்டு இங்கிட்டு சவட்டு மேனிக்கு லஷ்மி மேல மேயுதே.எனக்கு ரொம்ப கூச்சமா போச்சுப்பா. நாகேஷ் பொண்ண காப்பாத்துனம்னா பிரைஸ் பணம் வாங்குறதுக்கு விடாம மூணுநாலு சைக்கிளு ஓட்டனும் சிவாஜி ஓட்டுவாரு.மொத நாலு ஒரு மாறியும்,ரெண்டாம் நாலு வேற மாறியும்,மூணாம் நாலு ரொம்ப களைச்சி போயும் ஓட்டி கடைசியில பிளட்வாமிட் எடுத்துடுவாரு.பொம்பளைங்கல்லாம் இந்த சீனு வரகாட்டி அழுதுடுச்சிபா.எனக்கே கண்ணுல தண்ணி வந்துடுச்சின்னா பாத்துக்கோயேன். இம்மாங் கஷ்டப்பட்டு இந்த ஆளு ஏன் இப்பிடி ஆக்ட்டு குடுக்கணும்.ஆனா கொஞ்சம் பயபுள்ளைவ இந்த சீன பாக்காம டீ குடிக்க ஓடிட்டானுங்கயா. வெவஸ்தையே இல்லாதவனுக என்னமோ டீயே குடிக்காதவனுக மாறி
சிவாஜிகூட ரெண்டு புள்ளைங்க தோனியான்டையே தொணைக்கு சுத்துகினி கிடக்குங்களே.ஒன்னு பாலையாபுள்ளன்னு தெரியுது.இன்னொரு புள்ளாண்டம் யாருப்பா.தெரிஞ்சா சொல்லேன்.மியுசிக் ராசாவா.ராசா ராசாதான்யா.பாலாஜி இன்ஸ்பெக்டரு அல்வா கணக்கா பண்ணிகின்னு போயிடறாரு.ராமசாமி வாசு ஒரே தமாஷுப்பா.லஷ்மிகண்ணு அழகா இருக்குப்பா.தேங்கா சிறினிவாசன் இந்தப் படத்துல கூட வாத்தியார் வாத்தயார்னு உயிரை எடுத்துகிரான்பா.இந்த ஆளு இல்லன்னு எவன் அழுதான்.இந்த ஆளைஎல்லாம் ஏன் சிவாஜி சேத்துகினு கெடந்தார்ன்னு புரியல்லியே.கொழந்த மனசுபா.அதான் ஏமாளி கணக்கா பூட்டாரு.
படம் செம்ம ஜாலியா இருக்கும்பா.இன்னொன்னு தெரியுமா சிவாஜிக்கு மீசை சம்முன்னு இருக்கு.மனோரம்மா என்னாமா குச்சி சுத்தி சண்ட போடுது.ஆமாம் மொதப்பாட்டுல சிவாஜி ஏன் காலை தாங்கி தாங்கி நடக்குறாரு.அடிகிடி பட்டுடுச்சா.பீச்சு ஓரமா படம் முச்சூடும் புடிச்சி இருக்காங்கப்பா.கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு.பாலாஜி வாயிலவச்ச சிகரெட்ட வாங்கி சிவாஜி ஊதுராறு நடிப்ப ஊதுற மாறியே. பிரண்டுஷிப்புனா அதான்யா பிரண்டுஷிப்பு. இங்கயும் இருக்கே பிரண்டுஷிப்பு. கலீஜி. கடைசியில பாலாஜி மாத்தலாகி வேற ஊருக்கு கிளம்பரச்ச சிவாஜியோட சேர்த்து நமக்கும் என்னவோ மாரி பேஜாரா பூடுது.
அப்புறம் ஜானகி யக்கா வசந்தகாலகோலம்ன்னு ஒரு பாட்டு பாடியிருக்கே.இன்னைக்கு முச்சூட கேக்கலாம்யா.சுந்தர்ராச மாமா வயக்கம் போல ராஜாராதான்னு சொல்லிகின்னு கம்பவுண்டரா மருந்து தடவிக்கினு போறாரு.நாகேசு இருக்குறாரு சிரிக்கலாம்னு போனா சீரிஸா நடிக்கிறாரு.பொண்ணுக்கு ஒடம்பு சரியில்லாம போயி வாசுகிட்ட தோணி கடன் வாங்கியாந்து ஓட்டுறாரு.கடன் குடுக்கமுடியாம போனாங்காட்டி வாசு அடிக்கசொள்ள அப்படியே சேத்துல போயி வழுக்கிகினே வுழுவாரு.நேச்சுரா இருக்கும்பா.படம் புடிச்சவரு மீனு மார்க்கெட்டு சந்த கடலு ஆறு போட்டு தென்ன மரம்னு கண்ணுக்கு கூலா புடிசிக்கிறாருபா.சிவாஜி ஏழைங்களுக்கு பண உதவி செய்வாரு.அவுங்க துக்கத்துல பங்கு எடுத்துக்குவாரு.கீழ்சாதி ஜனங்களோட சரிக்குசரியா பழகுவாரு.அப்ப இருந்தே இந்த மனுஷன் இந்த பார்முலாவ பாலோ பண்ணியி ருந்தாருன்னா எப்பவோ ஆட்சியப் புடிச்சிருப்பாரு.வெவரம் புரியாத அப்பாவி மனுஷன்.மொத்தமா பாத்தா செம்ம ஜாலியான படம்பா.புதுப் பயலுவ படம் மாறி அவ்ளோ பிரெஷா சிவாஜி பூந்து விளயாடுவாருப்பா.இன்னைக்கு முச்சூட பார்த்துகினே இருக்கலாம் கண்ணு.
