மகேஷ் சார்,
புதிய பறவை வெளியான பின் 51 நாட்களில் நவராத்திரி படம் துவக்கப்பட்டது போல தோற்றமளிக்கிறது உங்கள் பதிவு. உண்மையில் 1963-ல் 'குலமகள் ராதை' வெளியான கையோடு நவராத்திரி தயாரிக்கத் துவங்கப்பட்டு விட்டது.
ஒரே நேரத்தில் அன்னை இல்லம், நவராத்திரி, கர்ணன், பச்சை விளக்கு, ஆண்டவன் கட்டளை, கை கொடுத்த தெய்வம், புதிய பறவை ஆகியவை தயாரிப்பில் இருந்தன. காலையில் ஒரு படம் ஷூட்டிங் போனால், மதியம் இன்னொரு படம் ஷூட்டிங் போவார். சிலநேரங்களில் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டால் மூன்று ஷிப்ட்கள் கூட வேலை செய்திருக்கிறார். ஆனால் இங்கு மற்றவர்கள் சொன்னது போல, சரியாக அந்தந்தப் பாத்திரங்களில் நுழைந்துகொள்வார். ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று எவ்வளவு வித்தியாசமான பாத்திரங்கள். கர்ணன் வெளியாகி சிலநாட்களில் இன்னொரு வித்தியாசமான ரோலாக 'முரடன் முத்து' துவங்கப்பட்டு விட்டது.
அதுவும் அப்படங்களை இயக்கியவர்கள் எப்பேற்பட்ட இயக்குனர்கள் என்று பாருங்கள். பி.மாதவன், ஏ.பி.நாகராஜன், பி.ஆர்.பந்துலு, ஏ.பீம்சிங், கே.சங்கர், கே.எஸ்.கோபால கிருஷ்ணன் மற்றும் தாதா மிராஸி. ஒரே சமயத்தில் இத்தனை ஜாம்பவான்களோடு பணியாற்றும் இப்படிப்பட்ட வாய்ப்பு வேறு எந்த கதாநாயகனுக்கும் கிடைத்திருக்காது.