Originally Posted by
kaatu_poochi
தந்தையர் தினத்துக்கு நல்ல பாடல்களை தொகுத்து வழ்ங்கியிருக்கும் ரசிகப் பெருமக்களே,
தந்தை என்றால் mindless பாசம் மட்டும் தானா? தங்கப்பதக்கத்தில் நம் தங்கத்துக்கு தங்கம் வழங்கபட்டதே
அருமையான "தந்தை"யுமானார் என்பதால் தான். தாயுமாகி, தந்தையுமாகி, நல் ஆசானாக நல்வழிப்படுத்த நினைக்கும் தந்தை. அதை ஏற்கும் பக்குவமற்ற அரைவேக்காடு தனையன்.
பிள்ளையை கடிந்து அறம் வளர்க்கும் தந்தை, சிறுவன் தூங்கிய பின் மெதுவாய் முத்தமிடும் அன்புத் தந்தை.
இப்படிப் பட்ட தந்தைகளில் சேவை அல்லவா நம் நாட்டுக்குத் தேவை.
"நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்" அவர் பல்கலைக் கழகமாக விளங்கினார். இறுதியில் தேறாத மாணவனை, just pass செய்து அவ்வுலகம் அனுப்பிவிட்டு, மிடுக்குடன் பதக்கம் பெறும் உதாரணத் தந்தை.
வாசுதேவன்31355 ஐயா,
உங்கள் "ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன்" தொடரின் பல ரசிகர்ளில் நான் ஒருவன். உங்களை ஆவலுடன் தொடர்கிறேன்.