ஒரு ரெக்வெஸ்ட்டு.யாராச்சும் நான் எழுதுனதுக்கு இந்தப் படத்துல இருந்து போட்டா போட முடியுமா ராகவேந்திரன் சாரு,சந்திர சேகரன் சாரு வாசு சாரு ப்ளீஸ்.
ஆனாக்கா ஒன்னு.மொரளி சாரு நான் கிறுக்குனதப்பத்தி எதாச்சும் சொல்லியே ஆவணும்.அவரு பெரிய ஆளு.வெவரஞ் தெரிஞ்சவரு அவுரு.எழுதுடான்னா எழுதுறேன்பா.எழுத வேணாம்னு என்னாண்ட சொல்லிகினா அப்பால எழுதாம உட்டுட்டு துண்ட தூக்கி தோள்ல போட்டுகினு போய்கினே கெடக்கிறேன் இன்னா
என்னாமோ எழுதிபூட்டேன்.இஷ்டம்னா படி.இல்லேன்னா தூக்கி தூர போடு.நாம சிங்கம் மாரி.கவலப்படறது பயப்படுறது நம்ம சாதகத்திலேயே இல்ல.அதான் அவுதாருலியே தெரியுதில்ல
வர்றேன் கண்ணு
dear parthasarathy sir
best wishes . This thread was opened on 16th now on 18th already nearly 20 pages were filled up with lot of new messages/new members
That is NT.
All the best
Regards
Gkrishna
dear kruba sir
excellant write up for thiyagam movie.
the two co artistes one is junior balaiah another one is panjabagesan (whether the name is correct)
(who acted as elder brother for sridevi in meendum gokila, recently in some 5 years back parthiban kanavu (new) as srikanth's (new) grand father)
while reading the write up just remembring the 100th day function held at tirunelveli parvathi talkies (evening show was celebrated as congress function
night show by sivaji fans association)
keep it up
regards
Gk
one more thing in thiyagam
excellant pair of v.k.ramasamy and m.r.r. vasu (father and son)
"appan varuvan athan pinne magan varuvan thappendru ninekathe thangame"
regards
gk
கிருபா சார்,
பட்டையை கிளப்புறீங்க. ஜாலியான நடை. சொல்ல வேண்டியதையும் சொல்லி விடுகிறது. வாழ்த்துக்கள்.
தமிழகத்தை சேர்ந்த, சுதந்திர தியாகிகளில், வ.உ.சிதம்பரனார் மிகவும் முக்கியமானவர். அவர் வாழ்க்கை போராட்டம் தான், சிவாஜி நடித்த, கப்பலோட்டிய தமிழன் படம். என்னை மாதிரி ஆங்கில பள்ளிகளில் படித்தவர்களுக்கு, வ.உ.சி., பற்றி அதிகம் தெரியாது.
என் தந்தை, அப்போது, பம்பாயில், மத்திய அரசு பணியில் இருந்தார். கப்பலோட்டிய தமிழன் படத்திற்காக, கப்பல்கள் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை படமாக்க, சிவாஜியும், இயக்குனர் பி.ஆர்.பந்துலுவும், அவரது குழுவினரும், அப்போது, பம்பாய் வந்திருந்தனர்.
அப்படக்குழுவினருக்கு, பம்பாய் துறைமுகத்தில் படப்பிடிப்பு நடத்த, அரசு அனுமதி பெற, உதவினார் என் தந்தை.
ஒய்.ஜி.பி., பம்பாயில் இருந்த போது, நாடகத் துறையில் உள்ள தமிழர் களை ஒன்று திரட்டி, நாடக குழு ஆரம்பித்து, அங்கு, தமிழ் நாடகங்களை மேடையேற்றினார்.
ஒருமுறை ஷூட்டிங்குங்காக, பம்பாய் வந்திருந்த சிவாஜியிடம், அன்றைய நாடகத்திற்கு தலைமை வகிக்க ஏற்பாடு செய்திருந்தார்.
சாதாரணமாக நூறு, இருநுாறு பேர் தான் பார்வையாளர்களாக வருவர். ஆனால், சிவாஜி வருகிறார் என்றவுடன், அன்று, ஆயிரக்கணக்கான பேர் திரண்டு வந்திருந்தனர். சிவாஜி அன்று வர ஒப்புக் கொண்டதே நாடக கலைஞர்களுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் தான் காரணம். பொதுவாக அந்த கால கட்டத்தில், எல்லா பெரிய நடிகர்களுமே, நாடக கலைஞர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பர்.
அன்று மாலை, நாடகத்தை ஆரம்பத்திலிருந்து பார்த்து ரசித்த சிவாஜி, நாடகத்தின் முடிவில் பேசிய போது, ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் விளக்கி, அதில் நடித்திருந்த கலைஞர்களையும் பாராட்டினார். கதாநாயகியாக ஒரு ஆண் நடிகர் நடித்திருந்ததை குறிப்பிட்டு, 'என் கடந்த கால நினைவுகள் எல்லாம், அலை மோதுகின்றன. நானும், நாடகத்தில் போட்ட முதல் வேடம் பெண் வேடம் தான்யா...' என்று அவர் பேசிய போது, பயங்கர ஆரவாரம், கை தட்டல் எழுந்தது.
மருத நாட்டு வீரன் படத்தின் படப்பிடிப் பிற்காக, புனே வந்திருந்த சிவாஜி, அங்கிருந்து, கப்பலோட்டிய தமிழன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள, பம்பாய் வந்திருந்தார்.
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பற்றி, பலருக்கு தெரியாது என்பது, வருத்தமான உண்மை. கப்பலோட்டிய தமிழன் படத்தில் சிவாஜி மட்டும் நடிக்கவில்லை என்றால், பி.ஆர்.பந்துலு இதை படமாக தயாரிக்கவில்லை என்றால், லட்சக்கணக்கானவர்களுக்கும், ஒரு தலைமுறையினருக்கும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.,யைப் பற்றி தெரிந்திருக்காது.
கப்பலோட்டிய தமிழன் படத்தில், வீர வசனங்கள், போர், சண்டை காட்சிகள் கிடையாது. நடிப்பில் சாதனை புரிய பெரிய வாய்ப்பும் இல்லை. இருந்தும் தேச பக்தி மற்றும் தன் நடிப்புத் திறமை மீது அவருக்கு இருந்த தன்னம்பிக்கை காரணமாக தான், சிவாஜி அப்படத்தில் நடித்தார். சிதம்பரனார் குடும்பத்தினர், இந்தப்படத்தை பார்த்து, கதறி அழுதனராம்.
1972ல், சிவாஜி ரசிகர்களின் மாநாட்டில், வ.உ.சிதம்பரனார் மகன் பேசும் போது, 'சுதந்திரப் போராட்டத்தில், எங்க அப்பா எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறார் என்பதை, சிவாஜியின் நடிப்பை பார்த்து, தெரிந்து கொண்டோம்...' என்று, மனம் உருகி குறிப்பிட்டார். சிவாஜியின் சிறந்த நடிப்புக்கு, இந்த பாராட்டு, ஒரு அங்கீகாரம்.
ஒரே மேடை நிகழ்ச்சியில், சிவாஜி, ஒரு லட்சம் ரசிகர்களை தன் நடிப்பால், மெய் மறக்க வைத்த சுவையான நிகழ்ச்சியை பற்றி, இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
நவம்பர் மாதம், 1977ல், தமிழகத்தில் வெள்ள நிவாரண நிதிக்காக, அப்போதைய, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., சினிமா நடிகர்கள், கலைஞர்களின் ஒத்துழைப்பை கோரியிருந்தார். 'அண்ணன் கேட்கிறாரு. நாம் அனைவரும் அதிகமாக வசூல் செய்து, வெள்ள நிவாரண நிதிக்கு தரணும். அது நம் கடமை...' என்ற சிவாஜி, நட்சத்திரங்கள், இசை கலைஞர்கள் அனைவரையும், ஒருங்கிணைக்கும் பணியை, மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் வி.கே.ராமசாமியிடம் கொடுத்தார். நடிகர் சங்கத்திற்கு, அப்போது, சிவாஜி தலைவராகவும், மேஜர் சுந்தர்ராஜன் காரியதரிசியாகவும் இருந்தனர்.
வெள்ள நிவாரண நிதிக்காக, திருச்சி, மதுரை, சேலம் மற்றும் கோவை நகரங்களிலும், மாபெரும் நட்சத்திர கலைவிழா நடத்துவ தென்று முடிவு செய்தனர்.
யாரெல்லாம் முதல் வகுப்பு, 'ஏசி' இரண்டாம் வகுப்பு, 'ஏசி' பெட்டியில் செல்லலாம் என்று, பட்டியல் தயார் செய்தார் மேஜர்.
மேஜர் கொண்டு வந்த பட்டியலை பார்த்த சிவாஜி, 'முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, 'ஏசி' எல்லாம் வேண்டாம். வெள்ள நிவாரண நிதிக்காக வசூலிக்க செல்கிறோம். செலவு குறைவாக தான் இருக்கணும். நாம் எல்லாரும், நான்கு நாட்களுக்கு, நம்முடைய சவுகர்யம், பழக்கம் எல்லாவற்றையும் மறந்து, மரக்கட்டை கம்பார்ட்மென்ட்டில், மூன்றாம் வகுப்பில், குறைந்த செலவில் தான் பயணம் செய்யப் போகிறோம். சில இடங்களில், நாம் தங்குவதற்கு, ஓட்டல்காரர்கள், இலவசமாக, அறைகளை ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆண்களுக்கு தனி ஓட்டல், பெண்களுக்கு தனி ஓட்டல்; சாப்பாடு செலவு மட்டும் தான், நாம் அரசிடமிருந்து வாங்க வேண்டும். அதற்கு மேல், இத்யாதி செலவு அனைத்தும், அவரவரே தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கெல்லாம் அரசு பொறுப்பு இல்லை.
நான்கு நாட்கள், முழுமையாக மக்களை மகிழ்வித்து, அதற்கு அவர்கள் தருகிற பணத்தை வசூல் செய்து, அரசுக்கு தர வேண்டும்...' என்றார்.
சிவாஜி மற்றும் முத்துராமன், மேஜர், மனோரமா, சுமித்ரா, விஜயகுமாரி, லதா, மஞ்சுளா, நாகேஷ், வி.கே.ராமசாமி, ஆர்.எஸ்.மனோகர், தேங்காய் சீனிவாசன், எம்.எஸ்.வி., மற்றும் இசைக் கலைஞர்கள், பின்னணி பாடகர்கள், பாடகிகள் மற்றும் பலர் வந்திருந்தனர். நானும், இக்குழுவில் இடம் பெற்றிருந்தேன்.
முத்துராமன், தேங்காய் சீனிவாசன், சுமித்ரா மற்றும் நானும் சேர்ந்து ஒரு காமெடி நாடகத்தில் நடித்தோம்.
சிவாஜி, அன்னையின் ஆணை படத்தில் வரும், சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகத்தில் நடித்தார். மாலை, 7:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை, ஆடல், பாடல், நாடகம் என, கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.
சிவாஜி நடிக்க வேண்டிய ஓரங்க நாடகம், இரவு 10:00 மணிக்கு வரும். இரவு 8:00 மணிக்கே முழு, 'மேக் -- அப்' போட்டு, கவசம், கத்தி, கிரீடம் அணிந்து, மேடையில் தயாராக இருந்தார் சிவாஜி.
சரியாக இரவு, 10:00 மணிக்கு, மேடையில் நுழைந்து, 'எங்கே கலிங்கம்?' என்று, சிவாஜி கர்ஜித்த காட்சியில், அந்த திறந்த வெளி அரங்கில் உட்கார்ந்திருந்த, ஒரு லட்சம் பேருக்கு மேற்பட்ட அனைவரும், ஒரே நொடியில் அமைதியாகி விட்டனர். எங்கும் நிசப்தம்.
அடுத்த முறை, 'எங்கே கலிங்கம்?' என்பதை, ரகசிய குரலில் சொல்வார். நடிகர், நடிகைகள், நாங்கள் என அனைவரும், மேடையின் பக்கவாட்டிலிருந்து, அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம். பதினைந்து நிமிடங்கள், அப்படியே, ஏதோ மந்திரத்திற்கு கட்டுப் பட்டவர்கள் போல, மெய் மறந்து உட்கார்ந் திருந்தனர் ரசிகர்கள்.
நாகேஷ் என்னிடம்,'டே, சலசலன்னு பேசிக் கொண்டிருக்கும் இவ்வளவு பெரிய ஆடியன்சை, 'டக்'கென்று அடக்குவதற்காக, 'எங்கே கலிங்கம்?' என்று இரைந்து, கர்ஜனை செய்து, ஆடியன்ஸ் அமைதியாகி, அடுத்த முறை, மெதுவான குரலில், அவர் சொன்னாலும், அவர்களுக்கு கேட்கும். சிவாஜி ஒரு மந்திரக்காரன்...' என்று ரசித்து, அனுபவித்தவாறே கூறினார்.
கடந்த, 1975ம் ஆண்டு, சென்னை ஏ.வி.எம்., ஸ்டுடியோவில் பிரத்யேக, 'செட்' போட்டு, சிவாஜியின், ஓரங்க நாடகமான, 'சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்' என்ற நாடகத்தை, 45 நிமிடங்களில் சிவாஜி நடித்து, படமாக்கினர்.
45 நிமிடங்களும் சிவாஜி, 'மோனோ ஆக்டிங்' செய்திருப்பார்.
நடிப்புக் கலையிலே, 'மோனோ ஆக்டிங்' மிகவும் கஷ்டமான வடிவம். ஒரே நடிகர் எல்லா வசனங்களும் பேசி, இல்லாத பல பாத்திரங்களை இருப்பதாக பாவித்து, நடிக்க வேண்டும்.
இந்தியா முழுவதும் ஒளிபரப்பான, இந்த ஓரங்க நாடகத்தை, தூர்தர்ஷனுக்கு பணமே வாங்காமல், இலவசமாக நடித்துக் கொடுத்தார். இந்தியாவே, சிவாஜியின் நடிப்பை கண்டு, வியந்து பாராட்டியது.
- தொடரும்.
Thanks to Raghavender Sir, Gopal Sir and all those who have magnanimously posted their acknowledgement and appreciation on my posting !
Hi Kiruba,
Nice writeup on Thyagam. Quite enjoyable journey !
Uthamaputhiran sir
nice article - Congrats
கிருபா சார்,
பட்டையை கிளப்புறீங்க , Very hard to write in this slang - remembering Sivaji's sir's slang in Viduthalai- enjoyed it
Attachment 2727
Tamizhagam !
nadigar திலகத்தின் ரசிகர் என்பதால் பெருமை :
இது இன்று நடந்த சம்பவம்
இன்று வேலை விஷயமாக அரசு அலுவலகத்துக்கு சென்றேன் , என் வேலை எல்லாம் முடிந்து அங்கே வெள்ளை செய்யும் ஒரு மனிதர் கூட பேசி கொண்டு இருந்தேன்
பேச்சு சினிமாவை பற்றி செல்ல வில்லை , மாறாக கடவுள் பற்றி பேசி கொண்டு இருந்தோம் . பேச்சு உலகம் அழிவு பற்றி சென்றது
அப்போது அந்த மனிதர் பேசிய பேச்சு :
சார் உலகம் அழியும் பொது சிவன் தான் காப்பாற்றுவார் என்பது ஒரு நம்பிக்கை , உலகம் அழிவை நோக்கி செல்லும் பொது தேவர்களுக்கு முன் கூட்டியே தெரிந்து விடும் , அவர்கள் சிவனிடம் முறை இடுவார்கள் அப்போது , சிவன் உலகத்தை காப்பாற்ற நடனம் அடுவார் , அதை நீங்கள் சினிமாவில் ரசித்து இருபிர்கள்
அந்த நடனத்தை சினிமாவில் ஆடுவதுக்கு 2 பேர் மட்டும் தான் இருக்கார்கள் . ஒன்று கமல்ஹாசன் & பானுப்ரியா
இதில் டாப் மறைந்த நடிகர் திலகம் , உலகம் எப்படி மோசமாக இருக்கிறதே , சில தீய மனிதர்கள் செய்யும் கெடுதல் இந்த உலகத்தின் தன்மையை அழிகிறதே , இதிலிருந்து நாம் மக்களை காப்பற்ற வேண்டும் என்று ஆக்ரோஷமாக ஆடுவார்
அதில் ஒரு ஸ்டெப்ஸ் இருக்காது , கையை தூக்கி இந்த அண்டத்தை குறிக்கும் விதமாக ஆடுவார் , அதில் வானம் அடங்கும் , குதி குதி என்று குதிச்சு ஆடும் பொது , பூமியினால் வரும் சீற்றத்தை கட்டுபடுத்தும் ,
சிவனின் பார்வையில் இருக்கும் தீ பிழம்பு , அரக்கர்களை அழித்து
உலகத்தில் சமநிலையில் கொண்டு வரும்
இதை நடிகர் திலகத்தின் நடனத்தில் பார்க்கலாம் (வேறு நடிகர்கள் நடனத்தில் காண முடியாது ). இது தெரியாமல் சிவாஜி நடனம் அட வேண்டும் என்று சும்மா குதிக்கிறார் புரியாதவர்கள் உளறுகிறாள் என்று அவர் சொன்ன பொது எனக்கு சிலிர்த்து விட்டது
http://www.youtube.com/watch?v=RJhyuTQb0hY
*
பன்னிரண்டாம் இழையைத் துவ்க்கிய பார்த்த சாரதி சாருக்கு நன்றி
*
பன்னிரண்டாம் இழைக்காக நான் பார்க்காத இந்தப் படத்தை யூட்யூபில் சில நாள் முன்பு தான் பார்த்தேன்..எழுதலாம் என்றால் கிருபாசாரும் இந்த இழையில் அறிமுகமான உத்தம புத்திரனும் 20-20 மாட்ச் போல காணொளிகளும் எழுத்துக்களுமாக கலக்கிக் கொண்டிருந்தார்கள்..
*
கிருபா..உங்கள் எழுத்தில் பிழைகளும் ஓவர், குறும்பும் ஓவர்..(தியாகம் பதிவில் அவை குறைந்து இருந்தன) ரசித்தேன்.. தியாகம்பாடல்கள் அனைத்தும் ரொம்பப்பிடிக்கும்..அதுவும் நல்லவர்க்கெல்லாம்.. ரொம்ப்ப
*
மின்னலாய் வந்த உத்தம புத்திரரே..தொடருங்கள் உங்கள் பணி.ம்ம்பாடல் காட்சிகளுடன் கமெண்டும் கொடுத்தால் நன்றாய் இருக்கும் என நான் நினைத்த போது அவ்வண்ண்மே கொடுத்திருந்தீர்கள்.. ந்ன்றி..
*
அது சரி நான் எழுதப் போவது எந்தப் படத்தைப் பற்றி.. அடுத்த போஸ்டில்.:)
சிவாஜி இந்தப் படத்தில் இளமையும், துடிப்பும், அழகும் கொண்டு ஜம்மெறு இருப்பார்..வழக்கம் போல நடிப்பிலும் ஓஹோ.. ஜோடியாய் யார்.. ம்ம் கே.ஆர்.விஜயா, பத்மினி.. (ஹையா முதல் வரிலயே ந.தி பத்தி எழுதிட்டேன்..
*
வழக்கமாய்ச்
சத்தம் போட்டுச் சுற்றுகின்ற
மின்விசிறி
அமைதியாய் இருக்கிறது
சிறு காற்றிலேயே
யாரோ அடித்தாற்போல ஆடும்
தீபம்
கொஞ்சம் அமைதியாய் நிச்சலனமாய்
நிற்கிறது..
ராத்திரி ஆகிவிட்டதே கத்தலாமே
என நினைப்பில் வெளிவந்த சுவர்க்கோழி கூட
டபக்கேன சுவற்றில் மாட்டியிருக்கும்
படத்தின் பின் ஓடி ஒளிந்து கொள்கிறது..
ஏனாம்..
உஷ்.. தூளியில்
குழந்தை உறங்குகிறது..
*
அதாங்க… இந்த சேகரோட அபிலாஷை.. சேகர் (சிவாஜி) யார்.. ஒரு இஞ்சினியர்..அழகாய் கண்ணிறைந்தும் உடலும் நிறைந்த ஒரே ஒரு மனைவி (பத்மினி) அறிவு, பணம், அந்தஸ்து எல்லாம் வந்தாயிற்று சரி..ஆனால்..
*
இந்த ஆனால் என்ற வார்த்தை வந்தாலே அது தான்.. குறை தன்னாலே வந்து விடும்.. (அந்தக் காலத்து க்ளியரஸில் விளம்பரப் படத்தில் வரும் – நல்ல பெண் தான் ஆனால் முகத்துல பரு)
*
எனில் சேகர்-பத்மினி தம்பதியருக்குக் குழந்தை இல்லை- பத்து வருடமாகியும். டாக்டரிடம் சென்றால் பத்மினியிடம் டாக்டர் உனக்குகுழந்தை பாக்கியம் கிடையாது என்று விடுகிறார்..
*
பத்மினிக்கோ துக்கம் தொண்டையை அடைக்க கண்களில் நீர் முட்டுகிறது.. எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் ஆசையுடன் அள்ளி அணைப்பவாராயிற்றே சேகரான சிவாஜி.. இந்த விஷயத்தைச் சொன்னால் என்னாவார்..
*
டாக்டரிடம் என் கணவரிடம் சொல்ல மாட்டேன் எனச் சொல்லி வீட்டுக்கு வந்தால்..
*
குட்டைப் பாவாடையும் ஒல்லி ஒல்லி உடம்பும் கண்களில் சிரிப்புமாய் ஒரு பெண்..பத்மினியின் ஒன்று விட்ட தங்கை – கே.ஆர்.விஜயா..
*
சிவாஜி சேகர் வேலை முடிந்து வர அத்தானிடம் மைத்துனி விளையாடுகிறார்.. சிவாஜியும் அடச் சுட்டிப் பெண்ணே என பதிலுக்கு விளையாட்டு..
*
பத்மினிக்குக் கொஞ்சம் ஆசுவாசம்..ஊரிலிருந்து தங்கை வந்திருக்கிறாள்.. எல்லா இடத்துக்கும் கூட்டிப் போங்கள் என கணவரிடம் கட்டளை.. பின் பொருட்காட்சிக்கு நானும் வருகிறேன் எனப் புறப்பட்டு பொருட்காட்சி அனைவரும் செல்ல..
*
பொருட்காட்சியில் டாக்டரின் மகன் சிவாஜியிடம் உண்மையைச் சொல்ல..ந.தியின் கண்களில் நதி தளும்புகிறது.. அடக்கப் பட்ட உணர்ச்சிகளால் முகம் எரிமலை ஆகிறது..
*
வீட்டிற்கு வந்து பத்மினியை வார்த்தைகளால் அமைதியாக வறுத்தெடுக்கிறார்..உன் சுக துக்கங்களில் பங்கு கொண்டவன் தானே நான்..என்னிடம் எப்படிச் சொல்லாமல் இருக்கலாம்
*
பத்மினி என்ன சொல்லத்தெரியாமல் தானும் கொஞ்சம் அழ அந்தசந்தர்ப்பத்தில் ரெண்டுங்கெட்டான் தங்கை விஜயா வந்து விட அமைதியாகிறது அந்த இடம்..
*
இருந்தாலும் சிவாஜி சேகருக்கு ஆற்றாமை..குழந்தை பிறக்காதா தனக்கு என்ற ஏக்கம்..உறக்கத்திலிருந்து முழித்து மாடியிலிருந்து இறங்கி வந்தால்.. விஜயா.. என்னத்தான் ஏன் சீரியஸா இருக்கீங்க..
*
இல்லைம்மா ஒரு கனவு கண்டேன்..ஒரு சின்னக் குழந்தை இங்கே அப்படியே என்னோட விளையாடிக்கிட்டே இருந்தது..அப்புறம் அதோட நான் அங்கே போனேனா இங்கே போனேனா.. ரொம்ப அழகா இருந்ததும்மா அது..ஆனா படக்குன்னு மறைஞ்சுடுச்சும்மா (அவர் சொன்ன வசனம் முழுதும் நினைவிலில்லை) என ச் சொல்லி அபாரமாகக் கண்கலங்குகிறார் சேகரான சிவாஜி.. விஜயாவோ விஷயம் எதுவும் தெரியாத இளம் பெண்..ஏதோ அத்தான்கலங்குகிறார் என நினைத்துக் கொஞ்சம் ஆறுதல் சொல்கிறார்..
*
ஆனால் இவை எல்லாவற்றையும் பார்க்கும் பத்மினி ஒரு முடிவுக்கு வருகிறார்..விஜயாவிடம் பேசி கணவரையே திருமணம் செய்து கொள்ளச் சம்மதம் வாங்கி விடுகிறார்..ஆனால்..
*
சிவாஜி மறுக்கிறார்..”இவளே.. குழந்தை இல்லைன்னு எனக்கு ஃபீலிங்க் இருக்கறது உண்மை தான்..அதற்காக இன்னொரு மேரேஜ்லாம் வேண்டாம்.. நீ எனக்கு உயிர்..”
*
காதல் மனைவியின் சிரிப்பை விட கண்ணீருக்கு விலை அதிகமல்லவா.. கடைசியில் சம்மதித்து விஜயாவை மணக்கிறார்..இருவரும் வேறு ஒரு இட்த்துக்குப் போகையில்..என்னாகிறது..?
*
இந்த இறைவன் இருக்கின்றானே எப்போது என்ன செய்வான் எனத் தெரியாது.. ச்சும்மா டென்னிஸ்பாலா மக்களை நினச்சுட்டு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் ஆடவைக்கிறதே வேலை போலும்..
*
ஆம்..பத்மினிக்கு கரு உருவாகியிருக்கிறது..
*
அந்தப் புறம் தேனிலவு போலச் சென்ற சிவாஜிக்கோ விஜயாவின் மீது அவ்வளவு ஒன்றும் ஆர்வமில்லை..பத்மினியின் மேல் உயிரையே வைத்திருந்ததால்.. ஒரு மனைவியாக அவ்வளவாக கவனிக்காமல் இருக்கையில் பத்மினி கர்ப்பம் எனத் தகவல் வர விஜயாவை மறந்து காரை எடுத்து பத்மினியின் இருப்பிடத்துக்கு வந்து பார்க்கிறார்..
*
பின் பத்மினியே கதி என ரொம்ப அக்கறை கொள்ளவும், விஜயாவுக்கும் மெல்லமெல்ல புரிகிறது..அத்தான் அக்காவைத் தான் விரும்புகிறார் என..அவ்ர் ஒரு முடிவெடுக்க..பத்மினி இன்னொரு முடிவெடுக்கிறார்..
*
“டாக்டர்..எனக்கு இந்தக் குழந்தை வேண்டாம்”
“என்னம்மா சொல்றே.. நீ எவ்ளோ ஏங்கின இதுக்காக”
“இல்ல டாக்டர்..எனக்கு வேண்டாம்.. விஜயாவை கவனிக்கறதில்லை என் கணவர்..”
“”பேஷ் பேஷ்” எனக் குரல் கேட்கத் திரும்பினால்..
*
சேகர் சிவாஜி.. கண்களில் கோபம் வெறுப்பு… நடையில் ஒரு அலட்சியம்+தளர்ச்சி.. நல்ல முடிவும்மா நீ எடுத்திருக்கிறது..
இல்லீங்க்.. நான்..
“இதப்பார்..விஜயாவோட கல்யாணம் பண்ணிக்கோன்னு கம்ப்பெல் பண்ணினது நீ.. இப்போ சந்தோஷமா இருன்னு சொல்லு ..இருந்துட்டுப் போறேன்.. அதுக்காக குழ்ந்தை வேண்டாம்னு சொல்றதுல்லாம் ரொம்பத் தப்பு” மென்மையாகவும் அதே சமயம் கண்டிப்பாகவும் சேகர் சொல்லி வீட்டிற்கு அழைத்துச் சென்றால் அங்கே விஜயா இல்லை..
*
பார்த்தால் விஜயா கடற்கரையில் தற்கொலை செய்து கொள்ளப் போக சிவாஜி தடுத்து பேசி வீட்டிற்கு அழைத்து வருகிறார்..பத்மினி விஜயாவிற்கு ஒரு பரிசு தருகிறார்..அது என்னவெனில்..
*
இறுதியில் விஜயா பத்மினி இருவருக்கும் தனித்தனியாக விபத்து ஏற்பட்- அறுபதுகளில் வந்த படம் என்பதால் விதியை மீறாமல் – பத்மினி மரிக்க விஜயா அவரது குழ்ந்தையுடனும் சிவாஜியுடனும் பத்மினியின் படத்தைக் கும்பிட வணக்கம் வருகிறது..
*
சொல்ல மறந்து விட்டேன்..அந்தக் குழந்தைக்கு பத்மினி கொடுத்த் பரிசிலேயே பாலும் ஊட்டுகிறார் விஜ்யா..அந்தப் பரிசும் படத்தின் பெயரும் ஒன்று.. பாலாடை..
*
சிவாஜி வழக்கம் போல் அபார நடிப்பு..பத்மினியும்.. விஜயா மாடர்ன் டிரஸ்ஸில் ஒல்லியும் இளமையுமாகத் தெரிந்தவர் புடவை கட்டியதும் பத்மினியுடன் உடல் எடையில் போட்டி போடுகிறார்.
*
சைட் ட்ராக்காக நாகேஷ், மனோரமா வி.கே ஆர் காமெடி..இசை கேவி மஹாதேவன்.. எங்கே அஹா எங்கே மட்டும் தான் கேள்வி பட்டிருக்கிறேன்..மற்ற எதுவும் மனதில் தங்கவில்லை..
*
ந.தியின் நடிப்புக்காகப்பார்க்கலாம்..
*
டியர் பார்த்தசாரதி சார் - சாரதியாக நீங்கள் இருந்து இந்த திரி உடையாமல் எடுத்துசெல்லவெண்டும் என்பதுதான் என் அவா , ப்ராத்தனை - யாருடிய மனமும் நோகாமல் , சகோதர தன்மையுடன் பதிவுகள் இருந்தால் அதை விட சந்தோஷம் எதுவுமில்லை - நம்முள் கருத்து வேறுபாடுகள் வரலாம் ஆனால் பதிவுகள் தரத்தை குறைக்கும் படியாக இல்லாமல் இருக்கவேண்டும் - ஒவ்வருவரும் பொழுது போகாமல் இந்த திரிக்கு வருபவர்கள் இல்லை - ஒரு ஆத்ம திர்ப்திக்க்காக , NT யை பற்றி பேசும்போது ஏதோ வாழ்வில் தான் இழந்ததை மீண்டும் பெறுகிறோம் இன்ற நினைப்பில் பதிவுகளை இடுகிறார்கள் - ஓவ்வருவரின் பதிப்புக்கும் பின் அயராத உழைப்பும் ,NT யின் மீது பக்தியும் , பாசமும் பன் மடங்கு அடங்கி உள்ளது - எந்த பதிவும் தரத்தில் குறைந்தது அல்ல - வாசு சார் , முரளி சார் , கோபால் சார் , ராகவேந்திரா சார் , KC Shekar சார் மற்றும் பலரும் இந்த திரியை இன்னும் பலபடுத்த தங்கள் ஆரோக்கியத்தை பொருட்படுத்தாமல் , நேரத்தை தண்ணி போல செலவிடுகிறார்கள் - ராகுல்ராம் யை எடுத்துகொள்ளுங்கள் - இந்த சின்ன வயதில் NT யின் மீது என்ன அன்பு and பக்தி - நாம் போடும் சண்டையினால் மற்ற எல்லோருக்கும் சொல்லமுடியாத இன்பம் - ஆனால் நஷ்ட்டம் நமக்குத்தான் - முரளி சாரின் பதிவுகள் கம்மி யாகி விட்டது - வாசு சாரின் 4000th பதிவு இன்னும் வரவில்லை - ராகவேந்திர சார் அமைதியாகி விட்டார் - கோபால் சார் is now very selective in his postings - நஷ்ட்டம் நமக்குதானே சார் !! எல்லோரும் தன் மனதிற்கு படும் கருத்துக்களை மற்றவர் மனம் புண்படாமல் சொன்னால் நம் திரி ஒரு பாரத ரத்னா திரியாக சீக்கிரம் மாறிவிடும் - இதுதான் என் ஆசை / கனவு -
within short span , the speed at which this thread travelling is amazing and Mr Kirupa and Mr Uthamaputhiran are rocking this thread - great beginning by your hands and hearty congrats
Ravi
:):smokesmile:
Dear Parthasarathy Sir,
Many, many thanks for starting the "Part 12" with a Bang!!!!!!
Dear Uthamaputhiran Sir,
Great!!Great!!!Great!!!Great!!!Great!!!!Great!!Gre at!!!Great!!!Great!!!Great!!!!
Anand